Prabhu Ram.. Excellent narration :thumbsup: Keep it going :)
personally this was my favourite scene :DQuote:
"சொல்றாஹள்ள...கேன்சல் கேன்சல்"
Printable View
Prabhu Ram.. Excellent narration :thumbsup: Keep it going :)
personally this was my favourite scene :DQuote:
"சொல்றாஹள்ள...கேன்சல் கேன்சல்"
Yes. If my memory serves me right, it was Kakka Radhakrishnan who had taken NT to the drama troupe at that tender age.Quote:
Originally Posted by rangan_08
Regards
I'm afraid not Sir. Bcoz, in NT's " என் சுயசரிதை " by TV Krishnaswamy, it says that, when NT went inside the drama comp.house after being called by the comp.owner ( " உள்ளே வாப்பா..." ), he found Kaakka Radhakrishnan already staying there !!Quote:
Originally Posted by Murali Srinivas
BTW, the book says that, it was Nadigavel MRR who had brought NT to Chennai Pattinam for the first time !!!
Ambikapathy is running currently in 'K' TV. (26th March 2008 - 2.00 pm show)
ஆம். நானும் ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன்.Quote:
Originally Posted by rangan_08
'தன்னால் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட கணேசன் (NT), சென்னையை ஒரு கனவுபூமி போல பார்ப்பதையறிந்த ராதா (MRR), நாடகம் இல்லாத நாட்களில் கணேசன் கையில் இரண்டணா கொடுத்து "போய் மெட்ராஸை சுத்திப்பார்" என்று சொல்லியனுப்புவார். அதில் காலணாவுக்கு கடலை வாங்கிக் கொறித்துக்கொண்டே வால்டாக்ஸ் ரோடு, போஸ்ரோடு சந்திப்பிலிருந்து சென்ட்ரல் ஸ்டேஷன் வரை நடந்து வந்து, அங்கிருந்து 'ட்ராம்' வண்டியில் அரையணா டிக்கட் எடுத்து போவார்'.
பெரிய தேவர் - 8
நெருப்புக்கு பதில் நீரால் அடித்தாகிவிட்டது. எதிராளிகளின் அடுத்த இடைஞ்சல் நிலத்தின் வழியாக. வேலியிட்டுப் பிரிக்கப்படுகிறது நிலம். மக்கள் முறையிடுகிறார்கள். கேட்கச்செல்லும் பெரிய தேவர் துணையுடன் அங்கு செல்ல வேண்டும் என்று நினைக்கும் கணக்குப்பிள்ளை கூட அதை தயங்கி தான் சொல்கிறார். சக்தியை மட்டும் அழைத்துக்கொண்டு அங்கு செல்கிறார் - அவருக்கு தேவையான போதுமான துணை.
நிலத்துக்கு சொந்தக்காரர்கள் நிலத்தை அடைத்து வேலிபோடுவதாக வக்கீல் சொல்லிக் கேட்டவுடன்.
"யார்ராவென்...நெலத்துக்கு சொந்தக்காரன்...இது எங்க நெலம்...நாங்க எலவசமா கொடுத்தது"
இதை சொல்லும்போதே சட்டத்தின் பலவீனமான பக்கத்தில் அவர் இருப்பது நமக்குத் தெரிகிறது. கௌரவம் மேல்நிலை வேண்டும் என்று அடம் பிடித்தாலும், சட்டம் கொடுக்கவிருப்பது ஒரு விதத்தில் கீழ்நிலை தான். இது அடுத்த காட்சியில் அவர் நிலையை புரிந்துகொள்வாதற்கு மிக அவசியமானது.
"இங்க செல்லையா ஒருத்தனுக்கு தான் சொந்தமா நெலம் இருக்கு....எலாய்....இந்த வேலிய நீ போடச்சொன்னியா ?"
"ம்ஹான்....கருக்கலோட கருக்கலா வந்து ஆவுகளே போட்றாஹய்யா" என்று சொல்லும் பெண்ணை அடக்குவார் செல்லையா.
"....கேனப்பய.....பாவம் அவன் என்ன செய்வான்... ஆட்டிவச்சபடி ஆடுறான்" என்று சக்தியிடம் சொல்வார். அதை உரக்கச் சொல்வதே அந்த வசனம் கேட்கும் எல்லோருக்கும் என்பதற்காக. அந்த பாவனை சக்தி முகத்தில் தெரியும்.
"ஏய் வக்கீய்ல்....இந்த வேலிய பிடுங்கி எறிய எம்புட்டு நேரமாகும்" என்று முரட்டுத்தனமாகக் கேட்பார். மரியாதை கெட்ட பதில் வரும். இதற்கு உடனடியாக வரும் எதிர்வினை ஒரு வட்டார வசவு. முழுவதுமாக சொல்லமாட்டார். தொண்டையிலிருந்து பாதி ஒலிக்கும். பொதுவில் கண்ணியம் காப்பது என்பது இயற்கையாக அவருக்கு வருகிறது. இது வேறொருவர் யோசித்திருந்தாலும் கூட கனக்கச்சிதமாக நிகழ்த்திக்காட்டுவது மிகக் கடினம். என் அபிப்ராயத்தில் இது திட்டமிடுதல் இல்லாமல் களத்தில் நிகழ்ந்ததாக தான் இருக்கவேண்டும். நேரொலியில்லாமல் இது எப்படி சாத்தியம் என்று புரியவில்லை. ஒரு பாத்திரத்தை முழுமையாக உள்வாங்குவதற்கு இதை விட சிறப்பான உதாரணங்கள் நான் பார்த்தவரை இல்லை.
பஞ்சாயத்தில் எதிரிகள் காலதாமதமாக வருவதை மகன் சுட்டிக்காட்ட, "அட போடா ...கவலைப்படவேண்டிய கடைசி அசௌகர்யம் இது..." என்பதுபோல கையை தட்டி விடுவார். அவர்கள் வந்ததும் தன் எதிர்பார்ப்பை மகனிடம் கண்கலால் தெரிவிக்க, சக்தி சின்னத்தேவரைக் கும்பிடுவான்.
"வைத்தியனுக்கு சீக்கு வந்தா இன்னொரு வைத்தியன் கிட்ட தான் பார்க்கணும்......இன்னிக்கு நீதி சொல்ற நெலமையில நான் இல்லையப்பு.....கேட்டுக்கிற இடத்துல இருக்கேன்"
என்ற ஒரு வரியில் பல தொனி-பாவனை மாற்றங்கள். தீர்ப்பு சொல்லும் நிலைமையான முதன்மை நிலையில் இல்லை என்பதைப் பற்றி ஒரு தயக்கம். தன்னை விட்டால் இவர்களில் யார் தீர்ப்பு என்று ஒன்றை சொல்லமுடியும் என்கிற இளக்காரம் எல்லாம் அந்த பாவனையிலும் அவர் தொனியில் இருக்கும் அசௌகரியத்திலும் தெரியும்.
ஊர்ப்பெரியவர் ஒருவர் மிகுந்த மரியாதையுடன் அவரை பேசச்சொல்ல எழுவார். கீழே அமர்ந்திருக்கும் எல்லோரும் எழ அவர்களை உட்காரச்சொல்லும்போது மிக உரிமையானவரை கடிந்துகொள்ளும் பாங்கும் பொறுமையின்மையும் தெரியும்.
ஒரு தேர்ந்த வழக்கறிஞன் வழக்கிற்கு வரும் முன் எவ்வாறு எதிர்தரப்பினரை தீர்ப்பு கூறுபவர்கள் கண்ணில் இறக்கிக் காட்டவே முயல்வர். அதை மிகக் கச்சிதமாக செய்வார். "எங்க பெரியதேவர் செத்து...கொள்ளிக்குடம் உடைக்கிறதுக்கு முன்னாடியே பாகப்பிரிவினை கேட்டவுக சின்னச்சாமி ஐயா....அப்புறம் என்னை வெட்டப் பார்த்தாக.. வெசம் வெச்சுக் கொல்லப்பார்த்தாக...ஹஹும் ஒண்ணும் நடக்கலை"
இதை சொல்லும்போது ஒரு இளைஞனின் வீம்பும், சண்டித்தனமும் தெரியும். அதை மறுத்துப் பேச முயலும் தம்பி மகனை "ஏலாய்....அப்பொல்லாம் நீ சின்னப்பய...உனக்கொண்ணும் தெரியாது வாயம்மூடிட்டு பேயாம இருக்கணும் தேரியும்ல" என்று அதட்டுவார் (முன்னே வரும் சக்தியை ஒரு கையால் தடுத்துவிட்டு).
தான் சொல்லவந்ததை சொல்லியாகிவிட்டதில் பிரச்சனைக்கு வருவார். "இப்பொ பிரச்சனை என்னன்னா...அந்த வேலிய புடுங்கி அங்குட்டு எரியணும்..அது பதிலா வேற எடம் வேண்ணாலும் நான் கொடுக்கறேம்பா..பணம் காசு வேண்ணாலும் கொடுக்கறேன் உம்..."
பிரச்சனையைத் தீர்க்கும் அணுகுமுறை மருந்துக்குக் கூட இல்லை. ஒரு கீழ்நோக்குப் பார்வை, எள்ளல் இவற்றின் மொத்த உருவமாக இருக்கிறார். மனிதர் அப்படிப்பட்டவர். அரசனின் கர்வம். இவனோடெல்லாம் பேசிக்கொண்டிருக்க வேண்டி இருக்கிறதே என்ற அலுப்பு, கோபம். இதைத் தான் 'மானம்' என்று கிடுக்கிப் பிடியாகப் பிடித்துக்கொண்டுவிட்ட மனோபாவம். இவை அவரை எங்கு இட்டுச் செல்கின்றன ?
(தொடரும்)
One more news for all of u...Quote:
Originally Posted by saradhaa_sn
I heard that NT used to act as heroine(lady getup) in the dramas of MR Radha as hero...is it true... :?:
Thank You rangan_08,raaja_rasigan, sarna_blr and mgb.
saradhaa_sn, well written post about Periya ThEvar's passing. I will come to that in my next post.
Kakka Radhakrishnan was rediscovered by Kamal for Guna. Nagesh apparently is a person who has admiration for many but not fear. Even at times when Sivaji reprimanded him for coming late to the shooting he used to be able to distract him or crack a joke and get away with it. So Kamal, apparently once asked him if there was any talent for whom he had a fearful respect. Nagesh mentioned KAkkA Radhakrishnan.
He searched him out and cast him in Guna. After a gap of decades.
(When asked why he didn't act for so long, he apparently replied in a matter-of-fact manner with an artist's dignity: "yaarum kooppidalai...adhunaala naanum pOgalai")
It was very imaginative of Kamal to cast someone of his physical stature as the principal adversary, that too against someone with as dominating a screen presence as Sivaji. When Kamal intially mentioned it, KR thought he was joking :-)
PR anna... ennOda kElvikku badhil innum varalai.. :(
Yes sarna, NT used to play the role of Soorpanaka in Ramayan playQuote:
Originally Posted by sarna_blr
Rangan anna... thanks..
[Digression]
Yeah, having written that, I was wondering about the same myself. There are many words (even excluding the ones that basically originated from Sanskrit) which has a 'நகரம்' in the middle of the word -- specifically when there two words join in conjunction to form a word. 'தொலைநோக்கு' for example.Quote:
Originally Posted by Prabhu Ram
However, I remember some grammatical restriction in having a 'நகரம்' in the middle of a word though. Actually, I am not able to view the Tamil text properly in the page you've linked to, in Firefox. Thanks for the link, I'll try reading it in IE and get enlightened. Anyway, pardon the digression.
[End digression]
Coming to the topic, this is a wonderful series of essays, Prabhu Ram. A pleasure to read. :thumbsup:
Sivaji's Periya Thevar is no doubt one of the greatest performances Tamil cinema has seen. Often one hears of how Kamal the filmmaker brought out a great "contemporary" performance from Sivaji, as if to suggest that Sivaji did something characteristically unlike his own kind of acting! But, in my opinion, the performance is unmistakably Sivaji's. The keenly perceptive gestures, the dialogue delivery, the spontaneous adoption of an apt body language, all come straight out of Sivaji's repertoire. Quintessential Sivaji, if you will. Only that it's channelled or exploited the way it deserves to be.
In a way, 'Thevar Magan' is a great tribute from Kamal to the stalwart, whom he loves, revering whose performances he grew up. (I can almost imagine Kamal referencing various yesteryear performances of Sivaji to say how he wants the veteran to do a particular scene.) What Kamal did in Thevar Magan is to give a role that's worthy of the actor. And, when he "re-introduces" Sivaji in his film, and makes him say, "எல்லாம் பழைய முறுக்குத்தேண்டி..." it's Kamal reverently noting that it's the same old actor and the performance is all his.
Also, among the many Godfather-inspired films/performances, this is the performance that stands tall, and more importantly, standing fully on its own. Incidentally, almost everyone who did a Brando (to varying degrees, admittedly) won a National Award -- Nayagan, Agneepath, Thevar Magan, Maqbool -- until Amitabh Bachchan's Sarkar. But, it's overwhelmingly evident that Thevar Magan's Periya Thevar sits awkwardly in that list. There's simply no Brando in that performance. It's all Sivaji.
Yes, kAkkA Radhakrishnan's second innings in Kamal's films is a sheer delight. Regarding his turn as Chinna Thevar, let's not forget that the casting was also a throwback of sorts to 'Manohara'.Quote:
Originally Posted by Prabhu Ram
Thank You equanimus.
Extremely well put. :clap: I agree with every word there. This is what I have been trying to say for the past few days :-)Quote:
Originally Posted by equanimus
:notworthy: That's a lovely observation.Quote:
Originally Posted by equanimus
Kamal puts him a few notches above even in the title card, which reads: Sivaji Ganesan Esq.
Oh yeah ! Didn't strike me at all.Quote:
Originally Posted by equanimus
PR ,equanimus :thumbsup: தொடருங்கள் !
Prabhu Ram sir,
your analysis about the 'charectorisation and presentation' of Periya Thevar is simply tremendous.
you are bringing out new dimentions for that roll, which most of us not watched earlier.
continue please...
Dear EQ,
We enjoy your feedback on Periya Thevar as much as we do PR's writing. Esp." Pazhaya murukkutheandi "... :clap:
பெரிய தேவர் - 9
நம்முயிர்க்கு மேலே மானம் மரியாதெ
மானமிழந்தாலே வாழத் தெரியாதே
பின் வருவதை முன் சொல்லும் விதமாக ஒரு பாடல் வரி. இதை ஏதோ வீரமரணம் போல சித்தரிக்கப்படுகிறது. இதில் 'மானம்' என்பது ஒவ்வொருவர் மதிப்பு சார்ந்தது. கடமை தவறியதால் தன் குலத்துக்கும், பதவிக்கும் இழுக்கு வந்துவிட்டதாக எண்ணி "கெடுக என் ஆயுள்" என்று சொல்லி வீழும் மன்னனன ஓரளவு புரிந்துக்கொள்ள முடிகிறது. ஆனால் பெரிய தேவருக்கு நிகழ்வது அவர் மண்ணின் பொது மதிப்பீடு. ஒரு வகையில் காட்டுமிராண்டி மதிப்பீடு தான். பலம் படைத்தவன் பெரியவன். அடி கொடுத்துவிடுவது வெற்றி - வாங்கிக்கொள்வது தோல்வி என்று. இதன் நீட்சியே சொல்லடிக்கும் இருக்கும் அதே மதிப்பு. இதைத் தான் இந்தப் படம் சாடுகிறது. ஆனால் இந்த மரணத்துக்கு ஒரு கௌரவம் சேர்த்து.
தம்பி மகன் இவரை சரியான இடத்தில் மடக்க "ங்கொப்பனை விட நல்லாத்தேம்பு பேசற" என்று கோபத்துக்கும்-தோல்விக்கும் இடையிலும் லேசாக மிஞ்சியிருக்கும் ரசனையோடு சொல்வார். ஒரு இடத்தில் சக்தி துள்ளியெழ மிகுந்த சாந்தத்துடன் கட்டுப்படுத்துவார்: "பேயாம இரு...அப்புறம் அவனுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் ?".
கூட்டத்திலிருந்து வித்தியாசமானவன் நீ என்று நினைத்துக்கொண்டாயே மகனே' என்பது அந்த அமைதியில் தெரியும்.
ஆனால் அடுத்ததாக தம்பி மகன் மரியாதை கெட்டத்தனமாக பேசிவிட்டதால் ஆடிப்போகிறார் பெரியதேவர். என் முன்னிலையில் அப்படி அவன் பேசலாயிற்று என்பது அதிர்ச்சி, கடுங்கோபம், பெருத்த அவமானம். இதுபோன்ற வீம்பான மதிப்பீடுகளை சாடும் விதமாக முன் பேசிய சக்தியும் அந்த கணத்தில் ஒரு 'காட்டுமிராண்டி'யைப் போல் வெடிக்கிறான். படிப்பும், 'பண்பட்ட' கலாசார பரிச்சயமும் அவன் மேல்தோல் கொஞ்சம் சுரண்டிவிட்டால் விலகிவிடுகின்றன. உள்ளிருக்கும் இயல்பு வெளிவருகிறது. பெரிய தேவர் எழுந்தவேகத்தில் நாற்காலியை விசிறியடிக்கிறார்.
பொறிபறக்க விழிகளிரண்டும்
புருவமாங்கே துடிக்க சினத்தின்
வெறி தலைக்க....
என்று பாஞ்சாலி சபதத்தில் சில வரிகள் வரும். அந்த உக்ரத்தை திரையில் காண வேண்டும் என்றால் இந்தக்கணம் தான் அதற்கு சரியான கணம்.
கோபத்தை கஷ்டப்பட்டுக் கட்டுக்குள் வைத்து கடைசி முறையாகக் எதிரியிடம் மறுமுறை கேட்க,
வரும் பதிலில் கூட்டமே பொங்கி எழும். "பஞ்சாயத்தாடா இது....பஞ்சாயத்தே கிடையாதுறா....இந்த கூட்டத்துல எனக்கு மரியாதையும் கிடையாது" என்றுவிட்டு வெளியேறுவார். அங்கிருந்து வீடுவரை நடந்து செல்லும்போது அவமானம், அங்கலாய்ப்பு,கோபம், பாசத்துடன் வரும் கோபம் என்று சகலத்தை ஓரிரு நிமிடங்களில் காட்டுவார். அவற்றை வார்த்தையில் அடக்க முயல்வதே வீண். ஒரு சூராவளி அடித்துச் சென்றார் போன்ற அனுபவம். tour-de-force.
"என்னப்பு பைத்தியக்காரனா இருக்கே...எனக்கெப்படி கோபம் வரும்...வெக்கம் மானம் ரோசம் இருந்தாத்தேன் கோபம் வரும்....அதல்லாந்தான் அந்த சின்னப்பய வாங்கிப்டானே" என்று சொல்லும் போது குரல் நடுங்கும், கண்ணீல் நீர் கோத்திருக்கும். அரை நொடியில் தலைவன் தன்னிலைக்கு வந்து மகனிடம், "பசங்களுக்கு புத்தி சொல்லி அனுப்பு", என்று விவேகமான தொனியில் சொல்லிவிட்டு "எலாய்" என்று கண்ணை விரித்துக் காட்டி ஒரு வழிகாட்டியின் தோரணையில் மிரட்டிவிட்டுப் போவார்.
வலியை முதல்முதலில் வெளிப்படுத்தும் போது ஒரு வித மூச்சுத்திணரல் போலவே ஒலிக்கும். மாரடைப்புக்கு முதல் அறிகுறியே இதுபோன்ற ஒரு கைவலி தான். பேத்திகள் சூழ, "அம்ம பாட்டு" கேட்டபடி தன் வலி மிகுந்த கடைசி கணங்களை கழிப்பார்.
ரத்தம் கக்கி வசனம் பேசி, கத்திக்குத்துடன் பாட்டு பாடி, மரணப்படுக்கையில் நாயக நாயகியரை சேர்த்து வைத்து, அல்லது இக்கட்டான சத்தியங்கள் வாங்கி, கதாநாயகன் திருக்கரங்களால் தலை திருகப்பட்டு என்று பல வகைகளை தமிழ் சினிமாவில் பார்த்து பார்த்து மரணம் என்பது மரத்துப்போய்விட்ட நிலையில், இன்றளவும் நம் ஞாபகத்தில் இருக்கும் தமிழ் சினிமாவில் காட்டப்பட்ட உருக்கமான மரணங்களில் ஒன்று பெரிய தேவரின் மரணம். அதன் வெறுமையை நாமும் உணர்கிறோம்.
இன்று அதைப் பார்க்கையில் திரைக்கு அப்பாலும் அந்த வெறுமை இன்னும் பெரிதாகத் தெரிகிறது.
ஈக்வானிமஸ் சொன்னதை வழிமொழிகிறேன். சிவாஜியின் முற்றிலும் மாறுபட்ட நடிப்பு இது என்று சொல்வது முழு உண்மை அல்ல. இது சிவாஜியின் ப்ரத்யேக அடையாளங்கள் உள்ள வெளிப்பாடு தான். ஆழ்ந்த, பிரமிப்பூட்டும் கவனிப்பு, முயற்சியின் சுவடுகளே தெரியாத அனாயாசமான நடிப்பு, இதையெல்லாம் நிகழ்த்த முடிந்த அதிசயமான திறமை.
இதை மிகச்சரியாக வெளிக்கொணரக் கடைத்த களம் இந்தப் படம். இது பரவலாக கவனிக்கப்பட்டதில் மகிழ்ச்சி என்றாலும், இன்னும் ஆழமாக கவனிக்கப்படவேண்டியது.
அதை இயன்றவரை சொல்ல முயன்றிருக்கிறேன். முன்னொருமுறை சொன்னதுபோல நடிப்பு போன்ற நிகழ்த்தப்படும் கலைகளைப் பற்றி எழுதுவது வெறும் குறியீடாகத் தான் இருக்க முடியும். அதற்கு மேல் அதை கண்டு அதில் திளைப்பதற்கு ஊக்கியாக இருக்கும் என்ற நம்பிக்கை மட்டுமே எழுதுபவனுக்கு.
(முற்றும்)
Thank You Joe and mr_karthik.
PR anna parasakthi padaththa idhumaadhiri varnichchirukkeengalaa ?... oru vElai illaina varnanai pannunga pls....
Dear PR,
Congratulations for completing a sensational article on Periya Devar. I will keep a copy of this for myself and hope to cherish it for a long time.....atleast until your next article begins. :)
Thank You once again for taking us through a fantastic journey. I really enjoyed it.
Dear Prabhu Ram,
It is really astonishing to go through the thorough analysis of yours on Devar Magan you deserve full credits and kudos to you. In fact, this has enthused me to introduce a separate section for Film Analysis in our website www.nadigarthilagam.com. And aptly your postings mark the debut of the section. Of course, more and more films will be analysed in this section and the hubbers and fans' analysis will get priority in inclusion in this page. You can visit our web site and see for yourself the link for Film Analysis. Thank you for giving a new dimension to our website through the Film Analysis which I hope would help the site to a higher level.
Thank you and thanks for the forumhub. esp. Shri Joe.
With regards to all,
V. Raghavendran.
Dear Prabhu,
Thanks for the excellent series on Periya Thevar. Since most of the hubbers have highlighted the specifics, I am not delving into it. But wanted to share one or two things.
I have a group of acquaintances (persons who are not members here) to whom I used to send the copy paste of NT film reviews done by me in order to keep them in the loop. First time I have copy pasted your series to them. ( Copy rights sandaikkellam vara maateenga-nu oru nambikkaithaan).
இரண்டாவது, இந்த தொடரில் 2,3 இடங்களில் வசனங்களை பற்றி பேசும்போது இது நேரோலியா இல்லை பின்னணி பேசப்பட்டதா என்று கேட்டிருந்தீர்கள். இது பின்னணி பேசியதுதான். 1992-ல் லைவ் ரெகார்டிங் வரவில்லை. மட்டுமல்ல, ஒரு முறை விகடன் பேட்டியில் கமல் இதை பற்றி சொல்லியிருந்தார்.
முதல் நாள் படப்பிடிப்பு. படத்தில் இடம் பெறும் அந்த நாற்காலி கிடைக்கவில்லை. அங்கே வைக்கப்பட்டிருந்த நாற்காலிகள் கமலுக்கு பிடிக்கவில்லை. பொள்ளாச்சியில் படப்பிடிப்பு. கமல் மனதில் நினைத்திருந்த நாற்காலி சிங்காநல்லூரில் இருக்கிறது என்று செய்தி கிடைக்கிறது. உடனே அதை கொண்டு வர ஆள் போகிறார்கள். நடிகர் திலகம் " என்னப்பா ஆச்சு?" என்று கேட்க அவருக்கு தகவல் சொல்லப்படுகிறது. " ஏம்பா, ஒரு நாற்காலிக்காகவா ஷூட்டிங் நிறுத்தியிருக்கே?" என்று கேட்க கமல் சமாளிக்கிறார். நாற்காலி வருகிறது. படப்பிடிப்பு நடந்து முடிகிறது.
டப்பிங் பேச நடிகர் திலகம் வருகிறார். அப்போதுதான் முழு படத்தையும் பார்க்கிறார். இன்னும் சொல்லப்போனால் அப்போதுதான் அவருக்கு கதையே தெரிய வருகிறது.
"ஏன்டா படவா! நீ உட்காரத்தான் இந்த நாற்காலி வேணும்னு பிடிவாதம் பிடிச்சியா? நாட்டிலே அவனவன் வேற நாற்காலிக்கு ஆலா பறக்கறான். நீ என்னடானா இதை போய் வேணும்கிற" என்று NT கமெண்ட் அடிக்க, அதற்கு கமல் சொன்ன பதில் " அந்த நாற்காலியல்லாம் 5 வருஷத்திற்கு ஒரு தடவை காலி பண்ணி கொடுக்கணும். இந்த நாற்காலினா 30 வருஷத்திற்கு கவலை இல்லை."
Why I have quoted the above interview is, it was dubbing and not live recording. Kudos to NT!
Thanks once again for the journey you took us.
Regards
PS: I would be a sinner if I fail to compliment equanimus. Thank you equanimus for an excellent post.
Murali Sir,
Ore oru nitpick. The chair came from Singanallur.
PR/Equanimus,
Pichuttel! Pinnuttel! Brilliant
:notworthy:
Oh! Is it? I actually wrote it from memory Bala. You must be right.
Next week Sun TV is again giving a big treat.
31st March - Monday Night - Deiva Magan
2nd April - Wednesday Night - Parasakthi
3rd April - Thursday Night - Navarathiri.
Regards
Thank You rangan_08 and Bala.
Thank You Mr.Raghavendran. It was very nice of you to use these posts in your site which is a repository of Sivaji information. Many prior posts in this thread by many hubbers can also be organized into that section.
Thank you Mr.Murali. If it is dubbing, it is absolutely unbelievable. The grunt of pain in the arm, the suppressed swears are challenges even with live sound. With dubbing it is extraordinary.
No. As I said earlier, I don't think I have followed any other performance as closely as this. So I am unlikely to write as deeply about anything else. Will definitely try when I find time.Quote:
Originally Posted by sarna_blr
அருமை அருமை பிரபுராம். இப்பொழுது தான் முழுவதுமாக படித்தேன், மெய் சிலிர்த்து விட்டது! :clap:
Joe Sir
Give a link for all PR's post on Thevar magan on the first page
Joe ஐயா, as I said earlier, நானும் இதை வழிமொழிகிறேன். Pls.Quote:
Originally Posted by Billgates
Yes,Quote:
Originally Posted by Billgates
This must get the top priority among all.
Such a keen observation and analysis.
Let's be assured that Mr Joe will take care of the above requests.
Although it seems a little hard to overcome the Periya Devar syndrome, inorder to keep this thread moving, let's make business as usual, i.e. to discuss various aspects of NT.
Atleast, until Mr Prabhu Ram comes with another B A N G !!!
Couple of days back one of the new channels was telecasting comedy scenes from " மூன்று தெய்வங்கள் ". NT, Muthuraman & Nagesh take care of a grocery shop and the way in which they treat the customers was so hilarious. I really enjoyed it. Worth watching.
டியர் பிரபுராம்,
பெரிய தேவர் பற்றிய சூப்பரோ சூப்பரான ஆய்வுக்கட்டுரை. தேவர்மகனில் நடிகர்திலகம் ஏற்று நடித்த 'பெரியதேவர்' பாத்திரத்துக்கு சிறந்த விளக்கவுரையாக அமைந்துவிட்டது உங்கள் ஆராய்ச்சி. இதைப்படித்தவர்கள் இனி தேவர்மகன் பார்க்கும்போது நிச்சயம் ஒரு புதிய கோணத்தில்தான் பார்ப்பார்கள். அப்படி ஒரு ஒருபுதிய பரிமாணத்தை உங்கள் தொடர் கட்டுரை ஏற்படுத்தி விட்டது.
உங்களைத்தவிர வேறு யாரும் இந்த அளவுக்கு அலசி ஆராய்ந்திருக்க முடியாது என்பது என் திண்ணமான முடிவு. அந்த அளவுக்கு அந்த கதாபாத்திரத்தை அணு அணுவாக ரசித்து, அதை எழுத்து வடிவிலும் தந்து அசத்தி விட்டீர்கள். ஒன்பது அத்தியாயங்களும் அற்புதமாக கதை பேசின. முத்தாய்ப்பாக அருமையான விளக்கங்களோடு முடித்திருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், நன்றிகள்.
விரைவில் மீண்டும் அடுத்த பாத்திர அலசலோடு வாருங்கள்.
டியர் ஜோ,
இந்த அற்புத ஆய்வுக்கட்டுரை, முதல் பக்க அட்டவனையில் சிறப்பிடம் பெற நீங்கள் ஆவண செய்ய வேண்டும். நீங்கள் செய்வீர்கள் என்பது எங்களுக்கு தெரியும் என்றாலும், இது ஒரு சிறப்பு வேண்டுகோள்.
முந்தைய விவாதங்கள்
நடிகர் திலகம் சிவாஜி -பாகம் -1
நடிகர் திலகம் சிவாஜி -பாகம் -2
நடிகர் திலகம் சிவாஜி -பாகம் -3
முக்கிய பக்கங்களின் இணைப்புகள்**********************************
1.நடிகர் திலகம் - சிறப்பு இணையத்தளம்
திரைப்பட விமரிசனங்கள் / பார்வைகள்
-----------------------------------
1.அம்பிகாபதி -திரைப்படப் பார்வை -பாலாஜி
2.என்னைப் போல் ஒருவன் -திரைப்படப் பார்வை -சாரதா
3.ராஜா -திரைப்படப் பார்வை -சாரதா
4.பொன்னூஞ்சல் -திரைப்படப் பார்வை -groucho070
5.சவாலே சமாளி -திரைப்படப் பார்வை -சாரதா
6.அன்பைத் தேடி -திரைப்படப் பார்வை -சாரதா
7.எங்க மாமா,மூன்று தெய்வங்கள் -திரைப்படப் பார்வை --சாரதா
8.புதிய பறவை-திரைப்படப் பார்வை -பாலாஜி
9.அந்த நாள்-திரைப்படப் பார்வை -பாலாஜி
10.அந்த நாள்-திரைப்படப் பார்வை -சாரதா
11.கப்பலோட்டிய தமிழன் - groucho070
<a href="http://www.mayyam.com/hub/viewtopic.php?t=7685&postdays=0&postorder=asc&star t=105">
12.பிராப்தம்,மூன்று தெய்வங்கள்,தர்மம் எங்கே,ராஜராஜசோழன்,சிவகாமியின் செல்வன்,வாணிராணி -ஒரு பார்வை - முரளி ஸ்ரீனிவாஸ் </a>
13.தங்கச்சுரங்கம் - - சாரதா
14. ஊட்டி வரை உறவு - - rajeshkrv
15. ஆட்டுவித்தால் யாரொருவர் - அவன் தான் மனிதன் - - சாரதா
16. பாசமலர் - - பாலாஜி
17. நிறைகுடம் - - முரளி ஸ்ரீனிவாஸ்
18. நிறைகுடம் ,கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி - - groucho070,முரளி ஸ்ரீனிவாஸ்
19. இரு மலர்கள் - - முரளி ஸ்ரீனிவாஸ்
20. விடிவெள்ளி - - NOV
21. நெஞ்சிருக்கும் வரை - - முரளி ஸ்ரீனிவாஸ்
22. மரகதம் - - முரளி ஸ்ரீனிவாஸ்
23. பாக்கியவதி - - NOV
24. அமர தீபம் - - முரளி ஸ்ரீனிவாஸ்
25. அன்னை இல்லம் - - NOV
26. உத்தம புத்திரன் - - முரளி ஸ்ரீனிவாஸ்
27. கூண்டுக்கிளி - - முரளி ஸ்ரீனிவாஸ்
28. இளைய தலைமுறை - - சாரதா
29. பலே பாண்டியா - - முரளி ஸ்ரீனிவாஸ்
30. படிக்காத மேதை - - முரளி ஸ்ரீனிவாஸ்
31. எங்கிருந்தோ வந்தாள் - - சாரதா
32. சுமதி என் சுந்தரி - - சாரதா
மற்றவை
---------
1.உலக அளவில் விருதுகள்! -விகடன் கட்டுரை
2.நடிகர் திலகத்தின் வெற்றி பரணி (1971-1975) -முரளி ஸ்ரீனிவாஸ்
3.நடிகர் திலகத்தின் திரைப்படங்களின் முழுப் பட்டியல் - நக்கீரன்
4.நாட்டிய மேதையும் நடிகர் திலகமும்!-விகடன் கட்டுரை
5.நடிகர் திலகம் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி தொகுப்பு ,நடிகர் திலகம் சினிமாவும் அரசியல் பயணமும் (1980) -முரளி ஸ்ரீனிவாஸ்
6.சிவாஜியும் அப்துல் ஹமீதும்
7.நமது கலை மரபின் சிறந்த பிரதிநிதி -எழுத்தாளர் ஞானி
8.இமயம் -சிபி இணையத்தளம்
9.நடிகர் திலகம் நினைவுநாள் விழா நிகழ்ச்சி தொகுப்பு -முரளி ஸ்ரீனிவாஸ்
<a href="http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?p=1187325#1187325">10. நகைச்சுவைப் பாத்திரங்களில் நடிகர் திலகம் -karthik_sa2
</a>
<a href="http://forumhub.mayyam.com/hub/viewtopic.php?p=1194997#1194997">11. நடிகர் திலகம் பிறந்தநாள் விழா -2007 -முரளி ஸ்ரீனிவாஸ்
</a>
12. ** பெரிய தேவர் - நடிப்புக்கலையின் உச்சம் ...ஒரு அலசல் ** - பிரபுராம்
பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9
Prabhu's remarkable thesis about Periya Thevar, kindled my interest to watch this video again after some years!
http://www.youtube.com/watch?v=ul9Xv...eature=related
கமல் : நான் போறென் ஐயா
திலகம் : போயிட்டு வரேன்னு சொல்லுங்க, வீடுல இருக்குறவங்களுக்கு அதானே நம்பிக்கை.
கமல் : ஐயா இந்த ஊருக்கு எதாவது நல்லது பன்னுவென்யா, என்னய நம்புங்கய்யா!
திலகம் : உங்கள தானே நம்பனும்,இந்த வீட்ல யார் இருக்கா? நம்புரதுக்கு!
I could not control my emotions after watching the last part of the video
பிள்ளை மேல் உள்ள பாசத்தை அவ்வளவு அழகாக வெளிபடுதிருப்பார் திலகம்!
Thank you so much Prabhu!
One more famous 'Panchayath' scene, last part!
http://www.youtube.com/watch?v=UPbj7...eature=related
கமல் : கோவத்துல எதெதொ பேசுரிங்க?
ந.தி : என்னப்பு பைத்தியக்காரனா இருக்க? எனக்கு எப்படி கோவம் வரும்? வெக்கம், மானம்,சூடு,சொரனை இருக்கனும். அப்ப தான் கோவம் வரும்.அத தான் அந்த சின்ன பையன் வாங்கிபுட்டானே!எனக்குப்........[with pain] நாக்காலிய தூக்கி அடிச்சேன்ல, இந்த பக்கம் வலியா இருக்கு!
கமல் : மருந்து ஏதாவது?
ந.தி : எனக்கு என் பேத்திங்க தான் பா மருந்து.[Turning to the crowd] எலேய்! ஒழுஙகா வீட்டுக்கு போகனும் தெரியும்ல! [Turning to Kamal] புத்தி சொல்லி அனுப்பு!
:clap:
சென்ற வாரம் சன் டிவியின் நகைச்சுவைப்படங்களின் ஒளிபரப்பு வரிசையில் மூன்று தெய்வங்களும் இடம்பெறும் என்று எதிர்பார்த்தேன். இருந்தபோதிலும் ஒளிபரப்பான ஐந்து நகைச்சுவைப்படங்களில் நடிகர்திலகத்தின் இரண்டு படங்கள் (சபாஷ் மீனா, கலாட்டா கல்யாணம்) இடம்பெற்றன.Quote:
Originally Posted by rangan_08
(இவ்வாரம் ஒளிபரப்பாக இருக்கும் சீரியஸ் படங்களின் பெயர்களை ஏற்கெனவே முரளி தந்துள்ளார்).
Joe,Quote:
Originally Posted by Murali Srinivas
I saw an ad in Sun TV for TM. Is it next Sunday?
Also, namma oorla Murali Sir sonna dates la varuma illa one week late a varuma? Will check tomorrow
CR,
I havn't seen TM ad ..The other movies scheduled for night ,I don't think we get in singapore ,since they change to Sun Music at 11pm (after the news). :(
Thanks, Mr Joe, for honouring our request.
On 29th March, அகில இந்திய சிவாஜி மன்ற செயற்குழு Meeting was held at Chennai Palmgrove Hotel. Exerpts of the meeting was telecasted in a private channel. Mr Ramkumar expressed his willingness to venture into politics alongwith Prabhu. He also said that always about 40 - 50 people will be chatting in Internet and they will be only discussing about NT.
Would be glad, if anybody in the hub, who had attended the meeting, share their experience with us.
Also, the issue of raising a " Manimandapam" for NT was raised in the Tamilnadu Assembly couple of days back.
Thank You Sridhar, saradhaa_sn for your kind words.
Thank You Joe linking my posts together.
I really enjoyed writing the series of posts.