http://tamil.oneindia.in/movies/news...ut-206504.html
Raja Sir is ready to release new Musical albums.
Printable View
http://tamil.oneindia.in/movies/news...ut-206504.html
Raja Sir is ready to release new Musical albums.
அது சரி, எங்க சார் cd கிடைக்குது? ஆடியோ ரிலீஸ் ஆகி சில சமயம் பல வாரங்கள், மாதங்கள் ஆகியும் cd கிடைப்பதில்லை. 20, 30 வருடங்களுக்கு முன்னர் ராஜா சார் கேசட் ரிலீஸ் என்று பேப்பரில் விளம்பரம் வந்த அன்றே கடைகளில் கிடைக்கும். இப்போது அப்படி இல்லை.
உலகெங்கும் உள்ள ரசிகர்களை ஒரு குடையின் கீழ் நீங்க கொண்டு வருவது இருக்கட்டும், நல்ல விஷயம் தான். அதை விட உலகெங்கும் உள்ள உங்கள் ரசிகர்களுக்கு உங்கள் படைப்புகளை உடனுக்குடன் சேர்பதற்கான வியாபார யுத்திகள் தான் இப்போது தேவை.
எங்கள் ஆசையெல்லாம்
உங்கள் படைப்புகள்...
எளிதில் கிடைக்க வேண்டும்
மலிவாய் கிடைக்க வேண்டும்.
விரைவாய் கிடைக்க வேண்டும்
அப்படி கிடைத்த பிறகு பிறகு நான் ஏன் பதிவிறக்கம் செய்ய போகிறேன்? காசு எனக்கு பிரச்சனை இல்லை. நீங்கள் இசை அமைத்துள்ளீர்கள் என்கிற ஒரே காரணத்துக்காக உப்பு சப்பில்லாத படங்களை எல்லாம் லீவ் போட்டு பார்த்தவன் நான்...
என்கிட்ட கதை ஒண்ணு இருக்கு அதுக்கு ஒரு மெட்டுப்போடு பார்க்கலாம் என்று பஞ்சு அருணச்சலம் அந்த இளைஞனிடம் கூறியதுதான் தாமதம். மெட்டோடு சில வார்த்தைகளையும் சேர்த்து அவன் பாடவே தொடங்கி இருந்தான். தன்னத் தனனா... தனானானே......தன்னனானேனனனா... அன்னக்கிளி உன்னைதேடுதே......என்று அவன் உச்சரித்த பின்புதான் நாம் இன்று கட்டுண்டு கிடக்கும் இசைபெருவெளி மெல்ல விரியத்தொடங்கியது. அவன் உச்சரித்த வார்த்தையே அந்தப் படத்தின் பெயரும் ஆனது.
எவ்வளவு தேடல் நிறைந்தது தனது பயணம் என்பதை வெளிப்படுத்திக் கொள்ளுமொரு வாய்ப்பாய் ராஜா சாருக்கு அமைந்து போனது அந்தப் பாடல்.
ஏக்கம் என்பது ஒரு உணர்வு அதை எப்படி இவ்வளவு சரியாய் ஒரு இசைக்குள் பதியம் போட முடியும் என்ற பிரமிப்பிலிருந்து அந்தப்பாடலைக் கேட்கும் யாராலும் மீள முடியாது. ஒரு மாதிரியான சந்தோசமான பாடல்தான் அது என்றாலும் அதற்குள் நிறைந்து கிடக்குமொரு வெறுமையும், நிலையாமையும் அலாதியானது. " நீ யாரென்று எனக்குத் தெரியாது, நீ எவ்வடிவமாய் இருப்பதையும் நானறியேன், ஆனால் நீதான் எனக்கு வேண்டும்"...
என்ற இலக்கற்ற ஆசையை ஒரு பெண் வெளிப்படுத்துகிறாள். அந்த நளினத்தை ஏந்திக் கொண்டு தத்தித் தத்திப் பயணிக்கிறது ராஜாவின் பேரிசை இந்தப் பாடலுக்குள். பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே வெறுமனே அதைக் கடந்து சென்று விடாமல் சில இடங்களில் பலமாய் நம் மனதை பாடலோடு முடிச்சுப் போட்டுவிடுகிறார் ராஜா சார்....”மழைபெய்ஞ்சா.....” என்று ஜானகி அம்மாவின் குரல் நம்மை வாரி அணைத்து இழுத்து வைத்து உச்சிமுகர்ந்து கட்டியணைத்துக் கொண்டிருக்கும் போதே அதற்குப் பின்னால் உருளும் தபேலா மீண்டும் அழுத்தமின்றி நம்மைப் பாட்டுக்குள் கொண்டும் வந்து விடுகிறது. பாடலின் மூன்று சரணங்களிலும் அவர் இப்படியான மூன்று முடிச்சைப் போட்டு வைத்திருப்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்கள்...?
எப்படி யோசித்திருப்பான் இந்தக் கலைஞன்? ஒரு சூழலைச் சொன்னவுடன் எங்கிருந்து ஊற்றெடுக்கிறது அந்த மெட்டு என்பதெல்லாம் நம் கற்பனைகளுக்குள் எளிதாய் சிக்கிவிடாது. அழகு எப்போதும் ரசிக்கப்படவேண்டியது ஆராயப்படவேண்டியதல்ல அது போலத்தான் ராஜா சாரின் இசையும் அந்த முழுமையை உணரும் போது உள்ளுக்குள் பூ பூக்கத் தொடங்குகிறது. என் மண்ணிற்கு என்று ஒரு உணர்விருக்கிறது, ஒரு கலாச்சாரம் இருக்கிறது, ஆசைகள், அபிலாஷைகள், கோபங்கள், என்று எல்லாவற்றையும் இசையாய் சொல்ல வேண்டுமெனில் அவன் எல்லா உணர்வுகளுக்குள்ளும் தன்னை கரைத்துக் கொள்ளக் கூடியவனாய் இருக்கவேண்டும். ராஜா சார் வெறுமனே பாடலுக்கு மெட்டுப் போடும் கார்ப்பரேட் ரெடிமேட் மியூசிக் டைரக்டர் கிடையாது.....
அவர் ஒரு கதையைக் கேட்கும் பொழுதே அந்தக் கதைக்குள் வாழத் தொடங்கிவிடுகிறார். ஒவ்வொரு சூழலிலும் அந்த கதாபாத்திரத்தின் மனோநிலை என்ன? காட்சிச்சூழல் என்ன? இதற்கு எங்கிருந்து தொடங்கவேண்டும்? இப்படி கதைக்காய், சூழலுக்காய் நான் அமைக்கும் இசை என் பாடலைக் கேட்க வரும் ரசிகனுக்குள் எப்படி இருந்தால் சரியாய் போய் உட்கார்ந்து கொள்ளும்....என்றெல்லாம் அவர் ஆராய்கிறார்....பின் அந்த சிந்தனையில் ஊறி ஊறி மெளனிக்க அந்த மெளனம் அந்த பெரும் சூன்யமாய் மாறிப்போக அவருக்குள் மெட்டுக்கள் மெல்ல பூக்கத்தொடங்குகின்றன.
எந்த இசைக் கருவியைத் தட்டினால் மனித உடலில் என்ன மாற்றம் நிகழும் என்பதெல்லாம் ராஜா சாருக்கு அத்துப்படி. உங்களுக்கு எல்லாம் ஒன்று தெரியுமா தமிழர்களின் ஒட்டு மொத்த உணர்வுகளையும் இன்றைக்கு மறைமுகமாய் ஆளுமை செய்து கொண்டிருப்பது ராஜா சாரின் இசை தான்! 1970 களுக்குப் பிறந்த பிள்ளைகள் அத்தனை பேரும் பாக்கியவான்கள்....அவர்களை எல்லாம் ராஜா சாரின் இசைதான் வளர்த்தெடுத்தது... உண்ணவும், உறங்கவும் அவரது பாடல்களே பெருமளவில் உதவின....!
இன்னும் சொல்லப்போனால் தமிழர் வாழ்வின் மனச் சிக்கல்களை அவரின் இசை சுமூகமாய்த் தீர்த்தும் வைத்திருக்கிறது. காதலைச் சொல்லவும் அவர் உதவி இருக்கிறார், திருமணம் செய்த பின்பு வாழ்க்கையை ரசித்து நகரவும் அவரது இசை உதவி இருக்கிறது, வெற்றியின் போதும் தோல்வியின் போதும் துரோகங்களின் போதும்...ராஜா சாரின் இசையே நமக்குத் துணை. ராஜா சாரின் மெட்டுக்கள் நிறைய கவிஞர்களை உருவாக்கியது, வளர்த்தெடுத்தது.. கவிஞர் வைரமுத்துவின் முற்பாதி சினிமா வாழ்கையில் வந்த பாடல்களை எல்லாம் எடுத்துப் பாருங்கள்...அத்தனையும் வைரமாய் ஜொலிக்கும். ராஜா சாரின் மெட்டுக்கள் கொடுத்த ரசனையில் விரிந்த தாமரைகள் அவை....
” ஓ... கொத்து மலரே...
அமுதம் கொட்டும் மலரே
இங்கு தேனை ஊற்று இது தீயின் ஊற்று....” என்றெல்லாம் வைரமுத்து மெட்டுகளுக்காய் எழுதிய வார்த்தைகளின் வசீகர ஆளுமையும், ராஜா சாரின் இசையும் தோளோடு தோள் நின்று பாடலுக்கு வலுவூட்ட நமக்கு ஏற்பட்டதுதான் ஆயிரம் தாமரை மொட்டுக்களே என்னும் பரவச அனுபவம்
வைரமுத்துவின் பிற்பாதி அதாவது ராஜா சாரை விட்டு அவர் நகர்ந்த பின்பு அவருக்கு வேண்டுமானால் தேசிய விருதுகள் கிடைத்திருக்கலாம்...ஆனால்....அவரது கவிதை வரிகள் அவ்வளவு ஆழமாய் தமிழர்களின் மனதில் விழுந்து விருட்சமாகாமல் மேற்கத்திய சப்தங்களுக்குள்ளும், பேரிறைச்சலுக்குள்லும் தன்னை முடக்கிக் கொண்டு வெற்று முனகலாய்த்தான் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. பிறரின் இசை வைரமுத்துவின் கவிதை வரிகளைத் தின்று செரித்து ஏப்பம் விட்டு விட்டு வெறும் வாத்தியக் கூச்சலாய்தான் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது...ஆனால் ராஜா சாரின் இசை அப்படியானது அல்ல அது தாயன்பு மிக்கது.
மண்டையைப் பிளக்கும் ஒரு உச்சி வெயிலில் காதில் ஹெட்போனோடு சென்னை அண்ணா சாலையின் ஒரு போக்குவரத்து நெரிசலுக்குள் நீங்கள் மாட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். வியர்வை சட்டையை நனைக்க இங்கும் அங்கும் நகரமுடியாத அளவு வாகனங்களும், வாகனங்களின் புகையும் உங்களை எரிச்சல் படுத்த வெகு கடுப்பில் நீங்கள் இருக்கிறீர்கள் ...
அந்த சூழலில்....உங்கள் ஸ்மார்ட் போனிலோ அல்லது எம்.பி3 ப்ளேயரிலோ ஹேராமின் இந்தப் பாடலை தட்டி விடுங்கள், பிறகு பாருங்கள் உங்களுக்குள் என்ன நிகழ்கிறது என்று....
பாடல் ஆரம்பிக்கும் போதே ஒரு போதை கிறு கிறுவென்று உங்கள் தலைக்கேறும்...., அதிரடியான இசை உங்களைப் பல்லக்கில் தூக்கிக் கொண்டுபோய் ஒரு குளு குளு அறையில் கிடத்தி அந்த மயக்கும் பாடலை அஜய் சக்கரவர்த்தி பாடத் தொடங்குகையில் நீங்கள் பகுதி விழிப்பு நிலைக்குள் சென்றே விடுவீர்கள்...! உங்களின் எரிச்சலூட்டும் புறசூழல் ஒடுங்கிக் கொள்ள ஒரு ராட்சசனாய் ராஜா சாரின் இசை உங்களை ஆளும் அற்புதத் தருணம் அது. கிறக்கம் என்பது வேறு ஏக்கம் என்பது வேறு போன ’அன்னக்கிளியே உன்னைத் தேடுதே’ என்று ஒரு பெண்ணின் ஏக்கம் நிறைந்த உணர்வுகளைப் பரிமாறிய இசை.....
இப்போது இந்தப்பாடலில் மூலம் கிறக்கம் நிறைந்த ஒரு மனிதனின் காதலை, காமத்தை, மதுவின் போதையை, குளுமையான அந்த இரவின் வாளிப்பை நமக்குக் கொடுத்து ஒரு கதகதப்பையும் உருவாக்கி விடுகிறது. இப்போது சொல்லுங்கள்...
நம்மை ஆட்டிவிக்கும் ராஜாசாரின் இசை எத்தகையது....? ராஜா சார் யார் என்று....? வடஇந்தியச் சாயலைப் பிழிந்தெடுத்து அந்த சாயத்தில் ராஜா சார் நிகழ்த்தி இருக்கும் அந்த அதிசயத்தை நீங்கள் இப்போது வேண்டுமானலும் கேட்டுப்பாருங்களேன்....
மேலே நான் சொன்ன எல்லாம் உங்களுக்குள் நடக்கும்....
உயிர்களே...
உயிர்களே உயிர்களே உலகிலே
இன்பத்தை தேடி தேடி
கிரஹத்துக்கு வந்ததே......
தேவா சுப்பையா........
http://tamil.oneindia.in/movies/news...ut-206504.html
Once again, it shows IR is quite disconnected with realities. People surrounding him should stop feeding these absurd things. Several years ago, bunch of IR enthusiasts formed a website for IR and promoted his video speech against audio piracy. It looked ridiculous when most other musicians were silent and went about their way.
Piracy in audio, movies, softwares and all other things is something that has developed and co-existed along with development in technology.
It is really hard to get this to a complete stop. Even in remote streets of Caribbean islands, I have observed tons of DVD's of latest movies being sold illegally.
All we can do is minimize the piracy by offering very high quality music (5.1 etc) when the file size of each song goes about 60 MB. This will prevent casual pirates to abuse because it will eat up their bandwith. And if somebody really likes the music and wish to listen to higher quality will buy the original.
On top of all this, audio piracy is something the audio companies need to worry about because the musicians already sells the copyright to them to their profit. It is unnecessary to argue on behalf of them.
Rather than focusing on these issues, IR can help his fans by creating more and more indestructible music that will stand even beyond his time. He has accrued enough money and profit shouldn't be a goal at this point in his life.
துருவங்கள் இணைகின்றன!
கடந்த 27 வருடங்கள் கழித்து, இளையராஜா இனிய குரலால் வைரமுத்துவின் வைர வரிகளைப் பாடப்போகிறார். இந்த சந்தோஷ சம்பவம் 'இடம் பொருள் ஏவல்’ படத்துக்காக. யுவன்சங்கர் ராஜா இசையில் வைரமுத்து எழுதிய பாடலை இளையராஜா பாடப்போகிறார். இந்தப் புண்ணியத்தை வாங்கிக் கட்டிக்கொண்டவர்கள், இயக்குநர் சீனு.ராமசாமி ப்ளஸ் தயாரிப்பாளர் லிங்குசாமி.
Rajaramsgi, looks like the news is untrue. IR is singing a song in the movie, but not the one written by VM. He is singing the song written by actor Dhanush.
http://tamil.oneindia.in/movies/news...cs-207009.html
thanks,
Krishnan
இசைஞானியின் அன்பான ரசிகர்களே இன்று ஒரு வார பத்திரிகையில் இசைஞானி அவர்கள் சீனு ராமசாமி இயக்கும் இடம் பொருள் ஏவல் படத்தில் வைரமுத்து எழுதிய பாடலை யுவன் இசையில் பாடப்போவதாக செய்தி வந்திருக்கிறது இது முற்றிலும் தவறான தகவல் எந்த காலத்திலும் வைரமுத்து எழுதிய பாடலை பாடப்போவது கிடையாது. இப்படி ஒரு பொய்யான தகவலை பரப்பி தன் படத்திற்கு விளம்பரம் தேடிக்கொள்ள முயற்சிக்கிறார்
இயக்குனர் சீனு ராமசாமி.
அதோடு கடந்த சில மாதங்களாக வைரமுத்து அவர்கள் எப்படியாவது இசைஞானியுடன் இணைந்து விட வேண்டும் என்று பல வழிகளிலும் முயற்சி செய்து வந்தார். பாலா இயக்கும் தாரை தப்பட்டை படத்தில் ”ராஜாவை எப்படியாவது சமாதானப்படுத்துங்கள் நானே பாடல்களை எழுதுகிறேன்.” என்று சொல்லி அனுப்ப . பாலாவும் இதை இசைஞானியிடம் தெரிவித்து அனுமதி கேட்க, ”தாராளமாக அவரை வைத்து பாட்டு எழுதிக்கோ நான் இசையமைக்க மாட்டேன்.” என்று கடுமையாக மறுத்து விட்டார்.
. இந்நிலையில்தான் யுவன் இசையில் வைரமுத்து எழுதிய பாடலை பாடபோவதாக ஒரு செய்தியை பரவவிட்டிருக்கிறார்கள் நேரடியாக கேட்டு ராஜா சார் மறுத்து விட்டதால் இப்படி கொல்லைப்புறத்தின் வழியாக நுழைய முற்சிக்கிறார் வைரமுத்து என்பதை ரசிகர்களுக்கு தெரியப்படுத்துகிறேன். வெளியில் மேடைகளில் ’நான்தான் ராஜாவை ஒதுக்கி வைத்திருக்கிறேன்’ என்பதுபோல் காட்டிக்கொண்டு, உள்ளுக்குள் அவரோடு எப்படியாவது இணைந்து விடவேண்டும் என்று தலையால் தண்ணீர் குடித்துக்கொண்டிருக்கிறார் வைரமுத்து
அதே படத்தில் தனுஷ் எழுதிய ஒரு [பாடலை பாட வைப்பதற்காக தன் அப்பாவிடம் எப்படி கேட்பது என்று தெரியாமல் தவித்துப்போயிருகிறார் இரண்டு மூன்று முறை யுவன் .”டாடி ஒரு விஷயம் கேட்கணும்” என்று கூறி அதை கேட்காமலே விட்டிருக்கிறார். காரணம் ராஜா சார் “என்ன யுவன்” என்று கேட் டாலே யுவனுக்கு வாயடத்துப்போய்விடும். அப்படியிருக்கும் போது வைரமுத்து எழுதிய பாடலை பாடுங்கள் என்று சொல்ல யுவனுக்கு எப்படி தைரியம் வரும்.
வாழ்க்கை கொடுத்தவருக்கு எதிராகவே பல ஆண்டுகாலம் நடந்துகொண்டிருக்கும் வைரமுத்து பாடலை ரஜா சார் பாடினார் என்று சொன்னால் நம்புவதற்கு இசைஞானி ரசிகர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல
https://www.facebook.com/photo.php?f...056&type=1
Theni KannanIsaignani Fans Club ( Official Group )
இப்படி தான் சொல்லிக்கிட்டு திரியிறாய்ங்களா? ஏமாந்துட்டேனே, ஜூனியர் விகடனாச்சே, நெருப்பில்லாம புகையும்மான்னு நெனசுப்டேன்.. சாரி பார் த கண்பியுஷன்.
தெளிவுபடுத்திய உங்க ரெண்டு பேருக்கும் நன்றி பா..
ராஜா ஒரு " Hot cake " என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ராஜா என்ற ஒரு வார்த்தையே பல லக்ஷம் பெறும். அந்த ஒரு வார்த்தயே பல பேரை இழுக்க கூடியது. எதாவது ஒன்றை பற்றி எழுதிவிட்டு தலைப்பில் அவர் பேரை போட்டால் கூட போதும். எல்லோரும் வந்து படிப்பார்கள். இது தான் இன்று social media விலும் மற்ற இடங்களிலும் நடப்பது. அவருக்கு பணம் என்றுமே பெரிதாக இருந்தது இல்லை. மிகவும் மோசமான வியாபாரியும் , மனதில் உள்ளதை அப்படியே சொல்லும் குணமும் கொண்ட அவரின் பெயரால் நடக்கும் விசயங்கள் அவருக்கு தெரியுமா என்பதே கேள்விக்குறிதான் !!!!
தான் போட்ட இசைக்கு ராஜா சரியான படி பணம் வாங்கி இருந்தால் இன்று தமிழ் நாட்டையே வாங்கி இருப்பார் .....இதை சொன்னது A.R . ரஹ்மான்
"நாப்பது வருஷம்.. நான் இல்லேன்னு வச்சிக்கங்க.. எப்படி இருந்திருக்கும்?" என்ற செய்திக்கு வந்த ஒரு கமெண்ட்!
ஏ ஆர் ஏ. ஆர். ரகுமான்
ஏ ஆர் Reihana
achu ராஜாமணி
அனிருத் Ravichandar
Aruldev
பரத்வாஜ்
பென் Surenderan
சந்திரபோஸ் (இசையமைப்பாளர்)
கலோனியல் கசின்ஸ்
சி ஆர் Subburaman
டி இமான்
தேவா
தேவன் ஏகாம்பரம்
தேவி ஸ்ரீ பிரசாத்
தினா
Dharan
ஜி தேவராஜன்
ஜி ராமநாதன்
ஜி வி பிரகாஷ் குமார்
கங்கை Amaren
எம் Ghibran
ஹாரிஸ் ஜெயராஜ
ஜேம்ஸ் வசந்தன்
Jassie பரிசு
ஜோஸ்வா ஸ்ரீதர்
கார்த்திக் ராஜா
கே வி மஹாதேவன்
எம் எஸ் விஸ்வநாதன்
மகேஷ் Panjanathan
மணிசர்மா
Maragathamani
நிவாஸ் கே பிரசன்னா
பிரவின் மணி
பிரேம்ஜி லாஜிக்கையும் [1]
ரமணா Gogula
ஆர் பி பட்நாயக்
S.P.Balasubramanyam
S.A.Rajkumar
Sabesh முரளி
சங்கர் கணேஷ்
சந்தோஷ் நாராயணன் சி ஆர்
சத்ய
ஷங்கர், பாலை லோய்
சைமன்
Sharreth
Selvaganesh
எஸ்.கே. பாலசந்திரன்
ஸ்ரீகாந் தேவா
சுந்தர் சி பாபு
சுரேஷ் பீட்டர்ஸ்
டி கே ராமமூர்த்தி
டி ஆர் அப்பா
தமனின்
தாமஸ் ரத்னம் [2]
T.G.Lingappa
T.Olichandran
T.Rajendar
T.S.Muralidharan
Terika Terika மாமா
Thamodharan
Uthiriyan [3]
வித்யாசாகர்
விஜய் ஆண்டனி
V. குமார்
யுவன் ஷங்கர் ராஜா
Y.S.Julius சீசர்
இளையராஜா முன் வந்தவர் பின் வந்தவர் என்று பிரித்தால்
முன்வந்தவர் எல்லோரும் வயதானவர்கள்.
இளையராஜாவின் பின் வந்தவர்களில் எத்தனை பேர் இன்றுவரைக்கும் இந்த துறையில் தாக்கு பிடிக்க முடிந்தது
பலபேர் எங்குள்ளார்கள் என்றே தெரியவில்லை .
Raja ராஜா தான்
எத்தனை நயவஞ்சகம்
எத்தனை குழிதோண்டல்
அத்தனையும் உடைத்து மிளிர்கிறார் ராஜா
வாழ்க நீடுழி
- sanjai