நான் நிறைய பக்திப் பாடல்கள் கேட்பதில்லை. நீங்கள் பாடகர்/பாடல் தொகுப்பை சுட்டிக்காட்டினால், அதை எதற்கும் கேட்டுப் பார்த்து ராஜாவைவிட மேலோங்கி இருக்கிறாத என என் தனிக்கருத்தை இங்கே இடுகிறேன். என்னைப் பொருத்தவரை ராஜா தான் மிகவும் நுன்னிய உணர்வு கொண்ட பாடல்களைத் தந்துள்ளார். சுரேஷ் சொல்வது போல் இவருடையு பக்திப் பாடல்கள் மற்றவர்களை விட ஒரு தரம் உயர்ந்தாகவே இருக்கும் என்பது என் நம்பிக்கை. திருவாசகம் மக்களைச் சென்றடையாததற்கு காரணம் அதன் மேற்கத்திய சாயல் இசை வடிவம் என்பது என் கூறு. பெறும்பாலும் தீவிர ராஜா ரசிகர்கள் ஒன்று கர்நாடக இசை அல்லது கொஞசம் மேற்கத்திய இசை விரும்பிகளாவே இருக்கிறார்கள். ஏதோ இசைக்கு கேள்வி ஞானம் மற்றுமே போதும் என்பவர்கள் அவ்வளுவு தீவிரம் காட்டுவதில்லை. ராஜாவின் ஒன்றிய இசை வடிவம் தமிழ் நாட்டில் ஒரு தோல்வியே. அவரின் மெட்டுக்களை மட்டுமே மக்கள் கவனித்தனர். அதைச் சார்ந்த கருவி இசை அதற்கேற்ற மரியாதையை பெறவில்லை.
(ஆயினும் உங்களுடைய உதாரணங்களுக்காக காத்திருக்கிறேன்).
