Fantastic song from the movie Viswaroopam. Naan Patta kadan and once again NT' stole the show with his superb performance.
http://youtu.be/SxeODtxmL9M
Printable View
Fantastic song from the movie Viswaroopam. Naan Patta kadan and once again NT' stole the show with his superb performance.
http://youtu.be/SxeODtxmL9M
Smart & Handsome NT in the duet of Rajadhi rajanukku song from the Viswaroopam. Super song and enjoy it.
http://youtu.be/LzD39sGvwjQ
NT at his best in the song of who is the black sheep with a handsome walk and majestic performance from the movie Pilot Premnath. In his face itself he shows
thousand expression which no other actor can imagine. At the end of the song the performance of NT mind boggline. Superb song.
http://youtu.be/-GbcXzLct8U
அன்றைய நாளில் பாடல்கள் உருவான விதம், அதன் பின்னணியில் நடைபெற்ற சுவாரஸ்ய வரலாற்று தகவல்கள், பாடலின் சூழல், அதில் பங்கேற்ற இயக்குனர்கள், நடிகர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள் பற்றிய அப்போதைய சுவையான தகவல்கள், பாடலில் அவர்களின் பங்களிப்புகள் இவற்றை விரிவாக அலசி ஆராய்ந்து தருவதற்காக அன்பு சகோதரர் திரு. முரளி சீனிவாஸ் அவர்களால் "அதற்கென்றே" பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட திரி இது.
இதையும் வெறும் வீடியோ திரியாக ஆக்கிவிட்டனரா?. பலே பேஷ்.
a recap from Mr Murali Srinivas Old Post
கர்ணன் படப் பாடல்களைப் பார்த்தேன் என்று சொன்னேன். அதில் தோன்றிய சில எண்ணங்கள். மெல்லிசை மன்னர்கள் இந்த படத்தின் பாடல்களை ஹிந்துஸ்தானி ராகங்களில் அமைத்திருப்பதாக பலரும் சொல்லி கேள்வி. அந்த ராகங்களைப் பற்றியும் இந்த பாடல்களைப் பற்றியும் இசை மேதைகள் நிறைய சொல்லியிருக்கிறார்கள், எழுதியிருக்கிறார்கள். நாம் பாடல் காட்சிகளைப் பற்றி பேசலாம்.
என்னுயிர் தோழி - முதல் பாடல். முத்தான பாடல். ராகம் - ஹமீர் கல்யாணி.
எத்தனை பாடகியர் வந்தாலும் நாம் ஏன் சுசீலாவை அளவுக்கோலாக கொள்கிறோம் என்பதற்கு இந்த பாடல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அதிலும் முதல் சரணத்தில் அரண்மனை அறிவான் அரியணை அறிவான் என்ற இடத்தில் நிறுத்தி ஒரு ஆலாபனை செய்வாரே, அது ஒன்று போதும். இனி காட்சிக்கு வருவோம்.
இந்த பாடல் படமாக்கப்பட்டபோது சாவித்திரிக்கு இரண்டு அசௌகரியங்கள். ஒன்று உடல் எடை கூடி விட்டது. இரண்டு அவர் அப்போது அவரது மகனை வயிற்றில் சுமந்திருந்தார். ஆதலால் அவரை அவ்வளவாக ஆட, ஓட விடாமல் படமாக்கியிருப்பார்கள். பாடலின் இடையில் நடிகர் திலகமும் அசோகனும் உள்ளே நுழைய முயற்சித்து ஆடலைப் பார்த்து விட்டு மறைந்துக் கொள்வதாக காட்சி. நடிகர் திலகத்தின் அந்த இரண்டு க்ளோஸ் அப் காட்சிகளாகட்டும் இல்லை லாங் ஷாட் ஆகட்டும் [இத்தனைக்கும் காம்பிநேஷன் இல்லை, சஜ்ஜெஷன் ஷாட்தான்] அந்த முகத்தில்தான் எத்தனை உணர்வுகள் மின்னி மறையும்? இசைக் கருவிகளை வாசிக்கும் தோழியர், பாடும் சேடிப் பெண்கள், ஆடும் நடன மங்கையர் என்று எல்லாமே அழகான லயத்தில் அமைந்திருக்கும்.
கண்கள் எங்கே - ராகம் - சுத்த தன்யாசி.
சுசீலாவின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்று. இந்த பாடலை மட்டுமே ஒரு காஸட்டின் ஒரு பகுதி முழுக்க பதிந்து வைத்திருந்த ஒரு நண்பர் இருந்தார். அவ்வளவு இனிமை. இந்த பாடல் காட்சியில் நடிகர் திலகம் வரமாட்டார். ஆனால் அந்த குறையை தேவிகா போக்கி விடுவார். சரணங்களின் இடையில் தேவிகாவின் ஒரு சில நடன ஸ்டெப்ஸ் நளினமாக இருக்கும். அந்த ஏக்கத்தையும் விரகத்தையும் குறிப்பாக குறை கொண்ட உடலோடு நான் இங்கு மெலிந்தேன் என்ற வரிகளின் போது ரசனையோடு வெளிப்படுத்தியிருப்பார்.
இரவும் நிலவும் வளரட்டுமே - ராகம் - சுத்த சாரங்கி
பெரும்பாலோருக்கு பிடித்த பாடல் காட்சி. கர்நாடகாவில் உள்ள பேலூர் - ஹளபேடு கோவிலில் படமாக்கப்பட்ட காட்சி. சுசீலா ஆலாபனை ஆரம்பிக்கும் போதே தியேட்டர் களை கட்டி விடும். நடிகர் திலகத்தின் ராஜ நடை, காலை வளைத்து நிற்கும் போஸ், நாயக நாயகியரை மட்டும் போஃக்கஸ் செய்யாமல் அரண்மனையின் சிற்ப அழகையும், பிரமாண்டத்தையும் பார்வையாளன் உணரும் வண்ணம் அமைக்கப்பட்ட காமிரா கோணங்கள், நடிகர் திலகம் - தேவிகா இடையிலான கெமிஸ்ட்ரி இவை அனைத்தும் வெளிப்படும் ஒரு சிறந்த பாடல்.
கண்ணுக்கு குலம் ஏது - ராகம் - பஹடி
முதலிரவு பாடல். ஆனால் சோகத்தில் ஆரம்பித்து மகிழ்ச்சியில் முடியும். தன் குலத்தையும் பிறப்பையும் கேவலப்படுத்தி விட்ட கோவம் கர்ணனுக்கு. அது மட்டுமல்ல, மனைவியே தன்னை உதாசினப்படுத்திவிட்டாள் என்ற எண்ணம். மனைவி தவறு செய்யவில்லை என்றவுடன் சிறிது மகிழ்ச்சி அடைந்து பிறகு மனைவியின் பாடல் வரிகள் எப்படி மனதுக்கு சாந்தி அளிக்கின்றன என்பதை வெறும் முகபாவங்களிலேயே காட்டியிருக்கும் நேர்த்தி. குலத்தை விட குணமே சிறந்தது என்பதற்கு கண்ணதாசனின் வரிகள் மிக அழகாக விளக்கம் கொடுக்கும். இதில் குறிப்பிட தகுந்த ஒரு விஷயம் என்னவென்றால் உள்ளே ஒரு மனப்போராட்டம் நடக்கும் போது வெளியே சேடிப் பெண்கள் ஆடிக் கொண்டிருப்பர். அதாவது உள்ளே நடப்பது அவர்களுக்கு தெரியாது. அவர்கள் உள்ளே ஒரு முதலிரவு கொண்டாட்டம் நடக்கிறது என்று நினைத்திருப்பர். இது ஒரு லாஜிக்கலான காட்சியமைப்பு.
மேலும் பேசுவோம்.
ழை கொடுக்கும் கொடையும் - ராகம் ஹிந்தோளம்
கர்ணனின் அரசவையில் புலவர்கள் பாடும் பாடல் தொகுப்பில் இடம் பெறும் முதல் பாடல். சீர்காழியின் கம்பீர குரலில் ஒலிக்கும். நடிகர் திலகம் நடந்து வந்து அந்த சிம்மாசனத்தில் அமரும் காட்சிக்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.
நாணி சிவந்தன மாதரார் கண்கள்
திருச்சி லோகநாதனின் குரலில் பாடல் ஒலிக்க பெண்களையும் புலவர்களையும் ரிஷிகளையும் வரிகளுக்கேற்ப காட்டி விட்டு தினம் கொடுத்து தேய்ந்து சிவந்தது கர்ண மாமன்னன் திருக்கரமே என்ற வரிகளின் போது நடிகர் திலகத்தின் கரங்களை க்ளோஸ் அப்பில் காட்ட செவ்வரி ஓடியிருக்கும்.
இந்த காட்சி முடிந்தவுடன் மாஸ்டர் ஸ்ரீதர் ஓடி வந்து பாடசாலையில் சேர்க்க மறுக்கிறார்கள் எனும் காட்சி. [உங்கள் ஆட்சியில் இப்படி நடக்கலாமா என்ற வசனத்தின் போது கைதட்டல் பறக்கும்].
ஆயிரம் கரங்கள் நீட்டி
தன் தந்தையான சூரியனை வழிப்பாடு செய்து கர்ணனும் குழுவினரும் பாடும் பாடல். சம்ஸ்கிருத மந்திரங்களை சொல்லும் வேத விற்பனர்களை தாங்கள் தங்கியிருந்த பெங்களூர் உட்லாண்ட்ஸ் ஹோட்டலுக்கு வரவழைத்து அவர்கள் பாடும் அதே ராகத்தில் கண்ணதாசன் வரிகள் எழுதி மெல்லிசை மன்னர்களால் இசை அமைக்கப்பட்டது என்று சொல்லுவார்கள். டி.எம்.எஸ் மற்றும் குழுவினர் பாடும் இந்த பாடலில் தனியாக "அழைக்கும் ஓர் உயிர்களுகெல்லாம்" என்ற வரியின் போது டி.எம்.எஸ் உச்சஸ்தாயில் பாட நடிகர் திலகத்தின் வாயைசைப்பு ஆஹா! [இத்தனைக்கும் லாங் ஷாட் அதுவும் பக்கவாட்டில் காமிரா மூவ்மென்ட்].
என்ன கொடுப்பான் எவை கொடுப்பான் - ராகம் ஹம்சநந்தி
தன் மகனான அர்சுனனுக்காக இந்திரன் வந்து கவச குண்டலங்களை யாசகம் கேட்கும் காட்சி. பி.பி.எஸ். உருக்கியிருப்பார். வந்திருப்பது யார் என்பதை சொல்லி எந்த காரணத்திற்காக வந்திருக்கிறான் என்பதையும் குறிப்பிட்டு சூரிய பகவான் எச்சரிக்க அதையும் மீறி கர்ணன் உடலோடு ஓட்டிப் பிறந்த கவச குண்டலங்களை தானம் கொடுக்கும் காட்சி. இதில் கூட மனித வடிவிலே வந்திருக்கும் இந்திரனிடம் அவரது நோக்கத்தை குத்திக் காட்டும் கர்ணன்.[தள்ளாடும் தேகம் ஆனால் தள்ளாடாத நோக்கம்] வேடம் கலைந்த இந்திரன் தன் சுயரூபத்தில் காட்சி தர நொடி நேரத்தில் கை கூப்பி கால் மடக்கி தேவேந்திரா என வணங்கும் பணிவு. அவன்தான் நடிகன்.
போய் வா மகளே - ராகம் ஆனந்த பைரவி.
தாய் வீட்டிற்கு செல்லும் சுபாங்கியை துரியோதனன் மனைவி பானுமதி வழியனுப்பி வைப்பதாக வரும் பாடல். ஒரு மாறுதலுக்கு சூலமங்கலம் பாடியிருப்பார். மனைவி செல்வதை முழு மனதோடு ஏற்றுக் கொள்ள முடியாமல் புழுங்கும் கர்ணன் - அந்த பாவங்கள் பாடலின் ஆரம்ப வரிகளில் அவர் முகத்தில் வெளிப்படும். பாடல் செல்ல செல்ல மனம் சிறுது சிறுதாய் மாறுவதை காண்பித்து பாடலின் இறுதியில் மாளிகையின் வாசலில் மனைவி தேர் ஏறும் காட்சியில் மலர்ந்த முகத்தோடு வழியனுப்பி வைப்பதை இவ்வளவு convincing ஆக வெளிப்படுத்த நடிகர் திலகத்தால் மட்டுமே முடியும்.
மஞ்சள் முகம் நிறம் மாறி - ராகம் பீலு
தந்தையால் அவமானப்படுத்தப்படும் சுபாங்கியின் வளைக்காப்பு நிகழ்ச்சியை கர்ணனின் அரண்மனையில் கொண்டாடும் பாடல். நடுவில் வரும் சரணம் மலர்கள் சூட்டி மஞ்சள் கூட்டி வளையல் பூட்டி திலகம் தீட்டி என்பது மட்டும் ஆரபியில் வரும். இதிலும் உப்பரிக்கையில் நின்று பார்க்கும் நடிகர் திலகம். அதிலும் குறிப்பாக கர்ணன் தந்த பிள்ளை என்றால் கார்மேகம் அல்லவா எதிர்காலத்தில் இந்த தேசத்தில் கருணை செய்வான் அல்லவா என்ற வரிகளின் போது அந்த முகம்! வாய்ப்பே கிடையாது. மகனை போர்களத்திலே பலி கொடுத்து உயிரற்ற அவனது அந்த உடலை சுமந்து கொண்டு வந்து தன் மாளிகையில் கிடத்தும் போது இதே வரிகள் பின்னணியில் ஒலிக்க அப்போது அதே முகம் எப்படி மாறும்!
மேலும் பேசுவோம்.
இனி படத்தின் உயிர்நாடியான பாடல்கள்.
மரணத்தை எண்ணி - ராகம் நாட்டை.
குருஷேத்ர யுத்த பூமியில் தன் சுற்றத்தார் அனைவரும் தன் எதிரணியில் நிற்பதை பார்த்து மனம் தளரும் அர்ஜுனன், அவர்களை எப்படி எதிர்த்து போராடுவது, அவர்களை எப்படி கொல்வது என்று மனம் பேதலித்து காண்டீபத்தை நழுவ விட, கிருஷ்ணா பரமாத்மா கீதோபதேசம் செய்யும் காட்சி. கீதை என்ற மாபெரும் தத்துவக் கடலை கண்ணதாசன் தனக்கே உரிய எளிய பாணியில் அழகாக விளக்கிட மெல்லிசை மன்னர்கள் இந்த வசன பாடலுக்கு பொருத்தமான இசையை கோர்த்திருக்க சீர்காழி கன கம்பீரமாய் முழங்கிய பாடல். புனரபி ஜனனம் புனரபி மரணம் என்பதை கவியரசு
மானிடர் ஆத்மா மரணம் இல்லாதது
மறுபடி பிறந்திருக்கும்
மேனியை கொல்வாய் மேனியை கொல்வாய்
என்று வெகு எளிமையாக புரிய வைத்திருப்பார்.
ஆசாபாசங்களை கடந்த பெரியவர்களும் ஞானிகளும் சொல்லும் வார்த்தை சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்பணமஸ்து. அதாவது அனைத்தும் பகவான் கிருஷ்ணனையே சேரும். இதை அனைவரும் புரிந்துக் கொள்ளத்தக்க வண்ணம் கண்ணதாசன்
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்
போகட்டும் கண்ணனுக்கே.
கண்ணனே காட்டினான்
கண்ணனே சாற்றினான்
கண்ணனே கொலை செய்கின்றான்
என சொல்லும் போது அதை உள்வாங்கும் மனிதர்கள் தியேட்டரில் முழங்கும் கைதட்டல் ஒலியை நேரில் கேட்க வேண்டும். இதை சரியான வாய் அசைப்போடு என்.டி.ஆர் செய்து விட்டு பாஞ்சஜன்யத்தை எடுத்து ஊதும் போது மொத்த பார்வையாளர்களும் யுத்தத்திற்கு தயாராகி விடுவார்கள். அற்புதமான பாடல்.
உள்ளத்தில் நல்ல உள்ளம் - ராகம் அஹிர் பைரவ்.
படத்தின் உச்சகட்ட பாடல் மட்டுமல்ல படத்திலேயே உச்சமான பாடல் என்று பெரும்பாலோர் கருதும் பாடல். தேரோட்டி சல்லியன் கோபித்துக் கொண்டு இறங்கி போய் விட, சூழ்ச்சி வலையில் சிக்கிய கர்ணன் மண்ணில் புதைந்த ரதத்தின் சக்கரங்களை தூக்கி நிறுத்த முயற்சிக்கும் போது அர்ஜுனன் அம்புகளை தொடுத்து அவனை வீழ்த்துகிறான். ஆயினும் தர்ம தேவதை அரணாக நின்று அந்த அம்புகளை மலர் மாலைகளாக்க, மீண்டும் ஒரு சூழ்ச்சி செய்யப் புறப்படுகிறான் கண்ணன். அப்போது ஒலிக்கும் இந்த பாடல்.
இந்த பாடலை பற்றி சொல்ல வேண்டுமென்றால் ஒவ்வொரு வரியையும் சொல்ல வேண்டும். சிகரம் வைத்தார் போன்ற சில வரிகள் மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.
தாய்க்கு நீ மகனில்லை
தம்பிக்கு அண்ணனில்லை
ஊர் பழி ஏற்றாயடா; நானும்
உன் பழி கொண்டேனடா
செஞ்சோற்று கடன் தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் விழுந்தாயாடா கர்ணா;
வஞ்சகன் கண்ணனடா.
பாடல் முழுக்க மரணாவஸ்தையில் கிடக்கும் கர்ணன். உண்மையிலே நடிகர் திலகமும் அதை அனுபவித்தார். பாடல் படமாக்கப்பட்ட இடம் ராஜஸ்தான் பாலைவனம். அந்த கொதிக்கும் சூட்டிலே அனைத்து ஆடை, ஆபரணங்கள், போர் கவசங்கள் முதலியவற்றை அணிந்துக் கொண்டு கிழே கிடந்தார். கர்ணன் மரண தருவாயில் தண்ணீர் தாகத்திற்கு தவிப்பதை போல் நடிகர் திலகம் அந்த பாலைவன வெயிலில் தாகத்தினால் தவித்தார். அது மட்டுமல்ல அம்பு துளைத்து வரும் ரத்தத்திற்காக சாஸ்-ஐ அவர் மேல் ஊற்றி விட்டார்களாம். அந்த இனிப்பான சாஸ்-ற்காக ஈக்கள் அவர் உடலை மொய்க்க ஆரம்பித்து விட்டனவாம். சுட்டெரிக்கும் வெயில், உடலை மொய்க்கும் ஈக்கள் இவை அனைத்தையும் தாங்கிக் கொண்டு அந்த பாடல் படமாக்கப்பட்டு முடிக்கும் வரை அப்படியே இருந்தாராம். என்ன ஒரு மனிதன்! என்ன ஒரு தொழில் அர்ப்பணிப்பு! அதனால்தான் கிட்டத்தட்ட 46 வருடங்கள் ஆன பிறகும் இன்றும் அந்த காட்சி நம் கண்ணில் நீரை வரவழைக்கின்றது. என்.டி.ஆரையும் சும்மா சொல்லக் கூடாது. அருமையாக பண்ணியிருப்பார். அந்த விஸ்வரூப தரிசனம்! தியேட்டரில் பார்க்கும் போதே நிறைய பேர் உணர்ச்சி வசப்படுவார்கள். கண்ணதாசன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, சீர்காழி, பந்துலு, என்.டி.ஆர்., எல்லோருக்கும் மேலாக நடிகர் திலகம்.
மெகா தொலைக்காட்சியின் அமுத கானம் நிகழ்ச்சியின் போது ஒரு முறை ஆதவன் அவர்கள் இதற்கு இணையான ஒரு பாடல் இனி தமிழ் படங்களில் வராது என்றார். பலரும் அதை ஒப்புக் கொள்வார்கள்.
மீண்டும் பேசுவோம்.
படத்தில் இடம் பெற்ற ஆனால் எழுத விட்டு போன பாடல்.
மன்னவர் பொருள்களை கைக் கொண்டு நீட்டுவார்.
அரசவையில் ஒலிக்கும் பாடல்களில் ஒன்று. கர்ணனின் வள்ளல் தன்மையை விளக்கும் பாடல். வழக்கம் போல் டி.எம்.எஸ். மெருகு படுத்தியிருப்பார். உச்சஸ்தாயில் ஒலிக்கும் பாடல்.
படத்தில் இடம் பெறாமல் ஆனால் மக்கள் மனதில் இடம் பெற்ற பாடல்.
மகாராஜன் உலகை ஆளலாம் - ராகம் கரகரப்ரியா
படத்தில் இடம் பெறாமல் போனாலும் ஏராளமான மக்கள் மனதில் நிரந்தரமாக தங்கியுள்ள பாடல். இந்த பாடலை எப்படி விட்டார்கள் என்பது புரியாத புதிர். இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் இந்த பாடல் காட்சியாக்கப்பட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசிப்பேன். அதிலும் நடிகர் திலகம் - தேவிகா ஜோடி எனும் போது பாடல் காட்சி மிக பிரமாதமாக வந்திருக்கும். நடிகர் திலகத்தின் ஸ்டைல்-க்கு இந்த பாடல் மிக பொருத்தமாக அமைந்திருக்கும். அதிலும் சில வரிகள்
பாதத்தில் முகம் இருக்கும்
பார்வை இறங்கி வரும்
வேகத்தில் லயித்திருக்கும்
வீரம் களைத்திருக்கும்
வரும் போது நடிகர் திலகம் எப்படி ரியாக்ட் செய்திருப்பார் என்று யோசிக்க வைக்கும்.
ஒரு சில படங்களில் பதிவு செய்யப்பட்ட நல்ல பாடல்கள் இடம் பெறாமல் போவது வருத்தத்துக்குரிய விஷயம். உதாரணத்திற்கு இரத்த திலகம் படத்தில் தாழம்பூவே தங்க நிலாவே, வசந்த மாளிகையில் அடேயப்பா ராசப்பா சங்கதி என்ன போன்றவற்றை குறிப்பிடலாம். கலாட்டா கல்யாணம் படத்திற்காக பதிவு செய்யப்பட்ட ஒரு தரம் ஒரே தரம் பாடலாவது சுமதி என் சுந்தரியில் இடம் பெற்றது. மேற் சொன்ன பாடல்கள் வரவே இல்லை. அந்த வரிசையில் மகாராஜன் உலகை ஆளலாம் முதலிடத்தில் இருக்கிறது.
ஒரு முறை எம்.எஸ்.வி அவர்களை பற்றி இளையராஜா சொல்லும் போது மகாராஜன் உலகை ஆளலாம் பாடல் ஒன்று போதும். தமிழ் திரை இசை இருக்கும் வரை அவர் பெயர் நிலைத்திருக்கும் என்றார். அதுதான் இந்த பாடலின் வெற்றி.
அன்புடன்
Thanks to Mr Parthasarathy
இங்குள்ள பெரும்பாலோர் போல் எனக்கும் இசையரசி பி.சுசீலா தான் மிகவும் பிடித்த பாடகி.
இவர் ஒருவர்தான், இது வரையிலும், எந்த ஸ்தாயியிலும் பிசிறடிக்காமல் பாடியவர். பொய் குரலிலும் பாடாதவர்.
எவ்வளவு சிரமமான பாடலையும், முகத்தை அஷ்ட கோணலாக்காமல் பாடியவர்.
இந்தத் திரியின் மூன்றாவது பாகத்தில், அடியேனின் இந்தப் பாடல் பதிவோடு எனது பங்கைத் தருகிறேன்.
பாடல்: மாலை சூடும் மண நாள்; படம்: நிச்சய தாம்பூலம்; வருடம்: 1962; பாடியவர்: இசையரசி பி. சுசீலா; இயற்றியவர்: கவியரசு (ஒருவன் தான்!); நடிப்பு: நடிகர் திலகம் மற்றும் ஜமுனா.
பணக்கார வீட்டுப் பிள்ளை நடிகர் திலகம் ஏழை வீட்டுப் பெண் ஜமுனாவைக் காதலித்து அவருடைய தகப்பனாரின் (எஸ். வி. ரங்கா ராவ்) எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டு, வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
வீம்புடன் வெளியேறினாலும், வாழ்க்கையை நடத்துவது சிரமமாகிறது வேலை கிடைக்காததனால்.
விடிந்தால் தீபாவளி. அதுவும் தலை தீபாவளி. வீதியில், எல்லோரும் குடும்பத்தோடு தீபாவளியை புதுத் துணி உடுத்தி, பட்டாசு வெடித்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தான்? ஒரு கைக்குட்டையைக் கூடத் தன்னை நம்பி வந்தவளுக்கு வாங்கிக் கொடுக்க முடியாத நிலை. அப்படியே, இறுகி, கூனிக் குறுகி, சப்த நாடியும் ஒடுங்கி, வீட்டினுள் நுழைகிறான் நாயகன். உடன், நாயகி நாயகனிடம், என்ன ஆயிற்று, ஏன் இப்படி இருக்கிறீர்கள் என கவலையோடு வினவ, நாயகனும் நிலையைத் தெரிவிக்க, உடனே, நாயகனின் கவலையையும் விசனத்தையும் போக்கும் வண்ணம், அவனை உற்சாகப் படுத்த பாடத் துவங்குகிறாள்.
இந்தப் பாடலில் இரண்டு கருப்பொருள்கள் உள்ளன. ஒன்று, நாளின் முக்கியத்துவம் மற்றொன்று ஒரு பொருளின் முக்கியத்துவம். எத்தனையோ தீபாவளி வரும் தலை தீபாவளி? ஒரு முறை தானே வரும். அந்த முக்கியமான நாளில், ஒரு பொருளையும் மனைவிக்கு வாங்கித் தர முடியவில்லையே என்ற நாயகனின் கவலையைப் போக்க, இந்த இரண்டு கருப் பொருள்களை வைத்து, கவி புனைகிறார் கவியரசு.
மாலை சூடும் மண நாள்
இள மங்கையின் வாழ்வில் திருநாள்
சுகம் மேவிடும் காதலின் எல்லை
வேறொரு திருநாள் இனி இல்லை
நாள் என்னைய்யா நாள்? நானும் நீயும் மனம் ஒற்று சந்தோஷமாக இருக்கும் ஒவ்வொரு நாளுமே திருநாள் தானே?
பல்லவியிலேயே, நாயகனுக்கு கொஞ்சம் உற்சாகம் வரணுமே!
இப்போது, சரணம். இதில் முதல் முக்கியக் கருப்பொருள் அதாவது நாள்.
காதல் கார்த்திகை திருநாள் (இருவரின் அன்பு ஒன்றே போதும், கார்த்திகை தீபத்தைக் கொண்டாட என்கிறாரா?)
மனம் கலந்தால் மார்கழித் திருநாள் (உங்கள் ஊகத்துக்கே விட்டு விடுகிறேன்!)
சேர்வது பங்குனித் திருநாள் (பங்குனியில் தானே முக்கிய விசேஷங்களுக்கு அச்சாரம் போடுவார்கள்)
நாம் சிரிக்கும் நாளே திருநாள் (விளக்கமே தேவையில்லை!!)
இரண்டாவது சரணம். இதன் கருப்பொருள் "ஒரு பொருள்". அதாவது புதுத் துணி வாங்கித் தர முடியவில்லையே என்ற ஏக்கம்.
மங்கலக் குங்குமம் போதும் (வீட்டிலேயே உள்ளது)
சிறு மலரும் மணமும் போதும் (அந்த காலத்தில் ஒரு எட்டணாவில் வாங்கி விடலாம்!)
பொங்கிடும் புன்னகை போதும் (விலையே இல்லை!!)
மனம் புது மணத் திருநாள் காணும் (இந்த வரியில், பொருளையும் நாளையும் சேர்த்து விடுகிறார் பாருங்கள் - அதாவது, பூ வாங்கி, என் நெற்றியில் திலகமிட்டு நீங்கள் புன்னகைக்கும் தருணம் ஒவ்வொன்றும் ஒரு திருநாள் என்று, இந்தப் பாடலின் முக்கியக் கருப்பொருள்கள் நாள் மற்றும் பொருளின் முக்கியத்துவத்தை அந்தக் கடைசி வரியில் சொல்லி, முத்தாய்ப்பாக பாடலின் நோக்கத்தையும் கடைசியில் மறக்காமல் இணைக்கும் விந்தை!
எப்பேர்பட்ட தத்துவ ஜாலத்தை, எளிய வார்த்தைகளால் புரிய வைத்த அந்த ஜீவக் கவிஞனை என்னவென்று போற்றுவது?
இந்தப் பாடலின் எளிமையை (மெல்லிசை மன்னர்கள்) பேசுவதா?
தேனினும் இனிய குரலில் பாடிய இசையரசியைப் புகழ்வதா? (பிரம்மன் இவரைப் படைக்கும் போது, கூடவே தேனையும் அவர் தொண்டையில் கொட்டி விட்டானோ?!)
அற்புதமாக, ஜீவனுடன் நடித்துக் காட்டிய நடிகர் திலகத்தையும், ஜமுனாவையும் சிலாகிப்பதா?
அது சரி. நடிகர் திலகம் இடம் பெற்ற பாடலை சொல்லி விட்டு, அவரைப் பற்றி சொல்லாமல் விடுவதா? பாடல் துவங்கியதும் அந்தப் படியோரம் இலேசாக காலை விரித்துக் கொண்டு மய்யமாக அதே நேரம் சோகமாக நிற்பதைச் சொல்வதா; மேலே இரண்டு பேரும் சென்று அங்கே படியோரம் நிற்கும் போது, மெல்ல மெல்ல அவர் முகம் இயல்பு நிலைக்கு மாறி, அந்த முழங்கையை அவரது பிரத்யேக ஸ்டைலில் கைப் பிடி மேல் ஊன்றிக்கொண்டு ஜமுனாவைப் பார்ப்பதை சொல்வதா? பாடலின் முடிவில் இருவரும் சேர்ந்து பாடலை முடிக்கும் போது காட்டும் தன்னை மறந்த நிலையை சொல்வதா! (சும்மா சொல்லக் கூடாது, ஜமுனாவும் அற்புதமாக செய்திருப்பார். அவருடைய காதோர முடிக்கற்றை காற்றில் இலேசாகக் கலைந்து கன்னத்தின் மேலே இருக்கும் அழகே அழகு, அந்தக் கடைசி போஸில்! இந்தப் போஸே தானே பட விளம்பரங்களிலும் இருந்தது.)
மனத்தைக் கவரும் மதுர கானங்களில் எனது முதல் பெரிய பதிவு. என் மனத்தைக் கொள்ளை கொண்ட இருவரின் (நடிகர் திலகம் மற்றும் கவியரசு) பாடலுடன் துவங்குவது தற்செயலாக இருந்தாலும், மனதுக்கு மகிழ்ச்சியே.
http://i1.ytimg.com/vi/iAW5Fl8UyJk/sddefault.jpg
இந்நாளில் - நவம்பர் 1 தேதியில் - 1967ம் ஆண்டு வெளிவந்த இரு திரைக்காவியங்கள் - இரண்டுமே நூறு நாட்களைத் தாண்டி வெற்றி நடை போட்டு இது வரை வேறு நடிகர்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாத சாதனையை உருவாக்கின. நடிகர் திலகத்தின் வெற்றிக் காவியமான ஊட்டி வரை உறவு இன்றுடன் 47 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
ஊட்டி வரை உறவு - வயது பதினாறு ஜாக்கிரதை எனத் துவங்கி பின்னர் காலமெல்லாம் காத்திருப்பேன் என வளர்ந்து நின்றது. ஜெயலலிதா அவர்களும் கே.ஆர்.விஜயா அவர்களும் நடித்து வந்தனர். பின்னர் சிறிது நாட்கள் கழித்து கே.ஆர்.விஜயா கதாநாயகியாக நடிக்க ஊட்டி வரை உறவு என முடிவடைந்தது. .முதன் முதலாக நடிகர் திலகத்துடன் கதாநாயகியாக ஜெயலலிதா நடித்த படம் காலமெல்லாம் காத்திருப்பேன். இந்தப் படத்தின் படப்பிடிப்பில் நடந்த சம்பவங்களை வைத்து கவியரசர் பாடலையே எழுதி வைத்து விட்டார் என்பார்கள். அதுதான்.....
http://www.youtube.com/watch?v=9onlEEX8Qyg