சத்யராஜ் அளித்த அதிர்ச்சி
நான் மணிவண்ணன் சாரிடம் உதவி இயக்குனராக இருந்தபோது, சத்யராஜ×டன் ஐந்து படங்கள் வேலை பார்த்திருக்கிறேன். அதனால் என்னை அவருக்கு நன்றாகத் தெரியும். அந்த பழக்கத்தை வைத்து நேரிடையாக அவரைச் சந்தித்துக் கேட்டு விடுவது என்று தீர்மானித்தேன். இரண்டு நாள் முயற்சிக்குப்பின் சந்தித்தேன். என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, "உங்களிடம் கதை சொல்லவேண்டும்'' என்றேன். "சரி'' என்பார் என்று எதிர்பார்த்தேன்.
ஆனால் அவர் சிரித்துக்கொண்டே அதிர்ச்சி கொடுத்தார்.
"செல்வமணி! முதல் படம் பண்ணும் இயக்குனர்களின் படங்களில் நான் நடிப்பதில்லை! இதை என் கொள்கையாகவே வைத்திருக்கிறேன். நீங்கள் முதல் படம் பண்ணி, உங்கள் திறமையை நிரூபித்துவிட்டு வாருங்கள். அப்புறம் படம் நடித்து தருகிறேன்'' என்றார்.
சினிமாவில் வசனம் பேசுவதுபோல, சுலபமாகச் சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டார்.
சினிமா உலகின் தட்பவெப்பம், நெளிவு சுழிவுகள் தெரியாத எனக்கு, அது பெரிய ஏமாற்றமாக இருந்தது. ஆனால், இன்றுவரை அறிமுக இயக்குனர் படங்களில் நடிப்பதில்லை என்கிற கொள்கையில் சத்யராஜ் உறுதியாக இருக்கிறார்.
http://www.dailythanthi.com/article....date=2/11/2008
vikram too has the same kolgai
