http://i1065.photobucket.com/albums/...psnahzfiqb.jpg
Printable View
செந்தில்வேல் சார் பலவித பரிமாணங்களில் தலைவரின் படங்கள் ஜொலிக்கிறது. தங்களின் உழைப்பிற்கு இணையில்லை. கற்பனைக்கு அளவே இல்லை சூப்பர்
செந்தில்வேல் அவர்களே,
உங்கள் கற்பனை வளம் அபாரம். புதுமையான பல கோணங்களில் நடிகர் திலகத்தை present செய்கிறீர்கள்! அனைத்தையும் ஒரே நேரத்தில் பதிவிடாமல் சற்று இடைவெளி கொடுத்து செய்தால் இன்னமும் கூடுதலாக ரசிக்க முடியும்!
அன்புடன்
அன்பு நண்பர் கலைவேந்தன் அவர்களே,
என்னுடைய பதிவிற்கு யார் பதில் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் உங்களிடமிருந்து பதில் வரும் என நிச்சயம் எதிர்பார்த்தேன். அதே போல் உங்களிடமிருந்து வந்து விட்டது. இனி நீங்கள் குறிப்பிட்ட விஷயம். என்னுடைய பதிவு துள்ளி வருகுது வேல் பற்றி. அந்த படம் ஆரம்பிக்கப்பட இருந்த சூழல் பின்னணி என்னவென்பதை வாசகர்களுக்கு தெரியப்படுத்தவே அன்றைய அரசியல் களம் பற்றி எழுத நேர்ந்தது. அன்றைய காலகட்டம் பற்றி [1978 நவம்பர் முதல் 1979 ஜூலை வரை] நானே இரண்டு மூன்று தடவை எழுதியிருக்கிறேன் என்பதனால் அதை மீண்டும் விவரிக்க வேண்டாம் என நினைத்து சுருக்கமாக அப்படி எழுதினேன்.
அதே நேரத்தில் அப்படி ஒரு முடிவை எம்ஜிஆர் அவர்கள் ஏன் எடுத்தார் என்பதற்கு நீங்கள் ஒரு காரணத்தை சொல்லியிருக்கிறீர்கள். நான் அந்த கருத்திலிருந்து மாறுபடுகிறேன் ஆனால் அதைப் பற்றிய விவாதம் இடம் பெற வேண்டிய களம் இந்த திரியல்ல என்பதனாலும் என் பதிவின் மய்யப் புள்ளியான துள்ளி வருகுது வேல் படத்திற்கும் நீங்கள் சுட்டிக் காட்டியுள்ள விஷயத்திற்கும் தொடர்பு இல்லை என்பதனாலும் நான் இதைப் பற்றிய விவாதத்திலிருந்து விலகி நிற்கிறேன்.
மற்றபடி பதிவை படித்ததற்கும் பின்னூட்டம் இட்டதற்கும் நன்றி!
அன்புடன்
Simply superb Senthil. All your posts take NT to the Next Generation.
திலக சங்கமம் தொடரில் அடுத்து..
நம்மையெல்லாம் இரவும் பகலும் தூங்காமல் பண்ணியவரின் சூப்பர் பாடல்...
கலைவேந்தன்,
முரளியின் அரசியல் எழுத்துக்கள் நூல் பிடித்தாற் போல உண்மை பேசும். தாங்களோ சப்பை கட்டு கட்டி, உள்நோக்கத்துடன் உண்மைக்கு புறம்பாக எழுதுவதில் கோயபல்ஸ் அவர்களை தூக்கி பிடிக்கிறீர்கள். இந்திராகாந்தி உண்மையை புரிந்து கொண்டு சமாதானமாகியிருந்தால் , மணியனுடன் சந்திப்புக்கு போன போது ,இந்திரா அவர்களை நடத்திய விதம் பற்றி வார தொடரில் எழுதினாரே? அதை தாங்கள் படித்ததில்லையா? ஜனதா அரசின் வற்புறத்தல், இந்த பின் வாங்கலில் உண்டு என்று ,அப்போதைய ஆதரவாளர்களே எழுதியிருந்தனர்.
உங்களின் எழுத்துக்களில் உண்மை தன்மை குறைந்து வருவது வருந்த தக்கது.எனக்கு கை வராத ஒன்று. முரளிக்கு அறவே வராத ஒன்று.
செந்தில்வேல் சார்,
உங்கள் அபார உழைப்பு மலைக்க வைக்கிறது. பாராட்டுக்கள். ஒவ்வொரு பிரேமுக்கும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் நடிகர்திலகத்தின் நிழற்படங்கள் அட்டகாசம். குறிப்பாக துப்பாக்கி சுடும் காட்சிகளில் நடிகர்திலகத்தின் ஆக்ரோஷமான முக பாவங்கள் அற்புதம்.
இருப்பினும் நமது முரளி சார் சொன்னதுபோல, பதிவுகளுக்கிடையே இடைவெளி தேவை. இவ்வளவு வேகமோ, அவசரமோ தேவையில்லை. உங்கள் ஒவ்வொரு படத்தையும் ரசிக்க மக்களுக்கு அவகாசம் தேவை. (அருமையான படங்களை தயாரித்து, போதிய இடைவெளி விடாமல் வெளியிட்டு அனுபவப்பட்ட அணி நம்முடையது). அந்த அவசரம் நம் பதிவுகளில் வேண்டாம்.
தொடருங்கள்..... நிதானமாக.
தங்களின் அரிமா நிறுவனம் கோவையின் சிறந்த வர்த்தக நிறுவனங்களில் ஒன்றாக திகழ வாழ்த்துக்கள்.
திலக சங்கமம் & Sivaji Ganesan Definition of Style 24
குங்குமம்
வணங்காமுடி மிக உயரமான கட்அவுட்டின் மூலம் தமிழ் சினிமா விளம்பர வரலாற்றிலும் சிவாஜி ரசிகர் மனதிலும் நீங்கா இடம் பெற்றவர் மோகன் ஆர்ட்ஸ் மோகன். நடிகர் திலகத்தின் மேல் உயிரையே வைத்திருந்தார். அது இன்னும் அவருடயை குடும்பத்தில் மூன்றாம் தலைமுறை வரையிலும் தொடர்வது சிறப்பு.
அவருடைய சொந்த பேனரான ராஜாமணி பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டு வெளிவந்த பாசமலர் உலகப் புகழ்பெற்று வரலாற்றில் இடம் பெற்றது. அதனுடைய பிரம்மாண்டமான வெற்றி அந்நாட்களில் மக்களிடையே மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
அதனுடைய தொடர்ச்சியாக நடிகர் திலகத்தை வைத்து அடுத்த படம் தயாரிக்கத் திட்டமிட்டார் மோகன். இயக்குநர்கள் கிருஷ்ணன் பஞ்சு இரட்டையர்கள் இயக்க, விறுவிறுப்பான மர்ம நாவலாக அமைந்த கதை படமாக்கப்பட்டு குங்குமம் என்று பெயரிட்டு வெளிவந்த்து. படத்தில் பல சிறப்புகள் அமைந்தன.
1962ம் ஆண்டில் அமெரிக்க அரசின் அழைப்பை ஏற்று நடிகர் திலகம் அமெரிக்க விஜயம் மேற்கொண்டபோது அங்கு பல இடங்களுக்கு சென்று திரையுலக, நாடக மற்றும் வானொலி அறிவியல்களைப் பற்றி கண்டும் கேட்டும் அறிந்து கொண்டார். அவ்வாறு அங்கு அவர் சென்ற பல இடங்களில் எடுக்கப் பட்ட புகைப்படங்கள் அணிவகுக்க குங்குமம் படத்தின் டைட்டில் காட்சிக்காகவே மக்கள் திரையரங்கைப் படமெடுத்தனர். அது மட்டுமின்றி சென்டிமென்டாக குங்குமம் பாடலும் மக்களிடம் ஆழமாக வேரூன்றி விட்டது.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு என்று சொல்வது போல், நடிகர் திலகம் பெண் வேடமிட்டு நடித்ததும் இப்படத்தில் தான். இதுவும் இன்று வரை ரசிகர்களால் சிலாகிக்கப் படும் காட்சியாக உள்ளது.
http://i1.ytimg.com/vi/spkV_Gbhs2w/0.jpg
குங்குமம் திரைப்படத்தின் கதைச் சுருக்கம், ஆங்கிலத்தில் -
விக்கிபீடியா இணையதளத்தில் - http://en.wikipedia.org/wiki/Kungumam_(film)
குங்குமம் திரைப்படத்தைப் பற்றி NOV அவர்களின் அருமையான கருத்துரை -
http://www.mayyam.com/talk/showthrea...=1#post1134167
இப்படத்தில் நடிகர் திலகத்தின் நடிப்பு குறிப்பாக ஸ்டைல் மிகவும் பிரசித்தி பெற்றது. பூந்தோட்டக் காவல்காரா பாடல் காட்சியில் அவர் இரு கைகளையும் சொடுக்குப் போட்டவாறே நடந்து வரும் காட்சி ரசிகர்களின் பேராதரவை எப்போதும் பெறும், பலத்த கரகோஷம் விண்ணை முட்டும்.
விஜயகுமாரி நடிகர் திலகத்தின் ஜோடியாக நடித்தாலும் புதுமுகம் சாரதாவின் இளமைத் தோற்றமும் ஈடு கொடுத்து நடித்த சிறப்பும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.
இவ்வாறு பல சிறப்புகளைத் தன்னுள் அடக்கியிருந்தாலும் எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடுவது அந்த நடிப்புக் கடவுளின் வித்தியாசமான நடிப்பும் மேனரிஸமும்.
பாடல்களைப் பொறுத்தவரையில் ஒரு பாடலைத் தவிர மற்ற அனைத்தையும் கவியரசர் கண்ணதாசன் எழுதியவை.
ஒரே ஒரு பாடல் ... கே.வி.எம். என்ற பெயர் இருக்கும் வரை பாடப்படும் பாடல்... எஸ்.ஜானகி அவர்களுக்கு, சிங்கார வேலனே பாடலுக்குப் பிறகு மிகப் பெரிய அளவில் புகழ் தேடித்தந்த பாடல்.. தொலைக்காட்சிகளில் அன்றாடம் ஏதாவது ஒரு சேனலில் ஒளிபரப்பாகிக் கொண்டே இருக்கும் பாடல்.. தொலைக்காட்சிப் பாட்டுப் போட்டிகளில் போட்டியாளர்களால் தவறாமல் பாடக்கூடிய பாடல்.. இப்படி பல சிறப்புப் பெற்ற பாடல் ... சின்னஞ்சிறிய வண்ணப்பறவை ... இப்பாடலை இயற்றியவர் பஞ்சு அருணாச்சலம் அவர்கள்.
சிகரம் வைத்தாற்போல் அமைந்தது இன்று நாம் காண இருக்கும் இப்பாடல் காட்சி.
https://www.youtube.com/watch?v=gvBo0RVbInY
பாடகர் திலகம் டி.எம்.எஸ்., இசையரசி சுசீலா இவர்கள் இணைந்து பாடி, திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவனின் இசையமைப்பில் காலத்தை வென்று நிற்கும் அட்டகாசமான பாடல் தூங்காத கண்ணென்று ஒன்று. இந்தப் பாடலின பாதிப்பில் ஒரு படத்திற்கு தலைப்பாகவே இப்பல்லவி பயன்பட்டதிலிருந்தே இதனுடைய சிறப்பை உணரலாம்.
வித்தியாசமான ஒலியில் இனிமையாக ஒலிக்கும் வீணையுடன் தொடங்குகிறது பாடல். பின் வயலின் தொடரும் போது மாருதி ராவின் கேமிரா மெல்ல நாயகியை நோக்கிச் செல்கிறது. இயக்குநர்களின் இசை ரசனை இப்பாடல் முழுதும் தெரிகிறது. அதற்கு உதாரணமாக, கிடாரின் தாள லயத்திற்கேற்ப நாயகி ஊஞ்சலாடுவதாக அமைத்திருக்கிறார்கள். நாயகி பல்லவியைப் பாடுகிறாள், தூங்காத கண்ணென்று ஒன்று. நாயகியின் பல்லவி முடிகிறது. ரசிகர்களின் ஆரவாரம் ஆரம்பிக்கிறது.
பக்கவாட்டில் பார்த்தவாறு பாடத்துவங்குகிறார் நடிகர் திலகம். பாடியவாறே மிகவும் நளினமாக மெதுவாக முகத்தை இடப்புறம் திருப்பி நேர் பார்வையில் பாடுகிறார். கைகள் கட்டிக் கொண்டிருக்கும் அழகைப் பாருங்கள். தான் மாறுவேடத்தில் நடிப்பதற்காக ஏற்றிருக்கும் அந்த ஆசிரியர் வேடத்திற்குரிய மரியாதையை அந்த கைகட்டுதலில் கொண்டு வருகிறார். தந்தாயே நீ என்னைக் கண்டு என்ற வரிகளின் போது காலைக் கீழிறக்கி மீண்டும் இடப்புறம் திரும்பும் ஒய்யாரம். கை கட்டுதல் அப்படியே உள்ளது. இப்போது நாயகி பாட, இவர் பார்வையாளர் திசையில் நம்மைப் பார்த்த கோணத்தில் நடந்து வரும் கம்பீரம்... ஆஹா... உடனே உதட்டைப் பிரிக்காமல் ஒரு புன்முறுவல்.. அதைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்... வினாடி 1.04. ல் இந்த வசீகரம் ... இடம் பெறுகிறது. இப்போது அவர் முன்னால் அதே கம்பீரத்துடன் நடக்க, காமிரா பின் தொடர்கிறது, நாமும் தான். கதவைத் திறக்கிறார். ... கட்...
இப்போது இந்த 1.11 விநாடியில் அந்த ராட்சஸ ஸ்டைல் களேபரம் துவங்குகிறது.. கதவைத் திறக்கிறார்.. முற்றாத இரவொன்றில் நான் வாட என்ற வரிகளைப் பாடும் போது அந்த உடம்பை ஸ்டைலாக ஆட்டியவாறு நடந்து வரும் அழகு, முடியாத கதையொன்றை நீ பேச,, இந்த வரிகளின் போது குனிந்து கைகளை கட்டை மேல் வைத்து அவளைப் பார்க்க முற்படும் போது ,, எதற்கு தேவையில்லாமல் ஆசைகளை வளர்த்துக கொள்கிறாய், விட்டு விடு எனச் சொல்லும் பொருளில் தன் பார்வையை வீசுவது, ஸ்டைலின் உச்சகட்டமாய் இடது கையை முகவாய்க்கட்டை அருகில் கொண்டு செல்லும் அழகு, பூவோடு சேர்ந்து மணக்கும் நாரைப் போல், புதுமுகம் என்ற பதட்டம் சிறிதும் இன்றி நாயகி சாரதா அதே ஸ்டைலில் அட்டகாசமாக தன் உணர்வை இசையரசியின் ஜீவனுள்ள குரலில் வெளிப்படுத்துகிறார். அடுத்த பல்லவி தொடங்க, நாயகிக்கு பதிலாக இவர் பாடுகிறார், தீராத விளையாட்டு திரைபோட்டு விளையாடி நாம் காணும் உலகிங்கு ஒன்று இந்த வரிகளில் உள்ள உள்ளர்த்தத்தைக் கூட தன் விழிகளிலேயே அதுவும் அந்தக் கண்ணாடியைத் தாண்டி நமக்கு உணர்த்தும் உச்சகட்ட நடிப்பினை அளிக்க இவர் ஒருவரால் தான் முடியும். ஒளிப்பதிவாளர் மாருதிராவ் அவர்களுக்கு இந்த இடத்தில் சிறப்பு சபாஷ்.
இப்பாடலில் திரை இசைத் திலகத்தின் உத்தி மிகவும் பாராட்டுக்குரியது, புதுமையானதும் கூட, பாடலின் இனிமை, பாடல் வரிகளில் உள்ள ஆழம் இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து சரணத்திற்கும் பல்லவிக்கும் இடையே மிகச் சிறிய நேரமே , சில வினாடிகளே, இடையிசை இடம் பெறுகிறது, அதுவும் பெரும்பாலும் வீணை வயலின் புல்லாங்குழல் மட்டுமே...
அடுத்து.. சூப்பரோ சூப்பர்..
வெகுதூரம் நீ சென்று நின்றாலும் விழி மட்டும் தனியாக வந்தாலும் என்று முதன் முறை பாடும் போது ஸ்டைலாக நடந்து வந்து அமர்வது, கண்ணாடியைக் கழட்டுவது, கண்ணைத் துடைப்பது, இரண்டாம் முறை பாடும் போது அதே உணர்வு, வேகத்துடன் அப்படியே ஒருக்களித்து சாய்வது, வலது கை படுக்கையில் ஊன்றிக் கொள்ள, இடது கை ஒரு ஃப்ரேமை மட்டும் பிடித்துக் கொள்கிறது. இதைத் தொடர்வது இன்னும் அட்டகாசம். ஒரு கையில் அந்த ஒரு ஃபிரேமைப் பிடித்து ஸ்டைலாக ஆட்டியவாறு, ஒய்யாரமாக படுத்திருக்கும் அந்த போஸில் அவர் பாடும் போது நாம் எங்கோ போய் விடுகிறோம். அதுவும் அந்த விழிமட்டும் தனியாக வந்தாலும் என்கிற வரியைப் பாடும் போது கண்ணாடி இப்படியும் அப்படியும் அசையும் போது, அந்தக் கண்ணாடியைக் கூட ரசிக்க வைத்து விடுகிறார் மனிதர். கண்ணாடிக்கும் உயிர் கொடுக்கும் மனிதர் இவர் மட்டும் தான்.. தொடர்ந்து நாயகி சரணத்தை முடித்து வைக்க, இறுதியாக பல்லவி தொடங்குகிறது. ஒருக்களிப்பில் இருந்து எழுகிறார்.. மேஜைக்கருகில் செல்கிறார். விக்கைக் கழட்டுகிறார்.
விக்கைக் கழட்டினால் பார்க்க சகிக்காது என்பார்கள். .. ஆனால் இவரோ ... விக்கைக் கழட்டிய பிறகு இன்னும் அழகாக அல்லவோ காட்சியளிக்கிறார்.
பாடல் முடிகிறது.. ஆனால் நாம் .. இன்னும் அதிலிருந்து மீளவில்லையே..
கை தானாக இந்தப் பாடல் காட்சியை REPLAY செய்யும் வகையில் க்ளிக் செய்கிறதே...
Delete
பாராட்டிய திரி நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல.ரசிகர்மன்ற ப்ளக்ஸ் வைப்பவர்களுக்குஇது போன்ற வித்தியாசமான டிசைன் தேவைப்பட்டால் சுலபமாக எடுத்துக்கொள்ளவும் இதிலிருந்து வேறு டிசைன்களை உருவாக்க ஐடியா கிடைக்கலாம் என்பதாலும்
அப்போது ஒவ்வொரு பக்கமாக தேடுவது சில சிரமங்களை கொடுக்கும் என்பதாலும் ஒரே சீராக பதிவிட்டேன்.இந்த பக்கத்தை குறித்து வைத்துக்கொண்டால் அப்போது தேடுவது சுலபமாக இருக்கும்.
வித்தியாசமான ப்ளக்ஸ் போர்டுகள் தயார் செய்து அதிலும்முன்னோடிகளாக நடிகர்திலகத்தின் ரசிகர்கள் பெயர் வாங்கவேண்டும் என்பதே என் விருப்பம்.
http://i1065.photobucket.com/albums/...psa8tv8qon.jpg
நடிக வேந்தரின் அதிரடி அறிமுகக் காட்சிகள் NT's Intro Scenes!
Quote:
உலகதிரைப்படங்களில் கதாநாயகனின் அறிமுகம் பரபரப்பாக பேசப்படுவது இரண்டே இரண்டு படங்கள்தான் !
1952ல் வெளியான பராசக்தியில் நடிகர்திலகம் தூக்கத்திலிருந்து விழித்தெழுவது ஒரு எதிர்கால நடிப்பின் சிம்மம் தனது சிம்ம சொப்பனத்திலிருந்து விழித்தெழுந்ததற்கு ஒப்பானதே !
அதன்பின் 1962ல் டாக்டர்நோ திரைப்படத்தில் ஷான்கானரியின் மறக்க முடியாத பாண்ட்...ஜேம்ஸ் பாண்ட் அறிமுகம்!!
பெரும்பாலான நடிகர்திலகத்தின் காவியங்களில் அவர் தோன்றும் முதல் காட்சி அதிரடியாகவும் பரபரப்பாகவும் இருக்கும்படி இயக்குனர்கள் காட்சிகளை அமைத்திட்ட மெனக்கெடல் உழைப்பு நமக்கு பரவசம் ஏற்படுத்தும் !
இத்தகைய காட்சிகளின் மாட்சியின் சிறு தொகுப்பு
1 : கௌரவம்
பாரிஸ்டராக பட்டையை கிளப்பிய காவியத்தில் அவரை அங்குலம் அங்குலமாக பாதத்திலிருந்து காட்டி DrNo பரபரப்பை ஏற்படுத்திவிட்டு அமைதியான கண்ணன் சிவாஜியை முதலில் அறிமுகப்படுத்துவார்கள்!
அதன் பின்னரே பாரிஸ்டர் குணாதிசயத்தை பட்டென்று புரியும் வண்ணம் அமர்க்களமாக அறிமுகப்படுத்தப் படுவார் நடிகர்திலகம் !!
I am Rajanikanth....Baristar Rajanikanth..NT's intro...
https://www.youtube.com/watch?v=jtIn6RQfVmE
The Name is Bond....James Bond...Intro of Connery/Bond!!
The way Connery majestically walks to the tune of the Bond theme music reminds us the walking style of NT in many movies like Uththama Puththiran, VPKB, Pasamalar.... even before the release of DrNO in 1962!!
https://www.youtube.com/watch?v=0xDj3NRYTU8
https://scontent-sin1-1.xx.fbcdn.net...45927815_o.jpg
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
நண்பர் கலை,
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒரு சின்ன விஷயம் அதை ஏதோ மிகப் பெரிய குற்றசாட்டை நாங்கள் சொன்னது போல் ஒரு தோற்றத்தை உருவாக்கி உங்கள் நண்பரையும் உங்கள் அபிமானத்துக்குரியவரையும் நீங்கள்தான் பாதுகாப்பது போல் ஒரு பிம்பத்தை உருவாக்க முயற்சிக்கிறீர்கள்.
நண்பர் குமார் ஒரு தகவலை சொல்கிறார். அதில் ஒரு பிழை இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டுகிறேன். அதை அவருமே தவறாக எடுத்துக் கொள்ளவில்லை [என்றே நினைக்கிறேன்]. அதோடு அது முடிந்து விட்டது. அதன் பிறகு நீங்கள் உள்ளே நுழைந்து கொடுத்த விளக்கம் தேவையற்றது. காரணம் நான் ஏதேனும் உள்நோக்கம் கற்பித்தோ அல்லது குற்றம் சாட்டும் தொனியில் சொல்லியிருந்தாலோ நீங்கள் பதில் சொல்லலாம். அப்படி எதுவும் இல்லாதபோது எதற்கு ஒரு விளக்கம்? என்னுடைய பதிவை எவர் படித்தாலும் அதில் எந்த விமர்சனமும் இல்லை என்பதை உணர்வார்கள்.
அது போல் 1977 அக்டோபர் முதல் 1978 நவம்பர் வரை நடந்த நிகழ்வுகளை நான் என்னவோ நடக்கவேயில்லை என்று சொன்னது போல் எழுதியிருப்பதும் உண்மைக்கு மாறான ஒன்றாகும். நண்பரே, நீங்கள் 2015 ஜூனில் பதிவிடும் இந்த நிகழ்வுகளை பல வருடங்களுக்கு முன்பே இந்த ஹப்பில் பதிவு செய்தவன் நான்.
நான் எதாவது எழுதினாலே உங்களுக்கு பிரச்சனை என்றால் ஒன்றும் செய்ய முடியாது. என் பதிவில் தவறு இருந்தால் சொல்லுங்கள். அதை விடுத்து நீங்கள் என்ன எழுதினாலும் நான் தலையிடுவேன் என்று சொன்னால் பிறகு உங்கள் விருப்பம். இதற்கு மேல் என்னிடமிருந்து இந்த விஷயத்தில் எந்த எதிர் வினையும் வராது.
அன்புடன்
சென்ற மாதம் திருச்சி கெய்டியில் வரலாற்று சாதனை படைத்த சின்ன ஜமீன் திரையுலக மன்மதன் ஜொலிக்கும் வசந்த மாளிகை ஸ்ரீரங்கம் ரெங்கராஜா தியேட்டரில் நாளை வெள்ளி முதல் qube சிஸ்டம்ல் தினசரி 3 காட்சிகளாக திரையிடப்படுகிறது.
https://pbs.twimg.com/media/B4P0J8sCYAAhZpc.jpg
https://scontent-hkg3-1.xx.fbcdn.net...80&oe=55FA29E8
ராகவேந்தர் சார்,
குங்குமம் பட பாடல் பற்றிய அலசலை வெகு நேர்த்தியாக செய்திருகிறீர்கள். தூங்காத கண்ணென்று ஒன்று பாடல் மனதுக்கு மிக நெருக்கமான ஒன்று. சிறு வயது முதலே மனதில் இனம் புரியாத இன்பத்தை விதைத்த பாடல் இது. குறிப்பாக உயர்நிலைப் பள்ளி, கல்லூரி காலங்களில் மிகவும் ரம்மியமாக மனதிற்கு தோன்றிய பாடல். சிறு வயதில் இந்தப் படத்தை பார்த்திருந்த நான் சற்றே விவரம் தெரிந்தவுடன் பார்த்தபோது இந்த பாடல் எப்போது வரும் என்றுதான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். பாடலை அந்த ஸ்டைலை ரசித்துப் பார்த்தேன். நீங்கள் பாடல் பற்றி முழுவதும் எழுதி விட்டதால் அதைப் பற்றி நான் மேலும் சொல்ல ஒன்றுமில்லை. பாடலின் சரணங்களின் இடையில் வரும் நாகேஷ் மனோரமா ஏ கருணாநிதி தோன்றும் காட்சிகளை தவிர்த்திருந்தால் பாடல் காட்சி இன்னமும் பெரிய காவிய அந்தஸ்து பெற்றிருக்கும்.
படம் தணிக்கையில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க கதையின் முக்கிய திருப்பத்தினால் தணிக்கை அதிகாரிகள் காட்சிகளில் போட்ட கத்திரிகள் அதனால் படத்தின் கோர்வையான திரைக்கதையில் உண்டான jump, ரீ ஷூட் பண்ணுவதற்கும் வழியில்லாமல் ஜெய்பூரில் கர்ணன் படத்திற்காக இரண்டு மாதங்களுக்கு மேலாக நடிகர் திலகம் சென்று விட்டது பற்றியெல்லாம் நாம் இங்கே பேசியிருக்கிறோம். படத்தின் வெட்டப்பட்ட காட்சிகள் மீண்டும் படமாக்கப்பட்டு சேர்க்கப்பட்டிருந்தால் குங்குமம் பெரிய வெற்றி பெற்றிருக்கும் என்பதில் ஐயமில்லை.
1979 ஆகஸ்ட் 10 வெள்ளியன்று நான் வாழ வைப்பேன் வெளியாகிறது. மதுரையில் ஸ்ரீதேவியில் ரிலீஸ். எத்தனையோ மறு வெளியீடு கண்ட குங்குமம் அவற்றில் ஒன்றாக அதே நாளன்று மதுரை அலங்காரில் வெளியானது. ஆகஸ்ட் 12 ஞாயிறு அன்று நான் வெகு நாட்களாக வீட்டில் போய் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்த ஒருவரை அவர் வீட்டில் சென்று சந்தித்தேன். பகலில் அதை முடித்து விட்டு மாலைக்காட்சி அலங்காருக்கு சில நண்பர்களாக சென்றோம். அங்கே ஸ்ரீதேவியில் புது படம் வெளியாகியும் கூட இங்கே சரியான கூட்டம். அது மட்டுமா அதே நேரத்தில் வெற்றிகரமான 4வது வாரமாக இமயம் மதுரை சென்ட்ரலில் ஓடிக் கொண்டிருக்கிறது. 79 நாட்களை சென்ட்ரலில் நிறைவு செய்து இமயத்திற்காக மாறிக் கொடுத்த நல்லதொரு குடும்பம் ஷிப்ட் செய்யப்பட்ட திரையரங்கமான வெள்ளைக்கண்ணுவில் [மிட்லண்ட்?] 100 நாட்களை நிறைவு செய்கிறது. எல்லாவற்றிருக்கும் மேலாக அன்றைய தினம் [ஆகஸ்ட் 12,1979] திரிசூலம் 198-வது நாளாக மதுரை சிந்தாமணியில் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த சூழலிலும் குங்குமம் ஹவுஸ் புல். எத்தனை நடிகர் திலகத்தின் படங்கள் எத்தனை அரங்குகளில் திரையிடப்பட்டாலும் அவை அனைத்தும் மக்கள் ஆதரவோடு வெற்றி நடை போடுவது பல்லாண்டுகளாக நாம் பார்த்து வருவதுதானே! அதுதான் குங்குமம் .படத்திற்கும் நடந்தது.
பூந்தோட்ட காவல்காரா மற்றும் சின்னஞ்சிறிய வண்ணப்பறவை பாடல்களுக்கு பெரிய அலப்பரை என்றால் தூங்காத கண்ணொன்று உண்டு பாடலுக்கு உண்டு இல்லை என்று பண்ணி விட்டார்கள். அதிலும் அந்த அறை கதவை திறந்துக் கொண்டு ஸ்டைல் நடை நடந்து முற்றாத இரவொன்றில் என்று வாயசைத்தபோது அரங்கமே இரண்டுபட்டதை அந்த சந்தோஷத்தை உடல் சிலிர்த்ததை 36 வருடங்களுக்கு பிறகு இப்போது எழுதும்போது கூட அப்படியே நினைவுக்கு கொண்டு வர முடிகிறது.
ஆனால் நீங்கள் குறிக்காமல் விட்ட பாடலுக்கு என்ன வரவேற்பு தெரியுமா?
திரை மூடிய சிலை நான்
துன்ப சிறையில் மலர்ந்த மலர் நான்
என்ற வரிகளுக்கும்
நானே எனக்கு பகையானேன்
என் நாடகத்தில் நான் திரை ஆனேன்
தேனே உனக்கு புரியாது அந்த
தெய்வம் வராமல் விளங்காது
போன்ற வரிகளுக்கெல்லாம் பயங்கர அமர்க்களம்தான்!
கடற்கரை மணலில் நடந்துக்கொண்டே [என்ன ஸ்டைல்!] நடிகர் திலகம் பாடும்
மயக்கம் எனது தாயகம்
மௌனம் எனது தாய்மொழி
பாடலைத்தான் குறிப்பிடுகிறேன் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும்.
இயக்குனர் நடிகர் ஆர். சுந்தர்ராஜன் இந்தப் பாடலின் பரம ரசிகர். எந்தளவிற்கு என்றால் தான் இயக்கிய ஒரு படத்திற்கு தூங்காத கண்ணின்று ஒன்று என்று பெயர் சூட்டுமளவிற்கு! அவரது இயக்கத்தில் பிரபு முதன்முதலாக காலையும் நீயே மாலையும் நீயே படத்தில் நடித்தபோது கல்லூரி மாணவனான பிரபுவும் ரேகாவும் கல்லூரி விழாவில் மேடையில் இந்த தூங்காத கண்ணின்று ஒன்று பாடலை பாடுவது போல் காட்சி அமைக்குமளவிற்கு!
பல சுவையான மலரும் நினைவுகளை அசை போட வாய்பளித்தற்கு நன்றி ராகவேந்தர் சார்!
அன்புடன்
தெரியும் முரளி சார். அதுவும் நீங்கள் அதைப் பற்றி எழுதுவீர்கள் என்று உள்ளுக்குள் ஓர் யூகம் வந்தது. அதனால் தான் அந்தப் பாடலைக் குறிப்பிடவில்லை. பாருங்கள். உங்கள் நினைவுகளைக் கிளறி விட்டது.Quote:
ஆனால் நீங்கள் குறிக்காமல் விட்ட பாடலுக்கு என்ன வரவேற்பு தெரியுமா?
மயக்கம் எனது தாயகம்
மௌனம் எனது தாய்மொழி
பாடலைத்தான் குறிப்பிடுகிறேன் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும்.
தாங்கள் குறிப்பிட்ட காலையும் நீயே மாலையும் நீயே படப் பாடல் காட்சி. இளைய திலகம் பிரபு மற்றும் ஜெயஸ்ரீ நடித்து மேடைப் பாடலாக இடம் பெறுகிறது.
https://www.youtube.com/watch?v=udFRoz4X6xM
பொன்மொழிகளின் புதுமொழிகள் - படித்ததில் ரசித்தவை
பொன்மொழி : தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ....மீண்டும் தர்மமே வெல்லும்...!
புதுமொழி : இடியாப்பத்தின் வாழ்வுதனை நூடில்ஸ் கவ்வும்....மீண்டும் இடியாப்பமே வெல்லும்
மேற் கூறிய பொன்மொழி தொன்றுதொட்டு காலம் காலமாக கஷ்டம் வரும்போது நம்பிக்கையூட்ட கூறப்படுவது....ஆனால் இன்றோ..... அனைவரிடமும் இந்த பொன்மொழி படாத பாடுபடுகிறது !
குறிப்பாக அனைத்து அவரசியல்வாதிகள் தங்களை யோகியர்கள் என்று தாங்களே பொய்யான மானியம் விட்டுக்கொள்ள இந்த பொன்மொழியை உபயோகபடுத்துவது காலத்தின் கேவலமான ஒரு கோலம் !
Rks
இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் - திருச்சி மாவட்ட நாளிதழில் -
சென்ற வாரம் திரையிட்டு மிகச்சிறந்த வரவேற்ப்பை பெற்ற என்னை போல் ஒருவன் திரைப்படத்தை பற்றிய கட்டுரை வெளியாகியுள்ளது.
அனைத்து நல்லுங்களின் பார்வைக்கும் இதனை சமர்பிக்கின்றேன் !
http://i501.photobucket.com/albums/e...ps09t1rbc7.jpg
http://i501.photobucket.com/albums/e...psuuonaiyh.jpg
RKS
நடிகர் திலகத்தின் 13ம் பாகத்தை காணோமே?
Please refer Raghavendra's thread for NT's threads:
http://www.mayyam.com/talk/showthrea...Sivaji-Ganesan
The Box Office Emperor of Indian Cineme started by Mr Pammalar has been treated as Part 13
http://a1.s6img.com/cdn/0026/p/12332379_1052723_i.jpg
by J Jasper Daniel
பட அனுபவங்கள் பற்றி விஜயகுமாரி கூறியதாவது:-
அடுத்து ராஜாமணி பிக்சர்ஸ் பட நிறுவனம் "குங்குமம்'' என்ற படத்தை கிருஷ்ணன் - பஞ்சு டைரக்ஷனில் தயாரித்தது. இந்தப் படத்தில், சிவாஜிகணேசன், எஸ்.எஸ்.ஆர், ரங்காராவ், எம்.வி.ராஜம்மா, நான் எல்லோரும் நடித்தோம். இந்தப்படத்தில் சாரதா அறிமுகமானார்.இதில், நான் சிவாஜிகணேசனை காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன்.
அடுத்து ஏ.எல்.எஸ். புரொடக்ஷன் தயாரித்த "சாந்தி'' என்ற படத்தில் சிவாஜிகணேசன், எஸ்.எஸ்.ஆர், நான், எம்.ஆர்.ராதா ஆகியோர் நடித்தோம். டைரக்டர் பீம்சிங்.
இந்தப் படத்தில் சிவாஜிகணேசனுக்கும், எனக்கும் முதல் இரவு காட்சி. அந்தக் காட்சியில், முதல் இரவு நடக்கக்கூடாது என்பதற்காக என் புடவையை எரியும் விளக்கில் போட்டு புடவை எரிய ஆரம்பித்ததும் "முதல் இரவு அன்று இப்படி நடந்தது அபசகுனம்'' என்று காரணம் காட்டி, சிவாஜிகணேசன் முதல் இரவை தள்ளி வைத்துவிடுவார்.
இது அன்றைய தினம் படமாக்கப்பட வேண்டிய காட்சி.
அப்போது எதிர்பாராமல் என் புடவையில் தீ மள மளவென்று பரவியது.நான் பயந்து போய், என் கையால் அதைக் கசக்கி தீயை அணைத்துவிட்டேன். இதனால் என் கையில் தீக்காயம் ஏற்பட்டு, நான் துடித்துப்போனேன்.
உடனே, சிவாஜி மருந்து வாங்கி வரச்சொல்லி, அவரே என் அருகில் அமர்ந்து தீக்காயத்திற்கு மருந்து தடவினார். அந்த மனிதாபிமானத்தை இன்றும் என்னால் மறக்க முடியவில்லை.
வித்தியாசமான கதை அமைப்பை கொண்டிருந்த "சாந்தி'', நன்றாக ஓடியது.
பெல் பிக்சர்ஸ் நிறுவனம் பீம்சிங் டைரக்ஷனில் எடுத்த படம் "பச்சை விளக்கு.'' இந்தப்படத்தில் சிவாஜிகணேசன், எஸ்.எஸ்.ஆர், எம்.ஆர்.ராதா, ரங்காராவ், சவுகார்ஜானகி, புஷ்பலதா, நாகேஷ் ஆகியோர் நடித்தோம்.
இந்தப்படத்தில் நான் சிவாஜிகணேசனின் தங்கையாக நடித்தேன். அதில் சிவாஜிகணேசன் என்னை வாழ்த்தி "ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது'' என்று பாடுவார். "குங்குமச் சிமிழே, குடும்பத்தின் விளக்கே, குலமகளே வருக! எங்கள் கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக!'' என்று அந்தப்பாட்டில் வரிகள் வரும்.
அன்றே சிவாஜிகணேசன் என்னிடம், "விஜி! நீ வருங்காலத்தில் கண்ணகியாக நடிப்பாய்!'' என்றார்.
அவர் என்னை வாழ்த்தி, பச்சை விளக்கு காட்டினார் என்றே நினைத்தேன். - (கலை உலகின் ஜாதி மத பேதமற்ற கடவுள் நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் தீர்கதரிசனம் - இவரை கண்ணகி கதாபாத்திரம் செவ்வனே செய்தது ! )
பச்சை விளக்கு படம் திரையிடப்பட்ட எல்லா இடங்களிலும் வெற்றிக்கொடி நாட்டியது.''
இவ்வாறு விஜயகுமாரி கூறினார்.
Rks
இதுவரை யாரும் அதிகம் பார்த்திராத அபூர்வ புகைப்படம்.. பேசும் படம் இதழிலிருந்து...
எகிப்து அதிபர் நாசரை பிரம்மாண்டமான பூச்செண்டு அளித்து வரவேற்கும் இந்திய திரை உலகின் முதல் உலக நாயகர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் .
Picture Courtesy Raghavender Sir and Pesum Padam
http://i501.photobucket.com/albums/e...ps5gq6obns.jpg
வித்தியாசமான கோணங்களில்
நடிகர்திலகம்
ஓரே உடை ,
ஒரு பகுதியை சுற்றியுள்ள இடங்கள்,
கறுப்பு வெள்ளை
எத்தனையோ இருந்தாலும்
எப்படிப்பட்ட ரசனையுள்ளகாட்சிகள்.
இப்போதெல்லாம் வெளிநாடுகளுக்கு சென்று கோடி கோடிகளாய் செலவழித்தும்
எடுக்கப்படும் காட்சிகளைஒரு முறையாவது ரசிக்கவா முடிகிறது?
http://i1065.photobucket.com/albums/...psqabtb0wl.jpg
http://i1065.photobucket.com/albums/...pszrmytbfc.jpg
http://i1065.photobucket.com/albums/...psl4bmursh.jpg
http://i1065.photobucket.com/albums/...ps5yiapgyq.jpg
http://i1065.photobucket.com/albums/...psdodxhcxd.jpg
சிவாஜியின் காலங்கள்
தமிழ்சினிமாவின் பொற்காலம்
http://i1065.photobucket.com/albums/...ps7eohkhpz.jpg
http://i1065.photobucket.com/albums/...psqfvyc5kb.jpg
http://i1065.photobucket.com/albums/...psoeb7pizg.jpg
http://i1065.photobucket.com/albums/...pswphk0x0k.jpg
http://i1065.photobucket.com/albums/...ps0kjjunio.jpg
சிவாஜியின் காலங்கள்
தமிழ்சினிமாவின் பொற்காலம்
Thnx kalnayak and vasu.
http://i1065.photobucket.com/albums/...psbbanufoy.jpg
http://i1065.photobucket.com/albums/...psgmvsiqw5.jpg
http://i1065.photobucket.com/albums/...psmyqo4iqm.jpg
http://i1065.photobucket.com/albums/...psc7ppgmjv.jpg
http://i1065.photobucket.com/albums/...ps3qqiajkr.jpg
சிவாஜியின் காலங்கள்
தமிழ்சினிமாவின் பொற்காலம்
http://i1146.photobucket.com/albums/...ps3vsulg3u.jpg
அடுத்து ...
Sivaji Ganesan - Definition of Style தொடரில்
இதுதான் இயல்பு நடிப்பு...
இயல்பு நடிப்பு என்றால் என்ன என்றே தெரியாமல் அதைப் பற்றி பேசுபவர்களுக்கு நெத்திப்பொட்டில் அடித்தாற்போல் நடிகர் திலகம் விளாசும் காட்சி...
பாலாடை படத்திலிருந்து இடம் பெறுகிறது...
Teaser / முன்னோட்டம்
Concept / கருத்து : பஞ்சபூதங்களின்/ஐவகை நிலங்களின் ஆளுநர் நடிகர் திலகமே!
Part 1 : பஞ்சபூதங்கள்Quote:
நடிகர்திலகத்தின் காவியங்கள் பஞ்சபூதங்களின் நெஞ்சவேதங்களே!! ஐவகை நிலங்களிலும் உவகையே!!
நிலம் நீர் நெருப்பு ஆகாயம் காற்று எனும் பஞ்சபூதங்கள் சூழ்ந்து ஐவகை நிலங்களாம் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை சார்ந்து வாழ்ந்து வரும் நமக்கு வாழ்வியல் களம் பல்வேறு உணர்ச்சிக் குவியல்களான நடிகர்திலகத்தின் காவியங்களே !
பஞ்சபூதம் 1 : நிலம்
வாழ்வில் எத்தகைய உயரத்திற்கு சென்றாலும் நமது கால்கள் பூமியில் இருப்பதே நமக்குப் பாதுகாப்பு!
https://www.youtube.com/watch?v=s0Qt6uD8CZQ
பஞ்சபூதம் 2 : நீர்
நீருக்குள் பதுங்கினாலும் மூச்சடக்கும் வரையே பாதுகாப்பு ..மூச்சடங்கி விட்டால் ?!
https://www.youtube.com/watch?v=s0brrvQD8OU
பஞ்சபூதம் 3 : நெருப்பு
நெருப்பென்று தெரிந்தும் விளையாடுவது ஆபத்தே !
மகனைக் காப்பாற்ற நெருப்பு விளையாட்டில் நடிப்புக் கனல் !
https://www.youtube.com/watch?v=yLU__sQaDrg
பஞ்சபூதம் 4 : ஆகாயம்
ஆட்டுக்கு வாலை அளந்து வைத்தவன் புத்திசாலி இறைவன் !!
நமக்கு சிறகுகளும் இருந்திருந்தால் ...வானத்திலேறி சந்திர மண்டல வாசலையும் தொட்டிருப்போமே!!வீடு வாசல் தேவையின்றி கிரடிட் கார்டு துரத்தலில் தப்பிக்க ஆகாயக் கூடுகளில் பறந்துகொண்டே இருக்கலாமே!!
https://www.youtube.com/watch?v=rfMUil39Kwc
பஞ்சபூதம் 5 : காற்று
கொடியசைந்ததும் காற்று வந்ததா ..காற்று வந்ததும் கொடியசைந்ததா?!
கோழி முதலா....முட்டை முதலா?!
https://www.youtube.com/watch?v=4rvNInoT6Sc
Quote:
பஞ்சபூதங்களும் இடி மின்னல் புயல் மழையாக உருமாறி நிலத்தில் இறங்கி நடிகர்திலகத்தை ஆசீர்வதிக்க கைகோர்க்கும் போது நடிகர்திலகத்தின் களிநடனம் கண்டு நாம் இதுவரை காணா இன்பம் கனிந்திடுமோ ?!
https://www.youtube.com/watch?v=f6Q8ILxM_RM
நடிகர் சிவக்குமார் - முக நூலில் - நன்றி...
https://scontent-sin1-1.xx.fbcdn.net...84&oe=55E78592
பள்ளிப் படிப்பு இல்லை !
பரம்பரைப் பெருமை இல்லை !
இளமையில் வறுமையை
இறுகத் தழுவியவன்- ஆயினும்
கலை உலகின் நாயகி
கலைவாணி ஆசியினை
வரமாய்ப் பெற்று - திரையில்
வரலாறு படைத்திட்டான் !
ஒரு சாண் முகத்தில்
ஓராயிரம் பாவம் காட்டி
சிம்மக் குரலில் தீந்தமிழ்
வசனம் பேசி
அவன் படைத்த பாத்திரங்கள் - திரையில்
அசைகின்ற ஓவியங்கள் !
கர்ணனாக- கட்டபொம்மனாக சிவாஜியாக -செங்குட்டுவனாக
அரிச்சந்திரனாக -அசோகனாக
அப்பராக - ஐந்தாம் ஜார்ஜாக
பாரதியாக - பொற்கைப் பாண்டியனாக
வ.உ.சி.யாக - வாஞ்சியாக
அவன் ஏற்ற வேடங்கள்
எங்களுக்குப் பாடங்கள் !
நடக்கும் நடையில்
நானூறு வகை காட்டினான் !
மரமேறிக்கு ஒரு நடை !
மனோகரனுக்கு ஒரு நடை !
சட்டி சுட்டதடா பாடலுக்கு ஒரு நடை !
போனால் போகட்டும்
போடாவுக்கு ஒரு நடை !
மொத்தத்தில்
நவரசங்களையும் நமக்கு
'நவராத்திரி' யில் காட்டிவிட்டான் !
கிருஸ்துவுக்கு முன்
கிருஸ்துவுக்கு பின் - என
மானுட வரலாறு தொடர
சிவாஜிக்கு முன்
சிவாஜிக்குப் பின் -என
தமிழ்த் திரையுலக வரலாறு
தொடரும் !
வாழ்க சிவாஜி ! ஓங்குக அவர் நாமம் !!
- செவாலியே விருது அவர் பெற்ற போது
நான் மேடையில் வாழ்த்தியது ..
https://scontent-sin1-1.xx.fbcdn.net...17&oe=56334C7F