Cho's talk is a treat to watch. Seriously :)
Printable View
Cho's talk is a treat to watch. Seriously :)
yes. He is so versatile and his wide and indepth knowledge is quite phenomenal. As you may be aware, he has already written books on Mahabharatham/Ramayanam and is now writing Hindu Maha Samudram covering various aspects in Thuklaq. It is another brilliant and valuable work. Even here, he raises questions and answers them in his typical style. :)
I like your Avatar SP
:ty: aana
Feb 19th
________
சென்ற இரு நாட்களில் முக்யமாக பேசப்பட்டது இரண்டு விஷயங்கள். முதலாவது 'மனுஸ்ம்ருதி' என்பது பற்றிய சிறு சர்சைகளும் அதற்கு சோ அவர்களின் பார்வையும். இரண்டாவது 'விதி', அதன் தாக்கம் குறித்த சில ஐயப்பாடுகள்.
மனுஸ்ம்ருதி என்பது மனு என்ற ஒரு அரசனால், முன்னொரு காலத்தில் எழுதப்பட்ட சில judgements / verdicts on general conduct and behaviour of every individual. அது இன்றைய நடைமுறைக்கு மாற்றப்பட்டே புழங்குகிறது, எந்த ஒரு சட்டமும், காலத்திற்கும் வழக்கத்திற்கும் தகுந்தாற்போல் மாற்றப்பட்டு நிற்பது இயல்பு. எனவே ராஜாராம் மோஹன்ராய் போன்றோர் 'சதி' வழக்கத்தை விட்டொழித்தில் மனுஸ்ம்ருதிக்கு
புறம்பாக எதுவும் செய்யப்படவில்லை. மேலும், யஞ்யவல்க்யர்-ஸ்ம்ருதியில் சட்டமும் ஏனைய வழக்கங்களும் அதன் தீர்ப்புகளும் காலத்தின் பேரில் மாறி வந்தே ஆகவேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. எப்படி ஒரு நாட்டின் சட்டம் அவ்வப்பொழுது திருத்தி அமைக்கப்படுகிறதோ, அத்தனையும் அந்த சட்டம் உள்வாங்கி இடம் கொடுக்கிறதோ, வளைந்து கொடுக்கிறதோ, அதே போல் மனுஸ்ம்ருதியும் விதிவிலக்கல்ல. Any wisely written law accomodates the amendments in its due course and manusmruthi is no exception.
மேலும் வர்ணாசிரம வழக்குப்படி பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு மனுஸ்ம்ருதியில் அதிக சலுகைகள் அளிக்கபட்டிருப்பதாக கருத்து நிலவி வருவதும் பொய்யானதே. மனுஸ்ம்ருதியில் பிராமணன் ஒருவன் தவறு செய்தால் அவனுக்கு மற்றோனை விட தண்டனை பன்மடங்கு அதிகம் பரிந்துரைக்கபட்டிருக்கிறது. பிராமணனை விட அரசனையே அதாவது க்ஷத்ரியனையே உயர்த்திப்பேசுகிறது. ராஜ்யஸ்ய யக்ஞம் முதலியவை நடைபேறும் போது க்ஷத்ரியனாம் அரசன் மேல் அமர முன் பிராமணன் கீழ் பணிந்து அமர்வதே வழக்கமாம்.
இங்கே பிராமணன் என்பவன் பிறப்பால் பிராமணன் ஆகப்பட்டவன் அல்ல. பூணூல் போட்டவன் எல்லாம் பிராமணனும் அல்ல. எந்த ஒரு மனிதனும் பிறப்பால் ஒரு வகுப்பைச் சேர்ந்தவன் ஆகிவிடுவதில்லை. அவனின் குணமும் நடத்தையும், வாழ்கை முறையையும் வைத்தே அவன் எந்த வர்ணத்தை சார்ந்தவன் என்று கூற இயலும். மேலும் பிறப்பால் ஒரு வகுப்பில் பிறந்த எவனும், தன் நடத்தையால், குணத்தின்
இயல்பால் இன்னொரு வகுப்புக்கு மாறுவதும் இயல்பு.
கதைப் பகுதியில், க்ருபா (சாஸ்த்ரிகள் மகன்) வீட்டின் கொலுவிற்கு ப்ரியா (ஜுட்ஜ் மகள்) தன் நடனபயிற்சியை ரத்து செய்து விட்டு வருகிறாள். க்ருபாவும் தன் அலுவலகப் பணிகளை ஒத்திப்போட்டு விட்டு இவளுக்காக சுருக்க வீடுவந்து விடுகிறான். அவர்கள் இருவருக்கும் உள்ள காதல், காதலின் பேரில் அவர்கள் செய்யும் extra efforts வழக்கம் போல் மற்றவர் கண்களுக்கு சுத்தமாய் தெரியவில்லை.
அப்புறம் அஷோக் வீட்டில் மஹா சுவாரஸ்யமான ஒரு விஷயம். பெற்றோர்கள் பார்ட்டிக்கு சென்றிருக்க, அஷோக் தோட்டத்தில் தனிமையில் ஆழ்ந்திருக்கிறான். அப்பொழுது அங்கு வரும் பாகவதர், 'உன் தந்தை கூப்பிட்டனுப்பினால் மனம் மாறி சென்றுவிடுவாயா, அல்லது இதே வைராக்கியத்தோடு கேளிக்கைகளில் நாட்டமின்றி இருப்பாயா?' என்று சீண்டுகிறார். "எனக்கு அது போன்ற கேளிக்கைகளில் மனம் ஈடுபடவில்லை, வருந்தி அழைத்தாலும் நான் செல்லமாட்டென்" என்கிறான் அஷோக்.
"நீ உன் நிலை இடாறாது இருக்கிறாயா என்று பரிட்சித்தேன். உண்மையில் நீ ஒரு ஸ்திதப்ரக்ஞன்" தான் என்று கூறிச்செல்கிறார்.
இரண்டு வினாடி கழித்து வீட்டுத் தொலைப்பேசியில் பேசியதோ காஞ்சீவரத்தில் இருந்து 'பாகவதர்'
அப்படியென்றால் தோட்டத்தில் அஷோக்கை சந்தித்தது யார்....?
(தொடரும்)
Feb 20th
________
வெள்ளியன்று, கதைப்பகுதி விருவிருப்பான கட்டத்தில் நுழைந்து வெகு வித்தியாசமான கோணத்தில் நம்மை ஆச்சர்யத்தில் தள்ளியது.
அஷோக் பாகவதரைக் கண்டதாய் கூறியதைக் கேட்ட சமையல் மாமி, நாதனிடம் இதைத் தெரிவிக்க, அவர் தம் மகனின் நடத்தையில் பெரிதும் கவலைக்கொள்கிறார். "உனக்கு hallucination! அது தான் கண்டதையும் உளறுகிறாய். காஞ்சீவரத்தில் இருக்கும் பாகவதரால் எப்படி தொட்டதில் வர முடியும்? அவர் என்ன சித்து வேலை தெரிந்தவரா? அல்லது கடவுளா' என்று தன் பக்கத்து கேள்விகளை நாதன் அடுக்க, மிக நிதானமாய் அஷோக், "நீங்கள் பார்க்கவில்லை, கேள்வி முறையில், நான் சொல்லி தெரிந்து கொண்டீர்கள், நானோ அவரை நேரில்பார்த்தேன், ப்ரத்யக்ஷமாய் பார்த்தேன், அது சத்தியம் என்பது எனக்குத் தெரியும்." என்று அமைதியாய் கூறுகிறான்.
பிட்சைக்கு, ஒரு யோகி கையேந்தி நாதன் வீட்டு வாசலில் நிற்கிறார். வசுமதி அவரை அலட்சியப்படுத்த முற்பட, சமையல் மாமியோ 'ஒரு பிடி சாதம் தானே கேட்கிறார், கொடுத்து அனுப்பிவிடுகிறேன்' என்று பிட்சையிட்டு அனுப்புகிறாள். இதை கவனித்துக்கொண்டிருந்த பாகவதர், வசுமதியிடம், அவள் அப்படி நடந்து கொண்டிருக்கக் கூடாது என்று எச்சரித்து, நாதன் குடும்பத்தில் சில தலைமுறைகளுக்கு முன் நடந்த ஒரு உண்மைக் கதை அவளுக்குத் தெரிய வாய்ப்பில்லை என்று நடந்த கதையைக் கூறுகிறார்.
ஒரு இளம் காலைப்பொழுதில், பைராகி ஒருத்தி பிட்சைக்கு கை ஏந்துகிறாள். அதை அலட்சியம் செய்து ஒரு ஸ்த்ரீ, மிகக் கேவலமாக அவளை அவமதிக்க, பைராகியும் பொறுமையாய், தான் பிச்சைக்கு வரவில்லை, தான் வடக்கிலிருந்து வந்திருக்கும் பைராகி, என்று கோபத்தை அடக்கி விளக்க முற்படுகிறாள். அந்த ஸ்த்ரீ, அலட்சியம் மேலிட, மேலும் ஏசி விரட்டுகிறாள். மும்முறை கோபத்தைக் கட்டுப்படுத்தி மிகப் பொறுமையாய்
பைராகி பதிலுறுக்க, அதை லட்சியம் செய்யாத அந்த ஸ்த்ரீ தொடர்ந்து அவமதிக்கிறாள். கோபம் கட்டுக்கடங்காமல் தன்னால் அவளை பஸ்பமாக்க முடியும் என்று கர்ஜிக்கிறாள் பைராகி. இப்பொழுது பெண்மணிக்கோ பயத்தில் முகம் வெளிரிவிடுகிறது. தொடர்ந்து பேசும் பைராகி,
"உன் குடும்பத்தில் ஒவ்வொரு தலைமுறையிலும் ஒருவன் இல்லறத்தை துறந்து சன்னியாசம் ஏற்பான். இது அவனுக்கு ஆன்ம ஷாந்தியைத் தரும் என்றாலும், அப்படி செல்பவனின் பிறிவால் ஏனையோரும் பெற்றோரும் பிரிவுத் துயரில் வாடுவது திண்ணம்" என்று வாக்கு உரைத்துச் செல்கிறாள்.
இதைக் கேட்ட பெண்மணி உடல் ஒடுங்கி பயத்துடன் வீட்டுக்கதவை தாளிட்டுக்கொண்டுவிடுகிறாள். (அப்பொழுதேனும், ஒரு வாய் உணவு இட்டுவிட்டு லேசாக 'sorry' கேட்டிருந்தால், பைராகியின் வாக்கின் கடுமை குறைந்திருக்கும். ஆனால் விதி...வலியது.)
உங்களுக்கும் புரிந்திருக்கும், அந்தப் பெண்மணி நாதனின் மூதாதையரில் ஒருத்தி என்று. இதைக் கேட்ட வசுமதி கண்கலங்கி செய்வதறியாது நிற்கிறாள். நள்ளிரவில் வசுமதி தனியே அழுதுகொண்டிருப்பதைக் கண்ட நாதன், தன் குடும்ப்பத்தில் ஒவ்வொரு தலைமுறையிலும் 30 அல்லது 35 வயது வாலிபன் ஒருவன், திடீரென ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டு துறவு பூண்டிருப்பதை ஊர்ஜிதப்படுத்தி, அவர்களின் புகைப்படங்களை வசுமதிக்கு காண்பிக்கிறார்.
'விதி' க்கு ஒரு விளக்கம் கொடுத்திருந்தார் எனச் சொல்லியிருந்தேன் அல்லவா? சோ சொன்னது இது தான்.
ஒவ்வொருவரின் வாழ்விலும், விதியின் பங்கு நிச்சயம் உண்டு. ஆனால் விதி நல்லதாய் இருக்கிறதே என்று முயற்சி செய்யாமல் விட்டுவிட்டால், மந்திரத்தில் மாங்காய் காய்க்காது. விதியுடன் மனித முயற்சியும் வேண்டும். நாம் நம் செயல்களில் முயற்சி செய்து கொண்டே இருக்கவேண்டும். விதி நன்கு அமைந்தால், நலன் கூடுதல், முயற்சி செய்தும் பலன் இல்லாவிட்டால், அது தான் விதி.
நிலத்தை உழுது, பயிரிடுவது நம் கடமை. மழை பெய்வதும், பெய்யாதிருப்பதும் விதி.
Effort + fate = result
No effort + favourable-fate= minimised result
Effort + unfavourable-fate = play of fate.
என்பது தான் formula.
P.s: Bhairagis, I assume are a class of shiva-yogins who are wanderers, meditating and delving on god and his prescence. They live on alms.
http://www.samasya.com/religion/stat...rar/index.html
:ty:Quote:
Originally Posted by Shakthiprabha
கயிற்றினால் கட்டப் பட்ட மாடு.
அந்த வட்டத்தை சுற்றி மேயாமல்
ஒரே இடத்தில் நின்று கொண்டுருந்தால் --அது விதி
வட்டம் முழுவதையும் மேயமுடியுமானால் - மதி
எல்லையைத் தாண்ட முடியுமா?????? ம்ம்
கர்மா ...
தெளிவான விளக்கம். SP
:clap:
your valuable comments adds substance to the subject :)
Feb 23rd
________
பூனை குறுக்கே போனால் புறப்படும் காரியம் சரியாய் நடைபெறாது என்ற நம்பிக்கை இருந்து வந்தது. இன்று அதை மூட நம்பிக்கை என்று முத்திரைக் குத்தி புறம் தள்ளி விட்டாலும், பழங்காலத்தில் இதெல்லாம் சகுன சாஸ்திரம் என்பதன் அடிப்படையில் எழுதப்பட்டதாம். அஃதாவது, பூனை குறுக்கே புகுந்து நமக்கு என்ன உணர்த்துகிறது? பூனை என்ன முற்றும் அறிந்த ஞானியா? என்றால், பூனையை குறுக்கே போக வைப்பது நம்மை ஆட்டுவிக்கும் கர்ம வினைகள். வானிலையில் இன்று மழை பெய்யலாம், பெய்யாமலும் இருக்கலாம் என்று மைய்யத்தில் எப்படி ஒரு எச்சரிக்கை விடுக்கிறார்களோ, அதே போல், கிரக நிலைகள் சரியில்லாத பொழுது, இது போன்ற எச்சரிக்கைகள், சிறு சமிக்ஞைகள் முதலியவை உருவாக்கி நம்மை தயார்படுத்துகிறது இயற்கை. கிரக நிலைகள் சரியில்லாத பொழுது, மனிதன் மனம், உடல், ஆன்மா முதல் பாதிக்கப்பட்டுவிடலாம். அல்லது எழுச்சி பெறலாம்.
ஏழாம் நூற்றாண்டில் மதுரை நகரை ஆட்சி செய்து வந்த பாண்டிய மன்னன் சமண மதத்தைச் சேர்ந்தவன் அவன் மனைவி மங்கையர்க்கரசியோ சைவ சமயத்தைச் சேர்ந்தவர். மன்னருக்கு நோய் அண்டும் பொழுது அமைச்சர் குலச்சிறையாரின் ஆலோசனையின் பேரில் திருஞானசம்பந்தரை அழைக்கிறார்கள். அப்பொழுது சமண மதம் செழித்து வந்த காலகட்டம். அப்பர், சம்பந்தரிடம் இப்பொழுது நேரம் சரியிருக்கிறதோ என்று பரிட்சித்து பின் செல்லலாம். சமணர்களால் தாங்களுக்கு ஊறு ஏதேனும் விளையுமோ என்று அஞ்சுகிறேன் என்று உரைக்க,
சம்பந்தரோ, "நாளும் கோளும் இறைவனின் அடியாரை என் செய்யும்!" என்று பதில் மொழி கூறி "வேயுறு தோளி பங்கன்" என்ற கோளறு பதிப்பகத்தை திருவாய்மொழிந்தருளினார்.
"வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என்
உளமே புகுந்தவதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே!"
கோளறு பதிப்பகம் பாராயணம் செய்வோர்க்கு கோள்களால் நேரும் இடர்கள் குறையும் என்பது நம்பிக்கை.
சரி, இந்த கோளும் நாளும் என் செய்யும் என்று சம்பந்தரே சொல்லிவிட்டார். அப்புறம் ஏன் பூனை, நாய் என சகுனத் தூதர்களை நினைத்து பயப்படுவது? பின் ஏன் எமகண்டம், இராகு காலம், நல்ல நேரம் எல்லாம்? கோளும் நாளும் ஒன்றும் செய்யாது என்பது சரி. ஆனால் யாருக்கு? பக்தியில், ஞானத்தில், இறைவனின் அடி தொழும் பரிபூர்ண நிலை எய்திய பக்தர்களுக்கு. நம்மைப்போன்று பக்குவம் அடையாத பலருக்கு இருக்கும் ஆன்ம பலன் கோள்களின் பலத்தை வெல்லும் அளவு வலுவானதல்ல. எளிதல்ல.
இதுவெல்லாம் இப்பொழுது இங்கெதற்கு என்றால், காலையில் மாமியிடம் விடைபெற்றுக்கொண்டு அஷோக் செல்லும் போது குறுக்கே பூனை ஒன்று ஓடுகிறது. மாமி பதைபதைக்க, அதை சட்டை செய்யாமல் அஷோக் சென்றுவிடுகிறான். சென்றுவிட்டவன் வீடு திரும்பவில்லை. இரவு நெடு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. மறு நாளும் வீடு திரும்பாததால், நாதன் போலீஸுக்கும் புகார் கொடுக்கிறார். நாதனும் அவர் மனைவியும் படும் பாடு, அழும் அழுகை, குமுறும் குமுறல் கொஞ்ச நஞ்சமல்ல.
(வளரும்)
Feb 24th
________
போலீஸில் புகார் கொடுத்தும் கண்டபலன் இதுவரை ஒன்றும் இல்லை. பத்து தினங்களாக, போலீசார் கண்டெடுத்த அனாதைப் பிணங்களில் அடையாளம் காட்ட முடியுமா? என்று இன்ஸ்பெக்டர் கேட்க, நாதன் மனம் வெம்பி விடுகிறது. "என் மகன் இன்னும் உயிரோடு இருக்கிறான் என்று எனக்குத் தெரியும், எனக்கு அங்கு வந்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை" என்று மறுத்துப் பேசி வேதனையுடன் மனை திரும்புகிறார்.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஆன்மீகத்தில் ஈடுபாடு வருவதற்கு முக்கியப்பங்கு வகிப்பதே "மரணம்". மரணம் பற்றிய பயம், அல்லது அறியாமை, அல்லது தெரிந்து கொள்ளும் ஆர்வம். இறந்த பின் என்ன? இறப்பது யார்? இறந்த பின் ஒன்றுமில்லாமல் சூன்யத்தில் கலந்து விடுவோமா? ஒன்றுமில்லாதது என்பது என்ன? இப்படிப் பலக் கேள்விகள் அடுக்கடுக்காய் மனிதப்பிறவிகள் பலருக்கும் இடைவிடாது தோன்றியபடி இருக்கும்.
இன்னார் இறந்து விட்டார் என்றால், ஏதோ ஒன்று, இன்னாரின் உடலில் இருந்து பிரிந்து செல்கிறது. இன்னார் என்று இதுவரைக் கூறிவந்தது அவர் உடலை. ஆனால் அந்த "ஏதோ ஒன்று" பிரிந்து சென்றதும், உடலுக்கு அங்கு மதிப்பு இல்லை. "அது" பிணம் என்ற அஃரிணைக்கு தள்ளப்பட்டுவிடுகிறது. அதனால் x அல்லது y அல்லது Z அவரவர் உடல் அல்ல. அதிலிருந்து பிரிந்து செல்லும் கண்ணுக்குப் புலப்படாத பொருள்.
அதை "உயிர்" என்று வைத்துக்கொள்வோம். உயிர் என்றால் என்ன? உயிர் என்றால் இதயத்துடிப்பு என்று மீண்டும் உடலுடன் தொடர்பு படுத்திப்பார்ப்பது அறிவீனம். உயிர் என்றால் மூளை என்போமேயானால், ppl who are declared brain dead sometimes exist in coma state, i.e indicating that 'life-force' has not departed. உயிர் என்பது இதயத்துடிப்பு என்றால், இதய்மாற்று அறுவைசிகிச்சை செய்தால், அவ்வுடலில் புதிதாய் உருவெடுத்திருப்பது வேறொருவனா?
உயிர் என்றால் செயலாற்றல், உயிர் என்றால் இயக்கம். அப்படியெனில் உயிர் என்றால் என்ன? life force. ஆன்மா அல்லது soul என்றும் சோல்லலாம். ஆன்மா என்பது எங்கும் பரவி வியாபித்திருக்கும் ஒன்று என்றால், ஒவ்வொரு தனிமனித உடலில் மாயையால் கட்டுண்டு, ஆசைகளின் தொகுப்புக்களைச் சேமித்து, வெவ்வேறு உடல் தாங்கி பிறந்தும் இறந்தும் கிடப்பது ஜீவ-ஆத்மா (ஜீவனின்/மனிதனின் ஆத்மா). மாயின் சாயை இன்றி எங்கும் சிதறிக்கிடப்பது நிறைந்திருப்பது பரமாத்மா (the brahman)
ஆக ஒரு மனிதன் இறந்தால், அவன் தரித்திருந்த உடலினின்று பிரிந்து செல்வது "ஜீவாத்மா". எதற்கு இந்த வியாக்கியானம்! அஷோக் உயிருடன் இருக்கிறான் என்றே நம்பி, அவனைத் தேடும் பணி என்னவாயிற்று என்று பார்ப்போம். நாட்கள் நகர்ந்தவண்ணம் இருக்கிறாதேயொழிய அசோக் வந்தபாடில்லை. நீலகண்டன் பேப்பரிலும் விளம்பரம் குடுக்கலாமே என்று யோசனை கூறுகிறார். நீலகண்டனுக்கும் சமையல் மாமிக்கும் சிறு வாக்குவாதம் ஏற்பட்டுவிடுகிறது. நாதன் ஏற்கனவே கவலையில் இருக்க, நாவிலும் சொல்லிலும் கட்டுப்பாடின்றி, சமையல் மாமியை மிகவும் மனம் நோகும் படி கண்டித்துவிடுகிறார். அஷோக் போலவே ஒருவனின் உடல் மடத்தின் அருகே உயிரற்று இருந்த செய்தியை செய்தித்தாளொன்றில் படித்த சமையல் மாமியும், நீலகண்டன் மனைவி பர்வதமும் மிகுந்த மனவருத்ததுடனும், சந்தேகத்துடனும், கவலையுடனும் பேசிக்கொள்கின்றனர்.
எத்தனை மட்டமாய் பேசியும் கூட, மறுநாள் தன் கடமையை முகம் சுளிப்பில்லாமல், ஷாந்தமாய் தொடரும் சமையல் மாமி பாத்திரம் இவ்விடத்தில் ஜொலிக்கிறது.
"எம் கடன் பணி செய்து கிடப்பதே" என்று சொல்லாமல் சொல்கிறார். கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.
(வளரும்)