வினோத்
அபூர்வமான விளம்பர நிழற்படங்களுக்கு பாராட்டுக்கள்.
Printable View
வினோத்
அபூர்வமான விளம்பர நிழற்படங்களுக்கு பாராட்டுக்கள்.
மனமுள்ள மறுதாரம்...எனக்கு மிகவும் பிடித்த சீர்காழியின் பாடல்...
இது போல பல உண்டு. விழிவாசல் அழகான மண்டபம், மூங்கில் மரக்காட்டினிலே, தட்டுத்தடுமாறி நெஞ்சம்... இதுபோல எத்தனையோ பாடல்கள்.
,வினோத் சார்,
அமர்க்களம். ஷீலா நர்ஸாக நிற்க, இங்கே சகுந்தலா முறைக்க, நடுவில் ஹிப்பி ஸ்டைல் ஷர்ட்டில் ரவி அழகாய் இருக்க மஞ்சள் குங்குமம் யாருக்கோ?
டாக்டர் சிவகுமாரிடம் பிரமிளா என்ன சொல்லி சொந்தம் கொண்டாடுகிறார்?
மணிப்பயல் ராஜன் ஏன் அப்படியே நடிகர் திலகம் போலவே அநியாத்துக்கு காப்பி அடித்து போஸ் கொடுத்து நிற்கிறார்?
நாணயம் படம் வந்ததா? பாடல்கள் உள்ளதா?
//விழிவாசல் அழகான மண்டபம்//
ஆஹா! என்ன ஒரு பாடல்!
'பிரார்த்தனை' படம் விளம்பரம் கண்டதுமே அந்த வித்தியாசமான பாடல் 'டக்'கென்று நினைவுக்கு வந்து விலகுவேனா என்கிறது.
காதல் பிறந்தது
ஆவல் எழுந்தது
காவல் கடந்தது
ஹா....
என்று சுசீலா 'ரூப் தேரா மஸ்தானா பாணியில்' மோகமாய், தாபமாய் ரேடியோவில் (எம்மாம் நீட்டு நேஷனல் பானாசோனிக் ரேடியோ) பாடிக்கொண்டிருக்க, ஸ்லோமோஷனில் ராஜனும் (கொடுத்து வைத்த ராஜன்) நிர்மலாவும் ஒன்று சேர்ந்து ஒரு கொத்து திராட்சையை நடுவில் வைத்து தங்களுடைய இதழ்களால் பங்கு போட்டுக் கொள்ள சின்னாவின் நாடித்துடிப்பு எகிறுவது நிச்சயம். (நிர்மலா எவ்வளவு அழகாக திராட்சைக் கொத்தைக் கவ்வுகிறார்!) ஸ்லோமோஷனில் நிர்மலாவின் அசைவுகள் அற்புதம். வழக்கம் போல டிரஸ் கொள்ளை அழகு. இந்த மனிதர் வேற நிர்மலாவை அப்படியே அலேக்காகத் தூக்கி, எங்கெங்கோ தட்டி..... கோபால்....இது அடுக்குமா?
பாடலில் கிடார் கிறுகிறுக்க வைக்கிறது.
'இன்னும் உண்டு இன்பம் என்று எண்ணும் வரையில் தழுவு
கன்னம் என்னும் ஏட்டில் உந்தன் சின்னம் நூறு எழுத்து'
என்னும் வரிகளிலும், பல்லவி வரிகளிலும் பயங்கர போதை ஏற்றுகிறார் சுசீலா. யப்பா! சுசீலாவா அது?... தூள் கிளப்பி விட்டார் போங்கள். வரிகளில் விளையாடுகிறார் வாலிபக் கவிஞர். இசை யார் என்று நினைத்தீர்கள்? மெல்லிசை மன்னர்களில் பின்னவர். விஸ்வரூபம். பாடல் முழுதும் இளமை விளையாட்டு. போதை தெளிய வெகுநேரம் பிடிக்கும்.
https://youtu.be/iYlTIjjk4ig
.(அம்மா மலையாள கரையோரம் கவி பாடிய குருவி)// யார் அவர்.
இன்பமெங்கே பாடலை எதிரெதிர் கானத்திற்காக இடலாம் என முன்பு நினைத்திருந்தேன்.. நல்லபாட்டு தாங்க்ஸ்..
தாங்க்ஸ் ஃபார் தெய்வ சங்கல்பம் மதுண்ணா வீட் போய் கேட்கிறேன்..
இன்னொரு அற்புதமான 'ஹேப்பி பர்த்டே' பாடலும் 'பிரார்த்தனை'யில் உண்டு. நிர்மலாவிற்கு. சுசீலா குரலில்.
நேற்று வரை 16
இன்று முதல் 17
நான் வாழ நல்வாழ்த்து சொல்லுங்கள்
எல்லோரும் நில்லுங்கள்
நிர்மலாவின் சுறுசுறுப்பு ஜோர். ஜிப்பா ஸ்ரீகாந்த் சின்னதாய் இடுப்பை குலுக்குவார். ராஜனின் இம்சை வழமை போல.:)
https://youtu.be/p3HLROpeVZY
இப்போ மது அண்ணா, ராகவேந்திரன் சாருக்கு மட்டும்.
சுசீலா ம்..ம்..ம்...ம்..ம்..ம்...ம்..என்று ராகம் இசைக்கும் போதெல்லாம் பின்னாளில் வந்த இன்னொரு பாட்டு ஞாபகத்திற்கு வருகிறதே. இப்போது பிடித்துக் கொண்டிருப்பீர்கள்.
ம்..ம்..ம்...ம்..ம்..ம்...ம்..
சந்தோஷ நேரங்கள்
ம்..ம்..ம்...ம்..ம்..ம்...ம்..
சங்கீதம் கேளுங்கள்
அந்த ம்..ம்..ம்...ம்..ம்..ம்...ம்.. மட்டும் அப்படியே இல்லை?
https://youtu.be/4dAEbpp-3bE
//சின்னாவின் நாடித்துடிப்பு எகிறுவது நிச்சயம். // ஓய்..ஈவ்னிங்க் தான் பார்க்க முடியும் :) பார்த்துச் சொல்கிறேன்..
உமக்காக ஒரு தொண்டர் பாடல்..சிக்கிஸ்தொண்டா!
நீச்சலுடை கூட அந்தக் காலத்தில் அளவாக அழகாக அணிந்திருக்கிறார்கள். பாடல் கேட்கக் கேட்கப் பிடித்தும் விட்டது..(ரெண்டு நாளா போடலாமா வேணாமான்னு யோசிச்சுப் போட்டுட்டேன்) பெண்குரலில் வரும் ஒய்..ஒய் அழகு..பாடல் ஆரம்பத்தில் ஜெயலலிதாவின் குட்டி க் குட்டி ஸ்டெப்ஸ் அழகு..
https://youtu.be/Dv0lLfKcOBk
சின்னா!
எங்களுக்கு போடத் தெரியாதாங்காட்டியும். ஆனாலும் உம்ம துணிச்சல் நமக்கு வராது'ம்மா' ஸாரி வராதுப்பா.:)
சிக்கான உடையைத் தேர்ந்தெடுத்த சி(க்)கா
போட்டிடுக நாயகிக்கு சொக்கா...
என்று எழுதத் தான் தோன்றுகிறது...
என்ன செய்வது.. எனக்கு அந்தளவிற்கு ஞானம் இல்லையே...
வாசு சார்
நமது மெல்லிசை மன்னரின் பிரார்த்தனை படப்பாடலில் தாங்கள் சுட்டிக்காட்டிய அந்த ம்ம்ம்ம்... ஹம்மிங்கின் பாதிப்பில் தான் பார்வையின் மறுபக்கம் பாடல் உருவாகியிருக்கலாம் என்பதாகத் தான் எனக்கும் தோன்றுகிறது.
பிறந்த நாள் வாழ்த்து எப்படி இருக்க வேண்டும் என்பதையும் பிறந்த நாள் கொண்டாடுபவரே சொல்கிறாரே... ஏதேனும் அரசியல் கட்சியில் இருந்திருப்பாரோ...?
முன்பு முக நூலில் மூன்று வருடங்களுக்கு முன்னால் இதே தினத்தில் பரதனைப் பற்றி எழுதியிருந்தேன்..
*
பரதன் மனைவி மிருதுளை தானே.. வெகு சின்ன வயதில் ஆனந்த விகடனில் வேள்வி என்ற கதை படித்த நினைவு..
பரதனை விட மிருதுளை பற்றி எழுதியிருப்பார்கள்..கொஞ்சம் பரதன் மீது கோபம் கூட வந்தது..மனைவியை ராமபிரான் திரும்பி வரும் வரையில் பிரிந்தே இருந்தாராம் பரதன்..என வந்தது அந்தக் கதையில்..எவ்வளவு உண்மை எனத் தெரியவில்லை..
ஏதோ எனக்குத் தெரிந்ததை வைத்து எழுதிப் பார்த்திருக்கிறேன்..
**
காத தூரம் நடந்து வந்து கசிந்துருகி நின்றவன்
பாதம் பட்ட பாது கையே போதுமென்று சொன்னவன்
வேத வித்தாம் ராமன் கூட இளையவனாய்ப் பிறந்தவன்
பேத மில்லா பாசங் கொண்ட பரதனவன் தெரியுமா..
அண்ணன் ராமன் காட்டில் வாழ அரண்மனையில் வாழ்கையில்
திண்ண மான நெஞ்சம் கொண்டு தவமுனிவர் போலவே
அன்னம் போன்ற நடையைக் கொண்ட அழகுமனை ஒதுக்கியே
எண்ணம் போல வாழ்ந்து அண்ணல் வந்தபின்னர் தந்தவன்…
நெருப்பு தன்னை மூட்டி வைத்து நேசத்தோடு பார்த்தவன்
விருப்ப மான அண்ணல் முகம் காணாமலே வெறுத்தவன்
வருத்தத் தோடு தாவி வாழ்வை முடிப்பதற்குப் போகையில்
நறுவி சாக அனுமன் வந்து சேதிசொல்ல வாழ்ந்தவன்
துறவு வாழ்க்கை வாழச் சென்ற அண்ணலையே நினத்ததால்
உறவு எதுவும் இலாமல் உளத்தில் அனலைத்தான் வளர்த்ததும்
புறமும் அகமும் நோகத் தரையில் பரிதவித்தே படுத்ததால்
பரதன் தன்மை போற்றி சொல்லிப் பாடிடுவோம் நாங்களே..
*
ந.தியின் நடிப்பு மறக்க இயலுமா என்ன..
https://youtu.be/HKrjD6Z2kOQ
சிக்கா... பரதனின் மனைவி பெயர் மாண்டவி என்று நினைவு.... சீதா, ஊர்மிளா, மாண்டவி, சுருதகீர்த்தி என்ற நால்வரும் ராம, லக்ஷ்மண, பரத,சத்ருக்னருக்கு பத்தினிகள் respectively.
வாசுஜி... நீங்க கேட்ட கேள்விக்கு பதில்... ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்..
//பிரார்த்தனை' படம் விளம்பரம் கண்டதுமே அந்த வித்தியாசமான பாடல் 'டக்'கென்று நினைவுக்கு வந்து விலகுவேனா என்கிறது.
காதல் பிறந்தது
ஆவல் எழுந்தது
காவல் கடந்தது
ஹா....
என்று சுசீலா 'ரூப் தேரா மஸ்தானா பாணியில்' மோகமாய், தாபமாய் ரேடியோவில் (எம்மாம் நீட்டு நேஷனல் பானாசோனிக் ரேடியோ) // வாசு சூப்பரோ சூப்பர்... பாடலை முழுக்கப் பார்த்தேன்.. . நான் இதுவரை கேட்டிராத ஒன்று..முழ்க்க முழுக்க ஸ்லோமோஷனில் கொஞ்சம் வித்யாசமான் பாடல்..பாடிய விதம் வரிகள்..அழகிய நிர்மலா..அண்ட் எவ்விஎம் ராஜன் ( நற நற) வெய்ட் அடுத்த பாட் கேட் வர்றேன்.
ராகவேந்தர் சார்.. :)
சிக்கான ஆடை சிரித்ததா இல்லையிலை
செக்கச் சிவந்த முகம்..
நு எழுத வ்ருது இப்போ எனக்கு.. ஹலோ ஸ்வாமி நான் என்னைச் சொன்னேன்..வெட்கமா இருக்கு..பட் உங்களுடைய இசை ஞானத்துக்கு முன்னால்.. அப்படின்னுசாவித்திரிக்கு சிங்கார வேலாவில் திக்கறாமாதிரி திக் திக்குனு ஹடிச்சுக்குது ஹார்ட்டு :)
A Bird's eye view on some Hollywood Love stories reminding us of GG...the debonair!
Part 1 : Robert Taylor comparable to GG!!
The tale of love between a brave soldier and a dancing damsel....poles apart!Quote:
....reminiscence of WATERLOO BRIDGE starring Robert Taylor with Vivien Leigh...(famous Gone with the Wind heroine opposite to Clarke Gable)!a poignant love story woven in GG standards of dignified love and affection!!
Robert Taylor the suave debonair hero reminding us of GG's traits!!
https://www.youtube.com/watch?v=Ee7HPhr25ug
https://www.youtube.com/watch?v=72d7N1stylU
https://www.youtube.com/watch?v=gdRr...D4KfAth7BigIVA
From maadhar kula maanikkam
maasatru uyarndha maragathame........
http://www.youtube.com/watch?v=cce1nXtsq1w
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்
(நெடுந்தொடர்)
54-ஆவது பதிவு
https://i.ytimg.com/vi/zRBI53uQ24s/hqdefault.jpg
'கீதா.... ஒரு நாள் பழகும் உறவல்ல'
அடுத்து தொடரில் 'அவள்' படத்தின் பாலாவின் டூயட். இந்தப் பாடலைப் பற்றி நான் என்ன சொல்ல!
1971-ல் வெளிவந்து இந்தியாவையே ஒரு கலக்கு கலக்கிய 'தோ ரஹா' என்ற இந்திப்படமே தமிழில் 'அவள்' ஆனது.
http://www.webmallindia.com/img/film...1324894072.jpg
'அடல்ட்ஸ் ஒன்லி' முத்திரைப் படங்கள் தொடர்ந்து வெளிவர வழி வகுத்த ஒரு படம். 'தோ ரஹா' என்றாலே கற்பழிப்பு என்ற வார்த்தையை நெஞ்சில் நிலைக்க வைத்துவிட்ட பெருமை இப்படத்திற்கு என்றும் உண்டு.
வெளியே முகம் சுளித்துக் கொண்டே அகமலர்ந்து அன்றைய மக்கள் கூட்டம் இப்படத்தை பாரபட்சம் இல்லாமல் கண்டு களித்தது. மீசை அரும்பாத இளம் வாலிபர்கள் தீக்குச்சி உரசலின் கரியில் மீசை வரைந்து தியேட்டர் நிர்வாகத்தை ஏமாற்றி பார்த்த கதைகளும் நிறைய. (ஒரு தீக்குச்சி எனக்கு)
இந்தியில் ராதா சலூஜா இந்த ஒரே படத்தில் வானளாவிய புகழ் பெற்றார். ஸ்டைல் சத்ருகன் சின்ஹா, அமுல் பேபி அனில்தாவன், ரூபேஷ் குமார், இப்தகர் இப்படத்தில் நடித்து மேலும் புகழ் பெற்றார்கள்.
'அவள்' படம் பல சிறப்பு அம்சங்களை தன்னகத்தே தக்க வைத்துக் கொண்ட ஒரு படம்.
தமிழில் தேசிய நடிகர் சசிகுமார், ஸ்ரீகாந்த், ஏ.வி.எம்.ராஜன் ('பிரகாஷ்' என்ற சப்போர்டிங் ரோல்) புதிய பரிணாமத்தில் 'வெண்ணிற ஆடை' நிர்மலா ஆகியோர் நடித்திருந்தனர். டி.கே.பகவதி, பண்டரிபாய், சந்திரபாபு, மனோரமா உடன் நடித்திருந்தனர். இயக்கம் நடிகர் திலகத்தின் படங்களை இயக்கி வானளாவிய புகழ் பெற்ற ஏ.சி.திருலோக்சந்தர்தான். சுந்தர்லால் நஹாதாவின் தயாரிப்பு 'அவள்'.
உரையாடல்களை ஏ.எல்.நாராயணன் எழுதியிருந்தார். பாடல்களை வாலி இயற்ற, அப்பாடல்களுக்கு தங்கள் அசாத்திய திறமை கொண்டு, அற்புதமாக இசையமைத்து, இன்றுவரையில் வியப்பால் நம் விழிகளை விரியச் செய்த இரட்டையர்கள் சங்கர்- கணேஷின் மகத்தான பங்கை மறப்பதற்கே இல்லை. பின்னணி இசையும் பின்னியதுதான்.
http://tamilthiraipaadal.com/files/1972/Aval/Aval.jpg
இப்படத்தின் மூலம்தான் தமிழில் ஸ்ரீகாந்த் கற்பழிப்பு வில்லன் என்ற பொன்னான பட்டத்தை அடைந்து, அந்தப் படத்திலிருந்து தான் நடித்த பெரும்பாலான படங்களிலும் நடிகைகளின் சேலை, ஜாக்கெட் கிழித்து, துகிலுரிந்து அந்தப் பட்டத்திற்கு 'வானளாவிய அதிகாரம்' தனக்கே என்று முதலிடத்தில் தக்க வைத்துக் கொண்டார்.
இவர் செய்த இந்த துச்சாதனன் வேலைக்கு எத்தனை கிருஷ்ண பரமாத்மாக்கள் வந்தாலும் அத்தனை துரௌபதிகளுக்கும் சேலைகளை வழங்கி மானம் காத்திருக்க முடியாது. ஓடியே போய் இருப்பார்கள்.
பரிதாபத்துக்குரிய நாயகியாக குடிக்கு கணவனாலேயே அடிமையாகி, பின் நயவஞ்சக நண்பக் கயவனிடம் கற்பை பறிகொடுக்கும், முற்றிலும் புதுமையான, துணிச்சலான பாத்திரத்தில் நிர்மலா கவர்ச்சியிலும், கற்பழிப்புக் காட்சியிலும், பிளாக் பிகினியிலும் நடித்து, அனைவரையும் வாய்பிளக்க வைத்து அன்றைய இளம் ரத்தங்களை சூடாக்கி அனைவரது தூக்கத்தையும் கெடுத்து வைத்தார்.
கவர்ச்சியும், ஆபாசமும் பேசப்பட்ட அளவிற்கு படத்தின் தரம் பேசப்படவில்லை. நிஜமாகவே நல்ல படம். கதைக்குத் தேவையான காட்சிகள் சரியாகவே இருந்தன. காமக் கண்களோடு 'அவள்' பார்க்கப்பட்டதால் நல்ல கதை கண்காணிக்கப்படவில்லை.
சரி! அதையெல்லாம் விட்டு விடுவோம். பாடலுக்கு வருவோம். அதற்கு முன் இப்படத்தின் முக்கியமான பாடல்கள் என்ன என்று ஒருமுறை பார்த்து விடலாம்.
1.'Boys and Girls....வருங்காலம் உங்கள் கையில் வாருங்கள்' என்று டி எம்.எஸ். தன் வாய்ஸை இளசுகளுக்காக மூக்கடைத்து மென்மையாக்கி பாடும் பின்னணிப் பாடல். கோஷ்டிகளின் 'ரிப்ப ரப்ப ரிப்ப ரப்ப' என்ற சங்கர்-கணேஷின் தனி முத்திரை உண்டு. (ஏழெட்டுப் பெண்கள் எந்தன் பக்கம் போல)
ஆதிராம் சாருக்கும், எனக்கும் மிகவும் பிடித்த சாத்தனூர் அணைக்கட்டில் படமாக்கப்பட்ட பாடல். வண்ணத்தில் வடிவழகாய் காட்சி அளிக்கும். எத்தனயோ அணைக்கட்டுக்கள் இருந்தாலும் சாத்தனூர் தனிதான். சின்னாவுக்குப் பிடித்த ஸ்லோமோஷன் காட்சிகள் அதே நிர்மலா அசைவுகளில் உண்டு.
http://i.ytimg.com/vi/E2AGeIhb4NA/mqdefault.jpg
2. மதுவெடுத்து, சசிகுமாரின் மலரடி நனைத்து,'பொறுத்திரு பழகி வரும் வரைக்கும்' என்று வேண்டுகோள் விடுத்து, பரிதாபமாய், சுசீலாவின் ஈடுயிணையில்லாக் குரல் ஜாலங்களில் நிர்மலா பாடும் 'அடிமை நான் ஆணையிடு' பாடலைப் பற்றி எழுத எனக்குப் பக்கங்கள் போதாது. இது பற்றி விரிவாக தனியாக எழுதுகிறேன். சுசீலாவின் 'டாப் டென்'னில் இது நிச்சயம் உண்டு எனக்கான வரிசையில். சங்கர் கணேஷின் 'டாப் ஒன்' என்று சொன்னால் மிகையில்லை.
(ராட்சஸிக்கு இதே பாணியில் 'எல்லோரும் பார்க்க... என் உல்லாச வாழ்கை' அவளுக்கென்று ஒர் மனப் பாடல் எனக்கென்று மட்டும் உருவானது)
3. இப்போது தொடரில் ஜொலிக்கப் போகும் பாடல்.
'கீதா.... ஒரு நாள் பழகும் உறவல்ல
காதல்.... நீரில் தோன்றும் நிழலல்ல'
அடடா! இந்த வரிகளை டைப் பண்ணும் போது கைகள் கூட இனிக்கின்றதே! அப்போ மனம் எவ்வளவு குதூகலம் அடையும் என்று நினைத்துப் பாருங்கள். இதை ஒரு பாடலாகவே நான் பார்ப்பதில்லை. கேட்பதில்லை. இந்தப் பாடல் டெண்டுல்கர் கிரிக்கெட் சிறுவர்களுக்கு வழங்கும் 'சீக்ரெட் ஆப் எனர்ஜி' பூஸ்ட் போல. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் குறிஞ்சி போல.
சோர்ந்து கிடக்கும் கிழவன் கூட இப்பாடலைக் கேட்டால் உடல் முறுக்கி எழுந்துவிடுவான் உற்சாகம் தாளாமல். நித்ய ஜீவ இளமை வாய்ந்த சாகா வரம் பெற்ற பாடல். இதயத் தமனிகளில் இன்ப இசைஆணி கொண்டு நானே எனக்குள் செதுக்கிக் கொண்ட சிற்பம் இந்தப் பாடல். நீர், நெருப்பு, மற்றும் எவற்றாலும் அழியாதது கல்வி என்பார்கள். அது போல எக்காலத்திலும் எவற்றாலும் அழியாத, அழிக்க முடியாத, அளவில்லா உற்சாகத்தைத் தரும் உன்னதப் பாடல். ஜீவகாந்தப் பாடல்.
பாலாவும், சுசீலாவும் சேர்ந்தால் கேட்கணுமா?....அதுவும் உல்லாசம் புரண்டு ஓடும் உற்சாகப் பாடல் என்றால் பாலா சிறகடித்துப் பறப்பார் என்றால், சுசீலா அந்த சிறகோடு நம்மையும் அணைத்துக் கொண்டு சேர்ந்து பறப்பாரே!
'அடிமை நான் ஆணையிடு' என்று அவரால் நம்மை அழ வைக்கவும் முடியும்...
'உனக்காகப் பிறந்தேனே.... உயிரோடு கலந்தேனே.... வா' என்று நம்மைப் போன்ற கோடிக்கணக்கான ரசிகர்களை சந்தோஷ வசியம் செய்யவும் முடியும்.
உலகில் எந்த ஜீவனுக்கும், எந்த ஜீவராசிக்கும் இல்லாத சுகக்குரல். குயில்கள் பாடம் எடுத்துக் கொள்ளவேண்டிய ஒரே குரல்... ஒரே ஒரு குரல்... இந்த கலைத் தெய்வத்துக்குத்தான் என்று ஓங்கி நம்மால் குரல் கொடுக்க முடியும்.
பாலா பரவசத்தின் உச்சங்களுக்கு நம்மை அழைத்துச் செல்வார்.
இரட்டையர்களோ டபுள் உற்சாகத்தோடு இரண்டு படுத்துவார்கள்.
பாடலின் துவக்க இசையினூடே சசிகுமார் நிர்மலைப் பார்த்து 'கீதா... கீதா' என்று அழைத்தவாறே பாடல் துவங்கும். வாளிப்பான அந்த அழகுப் பெண் சிலையைப் பற்றியவாறு அணைக்கட்டின் அற்புத பார்க்கில் சசி பாலா குரலில் 'கீதா' என்று ஒருமுறை அழைக்க, அது இரண்டு முறை 'எக்கோ' ஆக திரும்ப ஒலிக்க, பாலாவின் வெண்கலக் குரல் கேட்டு கூனன் கூட நிமிருவான்.
http://i.ytimg.com/vi/6DE36xVE9dw/mqdefault.jpg
நீரூற்றுகளுக்கு மத்தியில் மகிழ்வாய் ஓடும் நிர்மலா மங்கை நிஜமாகவே மகிழ்ச்சி தரும் கங்கை போன்ற குளிர்ச்சிதான். புளூ கலர் பேண்டில் செருகிய எல்லோ கலர் ஷர்ட்டில் நடிகர் திலகத்தின் ஆஸ்தான பக்தனான இராணுவவீரர் 'தேசியத் திலகம்' சசிகுமார் 'உலக நடிப்பு குரு'வின் பாணியைப் பின்பற்றி மகிழ்வூட்டுவார். நடை உடை பாவனைகள் நடிகர் திலகத்தின் வழியே இருக்கும். அதனால் நன்றாகவே இருக்கும்.
'கீதா ஒரு நாள் பழகும் உறவல்ல' என்று பாலா முதலடி எடுத்து நம் நெஞ்சை இன்பமாகத் துளைத்தவுடன் சங்கர் கணேஷ் தரும் அந்த ரயிலோசை போன்ற (கூக்குகுங்... கூக்குகுங்) இசை அப்படியே நம் மேல் இன்ப, பரவச முத்துக்களைக் கொட்டும். இந்த முதல் வரிக்கே படத்துக்கு நாம் கொடுத்த காசு செரித்து விடும்.
'காதல் நீரில் தோன்றும் நிழலல்ல'
வரிகளில் ஆரம்பத்திலேயே பாலா உச்சங்களைத் தொட்டுவிடுவார். 'நிழலல்ல' என்பதின் முடிவெழுத்தை அவர் 'ல'............அஹஹ' என்று இழுத்து முடிக்கையில் முழு இன்பமும் நமக்குக் கிடைத்துவிடும்.
அடுத்து மீண்டும் பல்லவிக்கு வந்து 'கீ............தா' என்று 'கீ' வுக்கும், 'தா'வுக்கும் இடையில் இழுத்து ஒரு கேப் கொடுப்பார். ஆஹா! ஆஹா! செத்தான் அவனவனும்.
'வெண்ணிற ஆடை' அவர் பட்டத்து உடையிலேயே வெட்கப்பட்டு இந்தப் பக்கம் குட்டி நீர்த்தேக்கத்தின் வளைவு மேடு விளிம்பில் வேக நடை நடந்து வர, அவருக்குப் பேரலல்லாக சசியும் அந்தப் பக்கம் பாடியபடி நடந்துவர,
செம டக்கர்.
அதே போல 'கா...தலி'ல் 'கா' வுக்கு பின் சற்று இடைவெளிவிட்டு 'தல்' என்று பாடுவதும் ஜோர்.
இப்போ சும்மா இருப்பாரா சுசீலா?
'இருய்யா...தோ வர்றேன்' என்று பாலாவைப் பழி தீர்க்கப் புறப்படுவார்.
'ஊடலில் கொஞ்சம்
(லல்லல் லல்லல் லாலலா)
போய்வர எண்ணும்'
(லல்லல் லல்லல் லாலலா)
என்று சுசீலா சுவையளிக்க, சுசீலாவின் ஒவ்வொரு வரிக்கும் மிகப் பொருத்தமாக பாலா,
'லல்லல் லல்லல் லால்லலா
என்று ஊடாலே புகுந்து புறப்படும் போது சோறு தண்ணி வேணாம் நமக்கு.
இதுவல்லாமல் பாலாவும் சுசீலாவும் மாறி மாறிப் பின்னுகையில் அவர்கள் குரல்களுக்குப் பின்னால் சங்கர் கணேஷ் நிகழ்த்தும் இசை ஜாலங்களைப் பற்றி சொல்லி மாளாது. அதுபாட்டுக்கு பாட்டுக்குத் தக்கவாறு விறுவிறுவென்று இணையாக வந்து சுகத்தை மேலும் பெருக்கிக் கொண்டிருக்கும். பாடலின் தரத்தையும் மேம்படுத்திக் கொண்டிருக்கும்.
'நிழலல்ல' என்று பாலா நிறுத்தியவுடன் இரட்டையர்கள் தரும் அந்த கிடாரின் சின்ன பிட் இரண்டு தரம் சுருக்க வருமே (டிங்.. டிங்) அது பாடலுக்கு செம மேட்ச்.
பிறகு வரும்
பூவையின் உள்ளம்...
(ஆ........ஆ)
புதுமலர் வண்ணம்
(ஓ ........ஓ)
என்று பாலா பாடும் போது இடையில் சுசீலா வந்து 'ஆ........ஆ' என்று ஹம்மிங் தந்து, முன்னால் குறுக்கிட்ட பாலாவை பக்காவாகப் பழி வாங்குவார்.
இருவரும் மாற்றி மாற்றி பழி தீர்த்துக் கொள்ள நமக்கு கோலாகலக் கொண்டாட்டம். பின்னால் சங்கர் கணேஷ் இவர்கள் வேறு இசையால் பாடும் இருவரையும் பழி தீர்த்துக் கொண்டிருப்பார்கள்.
(ஓ ........ஓ) பா(போ)டும் போது நிர்மலா காற்றில் அழகாக கைகளால் ஒரு 'S' கோலம் போடுவார்.
'உனக்காகப் பிறந்தேனே
உயிரோடு கலந்தேனே.... வா'
என்ற உயிர்ப்பான சுசீலாவின் குரலுக்கு உடம்புகளுக்கு முழுக்க அதிர்வு தந்து நிர்மலா அதிர வைப்பார் நம்மை.
இப்போது இடையிசை கிடாரின் கைங்கரியத்தில் இனிமையோ இனிமையோ என்று இனிக்கத் தொடங்கும். வயலின்களின் ஆதிக்கத்தோடு சேர்ந்து புல்லாங்குழல் ஒலிக்க, அதோடு இழையும் டிரெம்ப்பெட்டின் ஒலி மகுடிக்கு மயங்கிய நாகமாய் நம்மை சொக்க வைக்கும். பல்வேறு வாத்தியங்களின் ஒத்துழைப்பில் இடையிசை ராக்கெட் வேகத்தில் பயணிக்கும். துள்ளல், உற்சாகம் கரை கடந்து புரளும்.
சரணத்தில் பாலா
'நான் தொடும் வேளையில் மெல்ல' என்று சொல்ல,
அதற்கு சுசீலாம்மா
'துள்ள'' என்ற ஒரே வார்த்தையில் துவள,
பின் தொடர்ந்து,
'நால்வகை குணங்களும் செல்ல' என்று அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு அத்தனையையும் கொஞ்சம் கொஞ்சமாக பறி கொடுப்பதை நாசூக்காக நாயகனுக்கு நாயகி எடுத்துரைக்க,
நாயகன் நிர்மலாவை அப்படியே
'அள்ள'
பின் எடுக்கும் பாருங்கள் பாடலின் வேகம்...
'சேலையிட்ட சித்திரத்தின் மேனி தொட்டுக் கொஞ்சவோ' என்று பாலா படுஸ்பீடாக எடுக்க,
பதிலுக்கு இசை அம்மா அதே வேகத்துடன்
'மோதுகின்ற காதல் வெள்ளம் போதுமென்று கெஞ்சுமோ'
என்று எசப்பாட்டு பாட,
பதிலுக்கு பாலா,
'இன்னுமென்ன சின்னஞ்சிறு பிள்ளை என்ற எண்ணமோ'
என்று காதலால் கடிய,
'கன்னம் என்ன மன்னன் வந்து தேனருந்தும் கிண்ணமோ?'
என்று செல்லக் கோபம் காட்டி, ஒரே ஒரு வினாடி கூடத் தாமதியாமல்:clap:
'நானாகத் தரும் நேரம் தானாக உருவாகும் வா'
என்று நாயகனுக்கு மட்டுமல்ல நமக்கும் இன்ப அதிர்ச்சி கொடுப்பார் சுசீலா நிர்மலாவின் நடிப்போடு சேர்த்து.
https://i.ytimg.com/vi/DZNlHeWBHHQ/hqdefault.jpg
('இன்னுமென்ற சின்னஞ்சிறு பிள்ளை என்ற எண்ணமோ' என்று சசி கேட்டவுடன் நிர்மலா 'ஆமா' என்பது போல ஒரு சின்னத் தலையாட்டல் செய்வார். அற்புதமாக இருக்கும்)
'நானாகத் தரும் நேரம் தானாக உருவாகும் வா'
என்று சுசீலா முடித்தவுடன் பின்னால் வரும் அந்த 'டொட் டொட் டொட் டொட டொட டொட் ' தொடர் டிரம்ஸ் ஒலி எவரும் எதிர்பாரா கல்கண்டு.
பெரிய வெண்சங்குகளின் மேல் சசி அமர்ந்திருக்க, பின்னாலிருந்து ஓடி வந்து நிர்மலா பின்பக்கம் அவரைக் கட்டி அணைப்பார். பின்னால் தெரியும் அந்த வெண்ணிற, ஆதிராம் சாருக்குப் பிடித்த பெரிய சந்திரபிறையும் மறக்கக் கூடியதா என்ன?
பின் இடையிசை பிரம்மாண்டம். வயலின், குழல் அற்புதங்கள் வேகமாக
கால் முதல் தலைவரை தழுவ
நழுவ
கொடியிடை பொடிநடை பழக
உருக
என்று பாலாவும், சுசீலாவும் மாறி மாறி குரலால் நம்மை உருக்க,
இரண்டாம் முறை இவ்வரிகள் மீண்டும் ஒலிக்கையில்
'கால் முதல் தலைவரை தழுவ' என்பதில் 'தழுவ' வை பாலா அப்படியே தழுவிக் கொஞ்சி விடுவார். அவர் ஒருவரால் மட்டுமே வார்த்தைகளை இவ்வளவு குழைவுடன் தழுவ முடியும்.
பதிலுக்கு 'நழுவ' என்பதில் சுசீலா நழு 'வ' என்று 'வ' வுக்கு ஒரு அழுத்தம் கொடுத்து அசத்தி விடுவார்.
'ஒட்டிக் கொண்டு ஒன்றிரண்டு கட்டுக் கதை சொல்லவோ'
என்ற நாயகனின் பேராசையை பாலா அற்புதமாக வெளிக்கொணர்வார்.
சுசீலாவோ
'இன்று அல்ல.. நாளை என்று எட்டி எட்டிச் செல்லவோ' என்று பொய்யான 'பிகு'க் குரல் தருவார்.
'தென்னஞ்சோலை தன்னைவிட்டு தென்றல் என்ன ஓடுமோ?' என்று பாலா கேள்வி கேட்க,
'கன்னிப் பெண்ணே தானே வந்து பின்னிக் கொண்டு ஆடுமோ'
என்று சுசீலா பெண்மையின் உண்மைத் தன்மையை பாந்தமாய் வெளிப்படுத்தி , உடன் தொடர்ந்து
'மணமாலை தர வேண்டும்
மறுநாளில் பெற வேண்டும் வா'
என்று அவனுக்கு வழியும் காட்டி, கல்யாணம் முதலில் முடி... அப்புறம் எல்லாவற்றையும் முடி' என்ற முடிவான பதில் தந்து இரண்டாம் சரணத்தை இனிதே முடிக்க,
மீண்டும் பல்லவி வரிகள் 'கீதா' என்று.
பல்லவி வரிகளின் பின்னே 'சிக் சிக் சிக் சிக் சிகு சிகு' என்ற சிருங்கார இசை சில்ரிக்க வைக்கும்.
என்ன பாடல்! என்ன இசை! நடிகர்களும் குறை வைக்கவில்லை. ஒளிப்பதிவு....இயற்கை எழில் சார்ந்த கூலான படப்பிடிப்பு..... பின்னிப் பெடல் எடுக்கும் சுசீலா அம்மா....ஈடு கொடுக்கும் தொடர் நாயகர் பாலா.
ஆழ்கடலில் தேடித் தேடி எடுத்தாலும் இத்தகைய இசை முத்து கிடைப்பது அரிதுதான். பாலா வெண்ணையை விழுங்கிக் கொண்டே இப்பாடலைப் பாடியிருப்பார் போலும். குரல் ஜாலங்கள், குழைவுகள் சொல்லி விடியாது.
முழுதும் படித்துவிட்டு மீண்டும் அனுபவியுங்கள். ஒருநாளைக்கு நான்கைந்து முறை நான் கேட்டு கேட்டு இன்புறுகின்ற பாடல். இந்தப் பாடலுக்கு நான் எழுதியிருக்கும் விதத்திலிருந்தே அதை நீங்கள் நிச்சயம் புரிந்து கொண்டிருப்பீர்கள்.
கீதா...
கீதா..
கீதா.
கீதா.... ஒரு நாள் பழகும் உறவல்ல
காதல்.... நீரில் தோன்றும் நிழலல்ல
கீ...தா.... ஒரு நாள் பழகும் உறவல்ல
காதல்.... நீரில் தோன்றும் நிழலல்ல'
ஊடலில் கொஞ்சம்
(லல்லல் லல்லல் லாலலா)
போய்வர எண்ணும்
(லல்லல் லல்லல் லாலலா)
பூவையின் உள்ளம்...
(ஆ........ஆ)
புதுமலர் வண்ணம்
(ஓ ........ஓ)
உனக்காகப் பிறந்தேனே
உயிரோடு கலந்தேனே.... வா
கண்ணா! ஒரு நாள் பழகும் உறவல்ல
காதல்.... நீரில் தோன்றும் நிழலல்ல
நான் தொடும் வேளையில் மெல்ல
துள்ள
நால்வகை குணங்களும் செல்ல
அள்ள
நான் தொடும் வேளையில் மெல்....ல
துள்ள
நால்வகை குணங்களும் செ.ல்ல
அள்ள
சேலையிட்ட சித்திரத்தின் மேனி தொட்டுக் கொஞ்சவோ
மோதுகின்ற காதல் வெள்ளம் போதுமென்று கெஞ்சுமோ
இன்னுமென்ன சின்னஞ்சிறு பிள்ளை என்ற எண்ணமோ
கன்னம் என்ன மன்னன் வந்து தேனருந்தும் கிண்ணமோ
நானாகத் தரும் நேரம் தானாக உருவாகும் வா
கண்ணா! ஒரு நாள் பழகும் உறவல்ல
காதல்.... நீரில் தோன்றும் நிழலல்ல
கால் முதல் தலைவரை தழுவ
நழுவ
கொடியிடை பொடிநடை பழக
உருக
கால் முதல் தலைவரை தழு...வ
நழு...வ
கொடியிடை பொடிநடை பழக
உருக
ஒட்டிக் கொண்டு ஒன்றிரண்டு கட்டுக்கதை சொல்லவோ
இன்று அல்ல.. நாளை என்று எட்டி எட்டிச் செல்லவோ
தென்னஞ்சோலை தன்னைவிட்டு தென்றல் என்றும் ஓடுமோ
கன்னிப் பெண்ணே தானே வந்து பின்னிக் கொண்டு ஆடுமோ
மணமாலை தர வேண்டும்
மறுநாளில் பெற வேண்டும் வா
கண்ணா! ஒரு நாள் பழகும் உறவல்ல
கா...தல்.... நீரில் தோன்றும் நிழலல்ல
https://youtu.be/iT81ww76kWE
//சேலையிட்ட சித்திரத்தின் மேனி தொட்டுக் கொஞ்சவோ' எண்டு பாலா படுஸ்பீடாக எடுக்க,
பதிலுக்கு இசை அம்மா அதே வேகத்துடன்
'மோதுகின்ற காதல் வெள்ளம் போதுமென்று கெஞ்சுமோ'
என்று எசப்பாட்டு பாட,
பதிலுக்கு பாலா,
'இன்னுமென்ன சின்னஞ்சிறு பிள்ளை என்ற எண்ணமோ'
என்று காதலால் கடிய,
'கன்னம் என்ன மன்னன் வந்து தேனருந்தும் கிண்ணமோ?'
என்று செல்லக் கோபம் காட்டி, ஒரே ஒரு வினாடி கூடத் தாமதியாமல்
'நானாகத் தரும் நேரம் தானாக உருவாகும் வா'
என்று நாயகனுக்கு மட்டுமல்ல நமக்கும் இன்ப அதிர்ச்சி கொடுப்பார் சுசீலா நிர்மலாவின் நடிப்போடு சேர்த்து. //
தி.ஜானகிராமன் எழுத்துக்கள் வாசித்திருக்கிறீர்களா வாசு.. சிறுகதைகள் ஒரு கேடகரி என்றால் நாவல்களும் ஒரு கேடகரி..ஆனால் அவை படிக்கும் போது நீரோட்டம் பாய்ந்த நதிக்கரையில் மெல்லிய காற்று வந்து குட்டிகுட்டி அலைகளைத் தள்ளிவிட அந்தக் காற்று மேனியில் படும் போது ஒருவித சிலிர்ப்பும் சுகானுபவ்மும் கொடுக்குமே..அதுபோல இருக்கும்.
அதே ஃபீலிங்க் தான் வாசு, உங்களது இந்தப் பதிவை படிக்கும் போது ஏற்படுகிறது..தி.ஜா காலத்தில் எல்லாம் லெஷராக அனுபவித்து எழுதியிருக்கும் எழுத்துக்கள் நமக்கே புலப்படும்..அதுபோலவே இந்த ப் பாடலையும் அனுபவித்துஎழுதியிருக்கிறீர்கள் (முழுக்கப் படித்தேன் ஓய்). மிக்க நன்றிங்காணும்..
அவள் நான்பார்க்காத படம். நிறையக் கேள்விப் பட்டிருந்தாலும் பாடல்கள் கேட்டிருந்தாலும்.. இன்ஃபேக்ட் நேற்று மமகா 1 ல் நீங்களும் மிஸ்டர் கார்த்திக்கும் இதுபற்றிப் பேசியதைப் படித்துக் கொண்டிருந்தேன்..எஸ்பெஷலி அடிமை நான் ஆணையிடு..
வீட் போய் பாட் கேட்கப் போகிறேன் என்று நான் உங்களிடம் சொல்லப் போவதில்லை.. நீங்கள் தான் எழுத்திலேயே பாடி விட்டீர்களே.. மிக்க தாங்க்ஸ் ஒன்ஸ் அகெய்ன்..
டியர் வாசு சார்,
'கீதா... ஒரு நாள் பழகும் உறவல்ல' சும்மா பிரித்து மேய்ந்து விட்டீர்கள். வெறுமனே லைக் மட்டும் போட்டு விட்டுப்போக மனம் வரவில்லை. நாலு வரிகளாவது எழுதினால் மட்டுமே என் மனதுக்கு நிம்மதி. அந்த அளவுக்கு மாய்ந்து மாய்ந்து எழுதி இருக்கிறீர்கள்.
இளமை பொங்கி வழியும் அந்தப் பாடல் உங்கள் வர்ணனையில் மேலும் பொலிவுற்று விளங்குகிறது. பாலா - சுசீலா பங்களிப்பை பாராட்டும் அதே வேளையில் இன்னிசை வேந்தர்கள் சங்கர் கணேஷின் இசை பிரளயத்தை வெகுவாக பாராட்டி இருக்கிறீர்கள். ('தெய்வத்தின் கோயில் தெய்வம்தான் இல்லையே' பாடலில் ராமமூர்த்தியை மறந்தது போல இவர்களை மறந்து விடவில்லை. மறக்கவும் முடியாத பங்களிப்பு, உழைப்பு இவர்களுடையது). சங்கர் - கணேஷ் இசை திறமையை யார் எப்போது புகழ்ந்தாலும் எனக்கு பிடிக்கும்.
சாத்தனூர் அணைக்கட்டில் எடுக்கப்பட்ட Boys & Girls பாடலில் ஸ்லோ மோஷன் ஷாட்டுகள் ரசிகர்களை கவர்ந்தது. (வசந்த மாளிகைக்கு சற்று முன் 'அவள்' வந்து விட்டாள்). இப்படத்தின் பாடல்கள், குறிப்பாக 'கீதா ஒரு நாள் பழகும்' பாடல் தற்போது முரசு தொலைக்காட்சியில் அடிக்கடி ஒளிபரப்பாகிறது. தொகுப்பாளருக்கு நன்றிகள். (காணக்கிடைக்காமல் இருந்த ஜெமினியின் 'சங்கமம்', 'சாந்தி நிலையம்' பாடல்களை சக்கை பிழிந்து விட்டார்கள்).
'கீதா.... ஒரு நாள் பழகும் உறவல்ல' பாடல் எப்போது பார்த்தாலும், கேட்டாலும் மனதுக்கு இதமான சுகம் பரவும். அந்த அளவுக்கு பாலாவும் சுசீலாவும் கொஞ்சுவார்கள். நாயகி 'வெண்ணிற ஆடையில்' அம்சமாக இருப்பார். அந்த களங்கமில்லா சிரிப்புக்கு எத்தனை கோடியும் (பதுக்கி வைத்து) கொடுக்கலாம். எந்த ஆணையமும் தலையிட முடியாது.
தொடர்ந்து அசத்துங்கள். வாழ்த்துக்கள்.
RARE VIDEO -1966
ANNA - MGR- SIVAJI - SAROJADEVI - JAYALALITHA
https://youtu.be/7met-Mvtk14
COURTESY - PRADEEP BALU SIR
வாசு,
அலுப்பு சலிப்பே இல்லாத உன் விஸ்தார வர்ணனைகளுக்கு நான் என்றுமே ரசிகன். ஜாக்கெட் கழண்ட ராதா சலுஜா,வெண்ணிற ஆடை நிர்மலாவை பார்த்துத்தான் நான் போனேன். 13/14 வயதில்
165 செ .மீ உயரம்,அரும்பு மீசை வந்ததால் (ஒன்பது வயதில் map drawing) கொட்டகைக்கு ஐ ப்ரோ பென்சில் அவசியமில்லை.
ஆனால் அதையும் மீறிய விஷயங்கள் கொண்டது அவள். ரசிக்க கூடிய படம். அடிமை நான் ஆணையிடு, கீதா போன்ற பாடல்கள் எம்.எஸ்.வீ சிஷ்யர்கள் என்று இனம் காட்டும். ரொம்ப ரசித்தேன்.
esvee,
Amazing exhibits and video. Mu.ka also is there. Very Enjoyable. We appreciate your sincerity and Hardwork and pain staking effort to entertain us.Thanks Sir.:-D
Dear Vasu sir,
Excellent nerration about "Dheivaththin Koyil" from the wonderful entertainment movie 'Moondrezhuthu". (better type in English instead of struggling with tamil.changathi.com)
I am also one of the fan of that heart-shaking song, sung by LRE, Sarala and group, superb lyric and wonderful compossing by T.K.Ramamoorthy sir.
As you said many more fans dosnt know about this song, because of the 'araiththa maavu kolgai' of our Radio and TV channels. After seeing this song everyone will like it.
From the first seeing of the movie, this song was fixed with my mind and captured the first place, and the next place is for "Kaadhalan Vandhaan" song, followed by "pachai kili" song. In Dheivathin Koyil song each and every line is meaningful and shaking our hearts. In Ravichandran thread if you go through the analysis for the movie Moondrezhuthu by Saradha, while talking about the songs of the movie, she gives special mention for this song with some lines also.
Before I was unhappy that nobody giving importance and talk about these kind of under-rated but wonderful songs. But when I started to watch your analysis about this type of songs, like 'ennennavo naan ninaithen' in Adhey Kangal, and other songs, I am much satisfied to know there are many fans in the same wave-length of me.
Keep up your good going with more and more glory.
மெயின் நம்பர்னா . கலை குமார்... ராஜேஷ்....வாவ்....
வாசு சார்
நம் நெஞ்சில் சிரஞ்சீவியாய் நிலைத்து விட்ட தேசிய நடிகர் சசிகுமார் பாடலை எடுத்ததற்காக உங்களுக்கு என் உளமார்ந்த நன்றி. நான் பல முறை குறிப்பிட்டது போல, சசிகுமார் என்றாலே உடனடியாக நடிகர் திலகம் தான் நினைவுக்கு வருவார் என்கிற அளவிற்கு அவர் பெயரை உச்சரித்தவர், சுவாசித்தவர்.
அவருடன் சந்தித்துப் பேச கிடைத்த அந்த எதிர்பாராத வாய்ப்பிற்காக மழைக்கும் இறைவனுக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும். ராஜா அண்ணாலைபுரம் போட் கிளப் சாலையின் சந்திப்பில் இருக்கும் ஒரு பெட்ரோல் பங்க் அருகே அவரை பார்த்துப் பேச கிடைத்த வாய்ப்பு மிகவும் அபூர்வமானது. அதற்கு முன்னும் பின்னும் பல மேடைகளில் மன்றக் கூட்டங்களில் அவர் ஸ்தாபன காங்கிரஸை ஆதரித்துப் பேசியதையெல்லாம் கேட்டிருக்கிறேன். என்றாலும் நேருக்கு நேர் நின்று பேசும் வாய்ப்பு அன்று தான் வாய்த்தது. ஒவ்வொரு முறை தலைவர் பெயரை சொல்லும் போதும் அவருடைய முக மலர்ச்சியைப் பார்க்க வேண்டும். காணக் கண் கோடி வேண்டும் என்பார்கள். அது போல அதைப் பார்க்கும் நமக்கே உற்சாகமாய் இருக்கும்.
சசிகுமாரைப் பற்றி சொல்லும் போதெல்லாம் ஏனோ என் மனம் நெகிழ்ச்சியடையும். போலித்தனமில்லாத நடிகர் திலக பக்தர். அவரை உள்ளத்தினால் வாழ்த்தியவர். நேசித்தவர்.
அதனால் அவருடைய பாடல்களை நீங்கள் எப்போது பகிர்ந்து கொண்டாலும் மனம் குதூகலிக்கும். அதுவும் அவள் அவரை புகழின் உச்சத்திற்கே கொண்டு சென்றது. ஒவ்வொரு சின்னச் சின்ன அசைவிலும் தலைவரை மனதில் நினைத்து செய்திருப்பார். ஆனால் அது ரசிக்கும் படி இருக்கும். அதற்கு சிறந்த உதாரணம் இப்பாடல். இதே போல இன்று வந்த இன்ப மயக்கம் பாடலிலும் அவருடைய மேனரிஸங்கள் தலைவரையே பிரதிபலிக்கும். இன்னொரு பாடலை அலசும் போது இன்று வந்த இன்ப மயக்கம் பாடலைத் தங்கள் எழுத்தில் படிக்க விரும்புகிறேன்.
அவள் படப்பாடலைத் தங்களுடைய எழுத்தில் வடித்து யாருமே தங்கள் அருகில் நெருங்க முடியாத அளவிற்கு உச்சாணிக் கொம்பில் ஏறி அமர்ந்து விட்டீர்கள். உங்கள் விவரணையின் முக்கிய அம்சம் எல்லோருக்கும் புரியும் எளிய தமிழில் தாங்கள் எழுதும் நேர்த்தி.
சங்க்ர் கணேஷ் இரட்டையர்களின் பொற்காலம் 1967 மகராசி தொடங்கி 1975 வரை என்று தான் நான் கூறுவேன். குறிப்பாக ஆட்டுக்கார அ்லமேலு படத்திலிருந்து அவர்களின் பாணி வேறு திசையில் பயணிக்கத் தொடங்கி விட்டது. அது வரை சங்கர் கணேஷ் இசையில் இருந்த Innocence மறைந்து விட்டதாகத் தான் உணர்ந்தேன்.
தாங்கள் சொன்னது போல் சங்கர் கணேஷின் புகழ்க்கிரீடத்தில் மேலும் ஒரு வைரக்கல் கீதா பாடல்.
தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
தித்திக்கும் பாலெடுத்து தெய்வத்தோடுகொலுவிருந்து
முத்துப்போல் வாழ்வதற்கு மாலை சூடும் மணவிருந்து
பொன்னைப் போல் நானிருந்து அன்னம் போல நடை நடந்து
என்னத்தான் மடியிருந்து அள்ளி வைப்பேன் தேன் விருந்து.
இந்தப் பாட்டு படத்தில் இருந்த போது இருந்ததக நினைவில் இல்லை.. அதுவும் தாமரை நெஞ்சம் குறைந்தபட்சம் ஐந்து முறையாவது பார்த்திருப்பேன்..டிவிடியில் இல்லை.. தவிர வீடியோவும் முழுதுமே இல்லை..ஜஸ்ட் 50 செகண்ட் தான் வருகிறது அப்புறம் ஆடியோ தான்..
சுசீலாம்மாவின் வெகு இனிய பாடல்களில் இதுவும் ஒன்று லிரிக்ஸ் கண்ணதாசனா..
https://youtu.be/C7H0z3A8Vbo