-
#உஷாரய்யா #உஷாரு
கள்ளம் கபடமில்லா உண்மையான எம்ஜிஆர் பக்தர்களுக்காக இந்தப் பதிவு....
பாசம் திரைப்படத்தில் வாத்தியார் 'திருடனாக' நடித்திருப்பார். ஒரு காட்சியில் ஒரு ஆபத்திலிருந்து சரோஜாதேவியைக் காப்பாற்றுவார்...
அப்போது சரோஜாதேவி நம்ம வாத்தியாரிடம் ஒரு கேள்வி கேட்பார். அதற்கு வாத்தியாரின் பதில் மிக அற்புதமாக இருக்கும்.
அந்த உரையாடல் இதோ :
ச.தேவி : என் கூட இப்படி தைரியமா வர்றீங்களே! நா உங்கள காட்டிக்கொடுத்தா என்ன பண்ணுவீங்க.?
வா : மற்றவர்களுக்கு நாம் நன்மை செய்தும் அவ ங்க நமக்கு தீமை செய்தால் அவர்களைப் பற்றி என்ன நினைப்ப?
ச.தேவி : நா என்ன நினைப்பேன்...! அவங்க அறியாமையை நினைத்து வருத்தப்படுவேன்....!
வா : நா அப்படியில்ல...
என் அறியாமையை நினைச்சுத்தான் வருத்தப்படுவேன்...!!!
என்னவொரு உண்மையான வார்த்தைகள்.....
போலி எம்ஜிஆர் பக்தர்கள் விஷக்கிருமிகள் போல பரவிக்கொண்டிருக்கின்றனர்.
தங்களை எம்ஜிஆர் பக்தர்களாகக் காட்டிக்கொண்டு, நம்மிடையே உள்ள ஒற்றுமையைக் குலைத்து, குழப்பம் விளைவித்து, நம் முதுகின் மேலேயே சவாரி செய்வது தான் அவர்களின் குறிக்கோள்...
இப்போது நடக்கும் அத்தனை குழப்பங்களுக்கும் இதுபோன்ற ஆசாமிகள் தான் காரணம்...
நட்பிலிருந்தால் விரட்டியடியுங்கள்...
அவர்களின் முகஸ்துதிகளுக்கு மயங்காதீர்கள்...
வாத்தியாரைப் போற்றுவது மட்டுமே நம் குறிக்கோளாக இருக்கட்டும்...
நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் உஷாராயிருங்க....ஜாக்கிரதை!!!!!......... Thanks wa.,
-
1986 ஆம் ஆண்டு தமிழ்நாடு
மேல்சபை கலைக்கப்பட்டதில் மிகவும் வருத்தமடைந்தவர் ம.பொ.சி! அப்போது, மேல்சபைத் தலைவராக அவர்தான் இருந்து வந்தார். அரசின் முடிவை கடுமையாக எதிர்த்தார். முதல்வர் எம்.ஜி.ஆரையும் விமர்சித்தார்.
எம்.ஜி.ஆரின் நண்பரான டாக்டர் பழனி ஜி.பெரியசாமி, ம.பொ.சி.க்கும் நெருக்கமானவர். அவரை அடிக்கடி சந்தித்துப் பேசுவார். அவர் ம.பொ.சி-யை சந்தித்தபோது, ‘‘மேல்சபை கலைப்பு முடிவுக்காக எதற்காக எம்.ஜி.ஆரை விமர்சிக்கிறீர்கள்?’’ என்று கேட்டார்.
பொதுவாழ்வில் ம.பொ.சி. தூய்மையானவர். தனக்கென்று எந்த சொத்து சுகமும் சேர்க்காதவர். ‘‘மேல்சபைத் தலைவர் பதவி போய்விட்டால் மாதம்தோறும் எனக்கு கிடைக்கும் சம்பளமும் போய்விடும். எனக்கு இப்போது அரசாங்க கார் இருக்கிறது. அந்தக் காரும் இருக்காது.
வயது முதிர்ந்த காலத்தில் வெளியே செல்ல வேண்டு மானால் என் பாடு திண்டாட்டம்’’ என்று பழனி பெரியசாமியிடம் கூறி ம.பொ.சி. வருத்தப் பட்டிருக்கிறார். ம.பொ.சி. யாரிடமும் எதுவும் கேட் டுப் பழகாதவர். எம்.ஜி.ஆர். வீட்டுக்கு சென்றால் அவரிடம் எதுவும் கேட்கக் கூடாது என்று தனது மகள் மாதவி பாஸ்கரனிடம் சொல்லி அனுப்புவாராம்.
ம.பொ.சி. தன்னிடம் வருத்தப்பட்ட அன்று இரவே எம்.ஜி.ஆரை பழனி பெரியசாமி சந்தித் தார். விஷயத்தைச் சொன்னார். எம்.ஜி.ஆர். ‘‘அப்படியா?’’ என்று கேட்டுக் கொண்டாரே தவிர, எதுவும் சொல்லவில்லை.
அந்த சமயத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவுக்கு ம.பொ.சி. சென்றார். அங்கு, பழனி பெரியசாமியின் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது, எம்.ஜி.ஆரிடமிருந்து தொலைபேசி அழைப்பு. போனை எடுத்த பழனி பெரியசாமியிடம் பேசிவிட்டு ம.பொ.சி-யிடம் கொடுக்கச் சொன்னார் எம்.ஜி.ஆர்.
ம.பொ.சி-யிடம் நலம் விசாரித்து விட்டு, அமெரிக்காவை நன்கு சுற்றிப் பார்க்கும்படியும் ‘ஷாப்பிங்’ சென்று தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளும்படியும் இதுகுறித்து பழனி பெரியசாமியிடம் சொல்லியிருப்பதாக வும் எம்.ஜி.ஆர். கூறினார்.
பின்னர், அமெரிக்காவில் இருந்து ம.பொ.சி. திரும்பியபின் ஒருநாள்,
கோட்டையில் இருந்து வீட்டுக்குக் காரில் புறப்பட்ட எம்.ஜி.ஆர்., திடீரென ம.பொ.சி-யின் வீட்டுக்குச் சென்றார். முதல்வரின் எதிர்பாராத வருகையால் ம.பொ.சி. மகிழ்ச்சி அடைந்தார். அவரிடம் அமெரிக்க சுற்றுப்பயணம் பற்றி விசாரித்துவிட்டு புறப்படத் தயாரானார் எம்.ஜி.ஆர்.
ம.பொ.சியும் வழியனுப்ப எழுந்து கொள்ள, அவரின் கையில் ஒரு சாவியை எம்.ஜி.ஆர். திணித்தார். புரியாமல் பார்த்த ம.பொ.சி-யிடம், ‘‘இது கார் சாவி. உங்களுக்கு அரசாங்கம் கார் கொடுத்திருக்கிறது. மேல்சபை தலைவராக இருந்தபோது உங்களுக்கு வழங்கப்பட்ட மாதச் சம்பளமான ரூ.15,000 தொடர்ந்து கிடைக்கும்.
அந்த பதவியில் இருந்த எல்லா சலுகைகளும் வசதிகளும் உங்களுக்குத் தொடரும். உங்களை தமிழ் வளர்ச்சித்துறைத் தலைவராக நியமித்திருக்கிறேன்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார். உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்க நின்றார் ம.பொ.சி.
சிலருக்குத்தான் சில பட்டங்கள் பொருத்தமாக அமையும். அப்படி எம்.ஜி.ஆருக்கு என்றே மிகப் பொருத்தமாக அமைந்தது, திருமுருக கிருபானந்த வாரியார் வழங்கிய பட்டமான ‘பொன்மனச் செம்மல்.’
- தி இந்து .
*ம.பொ.சி பிறந்த நாள் நேற்று.......... Thanks wa.,
.
-
#நல்லதைச் #செய்ய #நேரம் #காலமா?
திருவேற்காடு கோயிலில் சமபந்தி போஜனத்துக்காக முதல்வர் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் வந்தபோது, அவர் முன்னிலையில் பல ஜோடிகள் திருமணம் செய்து கொள்ள வந்திருந்தனர். தலைவர் தன் பொற்கரங்களால் தாலி எடுத்துக்கொடுக்க, திருமணங்கள் சிறப்பாக நடந்துகொண்டிருந்தன.
அப்படி நடந்துகொண்டிருக்கும் போது ஒரு தம்பதி, மணமகனிடமிருந்து தாலியைக் கையில் வாங்கிய எம்ஜிஆர் ஒரு நிமிடம் அதிர்ச்சியுற்றார். ஏனெனில் அந்தத் தாலி கவரிங்கில் செய்யப்பட்டிருந்தது. அத்தம்பதிகளின் ஏழ்மை நிலையை விசாரித்த செம்மல் கண்கலங்கி விட்டார்..
"தாலிக்குத் தங்கம் பயன்படுத்துவதற்குக் காரணம், புனிதமான அந்த மாங்கல்யம் துருப்பிடிக்காமல் சுத்தமாக இருக்கும்...அதுபோல அவர்களின் வாழ்வும் துரு என்னும் துன்பம் நேராமல் செழிக்கும் என்பதற்காகத் தான் பெரியோர்கள் அக்காலத்தில் வழிவகுத்துள்ளார்கள்...
அதனால் கவரிங் நகையில் தாலியைப் போடுவதா ? என்று வருந்தினார்...
அடுத்த சில நிமிடங்களில், "கோவில்கள் சார்பில் ஏழைகளின் திருமணமோ, கலப்புத் திருமணமோ செய்துகொள்ள விரும்புபவர்களுக்கு தங்கத்தில் தாலி செய்து கொடுக்கவேண்டும்..." என்று அந்த இடத்திலேயே ஆணையிட்டார்...
மேலும் ஆதரவற்ற பெண்களுக்கு "திருமண நிதி உதவித்திட்டம்", தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்தியதோடு, ஆதரவற்ற விதவைத் தாய்மார்களின் பெண்களுக்கு ₹1000/- உதவித்தொகையும் வழங்க உத்தரவிட்டார்.
இப்படி மக்களின் குறைகளைப் பார்த்து...பார்த்து...பார்த்து...வருந்தி...
அதன் மூலம் தான் தனது ஒவ்வொரு மக்கள் நலத்திட்டத்தையும் உருவாக்கி செயல்படுத்தினார்...
மேலும் அந்த முடிவை..ஸ்பாட்டிலேயே எடுத்துவிடுவார். நல்லதை செய்ய நாள், நேரம், காலம் பார்க்கமாட்டார்........... Thanks wa.,
-
சிவா ஆரம்பத்திவிட்டார்.
அதாவது "கோட்டை இல்லை . கொடியும் இல்லை.. எப்பவுமே சிவாஜிதான் ராஜா......கட்சி ஆட்சி எதுவும் இல்லாமல் இறந்து 18 ஆண்டு கழிந்த பின்னரும் ஆர்ப்பரிப்போடு கொண்டாடும் ஒப்பற்ற சிவாஜி படை"
கோட்டையும்][சூரக்கோட்டை] கொடியும், தாடியும் "இருந்தது" ஒன்றும் எடுபடவில்லை!!! ராஜா திரைப்படத்தில் நடித்ததால் ஒருவர் ராஜாவாக முடியாது!!! கட்சி ஆட்சி எப்படி இருக்கமுடியும் ...ஒருவர் கூட தேறவில்லை...அதற்கு அவரது கழகத்தின் உறுப்பினர் மீதி பழியை போட்டுவிட்டு கட்சி மூடப்பட்டது அப்புறம் ஜனதா தளம் அதுவும் "டுமீல்" - எனவே சிவாஜி படையும் ..... "பட்டை" என்பது தானே பொருந்தும் ........ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் ...எது இருந்தால் போதும்....குடிமகனே பெரும் குடிமகனே.
தெளிந்த பின் நிதானத்துடன் "தெளிவாக எழுதவும்". ........ Thanks wa.,
-
கதாநாயகனாக நடித்த [ ராஜாவாக] கடைசியில் சிறு கதா பாத்திரங்களில் [சிப்பாயாக] நடிகர் திலகம் நடித்தார்... ஆனால் அதில் அவருக்கு "உடன்பாடு இல்லை"... என்பதற்கு இதைவிட ஆதாரம் தேவையா!!!!
அப்படி சிப்பாயாக நடிக விருப்பம் இல்லை ...என்றால் எதற்கு நடித்தார்???? உடனே கலை மீது இருந்த ஆர்வம் என்று சிலர் சொல்லுவார்கள்!!! ஆனால் இந்த காணொளி கட்சி அப்படி சொல்லவில்லையே!!!(Actor Sivakumar Interview)...... Thanks wa.,
-
Pudhiya Boomi
Theatrical Poster
Directed by
Chanakya
Produced by
P. K. V. Shankaran
Aarumugam
Written by
S. S. Thennarasu
Screenplay by
V. C. Guhanathan
Starring
M. G. Ramachandran
Jayalalitha
Sheela
M. N. Nambiar
Nagesh
Music by
M. S. Viswanathan
Cinematography
P. N. Sundaram
Edited by
R.Devarajan
Production
company
J. R. Movies
Distributed by
Jayanthi Films
Release date
27*June*1968
Running time
165 mins
Country
India
Language
Tamil
Budget
₹ 20*lakhs
Box office
₹ 50*lakhs......... Courtesy : wa.,
-
நேற்று 26-06-1950 - 26-06-2019 மக்கள் திலகம் காவியம் "மந்திரி குமாரி" 69 ஆண்டுகள் நிறைவு கண்டு 70ம் வருடம் துவக்கம்... மகத்தான படைப்பு...
-
அறிஞர் அண்ணாவுக்குச் சிலை வைக்க நினைத்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அண்ணாவைப் போட்டோ எடுத்துவரச் சொன்னார். புகைப்படம் எடுப்பவரிடம் அண்ணா 5 விரலைக் காட்டி புகைப்படம் எடுக்கச் சொன்னார். அதற்கு,” உங்களை ஒரு விரல் காட்டித்தான் படம் எடுத்து வரச் சொன்னார். ” என்றார் போடோகிராபர். அண்ணாவுக்கு அதன் அர்த்தம் புரியவில்லை. ”சரி, தம்பி ராமச்சந்திரன் சொன்னால், அதற்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கும். ” என்று ஒரு விரல் காட்டி, போட்டோவுக்குப் போஸ் கொடுத்தார். பிறகு புரட்சித்தலைவர் எம்.ஜி. ஆரைப் பார்த்தபோது, ”ஐந்து விரலை விரித்துக் காட்டினால், நம் கழகத்தின் சின்னத்தைக் குறிக்கும். ஒரு விரலை காட்டினால் என்ன அர்த்தம்?” என்று கேட்டார். ”ஒன்றே குலம்; ஒருவனே தேவன் என்ற உங்கள் பொன்மொழியை மக்கள் புரிந்து கொள்வார்கள். ” என்றார் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சிலாகித்துப்போன அண்ணா புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரைப் பாராட்டி மகிழ்ந்தார்........... Thanks wa.,
-
அடிமைப் பெண் !
___________________
இந்த ஒரு படத்தின் உழைப்பிற்கு மட்டுமே மக்கள் திலகத்திற்கு வாழ்நாள் சாதனையாளர் பட்டம் அளிக்கலாம் ..........
இந்த படம் ஒடினால் நான் மன்னன் இல்லையேல் நாடோடி என்று நாடோடி மன்னன் படத்திற்காக கூறினார்... ஆனால் மற்ற இரண்டு படங்களுக்கும் இது தான் நிலமை ...
இவர் மேலை நாட்டில் பிறந்திருந்தால் ? இங்கு கிடைத்த அங்கிகாரத்தைவிட பல மடங்கு கிட்டியிருக்கும் ...
அம்மையார் இந்த பாட்டில் கலக்கிருப்பார் ...
ஹயாத் !........... Thanks wa.,
-
பேரறிஞர்அண்ணா அவர்கள் ஒரு முறை வேலூர் பொதுக்கூ.ட்டத்தில் கலந்துக்கொண்டு விட்டு சென்னைக்கு வந்துக்கொண்டுருந்தார்... வரும் வழியில் புரட்சித்தலைவர் நடித்த" காவல்காரன்" படத்தில் இடம்பெற்ற பாடல் அவர் காதில் ரீங்காரம் இட்டது... பாடல் வந்த திசையில் நோக்கி சென்று வண்டியே நிறுத்த சொன்னார் ...அப்போதுத்தான் காவல்காரன் வெளி வந்து வசூலில் சாதனை செய்துக்கொண்டிருந்தது.வண்டி ஒரு தியேட்டர் அருகே சென்று நின்றது. தியேட்டர் அதிபர் அழைத்து தான் வந்த செய்தி யாரிடமும் கூற வேண்டாம். நான் மக்களோடு சேர்ந்து படம் பார்க்க போகிறேன் என்று கூறி தியேட்டர்க்குள் சென்று காவல்காரன் படம் பார்த்தார் ..படம் ஆரம்பம் முதல் இறுதி வரைக்கும் கைத்தட்டல் விசில் சத்தம் காதைபிளந்தது மக்கள் மகிழ்ச்சி கடலில் மூழ்கி ஆரவாரம் செய்தனர். காட்சிக்கு காட்சி வாத்தியாரே தலைவா என்ற குரல்கள் ஒலித்துக்கொண்டே இருந்தது
அண்ணா படம் பார்க்காமல் மக்களின் சந்தோஷம் மகிழ்ச்சி கண்டு பூரிப்பு அடைந்தார் எத்தனையோ கவலைகள் பிரச்சினைகள் மறந்து இந்த மூன்று மணி நேரத்தில் அடையும் மகிழ்ச்சி கண்டு வியந்தார் ஆச்சரியம் அடைந்தார். படம் முடிந்தவுடன் தனது அலுவலகம் சென்று நான் உடனே காவல் காரன் படம் பார்க்கனும் அதற்க்கான ஏற்பாடு செய்யுங்கள் என்றார் .அப்போது உடன் வந்தவர் கே.ட்டார் .ஐயா இப்போதுத்தான் தியேட்டரில் சென்று படம் பார்த்தோம் மீண்டும் பார்க்க. வேண்டும் என்கிறீர்களே என்றார்
அதற்கு பேரறிஞர் அண்ணா தந்த விளக்கம் நான் படம் பார்க்கனும் என்றுத்தான் சென்றேன் ஆனால் மக்களின் சந்தோஷம் ஆரவாரம் மகிழ்ச்சி கண்டு அவர்களைத்தான் ரசித்தேன் எம். ஜி. ஆர் மீது அவர்கள் வைத்திருந்த உண்மையான அன்பு பற்று பாசம் கண்டு பெருமிதம் கொண்டேன்.ஒரு திரைப்படத்துக்கு தேவையான அத்தனை அம்சமும் எம். ஜி.ஆர் மக்களுக்கு தந்து அவர்கள் மனம் திருப்தி ஏற்படுத்தியுள்ளார் இதைவிடப் ஒரு திரைப்படத்துக்கு என்ன தகுதி வேண்டும் ..மக்களின் உண்மையான சந்தோஷம்தான் சிறந்த விருதுக்கான தகுதியான படம் ஆகும் இந்த ஆண்டு சிறந்த திரைப்படம் காவல் காரன் என்று அறிவியுங்கள் என்றார் மக்கள் ரசித்த திரைப்படம் நானும் ரசிக்க விரும்புகிறேன் என்றார் ...
பின்குறிப்பு.... ...புரட்சித்தலைவர் விவசாயி திரைப்படம் தேர்ந்தெடுக்க சொன்னார் காரணம் காவல் காரன் தனது சொந்த கம்பேனி சத்யா மூவிஸ் என்பதால் பலர் தவறான கருத்து கூறுவார்கள் என்பதால் விவசாயி திரைப்படம் சொன்னார்.
ஆனால் அண்ணா அதற்க்கெல்லாம் இடம் தராமல் காவல் காரன் முன்பே அறிவித்தால் அதுவே சிறந்த படமாக தேர்ந்தெடுத்தார்..........
நன்றி,: குணசேகர் சகோ........ Thanks wa.,
-
இந்தப் பாடல் காட்சியில் ( புதிய பூமி... "சின்னவளே, முகம் சிவந்தவளே" பாடல் காட்சி ) டிஎம்எஸ் ஐயா அவர்களும் சுசீலாம்மா அவர்களும் மிகவும் சிறப்பாக பாடி உள்ளனர்... புரட்சித் தலைவரும் பாடல் முழுதும் சிரித்துக்கொண்டே இருப்பார் சிரித்த முகத்துடன் பாடலுக்கு வாய் அசைப்பது என்பது பொதுவாகவே ...புரட்சித்தலைவர் மட்டும்தான் அனைத்து படங்களிலும் செய்து காட்டி இருப்பார் மேலும் செல்வி ஜெயலலிதா அவர்கள் இந்த படத்தில் சிறந்த நடனமாடி இருப்பார். ....நன்றி.
குருராஜன். டிஎம்எஸ் பக்தர்தளம்......... Thanks wa.,
-
புகழ் எனும் மாயையே உணர்ந்த ஒரே தெய்வம். எம் .ஜி.ஆர் .,மட்டுமே அது எந்த வடிவில் நடமாடும் என்பதை நன்கு அறிந்து வாழ்ந்து கொண்டிருப்பவர் எம்ஜிஆர். அதை உணராத சிவாஜி ரசிகர்கள் அன்றும் சரி இன்றும் சரி எம்ஜிஆரை தோற்கடித்து விடலாம் என்று நினைத்து மாயையில் உழன்று கொண்டிருக்கிறார்கள். உண்மை தலைவனை தோற்கடிக்க யாராலும் முடியாது. உண்மையான வழியில் தலைவர் எம்ஜிஆர் சொன்ன வழியில் அவருக்கு புகழ் சேர்ப்பவர்கள் எம்ஜிஆர் பக்தர்கள். இப்படி பொய்யும் புரட்டும் துணையாய்க் கொண்டு பிழைப்பவர் எல்லாம் மூலைக்கு தான் போக வேண்டும். அன்றைய காலகட்டத்தில் காங்கிரஸ் வலுவான நிலையில் இருந்ததால் புரட்சித் தலைவர் திரைப்படங்களை சிறந்த திரைப்படமாக தேர்ந்தெடுக்காமல் சேட்டை செய்தது. கணேசன் காங்கிரஸ் இருந்ததால் கணேசன் திரைப்படத்தை மற்றும் நல்லதென்று தேர்ந்தெடுத்தது. அதனால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திரையரங்கு உரிமையாளர்கள் கணேசன் திரைப்படத்தை மட்டும் எடுக்காமல் வேண்டுமென்றே அதிக நாட்கள் ஓட்டினார்கள். ஆனால் பார்த்த மக்கள் தொகையும் மிக கம்மி தான் ஆனால் அன்றும் அதிகம் என்று பொய் பிரச்சாரம் செய்தார்கள் என்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. வாத்தியார் எம்ஜிஆர் திரைப்படங்களை மட்டும் வேண்டுமென்றே சில திரையரங்குகள் கொஞ்ச நாட்களிலேயே எடுத்துவிட்டன. ஆனால் , திரையரங்கில் வாத்தியார் படத்தை பார்த்த மக்கள் தொகையும் வசூலும் முதல் இடத்தில் நிற்கும். இதிலிருந்து அவர் உண்மையான அன்பு வசூல் சக்ரவர்த்தி மக்கள் நடிகர் என்பது தெரியும். கொள்கையோடு இருந்து மக்களை வாழ்வித்த தால் மக்களும் அவர் கொள்கைப்படி என்றும் நடந்து வருகிறார்கள். ஆனால் கணேசன் ரசிகர்கள் அப்படி இல்லை காரணம் அவர்கள் தலைவனே படங்களில் மோசமான காட்சிகள் நடித்து ரசிகர்களை கெடுத்து விட்ட காரணத்தால். மாயையில் சிக்கி தவிக்கும் கணேசன் ரசிகர்களுக்கு தன் தலைவன் திரையில் நடித்த காண்பித்த "உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும் நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்" என்ற தத்துவத்தை உணராத திலிருந்து தெரிகிறதா கொள்கையற்ற சிவாஜி புகழ் நிலையற்றது. உண்மையான கொள்கையுள்ள எம்ஜிஆர் புகழ் என்றும் நிலையானது. வாழ்க எம். ஜி .ஆர் .,புகழ்!.............. Thanks wa.,
-
பழனி- சாமி DTS தினசரி 4 காட்சிகள் 28.06.2019
வெள்ளிமுதல் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் இருவேடத்தில் தூள்கிளப்பிய வெள்ளிவிழாக்காவியம் "எங்கவீட்டுப்பிள்ளை " வெற்றி. வெளியிடு ............மதுரை எஸ்.குமார்........ Thanks wa.,
-
சிவாஜியைப் பற்றி எழுதி நம் நேரத்தை வீண்டிக்க வேண்டாமே, யாருமே சிவாஜியை நினைப்பதில்லை ....
தயவுசெய்து எவனோ எழுதினான் என்று நாம் எழுதி பிரபலப்படுத்தவேண்டாமே, யார் வசூல் சக்கரவர்த்தி, யாரை மக்கள்விரும்பி நேசித்தார்கள், யார் இன்றுவரை மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.....என்பது தமிழ் உள்ளவரை தெரியும், மக்களால் மறந்து விட்ட நபரை ஞாபகப்படுத்த வேண்டாமே........ 22 வயது வாலிபரின் கருத்தை பதிவிட்ட மதுரை திரு S. குமார் அவர்களுக்கு நன்றி. ....... Thanks wa.,
-
தலைவரின் பள்ளி பருவ
நினைவலைகள்
சிறிய வயது முதல் நடந்த
வாழ்க்கை பயண
போராட்டத்தில் தடம் பதித்து
எந்த ஆதரவும் பின்புலம் இல்லாமல்
ஒரு மனிதன்
உச்சம் தொட முடியுமா
படித்து பாருங்கள்
எம்.ஜி.ஆருடன் கருத்து மாறுபட்டவர்கள் கூட அவரது நல்ல இயல்புகளை உணர்ச்சி பரவசத்துடன் சொல்கிறார்கள். மொத்தத்தில்
பல ஆண்டுகளுக்கு முன்பே மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
என்று 'தெய்வத்தாய்' படத்தில் எம்.ஜி.ஆர் பாடி நடித்ததை நிரூபிப்பதைப் போல அவரது வாழ்க்கை அமைந்துவிட்டது.
இத்தனை சாதனை மனிதராக விளங்கிய எம்.ஜி.ஆர். பிறந்தது 1917 ரேவதி நட்சத்திரத்தில்.
எம்.ஜி.ஆருக்கு இரண்டு மூத்த சகோதரிகளும், இரண்டு மூத்த சகோதரர்களும் உண்டு.
முதலாவதாக பிறந்த சகோதரி பெயர் காமாட்சி. இரண்டாவதாக பிறந்த மூத்த சகோதரர் பெயர் பாலகிருஷ்ணன். மூன்றாவது சகோதரி சுமித்ரா, நான்காமவர் தன சக்கரபாணி.
பாலகிருஷ்ணனும், சுமித்ராவும் இலங்கையில் இருக்கும்போதே இறந்துவிட்டார்கள். எம்.ஜி.ஆர்க்கு இரண்டு வயதான போது மீண்டும் தாயகம் திரும்பினார்கள் பெற்றோர். நெருங்கிய உறவினர்கள் ஆதரிக்காத நிலையில் அப்பா கோபாலன் காலமானார். அதனால் தன் உறவினர் சிலர் ஏற்கனவே குடியிருத்த கும்பகோணம் நகருக்கு தாயார் சத்யபாமா தன் குழந்தைகளோடு வந்தார்.
கும்பகோணத்தில் உறவினர்கள் வேலு நாயரும், மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் பின்பாட்டு பாடியவரான நாராயண நாயரும் சத்தியபாமா குடும்பத்துக்கு உதவியாக இருந்தார்கள். எம்.ஜி.ஆரும் சக்கரபாணியும் கும்பகோணத்திலுள்ள ஆனையடி பள்ளியில் சேர்க்கப்பட்டார்கள். அங்கு எம்.ஜி.ஆர். மூன்றாவது வகுப்பு வரை தான் படிக்க முடிந்தது. அதற்குமேல் படிக்க குடும்பத்திலுள்ள வசதியின்மை இடம் கொடுக்கவில்லை.
பள்ளியில் படித்தபோது எம்.ஜி.ஆர். பள்ளியில் நடந்த 'லவகுசா' என்ற நாடகத்தில் லவனாக நடித்தார். இது தான் எம்.ஜி.ஆர். நடித்த முதல் நாடகமும்,முதல் வேடமும் ஆகும். அப்போது மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி நாடகக்குழு கும்பகோணத்தில் முகாமிட்டிருந்தது. 'லவகுசா' நாடகத்தில் எம்.ஜி.ஆரின் நடிப்பைப் பார்த்த நாராயண நாயர், மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியாரிடம் எம்.ஜி.ஆரின் அழகிய தோற்றத்தையும், சுறுசுறுப்பையும் கூறி கம்பெனியில் சேர்த்துக் கொள்ள சிபாரிசு செய்தார்.
தன்னையும் சேர்த்துக் கொண்டால்தான் தம்பியை நடிக்க அனுமதிக்க முடியும் என்று சக்ரபாணி சொல்ல, இருவரும் நாடகக் குழுவில் சேர்க்கப்பட்டனர். "படிக்க வேண்டிய வயதில் என் பிள்ளைகளை நடிக்க வைத்து பிழைக்கும் நிலைக்கு ஆளாகிவிட்டேனே" என்று எம்.ஜி.ஆரின் தாயார் கண் கலங்கினாராம்.
ஆரம்பத்தில் எம்.ஜி.ஆருக்கு கும்பலில் ஒரு வேஷம். வாரத்துக்கு நாலரை சிபாரிசில் எம்.ஜி.ஆருக்கு நல்ல வேஷங்கள் கிடைத்தன. கம்பெனியில் சகோதரர்களின் நண்பர் பி.யூ.சின்னப்பா, சின்னப்பா ராஜ்பார்ட் ஆனதும் அவருக்கு ஸ்திரீ பார்ட்டாக எம்.ஜி.ஆர். நடித்தார்.
நாடகக்குழு சேர்ந்து எம்.ஜி.ஆர். நடித்த முதல் நாடகம் மகாபாரதம். நடித்த வேடம் அபிமன்யு. பதினைந்து வயதுக்குள்ளாக எம்.ஜி.ஆர் அந்த கம்பெனி நடத்திய 30 நாடகங்களுக்கு மேல் நடித்து புகழ் பெற்றார்.
இதற்கிடையே கும்பகோணத்தில் இருந்த அவருடைய குடும்பம் சென்னைக்கு வர நேர்ந்தது. சென்னை வால்டாக்ஸ் ரோட்டில் எம்.ஜி.ஆர். தன் குடும்பத்துடன் வசித்து வந்தார். அங்கு இருக்கும் போதுதான் எம்.ஜி.ஆரின் மூத்த சகோதரி காமாட்சி தனது பதினாறாம் வயதில் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார்.
சகோதரியின் மறைவு எம்.ஜி.ஆரை மிகவும் பாதித்தது. அதுமட்டுமல்ல, ஒரிஜினல் பாய்ஸ் கம்பேனியார் நாடகங்களை சரிவர நடத்த முடியாத நிலையில் தத்தளித்ததால் எம்.ஜி.ஆர் வருமானமின்றி அவதிப்பட்டார்.
அப்போது வெற்றிகரமாக நடந்து கொண்டிருந்த உறையூர் மொய்தீன் நாடகக் கம்பெனியில் சேர எம்.ஜீ.ஆர்., சக்ரபாணி இருவருக்குமே அழைப்பு வந்தது. அழைப்பை இருவரும் ஏற்றுக் கொள்ள ஒரு காரணமும் உண்டு.
ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் எம்.ஜி.ஆருக்கு நல்ல மதிப்பு இருந்தபோது அவரது தொண்டை தகராறு செய்தது. மகரக்கட்டு ஏற்பட்டது. குரல் உடைந்தவர் இனிமையாக பாட முடியாது என்பதால் மதிப்பு குறையும் என்பதறிந்து எம்.ஜி.ஆர்., தன் கவுரத்தை இழக்க விரும்பாமல் 1930-ல் விலகி, மொய்தீன் கம்பெனி குழுவுடன் ஸ்பெஷல் நாடகங்களில் நடிக்க பர்மாவின் தலைநகர் ரங்கூனுக்கு புறப்பட்டார்.
ரங்கூனுக்கு திரும்பிய எம்.ஜி.ஆரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி முதலாளி மீண்டும் அழைத்தார். எம்.ஜி.ஆரும் சேர்ந்தார். தொண்டை உடைந்து போனதால் கதாநாயகன் வேஷங்களைத் தன்னால் சமாளித்துக்கொள்ள இயலாது என்று உணர்ந்த எம்.ஜி.ஆர். வீர விளையாட்டுக்களைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினார்.
கத்திச் சண்டை, கம்புச் சண்டை போன்ற வீர விளையாட்டுகளில் பயிற்சி பெற்றார். எம்.ஜி.ஆருக்கு மட்டுமின்றி நம்பியார், பி.யூ.சின்னப்பா ஆகியோருக்கும் இந்த பயிற்சிகளை அளித்த குரு 'காளி' என்.ரத்தினம் ஆவார்.சினிமாவில் நகைச்சுவை நடிப்பில் ஆரம்ப கால முன்னணி நடிகர் அவர். அவரது காதல் மனைவி தான் நகைச்சுவை நடிகை சி.தி.ராஜகாந்தம்.
இந்த சமயத்தில் தான் 'சதிலீலாவதி' படத்தில் நடிக்க முதலாளி எம்.கந்தசாமி முதலியார் எம்.ஜி.ஆரை சிபாரிசு செய்து இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிக்க வைத்தார். இவரது மகன் தான் நடிகர் எம்.கே.ராதா- சதிலீலவதியின் நாயகன் ராதா.
அதைத் தொடர்ந்து டி.எஸ்.பாலையா கதாநாயகனாக நடித்த 'இரு சகோதரர்கள்' படத்தில் எம்.ஜி.ஆர் மட்டுமின்றி, சக்கரபாணியும் நடித்தார். தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு தக்ஷ்யங்கம், வீர ஜெகதீஸ், மாயமச்சீந்திரா, பிரகலாதன், அசோக் குமார், சீத ஜனனம், தாசிப்பெண், ஹரிச்சந்திரா, பைத்தியக்காரன், மீரா, சாலிவாகனன், ஸ்ரீமுருகன் ஆகிய படங்களில் சிறு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
'saalivaganan' படத்தின் கதாநாயகன் ரஞ்சன். அவருக்கு எதிரான விக்கிரமாதித்தன் வேடம் எம்.ஜி.ஆருக்கு அவரது மந்திரி பட்டியாக சின்னப்பாதேவர் நடித்தார்.
அதன்பிறகு ஜுபிடர் பிக்சர்ஸில் மாத சம்பளத்துக்கு எம்.ஜி.ஆர். நடித்துக் கொண்டிருந்தார். 'ராஜகுமாரி' என்ற படத்தில் பி.யூ.சின்னப்பா, டி.ஆர்.ராஜகுமாரியை நடிக்க வைப்பதற்கு ஜுபிடர் பிக்சர்ஸார் திட்டமிட்டார்கள்.
குறைந்த பட்ஜெட்டில் படமெடுக்க யோசனை சொன்ன இயக்குனர் ஏ.எஸ்.ஏ.சாமி, "ஸ்ரீமுருகன் படத்தில் எம்.ஜி.ஆரும், மாலதியும் பரமசிவன்-பார்வதியாக அற்புதமாக நடித்திருக்கிறார்கள். பொருத்தமான ஜோடியாகவும் இருக்கிறார்கள். அவர்களையே கதாநாயகன்-கதாநாயகியாக நடிக்க வைத்து விடலாம்" என்றார்.
செய்தியைக் கேள்விப்பட்ட எம்.ஜி.ஆரால் நம்ப முடியவில்லை. தயாரிப்பாளர் ஒப்புக்கொள்ள படப்பிடிப்பு துவங்கியது. படத்திற்கு வசனம் கலைஞர் மு.கருணாநிதி.
'ராஜகுமாரி' படத்தின் வெற்றி அவரை மக்கள் மத்தியில் பிரபலமடையச் செய்தது. வீரத்தின் விளை நிலமான தமிழ் மக்களுக்கு எம்.ஜி.ஆரின் வீரமிக்க நடிப்பு நிறைந்த படங்கள் உற்சாக மூட்டின.
எம்.ஜி.ஆர்., சக்ரபாணி இருவரும் படித்தது கும்பகோணத்திலுள்ள ஆனையடி நகராட்சி பள்ளியில், அன்றைக்கு பள்ளியானது கூரைக் கட்டிடத்துடன் இருந்தது
எதிரே காயான் குளம். அந்த இடம் இப்போது காந்தி பார்க்காக மாறிவிட்டது. பள்ளி இருந்த இடம் கிளப்பாகி இருக்கிறது. இப்போது உள்ளபள்ளிபழையஇடத்திலிருந்துசற்றுஇடம்உபெயர்ந்திருக் கிறது.
அந்த இடம் இப்போது கும்பகோணத்தில் 'நாகேஸ்வரம் வடக்கு வீதி' என அழைக்கப்படுகிறது. முன்பிருந்தது அடுக்கு மாடி கடைகளாக மாறிவிட்டன.
கும்பகோணத்தில் எம்.ஜி.ஆர். குடும்பம் இருந்த போது அவர்களுக்கு உதவியாக இருந்தவர் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் பின்னணி பாடும் நாராயணன் நாயர்.
ஆனையடி பள்ளியில் எம்.ஜி.ஆரையும் சக்கரபானயையும் சேர்ந்தது அவர்தானாம். பள்ளியில் படிக்கும் போது எம்.ஜி.ஆர். மேல் சட்டை இடுப்பில் (துண்டு போல்) சிறு வேஷ்டி, தோளில் சிறு துண்டு அணிந்து நடந்து செல்வதை பார்க்கவே கண் கொள்ளாக் காட்சியாக இருக்குமாம்.
எம்.ஜி.ஆருக்கு படிப்பில் இருந்த ஆர்வம் போல விளையாட்டில் அதிக ஆர்வம் உண்டாம். அவருக்கு பிடித்தமான இனிப்பு சவ் மிட்டாய். எம்.ஜி.ஆரிடம் காசில்லாத போது வசதி படைத்த பள்ளித் தோழர்கள் வாங்கித் தந்திருக்கிறார்களாம்.
கும்பகோணத்தில் அசேன், உசேன் என்ற இரட்டையர் குச்சி சண்டை, அடி தடி என எல்லா வகை சண்டையும் போடுவார்கள். அதைப்பார்க்க எம்.ஜி.ஆர். மிகுந்த ஆர்வம் காட்டுவாராம்.
பள்ளியில் நடந்த 'லவகுசா' நாடகத்தில் எம்.ஜி.ஆரும் நடித்திருக்கிறார்.
இந்த நாடகம் தான் நாராயண நாயர் மூலம் எம்.ஜி.ஆரை மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சேர்க்கச் செய்தது.
பள்ளி பதிவேட்டில் எம்.ஜி.ஆரின் பெயர் ஜி.ராமச்சந்திரன் என்றும், தந்தை பெயர் கோபால மேனன் - பெரிய தெரு (வியாபாரம்) என்றும், எம்.ஜி.ஆர். பிறந்த தேதியாக 25-5-1916 என்றும் , வகுப்பு: மலையாளி என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததாம்.
எம்.ஜி.ஆர் பள்ளியில் சேர்ந்த தேதி 7-12-1922. முதல் வகுப்பு 'அ' பிரிவில், பள்ளியில் விட்டு வெளியேறியது நான்காம் வகுப்பு தொடங்கிய சில நாட்களில் 27-7-1925 என்றும் உள்ளதாம்.
எம்.ஜி.ஆர். தமிழக முதல்வரான பின் ஆனையடி பள்ளியில் அவரது உருவப்படத்தினை முனு ஆதி திறந்து வைத்தார்.
30-10-1977 ல் தஞ்சை மாவட்ட பட்டதாரி மாநாடு கும்பகோணத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள முதல்வர் எம்.ஜி.ஆர் வந்திருந்தார். அப்போது நேரில் சென்று ஆனையடி பள்ளியை சுற்றிப் பார்த்தவர் பள்ளிப்பதிவேட்டில் தனது பெயர், தான் பள்ளியில் சேர்க்கப்பட்ட மற்ற விவரங்களை பார்த்தார்.
எம்.ஜி.ஆரின் பள்ளி சீரியல் எண் 100 என்றும் சக்கரபாணியின் எண் 113 என்றும் இருந்ததாக எம்.ஜி.ஆரின் பள்ளித் தோழர் சுவாமிநாதனின் மகன் ஆதிமூலம் எம்.ஜி.ஆருடன் உடனிருந்து கவனித்ததாக குறிப்பிட்டார்.
நன்றி வள்ளியம்மை
புரட்சித் தலைவர் பக்தன் சேர்மக்கனி ........... Thanks wa.,
-
கோவை சண்முகா DTS., நாளை முதல் (28/06/2019) மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் ",இதய வீணை " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது..........மறு வெளியீடு சாதனை என்றால் இதுதான் சாதனையோ... சாதனை......... Thanks wa.,
-
புரட்சித்தலைவர், மக்கள் திலகம் அவர்களின் நெரு ங்கிய நண்பர் ஐயா சாண்டோ சின்னப்பா தேவர் அவர்கள் பிறந்த நாள் இன்று......28-06 தலைவரை வைத்து சினிமாப்படம் எடுக்க தயங்கியிருந்த அன்றைய காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த பணக்கார தயாரிப்பாளர்களுக்கு, எங்கள் எம். ஜி. ஆர். தான் உண்மையான வசூல் சக்கரவர்த்தி என்று நிரூபித்து காட்டிய பெருமை, ஐயா சின்னப்பா தேவர் அவர்களுக்கு உண்டு. ....தலைவருக்கு பெருமை சேர்த்த ஐயா அவர்களை வணங்கி ஆசி பெற்றுக்கொள்வோம்.
பாஸ்கரன்,
கலைவேந்தன் எம். ஜி. ஆர். பக்தர்கள் ......அறக்கட்டளை.......... Thanks wa.,
-
புரட்சித் தலைவரின்
சமூக கருத்துள்ள திரைப்பயணம்
எங்கே எப்படி எப்போது
ஆரம்பம் ஆனது
இந்த பதிவில் அதற்கான
விடையை காணலாம்
படித்து பாருங்கள்
"திருடாதே" படத்தின் மாபெரும் வெற்றி எனது திரை உலக வாழ்வுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது" என்று தனது சுயசரிதையில் எம்.ஜி.ஆர். குறிப்பிட்டிருக்கிறார்.
ஒரு மக்கள் நாயகனாக, ஏழைகளின் பாதுகாவலனாக, கஷ்டப்படுபவர்களின் காவல் தெய்வமாக அவர் மக்கள் மத்தியில் உருவாவதற்கான வலுவான பார்முலா இந்தப் படத்தில் தான் உருவானது எனலாம்.
வருடம் 1961. மார்ச் மாதம் 23ஆம் தேதி - மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த "திருடாதே" படம் வெளிவந்தது. கவிஞர் கண்ணதாசனின் சகோதரர் திரு. ஏ.எல். சீனிவாசன் அவர்கள் தயாரித்த இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு இணை சரோஜாதேவி. இந்தப் படத்துக்கு கதை வசனம் கண்ணதாசன் எழுதினர். இசை அமைத்தார் எஸ்.எம். சுப்பையா நாயுடு.
இதற்கு முன்பே என் தங்கை, மலைக்கள்ளன், தாய்க்கு பின் தாரம் ஆகிய படங்கள் வெளிவந்து இருந்தாலும் அவருக்கென்று ஒரு தனி பார்முலாவில் படங்கள் உருவாவதற்கு காரணமாக அமைந்த படம் "திருடாதே" படம்தான்.
இந்தப் படத்தில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதி டி.எம்.எஸ். பாடிய பாடல்
"திருடாதே பாப்பா திருடாதே" பாடல். சின்னஞ்சிறுவர்கள் மனதில் அழுத்தமாக பதிவாகும் அற்புத வரிகளை பாடலாசிரியர் அமைக்க அதற்கு படம் வெளிவந்து பல ஆண்டுகளைக் கடந்த பின்னாலும் நிலைத்திருக்கும் வண்ணம் அதி அற்புதமாக இசை அமைத்திருக்கிறார் எஸ்.எம். சுப்பையா நாயுடு.
பய உணர்ச்சி மழலை பருவத்தில் தானே ஆரம்பிக்கிறது. அப்போதே தன் திறமையின் மீது நம்பிக்கையை ஊட்டிவிட்டால்..? அவர்கள் வளரும்போது அந்த தன்னம்பிக்கையும் கூடவே வளர்ந்து விடுமே .. இதைத்தான் பாடலின் பல்லவியிலேயே கல்யாணசுந்தரம் ஊட்டிவிடுகிறார்
"திருடாதே பாப்பா திருடாதே - வறுமை நிலைக்கு பயந்துவிடாதே. திறமை இருக்கு மறந்துவிடாதே" -
சுப்பையா நாயுடுவின் இசையில் டி.எம்.எஸ். அவர்களின் குரலும் குழந்தைகளிடம் பரிவையும் கனிவையும் காட்டுகிறது. அற்புதமான ஆடம்பரமில்லாத ஆர்ப்பாட்டமில்லாத எளிமையான இசையும், பாவம் ததும்ப டி.எம். சௌந்தரராஜன் பாடியிருக்கும் விதமும் பாடலை நிலை நிறுத்தி இருக்கிறது.
"சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து. சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோதவறு சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ.
தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா அது திரும்பவும் வராம பாத்துக்கோ - திருடாதே பாப்பா திருடாதே."
எத்தனை எளிமையான அதே சமயம் குழந்தைகளுக்கு சொல்லவேண்டுமே என்ற கவனத்தோடு புனையப்பட்ட வார்த்தைகள்.
தவறுகளை திருத்திக்கொள்வதற்கும் அது திரும்பவும் வராமல் கவனமாக இருக்கவும் பாடலை அமைக்கும் போது பாடகரின் குரலும் பாடல் வரிகளை உணர்த்து பாடுகிறது. அந்த கருத்தை கவனமாகப் பதியவைக்கும் வகையில் இசை அமைப்பும் அமைந்து இருப்பது பாடலின் சிறப்பு.
"திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது.
அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது. என்கிற கவிஞர் திருட்டை ஒழிப்பதென்பது
" திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" - என்ற நிதர்சனமான உண்மையையும் பாடலில் உரைக்கிறார். எக்காலத்துக்கும் பொருந்தும் வரிகள்.
மனம் கண்டதையும் நினைக்காமல் இருக்க என்ன வழி?. பாடலின் கடைசி சரணத்தின் வரிகளில் டி.எம்.எஸ். அவர்களின் குரலை மெல்ல மெல்ல உச்சத்தில் ஏற்றி அழுத்தமாகப் பதிவு செய்கிறது பாடல்.
"உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா கெடுக்குற நோக்கம் வளராது - மனம் கீழும் மேலும் புரளாது."
அளவான இசைக்கருவிகளைப் பயன்படுத்தி ஒரு அற்புதமான பாடலைக் கொடுத்திருக்கிறார் எஸ்.எம். சுப்பையா நாயுடு
தங்களது முந்தைய படத்துக்காக விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் இசையில் பதிவான ஒரு பாடலை படத்தின் நீளம் கருதி அந்தப் படத்தில் பயன்படுத்திக்கொள்ள தயாரிப்பாளர் ஏ.எல். சீனிவாசன் அவர்களால் முடியாமல் போனது.
அதனை தங்களது "திருடாதே" படத்தில் பயன்படுத்திக்கொள்ள விரும்பினார் அவர்.
பொதுவாக இசை அமைப்பாளர்கள் தங்கள் படத்தில் இன்னொரு இசை அமைப்பாளரின் பாடலைப் பயன்படுத்திக்கொள்ள மாட்டார்கள். அதுவும் வளர்ந்து வரும் இசை அமைப்பாளரின் பாடல் என்றால் கண்டிப்பாக சம்மதிக்கவே மாட்டார்கள்.
எனவே தயாரிப்பாளர் தரப்பில் ஒருவித தயக்கத்துடனே எஸ்.எம். சுப்பையா நாயுடு அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
"பாட்டு யார் போட்டது?" சுப்பையா நாயுடுவின் கேள்வி இது.
"விஸ்வநாதன்-ராம..." என்று முடிக்கக்கூடவில்லை.
"அட. நம்ம பையன் விஸ்வநாதன் போட்ட பாட்டா? அதுக்கென்ன? தாராளமா வச்சுகிட்டாப் போச்சு" என்று உற்சாகமாக சம்மத்திதார் சுப்பையா நாயுடு.
அந்தப் பாடல் தான் கண்ணதாசன் எழுதி பி. பி. ஸ்ரீனிவாஸ் - பி. சுசீலா பாடிய "என்னருகே நீ இருந்தால் இயற்கை எல்லாம் சுழலுவதேன்" - என்ற டூயட் பாட்டு.
படத்தின் டைட்டிலில் இரட்டையர்களின் பெயர் இடம் பெறவில்லை என்றாலும் இன்றுவரை திருடாதே படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடல் "விஸ்வநாதன்-ராமமூர்த்தியின்" பாடலாகத்தான் வலம் வந்துகொண்டிருக்கிறது.
மெல்லிசை வளர்ந்து வந்த காலத்திலும் தயாரிப்பாளர்களால் விரும்பப்படும் இசை அமைப்பாளராக அவர் இருந்தமைக்கு அவரது இந்தப் பரந்த மனப்பான்மையும் ஒரு காரணம்.
அதனால் தான் வருடத்திற்கு ஒன்றிரண்டு படங்களாவது அவரது இசையில் வெளிவந்து பாடல்களும் நிலைத்து நின்று திரை இசை உலகில் அவருக்கென்று ஒரு தனி இடத்தை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது
நன்றி வள்ளியம்மை
புரட்சித் தலைவர் பக்தன் சேர்மக்கனி .......... Thanks wa.,
-
பாவம்... மாற்று முகாம் ரசிக பிள்ளைகள் போன வார விளம்பரத்தில் உள்ள பெயர்களை அப்படியே போட்டுள்ளார்கள் போலிருக்கிறது. எப்பவும் செய்ற மாதிரியே இதுல தகிடுத்தனம். அப்புறம் வேற எப்படி செய்வாங்க?........ Thanks wa.,
-
நீ ஆண்டது
அரியணைக் கதிரையல்ல
மக்களின்
அன்பு மனங்களென்பேன்
காலன் உனைக்
கவர்ந்து சென்று
காலங்கள் பல
கடந்தாலும்
காலத்தால் அழியாத
கலங்கரை விளக்காய்
அரசியல் உலகிற்கு
ஆணிவேராகினாய்
மன்னாதி மன்னனாய்
உலகம் சுறும் வாலிபனாய்
உழைக்கும் கரங்களோடு
பட்டிக்காட்டு பொன்னையா
மாட்டுக்கார வேலனாக
மக்கள் மனங்களை உழுதாயே !
மதுரை வீரனாய் நீயோ
நீதிக்குத் தலைவணங்கும்
எங்கள் வீட்டுப் பிள்ளையென
தர்மம் தலைகாக்கும் என
கலங்கரை விளக்கானாய்
பாசத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாய்
தனிப்பிறவி நீ என்வாழ்வில்
ஒளிவிளக்காய் பிரகாசித்தாய்
புதுமைப் பித்தன் நீ
தாய்சொல்லைத் தட்டாமல்
தாய்க்குப்பின் தாரம் என
நல்லவன் வாழ்வான் என்றே
ஆயிரத்தில் ஒருவனானாய்
தமிழர்களின் காவல்காரன்
காத்திருந்தாய் விவசாயிகளை
ஒருதாய் மக்கள் நாமென்று
சங்கே முழங்கென்றாய்
ஊருக்கு உழைப்பவனே
நம்நாடு என் இதயவீணை
பாடிய உன் உள்ளமே
உன் மக்கள் எப்போதும்
குடியிருந்த கோயில்.......... ... Thanks wa.,
-
எம்.ஜி.ஆர் ., - மனிதமும் , மதநல்லிணக்கமும்,.........
M.G.R., தனது படங்களில்(காவியங்களில்) தான் ஏற்கும் கதாபாத்திரங்கள் குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த பாத்திரங்களாக இருப்பதை அனுமதிக்க மாட்டார். அதுபோன்று அவர் நடித்தது இல்லை. எந்த மதத்தினரின் நம்பிக்கைகளையும் புண்படுத்த மாட்டார். அதனால்தான், அவர் சர்வ சமுதாய காவலராக போற்றப்பட்டார்.
தனது திரைப்படங்களில் திராவிட இயக்கங்களின் கொள்கைகளையும் முற்போக்கு சிந்தனைகளையும் ஜாதிக் கொடுமைகள் குறித்தும் காட்சிகள் வாயிலாக மக்கள் மனங்களில் பதிய வைப்பது எம்.ஜி.ஆரின் உத்தி... ‘உரிமைக்குரல்’ திரைப்படத்தில் எம்.ஜி.ஆரின் அறிமுகக் காட்சி அதற்கு ஒரு சாட்சி..
வில்லனின் ஆட்கள் ஒரு பெண்ணை தூக்கிச் செல்வார்கள். அவர்களை அடித்து விரட்டி அந்தப் பெண்ணை எம்.ஜி.ஆர். மீட்பார். பிறகு, அந்தப் பெண்ணைப் பார்த்து தனது குதிரை வண்டியில் ஏறும்படியும் பாதுகாப்பாக வீட்டில் கொண்டு விடுவதாகவும் கூறுவார். அப்போது அந்தப் பெண், ‘‘ஐயா, நான் தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவள். உங்கள் வண்டியில் ஏறக் கூடாது’’ என்பார்.
அதற்கு எம்.ஜி.ஆர். பதிலளிக்கும்போது, ‘‘உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி இதெல்லாம் இந்த சமுதாயம் செஞ்சு வெச்ச கொடுமை. என்னைப் பொறுத்தவரை எல்லாரும் ஒரே ஜாதிதான். அது மனித ஜாதி’’ என்பார். இப்படி, படங்களில் பொருத்தமான இடங்களில் ஜாதிக் கொடுமைகளை சாட எம்.ஜி.ஆர். தவறியதில்லை.
தன்னலம் கருதாது பணியாற்றும் மக்கள் தொண்டர்களை வாய்ப்பு கிடைக்கும்போது உரிய கவுரமும் பெருமையும் அளித்து கவுரவிப்பதில் எம்.ஜி.ஆருக்கு நிகர் எம்.ஜி.ஆர்.தான்!
1940-களில் கன்னியாஸ்திரி ஒருவர் கொல்கத்தாவில் ஏழைகளுக்கு தொண்டாற்றி வந்தார். தனவந்தர்கள், பெரிய மனம் கொண்டோரிடம் இருந்து நிதி பெற்று அந்தப் பணத்தைக் கொண்டு ஏழை, எளிய, மக்களுக்கும் நோயாளிகளுக்கும் சேவை செய்து வந்தார். ஒரு நாள் ஒரு பணக்காரரிடம் கையேந்தி நிற்கிறார் அந்த கன்னியாஸ்திரி. பணம் இல்லை என்று விரட்டுகிறார் பெரிய மனிதர். விடாமல் அவரை பணிவோடு கேட்கிறார் அந்த அம்மையார். ஆத்திர மடைந்த பெரிய மனிதர் கையேந்தி நின்ற அந்த அன்னையின் கைகளில் காறித் துப்புகிறார்.
அப்போதும் அந்த அம்மையார் பொறுமையாக, ‘‘ஐயா, எனக்கான காணிக்கையை கொடுத்துவிட்டீர்கள். ஏழைகளுக்கான காணிக்கையை தயவு செய்து கொடுங்கள்’’ என்று கேட்டதைப் பார்த்து அந்த பணக்காரரே மனமிறங்கி நன்கொடை அளித்தார். அந்த பொறுமை யின் சிகரம்தான் தன் வாழ்க்கையை நலிந்தோருக்காகவும் நோயாளிகளுக் காகவும் அர்ப்பணித்த அன்னை தெரசா.
அப்படிப்பட்ட தொண்டு உள்ளம் படைத்த அன்னை தெரசா, ஏழை மாணவர்களுக்கு சத்தான உணவு அளிக்க எம்.ஜி.ஆர். கொண்டு வந்த திட்டத்தை பாராட்டாமல் இருப்பாரா?
1982-ம் ஆண்டு பள்ளி மாணவர் களுக்கு இலவச சத்துணவுத் திட்டத்தை எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்தினார். சத் துணவுத் திட்டத்தை தெரசா மிகவும் பாராட்டினார். இது தொடர்பாக சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடந்த விழாவில் தெரசா கலந்து கொண்டு எம்.ஜி.ஆருக்கு பாராட்டு தெரிவித்தார்.
பெண்களுக்காக தனி பல்கலைக் கழகத்தை அமைக்க எம்.ஜி.ஆர். முடிவு செய்தார். அதன்படி, 1984-ம் ஆண்டு கொடைக்கானலில் பெண்களுக்கான தனிப் பல்கலைக்கழகம் உருவானது. அந்த விழாவில் தெரசா கலந்து கொண்டார். அப்போது காஷ்மீர் முதல்வராக இருந்த பரூக் அப்துல்லா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
தனது தொண்டால் பெண் இனத் துக்கு பெருமை தேடித் தந்த அன்னை தெரசாவின் பெயர், பெண்கள் பல் கலைக்கழகத்துக்கு சூட்டப்படுவதாக விழா மேடையில் பலத்த கரகோஷத்துக் கிடையே எம்.ஜி.ஆர். அறிவித்தார். அன்னை தெரசா நெகிழ்ந்து போனார். மேடையில் இருந்த பரூக் அப்துல்லா எழுந்து மகிழ்ச்சியில் எம்.ஜி.ஆரை தழுவிக் கொண்டார்.
இந்து மதத்தைச் சேர்ந்த எம்.ஜி.ஆர்., கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த அன்னை தெரசாவின் பெயரை பல்கலைக்கழகத் துக்கு சூட்டுகிறார். முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பரூக் அப்துல்லா எம்.ஜி.ஆரை தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்து கிறார். மத வேறுபாடுகள் மறைந்து மனித நேயம் உயர்ந்து நிற்கிறது.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது நாகப்பட்டிணம் சட்டப் பேரவைத் தொகுதியில் மருத்துவ விடுதி ஒன்றின் திறப்பு விழா. அது தொடர்பான விழா நாகூர் தர்கா அருகே நடந்தது. கூட்டத்தில் எம்.ஜி.ஆர். பேசினார். ‘நான் கைலி கட் டாத முஸ்லிம், சிலுவை அணியாத கிறிஸ் துவன், திருநீறு அணியாத இந்து...’
மக்களின் கரவொலி இடியொலியாய் முழங்கியது. மேடையில் பேசியது போன்றே வாழ்ந்தும் காட்டியவர் எம்.ஜி.ஆர்.
வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக போராடி சுதந்திரம் பெற்றதன் நோக்கமே ஏற்றத் தாழ்வுகள் நீங்கி எல்லோரும் ஓரினம், எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் இந்நாட்டு மக்கள் என்ற அடிப்படையில் சுதந்திரமாக இருப்பதற்குத்தான்.
அந்த சுதந்திரதினமான ஆகஸ்ட் 15-ம் தேதி வேறுபாடுகள் இல்லாமல் அனைவரும் சமமாக அமர்ந்து சாப்பிடும் வகையில் தமிழக திருக்கோயில்களில் சமபந்தி போஜனத்தை அறிவித்து செயல்படுத்தியவர் முதல்வர் எம்.ஜி.ஆர்.............. Thanks wa.,
-
சாண்டோ சின்னப்பா தேவர் (28 சூன் 1915 – 8 செப்டம்பர் 1978)) என அழைக்கப்படும் எம். எம். ஏ. சின்னப்பா தேவர் 1960- 1970 களில் புகழ்பெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளரும் நடிகரும் ஆவார். பட அதிபராக உயர்ந்தவர் எம்.எம்.ஏ. சின்னப்பா தேவர். எம்.ஜி.ஆரை நடிப்பில், குறுகிய காலத்தில் பல வெற்றிப் படங்களை தயாரித்தவர். தனது படங்களில் விலங்குகளை நடிக்க வைத்தவர். எம். ஜி. ராமச்சந்திரன் இவருடைய 17 படங்களில் கதாநாயகராக நடித்தார். தேவர் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி பல வெற்றிப்படங்களைத் தந்தவர்; மொழி தெரியாத போதும் இந்தித் திரையுலகில் பிரபல நடிகர் ராஜேஷ் கன்னா நடிப்பில் ’’ஹாத்தி மேரே சாத்தி’’ என்ற வெற்றிப்படத்தை 1971-ல் வழங்கினார். 1970 - 1971இல் கலைமாமணி விருது பெற்றவர்....... Thanks wa.,
-
ஜெமினி எஸ்.எஸ்.வாசன், ஏவி. மெய்யப்ப செட்டியார், விஜயா வாகினி நாகிரெட்டியார், மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், பட்சி ராஜா ஸ்டூடியோ அதிபர் ஸ்ரீராமுலு நாயுடு, சரவணா பிலிம்ஸ் G N வேலுமணி, பத்மினி பிக்சர்ஸ் B R பந்துலு...ஆகியோர் கொடி கட்டிப் பறந்த காலத்தில், இதே கருதுகோள்களோடு தமிழ்த் திரையுலகில் தடம் பதித்தவர்; அவர்களுக்கு இணையாக பல வெற்றிப் படங்களைத் தயாரித்து,
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., அவர்களை வைத்து வேறு எவரும் செய்ய இயலாத, 16 படைப்புகள் உருவாக்கி திரை உலகை வியக்க வைத்தவர் எம் எம் ஏ சின்னப்பா தேவர்........... Thanks wa.,
-
பணத்தோட்டம் !
__________________
இந்த படம் ஷூட்டிங்கில் டைரக்டர் அவர்கள் மக்கள் திலகத்திற்கு நிறைய கட் கொடுத்து கொண்டிருந்திருந்தார்
பொதுவாக மக்கள் திலகம் ஒரே டேக்கில் முடித்து கொள்வார் என்று கேள்வி ?
இதை உணர்ந்த மக்கள் திலகம் டைரக்டரின் தோளில் கையை போட்டவாரே மெல்ல உலா சென்றார்
சார் நீங்கள் காலையில் எங்கிருந்து வருகிறிர் என்று எனக்குத் தெரியும் அவருக்கு அது தான் செட்ஆகும் எனக்கு என்பாணிதான் செட் ஆகும் இரண்டையும் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம் ...
புரிந்து கொண்ட இயக்குனர் மடமடவென்று காட்சிகளை படமாக்கினார் ...
டைரக்டர் பெயர் சங்கர்
காலையில் ஷூட்டிங் நடந்த படம் ஆலயமணி !
இந்த பாடலில் சேரனுக்கு உறவா செந்தமிழர் நிலவா என்ற வரி வரும் சிலாகித்த மக்கள் திலகம் கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்கு வைர மோதிரம் பரிசளித்தார் .........
இந்த பாடலை நீங்களும் கேட்டு ரசியுங்கள் !
ஹயாத்!........... Thanks wa.,
-
#கேட்காமலே #கொடுப்பவர்
பழம்பெரும் நடிகர் வீரப்பன் அவர்களின் அளித்து பேட்டியில் இருந்து:
மக்கள்திலகம் முதலமைச்சராக இருந்த பொது, ஒருநாள் நான் ராமாவரம் தோட்டத்திற்கு போயிருந்தேன். அப்போது
ஒரு பழைய நாடக நடிகர் அங்கு வந்திருந்தார்.
அவரிடம் என்ன விஷயமாக வந்திருக்கிறீர்கள?'
என்று கேட்டேன்.
அவர் தயங்கித் தயங்கி 'குடும்பமே பட்டினி..ஒன்றும் முடியவில்லை. நான் சின்னவரோட நாடகத்தில நடிச்சிருக்கேன்... ஏதாவது உதவி கேட்கலாம்னு வந்திருக்கேன்... என்றார்!
சரி உட்காருங்க...! 'சின்னவர் வெளிய
வந்ததும் கேளுங்க..செய்வார்' என்றேன்...
சிறிது நேரம் கழித்து எம்ஜிஆர் வெளியே வந்தார். தூரத்தில் நின்று
அந்த நாடக நடிகரைப் பார்த்து, 'எப்படி
வந்தே' என்று சைகயால் கேட்டுவிட்டு,
"இருந்து சாப்பிட்டுவிட்டுத் தான் போகணும்"
என்று சொல்லி விட்டு,காரில்
ஏறிச் சென்றுவிட்டார்.
அந்த நடிகரோ ஒன்றும் புரியாமல்
தவிப்புடன் நின்றார்.
"இருந்து சாப்பிட்டுவிட்டு போகச்
சொன்னாருல்ல, மதியம் சாப்டுட்டு
போங்க " என்றேன்...
"நான் எப்படிச் சாப்பிடுவது..என்
குடும்பமே பட்டினியா இருக்கும் போது? "
என்றார் அவர்.
'நான் ஒரு ஐநூறு ரூபா தருகிறேன்,
அத வச்சு சமாளியுங்கள்' என்றேன்...
சந்தோஷப்பட்டார். மதியம் அவர்
சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது
எம்ஜிஆர் கோட்டையிலிருந்து வந்து
விட்டார்.
அந்த நடிகரிடம், மதியம் திரும்ப
எம்ஜிஆர் வெளியே புறப்படும்போது
அவரைப் பார்த்து சொல்லிவிட்டுப்
போங்க..என்றேன். "சரி.." என்றார்.
வெளியே வந்த எம்ஜிஆர் அவரைப்
பார்த்து " சாப்பிட்டுவிட்டாயா " என்று
கேட்டு விட்டு காரில் ஏறிவிட்டார். அந்த
நடிகருக்கோ ஒரே பதற்றம். புறப்பட்ட கார்
மீண்டும் நின்றது. எம்ஜிஆர் சைகையால் அந்த நடிகரை அழைத்தார்.
அவர் காருக்கு அருகில் சென்று சற்று தள்ளி நிற்க...நெருக்கமாக அழைத்தார்.
அவரும் காருக்கு மிக அருகில் போய்
நிற்க, சட்டென்று அவருடைய பாக்கட்டில்
ஒரு கவரை யாருக்கும் தெரியாமல்
எம்ஜிஆர் வைத்துவிட்டார். கார் புறப்பட்டுச் சென்றுவிட்டது.
அவர் என்னருகே வந்து கவரைப்
பிரித்தார். அதில் பத்தாயிரம் ரூபாய்
இருந்தது. அவர் கண்கள் கலங்கிப் போய்
விட்டது. அவருடைய ஆனந்தக் கண்ணீரைக் கண்டு அவரைவிட
எனக்குத்தான் அதிக சந்தோஷம்...
மறுநாள், திரும்ப தோட்டத்திற்கு
சென்றிருந்த போது எம்ஜிஆரிடம்
கேட்டேன்...
"கஷ்டத்துல வந்த அந்த
நடிகரை சாப்பிடச் சொன்னீங்க, ஆனா
அவரப் பத்தி எதுவுமே அவர்கிட்ட
கேட்காம போயிட்டீங்க...
திரும்ப மதியம்
வந்து அப்பவும் காருல ஏறிட்டீங்க...
அந்த
நடிகர் ரொம்பவும் பதறிப் போயிட்டாரு...
இவ்வளவுக்கும் பிறகு அவரைக் கூப்பிட்டு பாக்கட்டுல பத்தாயிரம் ரூபா
வச்சு அனுப்புறீங்க... ஏன் அண்ணே
அப்படிச் செஞ்சீங்க...? என்று கேட்டேன்.
சில கணங்கள் என்னை அமைதியாகப்
பார்த்துவிட்டு அவர் சொன்னார்.
"எப்பவும் கஷ்டப்பட்டு வர்றவங்களை
அவங்க வாயால் பணம் கேட்க வைக்கக்
கூடாது. அதுவும் அவர் கொஞ்சம் கூச்ச
சுபாவம் உள்ளவர். கேட்க சங்கடப்
படுவார். அவரா கேட்டா கம்மியாத் தான்
கேட்டிருப்பார்.அதனால் தான் நம்மளா
கொடுத்திடனும்..." என்றார்.
எனக்குத்தான் இப்ப கண்கலங்குச்சு.
அவருடைய கொடை உள்ளம் பற்றியும்
அவரது ரத்தத்தில் கலந்திருந்த அந்த
ஈகை இயல்பு பற்றியும் இருவேறுகருத்துக்கு எப்பொழுதுமே இடமில்லை.
அதனால் தான் அவர் இன்னும்
வாழ்ந்து கொண்டிருக்கிறார்!............ Courtesy : fb.,
-
https://i.postimg.cc/SsfP5WPJ/IMG-20190628-WA0000.jpg
மக்கள் திலகத்தோடு என் அண்ணன் திரைக்காவியத்தில் நடித்த விஜய நிர்மலா அவர்கள் காலமானார். அவருக்கு நமது திரியின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து க்கொள்கிறோம்.
-
மக்கள் திலகம் காவியங்கள்... ..........உலகம் சுற்றும் வாலிபன், இதயக்கனி, மாட்டுக்காரவேலன் டிஜிட்டலில் திரையிட தயாராக உள்ளன. இந்த நிலையில் நான் ஆணையிட்டால், மதுரைவீரன், காவல்காரன், நம்நாடு, ரகசிய போலீஸ் 115 போன்ற காவியங்கள் டிஜிட்டல் தயாரிப்பு பணியில் உள்ளன. ஏற்கனவே உலகம் சுற்றும் வாலிபன்( 2008) நாடோடி மன்னன்( 2 முறை டிஜிட்டலில் வெவ்வேறு நிறுவனங்கள் வெளியீடு) அடிமைப்பெண்( 2 முறை டிஜிட்டலில் வெவ்வேறு நிறுவனங்கள் வெளியீடு) தர்மம் தலைகாக்கும், நினைத்ததை முடிப்பவன், ரிக்சாக்காரன், எங்கவீட்டுப்பிள்ளை, ரகசியபோலீஸ் 115 போன்ற காவியங்கள் வெளிவந்தன..( உலகம் சுற்றும் வாலிபனும் ரகசிய போலீஸ் 115 ம் 2 வது தடவையாக டிஜிட்டலில் வெளிவர உள்ளன)............ Thanks wa.,
-
சென்னை அகஸ்தியாவில் கடந்த 21/06/19 முதல் புரட்சி நடிகர் /புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் ஆர்ப்பரித்த டிஜிட்டல் "நினைத்ததை முடிப்பவன் " தினசரி 2 காட்சிகள் நடைபெற்றது
http://i64.tinypic.com/2552uqb.jpg
-
-
-
-
-
ஞாயிறு மாலை காட்சி (23/06/2019) கொண்டாட்டங்கள் பற்றிய புகைப்படங்கள்
நண்பர்களின் பார்வைக்கு .
http://i64.tinypic.com/oglafo.jpg
http://i68.tinypic.com/2ajnxo5.jpg
-
-
-
-
-
-
-
சென்னை பாலாஜியில் கடந்த 21/06/19 முதல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "பெரிய இடத்து பெண் " தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டது .
http://i66.tinypic.com/mays08.jpg