-
My second favorite actor after Ajith.
Good luck to the movie. Eagerly waiting!!
Except Donu Donu, other songs are not that catchy. I hope the story and screenplay come out good.
-
-
வெவ்வேறு கதைக்களங்களில் படம் பண்ண விரும்புகிறேன்: இயக்குநர் பாலாஜி மோகன் சிறப்புப் பேட்டி
மாரி’ படத்தின் டிரெய்லருக்கு ரசிகர்களிடையே கிடைத் துள்ள வரவேற்பால் உற்சாகமாக இருக்கிறார் இயக்குநர் பாலாஜி மோகன். படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பரபரப்பாக இருக்கும் அவரைச் சந்தித்தோம்.
‘மாரி’ திரைப்படம் எப்படி வந்திருக்கிறது?
ஒரு கமர்ஷியல் படத்துக்கான அத்தனை விஷயங்களும் ‘மாரி’ யில் இருக்கும். அதே நேரத்தில் நீங்கள் பார்க்கும் வழக்கமான கமர்ஷியல் படப்பாணியில் இல்லாமல் வேறு மாதிரி இருக் கும். என் முந்தைய இரண்டு படங்களிலும் கதையை முழு மையாக எழுதி முடித்துவிட்டு, அதன் பிறகு நாயகனைத் தேர்வு செய்தேன். ஆனால் இந்தப் படத்தைப் பொறுத்தவரை, இது தனுஷ் சாரை மனதில் வைத்து எழுதப்பட்ட கதை. ஒரு ரசிகனாக தனுஷ் சாரை எப்படி பார்க்க வேண்டும் என நினைத்தேனோ, அப்படியே இந்தக் கதையை எழுதி இயக்குகிறேன்.
உங்கள் முதல் இரண்டு படங் களை விட இப்படத்தின் பட்ஜெட் அதிகம். நட்சத்திரங்களும் அதிகம். அது கஷ்டமாக இல்லையா?
அதை நான் ஒரு பெரிய விஷயமாக மனதில் ஏற்றிக் கொள் ளவில்லை. என் முந்தைய படங் களைப் போல இதன் படப்பிடிப் புக்கு போனேன், கதையில் எழுதப்பட்ட காட்சிகளை இயக்கி னேன். அவ்வளவுதான். பெரிய செட், பெரிய நடிகர்கள் என்று மனதில் எதையும் ஏற்றிக் கொள் ளாமல் முந்தைய படங்கள் போலவே மிக வேகமாக எடுத்து விட்டேன்.
குறும்படத்தில் இருந்து வெள்ளித்திரை படமாக முதலில் மாறியது உங்களின் ‘காதலில் சொதப்புவது எப்படி’ படம்தான். இப்போது பலரும் அதைக் கடைப்பிடிக்கிறார்களே?
வெள்ளித்திரை படங்கள் என் றால், ஒரு சின்ன யோசனையை வைத்துக் கொண்டு அதை படமாக பண்ணுவதுதான். அதையே இப்போது ஒரு குறும்படத்தை வைத்து வெள்ளித்திரை படமாக மாற்றுகிறார்கள். குறும் படத்தை வைத்துக் கொண்டு இயக்குநராகும் வாய்ப்பை பெறு வது ஹாலிவுட்டில் சாதாரணமாக நடக்கிறது. ஒரு புதிய இயக்கு நரின் குறும்படங்கள், அதை அவர் படம் பிடித்திருக்கும் விதம் ஆகியவை தயாரிப்பாளருக்கு நம்பிக்கை தரும். இதை ஒரு நல்ல விஷயமாகத்தான் நான் பார்க்கிறேன்.
‘மாரி’ படத்தின் பாடல்கள் எல்லாமே குத்துப் பாடல் ரகத்திலேயே இருக்கிறதே?
இப்படத்தின் கதை அப்படி. இதில் வேறு மாதிரியான பாடல் கள் எதையுமே திணிக்க முடி யாது. படம் பார்க்கும்போது அதை நீங்கள் உணர்வீர்கள்.
தனுஷ் - ரோபோ சங்கர் காமெடிக் கூட்டணி எப்படி வந்திருக்கிறது?
இப்படம் முழுக்க தனுஷ் சாருடன் ரோபோ சங்கர் வருவார். இருவரின் வசனங்கள், காட்சிகள் என அனைத்துமே ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும். அதே போல, இப்படம் ரோபோ சங்கருக்கு ஒரு பெரிய திருப்பத்தை கொடுக்கும் .
உங்கள் முந்தைய படங்களைவிட ‘மாரி’ படத்தின் டிரெயிலர் கமர்ஷியலாக இருக்கிறதே. உங்களுக்கு கமர்ஷியல் இயக்குநராக வேண்டும் என்று ஆசையா?
வெவ்வேறு கதைக்களங்களில் படம் பண்ண வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ‘காதலில் சொதப்புவது எப்படி’ படத்துக்கு பிறகு வேறு மாதிரி படம் பண்ண வேண்டும் என்று ஆசைப் பட்டேன். சூழ்நிலை காரணங் களால் ‘வாயை மூடி பேசவும்’ அமைந்து விட்டது. அந்தப் படத்துக்கு முன்னால் பண்ணி யிருக்க வேண்டிய படம் ‘மாரி’. ஒன்றரை வருடங்கள் கழித்து பண் ணலாம் என்று தனுஷ் சார் சொன்னதால் இப்படம் தாமதம் ஆனது அவ்வளவுதான். ‘மாரி’ படத் துக்கு பிறகும் நான் வெவ்வேறு களங்களில்தான் படம் பண் ணுவேன்.
‘வாயை மூடி பேசவும்’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லையே. அதற்கு என்ன காரணம்?
அப்படத்தின் இரண்டாம் பாதி யில் வசனங்களே இருக்காது. இதை எவ்வளவு சரியாக பண்ணி னாலும், அப்படம் ஒரு குறிப்பிட்ட ரசிகர்களுக்கு மட்டுமே போய் சேரும் என்று தொடங்கும்போதே தெரியும். தயாரிப்பாளர் சசிகாந் திடம் நாலு கதைகளை நான் கொடுத்திருந்தேன்.
அவற்றில் இருந்து அவர் ‘வாயை மூடி பேசவும்’ கதையைத்தான் தேர்வு செய்தார். அதைத்தான் படமாக எடுக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதே நேரத்தில் நான் நினைத்ததை விட அதிகப்படியான மக்களிடம் போய் அப்படம் சேர்ந்தது.
-
மாரி ரீ ஷுட் வதந்தி -முற்றுப்புள்ளி வைத்தார் பாலாஜி மோகன்
மாரி படத்தின் தர லோக்கல் ட்ரெய்லரும், பாடல்களும் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளன. இந்நிலையில், திட்டமிட்டபடி ஜுலை 17 படம் திரைக்கு வரவில்லை, சில காட்சிகளை ரீ ஷுட் செய்கிறார்கள் என்று ஸ்டுடியோ வட்டாரங்களில் பரபரப்பு.
உண்மை நிலவரம் என்ன?
ஜுலை 17 சிவ கார்த்திகேயனின் ரஜினி முருகன் வெளியாவதாக முன்பு கூறியிருந்தனர். அதன் பிறகே ஜுலை 17 மாரி வெளியாகும் என அறிவித்தனர். தேவையில்லாமல் எதற்கு தனுஷுடன் போட்டி என சிவ கார்த்திகேயனும், திருப்பதி பிரதர்ஸும் ரஜினி முருகனின் பட வெளியீட்டை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர். இன்னும் பல காட்சிகள் படமாக்கப்பட வேண்டியிருக்கிறது என்று அதற்கு காரணமும் கூறினர்.
இந்நிலையில் ஜுலை 17 சிம்புவின் வாலு வெளியாவதாக அறிவித்தனர். ரிலீஸ் தேதி நெருங்கும் நேரம், மாரி அன்று வெளியாகாது, ரீ ஷுட் போகிறார்கள் என்று வதந்தி.
அதனை மறுப்பதுபோல், தனது ட்விட்டர் பக்கத்தில் ஜுலை 17 மாரி வெளியாகும் என படத்தின் இயக்குனர் பாலாஜி மோகன் குறிப்பிட்டுள்ளார்.
-
-
மறுதணிக்கைக்குப் பின் தனுஷின் 'மாரி'க்கு 'யு' சான்றிதழ்
தனுஷ் நடித்திருக்கும் 'மாரி' படத்துக்கு சென்சார் அதிகாரிகள் 'யு' சான்றிதழ் அளித்திருக்கிறார். ஜூலை 17ம் தேதி வெளியாகிறது.
தனுஷ், காஜல் அகர்வால், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்க பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'மாரி'. அனிருத் இசையமைத்து இருக்கும் இப்படத்தை மேஜிக் ப்ரேம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
அனைத்து பணிகளும் முடிவடைந்து, இப்படத்தை சென்சார் அதிகாரிகளுக்கு திரையிட்டு காட்டினார்கள். 'யு/ஏ' சான்றிதழ் அளித்ததால் படக்குழு அதிர்ச்சியடைந்தது. சில காட்சிகளை நீக்கினால் மட்டுமே 'யு' சான்றிதழ் கிடைக்கும் என்று தெரிவித்தார்கள்.
அதனைத் தொடர்ந்து படக்குழு, மறுதணிக்கைக் குழுவிற்கு படத்தை நேற்று (ஜூலை 7) திரையிட்டு காட்டினார்கள். சென்சார் அதிகாரிகள் சில காட்சிகளின் வசனத்தை mute செய்துவிட்டு 'யு' சான்றிதழ் வழங்கினார்கள்.
தற்போது மறுதணிக்கை அதிகாரிகள் 'யு' கொடுத்துவிட்டால், வெளியீட்டிற்கான பணிகளை தொடங்கிவிட்டார்கள். ஜூலை 17ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.
-
-
-
-