http://i49.tinypic.com/az9s3q.jpg
Kamalahasan interview continuation
Printable View
http://i49.tinypic.com/az9s3q.jpg
Kamalahasan interview continuation
பூங்காற்றே பெருமை பேசு
கவிஞர் முத்துலிங்கம்
படைநடத்திப் புகழ்பெற்றான் ராஜராஜன்
பழம் கொடுத்துப் புகழ்பெற்றான் தகடூர் மன்னன்
கொடை கொடுத்துப்புகழ் பெற்றான் பறம்பு நாட்டான்
கொடுப்பதிலே அப்படியோர் புகழை இங்கே
தடையின்றிப் பெற்றவர் யார் என்று கட்டால்
சத்தியத் தாய் பெற்றெடுத்த செல்வ னன்றி
விடைசொல்ல வேறெவரும் நாட்டில் உண்டோ?
வெள்ளிநிலா வானத்தில் வேறொன் றுண்டோ?
மனம்படைத்த காரணத்தால் மனித ரென்று
மா புலவர் மானிடரைச் சொல்லி வைத்தார்
மனம் படைத்த மனிதரிலே சிறந்தோர் என்று
மண்ணுலகில் பலர் வாழ்ந்தார் என்றபோதும்
மனிதாபி மானத்தின் வடிவ மாக
மக்களிடம் வாழ்ந்தவர் நம் எம்.ஜி.ஆர்தான்
புனிதமனம் பெற்றபுத்தன் ஏசு போலே
புண்ணியர்கள் வரிசையிலே இவர்பே ருண்டு
ஓடுகின்ற நதிகூட இவர்பே ரைத்தான்
உச்சரித்து தினந்தோறும் தரையில் ஓடும்
பாடுகின்ற குயில் கூட எம்.ஜி.ஆரின்
பண்பார்ந்த மனதைத்தான் தினமும் பாடும்
வாடுகின்ற பயிருக்கு மழையைப் போலே
வாழ்க்கையிலே பலபேருக் குதவி வந்தார்
தேடுகின்ற காலம்வரை தேடி னாலும்
தேசத்தில் இவர்போன்றோர் கிடைக்க மாட்டார்
ஏசுபிரான் அவதரித்த நல்ல நாளில்
ஏசுவைநம் எம்.ஜி.ஆர் பார்க்கச் சென்றார்
பேசுபுகழ் பெற்றவரை இறந்தார் என்று
பித்தனைப்போல் நான் என்றும் சொல்ல மாட்டேன்
மாசுமரு தங்கத்தில்கூட உண்டு
மாசில்லா தங்கம் இவர் நெஞ்ச மாகும்
வீசுகின்ற பூங்காற்றே நீயும் வீசு
வீதியெல்லாம் இவருடைய பெருமை பேசு.
நன்றி தாய் பொங்கல் சிறப்பிதழ் 1990
SWEET STAL GYM
http://i47.tinypic.com/34sgpyr.jpg
GYM MARKET
http://i50.tinypic.com/2hrcykn.jpg