நான் 'you tube' ல் அப்லோட் செய்த (Sep 7, 2011) 'ஸ்கூல் மாஸ்டர்' ஹிந்தி படத்தில் 'நடிகர் திலகம்' சம்பந்தப்பட்ட கிளைமாக்ஸ் வீடியோ காட்சி.
https://youtu.be/q8vxKpQy2RM
Printable View
நான் 'you tube' ல் அப்லோட் செய்த (Sep 7, 2011) 'ஸ்கூல் மாஸ்டர்' ஹிந்தி படத்தில் 'நடிகர் திலகம்' சம்பந்தப்பட்ட கிளைமாக்ஸ் வீடியோ காட்சி.
https://youtu.be/q8vxKpQy2RM
வாசு சார்
ஸ்கூல் மாஸ்டரைப் பற்றி இது வரை தெரிந்திராதவர்களுக்கும் ஏற்கெனவே அரைகுறையாகத் தெரிந்திருந்தவர்களுக்கும் தெளிவாகப் புரியும் படி விளக்கி நடிகர் திலகத்தின் மேன்மையை சிறப்புறச் சொல்லி விட்டீர்கள்.
தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
வாசு சார்
ஸ்கூல் மாஸ்டர் பற்றிய தகவல்களுக்கு பாராட்டுக்கள்.
நடிகர்திலகம் சிவாஜி ரசிகர்களின் உணர்வுகளைப் பிரதிபலித்துள்ள துக்ளக் இதழுக்கு நன்றி.
http://i1234.photobucket.com/albums/...psjozarn36.jpg
http://i1234.photobucket.com/albums/...psuqx6jf9n.jpg
Thanks to Thuklaq for bringing out the truth behind the motive of the removal of NT's Statue. Then it is the case they have
to remove all the statues all over TN. We have to wait & see the approach of the govt in this regard.
சவாலே சமாளி தொடர்ச்சி...
ஜெயா துணிகளை நடிகர்திலத்தின் முகத்தில் விட்டெறிய...
சில நிமிடங்களுக்கு முன்புதான்
' நீ நல்லவங்ககிட்டத்தான் நேருக்கு மாறா நடந்துக்கற. பொண்ணுங்க கிட்ட கூட மரியாதையா நடக்கத்தெரியாதா ' ராகவன் நடிகர்திலகத்தை பார்த்து கேட்பார்.
அதற்கு நடிகர்திலகம் 'மரியாதை ரெண்டு பக்கமும் இருக்க வேண்டாமா'
என்று மடிப்பதற்குள்ளாகவே ஜெயா வந்து மூஞ்சியில் துணிகளை வீசுவார்.
நடிகர்திலகம் அமைதியா திரும்பி ராகவனைப் பார்க்க ,
என்னடா இது நம்ம பையன தப்புன்னு கண்டிக்கப்போனா இது அதுக்கு மேல
தப்பா இருக்கேங்கிற மனநிலையில் முகத்தை திருப்பிக்குவார் ராகவன்.
ஒரு பொம்பள இப்படி சொல்லிட்டாளேங்கற ஆத்திரம் ஒரு பக்கம்.,பணக்கார திமிரை ஏத்துக்காத தன்மான குணமும் உசுப்பஅப்பா இருக்கிறத ஒரு நிமிஷம் யோசிக்கிற மனசு பின் அடக்கமாட்டாம கேப்பாரைய்யா ஒரு கேள்வி.
' நீ என் பொண்டாட்டியாஉன் சேலை துவைச்சு போட'ன்னு சொல்வது
சரியான ஆத்திர வெடி.அதைக் கேட்டு ஜெயா அவமானத்தில் ஓவென்று கதறி சிணுங்கஅதையே பாவனையில் ஜெயா போல் நடிகர்திலகமும் செய்து காட்டுவது வேடிக்கை.
உழவர் கூட்டம் அனுபவிப்பதில்லை அறுவடையின் பலனை.ஆனாலும் விவசாய பூமி அவர்களுக்கு தெய்வம் போலே.அதனால்தான் செருப்பணிந்து நடப்பதில்லை வயலில்.பலனை அனுபவிக்கும் பணக்கார வர்க்கமோ அந்த பழக்கத்திற்கு நேர்எதிர். ஏற்கெனவே படித்த திமிறும் பணக்கார திமிறும் சகுந்தலாவுக்கும் அதிகம்.
மாணிக்கமும் நடவுப் பெண்களும் வயலில் வேலை செய்து கொண்டிருக்கும் சமயத்தில் வரப்பில்செருப்பணிந்து நடந்து வரும் சகுந்தலா மாணிக்கத்திடம் ஒதுங்கி நிற்குமாறு கூற மாணிக்கம் மறுக்க வீம்பு கொண்ட சகுந்தலா வயல் சேற்றில் நடந்து காலெல்லாம் சேறாக சென்று சேர்வதோ மாணிக்கத்தின் வீட்டிற்கு.
சகுந்தலாவைப் பார்த்த மாணிக்கத்தின் தங்கையும் அம்மாவும்
குடிக்க மோர் தர, அருவெறுப்புடன் குடிகேகத் தயங்கி அவர்கள் பாரா வண்ணம் மோரை வீட்டிற்கு வெளியில் வீசி விடுகிறாள்.அப்போது அது யாருக்கும் தெரியாது.
மாணிக்கத்தைத் தவிர.மாணிக்கத்திற்கு மட்டும் எப்படி தெரியும்?வீசி எறியப்பட்ட மோர் வந்தடைந்த இடம்
"மாணிக்கத்தின் முகம்".
வெளியில் வரும் சகுந்தலாவிற்கு சிறிது அதிர்ச்சி.இவங்களுக்கெல்லாம் தண்ணீரே தரக்கூடாது என்று கதையின் நாயகனாகிய மாணிக்கம் சொல்ல அதற்கு மாணிக்கத்தின் தாய் 'அப்படியெல்லாம் சொல்லாதப்பா
நான் கொடுத்த மோரை முகம் சுளிக்காம குடிச்சதப்பா'
என்று சொல்ல,
திரும்பி நிற்கும் மாணிக்கமாக நடித்த நடிகர்திலகம் திரும்பி நிற்க ஆச்சர்யத்துடன' என்னடா இது' அம்மாவாக நடித்த காந்திமதி கேட்க "பால் வடியற முகம்,பால் வடியற முகம்னு சொல்லுவியேஇது மோர் வடியற முகம் "ன்னு நடிகர்திலகம் சொல்வது பொருத்தமான டைமிங் காமெடி .
ஒவ்வொரு காட்சியின் முடிவிலும்
முத்தாய்ப்பாக காமெடிசென்ஸ்,சென்டிமென்ட்,
பலமான வசனங்கள் என ஏதாவது ஒன்றைக் கொண்டு காட்சிகளை வடிவமைத்திருப்பதுஇந்தப்படத்தின் சிறப்பு. இந்த மாதிரி திரைக்கதைஅமைந்திருப்பதால் படத்தை எத்தனை தடவை பார்த்தாலும் மேலும் ரசிக்க வைக்கும். காலம் தாண்டியும் நிற்கும்.
பாடல்:
ஆனைக்கொரு காலம் வந்தா
பூனைக்கொரு காலம் வரும்
புரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ
சேனை பரிவாரத்துடன் சீமான் போல்
வாழ்ந்தவனும் எவனுமில்லை
தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ
கோட் சூட் அணிந்து இடுப்பில் இரு கைகளையும் வைத்துக்கொண்டு, சட்டங்கள் தர்மங்கள் ஏதுமில்லை இன்ப சக்கரம் சுற்றுதடா
அதில் நான் சக்கரவர்த்தியடா
என்று பாடி போஸ் தந்தாலும்,
வேட்டி, சாதாரண சட்டை அணிந்து,
சேனை பரிவாரங்களுடன் சீமான் போல் வாழ்ந்தவனும் எவனுமில்லே
என்று பாடி போஸ் தந்தாலும்.
அந்தப் போஸ்கள்தான் காலா காலத்துக்கும்.அதற்கு மாற்றாய் ஆண்டவனால் கூட வேறு எதையும்படைக்க முடியவில்லை என்பதே உண்மை.
தெரிஞ்சுக்கோ (ஆனை)
பானைச் சட்டி கலையத்தையே பார்த்து முகம் சுளிக்கிற
பழிக்கிறே வெறுக்கிறே மொறைக்கிறே
ஆணையிட்டுச் சொல்லுறேன் நான் அதுலே
உங்க பணத் திமிரை அடக்குறேன் ஒடுக்குறேன் அடக்குறேன்
நாளை இந்த உலகையெல்லாம் ஏழை கையில் மாறிவிடும்
தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ (ஆனை)
ஏழைங்கத்தான் பணத்தில் மட்டும் வேறெதிலும் ஏழையில்லே
தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ
கோழைங்கத்தான் கொடுமை செய்ய கூசுகின்ற
கோழைங்கதான் குறிச்சுக்கோ குறிச்சுக்கோ குறிச்சுக்கோ
நாளை இந்த உலகையெல்லாம் ஏழை கையில் மாறிவிடும்
தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ (ஆனை)
குடிசை எல்லாம் மடமடன்னு கூட்டுச் சேர்ந்து
இந்த வரிகளின் போது தான் கீழ்க்கண்ட படங்கள்
எடுத்திருக்க வேண்டும்
http://i1065.photobucket.com/albums/...ps6ufan044.png
Shooting spot still
http://i1065.photobucket.com/albums/...psh5mfame0.jpg
ஒசந்திடும் கோபுரமா கோபுரமா கோபுரமா அந்த
கோபுரத்து சாமியெல்லாம் குடிசைகளை தேடி வரும்
சீக்கிரமா சீக்கிரமா சீக்கிரமா
நாளை இந்த உலகையெல்லாம் ஏழை கையில் மாறிவிடும்
தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ (ஆனை)
தொடரும்
Courtesty:Facebook
http://i1065.photobucket.com/albums/...pstvex7fmv.jpg
Sir,
We are not able to understand certain things here. MGR has been acting since 1947 as hero. Sivaji Ganesan has been acting as hero since 1952.
Both have acted in many films in different characters till 1978 and 1999.MGR has never claimed that he is a better actor than sivaji ganesan nor
challenged against Sivaji Ganesan acting any time as per my knowledge.Then how come competition shall come in a particular year 1971(Rikshawkaran Vs Savale samal both being super hits)
It may be noted that sivaji has acted till 1999 (almost 28 years after 1971).MGR got in 1971 that is all and it is from Tamil Film WORLD. Shivaji could have been considered either before 1971 or after 1971. It is really a bad luck and certain politics.
நடிகர்திலகத்தின் பட வரிசை தொடர்ச்சி
சிவாஜி ரசிகன் முதல் இதழ்
http://i1065.photobucket.com/albums/...pswmnaztsd.jpg
நினைப்போம்.மகிழ்வோம்-58
"திருவிளையாடல்."
நாரதர் கொண்டு வந்த ஞானப்
பழத்தைப் பிள்ளைகளுக்குத்
தரும் பெரும் பொறுப்பை
மனைவி பார்வதியிடம்
ஒப்புவித்து விட்ட விடுதலை
உணர்வுடன், "இந்தா" என்று
பழத்தைக் கொடுத்த பின்
காட்டும் முகபாவம்.
நினைப்போம்.மகிழ்வோம்-59
"மனோகரா."
தனது நாட்டின் மீது படையெடுத்து வென்று, தன்
தந்தையின் மரணத்திற்கும்
காரணமான மனோகரனைப்
பழிவாங்கும் பொருட்டு, மன்னன் மகள் விஜயா ஆண்
வேடமிட்டு, உறங்குகிற
மனோகரனை வாள் பாய்ச்சிக்
கொல்ல முனைய...
விழித்துக் கொண்ட மனோகரன்
"யாரடா நீ" என்று வாளால்
அவள் தலைப்பாகையைத்
தள்ளி விட...
அவிழும் நீளக் கூந்தல், அவள்
பெண்ணென்பதை அடையாளம்
காட்ட...
வியப்பில் மலரும் விழிகளோடு அவர் சொல்லும்...
"ஓ...பெண்!".
நினைப்போம்.மகிழ்வோம்-60
"நவராத்திரி."
தனது "சத்தியவான்-சாவித்திரி" தெருக்கூத்தில்
நடிகையர் திலகத்தை நடிக்கக்
கோரும் காட்சி.
ஏற்கனவே தனது தெருக்கூத்தில் நடிக்கவிருந்த
பெண், வயிற்றுப் போக்கு
காரணமாக நடிக்கவியலாமல்
போனதை, ஒரு பெண்ணிடம்
எடுத்துச் சொல்லும் போது அந்த அழகு முகத்தில் மிளிரும்
கூச்சம்.
ஆதவன் ரவி சார்,
முரளி சார் சொன்னது போல உங்களை என்ன சொல்லிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. உங்களின் நினைப்போம்...மகிழ்வோம் 59 ம், இனி வருவபைகளும் நிச்சயம் பிரேம் போட்டு வீட்டில் மாட்டி வைத்துக் கொண்டு பார்த்து படித்து சுவைத்து ரசிக்கக் கூடியவை. ஏனோ மேலுக்குச் சொல்லவில்லை. ஒவ்வொரு பதிவிலும் உங்களின் ரசிப்பின் ஆழம்தான் தென்படுகிறது. அருமை! அருமை! ஒவ்வொரு தலைவரின் ரசிகர்களும் அவரது காட்சிகளைப் பற்றி மனதில் என்ன நினைப்பார்களோ அவையனைத்தும் வார்த்தைகளாக உங்களிடம் வந்து வசியம் செய்கிறது அனைவரையும். 'இங்கிவினை யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்' என்று நாங்கள் மகிழும் ரங்க ஆதவன் நீங்கள் எங்களுக்கு. மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
என் சார்பாக ஒன்று.
'அக்கா! விக்கிரமனுக்கும் பெண் பிடித்து விட்டது' என்று பத்மினி பற்றி மகாராணி கண்ணாம்பாவிடம் நஞ்சு நாகநாத தம்பி நம்பியார் நவில, இருவருக்கும் இடையில் பின்னாலிருந்து நாம் எதிரபாராமல் வந்து 'ஹங்' என்று கண நேர கண் சிமிட்டி சந்தோஷ சம்மதத்தைத் தெரிவிப்பது. (எவராலும் செய்ய இயலாதது)
http://i1087.photobucket.com/albums/..._001471275.jpg
செந்தில்வேல்,
'சவாலே சமாளி' படத்தை ஆராய்ந்து ஆய்வு எழுதுவதே மிகப் பெரிய சவால். அந்த சவாலில் நீங்கள் சர்வ சாதரணமாய் வெற்றி அடைந்து வருகிறீர்கள். அந்தப் படத்தை நான் ஆய்வு செய்ய எடுத்தால் பக்கங்கள் பத்தாது.
பகுதி பகுதியாய் எடுத்து அழகாக ரசித்து சுவைத்து எங்களையும் அதே சுகத்தைப் பெற வைக்கிறீர்கள். நடிகர் திலகத்தின் ஸ்பெஷல் படங்களில் என் மனதில் முதலிடத்தில் இருக்கும் படம்.
சிவாஜி ரசிகன் ஆவணங்களோடு ஆய்வுகளையும் மேற்கொண்டு திரியை மேலும் பலப்படுத்தி சாதனை நிகழ்த்துகிறீர்கள். என் உளமான ஆசிகளும், பாராட்டுக்களும் என்றும் தங்களுக்கு உண்டு. தொடர்ந்து சவால்களை சமாளியுங்கள். வாழ்த்துக்கள்.
முத்தையன் அம்மு சார்!
'எங்க மாமா' படத்தில் மன்மதனாகக் காட்சியளிக்கும் நடிகர் திலகத்தின் அருமையான நிழற்படங்களுக்கு நன்றி! உங்கள் உழைப்பு எங்களுக்கு மலைப்பு. வியப்பு. ஆமாம்! எந்த லோகோவும் இல்லாமல் எப்படி படங்களைப் பதிகிறீர்கள்?.
முரளி சார்!
மூக்கையா, ஆனந்த், நிர்மல் இவர்கள் உங்கள் மதுரையில் புரிந்த சாதனைகள் நிஜமாகவே மலைக்க வைக்கின்றன. அதைவிட தங்களின் நினைவு சக்தி...எழுத்தாற்றல். அந்த நாள் ஞாபகம் எந்த நாளும் தங்கள் கைவண்ணத்தில் எங்கள் நெஞ்சில் நிலைத்து நிற்கும். சாதனைகளை என்றும் சத்தியமாய் நிலைக்க வைக்கும்.
எங்கள் கடலூரில் பாடாவதி முத்தையா தியேட்டரில் ரிலீஸ் ஆகி அனைவரும் வியக்கும் வண்ணம் ஓடி சாதனை படைத்தது 'தவப்புதல்வன்'.
சவாலே சமாளி தொடர்ச்சி...
மாணிக்கமும் அவருடைய கூட்டமும் சேர்ந்து பாடும் பாடலால் சகுந்தலா
கோபமடைந்து செல்கிறாள்.பின்னே நாயை பிடித்துக்கொண்டு வரும் மாணிக்கம் நாயை அழைப்பது போல் சகுந்தலாவை கேலி செய்கிறான்.இது தவறென்றாலும் அது ஒரு சிறிய பழி தீர்த்தல் கணக்கு. முன்பொருமுறை அதே செயல் சகுந்தலாவால் நடத்தப்பட்டு மாணிக்கம் இழிவு படுத்தப்பட்டிருப்பார்.எந்த ஒரு ஆண்மகனுக்கும் வரும் ஆத்திரம் தான் அது.திமிர் பிடித்த அதுவும் ஒரு பெண் எனும் போது அந்தக் கோபம் சந்தர்ப்பம் தேடி அலையும்.அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் அமைந்த நிகழ்ச்சிதான் இப்போது நடைபெறுவது.தன்னை நாய் என்னும் அர்த்தத்தில் கிண்டல் செய்தது அவளுக்கு கோபத்தை உண்டாக்கி
விடுகிறது.அதனால் மாணிக்கத்தை கேவலமாக திட்ட ,அதற்கு மாணிக்கமும் பதிலடி கொடுக்கும்படி ஆகிறது.சகுந்தலாவின் அண்ணன் ராஜவேலுக்கு இது மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது.பண்ணையாரின்
வீட்டுக்கு செல்லும்மாணிக்கம் ராஜவேலுவால் தாக்கப்படுகிறார்.ஏற்கெனவே குமுறிக் கொண்டிருக்கும் கோபம் எரிமலையாய் வெடிக்க ராஜவேலுவை பொளந்து கட்டுகிறார் மாணிக்கம்.பண்ணையாரும்,
அய்யாக்கண்ணுவும் வந்து சண்டையை விலக்கி விடுகின்றனர்.சண்டையில் மாணிக்கம் வெறித்தாண்டவம் ஆடி விடுகிறார்.
மாணிக்கத்தின் வீடு:
மாணிக்கத்தின் தாய் அந்த சண்டையை நினைத்து வருத்தப்பட சகோதரி காவேரி அண்ணனுக்கு ஆதரவாய் பேசுகிறாள்.
பாசமலர் படத்தில் ஜெமினிகணேசன் வந்து வேலையை விட்டு நிறுத்தப்பட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக நடிகர்திலகத்திடம் பேசிக் கொண்டிருக்கும் போது ,ஜெமினிசொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு துளி கோபமாய் நடிகர்திலகத்தின்
மனதுக்குள் சென்று அந்தக் கோபம்
கையில் கத்தி வைத்து பென்சிலை சீவி சீவி அந்தக் கோபத்தை ஒவ்வொரு சீவலிலும் வெளிப்படுத்திநடிப்பின் ராஜ முத்திரையை காட்டியது நடிகர்திலகம் உலகறிந்தது.அதே போல் இங்கு
அந்த வாழைத்தார் தண்டைசீவிக்கொண்டே வந்து கடைசியில் வெட்டி போட்டு தன் ஆத்திரத்தைக் காண்பிப்பார் நடிகர்திலகம்.
ராஜவேலுவும் சகுந்தலாவும் வெளியூர் புறப்பட்டு செல்கின்றனர்.
சின்னப்பண்ணைசிங்காரம் நிர்ப்பந்தத்தின் காரணமாக பெரிய பண்ணையார் அந்த ஊர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ஒரு மனதாக சம்மதிக்கிறார். அவருக்கு போட்டியிட முழு விருப்பம் இல்லை.காரணம் தான் ஜெயிக்கமாட்டோம் என்ற எண்ணமும், ஊர் மக்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையின்மையும் ஒரு காரணம்.சின்னப்பண்ணை ஊர் மக்களைக் கூட்டி ஆதரவு தருமாறு கேட்கிறார்.பெரும்பான்மையாக ஊர் மக்களும் ஆதரவு தருவதாக இசைகின்றனர்.அதே சமயம் ஊர் மக்கள் எவரும் தனக்கெதிராக எதிர்த்து நிற்கக்கூடாது எனக் கூற மாணிக்கம் தான் எதிர்த்து நிற்பேன் என்க,பெரிய பண்ணை சஞ்சலமடைய சின்னப்பண்ணை மறுபடியும் ஊர்மக்களின் ஆதரவைக்காட்டி பண்ணையாரை போட்டியிட சம்மதிக்கவைக்கிறார்.அப்போது பெரியபண்ணையார் தான்ஜெயித்தால் இந்த ஊரை விட்டே போய்விட வேண்டும் என்று மாணிக்கத்திற்கு சவால் விடுகிறார்.மாணிக்கமும் அதற்கு ஒப்புக்கொள்கிறார்.
இப்பொழுது ஒரு கேள்வி? மாணிக்கம் ஜெயிச்சா?
அதை மாணிக்கமே கேட்டு விடுகிறார்.நான் ஜெயிச்சா பதிலுக்கு பண்ணையார் என்ன செய்வார்?பணம் கொடுப்பதாகச் சொல்லப்பட,இது சரியான சவால் போல் இல்லையே என்று மாணிக்கம் சொல்ல,அதற்கு சின்னப்பண்ணை வேறு ஏதோ ஏதோ சொல்லி கடைசியில்'அவர் மகளையா கட்டி வைக்க முடியும்?"என்று குத்தலாக கேட்க,அதையே மாணிக்கமும் சரியான பிடிப்பாக எடுத்துக் கொண்டு.,"இதுதான்யா
சரியான சவாலு"எனச் சொல்ல,
இந்த சவாலை பெரியபண்ணையார் ஏற்க மறுக்க.,சின்னப்பண்ணை ஒரு வழியாய் பெரிய பண்ணையாரை சம்மதிக்க வைத்து விடுகிறார்.இருவருக்குமான சவால் ஒப்பந்தமாக எழுதப்படுகிறது.
மாணிக்கத்தின் முன் நிற்கும் பெரிய சவால் இது.மாணிக்கம் என்ன செய்யப்போகிறார்?
திரு ஆதவன் சார்,
தங்களின் நினைப்போம் மகிழ்வோம் தொடர் மிகவும் அருமை.எனக்கு மிகவும் பிடித்த நடிகர்திலகத்தின் சில வினாடி ஸ்டைல்களில் சில:
1.மணி பார்ப்பது,
பாசமலரில் ஆபீசுக்கு கிளம்பும்போது மதியம் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்துவிடுங்கள் அண்ணா என்று சொல்லும் தங்கையிடம் கண்டிப்பாக வருகிறேன் என்று சொல்லியபடியே டைம் பார்க்கும் அழகு .
கௌரவத்தில் "இன்னிக்கு ஜட்ஜ்மென்ட் டே டீ" என்றபடியே இடதுபக்க முழுக்கை சட்டையை விளக்கி டைம் பார்க்கும் தெனாவெட்டு .
2.சோகத்தில்,தடுமாற்றத்தில் ,பரவசத்தில் ஒரு பொருளின் மீது மோதுவது/இடிப்பது ,
தங்கபதக்கத்தில் இறந்துகிடக்கும் மனைவியை பார்க்க வரும்போது மாடிப்படிகளில் ஏறும்போது சற்றே தடுமாறி சமாளிப்பது
சின்னமருமகள் படத்தில் பார்வை இழந்தவராக வரும் நடிகர்திலகம் தன மனைவியான வடிவுக்கரசியிடம் பேசிக்கொண்டே வந்து கட்டிலின் நுனியில் இடித்துகொள்வது
ஒன்ஸ்மோர் படத்தில் வீட்டைவிட்டு போகிறேன் என்று விஜய்யிடம் சொல்லும்போது அவர் உங்கள் மனைவியை பார்த்தேன் என்றவுடம் ஒரு பரவசத்தில் "எங்க பாத்த ?" என்று கேட்டபடியே வரும்போது கீழே கிடக்கும் பெட்டியில் கால் இடறுவது
(ஹைய்யா 90களின் படங்களையும் இங்கே குறிப்பிட்டுவிட்டேன் இனி ராகவேந்திரா சார் என்னையும் ஒரு உண்மையான நடிகர்திலகத்தின் ரசிகனாக ஏற்றுகொள்வார் என்று நம்புகிறேன்)