முடி சூடா மன்னன்
என்னக்கு தெரிந்து ஜெய் சார் நடித்த ஒரே ராஜா ராணி கதை அம்சம் கொண்ட படம் இதுவாக தான் இருக்கும் . இந்த படத்தின் தயாரிப்பு மற்றும் இயக்கம் : R விட்டால்
இந்த படத்தின் கதை : நாட்டின் ராஜா சதா அந்தபுரதில் இருப்பார் . ஏழை மக்கள் படும் துன்பங்களை பற்றி அறியாதவராக இருப்பார் . ராணி தன் மகனை (ஜெய் ) வேலைகாரி (MN ராஜம் ) விடம் கொடுத்து வளர்க சொல்வார் . MN ராஜம் யின் மகளை வாரிசு என்று சொல்லி அரண்மனையில் வளர்கிறார்கள் . இந்த திட்டம் தெரிந்த ராணி இறந்து விடுகிறார். ராஜகுரு நம்பியார் , மற்றும் mn ராஜம் 25 வருடம் கழித்து மீண்டும் சந்தித்து இளவரசனை அரியணையில் அமர வைப்பது என்று முடிவு செய்கிறார்கள்
ஜெய் மரம் வெட்டும் தொழிலை செய்கிறார் . அசோகன் அவர் தந்தை .
பக்கத்துக்கு நாட்டு இளவரசி (தீபா) ஆன் வேடத்தில் நகர உலா வரும் பொது ஜெய் வீட்டில் தங்குகிறார் . ஜெய் யை காதலிக்கிறார்
mn ராஜம் அரண்மனையில் வேலை செய்கிறார் . அவர் மகள் தான் (Y விஜயா) இப்போ ராணி . ஆனால் திமிர் பிடித்த சர்வாதிகாரி . இதை எதிர்த்து கேள்வி கேட்கும் ஜெய் நாடு கடத்த படுகிறார் . போகும் வழியில் தப்பி ஒரு நாடோடி கூடத்தில் சேர்கிறார் . அங்கே அவர் தற்காப்பு கலையில் தேர்ச்சி அடைகிறார் .
தீபா வின் தந்தை தீபாவுக்கு கல்யாண ஏற்பாடு செய்யும் பொது தீபா ஜெய் யின் படத்தை கொடுத்து அவர் யை மணக்க விரும்பும் ஆசையை வெளியிடுகிறார் . அரண்மனை காவலர்கள் ஜெய் யை தேடி அலைந்து ஜெய் யை தீபா முன்பு கொண்டு வருகிறார்கள் .
தீபா ஜெய் யின் முயற்சிக்கு உதவுகிறார்கள் (Y விஜயா & சரத்பாபு (தளபதி யை பழிவாங்கும் முயற்சிக்கு) )
ஆனால் ஜெய் சரத்பாபு வின் வாள் வீச்சு முன்பு தோல்வி அடைகிறார் . இந்த கலையில் தேர்ச்சி பெற்ற ராஜகுரு நாடுகடத்த பட்ட இருபது தெரிந்து அவரை தேடி கண்டுபிடிக்கிறார் .mn நம்பியார் தான் சரத்பாபு வின் தந்தை என்பதை தெரிந்து கொள்கிறார் . mn நம்பியார் ஜெய் க்கு வித்தையை கற்பிக்கிறார் .
தீபா தன் காதலை ஜெய் விடம் சொல்லும் பொது ஜெய் தான் ஸ்ரீதேவி யை காதலிப்பதை சொல்லலி விடுகிறார் .
அசோகன் சொல்லி ராணி (y விஜயா வுக்கு ) தான் ராணி அல்ல என்று தெரிந்து விடுகிறது . ஜெய் தான் ராஜா என்ற ஆதாரத்தை அழிக்க எண்ணுகிறார் . ஆனால் அதை அழிக்காமல் எடுத்து வந்து விடுகிறார் . தன் தாய் யை கத்தியால் குத்தி விடுகிறார் .
25 ம் வருடம் வந்த உடன் , ஜெய் , mn நம்பியார், அடி பட்ட mn ராஜம் ,ஸ்ரீதேவி , தீபா அனைவரும் ஜெய் யின் நாட்டுக்கு , அரண்மனைக்கு வந்து ஜெய் தான் ராஜா என்பதை நிரூபிக்க முயல்கிறார்கள் . ஆனால் ஆதாரம் y விஜயா விடம் இருக்கிறது , அவர் அமைதியாக இருக்கிறார் . பிறகு தான் தெரிய வருகிறது அவரை சரத்பாபு கொன்று விட்டார் என்று . y விஜயா கையில் ஆதாரம் இருக்கிறது . அதை காட்டி தான் ராஜா என்பதை நிருபித்து சிம்மாசனத்தில் அமர்கிறார் , ஸ்ரீ தேவி யை கை பிடிக்கிறார் ஜெய்
இந்த மாதிரி சரித்திர படங்களுக்கு செலவு அதிகம் பிடிக்கும் . அதுவும் இந்த படம் வந்த நேரம் கலர் சினிமா புழக்கத்தில் இருந்த யுகம் . பொதுவாக ஜெய் படங்கள் medium budget படங்கள் தான் . ஆனால் இந்த படம் செலவு செய்து எடுத்து இருக்கிறார்கள் . கோட்டை(பெங்களூர்) , அந்தபுரம் செட் , பாலைவனம் போன்ற இடங்கள் பிரமாண்டம்
இந்த படத்தில் 3 கதாநாயகிகள். y விஜயா வில்லி, தீபா , ஸ்ரீ தேவி கதாநாயகி . ஒரு மறுத்தல் சரத்பாபு வில்லன்
ஜெய் யின் உடை கொஞ்சம் அடிமை பெண் MGR , கொஞ்சம் 1000 தில் ஒருவன் MGR உடை யின் தாக்கம் .
ராஜா ராணி படத்துக்கு உண்டான விறுவிறு கத்தி சண்டை , துரத்தல் காட்சிகள் இருக்கிறது
நல்ல பொழுது போக்கு படம்