http://i66.tinypic.com/vngunr.jpg
Printable View
தமிழ் இந்து -20/05/2016
http://i65.tinypic.com/208hfyo.jpg
தினமணி -20/05/2016
http://i63.tinypic.com/2e4elgm.jpg
தின செய்தி -20/05/2016
http://i67.tinypic.com/2hf2r9t.jpg
THE HINDU -20/05/2016
T.V. VARATHARAJAN RECEIVING AWARD FROM CHIEF MINISTER DR.M.G.R.
http://i68.tinypic.com/11aigr5.jpg
DAILY THANTHI DT NEXT -20/05/2016
A.D.M.K. DEVOTEE FEEDING SWEETS TO DR. M.G.R. STATUE.
http://i67.tinypic.com/o8f8d2.jpg
TIMES OF INDIA -20/05/2016
http://i64.tinypic.com/f1wbx3.jpg
மக்கள் குரல் -20/05/2016
http://i65.tinypic.com/2ugkv7o.jpg
http://i64.tinypic.com/24ecsgh.jpg
தேமுதிக கட்சி தொடங்கப்பட்ட நாள் முதல் இதுவரை இல்லாத அளவிலான பாதிப்பை இந்தத் தேர்தலில் சந்தித்துள்ளது. அக்கட்சி வேட்பாளர்கள் முதல் முறையாக கூண்டோடு டெபாசிட்டை இழந்துள்ளனர். கட்சி தொடங்கப்பட்டது முதல் சந்தித்த தேர்தல்களில் இப்படி தேமுதிக மொத்தமாக டெபாசிட்டை இழந்ததில்லை. அந்த சாதனையை இந்தத் தேர்தலில் படைத்து விட்டனர். கட்சித் தலைவர் விஜயகாந்த்தே 3வது இடத்திற்குத் தள்ளப்பட்ட சோகமும் தேமுதிகவினரை வருத்தமடைய வைத்துள்ளது. விஜயகாந்த் மட்டுமாவது வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மொத்தமாக அத்தனை பேரும் மண்ணைக் கவ்வியுள்ளனர்.
கருப்பு எம்.ஜி.ஆர். கருப்பு எம்.ஜி.ஆர். என்று தேமுதிகவினரே விஜயகாந்த்தை கூப்பிட ஆரம்பித்தனர். ஆனால் மக்கள் மத்தியில் அந்தப் பெயருக்கு சுத்தமாக வரவேற்பு இல்லை, எம்.ஜி.ஆர். ஒருவர்தான் என்பதை இந்தத் தேர்தலில் மக்கள் புரிய வைத்து விட்டனர்.
கிராம மக்களை ஏமாற்ற முடியாது தொடர்ந்து கிராமங்கள் அதிகம் உள்ள தொகுதிகளாகப் பார்த்துப் பார்த்து போட்டியிட்டார் விஜயகாந்த். இதற்கு அவரும், அவரது மனைவியும் வித்தியாசமான காரணத்தை வேறு கூறினார்கள். ஆனால் உண்மையில், படிக்காதவர்கள், நடிகர் என்ற இமேஜைப் பார்த்து ஏமாந்து வாக்களித்து விடுவார்கள் என்று தேமுதிக தரப்பு கருதியது. ஆனால் உளுந்தூர்ப்பேட்டை மக்கள் சுதாரிப்பாக இருந்து விட்டார்கள்.
104 தொகுதிகளிலும் டெபாசிட் காலி இந்த முறை 104 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட்டது. போட்டியிட்ட அத்தனை தொகுதிகளிலும் அக்கட்சி கேவலமாக தோற்றுள்ளது. 3வது இடம், 4வது இடம், 5வது இடம் என்றுதான் கிடைத்துள்ளது. அனைத்து இடங்களிலும் டெபாசிட் போய் விட்டது.
1 வருடங்களில் இல்லாத சரிவு கடந்த 2005ம் ஆண்டு தேமுதிக தொடங்கப்பட்டது. 2006ல் முதல் தேர்தலைச் சந்தித்தது. அத்தேர்தலில் அசத்தலான வாக்குகளைக் குவித்தது. ஆனால் முதல் முறையாக இந்தத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் சில ஆயிரம் வாக்குகளை மட்டுமே அது பெற்றிருப்பது அதிர்ச்சியை தருவதாக உள்ளது.
தூக்கி வீசிய தமிழகம் எதற்கெடுத்தாலும் கோப்படுவது, தூக்கி அடிச்சிருவேன் பார்த்துக்கோ என்று திட்டுவது, தூ என்று துப்புவது, சொந்தக் கட்சிக்காரர்களையே மரியாதை இல்லாமல் அடிப்பது, நடத்துவது என்று இருந்து வந்த விஜயகாந்த்தை மக்கள் தற்போது தூக்கி அடித்து விட்டார்கள்
Read more at: http://tamil.oneindia.com/news/tamil...ml#slide198792
மறுபடியும் முதல்ல இருந்தா! மொத்தத்தில் முதல் முறையாக தேமுதிக வேட்பாளர்கள் கூண்டோடு டெபாசிட்டைப் பறி கொடுத்து மறுபடியும் முதலில் இருந்து தொடங்க வேண்டிய நிலைக்குப் போய் விட்டார்கள்.
COURTESY ONE INDIA
சென்னை: இதுவரை நடந்த தேர்தல்களில் அதிக இடங்களை அதிமுக பெற்றது 1991 தேர்தலில் தான். அதுவும் ஜெயலலிதா தலைமையில் தான் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.
அ.தி.மு.க., துவங்கப்பட்ட பின்னர், 1977 ல் நடந்த சட்டசபை தேர்தல் முதல் தற்போது நடந்து முடிந்த 2016 சட்டசபை தேர்தல் வரையிலான அக்கட்சி பெற்ற இடங்கள்:
கடந்த 1977 ல் எம்.ஜி.ஆர்., தலைமையில் நடந்த தேர்தலில் அக்கட்சி 144 தொகுதிகள் பெற்றது.
1980 ல் நடந்த தேர்தலில் அக்கட்சி 162 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இதன் பின்னர் 1984ம் ஆண்டு நடந்த தேர்தலில் அக்கட்சி 195 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
1989ம் ஆண்டு எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பின் அ.தி.மு.க., இரண்டாக உடைந்தது. அப்போது நடந்த தேர்தலில் ஜெயலலிதா தலைமையில் போட்டியிட்ட அந்த அணி 27 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
1991ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.திமு.க., 225 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இது தான் அக்கட்சி பெற்ற அதிக இடங்கள்.
1996ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக வெறும் 4 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது.
2001ம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் 196 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது.
2006ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க., 69 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது.
2011ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க., 203 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
2016ம் ஆண்டு தேர்தலில் 134 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்து கொண்டது.
courtesy dinamalar
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஒதுக்கப்பட்ட, தனி தொகுதிகள் மற்றும் மலைவாழ் பழங்குடியினருக்கான தொகுதிகளில், அ.தி.மு.க., இரு மடங்கு வெற்றி பெற்று சாதனை படைந்துள்ளது.
இதன் மூலம், தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் பழங்குடியினர் மக்கள் மத்தியில், அ.தி.மு.க.,வின் செல்வாக்கு குறையவில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், தாழ்த்தப்பட்டோர் போட்டியிடுவதற்காக ஒதுக்கப்பட்ட, 44 தனி தொகுதிகளும், ஏற்காடு, சேந்தமங்கலம் என, மலைவாழ் பழங்குடியினருக்கான இரு தொகுதிகளும் உள்ளன. தனி தொகுதிகள், 44ல், தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றிருந்த, கிருஷ்ணசாமி தலைமையிலான, புதிய தமிழகம் கட்சி, ஒட்டப்பிடாரம், ஸ்ரீவில்லிபுத்துார், வாசுதேவநல்லுார் மற்றும் கிருஷ்ணராயபுரம் தொகுதிகளில் போட்டியிட்டது. அதேபோல, அ.தி.மு.க., அணியில் இடம் பெற்றிருந்த, இந்திய குடியரசு கட்சி சார்பில், அந்தக் கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன், காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டார்.
இந்நிலையில், நேற்று வெளியான தேர்தல் முடிவுகளில், தனி தொகுதிகள், 44ல் 29லும், பழங்குடியினருக்கான ஏற்காடு மற்றும் சேந்தமங்கலம் தொகுதிகளிலும், அ.தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது. அதாவது, 46 தொகுதிகளில், 31 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரத்தில், தி.மு.க.,வும், அதன் கூட்டணி கட்சிகளில் ஒன்றான காங்கிரசும், 15 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. கிருஷ்ணசாமி தலைமையிலான, புதிய தமிழகம் கட்சி, நான்கு தொகுதிகளில் போட்டியிட்டும், எதிலும் வெற்றி பெறவில்லை.
அதேபோல, மக்கள் நலக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உட்பட, அக்கட்சி வேட்பாளர்கள் அனைவரும் தோல்வியை தழுவியுள்ளனர். இதன் மூலம், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மத்தியில், அ.தி.மு.க.,வுக்கு உள்ள செல்வாக்கு தொடர்ந்து நீடிப்பது தெரியவந்துள்ளது.
courtesy dinamalar
அ.தி.மு.க வெற்றிக்கான 6 காரணங்கள்
2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. அதிமுக தனிப்பெரும் கட்சியாக வென்று ஆட்சி அமைக்கிறது. எம்ஜிஆருக்கு அடுத்து, அதிமுகவைச் சேர்ந்த ஜெயலலிதா தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை தக்கவைத்து சாதனை படைத்துள்ளார்.
இந்த சாதனை வெற்றிக்கான காரணங்கள் என்ன என்பது குறித்த ஒரு அல்சல் இங்கே...
கூட்டணி கணக்கு:
தமிழகத்தில் ஆட்சி அமைப்பது யார் என்பதை கடந்த பல தேர்தல்களில், கூட்டணிகளே முடிவு செய்து வந்தன. 1996 ல் திமுக ஆட்சி அமைத்தபோது தமிழ் மாநில காங்கிரஸுடனும், 2001ல் அதிமுக ஆட்சி அமைத்தபோது த.மா.கா, பாமக உள்ளிட்ட கட்சிகளுடனும் 2006 ல் திமுக ஆட்சியமைத்தபோது காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட மெகா கூட்டணியுடனும், 2011ல் அதிமுக ஆட்சி அமைத்தபோது தேமுதிகவுடன் கூட்டணி அமைத்தன.
ஆனால் இந்தத் தேர்தலில்தான் கூட்டணி சரிவர அமையாமல் எல்லா கட்சிகளும் தனித்தனி தீவாக விலகியே நின்றன. தி.மு.க, கடைசி நேரம்வரை தே.மு.தி.க தன் கூட்டணிக்கு வரும் என எதிர்பார்த்து காத்திருந்தது. ஆனால் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கடைசிவரை போக்கு காட்டிக்கொண்டே இருந்தாரே தவிர, திமுகவுடன் சேரவில்லை. மக்கள் நலக்கூட்டணி உடன் கூட்டணி அமைத்தார். இதேபோல வடமாவட்டங்களில் செறிவான வாக்கு வங்கியைக்கொண்ட பா.ம.க, ஆரம்பம் முதலே தனித்துதான் போட்டி என்று சொல்லி தனியாக களம் கண்டது. இப்படி கட்சிகள் தனித்தனியாக பிரிந்து நின்றதால், ஆளுங்கட்சியின் எதிர்ப்பு வாக்குகள் சிதறி, அதிமுகவுக்கு சாதகமாக அமைந்தது. வெறும் ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்கூட சில வெற்றி தோல்விகள் அமைந்துள்ளதை பார்க்கும்போது, கூட்டணி இல்லாதது எவ்வளவு பெரிய பின்னடைவு என்பதை திமுக தற்போது உணர்ந்திருக்கும். தவிர சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தாலும், அனைவரையும் இரட்டை இலை சின்னத்தில் நிற்க வைத்த அதிமுகவின் சாதுர்யமும் அக்கட்சியின் வெற்றிக்கு கூடுதல் காரணமாக அமைந்துவிட்டது.
சொன்னாங்க செஞ்சாங்க, செய்வாங்க...
‘மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப், ரேசன்கார்டு உள்ள அனைவருக்கும் மாதம்தோறும் 20 கிலோ இலவச அரிசி, விலையில்லா மின்விசிறி, மிக்சி, கிரைண்டர், திருமண உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும், தாலிக்கு தங்கம், விலையில்லா ஆடு- மாடுகள் வழங்கப்படும், மருத்துவ காப்பீட்டுத் திட்டம்...’ - இப்படி 2011-ம் ஆண்டு அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் ஏகப்பட்ட நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவற்றை கடந்த 5 ஆண்டு ஆட்சிக் காலத்தில் அதிமுக அரசு வெற்றிகரமாக செயல்படுத்தியது. அதுமட்டுமின்றி அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா மருந்தகம் உள்ளிட்ட ஏகப்பட்ட ‘அம்மா’ திட்டங்களை செயல்படுத்தியது.
இதேபோல இந்த சட்டமன்ற தேர்தல் அறிக்கையில், ‘100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தினால் மின்சார கட்டணம் வசூலிக்கப்படாது. விவசாய கடன்கள் தள்ளுபடி, மாணவர்களுக்கு மடிக்கணினியுடன் கூடிய இலவச இன்டர்நெட் இணைப்பு, பெண்கள் ஸ்கூட்டர் வாங்குவதற்கு 50 சதவிகித மான்யம்...' போன்றவை உட்பட ஏகப்பட்ட அறிவிப்புகளை ஜெயலலிதா அறிவித்தார். ஏற்கெனவே 2011 தேர்தல் அறிவிப்புகளில் சொன்னவற்றில் பலவற்றை அதிமுக நிறைவேற்றியதால், இந்த தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டதையும் செய்வார் என மக்கள் நம்பி வாக்களித்துள்ளதும் ஜெயலலிதாவின் வெற்றிக்கு முக்கியமான காரணம்.
தி.மு.க மீதான பொது எதிர்ப்பு
2ஜி ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட சில ஊழல் வழக்குகளின் மூலம், 'ஊழல் கட்சி' என்ற திமுக மீது படிந்த பிம்பம் இந்த தேர்தல் வரை அகலாமல் போனதும் அக்கட்சிக்கு மிகப்பெரிய பலவீனமாக அமைந்துவிட்டது. தவிர, 'தி.மு.க என்பதே குடும்ப ஆட்சி' என்பது இன்னொரு குற்றச்சாட்டு.மேலும் கடந்த ஐந்து ஆண்டு கால அதிமுக ஆட்சிக்கு எதிராக, மக்கள் மனதில் பெரிய எதிர்ப்பலையை திமுக ஏற்படுத்தவில்லை என்பதையும் இந்த முடிவு உணர்த்துகிறது.
ஜெயலலிதா மீதான அபிமானம்
தனி ஒரு மனுஷியாக துணிந்து நிற்கும் ஜெயலலிதா, கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டார். வரலாறு காணாத மழை வெள்ளம், ஊழல் புகார்கள், ஓரிடத்தில் குவிந்திருந்த அரசு அதிகாரம், சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றது, விலைவாசி உயர்வு, டாஸ்மாக் வியாபாரம்... என பல புகார்கள், பிரச்னைகள் ஜெயலலிதா முன் அணிவகுத்து நின்றன. இவை அனைத்தையும் தனி ஒருவராக களத்தில் நின்று எதிர்கொண்டார். இவை எல்லாவற்றையும் தாண்டி, இந்தத் தேர்தலில் பெருவாரியான தமிழக மக்கள் அதிமுகவுக்கு வாக்களித்து அக்கட்சியை வெற்றியடைய வைத்திருப்பது மக்கள், குறிப்பாக அடித்தட்டு மக்கள் ஜெயலலிதா மீது கொண்ட அபிமானத்தையே காட்டுகிறது.
வாக்கு வங்கி
வாக்கு வங்கியில் திமுகவைவிட அதிமுகவே பெரிய கட்சி. அது அந்தக் கட்சிக்கு எம்ஜிஆர் சேர்த்து வைத்த மிகப் பெரிய சொத்து. அந்த வாக்கு வங்கி கொஞ்சம் கொஞ்சமாக ஏறுகிறதே தவிர இறங்கவில்லை. இதை தவிர்த்து, ஒவ்வொரு தேர்தலிலும் புதிய வாக்காளர்களில் கணிசமானோர் அதிமுகவுக்கே அதிகம் வாக்களித்து வந்திருகின்றனர் என்பது புள்ளிவிவரங்கள் மூலம் தெரிகிறது. அடுத்தபடியாக மக்கள் அறிந்த இரட்டை இலை சின்னம். சீனியர் வாக்காளர்கள் மனதில் எம்ஜிஆர் அதனை பதியவைத்து சென்றதே காரணம். தவிர, திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸுக்கு இருந்த வாக்குவங்கியை விட அதில் இருந்து பிரிந்து சென்ற தமிழ்மாநில காங்கிரஸுக்கு அதிக வாக்கு வங்கி உள்ளதோ என எண்ணத் தோன்றுகிறது. மேலும் தி.மு.க, தன் கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு அதிக இடங்களை விட்டுக்கொடுத்ததும் தோல்விக்கு ஒரு காரணம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
எடுபடாத மதுவிலக்கு
தமிழகத்தில் டாஸ்மாக் மூலமான வருமானம் பெருகப் பெருக, மதுவால் ஏற்படும் குற்றங்களும் அதிகளவில் பெருகின. மதுவிலக்கைக் கொண்டுவரக் கோரி பல போராட்டங்களும் வலுவடைந்தன. சசிபெருமாளின் மரணம், மதுவிலக்குப் போராட்டங்களை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போனது. சசிபெருமாளின் மரணத்தையும் மதுவிலக்கையும் முன்வைத்து, மக்கள் நலக்கூட்டணி உருவாக்கப்பட்டது. மாணவர்கள் பலர், மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி போராட்டத்தில் இறங்கினர். 'தி.மு.க ஆட்சிக்கு வந்தால், மதுவிலக்கு கொண்டு வரப்படும்' என்றார் கருணாநிதி. மதுவிலக்கை வலியுறுத்தாத ஒரே கட்சியாக அ.தி.மு.க மட்டுமே இருந்தது.
தேர்தல் நெருங்கும்போதுதான், ' படிப்படியாக மதுவிலக்குக் கொண்டுவரப்படும்' என்று ஜெயலலிதா அறிவித்து இருந்தார். இப்படியாக இந்தத் தேர்தலில் மதுவிலக்கு ஒரு முக்கியப் பிரச்னையாக முன்வைக்கப்பட்டது. ஆனால் தற்போதைய தேர்தல் முடிவுகள், மதுவிலக்குப் பிரச்னை முக்கியப்பங்கு வகிக்கவில்லையோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. மதுவிலக்கை கொண்டுவருவதாக அறிவித்தால், பெண்களின் வாக்குகள் மொத்தத்தையும் அள்ளிவிடலாம் என கட்சிகளும் கணக்குப் போட்டன. ஆனால், அத்தனை கணக்குகளும் இப்போது பொய்த்து இருக்கின்றன.
ஒரு ஆண், தான் சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதியை குடிக்கு செலவிட்டு, குடும்பத்தை தவிக்க விடும் நிலை பலகாலமாக நமது மனதில் பதிந்து கிடக்கிறது. ஆனால், கள நிலவரமோ வேறு மாதிரி இருக்கிறது. பெண்கள் நலன் சார்ந்து கொண்டுவரப்பட்ட சில நலத்திட்ட உதவிகள், கிராமப்புற பெண்களை பொருளாதார ரீதியாக சுதந்திரமானவர்களாக மாற்றி இருக்கிறது. இதனால், குடிக்காக செலவழிக்கும் கணவர்களைப் பற்றிய கவலைகளில், பொருளாதாரக் காரணங்களைப் பெண்கள் கண்டுகொள்ளவில்லை. உடல்நலன் சார்ந்த கவலைகள் மட்டுமே பெண்களுக்கு இருக்கின்றன. இந்தக் காரணத்தால்தான் பெண்களின் வாக்குகள் மதுவிலக்குக்கு ஆதரவான கட்சிகளுக்கு கிடைக்காமல் போய் இருக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது.
junior vikatan
http://i1170.photobucket.com/albums/...psxbcbvhrn.jpg
வாக்கு வங்கி
வாக்கு வங்கியில் திமுகவைவிட அதிமுகவே பெரிய கட்சி. அது அந்தக் கட்சிக்கு எம்ஜிஆர் சேர்த்து வைத்த மிகப் பெரிய சொத்து. அந்த வாக்கு வங்கி கொஞ்சம் கொஞ்சமாக ஏறுகிறதே தவிர இறங்கவில்லை. இதை தவிர்த்து, ஒவ்வொரு தேர்தலிலும் புதிய வாக்காளர்களில் கணிசமானோர் அதிமுகவுக்கே அதிகம் வாக்களித்து வந்திருகின்றனர் என்பது புள்ளிவிவரங்கள் மூலம் தெரிகிறது. அடுத்தபடியாக மக்கள் அறிந்த இரட்டை இலை சின்னம். சீனியர் வாக்காளர்கள் மனதில் எம்ஜிஆர் அதனை பதியவைத்து சென்றதே காரணம். தவிர, திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸுக்கு இருந்த வாக்குவங்கியை விட அதில் இருந்து பிரிந்து சென்ற தமிழ்மாநில காங்கிரஸுக்கு அதிக வாக்கு வங்கி உள்ளதோ என எண்ணத் தோன்றுகிறது. மேலும் தி.மு.க, தன் கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு அதிக இடங்களை விட்டுக்கொடுத்ததும் தோல்விக்கு ஒரு காரணம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
சரித்திர சாதனை!
இதுவரை, தமிழகத்தில் வேறு எந்தக் கட்சியும் செய்திராத அளவிலான விளம்பரங்கள் தி.மு.க.வால் வெளியிடப்பட்டன. அ.தி.மு.க. மீது கடுமையான அதிருப்தி நிலவுவது போலவும், மக்கள் தி.மு.க.வை மாற்றாகக் கருதி அதற்கு ஆதரவு தரும் மனோநிலையில் இருப்பது போலவும் ஊடகங்களின் மூலம் ஒரு மாயத் தோற்றம் உருவாக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடியும், பிகார் சட்டப் பேரவைத் தேர்தலில் நிதிஷ் குமாரும் கையாண்டதைப் போன்ற கார்ப்பரேட் பாணித் தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க. ஈடுபட்டது. இருந்தும்கூட, அந்தப் பரப்புரைகள் மக்கள் மன்றத்தில் எடுபடவில்லை என்பதைத்தான் தேர்தல் முடிவுகள் தெளிவுபடுத்துகின்றன.
மதுவிலக்கை அமல்படுத்துவது, செல்லிடப்பேசி, விவசாயக் கடன் ரத்து உள்ளிட்ட பல இலவச அறிவிப்புகள் என்று தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தும்கூட தி.மு.க.வால் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போனதற்குக் காரணம், அடிப்படையில் அந்தக் கட்சிக்கு அ.தி.மு.க.வைப் போலத் தனித்துப் போட்டியிட்டு வெற்றிபெறும் அளவிலான மக்கள் செல்வாக்கு கிடையாது என்பதுதான்.
கடந்த அரை நூற்றாண்டு காலத்தில், வலுவான கூட்டணி பலமோ, சூழலோ இல்லாமல் தி.மு.க.வால் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடிந்ததே இல்லை என்பதுதான் வரலாற்று உண்மை. 1967-இல் கொள்கையில் ஒன்றோடு ஒன்று முரண்பட்ட எட்டு கட்சிகளின் கூட்டணியும், 1971-இல் இந்திரா ஆதரவு அலையும், 1989-இல் அ.தி.மு.க. ஜெ., ஜா. என்று பிளவுபட்டிருந்ததாலும், 1996-இல் மூப்பனாரால் த.மா.கா. தொடங்கப்பட்டு அதனுடன் தி.மு.க. செய்துகொண்ட கூட்டணிக்கு நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவு கிடைத்ததாலும்தான் தி.மு.க. ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. இந்தக் காரணிகள் இல்லாமல் இருந்திருந்தால், அந்தத் தேர்தல்களில் தி.மு.க. ஆட்சி அமைத்திருக்குமா என்பது சந்தேகம்தான்.
2006-இல் அப்போது மத்திய ஆட்சியில் இருந்த பலமான காங்கிரஸ், பா.ம.க., இடதுசாரிகள், முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் என்று பலமான கூட்டணி இருந்துமேகூட, 96 இடங்களில் மட்டுமே தி.மு.க. வெற்றிபெற்று "மைனாரிட்டி' ஆட்சி அமைக்க முடிந்தது எனும்போது, நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்கு வங்கியை முற்றிலும் இழந்துவிட்ட காங்கிரûஸ முக்கியக் கூட்டணிக் கட்சியாகக் கொண்ட தி.மு.க. வெற்றி பெறாதது வியப்பளிக்கவில்லை. அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியும் ஆதரவு பலமும்தான் இந்த முறை வெற்றியை நிர்ணயித்திருக்கிறது.
232 தொகுதிகளில் 130 தொகுதிகளில் 10,000-க்கும் அதிகமான வாக்கு வித்தியாசம் பெற்று வெற்றியடைந்திருக்கிறார்கள். அதில் 80 பேர் அ.தி.மு.க. வேட்பாளர்கள். 5000-க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்கள் 28 பேர். 2000 வாக்குகளுக்குக் குறைவான வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்கள் 20 பேர் மட்டுமே. இதிலிருந்து, மக்கள் தெளிவாகவும், நிர்ணாயகமாகவும் தீர்ப்பளித்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.
தி.மு.க. பலமான எதிர்க்கட்சியாக 89 இடங்களை வென்றதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. தனித்துப் போட்டி என்று அறிவித்து 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட பா.ம.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளையும், தே.மு.தி.க. தலைமையிலான மக்கள் நலக் கூட்டணியையும் மக்கள் மாற்றாக ஏற்றுக்கொள்ளவில்லை. அ.தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகள் அனைத்தும் வேறு மாற்று இல்லாததால் தி.மு.க.வுக்குக் கிடைத்ததுதான் தி.மு.க. 89 இடங்களையும், அதன் கூட்டணிக் கட்சிகள் 9 இடங்களையும் வென்றதற்குக் காரணம். இன்னொரு பலமான மாற்று இருந்திருந்தால் தி.மு.க. அணி இந்த அளவுக்கு இடங்களைப் பிடித்திருப்பது சாத்தியமில்லை.
ஜெயலலிதா வேண்டாம் என்று கருதும் மாற்றத்தை விரும்புகிறவர்களைப் பொருத்தவரை, கருணாநிதி "வேண்டவே வேண்டாம்' என்கிற மனோநிலையில், ஒருவேளை தி.மு.க. மு.க. ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவித்திருந்தால், அது அந்த இளைஞர்களைத் தி.மு.க.வை ஆதரிக்கத் தூண்டியிருக்கக் கூடும். 93 வயதில் தான்தான் முதல்வர் என்றும், தனக்கு இயற்கையாக பாதிப்பு நிகழ்ந்தால்தான் தனது மகன் மு.க. ஸ்டாலின் முதல்வர் என்றும் கருணாநிதி கூறியதைக் கேட்டுப் பலரும் முகம் சுளித்தனர்.
தன்னை முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்து வலம் வந்த அனைவரையும் வாக்காளர்கள் நிராகரித்து விட்டிருப்பது தேர்தல் முடிவுகளின் "ஹைலைட்!' தி.மு.க. மட்டுமல்ல, மக்கள் நலக் கூட்டணிக் கட்சிகளுக்கும், பா.ம.க.வுக்கும் தேர்தல் முடிவுகள் ஒரு மிகப்பெரிய சறுக்கலாகவும் பின்னடைவாகவும் அமைந்திருக்கிறது. அதேநேரத்தில், அவரவர் உயரம் எவ்வளவு என்பதையும் வெளிப்படுத்தி இருக்கிறது.
ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.தான் தமிழகத்தில் தனிப்பெரும் கட்சியாகவும், அதற்கு மாற்று சக்தியாக வேண்டுமென்றால் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்தால் மட்டுமே சாத்தியம் என்பதையும் இந்தத் தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்தி இருக்கின்றன.
ஐந்தாண்டுகால ஆட்சியின் மீது பொதுமக்களுக்கு நியாயமாக ஏற்படும் சலிப்பையும், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் பிரதிபலிக்கக்கூடும் என்பதையும் கருத்தில் கொண்டு, பலமான கூட்டணி அமைக்க முற்படுவதுதான் வேறொருவராக இருந்தால் கையாளக்கூடிய தேர்தல் ராஜதந்திரம். ஆனால், துணிந்து தனித்துப் போட்டி என்று அறிவித்து 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு 134 இடங்களில் வென்று ஆட்சி அமைப்பது என்பது தனிப்பட்ட முறையில் முதல்வர் ஜெயலலிதாவின் சரித்திர சாதனை.
ஆறாவது முறையாகத் தமிழக முதல்வராகப் பதவி ஏற்கும் வரலாற்றுச் சாதனையைப் படைத்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. அதுமட்டுமல்ல, காமராஜருக்கும், எம்.ஜி.ஆருக்கும் பிறகு இரண்டாவது முறையும் தொடர்ந்து வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்த பெருமைக்கும் உரியவராகிறார்.
ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வின் இந்த வெற்றிக்கு இன்னொரு சிறப்பும், முக்கியத்துவமும் உண்டு. தனது தலைவராகவும், இதய தெய்வமாகவும் முதல்வர் ஜெயலலிதா ஏற்றுக்கொண்டிருக்கும் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நடக்கும் வேளையில், இந்த வெற்றிக் கனியை அவருக்குக் காணிக்கையாக்கி இருக்கிறார் என்பதுதான் அது. அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்காமல் போயிருந்தால் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்படுமா என்பது சந்தேகம்தான்.
"மக்களால் நான், மக்களுக்காக நான்' என்ற கோஷத்துடன் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என்கிற முதல்வர் ஜெயலலிதாவின் துணிவான முடிவும், அவரது அசாத்திய தன்னம்பிக்கையும் மக்களின் நாடித்துடிப்பைத் துல்லியமாகத் தெரிந்து வைத்திருக்கும் அவரது புரிதலை வெளிப்படுத்துகிறது. அவர் தமிழக மக்கள்மீது வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகவில்லை. ஆறாவது முறையாக முதல்வராகப் பதவி ஏற்க இருக்கும் ஜெயலலிதாவுக்கு "தினமணி' நாளிதழின் சார்பில் வாழ்த்துகள்!
courtesy dinamani
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...46&oe=57E564BA
அனைத்து எம்ஜிஆர் ரசிகர்களே...
வரும் 22 (ஞாயிறு) நடக்கவிருக்கும் "அனைத்துலக எம்ஜிஆர் பொதுநல சங்கம் "நடத்தும் இந்த நிகழ்ச்சிக்கான நுழைவு சீட்டு இலவசமாக Mr Hussain Ar பெற்றுகொள்ளலாம், தொடர்பு கொள்ளவேண்டிய எண் : 9176942577.
மக்கள் திலகத்தின் இரட்டை இலை சின்னம் - உலகமெங்கும் பரவிய வெற்றி சின்னம் -திண்டுக்கல் நாடாளுமன்ற இடைதேர்தல் மூலம் அதிமுக - வெற்றி பெற்ற திரு நாள் 21.5.1973.
43ஆண்டுகள் நிறைவு பெற்ற இந்த இனிய நாளில் அதிமுக என்ற இயக்கம் இன்று 37 மக்களவை உறுப்பினர்களையும்11 ராஜ்யசபா உறுப்பினர்களையும் மொத்தம் 48 எம்பிக்களையும் , பாராளுமன்றத்தில் மூன்றாவது கட்சியாகவும் தமிழகத்தில் புரட்சித்தலைவரின் இயக்கம் சட்ட சபை 2016 தேர்தலில் 7 வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியில் இருப்பதும் மகத்தான சாதனை .
மாநில கட்சிகளில் முதலிடத்தையும் பிடித்து மக்கள் திலகத்தின் இயக்கம் இன்று டெல்லியில் தலை நிமிர்ந்து நடக்கிறது என்றால் அது புரட்சித்தலைவரின் புகழுக்கு கிடைத்த மகத்தான வெற்றி வெற்றி வெற்றி .
மக்கள் திலகத்தின் ''என் அண்ணன் '' இன்று 47வது ஆண்டு துவக்க தினம் .
மக்கள் இன்னமும் எம்ஜிஆரை நேசிக்கிறார்களே ?
எம்ஜிஆரை மக்கள் நேசிப்பதற்கு காரணம் அவருடைய மனித நேயம் - மக்கள் அவரை ஒரு நடிகராக பார்க்கவில்லை .
தங்கள் வீட்டு பிள்ளையாக பார்த்தார்கள் . ஏழைகளின் கண்ணீரை துடைத்தவர் . ஏழைகளில் வாழ்வு தரத்தை முன்னேற்றியவர் .அடிமட்ட சமுதாய மக்களின் கல்விக்கும் , வேலை வாய்ப்புக்கும் ,பல உரிமைகளை பெற்று தந்தமைக்கும் , பசிப்பிணி போக்கிய சத்துணவு திட்டத்தை தந்ததற்கும் ,அடிமட்ட சாதாரண தொண்டனை அரசியல்
களத்தில் சட்டமன்ற , பாராளுமன்ற உறுப்பினராக , மாநில மந்திரியாக உயர்த்தியதற்கும் மக்கள் நன்றியுடன்நினைத்து பார்த்து பார்க்கிறார்கள் .
இன்று கல்வியில் பல புரட்சிகள் உருவாகி சாமான்ய மக்கள் எல்லாம் வெளிநாடுகளில் வேலை பார்த்து முன்னேறியுள்ளார்கள் என்றால அதற்கு முதல் காரணம் எம்ஜிஆர் போட்டு காட்டியகல்வி பாதைதான் .எனவேதான்
தமிழக மட்டுமல்லாமல் உலகமெங்கும் வாழும் கோடிக்கணக்கான மக்கள் இன்னமும் எம்ஜிஆர் மீது அளவு கடந்தஅன்பும் பக்தியும் வைத்துள்ளார்கள் .
எம்ஜிஆர் படங்கள் மக்களின் மனங்களுக்கு வலிமை - நம்பிக்கை - மகிழ்ச்சி சேர்த்த பெருமை உண்டு .
சமுதாயத்திற்கு தேவையான கருத்துக்களை சொன்னார் -சமுதாயம் ஏற்று கொண்டது .
மக்களின் அன்புக்கு அடிமையானார் . எம்ஜிஆருக்கு மக்கள் மனதிலிருந்து விடுதலை என்பது என்றுமே கிடையாது .
எம்ஜிஆர வாழ்ந்த காலத்தில் அவரை நேசிக்காதவர்கள் - இன்று அவரின் பெருமைகளை உணர்ந்து பலரும் எம்ஜிஆரை நேசிக்க ஆரம்பித்து விட்டார்கள் . இதுதான் எம்ஜிஆரின் மனித நேயத்தின் வெற்றி .
தமிழகத்தின் ஒளிவிளக்கு
திரை உலகின் கலங்கரை விளக்கம்
புதிய பூமி கண்டெடுத்த நாடோடி மன்னன் .
வசூலில் மன்னாதி மன்னன் .
நம்நாடு கண்ட ஆயிரத்தில் ஒருவன்
ஏழைகளின் குடியிருந்த கோயில்
நினைத்ததை முடிப்பவன்
எங்கள் தங்கம் - எங்க வீட்டு பிள்ளை - என் அண்ணன் - மக்கள் கூறுகிறார்கள் .
ரசிகர்களின் இதயக்கனி
நாளை நமதே - 2016 தேர்தலில் வெற்றி
அனைத்திந்திய அண்ணா தி.மு.க.வின் தேர்தல் வெற்றியை மகிழ்ச்சி பெருக்குடன்
கொண்டாடும் வகையில், சென்னையில் 3 அரங்குகளில், மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் மகத்தான 3 வெற்றிப் படங்கள் திரையீடு.
சென்னை மகாலட்சுமியில் வெள்ளி முதல் (20/05/2016) மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
கலை, அரசியல் மற்றும் விநியோகஸ்தர்களின் "ஒளி விளக்கு " தினசரி 3 காட்சிகள்
நடைபெறுகிறது.
சென்னையில் 2012 முதல் மறு, மறு, மறு, மறு, மறு வெளியீடுகளில் , டிஜிடல் தொழில்நுட்பம் செய்யப்படாமலேயே சென்னை மகாலட்சுமியில் மட்டும் , தொடர்ந்து 6 மாத இடைவெளியில் திரைக்கு வந்து,வசூலை குவித்து விநியோகஸ்தர்களின் அமுத சுரபியாக திகழும் படம்.
2012- ல் சென்னை மகாலட்சுமியில் 3 வாரங்கள் ஓடிய காவியம் .
4 மாதங்களுக்கு முன்பு சென்னை மேற்கு மாம்பலம் ஸ்ரீனிவாசாவில் , சமீபத்தில்
ஒரு வாரம் ஓடி, பழைய படங்களில் அதிக வசூலை ஈட்டிய படம்.
கடந்த ஆண்டில் மதுரை சென்ட்ரல் சினிமாவில் வெளியாகி ஒரு வாரத்தில் ,
ரூ.1 லட்சத்திற்கு மேல் வசூல் குவித்த காவியம். மீண்டும் சில மாத இடைவெளிகளில் மதுரை மீனாட்சி பாரடைசில் 4 காட்சிகளில் ஒரு வாரம் ஓடியது.
http://i67.tinypic.com/117fnvc.jpg