அ.இ .அ.தி .மு. க. வின் 45 வது ஆண்டுவிழா மலரில் இருந்து
http://i65.tinypic.com/35iys9d.jpg
Printable View
அ.இ .அ.தி .மு. க. வின் 45 வது ஆண்டுவிழா மலரில் இருந்து
http://i65.tinypic.com/35iys9d.jpg
விடுதலை நாளிதழ் -19/10/2016
http://i68.tinypic.com/abqpfn.jpg
தினத்தந்தி -18/10/2016
http://i68.tinypic.com/ifdcf7.jpg
தின இதழ் -18/10/2016
http://i64.tinypic.com/fw80eg.jpg
தமிழ் இந்து -18/10/2016
http://i66.tinypic.com/rvzixh.jpg
தினச்செய்தி-18/10/2016
http://i67.tinypic.com/25tyt8m.jpg
அச்சாரம் பல்சுவை மாத இதழ் -அக்டோபர் 2016
http://i64.tinypic.com/2rp8lt3.jpg
அதிமுகவின் முதல் வேட்பாளராக மாயத்தேவர் போட்டியிட்ட திண்டுக்கல் இடைத்தேர்தலுக்கு சின்னங்களை தேர்ந்தெடுக்க வேண்டி இருந்தது .
டிஜிட்டல் பேனர்களோ, தொலைக்காட்சிகளோ, போஸ்டர்கள் புழக்கமோ இல்லாத காலத்தில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். தேர்ந்தெடுத்ததுதான்
பட்டி தொட்டியெங்கும் பிரபலமான இரட்டை இலை சின்னம்.
துக்ளக் வார இதழ் -26/10/2016
http://i67.tinypic.com/ci1ee.jpg
http://i64.tinypic.com/ngf33s.jpg
ராணி வார இதழ் -தீபாவளி மலர் -23/10/2016
http://i67.tinypic.com/2u4ownr.jpg
http://i64.tinypic.com/2m3sl09.jpg
21/10/2016- வெள்ளி முதல், மதுரை மாநகர் அரவிந்த் (புதுப்பிக்கப்பட்ட ) அரங்கிற்கு , தென்னக ஜேம்ஸ் பாண்ட் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். "ரகசிய போலீஸ் 115" குறுகிய காலத்தில் மீண்டும் வெற்றி விஜயம் .
கடந்த சில மாதங்களுக்கு முன்பு , மதுரை அலங்காரில் ஒரு வாரத்தில்
ரூ.1,60,000/- வசூல் ஈட்டி சாதனை புரிந்தது குறிப்பிடத்தக்கது .
தகவல் உதவி: மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.
இன்று (20/10/2016) காலை 11 மணிக்கு சன் லைப் சானலில் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "என் அண்ணன் " திரைப்படம் ஒளிபரப்பாகிறது
http://i64.tinypic.com/m8lon7.jpg
தகவலை பதிவிட்டதற்கு நண்பர் திரு.லோகநாதன் அவர்களுக்கு நன்றி.
http://i66.tinypic.com/2qkngq0.jpg
என்றென்றும் புரட்சித் தலைவரின் புகழ்க்கொடி பறக்கும் கோட்டையாம் எங்கள் மதுரையில் சென்ற ஆகஸ்ட் மாதம் 19ம் தேதிதான் அலங்கார் தியேட்டரில் ரகசியபோலீஸ் 115 படம் வெளியானது.
மண் மணக்கும் எங்கள் மதுரையில் இதுவரை எந்த மறுவெளியீட்டுப் படமும் செய்யாத சாதனையாக (ஒரு வாரத்தில்) ரூ.1, 60,000/- (ரூபாய் ஒரு லட்சத்து அறுபதாயிரம்) வசூல் செய்து மறுவெளியீ்ட்டுப் படங்களில் இந்த அளவு எந்தப் படமும் வசூல் செய்ததில்லை (ஒரு வாரத்தில்) என்ற வரலாறு படைத்தது.
இரண்டு மாதங்களே ஆன நிலையில் மீண்டும் எங்கள் மதுரையில் ரகசிய போலீஸ் 115 படம் திரையிடப்படுகிறது என்றால் மக்கள் திலகத்தின் படங்களுக்கு மக்களிடம் கிடைக்கும் அமோக வரவேற்பை புரிந்து கொள்ளலாம்.
21ம் தேதி முதல் (நாளை முதல்) மீண்டும் சரித்திரம் படைக்க ஜமீந்தார் பூபதியாக வரும் ரகசிய போலீஸ் ராமு எங்கள் மதுரையின் அரவிந்த் தியேட்டருக்கு நாளை முதல் வருகிறார்.
ஏற்கனவே சொன்னபடி மதுரை சென்ட்ரலுக்கு தீபாவளி அன்று கோடீஸ்வர ஜேபி வருகை தர உள்ளார்.
இதிலே ஒரு சுவாரசியமான விசயம். இப்போது ஏங்க வைக்கும் விசயமும்தான்.
இந்த இரண்டு வெற்றிப் படங்களும் (ரகசிய போலீஸ் 115 மற்றும் அன்பே வா) இப்போது இடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சிந்தாமணி திரையரங்கத்தில்தான் முதல் வெளியீட்டில் ரிலீஸ் ஆகி அமோக வெற்றி பெற்றன. மாட்டுக்கார வேலன் படமும் சிந்தாமணியில் வெள்ளிவிழா கொண்டாடியது.
இதிலே இன்னொரு சுவாரசியம் இந்த மூன்று வெற்றிப் படங்களுமே பொங்கல் பண்டிகையின்போது வெளியானவை.
நேற்று ஒரே நாளில் ஏராளமான ஆவணங்களை பதிவிட்டு எங்களுக்கு விருந்தளித்த நண்பர் திரு. லோகநாதன் அவர்களுக்கு நன்றி.
திமுகவில் இருந்து புரட்சித் தலைவர் நீக்கப்பட்டபோது ராஜாஜி கூறியது...
http://i68.tinypic.com/rw1dgh.jpg
http://i66.tinypic.com/2jczqja.jpg
ரகசிய போலீஸ் படம் அரவிந்த் தியேட்டரில் மறுவெளியீடு பற்றிய எனது முந்தைய பதிவில் அலங்கார் தியேட்டரில் ஆகஸ்ட் 19ம் தேதி வெளியானபோது ஒட்டப்பட்ட போஸ்டர் படத்தை பதிவிட்டேன். ஆனால், அது சரியாக பதிவாகவில்லை.
ஆகவே, அந்தப் பதிவில் திருத்தம் செய்யாமல் அலங்காரில் ஆகஸ்ட் மாதம் படம் வெளியானபோது ஒட்டப்பட்ட போஸ்டரை இங்கே பதிவிட்டுள்ளேன்.
அன்பு நண்பர் திரு.சுந்தர பாண்டியன் அவர்களே,
தங்களின் தகவல்கள், செய்திகள், மற்றும் எனக்கு பாராட்டுக்கள் அளித்தமைக்கு
நன்றி .
நாளை (21/10/2016) இரவு 7 மணிக்கு பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். "நவரத்தினம்"
திரைப்படம் ,சன் லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது
http://i66.tinypic.com/v8h1cm.jpg
நாளை (21/10/2016) முதல் , சென்னை மகாலட்சுமியில் , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரையுலகின் "கலங்கரை விளக்கம் " தினசரி 2 காட்சிகள் திரைக்கு
வருகிறது. இன்று மாலையே, அரங்கத்தின் .முன்பு பேனர் அமைக்கப்பட்டது
தகவல் உதவி : எம்.ஜி.ஆர். பக்தர் திரு. சங்கர் .
http://i67.tinypic.com/2cfskdz.png
காலத்தை வென்று புகழுடன் விளங்கும் எதிரிகளும் போற்றும் புரட்சித் தலைவரின் பெருமையை விளக்கும் ஒரு விசயம்.
புரட்சித் தலைவரை ஒரு காலத்தில் எதிர்த்த மூன்று பேரின் கருத்துக்களை (துக்ளக் பத்திரிகையில் வந்திருப்பது இரா.செழியன் பேட்டி. என்றாலும் புரட்சித் தலைவருக்கு ஆதரவாக கட்டுரையை வெளியிட்ட துக்ளக் பத்திரிகையின் ஆசிரியராக இருப்பவர் சோ) அடுத்தடுத்த பதிவுகளில் கொடுத்திருக்கிறேன். அதை படியுங்கள். அதற்கு அடுத்த பதிவில் கடைசியாக என் கருத்தை கூறுகிறேன். புரட்சித் தலைவரின் பெருமை விளங்கும்.
உண்மை, துக்ளக் பத்திரிகைகளில் வெளியான கட்டுரைகளை பதிவிட்ட நண்பர் லோகநாதன் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தேடித் தேடி இதுபோன்ற விசயங்களை அவர் பதிவிடாவிட்டால் இந்த ஆவணங்கள் நமது திரிக்கு வராமல் போய் இருக்கும். அவருக்கு மறுபடியும் நன்றி.
1. திமுக தலைவர் கருணாநிதி.
எம்.ஜி.ஆரை நான் மிஸ் செய்கிறேன்--- ஆனந்த விகடன் பத்திரிகையில் கருணாநிதி பேட்டி-- நேற்றைக்கு வியாழக்கிழமை வெளியாகி விற்பனைக்கு வந்துள்ள ஆனந்த விகடனில் கருணாநிதியின் பேட்டி வந்துள்ளது. அதில் ஒரு கேள்வி - பதில்.
கேள்வி:-- எம்.ஜி.ஆர். மறைவிற்குப் பிறகு அவரை 'மிஸ்'பண்ணி விட்டோம் என என்றாவது நினைத்தது உண்டா?
கருணாநிதி பதில்:--எம்.ஜி.ஆரைப் பொறுத்த வகையில் அவர் தொடக்கத்தில் என்னுடன் பழகிய காலத்தில் இருந்த இனிய நினைவுகள்தான் எனது உள்ளத்தில் மேலோங்கி இருக்கின்றனவே தவிர,கட்சியை விட்டு பிரிந்த பிறகு நடைபெற்ற சம்பவங்களை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளாததால்,அவர் மறைவுக்குப் பிறகு அவரை மிஸ் பண்ணி விட்டோம் என நான் பலமுறை நினைத்திருக்கிறேன்.
2. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி.
புரட்சித் தலைவர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திராவிடர் கழகத்தின் அதிகாரபூர்வ மாதம் இருமுறை பத்திரிகையான உண்மை பத்திரிகை சிறப்பிதழ் வெளியிட்டுள்ளது. அந்த பத்திரிகையில் இருந்து ஒரு பகுதியை நமது திரியில் பதிவிட்ட திரு.லோகநாதன் அவர்களின் பதிவு.