-
நடிகர் திலகம் புகழ் ஓங்குக.
டியர் ராகவேந்திரன் சார்,
நெஞ்சம் கனக்கும் இந்நாளில் பேச நா எழவில்லை. உணர்ச்சிப் பிழம்பின் சங்கமமாய் மனதில் ஏதோ இனம் புரியாத சோகம். நம்மை வாழ வைக்கும் நம் அன்புத் தெய்வம் நம்மை எங்கிருந்தாலும் ஆசிர்வதித்து வாழ்த்திக் கொண்டிருக்கும் என்பது மட்டும் திண்ணம், நிஜம், உறுதி. Images க்கான இந்தத் திரியில் நடிகர் திலகத்தின் நினைவு நாளையொட்டி அவருடைய நிழற்படங்களை சுதந்திரமாக பதிவிட முடிவதில் எனக்கு மெத்த மகிழ்ச்சி. அதற்கு முழு உரிமையையும், சுதந்திரத்தையையும் இத்திரியைத் தொடங்கி எங்களுக்களித்ததற்கு தங்களுக்கு தலையாய நன்றிகள். மாடரேட்டர்களுக்கும் எனது இதயபூர்வமான நன்றிகள். உண்மையான உழைப்பிற்கு என்றுமே மதிப்பும் மரியாதையும் உண்டு என்று ஆணித்தரமாக நிரூபித்தவர் நடிகர் திலகம். என்றும் அவர் வழியிலே செல்வதுதான் நமக்குப் பெருமை. தாங்களும் என்னுடன் சேர்ந்து இத்திரியில் நடிகர் திலகத்திற்கு அஞ்சலி செலுத்துவது மனதிற்கு மிகுந்த நிறைவைத் தருகிறது.
என்னால் நடிகர் திலகம் திரியில் வெறும் நிழற்படங்களைத் தானே சார் தர முடிந்தது? வேறு எதுவுமே நான் செய்யவில்லையே!
நடிகர் திலகத்தின் கிடைக்காத அரிய பொக்கிஷங்களான அபூர்வ திரைப்படங்களின் வீடியோக் காட்சிகளை நான் தந்ததில்லையே!
நடிகர் திலகத்தின் காவியங்கள் வெளியாகும் தினத்தன்று ரசிகர்கள் கொண்ட்டாடும் அளப்பரைகளை நான் படம் பிடித்து போட்டதில்லையே!
அளப்பறை நிகழ்வுகளை வீடியோ தொகுப்பாக வெளியிட்டதில்லையே!
நடிகர் திலகத்தைப் பற்றி எந்த ஒரு தகவல் தொலைக் காட்சி நிகழ்சிகளில் ஒளிபரப்பினாலும் அவற்றை பதிவு செய்து உடனேயே நான் நடிகர் திலகம் திரியில் வழங்கியதில்லையே!
சமீபத்திய பத்திரிகைகள் பலவற்றில் வந்த நடிகர் திலகம் தொடர்பான செய்திகளை நான் சுட சுட திரியில் பதிந்ததில்லையே!
நடிகர் திலகத்தின் படங்களை ஆய்வு செய்து கட்டுரைகள் அளித்ததில்லையே!
அவர் சண்டைக்காட்சிகளில் சோபிப்பதில்லை என்பவர்களை ஓட ஓட விரட்ட வேண்டும் என்பதற்காக நடிகர் திலகத்தின் சண்டைக்காட்சிகள் தொடர்ஒன்று கண்டிப்பாக வேண்டும் என்று தொடங்க வில்லையே!
நடிகர் திலகம் தனது படங்களில் வாசித்த அனைத்து இசைக்கருவிகளுடனான ஸ்டில்களை பல்வேறு சிரமங்களுக்கிடையே நான் அளித்ததில்லையே!
குறிப்பாக அதிகம் யாரும் பார்த்திராத, யாருக்குமே இதுவரை கிடைக்காத சில அபூர்வ படங்களின் உதாரணமாக தர்த்தி, ஸ்கூல் மாஸ்டர், பக்த ராமதாஸ், குழந்தைகள் கண்ட குடியரசு, இளையதலைமுறை, தச்சோளி அம்பு போன்ற படங்களைப் பற்றி எந்த பதிவும் அளித்ததில்லையே!
கர்ணனின் மெகா வெற்றிக்கு பத்திரிகை ஆவணங்கள், தொலைக்காட்சி ஆய்வுகள், விமர்சனங்கள் எதையுமே நான் என் பங்காக வழங்க வில்லையே!
திரி திரி என்று திரிகாலமும் திரியைப் பற்றியே நினைத்ததில்லையே!
ஒன்றுமே செய்யாதவருக்கு எப்படி அங்கீகாரம் கிடைக்கும்.
வெறுமனே ஸ்டில் மட்டும் தானே போட்டுள்ளேன். அது எல்லோருக்கும் ஈசியாகக் கிடைக்கக் கூடியதுதானே! என்ன ஒரு dvd யை எடுத்து ஸ்டில் capture பண்ணிப் போடுவது ஒரு பெரிய விஷயமா? வேறு எதுவுமே செய்யாதவனுக்கு நடிகர் திலகம் திரியில் வேலை இல்லையே! அதனால் தான் நடிகர் திலகம் நினைவு நாளன்று தாங்கள் ஆரம்பித்துள்ள இத்திரியில் அதுவும் images-க்கான சிறப்புத் திரியில் பரிபூரண மன திருப்தியுடன் அஞ்சலி ஸ்டில்களை அளித்துள்ளேன். அந்த ஒரு சுதந்திரமே எனக்குப் போதும். இதை யாரேனும் படிக்க நேர்ந்தால் ஏதோ புலம்பல் என்று கூட நினைக்கலாம். நிச்சயமாக இல்லை. மனதில் ஏற்பட்ட வலி வார்த்தைகளாக வந்து விட்டது. யார் மீதும் எனக்கு வருத்தம் இல்லை. என் மீது தான் எனக்கே வருத்தம். ஒழுங்கான, எல்லோரும் விரும்பக்கூடிய வகையிலே என்னால் பதிவுகளை நடிகர் திலகம் திரியில் அளிக்க முடியவில்லையே என்று.
சாரி சார்,
ஒரு சொந்த சகோதரரிடம் எடுத்துக் கொள்வது போன்ற உரிமையை தங்களிடம் எடுத்துக் கொண்டு விட்டேன். அதில் பெருமையும் அடைகிறேன். மதியாதார் தலைவாசல் மிதியாதே என்பதை பின்பற்றி நடிகர் சங்க விவகாரத்தில் நடிகர் திலகம் தன் இறுதி மூச்சு உள்ளவரை உறுதியாக நின்றார். என்றும் அந்த தெய்வத்தின் வழியில் நடப்பவன் நான்.
நன்றிகள் சார்.
-
டியர் ராகவேந்திரன் சார்,
நடிகர் திலகத்தின் நினைவு தினத்தில் அவருடைய காவியங்களின் நெடுந்தகடுகளின் முகப்புகள் மூலமாக அப்பெருமகனாருக்கு தாங்கள் அஞ்சலி செலுத்தியிருப்பது புதுமை. சிறப்பிலும் சிறப்பு. பாராட்டுக்கள்.
-
டியர் வாசுதேவன் சார்,
தங்களுடைய உழைப்பு என்றும் வீண் போகாது. பேரறிஞர் அண்ணா நடிகர் திலகத்தைப் பற்றிக் கூறியது போல் தாங்கள் சுடர் விடும் வைரம் எங்கிருந்தாலும் ஒளி வீசித்தான் தீரும். அதில் ஐயமில்லை. தங்களுடைய வலியை நடிகர் திலகம் நிச்சயம் போக்குவார், கவலை வேண்டாம். தாங்களும் பம்மலாரும் நடிகர் திலகத்தின் இரு கண்கள், அதில் ஒன்றைத் தனியே பிரித்தால் அந்த முகம் தான் பார்வையிழக்கும். அதை நடிகர் திலகமே அனுமதிக்க மாட்டார். மற்றொரு கண்ணும் அதை அனுமதிக்காது, அதுவும் தன்னுடைய வீரியத்தை இழந்து விடும். எனவே தாங்கள் இருவருமே நடிகர் திலகத்தின் சாதனைகளை எடுத்துரைக்க வந்த அவரின் தூதர்கள் என்பது கண்கூடு.
இந்நாளில் அவருடைய பரிபூரண நல்லாசிகள் உங்கள் இருவருக்குமே என்றும் உண்டு. அதில் ஐயமில்லை.
அன்புடன்
-
-
-
-
-
டியர் ராகவேந்திரன் சார்,
தங்கள் அன்பிற்கும், ஆசீர்வாதங்களுக்கும் நன்றி.
ஏக அமர்க்களமான படங்களின் டிவிடி கவர்களைப் பதித்து பரவசப்படுத்தி விட்டீர்கள். நிஜமாகவே மிரட்சியாக இருக்கிறது. சண்டிராணி, பாட்டாளியின் வெற்றி, கன்னியின் சபதம், தலை கொடுத்தான் தம்பி, மோகன சுந்தரம், லக்ஷ்மி விஜயம், போன மச்சான் திரும்பி வந்தான் (இப்போதுதான் கேள்விப்படுகிறேன்) எல்லாவற்றையும் பார்க்க ஆவல் மேலிடுகிறது. மிக மிக அபூர்வமான பதிவு. பாராட்டுக்கள்.
-
-
அன்புள்ள வாசுதேவன் சார்,
நடிகர்திலகத்தின் நினைவுநாளையொட்டிய தங்களின் அஞ்சலிப்பதிவுகளில் நானும் என்னை உட்படுத்திக்கொள்கிறேன். அவரது புகழ் பரப்பும் செயலை எந்த திரியிலும் செய்வோம் என்று காட்டும் வண்ணம் தங்கள் பதிவுகள் அமைந்துள்ளன.
நமது ராஜா, பல்வேறு சிம்மாசனங்களில் வீற்றிருக்கும் அழகே அழகு. அந்தக் கம்பீரம் யாருக்கு வரும். அவற்றை அழகாக காலண்டரின் தேதி உள்பட) தொகுத்தளித்த தங்களுக்கு எத்தகைய பாராட்டும் த்கும்.
ரவிச்சந்திரன் நடித்த 'நான்' மற்றும் 'அதே கண்கள்' நிழற்பட வரிசை சூப்பர். இருந்தபோதிலும் ஒரு சிறிய யோசனை. ஜெய்ஷங்க்ர்,ரவிச்சந்திரன் மற்றும் ஜெயலலிதா போன்றவர்களது படங்களின் புகைப்படங்களை அவர்களுக்கென்று இருக்கும் திரிகளில் நேரடியாகப்பதித்தால் (முன்பு நீங்கள் 'காதலிக்க நேரமில்லை' நிழற்படங்களை பதித்தது போல) இன்னும் சிறப்பாக இருக்கும். அவர்களின் திரியும் வளர்ந்தது போல இருக்கும் என்பது என் தாழ்மையான எண்ணம். இது ஜஸ்ட் ஒரு ஐடியா மட்டுமே.
தங்களின் அனைத்துப்பதிவுகளுக்கும் என் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.