ravichandrann sir
kovai - nagara thirai arangugal makkal thilagam MGR movies posters & different articles about makkal thilagam -excellent .
with cheers
esvee
Printable View
ravichandrann sir
kovai - nagara thirai arangugal makkal thilagam MGR movies posters & different articles about makkal thilagam -excellent .
with cheers
esvee
COURTESY- SAI- FROM NET
" நான் ஆணையிட்டால்..."
பொதுவாக, டைரக்ஷன், எடிட்டிங்கில் இருந்து லைட்டிங் வரை சினிமாவின் அனைத்துத் தொழில் நுணுக்கங்களிலும் எம்.ஜி.ஆர். கைத்தேர்ந்தவர் என்று சொல்வார்கள். பாடல் வரிகளாகட்டும், டயலாக் டெலிவரியாகட்டும் எப்போதெப்போது குளோசப் வைப்பது; காட்சிப் பின்னணியில் என்னென்ன இருக்க வேண்டுமென்பது கூட அவர் தீர்மானித்து வைப்பாராம்.
தனது இலக்கு அதாவது Target Audience: கடுமையாக உழைத்து விட்டு ' போதும் போதாமலும்' சம்பளம் வாங்கி லோல்படும் தொழிலாளர்களும், குமாஸ்தாக்களும்; விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள், கைவண்டி, ரிக்ஷா தொழிலாளர்களும் தான் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி புரிந்து வைத்திருந்தார் எம்.ஜி.ஆர். அவர்களின் ஆழ்மன ஏக்கங்களை, நிறைவேறவே வாய்ப்பில்லாத ஆசைகளை பூர்த்தி செய்யும் பிரதிநிதியாக திரையில் தோன்றினார். அவர்களின் ரசனை, விருப்பத்தன்மைக்கேற்ற கதை, காட்சியமைப்புகளையும், நடை உடை பாவனைகளையும் கொண்டே படங்களில் நடித்தார். கட்சி பிரச்சாரத்தையும் அதே பாணியில் மேற்கொண்டார்.
இதற்காக எழுந்த கிண்டல், கேலி விமர்சனங்களை அவர் உதாசீனம் செய்தார். ஏற்கனவே குறிப்பிட்டபடி, தான் வகுத்து வைத்திருந்த உத்திகளின்படியே திமுகவின் உருவமாக, குரலாக திரையில் வலம் வந்தார்.
கறுப்பு சிவப்பு என இரு வர்ணம் கொண்ட பர்ஸை வைத்துக் கொண்டு அடிக்கடி வெளியே எடுத்துக் காண்பிப்பார். அதே போல் அதே இரு வர்ண பெல்ட். கறுப்பு பேன்ட், சிவப்பு சட்டை (இது இடம் மாறியும் வருவதுண்டு). காதலியுடன் டூயட் பாடும் காட்சிப் பின்னணியில் கூட 'உதயசூரியன் ' சிம்பள். அவரை உதயசூரியனாக காதலியின் வர்ணிப்பு.
----------
' பரிசு ' (1963) படத்தில் படத்தில் ஒரு பாடல். " கூந்தல் கறுப்பு; குங்குமம் சிவப்பு...'' எனத் தொடங்கும். இது 'அரிய' கண்டுபிடிப்பு என அவருக்கு தெரியாமலிருக்குமா! கேலியை பற்றி கவலைப்படவில்லை. பாடலை முணுமுணுக்கும் பாமரன் மனதில் கட்சிக் கொடியின் இரு வர்ணத்தை ஆழமாக இறக்க வேண்டுமென்பதே புரட்சி நடிகரின் ஒரே நோக்கமாக இருந்திருக்க வேண்டும்.
கறுப்பு சிவப்புக்கு இன்னொரு உதாரணம் :
" கறுப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய் ;
கருதாமல் எல்லாலோரும் ஒற்றுமையாய்... " (படம் : விவசாயி)
------------
1961ல் தான் கதாநாயகனாக நடித்து அண்ணா கதை வசனத்தில் உருவான ' நல்லவன் வாழ்வான் ' படத்தில் வரும் "சிரிக்கின்றாள் அவள் சிரிக்கின்றாள்.." என்ற காதல் பாடலிலேயே,
" உதயசூரியன் உதிக்கும் போது
உள்ளத் தாமரை மலராதோ;
எதையும் தாங்கும் இதயமிருந்தால்
இருண்ட பொழுதும் புலராதோ "
- என்று கட்சி சின்னமான உதயசூரியனையும் , கட்சித் தலைவர் அண்ணாவின் பிரபலமான ' எதையும் தாங்கும் இதயம் ' வாசகத்தையும் குறிப்பிட வைத்தார்
----------------
" அதிசயம் இவனது அறிவுமயம்
....................................
ஆட்சியிலோ பெரும் புரட்சி படைத்தான்;
............................... - தொழும்
பகலவனை சின்னமாக கொண்டவனாம் "
- இது விக்ரமாதித்தன் (1962) படத்தில் வரும் பாட்டு. (பகலவன் = உதயசூரியன்)
*******
இதற்கிடையில், மக்கள் மத்தியில் அதுவும் தனது இலக்கான வர்க்கத்தினர் மத்தியில் கடவுள் நம்பிக்கை அசைக்க முடியாதபடிக்கு இருப்பதை எம்.ஜி.ஆர். நன்குப் புரிந்தே வைத்திருந்தார். மற்ற தி.இ. நடிகர்கள் போல் உணர்வுப்பூர்வமான அந்த விஷயத்தில் கட்சிக்காக ' கை வைத்து ' மக்களின் அதிருப்தியை சம்பாதித்துக் கொள்ள எம்.ஜி.ஆர். தயாராக இல்லை.
" ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்"
- என பளிச்சென போட்டுடைத்தார்.
----------
" இறைவன் இருக்கின்றான்
கண்ணுக்கு தெரிகின்றதா
காற்றில் தவழுகிறான் -அதுவும்
கண்ணுக்கு தெரிகின்றதா ? " (ஆனந்தஜோதி- 1963),
-----------
" உனக்காக ஒன்று எனக்காக ஒன்று
ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை " (படகோட்டி - 1964)
-----------
" ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நானொரு தொழிலாளி " ( தொழிலாளி- 1964)
-----------
" ஒருவருக்கென்றே உள்ளதையெல்லாம்
இறைவனும் தந்ததில்லை.
....................................
.................................
மனமென்னும் கோவில் திறக்கின்ற நேரம்
அழைக்காமல் அங்கே
தெய்வம் வந்து சேரும் " (சந்திரோதயம்-1966)
Courtesy- thinnai - sai
" கடவுளெனும் முதலாளி
கண்டெடுத்தத் தொழிலாளி
விவசாயி...." (விவசாயி - 1967)
----------
" இறைவன் ஒருவன் இருக்கின்றான் - இந்த
ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான் " (அடிமைப்பெண் - 1969)
-----------
" நீதியும் நியாயமும் எங்கெல்லாம் இருக்கோ அங்கெல்லாம் கடவுள் இருப்பார். முன்னெல்லாம் நீதியும் நேர்மையும் இருந்த ஜனங்க மனசிலே கடவுள் இருந்தார். இப்போ நீதியும் நியாயமும் இல்லாததால ஜனங்க, மனசிலே இருந்து கடவுளை வெளியே எடுத்து சிலையா வெச்சிட்டாங்க போல.."
-இது நம்நாடு படத்தில் எம்ஜிஆர் பேசும் வசனம். அதே படத்தில் அவர் தங்கியிருக்கும் குடிசையில் காந்தி, நேரு, அண்ணா படங்களுடன் முருக பெருமான் படமும் சுவாமி விவேகானந்தர் படமும் கூட தொங்கும்.
-------------
- இவ்வாறு கடவுளின் இருப்பை தனது படங்களில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எம்ஜிஆர் தெரியப்படுத்தியே வந்தார். அதற்கேற்ப, அவர் சார்ந்திருந்த திமுக கட்சியும் 'ஒன்றே குலம்; ஒருவனே தேவன்' எனவும் ' ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் ' என்றெல்லாம் கூறி தனது நாத்திகக் கொள்கையில் சமரசம் செய்துக் கொண்டிருந்ததும் எம்ஜிஆருக்கு சாதகமாக இருந்திருக்கலாம். ஆனால் உன்னிப்பாக பார்த்தால், இந்த விஷயத்திலும் அவர் தனது தனித்துவத்தை பதிவு செய்யவே முயற்சித்திருக்கிறார் என்றே தெரிகிறது.
உதாரணமாக, திராவிட இயக்கத்தார் கடுமையாக விமர்சனம் செய்து வந்த (இப்போதும் தொடர்கிறது) இந்து மதத்தின் நான்கு வேதங்களை (மறைகளை) ஒரு படத்தின் பாடலில் எம்.ஜி.ஆர். துணிந்து வெளிப்படையாகவே உயர்த்திக் காண்பித்திருந்தார். அது ' தர்மம் தலைகாக்கும் ' (1963) படத்தில் இடம் பெற்ற " தர்மம் தலைகாக்கும்; தக்க சமயத்தில் உயிர் காக்கும்" எனத் தொடங்கும் பாடல். அதில்,
" அள்ளிக் கொடுத்து வாழ்பவன் நெஞ்சம்
ஆனந்தப் பூந்தோப்பு - வாழ்வில்
நல்லவரென்றும் கெடுவதில்லை - இது
நான்கு மறைத் தீர்ப்பு "
*******
எதிர்முகாமுக்குச் சென்றிருந்தாலும் கவியரசுக் கண்ணதாசனிடம் இருந்து தனக்குத் தோதான பாடல்களை எம்.ஜி.ஆர். பெற்றுக் கொண்டு வந்தார். அதற்கு ஊடே, எம்ஜிஆர் கவியரசுக்குப் போட்டியாக அப்போது புதுக் கவிஞராக இருந்த வாலியை உருவாக்கவும் தவறவில்லை. (பின்னர் ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆர்- வாலி , சிவாஜிகணேசன் - கண்ணதாசன் என்று ஜோடி சேர்ந்தது வேறு விஷயம்).
1962 பொது தேர்தலில் கிடைத்த வெற்றி, அடுத்து 67 தேர்தலில் ஆட்சிக் கட்டிலை நோக்கி பயணிக்கும் உத்வேகத்தையும் நம்பிக்கையையும் திமுகவுக்கு ஏற்படுத்தியிருக்க வேண்டும். பிரச்சாரங்களிலேயே அது தொனித்தது.
' பணக்காரக் குடும்பம் ' படத்தில் " ஒன்று எங்கள் ஜாதியே ; ஒன்று எங்கள் நீதியே..." என்று திமுகவின் சமூக நீதிக் கோட்பாடாக சொன்ன கையோடு,
" எங்களாட்சி என்றும் வாழும் இந்த மண்ணிலே
.......................................
.......................................
இல்லை என்பதில்லை நாங்கள் வாழும் நாட்டிலே"
- என அச்சாரமாக 1964லிலேயே திமுகவுக்கு ஓட்டு சேகரித்தார் எம்.ஜி.ஆர்.
------------
" மக்களொரு தவறு செய்தால் மாமன்னன் தீர்ப்பளிப்பான்
மன்னவனே தவறு செய்தால் மாநிலத்தில் யார் பொறுப்பார்? "
- இது 1963ல் வெளியான ' காஞ்சித் தலைவன் ' படத்தில் வரும் பாடல் வரிகள். அப்போதைய காங்கிரஸ் அரசை வீட்டுக்கு அனுப்ப மக்களை உசுப்பும் நுணுக்கம் இது . (படத்தின் தலைப்பை பாருங்கள். அறிஞர் அண்ணாவின் சொந்த ஊர் காஞ்சிபுரம் என்பதை நினைவில் கொள்க)
-------------
' தெய்வத்தாய் ' (1964) படத்தில் " மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்..." என பாடி 'தி.மு.க.' வை பூடகமாக குறிப்பிட்டு கழக கண்மணிகளின் கைத்தட்டலை பெற்றார்.
" வாழைமலர் போல -பூமி முகம் பார்க்கும்
கோழை குணம் மாற்றுத் தோழா..!
நாளை உயிர் போகும் - இன்று போனாலும்
கொள்கை நிறைவேற்றுத் தோழா..! "
- என தொண்டகளை தயார்படுத்தினார்.
------------
திமுகவினர் கொண்டாடி வந்த பாரதிதாசனின் "சங்கே முழங்கு.." என்ற பாடலை கலங்கரை விளக்கத்தில் (1965) முழங்க வைத்தார். நான் ஆணையிட்டால் (1966)படத்தில் " தாய் மேல் ஆணை; தமிழ் மேல் ஆணை..." செய்தார்.
" இருட்டினில் வாழும் இதயங்களே- கொஞ்சம்
வெளிச்சத்துக்கு வாருங்கள்
நல்லவர் உலகம் எப்படியிருக்கும்
என்பதைப் பாருங்கள் "
- என அழைப்பும் விடுத்தார்.
அதே படத்தில்,
" உதயசூரியன் உன் வரவு -
உலகம் யாவையும் உன் உறவு.
.............................
.............................
ஆலமரம் போல நீ வாழ - அதில்
ஆயிரம் பறவைகள் இளைப்பாற
காலமகள் உன்னை தாலாட்ட - அந்த
கருணையை நாங்கள் பாராட்ட.. "
- என்று தன்னையும் முன்னிறுத்திக் கொண்டார்.
--------------
அன்பேவா (1966) படத்தில் " உதயசூரியனின் பார்வையிலே; உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே...." என்பார். ( ஆனால் சென்சார் காரணமாக அது 'புதிய சூரியன்' என்றே பாட்டு ரிக்கார்டில் வரும்) கூடவே, " இவர் வரவேண்டும்; புகழ் பெற வேண்டும் என்று ஆசைத் துடிக்கிறது.." என்ற வரிகளும் - எம்.ஜி.ஆரின். குளோசப் ஷாட்டுடன் வரும்.
நம்நாடு படத்தில் குளோப்ஷாட்டில் ஒரு டயலாக்:
" எனது முதலே மக்களின் அன்பும், எனது நாணயமும் தான். அதுக்கு என்னைக்குமே மோசம் வராது. "
----------
' திமுக என்கிற பதாகையை உயர்த்திப் பிடித்துக் கொண்டு அதன் மூலம் தான் முடிசூட்டிக் கொள்ளும் ரகசியத் திட்டம் வைத்திருக்கிறார்' ; ' வெகுஜனங்களிடம் திமுகவுக்குள்ள செல்வாக்கை அட்டை போல் உறிஞ்சியெடுத்து அதில் தன்னை வளர்த்துக் கொள்ள பார்க்கிறார்' என்றெல்லாம் எம்.ஜிஆருக்கு எதிராக திமுகவுக்கு உள்ளேயும் வெளியேயும் ஒரு சாரார் மத்தியில் நீண்டகாலமாகவே விமர்சனம் தொடர்ந்து வந்தது. இந்நிலையில் , அவர்களின் வாயில் கொஞ்சம் அவலை அள்ளி போடும் வகையில் வந்தான் ' எங்க வீட்டுப் பிள்ளை ' 1965ல்.
அப்படத்தில், " கண்களும் காவடி சிந்தாகட்டும்.." எனத் தொடங்கும் பாடலில்,
" என்ன செய்வோமென்ற நிலை மாறட்டும்- உன்னாலே
மக்கள் எண்ணம் நிறைவேறட்டும்"
-என்ற வரிகள் வரும்போது எம்.ஜி.ஆர் ' டைட் குளோசப்'பில் தெரிவார். அதோடு நின்றதா! கூடவே " நாடெல்லாம் உன்னைக் கண்டு புகழ் பாடட்டும்" என்ற வரிகள் வேறு.
இதற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல், " நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்.." என அவரே உரக்கச் சொல்வார். அவரே தொடர்வார்:
" ஒரு தவறு செய்தால் - அதை தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்.
.......................................
....................................
எதிர்காலம் வரும் ; என் கடமை வரும்
இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்
................................
இங்கு ஊமைகள் ஏங்கவும் ; உண்மைகள் தூங்கவும்
நானா பார்த்திருப்பேன்...."
இதற்கு முன் எந்த ஒரு திராவிட இயக்க நடிகரும் நினைத்துக் கூடப் பார்க்காத துணிச்சலான பிரகடனம் இது.
-------------
இவ்வாறான விமர்சனங்கள், திமுக - எம்.ஜி.ஆர்., இடையேயான பிடிமானத்தை எவ்வகையிலும் பாதித்திடவில்லை. வரலாற்றில் இடம் பெறப் போகும் முக்கியமான கட்டத்திற்குள் இருவருமே நுழைந்தனர்.
1982- NEWDELHI - ASIAN GAMES
http://i50.tinypic.com/4vqz5z.jpg
எம்.ஜி.ஆர். சொந்தமாகத் தயாரித்த 'அடிமைப்பெண்' உள்பட பல சிறந்த படங்களை கே.சங்கர் டைரக்ட் செய்தார். 1963-ம் ஆண்டு சரவணா பிலிம்ஸ்க்காக 'பணத்தோட்டம்' படத்தை கே.சங்கர் டைரக்ட் செய்தார்.
அதன்பின் 'சந்திரோதயம்' (1966), 'குடியிருந்தகோவில்' (1968), 'அடிமைப்பெண்' (1969), 'பல்லாண்டு வாழ்க' (1975) ஆகிய படங்களை இயக்கினார்.
இதில், 'குடியிருந்தகோவில்' எம்.ஜி.ஆர். இரட்டை வேடத்தில் நடித்த படம். இந்தப் படத்தில் இடம் பெற்ற 'ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம்' பாடலும், பாடல் காட்சியும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.
அந்தக் காட்சியில், எம்.ஜி.ஆர். மிகச்சிறப்பாக நடனம் ஆடியிருந்தார். ஆனால், முதலில் அந்த பாடலுக்கு நடனம் ஆட எம்.ஜி.ஆர். மறுத்து விட்டார் என்பது, பலருக்கும் தெரிந்திராத உண்மை.
இதுபற்றி சங்கர் கூறியதாவது:-
'ஆடலுடன் பாடலைக் கேட்டு.... பாடலுக்கு விஜயலட்சுமியுடன் சேர்ந்து நடனமாட வேண்டும்' என்று எம்.ஜி.ஆரிடம் கூறினேன். 'விஜயலட்சுமி நீண்டகாலம் நன்றாக நடனம் ஆடி தேர்ச்சி பெற்றவர். அவருடன் நான் எப்படி நடனம் ஆடமுடியும்?' என்று எம்.ஜி.ஆர். கோபமாக கூறிவிட்டுச் சென்றுவிட்டார். நான் அவருக்காகக் காத்திருந்தேன். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்தார். நடனம் ஆட சம்மதித்தார்.
நடனக் காட்சியைப் படமாக்கத் தொடங்கினோம். எம்.ஜி.ஆருக்கு எங்கிருந்துதான் அப்படியொரு வேகம் வந்ததோ தெரியவில்லை. மிகப்பிரமாதமாக ஆடினார். பாடல் காட்சியை எடுத்து முடித்தவுடன், 'இதை யாருக்கும் போட்டுக் காட்டக்கூடாது. நான்தான் முதலில் பார்ப்பேன்' என்று கூறினார்.
எடிட்டிங் முடிந்து, பாடல் காட்சியை அவரிடம் கொடுத்தேன். எம்.ஜி.ஆர், சில தயாரிப்பாளர்களையும் அழைத்து வந்து, பாடல் காட்சியை திரையிட்டுப் பார்த்தார். அக்காட்சியைப் பார்த்த பட அதிபர்கள் கை தட்டிப் பாராட்டினார்கள். எம்.ஜி.ஆர். என்னை அழைத்து, 'என்னைக் கொடுமைப்படுத்தி ஆட வைத்தது இவர்தான்' என்று மற்றவர்களிடம் அறிமுகப்படுத்தினார். நான் மற்றொரு செய்தியையும் சொல்ல வேண்டும். எம்.ஜி.ஆரிடம் '2-வது டேக்' கேட்ட இயக்குனர்கள் கிடையாது.
'பணத்தோட்டம்'தான், எம்.ஜி.ஆர். நடிக்க நான் டைரக்ட் செய்த முதல் படம். முதல் நாள் படப்பிடிப்பில் எம்.ஜி.ஆர். வசனம் பேசும் ஒரு காட்சியை 7 'டேக்' கேட்டு எடுத்தேன்.
7-வது டேக் முடிந்த பிறகு, எம்.ஜி.ஆர். எனது தோளில் கை போட்டபடி 'நீங்கள் எங்கிருந்தோ வந்து, எதையோ என்னிடம் எதிர்பார்க்கிறீர்கள். ராமச்சந்திரன் என்ன பண்ணுவான் என்பதை கேளுங்கள். நான் கொடுக்கிறேன்' என்றார்.
நான் சிவாஜி படத்தை டைரக்ட் செய்துவிட்டு, அதே நடிப்பை எதிர்பார்த்ததைத்தான், அவர் அப்படி கூறினார்.'
இவ்வாறு சங்கர் கூறினார்.
எம்.ஜி.ஆர். சொந்தமாகத் தயாரித்த படங்கள் மூன்றுதான். அவற்றில் 'நாடோடி மன்னன்', 'உலகம் சுற்றும் வாலிபன்' ஆகிய படங்களை அவரே டைரக்ட் செய்தார். மற்றொரு படமான 'அடிமைப்பெண்'ணை டைரக்ட் செய்யும் வாய்ப்பை கே.சங்கருக்குக் கொடுத்தார்.
இதில் எம்.ஜி.ஆர். கூனனாக வருவார். உடலை வருத்திக் கொண்டு, சிறப்பாக நடித்தார். சிங்கத்துடன் அவர் மோதும் காட்சியும் நன்கு அமைந்தது. பல காட்சிகள் ஜெய்பூர் அரண்மனையிலும், பாலைவனத்திலும் படமாக்கப்பட்டன.
'அடிமைப்பெண்' அனுபவங்கள் பற்றி சங்கர் கூறியதாவது:-
'பாலைவனக்காட்சிகளை எடுக்க, 1,000 ஒட்டகங்களைப் பயன்படுத்தினோம். 'எல்லா ஒட்டகங்களும் படத்தில் தெரியுமா?' என்று எம்.ஜி.ஆர். கேட்டார். 'தெரியுமë' என்றேன்.
ஆயிரம் ஒட்டகங்களையும், வளைந்து வளைந்து போகச் செய்து, படம் பிடித்தோம். அக்காட்சி சிறப்பாக அமைந்தது. எம்.ஜி.ஆர், மிகவும் மகிழ்ந்து பாராட்டினார். அரண்மனையின் சுற்றுசுவரை இடித்து, 'கிரேன்' மூலமாக 'ஆயிரம் நிலவே வா' பாடல் காட்சியைப் படமாக்கினேன்.
எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் நடுவில் நிற்க சுற்றிலும் மேல் சுவரில் பதிக்கப்பட்டு இருந்த வைரங்கள் தெரியும்படி படம் எடுத்தோம். என் மேல் எம்.ஜி.ஆருக்கு மிகுந்த நம்பிக்கை இருந்ததால், அவரது சொந்தப் படத்தை டைரக்ட் செய்யும் வாய்ப்பை அளித்தார்.'
இவ்வாறு சங்கர் கூறினார்.
எம்.ஜி.ஆரை வைத்து 'கலங்கரை விளக்கம்', 'பல்லாண்டு வாழ்க', 'இன்றுபோல் என்றும் வாழ்க' உள்பட பல படங்களை சங்கர் இயக்கியுள்ளார்.
courtesy; malaimalar
எங்கவீட்டுப்பிள்ளை.இதயதெய்வம் எம்.ஜி.ஆர், "அபிநய சரஸ்வதி"பி.சரோஜாதேவி, "நகைச்சுவைத்தென்றல்"நாகேஷ், எம்.என்.நம்பியார், எஸ்.ஏ.அசோகன், ஜெயந்தி, எஸ்.வி.ராமதாஸ், மனோரமா மற்றும் பலர்.
http://i48.tinypic.com/jgqo7t.jpg
இசையமைப்பு:-"மெல்லிசை மாமன்னர்கள்"எம்.எஸ்.விஸ்வநாதன் & .ராமமூர்த்தி ஆகியோர்.
நகைச்சுவை வசனம்:-ஏ.எல்.நாராயணன் அவர்கள்.
மூலக்கதை:-நன்னு அவர்கள்.
வசனம்:.கிருஷ்ணசாமி அவர்கள்.
பாடல்கள்:-வாலி
தயாரிப்பு:-ஜி.என்.வேலுமணி அவர்கள்.
திரைக்கதை+இயக்கம்:-டி.பிரகாஷ்ராவ் அவர்கள்.
வெளியீடு நவம்பர் 3, 1964
பாடல்கள்
http://i50.tinypic.com/qsl5xt.png
இதயத்தை வருடும் இன்பகானங்கள்...
1.நான் ஒரு குழந்தை
நீ ஒரு குழந்தை
ஒருவர் மடியிலே ஒருவரடி
நாள் ஒரு மேனி பொழுதொரு வண்ணம்
ஒருவர் மனதிலே ஒருவரடி
2.கல்யாண(ப்) பொண்ணு கண்ணான கண்ணு
கொண்டாடி வரும் வளையல் ! அம்மா --
பூவோடு வருமே ! பொட்டொடு வருமே !
சிங்காரத் தங்க வளையல் !
வங்கி வளையல் ! சங்கு வளையல் !!
முத்து முத்தான வளையலுங்க !!!(கல்யாண)
3.தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்
தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்
4.என்னை எடுத்துத் தன்னைக் கொடுத்து போனவன் போனாண்டி
தன்னைக் கொடுத்து என்னை அடையவந்தாலும் வருவாண்டி.. ஓ..ஓ..ஓ..போனவன் போனாண்டி...(என்னை)
5.அழகு ஒரு ராகம்
ஆசை ஒரு தாளம்
ஆசை ஒரு ராகம்
ஆசை ஒரு தாளம்
6.தரை மேல் பிறக்க வைத்தான் -
எங்களைத்தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரை மேல் இருக்க வைத்தான் -
பெண்களைக்கண்ணீரில் துடிக்க வைத்தான்
தரை மேல் பிறக்க வைத்தான்...
7.கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்...(கொடுத்ததெல்லாம்)
8.பாட்டுக்குப் பாட்டெடுத்து
நான் பாடுவதைக் கேட்டாயோ
துள்ளி வரும் வெள்ளலையே
நீ போய்த் தூது சொல்ல மாட்டாயோ
but esvee, I read in another magazine, the same director K.Shankar told, initially MGR refused to dance with Vijayalakshmi, but he took training for nearly one month and then he acted (danced) for the same song, and not as 'sirithu neram kazhiththu' as he told here.
cant able to conclude which is the correct one.
Dear adiram sir
intially makkal thilagam refused -fact.
sirithu neram kazhiththu' - means after discussion with dance master he agreed to dance [after taking a month dance practice with actress vijayalakshmi ]. u are correct.
தரை மேல் பிறக்க வைத்தான் -
எங்களைத்தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரை மேல் இருக்க வைத்தான் -
பெண்களைக்கண்ணீரில் துடிக்க வைத்தான்
தரை மேல் பிறக்க வைத்தான்
கட்டிய மனைவி தொட்டில் பிள்ளை
உறவைக் கொடுத்தவர் அங்கே
அலை கடல் மேலே அலையாய் அலைந்து
உயிரைக் கொடுப்பவர் இங்கே
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல்தான் எங்கள் வீடு (2)
முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்
இதுதான் எங்கள் வாழ்க்கை
இதுதான் எங்கள் வாழ்க்கை(தரை மேல்)
கடல் நீர் நடுவே பயணம் போனால்
குடினீர் தருபவர் யாரோ
தனியாய் வந்தோர் துணிவைத் தவிர
துணையாய் வருபவர் யாரோ
ஒருநாள் போவார் ஒருநாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம் (2)
அரைஜாண் வயிற்றை வளர்ப்பவர் உயிரை
ஊரார் நினைப்பது சுலபம்
ஊரார் நினைப்பது சுலபம்
courtesy; manidan
http://i47.tinypic.com/s4x7ol.jpg
இந்தப்பாடல் படகோட்டி படத்துக்காக திரு . வாலி அவர்கள் எழுதியது . திரு .TMS அவர்களால் அற்புதகமாக பாடப்பட்டது . MGR உணர்வுபூர்வமாக நடித்து இருந்தார் .மீனவர்களின் துன்பங்களையும் , துயரங்களையும் வெளிப்படுத்தும் வகையில் இந்தப்பாடல் அமைந்து இருக்கும் . இந்தப்பாடல் வரிகள் இன்றைய சூழலுக்கும் பொருந்துகின்றன . ஆனால் , " ஒருநாள் போவார் ஒருநாள் வருவார் " என்ற வரி இன்றைக்கு பொருந்துமா ? மீன் பிடிக்கச் சென்றவர் எப்படியும் மறுநாள் வருவார் என்ற நம்பிக்கை அன்று இருந்தது , இன்று இல்லை !. சாதாரண மனிதனுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை . ஆனால் , நடப்பதோ மக்கள் ஆட்சி . உங்களுக்கு பாதுகாப்பு வேண்டுமெனில் நீங்கள் பதவியில் இருக்க வேண்டும் . இல்லையென்றால், உங்களை யார் வேண்டுமென்றாலும் , என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் . கேட்க நாதி இல்லை .
படகோட்டி -3-11-1964.
48ஆண்டுகள் நிறைவு
http://i50.tinypic.com/nec35y.png
.
.
ரசிகனின் விமர்சனம்
நாடோடிமன்னன் - 1958-பகுதி வண்ணத்தில் வெளியான பின்னர் மக்கள் திலத்தின் முதல் பிலிம் சென்டர் வண்ண படம் ..
1963- பணத்தோட்டம் வெற்றிக்கு பின் சரவணா பிலிம்ஸ் தயாரித்த முதல் வண்ணப்படம் .
மீனவர் சமுதாயத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் .
இரண்டு மீனவ குப்பங்களின் இடையே நடைபெறும் போராட்டம் -அடிப்படை கதை .மாணிக்கம் என்ற பாத்திரத்தில்
மக்கள் திலகம் நாயகனாக சிறப்பாக நடித்து ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டார் .
தரை மேல் பிறக்க வைத்தான் - முதல் பாடலில் தனது சோகத்தை மிக மிக அற்புதமாக காட்டியிருப்பார் .
நான் ஒரு குழந்தை ... நீ ஒரு ...பாடலில் முதுமை தோற்றத்தில் தோன்றி பின்னர் இளமை தோற்றத்தில் மாறி அமர்க்கள படுத்தியிருப்பார் .
பாட்டுக்கு பாட்டெடுத்து பாடலில் ஒரு உண்மையான காதலின் ஏக்கத்தை மிக பிரமாதமாக நடித்திருப்பார் .
தொட்டால் பூ மலரும் -பொன் விழா ஆண்டு நெருங்கினாலும் மக்கள் திலகத்தின் முதன்மையான காதல் பாடல் அருமையான பாடல் வரிகள் .. இனிமையான இன்னிசை .எழில்பொங்கும் கடலோர காட்சிகள் .மக்கள் திலகம் - சரோஜா தேவி காதல் ஜோடி NO 1. FOREVER .
தத்துவ பாடல் - கொடுத்ததெல்லாம் கொடுத்தான் ....
அழமான கருத்துள்ள பாடல் .மக்கள் திலகத்தின் நடிப்பில் பலவித முக பாவங்கள் காட்டி நடித்திருப்பார் .
கல்யாண பொண்ணு ... பாடலில் மாறு வேடத்தில் ஜாலியாக பாடி தூள் கிளப்பி இருப்பார் .
என்னை எடுத்து தன்னை கொடுத்து ....பாடலில் சரோஜாதேவி அருமையாக உணர்சிகளை காட்டி இருப்பார் .
அழகு ஒரு ராகம் பாடலில் சரோஜா தேவி - ஜெயந்தி - நம்பியார் .. மூவரும் சிறப்பாக நடித்திருப்பார்கள் .
படகு போட்டி - அருமையான காட்சி .... இனிமையான இன்னிசை .. அழகான நடன காட்சிகள் .
மக்கள் திலகத்தின் அருமையான சண்டை காட்சிகள் .
மக்கள் திலகம்
படம் முழுவதும் காலணி இல்லாமல் நடித்திருப்பது படத்தின் சிறப்பம்சமாகும் .
மொத்தத்தில் படகோட்டி
நூறு சதம் ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்த காவியம் .
மெல்லிசை மன்னர்களின் - பாடகர் திலகங்களின் கூட்டணியில் மாபெரும் வெற்றி படைப்பு .
மக்கள் திலகத்தின் கிரீடத்தின் ஒரு வைர கல் .-படகோட்டி .
esvee
courtesy - ROOPKUMAR SIR - SRIMGR.COM .
- MADURAYAI MEETTA SUNDARAPANDIYAN .- PAPER ADS
http://i50.tinypic.com/2illizp.jpg
RAGASIYA POLICE 115 - 1968 STILLS
http://i49.tinypic.com/2hqbdvt.png http://i49.tinypic.com/9bm7v6.png http://i48.tinypic.com/34xrnmp.png
டியர் விநோத் சார்,
படகோட்டி படத்தின் 49வது ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு அப்படத்தில் இடம் பெறாத பாடல். நாகேஷுக்காக பதிவு செய்யப் பட்ட டூயட் பாடல்.
பருவ கால ஏட்டினிலே
பாடியவர்கள் ஏ.எல்.ராகவன், எல்.ஆர்.ஈஸ்வரி
இந்தப் பாடலை இணையத்தில் நமக்குத் தந்தவர் யார் தெரியுமா
அன்பு நண்பர் TFMLover அவர்கள் தான்
இனிய நண்பர் திரு .ராகவேந்திரன் சார்
படகோட்டி படத்தில் இடம்பெறாத நாகேஷ் பாடல் -செய்தி முதன் முறையாக கேள்விப்பட்டு ஆச்சரியம் .
புதுமையான தகவல் அளித்த tfmlover அவர்களுக்கும் அந்த தகவலை பதிவு செய்த தங்களுக்கும் நன்றி .
esvee
இனிய நண்பர் திரு .tfmlover சார்
L . விஜயலட்சுமி அவர்களின் பேட்டியினை சரியான நேரத்தில் பதிவிட்ட உங்களுக்கு நன்றி .
மக்கள் திலகமும் விஜயலட்சுமி அவர்களும் போட்டி போட்டு கொண்டு ஆடிய பாடல் காட்சி .ஒரு வரலாற்று காவியம் . என்றுமே மறக்க முடியாது .