டியர் சாரதா,
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. அதனால்தான் அதை இன்றும் ரசிக்கிறோம். இதை மனதில் கொண்டுதான் அதை மீண்டும் தயாரிக்க வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டார்கள் போலும்.
ஜோ,
பார்த்தேன் என்று மட்டும் சொன்னால் எப்படி? அந்த படங்களை பற்றிய உங்களது இப்போதைய பார்வை என்ன?
சுமதி என் சுந்தரி பற்றி பேசும் போது வேறு ஒன்று நினைவிற்கு வருகிறது. தன்னிடம் அடைக்கலம் நாடி வந்தவள் சுந்தரி அல்ல சினிமா நடிகை சுமதி என்பது தெரிந்ததும் வீட்டிற்க்கு வருவார் நடிகர் திலகம். JJ அங்கே பாடல் பாடி கொண்டிருப்பார். தன் கையில் இருக்கும் ஆல்பத்தில் இருக்கும் நடிகையும் இந்த பெண்ணும் ஒன்றுதானா என்று பார்ப்பார். தன் தோளை தழுவும் JJ-வின் கைகளை விலக்கி விட்டு படி இறங்கும் அவர் அங்கே ஜாடியில் வைக்கப்பட்டிருக்கும் ரோஜா பூவை முகர்ந்து விட்டு வைத்து விடுவார். தான் வாச மலர் என்று நினைத்த நீ கடைசியில் வெறும் காகிதப்பூதானா என்ற தன் மன உணர்வை வெறும் சைகையிலே மட்டுமே வெளிப்படுத்த நடிகர் திலகத்தை தவிர யாரால் முடியும்? இது எந்த இயக்குனரும் சொல்லி தராத, சொல்லி தர முடியாத நடிப்பு. ஒரு பாத்திரத்தின் குணாதிசயத்தை உள்வாங்கி அழகாக வெளிப்படுத்தும் நடிகர் திலகத்தின் பாங்கு.
அன்புடன்