சூப்பர் ஹீரோ வார இதழில் , மதுரை எம்.ஜி.ஆர். பக்தர்கள் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "எங்க வீட்டு பிள்ளை " திரைப்படத்திற்கு அளித்த வரவேற்பு குறித்த
புகைப்படங்கள் வெளியாகியுள்ளது .
http://i67.tinypic.com/15qu5qv.jpg
Printable View
சூப்பர் ஹீரோ வார இதழில் , மதுரை எம்.ஜி.ஆர். பக்தர்கள் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "எங்க வீட்டு பிள்ளை " திரைப்படத்திற்கு அளித்த வரவேற்பு குறித்த
புகைப்படங்கள் வெளியாகியுள்ளது .
http://i67.tinypic.com/15qu5qv.jpg
கோவை சென்ட்ரல் திரை அரங்கில் வைக்கப்பட்டிருந்த பேனர் .
http://i66.tinypic.com/29zbk34.jpg
மலேசியாவில் ஆறு திரையரங்குகளில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் "திரைப்படம் வெளியாகியுள்ளது .
http://i67.tinypic.com/144bv4x.jpg
பெங்களூரு அருணா திரையரங்கில் இன்று முதல் (30/03/18) புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.
தென்னக ஜேம்ஸபாண்டாக நடித்த "ரகசிய போலீஸ் 115" தினசரி 4 காட்சிகளில் திரைக்கு வந்துள்ளது. கடந்த ஆண்டு பெங்களூரு நடராஜ் அரங்கில் வெளியாகி தினசரி 4 காட்சிகளில் ஒரு வாரம் ஓடியது குறிப்பிடத்தக்கது .
http://i68.tinypic.com/jhd3iv.jpg
புகைப்படம் உதவி ; திரு.சி.எஸ். குமார், பெங்களூரு .
மதுரை வெற்றி திரையரங்கில் மக்கள் தலைவர் /புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் வசூல் புரட்சி ஏற்படுத்திய "நாடோடி மன்னன் " வெற்றிகரமான 2 வது வாரம் (தினசரி மாலை காட்சி மட்டும் )
http://i68.tinypic.com/2en7okn.jpg
புகைப்படம் உதவி : திரு.எஸ். குமார், மதுரை .
மதுரை சோலைமலையில் இன்று முதல் (30/3/18) மக்கள் திலகம் /புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் ஜொலித்த "எங்க வீட்டு பிள்ளை " தினசரி 4 காட்சிகள்
நடைபெறுகிறது சென்ட்ரல், அரவிந்த் , சரஸ்வதி அரங்குகளை தொடர்ந்து இணைந்த 4 வது வாரம் .
http://i68.tinypic.com/25a5h54.jpg
புகைப்படங்கள் உதவி : திரு.எஸ். குமார், மதுரை.
தினத்தந்தி -30/3/18
http://i64.tinypic.com/3004b5d.jpg
தினத்தந்தி -30/3/18
http://i65.tinypic.com/rkvfrn.jpg
சென்ற வாரம்
கோவை
நாஸ்
திரையரங்கில்
ரிக்*ஷாக்காரன்
ஒரு
வாரம்
ஒடியது.
நாளை
முதல்
கோவை
அர்ச்சனா
திரையரங்கில்
அடிமைப்பெண்
திருப்பூர்
சினிபார்க்
திரையரங்கில்
இணைந்த
இரண்டாவது
வாரம்
நாடோடி மன்னன்
திருப்பூர்
தமிழ்நாடு சினிமாஸ்
திரையரங்கில்
எங்க வீட்டுப்பிள்ளை
https://s17.postimg.org/c3za5g7yn/IMG_8340.jpg
வேலூர் - குறள் - அடிமைப்பெண் வெள்ளி முதல் (31/3/18) நடைபெறுகிறது
வேலூர் - ராஜா - நாடோடி மன்னன் - do -
வேலூர் -பூட்டுத்தாக்கு -கணேஷ் - நினைத்ததை முடிப்பவன் (இப்பொழுது 5 நாட்களாக நடைபெறுகிறது ) இந்த அரங்கில் வழக்கமாக 3 நாட்களுக்கு மேல் எந்த படமும் நீடித்ததில்லை .
தகவல் உதவி : திரு.ராமமூர்த்தி, வேலூர் .
http://i65.tinypic.com/2egecuf.jpg
ஓவியம் -திரு.சாமுவேல், சத்தியமங்கலம்
http://i63.tinypic.com/t5pz7l.jpg
31/3/18 முதல் பெரியநாயக்கன் பாளையம் -ஜெயந்தியில் தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது
தினத்தந்தி -31/3/18
http://i67.tinypic.com/dw97gk.jpg
மற்றும் ஈரோடு - தேவி அபிராமி,
பொள்ளாச்சி - ஏ.டி.சி.,
திருப்பூர் -சினிபார்க் ( 2 வது வாரம் )
சத்தியமங்கலம் -ஜெய்சக்தி
மேட்டுப்பாளையம் - அபிராமி ,
புளியம்பட்டி - எஸ்.ஆர்.டி.
வேலந்தாவலம் -தனலட்சுமி ,
உடுமலை, கொழுஞ்சாம்பாறை (கேரளா ) அரங்குகளில்
வெள்ளி முதல் (31/3/18) வெற்றி நடை போடுகிறது .
தகவல் உதவி : நெல்லை ராஜா .
கட்டப்பை பாட்டிகள்… விசில் தாத்தாக்கள்..! ’நாடோடி மன்னன்’ தியேட்டர் விசிட்
தார்மிக் லீ
Chennai:
`The Legend is back' என்ற வாசகத்தோடு சென்னை முழுக்க ஒரு படத்தின் போஸ்டர் ஒட்டியிருப்பதை நானும் என் நண்பரும் கண்டோம். அதைப் பார்த்துவிட்டு ஆர்வம் தாங்க முடியாமல் நேற்று(30/3/18) மதிய உணவை முடித்துவிட்டு, விரைந்து எக்மோரில் இருக்கும் ஆல்பர்ட் தியேட்டருக்குச் சென்றோம். டிஜிட்டல் இந்தியாவில் டிஜிட்டல் ரீ-மாஸ்டர்டு டெக்னாலஜி பயன்படுத்தியிருக்கும் படத்திற்கு ஒரு ஏ.டி.எம்மில் காசை எடுத்துச் சென்று கவுன்டரில் நிற்கும்போது, `அப்பொழுது வாய்க்கப் பெறாத வாய்ப்பு இப்போ வாய்த்திருக்கிறது' என்ற இனம் புரியா சந்தோஷத்தில் டிக்கெட்டைப் பெற்றுக்கொண்டு தியேட்டரின் வாசலையடைந்தோம். படத்தின் பெயர் `நாடோடி மன்னன்', நடித்திருப்பவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.
கட்டப்பைகளை சுமந்த பாட்டிகள், வேட்டியை மடித்துக்கட்டி வந்திருந்த தாத்தாக்கள் என அவர்களோடு சேர்ந்து கருப்பாடாக நானும், என் நண்பரும் திரையிரங்கத்திற்குள் நுழைந்தோம். 2 நிமிடங்கள் அமைதி நிலவியது. ராகுல் ட்ராவிட்டின் புகையிலை டிஸ்க்ளைமர் முடிந்தவுடன், `EMGEEYAR PICTURES PVT LMT' என்ற எழுத்துக்களைப் பார்த்தவுடன் தாத்தாக்களும், பாட்டிகளும் 40 வருடங்கள் குறைந்த இளைஞர், இளைஞிகளாக மாறித் துள்ளிக் குதிக்கத் தொடங்கினர். மீண்டும் இரண்டு நிமிட அமைதி. `
என் ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புக்களே' என்று எம்.ஜி.ஆரின் குரலைக் கேட்டவுடன் பரவசத்தில் நாலாபக்கமும் விசில் சத்தம் பறந்தது. வசனம் கண்ணதாசன், டைரக்*ஷன் எம்.ஜி.ஆர் என்று டைட்டில் கார்டு முடிந்தவுடன், `மக்கள் ஆட்சி வாழ்க' என்ற பதாகைகளை ஏந்திய ஒரு கும்பல், `மன்னர் ஆட்சி ஒழிக' என்ற கோஷத்தோடு ஆக்ரோஷமாக நடந்துவந்தக் காட்சியில் படம் தொடங்கியது. மீண்டும் அமைதி நிலவி சுவாரஸ்யமாக படத்தைப் பார்த்த ஆரமித்த மக்கள், கூட்டத்தில் முதல் ஆளாக வந்த இளைஞரைப் பார்த்து மீண்டும் உற்சாக வெள்ளத்தில் நனையத் தொடங்கினர். இவர்களை ஆச்சர்யத்தோடு பார்த்த எங்களது சந்தேகக் கண்கள் திரையை நோக்கி நகர்ந்தது. `நில்லுங்கள்' எனச் சொல்லி ஒட்டுமொத்த கூட்டத்தையும் கட்டுப்படுத்தி நிறுத்தினார் எம்.ஜி. ஆர்.
ஆர்வம் தாங்க முடியாமல் அடுத்தடுத்த காட்சிகளை எதிர்பார்த்து எங்களது முதுகெலும்பு நேரானது. அதற்கு விருந்து தரும் வகையில், 5.1 டிஜிட்டல் சரவுண்டிங் சிஸ்டத்தில் ஒட்டுமொத்த திரையரங்கமுமே அதிர்ந்தது, எங்களுக்கு மேலும் உற்சாகமூட்டியது. படம் நகர நகர பேசும் ஒவ்வொரு வசனங்களும் இரு முறை எங்களது காதில் கேட்டயதையறிந்தோம். இதை என் நண்பரிடமும் கேட்டேன். `அது ஒரு பில்டின் எக்கோ மா' எனச் சொல்லிப் புன்னகைத்தார். மறுபடியும் மறுபடியும் கேட்டதையடுத்து, சுற்றி முற்றிப் பார்த்தேன். மூன்று சீட்டுகளுக்கு முன்னாடி உட்கார்ந்திருந்த பெரியவர், அங்கு படத்தில் ஒவ்வொரு நடிகரும் பேசுவதுற்கு முன்னே இவர் அந்த வசனத்தைச் சொல்லிக்கொண்டிருக்கிறார். இருவரும் ஒருவரை ஒருவரைப் பார்த்து புன்னகைத்துவிட்டு படத்தைத் தொடர்ந்தோம். அது நேராக எங்களை நாகனாதபுரத்தில் கொண்டுபோய் விட்டது.
நாடோடி மன்னன்
படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு வசனமும் படத்தில் ஒவ்வொருவரும் கையிலேந்திச் சென்ற கூர்வாளைவிட கூர்மையாக இருந்தது. ஊர் முழுக்க மார்த்தாண்டனின் மன்னர் பதவியைப் பற்றி பேசிக்கொண்டிருந்தது. ஆனால் அரண்மனையில் இருந்த ஒருவருக்கு மட்டும் இதில் உடன்பாடில்லை. அவர்தான் பி.எஸ்.வீரப்பன். ’அவன் இந்த நாட்டுக்கு அரசன் ஆகக் கூடாது, யார் அரசன் என்று நான் முடிவு செய்துவிட்டேன்’ என்று ஒருவரைக் கைகாட்டுகிறார். அவருக்கே உரித்தான வில்லத்தன சிரிப்போடு என்ட்ரி கொடுக்கிறார் நம்பியார். இவையனைத்தையும் பார்க்கும்போது அந்தக் காலத்துக்கேச் சென்று, படம் பார்த்ததுபோல் ஓர் உணர்வைக் கொடுத்தது. அதற்கு அடுத்த ஷாட்டிலே என் காதுகள் எங்கேயோ, எப்பொழுதோ கேட்ட ’தூங்காதே தம்பி தூங்காதே’ பாட்டு ஒலித்தது. `இது இந்தப் படம்தானா' என்ற திகைப்போடு பாடலைக் கேட்க ஆரம்பித்தேன். அருகில் இருந்த என் நண்பன், `இந்தப் பாட்டுல எவ்வளவு கருத்து இருக்கு பாருடானு எங்க அப்பா இந்தப் பாட்டைக் கேட்க சொல்லிட்டே இருப்பார்' என முணுமுணுத்தான்.
இப்படிப் பல சந்தோஷங்கள் நிறைந்த ஃபீலோடு படத்தைத் தொடர்ந்தோம். அது மீண்டும் இரத்தினபுரி என்ற ஒரு ஊருக்குக் கொண்டுபோய்விட்டது. அங்கு மார்த்தாண்டம் ஒரு குதிரையில் இருந்து இறங்கினார். அவர் பின்னாடியே சென்ற கேமரா, முகத்தைக் காட்ட முன்னாடி சென்றது. அதுவும் எம்.ஜி.ஆர். டபுள் சந்தோஷத்தில் விசில் சத்தம் அனல் பறந்தது. அதற்குப் பின் பல டிவிஸ்ட்டுகள், பல ரொமான்ஸ் சீன்கள், இதற்கு நடுவில் வயிறு குழுங்கச் சிரிக்க வைத்த சந்திரபாபுவின் காமெடிகள் என படம் அதகளமாய் நகர்ந்தது. படம் இன்டர்வலை எட்டியது. வெளிய ஷோ கேஸில் வைக்கப்பட்டிருந்த சில வெற்றிப் படங்களின் விருதுகளைப் பார்த்துவிட்டு மீண்டும் படம் பார்க்கச் சென்றோம். பல சென்டிமென்ட் சீக்குவென்ஸுக்குப் பிறகு கன்னித் தீவில், ’மானைத் தேடி மச்சான் வரப்போறான்’ என்று சந்தோஷத்தில் சில பெண்கள் ஆடிக்கொண்டிருந்தனர். யாரென்ற தெரியாத முகங்களுக்கு நடுவே ஒரு பரிச்சயமான முகம். அந்த முகத்துக்குச் சொந்தக்காரர் சரோஜா தேவி. `ஓ படத்துல இவங்களும் இருக்காங்களா' என்ற ஆச்சர்த்தோடு பல சண்டைக் காட்சிகளோடும், சில டிவிஸ்டுகளோடும் படம் க்ளைமாக்ஸை எட்டியது.
நாடோடி மன்னன்
படமும் மொத்தமாக முடிந்தது. வீரங்கன், மார்த்தாண்டனின் கொடுத்த எண்டர்டெயின்மெட்டால் 3 மணி நேரம், 20 நிமிஷம், 17 செகண்ட் படம் ஓடியும் இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிட்டதே என்ற சோகத்தில் சீட்டை விட்டு எழுந்து நடந்த எங்களை, `உலகம் சுற்றும் வாலிபன் டிஜிட்டல் ரீ-மாஸ்டர்டு விரைவில்’ என்று திரையில் வந்த விளம்பரம் சந்தோஷப்படுத்தியது. புதிய தமிழ்ப்படங்கள் எதுவும் ரிலீஸாகாததால் போர் அடிக்குது என்று சில நண்பர்கள் என்னிடம் சொன்னார்கள். இதே மாதிரியான எண்ணம் உள்ளவர்கள் இந்த நேரத்தைப் பயன்படுத்தி, இதுபோன்ற படங்களை தியேட்டரில் பார்ப்பதால் நாஸ்டாலஜிக் அனுபவங்களைப் பெறலாம்.
60 வருடங்களுக்கு முன் வந்த படம் நாடோடிமன்னன் ..
என் தாத்தா நாடோடிமன்னன் படத்தை 1958ல் சென்னை உமா திரை அரங்கில் முதல் நாளே பார்த்ததாக கூறினார் .
என்னுடைய தந்தை நாடோடிமன்னனை முதல் முறையாக 1977ல் சென்னை ராஜகுமாரி தியேட்டரில் பார்த்ததாக கூறினார் .
மூன்றாவது தலை முறை யான நான் நேற்று சென்னை ஆல்பட் தியேட்டரில் என்னுடைய தாத்தா ( 78) என்னுடைய தந்தை ( 54) நான் ( 22) முவரும் எம்ஜிஆரின் நாடோடிமன்னனை கண்டு ரசித்தோம் . மூன்று தலைமுறை ரசிகர்களும் எம்ஜிஆர் படத்தை அதுவும் வரலாறு படைத்த நாடோடிமன்னனை பார்த்து மகிழ்ந்தது என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாகும் .
எதிர் காலத்தில் எனக்கு ஒரு மகன் பிறந்து நாங்கள் நால்வரும் எம்ஜிஆரின் நாடோடி மன்னனை மீண்டும் பார்க்கும் வாய்ப்பை பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது .
நாடோடி மன்னன் படம் ஆரம்பம் முதல் அலுப்பு தட்டாமல் காட்சிக்கு காட்சி சிறப்பாக இருந்தது .
எம்ஜிஆரின் இரண்டு வேடங்கள் - மிகவும் அருமை .எம்ஜிஆரின் ஸ்டைல் , வித்தியாசத்தை மூக்கில் விரல் வைத்து காட்டும் அபாரமான காட்சி
வாள் சண்டை காட்சிகள் , இனிமையான பாடல்கள் சூப்பர் . இன்னும் ஒரு முறை தனிமையில் நாடோடி மன்னனை பார்க்க விரும்புகிறேன் .
நன்றி முக நூல்
ரவி பிரசாத்
தமிழ் நாடு, கேரளா, பெங்களுர் ... எங்கும் என்றும் ஒளி வீசும் நவ ரத்தினங்கள் 👍👌 "நாடோடி மன்னன்", "நினைத்ததை முடிப்பவன்", "எங்க வீட்டுப் பிள்ளை", "அடிமைப்பெண்" காவியங்களே வசூல் மழையில், ரசிகர்கள் பேரானந்தம்... ஒரு சில திரையரங்குகள் கடந்த நாட்களில் தலைவர் காவியத்தை மாற்றி நேற்று புது படங்கள் போட்டு சரியான வசூல் இல்லை, மக்கள் திலகம் படங்களை தொடர்ச்சியாக திரையிட்டு இருக்கலாமே என பேசி கொள்கின்றனர் என நண்பர்கள் தகவல் தந்தது மகிழ்ச்சி...
இது எதுவுமே புரியாதவர்கள் புலம்பலுக்கு நண்பரின் 'தெளிவுரை'...இன்பா*
பெயரில் இன்பத்தை வைத்து* கொண்டு**வாழ்க்கையில்* நிரந்தர துன்பத்தை அனுபவித்துவரும் நண்பா*
சிந்திக்காமல்* மற்றவரின் புகழை சிதைப்பதில் சிற்றின்பம் காண்பது தகுமா ?
மொழி , இனம் , பிரித்து அமிலத்தை கொட்டினால் பேரின்பமா ?
நீ* நேசிப்பவருக்கு* என்ன* கிடைக்க வேண்டுமோ அது* கிடைத்து விட்டது .
எல்லை* மீறி ஆசை கொண்டால்* உனக்கு துன்பமே* நண்பா .
இமயத்தின் உச்சிக்கு சென்ற* எங்கள்* தலைவரின் புகழை கண்டு ..
நீ மறைமுகமாக என்னதான் ஒப்பாரி வைத்தாலும்*
உன்* உள்ளமும்* உன்னை போல் எண்ணம் கொண்டோரின்* உள்ளமும்*
இந்த* ஜென்மத்தில் சாந்தி* கிடைக்கப்போவதில்லை .
நிமிர்ந்து செல்பவர்கள்* நாங்கள்*
எரிந்து கொண்டே இருப்பவர்கள்* நீங்கள்*
பராசக்தியை* நம்பி நீங்கள் இழந்தது* *...உங்கள் தலை எழுத்து*
மக்கள் சக்தியை* நம்பியது* நாங்கள் ,,
அன்றும் வெற்றி*
இன்றும் வெற்றி*
நாளை நமதே*...
பெரும்பாலான திரையரங்குகளில் ஆபத்பாந்தவனாக, அநாதைரட்சகனாக, தக்க சமயத்தில் கை கொடுத்திருக்கும் மக்கள் திலகம் காவியங்கள் வெற்றி பெரு நடை காண்பது நமது ரசிகர்கள் / பக்தர்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சி மேல் மகிழ்ச்சி ☺ அதுவும் "நாடோடி மன்னன்" 60ம் ஆண்டு வைர விழா கொண்டாட்ட வேளையில் அட்டகாசாமாக பொது மக்கள் ஆதரவோடு நடைபெறுவது சகாப்த சாதனை சரித்திரம்👌
வெள்ளி முதல் (30/3/18) சென்னை பாட்சாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் "சங்கே முழங்கு "தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i64.tinypic.com/2zp6ufm.jpg
சென்னை ஆல்பட்டில் புரட்சி தலைவர் /மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின்
"நாடோடி மன்னன் " வெற்றிகரமான 2 வது வாரம்
http://i63.tinypic.com/5v3uw5.jpg