மருந்தாய் மிடுக்காய் மதிப்பாய் மிளிர்வாள்
மருமகளாகி மாமியாரானதை மறவாதவள்.
-
கிறுக்கன்
Printable View
மருந்தாய் மிடுக்காய் மதிப்பாய் மிளிர்வாள்
மருமகளாகி மாமியாரானதை மறவாதவள்.
-
கிறுக்கன்
:P
:thumbsup: K
சோதனையை வினையாய் வேதனையாய் நினையாது
சாதனையாய் புனையும் துணிவு.
-
கிறுக்கன்
செய்யும் செயலில் சிரத்தை சீராக
செயலின் சிரமம் சிறிதாகும்.
-
கிறுக்கன்
vanakam nga K....:-)
hope all is well.....
kunathai patri rendu vari plz!!!!
நாளும் நெஞ்சில் நஞ்சை நட்டாலும்
நன்மை நவிலும் நற்குணம்.
-
கிறுக்கன்
குன்றா குன்றாய் கூடும் குணம்
கொடுத்து காக்கும் கொடை.
-
கிறுக்கன்
இல்லாமை இயலாமை இதயத்தில் வளர
சொல்லாமல் வளரும் பொறாமை.
-
கிறுக்கன்
awesome K.....thank u !! :clap: :clap: :clap:
செல்லும் சாலை தவறாயின் சீக்கிரம்
சென்று என்ன பயன்.
-
கிறுக்கன்
ஏற்றத்தில் நண்பன் உனை அறிவான்
இறக்கத்தில் நண்பனை நீயறிவாய்.
-
கிறுக்கன்
excellent nga K... :thumbsup:
களைப்பு கபடில்லா உழைப்பின் நிறைவு
கட்டுக் கடங்கா உயர்வு.
-
கிறுக்கன்
<font color=brown size=6>Dedicated</font><font color=green size=6> to</font><font color=red size=6> our </font><font color=blue size=6>beloved </font><font color=gold size=6>Super Star.</font>
Ah! Beauty :thumbsup: I like it. :)Quote:
Originally Posted by kirukan
அறுஞ்சுவை உணவினும் பெருஞ்சுவை ஆரோக்கியம்
அருளும் நல் நகைச்சுவை.
-
கிறுக்கன்
:-)
Quote:
Originally Posted by suvai
ahaaaa....K........... :lol: ... :rotfl: :rotfl3: :mrgreen: apadeengareenga ;-)
K .......i sincerely hope that you are keeping a good record of all your writings!!!
:clap:
சொல்லும் செயலும் கனிவாய் பிறக்க
எல்லாத் துயரும் மரிக்கும்.
-
கிறுக்கன்
<font color=green>குறிப்பு: இது என்னுடைய 100வது கிறுக்கிறள் ஊக்கமளித்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.இக்கொடுமை தொடரும்.(கால கொடுவென...) </font>
அறியா இயல்கள் இயலா தெனும்
இயல்கள் அறியும் அறிவியல்.
-
கிறுக்கன்
K.............101 completed !!!!! awesome nga!!!!!! :thumbsup: :thumbsup: :clap: :clap:
Congrats!!!!! Hopefully we will all see more of kirukans kirukalgal :mrgreen:
சிகரம் மற்றும் வாழ்வில் ஏற்றம்
சிரமம் இறக்கம் எளிதாம்.
கிறுக்கன்
:thumbsup:
உயர்வை காட்டும் வளமை என்றும்
எளிமை கூட்டும் வலிமை.
-
கிறுக்கன்
Quote:
Originally Posted by kirukan
:thumbsup: K
உணர்ச்சிபூர்வ முடிவினும் உரிய உத்திகள்
உடனான முடிவுகள் உரவு.
-
கிறுக்கன்
உயர்வு?
உரவு = வலிமை.Quote:
Originally Posted by pavalamani pragasam
Firmness
isn't correct madam?
-
கிறுக்கன்
:oops: Haven't heard it! Not a popularly known word!
உரவு என்ற சொல்லில் இருந்து தான் உரம் வந்திருக்கும் என எண்ணுகிறேன்.
உங்களுக்கு ஒரு சொல் தான் பரவாயில்லை உங்கள் ஆங்கில கவிதைகளில் ஒரு சில சொற்கள் தான் நான் :cry2: பார்த்த கேட்ட வாற்தைகளாக இருக்கின்றன....
-கிறுக்கன்
:(
தொடங்கும் வேலையில் அடிப்படை முதலடி
தயார்நிலை எனும் வெற்றிப்படி.
-
கிறுக்கன்
வெறுப்புடன் விட்டு கொடுத்தலினும் விருப்புடன்
புரிதல் கூட்டும் பயன்.
-
கிறுக்கன்
:exactly:
இன்பம் சுருங்கி இன்னல் பெருகும்
உள்ளம் இறுகும் எனில்.
-
கிறுக்கன்
Quote:
Originally Posted by kirukan
well said nga K....!!!!
வலி இல்லா வாழ்வில் வழியும்
இல்லை ஒளியும் இல்லை.
-
கிறுக்கன்
சந்தோஷம் காணாத வாழ்வுண்டோ என்ற திரைப்படப் பாடலை நினைவு படுத்துகிறது! :)
hello nga k..
illai....iruku....patri rendu vari plz...& thanks!
hello nga pp maam....nallaa irukeengala?....:-)