Quote:
நமக்கு என்ன சரியா வருமோ, அதைச் சரியா செய்யணும். இதுதான் கார்த்தியின் ஃபார்முலா... தனக்குப் பொருத்தமான கதைகளை சரியாகத் தேடிப்பிடித்து நடிக்கிறார். பையாவினால் பெண்களைத் திரும்பிப் பார்க்க வைத்த கார்த்தி அடுத்து நான் மஹான் அல்ல படத்திற்கு ரெடி! அவருடைய அண்ணியின் தம்பி கல்யாணத்திற்காக கு டும்பத்துடன் ஒரிஸ்ஸா சென்று திரும்பியவரை சந்தித்துப் பேசினோம்.
அழுக்கன் எப்படி பையாவில் அழகாக மாறினீங்க?
சினிமாவிற்கு நடிக்க வந்து முதல் முறையாக இந்தப் படத்தில்தான் மேக்-அப் போட்டிருக்கேன். படப்பிடிப்புக்கு இடையே டச்-அப் செய்திருக்கேன். நல்லா இருக்கேனான்னு கண்ணாடி பார்த்திருக்கேன். ஹேர்ஸ்டைல் சரி செய்துட்டே இருந்தேன். ஜூஸ் குடிச்சேன், டயட்டில் இருந்தேன். உடற்பயிற்சிகள் செய்தேன். ஹேண்ட்சம் ஹீரோவாக கொஞ்சம் அழகுணர்ச்சியுடன் மெனக்கெட்டிருக்கேன். காலேஜ் படிச்சபோதுலாம்கூட நண்பர்கள் கூட்டத்தில் இருக்கும்போது பெண்கள் என்னை கண்டுக்கவே மாட்டாங்க. பையா படத்திற்குப் பிறகு நிறையப் பெண் ரசிகைகளின் பாராட்டுகள் வருது. எப்படியோ பெண்களுக்கு என்னை பிடிச்சுப் போச்சு...
படத்தைப்போல நிஜத்தில் ஒரு முறையாவது தமன்னாவைப் பார்த்து அசந்திருக்கீங்களா?
நான் மணிரத்னத்துடன் யுவாவில் துணை இயக்குநராக வேலை பார்த்தபோது படப்பிடிப்பில் கரீனாகபூரைப் பார்த்திருக்கேன். அவங்களைவிட தமன்னா கலரா இருக்காங்க. முதல்முறை தமன்னாவைப் பார்த்தபோது வெள்ளைநிறத்தில் டிரெஸ் போட்டிருந்தாங்க. டிரெஸ் கலருக்கும் அவங்களுக்கும் வித்தியாசமே தெரியலை. எப்படிடா இந்தப் பொண்ணு மட்டும் இவ்வளவு கலரா இருக்காங்கன்னு ஆச்சர்யப்பட்டிருக்கேன். தமன்னா மட்டுமில்லை என்கூட நடிக்கிற சக நடிகைகள் எல்லாருமே ஒவ்வொரு விதத் துல சிறந்தவங்கதான்.
உங்க நடிப்பில் பருத்திவீரன் சாயல் இருக்குன்னு ஒரு கமெண்ட் இருக்கு. என்ன சொல்றீங்க?
என்னுடைய இயல்பான குசும்புத்தனம், சிரிப்பு, பேச்சும் பருத்திவீரன்ல இருக்கு. அதுகூட இருக்கக்கூடாதுன்னு முன்னெச்சரிக்கையாதான் பையாவில் நடிச்சேன். அப்படியும் கண் விரிச்சு பேசும்போது சில இடங்களில் பருத்திவீரன் மாதிரி இருந்ததுன்னு சொன்னாங்க. சரி... அந்த சாயல் இனி இருக்காது.
அறிமுக இயக்குனர்களின் படங்களில் நடிப்பதில்லையே... ஏன்?
நான் 30 படங்கள் நடிச்சிருந்தா பரவாயில்லை. நானே 3 படங்கள்தான் நடிச்சிருக்கேன். அறிமுக இயக்குநரின் கதையில் நடிக்க எனக்கு அனுபவம் பத்தாது. வழக்கமான கமர்ஷியல் படமாக இல்லாமல் கொஞ்சம் ஸ்பெஷலாக இருந்தால் மட்டுமே தற்போதைக்கு அறிமுக இயக்குநர்களின் கதைகளில் நடிப்பேன்.
அண்ணாவோட ஒப்பிட்டுப் பேசினால் சின்ன எரிச்சல் வருமா?
அவரோட ஒப்பிட்டுப் பேசினால் எனக்கு பெருமையாகத்தான் இருக்கு. எங்களுக்குள்ள போட்டியில்லை. பையாவுக்கு அடுத்து, என்ன படம் பண்ணலாம்னு யோசிப்பேனே தவிர அண்ணனோட சிங்கம் படத்துக்கு போட்டியா என்ன நடிக்கலாம்னு யோசிக்கிறதுல்ல. அவரும் அப்படித்தான்.
தற்போது நடித்துக்கொண்டிருக்கும் தெலுங்கு ரீமேக் படத்தில் தமன்னாவை நீங்கதான் பரிந்துரைத்தீர்களாமே... அப்படியா?
இல்லவே இல்லை. நான் தமன்னாவை பரிந்துரைக்கவே இல்லை. அவங்களுக்கு அந்த அவசியமும் இல்லை. எங்க ஜோடி ஹிட்டாகிவிட்டதால நாங்க ரெண்டு பேரும் மறுபடியும் இணைந்து நடிக்கணும்ங்கிறது முழுக்க முழுக்க இயக்குநரின் சாய்ஸ். நான்
தலையிடவே மாட்டேன்!