நடிகர் முரளி மறைவு: படப்பிடிப்புகள் நாளை ரத்து
சென்னை, செப்.8,2010
நடிகர் முரளியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், நாளை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகின்றன.
நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் கூட்டாக இரங்கல் செய்தியில், முரளி மறைவால் திரையுலகம் அதிர்ச்சியில் மூழ்கி உள்ளது.
இறுதி ஊர்வலத்தையொட்டி திரையுலகின் அனைத்து அமைப்பினரும் நாளை (9 ஆம் தேதி) படப்பிடிப்பை ரத்து செய்து ஒத்துழைக்குமாறு விடுத்த வேண்டுகோளை, தமிழ் திரையுலக கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விகடன்
