Quote:
மீனா நடிக்கும் `கல்யாணம்'
பெரிய திரையிலும், சின்னத் திரையிலும் தரமான படைப்புகளை தொடர்ந்து வழங்கிக்கொண்டு இருக்கும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் கடந்த ஐந்து ஆண்டுகளாக சன் டிவியில் வழங்கி வந்த "ஆனந்தம்'' மெகா தொடர் நிறைவு பெற்றது.
வரும் திங்கள் முதல் "கல்யாணம்'' என்ற புதிய மெகா தொடர் தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. இப்புதிய தொடரில் நடிகை மீனா கதாநாயகியாக நடிக்கிறார். பெரிய திரையிலும் சின்னத் திரையிலும் இதுவரை ஏற்று நடிக்காத, முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரம் மீனாவுடையது.
பட்டுக்கோட்டை பிரபாகர் கதை, திரைக்கதை, வசனம் எழுத, டைரக்டர் விடுதலை இயக்குகிறார். டைட்டில் பாடலுக்கு ரமணி பரத்வாஜ் இசையமைக்க, பின்னணிப் பாடகி சித்ரா பாடியிருக்கிறார். பின்னணி இசை: கிரண். தயாரிப்பு: டி.ஜி.தியாகராஜன்.
தொடரின் நட்சத்திரங்கள்: யுவராணி, டெல்லி குமார், சாக்ஷி சிவா, சாந்தி வில்லியம்ஸ், பிருந்தாதாஸ், ராஜ்காந்த், சிந்து, ஆடிட்டர் ஸ்ரீதர், மோகன்ராம், ரிந்தியா, ராஜ்கமல், நேசன், லதாராவ், வந்தனா, டி.வி.வி.ராமானுஜம், டி.ஆர்.லதா, விஜிகிட்டி, பவானி, அஸ்வின்குமார், ரோஷன்ராஜ்.