vaigai karaiyinil(natchathiram)
பாடல்: வைகை கரையினில்
திரைப்படம்: நட்சத்திரம்
பாடியவர்: எஸ்.ஜானகி
இசை: ஷங்கர் கணேஷ்
வைகை கரையினில் ஒரு பறவை
அது வானத்தில் தேடுது தன் உறவை
வைகை கரையினில் ஒரு பறவை
அது வானத்தில் தேடுது தன் உறவை
தனியே காணுது பகல் இரவை
தனியே காணுது பகல் இரவை
அது தனக்குள் வைத்தது தன் கனவை
வைகை கரையினில் ஒரு பறவை
அது வானத்தில் தேடுது தன் உறவை
காவல் இல்லாமல் இருக்கின்றது
அது கவலை இல்லாமல் பறக்கின்றது
காவல் இல்லாமல் இருக்கின்றது
அது கவலை இல்லாமல் பறக்கின்றது
போதையிலே அது விழுந்ததில்லை
போதையிலே அது விழுந்ததில்லை
தன் பூஜையை எப்போதும் மறந்ததில்லை
வைகை கரையினில் ஒரு பறவை
அது வானத்தில் தேடுது தன் உறவை
தனியே காணுது பகல் இரவை
அது தனக்குள் வைத்தது தன் கனவை
பெண்ணுக்கு வேலிகள் நான்கு உண்டு
ஒரு பேச்சு வந்தாலும் தீங்கு உண்டு
பெண்ணுக்கு வேலிகள் நான்கு உண்டு
ஒரு பேச்சு வந்தாலும் தீங்கு உண்டு
கண்ணுக்கு விருந்தென இருப்பதுண்டு
கண்ணுக்கு விருந்தென இருப்பதுண்டு
தன் கடமையைத்தான் அவள் நினைப்பதுண்டு
வைகை கரையினில் ஒரு பறவை
அது வானத்தில் தேடுது தன் உறவை
ஒரு வகை ஸ்வரத்தில் ஒரு ராகம்
அதில் ஒன்று குறைந்தால் மறு ராகம்
ஒரு வகை ஸ்வரத்தில் ஒரு ராகம்
அதில் ஒன்று குறைந்தால் மறு ராகம்
மங்கல விருந்தால் சுப ராகம்
மங்கல விருந்தால் சுப ராகம்
நல்ல மங்கையர் வாழ்வில் அனுராகம்
வைகை கரையினில் ஒரு பறவை
அது வானத்தில் தேடுது தன் உறவை
தனியே காணுது பகல் இரவை
அது தனக்குள் வைத்தது தன் கனவை
வைகை கரையினில் ஒரு பறவை
அது வானத்தில் தேடுது தன் உறவை
kiNNathil thEn vadithu(iLamai oonjalaadugiRadhu)
பாடல்: கிண்ணத்தில் தேன் வடித்து
திரைப்படம்: இளமை ஊஞ்சலாடுகிறது
இசை: இளையராஜா
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ் & எஸ்.ஜானகி
கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகிறேன்
எண்ணத்தில் போதை வர எங்கெங்கோ நீந்துகிறேன்
கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகிறேன்
நானும் ஓர் திராட்சை ரசம் நாயகன் உந்தன் வசம்
நானும் ஓர் திராட்சை ரசம் நாயகன் உந்தன் வசம்
தென்றல் போல் மன்றம் வரும் தேவி நான் பூவின் இனம்
கொஞ்சமோ கொஞ்சும் சுகம் கொண்டு போ அந்தப்புரம்
கன்னத்தில் தேன் குடித்தால் கற்பனை கோடி வரும்
உள்ளத்தில் பூங்கவிதை வெள்ளம் போல் ஓடி வரும்
கன்னத்தில் தேன் குடித்தால் கற்பனை கோடி வரும்
ஆணிப்பொன் கட்டில் உண்டு கட்டில்மேல் மெத்தை உண்டு
ஆணிப்பொன் கட்டில் உண்டு கட்டில்மேல் மெத்தை உண்டு
மெத்தைமேல் வித்தை உண்டு வித்தைக்கோர் தத்தை உண்டு
தத்தைக்கோர் முத்தம் உண்டு முத்தங்கள் நித்தம் உண்டு
கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகிறேன்
யாழிசை தன்னில் வரும் ஏழிசை எந்தன் மொழி
யாழிசை தன்னில் வரும் ஏழிசை எந்தன் மொழி
விண்ணிடை வட்டமிடும் வெண்ணிலா உந்தன் விழி
பள்ளியில் காலைவரை பேசிடும் காதல் கதை
கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகிறேன்
கன்னத்தில் தேன் குடித்தால் கற்பனை கோடி வரும்
கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகிறேன்
கைகளில் ஏந்துகிறேன்...ஆஆ ஆ
கைகளில் ஏந்துகிறேன்...ஆஆ ஆ
கைகளில் ஏந்துகிறேன்
azhagiya kaNNE(udhiri pookkaL)
பாடல்: அழகிய கண்ணே
திரைப்படல்: உதிரிப் பூக்கள்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி
அழகிய கண்ணே உறவுகள் நீயே
நீ எங்கே இனி நான் அங்கே
என் சேய் அல்ல தாய் நீ
அழகிய கண்ணே உறவுகள் நீயே
சங்கம் காணாதது தமிழும் அல்ல
தன்னை அறியாதவள் தாயும் அல்ல
சங்கம் காணாதது தமிழும் அல்ல
தன்னை அறியாதவள் தாயும் அல்ல
என் வீட்டில் என்றும் சந்திரோதயம்
நான் கண்டேன் வெள்ளி நிலா
அழகிய கண்ணே உறவுகள் நீயே
சொர்க்கம் எப்போதும் நம் கையிலே
அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே
சொர்க்கம் எப்போதும் நம் கையிலே
அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே
என் நெஞ்சம் என்றும் கண்ணாடி தான்
என் தெய்வம் மாங்கல்யம் தான்
அழகிய கண்ணே உறவுகள் நீயே
மஞ்சள் என்றென்றும் நிலையானது
மழை வந்தாலுமே கலையாதது
மஞ்சள் என்றென்றும் நிலையானது
மழை வந்தாலுமே கலையாதது
நம் வீட்டில் என்றும் அலை மோதுது
என் நெஞ்சம் அலையாதது
அழகிய கண்ணே உறவுகள் நீயே
நீ எங்கே இனி நான் அங்கே
என் சேய் அல்ல தாய் நீ
அழகிய கண்ணே உறவுகள் நீயே
raasaavE unnai nambi(mudhal mariyaadhai)
பாடல்: ராசாவே ஒன்ன நம்பி
திரைப்படம்: முதல் மரியாதை
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி
ராசாவே ஒன்ன நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க
ஒரு வார்த்த சொல்லிட்டீங்க அது உசுர வந்து உருக்குதுங்க
வந்து சொல்லாத உறவ இவ நெஞ்சோடு வளர்த்தா
அது தப்பான கருத்தா தண்ணீரில் எழுத்தா
ராசாவே ஒன்ன நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க
பழச மறக்கலையே பாவி மக நெஞ்சு துடிக்குது
உன்னையும் என்னையும் வச்சு ஊருசனம் கும்மி அடிக்குது
அடடா எனக்காக அருமை கொறைஞ்சீக
தரும மஹராசா தலைய கவுந்தீக
களங்கம் வந்தால் என்ன பாரு
அதுக்கும் நெலான்னுதான் பேரு
அட மந்தையில நின்னாலும் நீ வீர பாண்டித்தேரு
ராசாவே ஒன்ன நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க
காதுல நரைச்ச முடி கன்னத்துல குத்துது குத்துது
சுழியில படகு போல எம் மனசு சுத்துது சுத்துது
பருவம் தெரியாம மழையும் பொழிஞ்சாச்சு
வெவரம் தெரியாம மனசும் நனைஞ்சாச்சு
உனக்கே வச்சிருக்கேன் மூச்சு எதுக்கு இந்த கதி ஆச்சு
அட கண்ணு காது மூக்கு வச்சு ஊருக்குள்ள பேச்சு
ராசாவே ஒன்ன நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க
ஒரு வார்த்த சொல்லிட்டீங்க அது உசுர வந்து உருக்குதுங்க
வந்து சொல்லாத உறவ இவ நெஞ்சோடு வளர்த்தா
அது தப்பான கருத்தா தண்ணீரில் எழுத்தா
ராசாவே ஒன்ன நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க
naan irukkum andha naaL varaikkum(azhagiya kaNNE)
பாடல்: நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும்
திரைப்படம்: அழகிய கண்ணே
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி
நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும்
நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும்
நெஞ்சில் வாழும் பந்தமே சிந்து பாடும் சொந்தமே
வான் வரைக்கும் எண்ணமும் பறக்கும்
நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும்
காலங்கள் யாவும் உன்னை கண்குளிர காணும்
கோலங்கள் தானே எந்தன் நிம்மதிக்கு போதும்
காலங்கள் யாவும் உன்னை கண்குளிர காணும்
கோலங்கள் தானே எந்தன் நிம்மதிக்கு போதும்
நீ வாழும் இதயம் முழுதும் ஏக்கங்கள் இல்லை தூக்கங்கள்
இனி என்னோடு உன் எண்ணம் ஒன்றாகும்
இனி என்ன நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும்
என் வாழ்வின் இன்பம் எல்லாம் நீ கொடுத்த எண்ணம்
ஏங்காமல் ஏங்கும் இங்கே பெண்மை என்ற வண்ணம்
என் வாழ்வின் இன்பம் எல்லாம் நீ கொடுத்த எண்ணம்
ஏங்காமல் ஏங்கும் இங்கே பெண்மை என்ற வண்ணம்
எங்கெங்கோ எனது மனது ஓடட்டும் இன்பம் பாடட்டும்
இனி ஏதேதோ என் நெஞ்சில் கூடட்டும்
இனி என்ன நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும்
நெஞ்சில் வாழும் பந்தமே சிந்து பாடும் சொந்தமே
வான் வரைக்கும் எண்ணமும் பறக்கும்
நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும்
then ilangai mangai(mOhana punnagai)
பாடல்: தென் இலங்கை மங்கை
திரைப்படம்: மோஹனப் புன்னகை
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: எஸ்.விஸ்வநாதன்
தென் இலங்கை மங்கை வெண்ணிலவின் தங்கை
தேனருவி நீராடினாள் தாமரையைப் போலே
பூ மகளும் நின்றாடினாள்
தென் இலங்கை மங்கை வெண்ணிலவின் தங்கை
தேனருவி நீராடினாள் தாமரையைப் போலே
பூ மகளும் நின்றாடினாள்
தென் இலங்கை மங்கை வெண்ணிலவின் தங்கை
தேனருவி நீராடினாள் தாமரையைப் போலே
பூ மகளும் நின்றாடினாள்
வான் பார்க்கும் தென்னை நீராடும் என்னை
ஏன் பார்த்து சாய்கின்றதோ
வான் பார்க்கும் தென்னை நீராடும் என்னை
ஏன் பார்த்து சாய்கின்றதோ
பூந்தேரில் ஏறி போகின்ற தென்றல்
என் மீது பாய்கின்றதோ
ஆகாய மேகம் நான் கொண்ட கூந்தல்
தானென்று எண்ணி தரை வந்து சேரும்
தென் இலங்கை மங்கை வெண்ணிலவின் தங்கை
தேனருவி நீராடினாள் தாமரையைப் போலே
பூ மகளும் நின்றாடினாள்
பொன் மீன்கள் என்று என் கண்கள் கண்டு
செம்மீன்கள் பாராட்டுதோ
பொன் மீன்கள் என்று என் கண்கள் கண்டு
செம்மீன்கள் பாராட்டுதோ
சேய் போல என்னை தண்ணீரின் வெள்ளம்
தாய் போல தாலாட்டுதோ
ஏகாந்த நேரம் ஏதேதோ எண்ணம்
பூம்பாவை நெஞ்சில் புதுக்கோலம் போடும்
தென் இலங்கை மங்கை வெண்ணிலவின் தங்கை
தேனருவி நீராடினாள் தாமரையைப் போலே
பூ மகளும் நின்றாடினாள்
andha indhira lOgamE(poNNu pudichirukku)
பாடல்: அந்த இந்திர லோகமே
திரைப்படம்: பொண்ணு புடிச்சிருக்கு
இசை: சந்திரபோஸ்
பாடியவர்: எஸ்.ஜானகி
அந்த இந்திர லோகமே இங்கு வந்தது போலவே
அந்த இந்திர லோகமே இங்கு வந்தது போலவே
அந்த இந்திர லோகமே இங்கு வந்தது போலவே
இந்த கண்ணுல தோணுது மனம் கங்கையில் ஆடுது
இந்த கண்ணுல தோணுது மனம் கங்கையில் ஆடுது
அந்த இந்திர லோகமே இங்கு வந்தது போலவே
அந்த இந்திர லோகமே இங்கு வந்தது போலவே
நாளை விடிகாலையில் நாதாஸ்வர ஓசையில்
மாலை இடும் வேளையில் என்ன மயக்கம்
முதல் நாள் இரவை மனம் எண்ணும் போதிலே
அடடா எனக்கேன் ஏதும் சொல்லத் தோணலே
அலை பாயுது விளையாடுது நெஞ்சம் வானிலே
அந்த இந்திர லோகமே இங்கு வந்தது போலவே
அந்த இந்திர லோகமே இங்கு வந்தது போலவே
சின்னவளின் சேலையை மன்னனவன் ஆசையா
மெல்லத் தொட்ட மாதிரி ஒரு கனவு
மெதுவா விழிச்சேன் அந்த ராசா காணலே
அதனால் எனக்கேன் இரு கண்ணும் மூடலே
தவிச்சேன் உடல் கொதிச்சேன் இந்த வாடைக் காத்துலே
அந்த இந்திர லோகமே இங்கு வந்தது போலவே
இந்த கண்ணுல தோணுது மனம் கங்கையில் ஆடுது
அந்த இந்திர லோகமே இங்கு வந்தது போலவே
kAlaipozhudhu vidinthadhu (rAjarAjeswari)
பாடல் : காலைப்பொழுது விடிந்தது
படம் : ராஜராஜேஸ்வரி
குரல் : எஸ்.ஜானகி
காலைப்பொழுது விடிந்தது என் நெஞ்சத்தைப்போலே
சோலை மலரும் மலர்ந்தது என் கண்களைப்போலே
இது வசந்தகாலமோ என் இளமைக்கோலமோ
( காலைப்பொழுது )
இளைய தென்றல் மென்காற்று எனக்கு சொல்லும் நல்வாழ்த்து
அருவி கூட தாளம் போட்டு அசைந்து செல்லாதோ
முகத்தில் செந்தூரம் மனதில் சந்தோஷம்
சகல சௌபாக்கியம் நிலைக்கும் எந்நாளும்
( காலைப்பொழுது )
மதுரை அன்னை மீனாட்சி மனது வைக்கும் நாளாச்சி
அமிர்த யோகம் நாளை என்று எழுதி வச்சாச்சி
விழியில் மையோடு வளையல் கையோடு
ஒருவன் நெஞ்சோடு உறவு கொண்டாடு
( காலைப்பொழுது )
நினைத்ததெல்லாம் நன்றாகும் நிறைந்த இன்பம் உண்டாகும்
மனது போல வாழ்க்கை என்று உலகம் சொல்லாதோ
இனிய சங்கீதம் இதயப் பண்பாடு
தினமும் நன்னாளே எதிரில் கண்டேனே
( காலைப்பொழுது )
inimEl naaLum ( iravu pookkaL)
பாடல் : இனிமேல் நாளும்
படம் : இரவுப்பூக்கள்
இசை : இளையராஜா
குரல் : எஸ்.ஜானகி
இனிமேல் நாளும் இளங்காலைதான்
எனையும் கூடும் மணமாலைதான்
என்றும் வசந்தம். என் காதல் சொந்தம்
கை கூடும்...........
( இனிமேல் )
பெண்ணென்று வாழாமல் சிலையாய் வாழ்ந்தேன்
கண்காண முடியாமல் பிறையாய்த் தேய்ந்தேன்
நீ வந்த நேரம்.. நீங்காத பாரம்
சருகாய்க் காய்ந்து மெழுகாய்த் தேய்ந்து
போகும் என் பாவம் இந்நேரம்....
( இனிமேல் )
என் பாட்டின் ஆதாரம் உந்தன் ராகம்
என் வாழ்வின் அலங்காரம் உந்தன் தாளம்
இசையாக நாளும் இணைகின்ற கோலம்
வளர்பிறையாக வளரும் காலம்
கீதம்.. சங்கீதம்.. சந்தோஷம்....
( இனிமேல் )
dhooraththil naan kaNda(nizhalgaL)
பாடல்: தூரத்தில் நான் கண்ட
திரைப்படம்: நிழல்கள்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி
தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்
தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்
சுகம் நூறாகும் காவியமே
ஒரு சோகத்தின் ஆரம்பமே
இது உன்னை எண்ணி பாடும் ராகம்
தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்
வேங்குழல் நாதமும் கீதம்
ஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ
வேங்குழல் நாதமும் கீதம் ம்ம்ம்
மையலின் ஏக்கமும் தாபமும்
மாயன் உனது லீலை இதுவே
அய்யன் உன் தஞ்சம் நெஞ்சமே
தினம் அழைத்தேன் பிரபு உனையே
ஆடும் காற்றிலே புது ராகம் தோன்றுமா
தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்
காதல் எனும் கீதம் பாடி
உருகும் ஒரு பேதையான மீரா
மீரா...மீரா...மீரா...மீரா
வேளை வரும் போது வந்து
காக்கும் கரம் காக்கும் என்று
வீணை மீட்டும் தேவி உள்ளமே
தீராத ஆசையோடு வாடாத பூக்களோடு
காலை மாலை பூஜை செய்தும் கேட்கவில்லையா
கனவு போல வாழ்வில் எந்தன்
தான னான தான னான
கவலை யாவும் மாற வேண்டும்
தான னான தான னான
கனவு போல வாழ்வில் எந்தன்
கவலை யாவும் மாற வேண்டும்
இரக்கமும் கருணையும் உனக்கில்லையோ
நாளும் எனை ஆளும் துணை நீயே என வாழ்ந்தேன்
மறவேன் மறவேன் மறவேன்
உன் நினைவுகள் என்னிடம் தினம்
உறவின் பெருமை மறவேன்
வரும் விதி வரும்
அதில் உறவுகள் பிரிவதும் ஒரு சுகம்
வானமும் மேகமும் போலவே
வானமும் மேகமும் போலவே
நீந்திய காலங்கள் ஆயிரம்
மேகம் மறைந்த வானில் தனிமை
இன்று நான் கண்டதும் உண்மையே
தினம் அழைத்தேன் பிரபு உனையே
ஆடும் காற்றிலே புது ராகம் தோன்றுமா
தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம் ம்ம்ம்