this is again a very rare collection-neenga oru exhibition nadathalame
Printable View
this is again a very rare collection-neenga oru exhibition nadathalame
'சிவாஜி ஆண்டு 84' முதல் நாள்.
எங்களின் வாழ்நாளின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துக்கொண்ட எங்கள் ஆருயிர் அண்ணனே......
இன்று ஒரு நாள் மட்டும் நினைப்பவர்களுக்கு இன்று உன் பிறந்த நாள். ஆனால் எங்கள் உயிரோடு கலந்திட்ட உனக்கு எங்கள் இதயங்களில் எந்நாளும் பிறந்த நாள். எண்ணற்ற ரசிகர்களின் இதயங்களின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்து நிரந்தர ஆட்சி செலுத்தும் உனக்கு வருடம் முழுவதும் திருநாள். இத்திரியைக்கண்ணுறும் அன்பர்களுக்குத் தெரியும், உன் புகழ்பாட எத்தனை எத்தனை ரசிக நெஞ்சங்கள் புதிது புதிதாக வந்து கொண்டிருக்கிறார்கள் என்று. இன்னும் எத்தனை ரசிகப்பெருமக்கள் உன்மீது கொண்ட தங்கள் உள்ளன்பைக்கொட்ட பதிவு கிடைக்காமல் வரிசையில் நிற்கிறார்கள் என்று.
வாழும் வரை ஒரு அன்னை இல்லத்தில் வாழ்ந்தாய், மறைந்தபின்னோ கோடான கோடி இதய இல்லங்களில் வாழ்கின்றாய். இன்றைக்கும் உன் மீது கொண்ட தூய அன்பினால் உன் பிள்ளைகள் உன் திரைப்படங்களை திருவிழாக்களாக கொண்டாடி மகிழ்கின்றனர். கொண்டாட்டங்களின் ஒரு ஓரத்தில் நிச்சயம் கண்ணீர்த்துளிகள் உண்டு. அது எங்களோடு நீ இல்லையே என்ற பதைக்க வைக்கும் உண்மை ய்தார்த்தம். இது தலைமுறை தலைமுறைக்கும் தொடரும்.
உன் புகழ் பாடுவது எங்கள் பொழுதுபோக்கு அல்ல, அது எங்கள் வாழ்வின் முதல் நோக்கு.
என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட
மன்றுளார் அடியாரவர் வான்புகழ்
நின்றது எங்கும் நிலவி உலகலாம்
பெரியபுராணத்தில் சேக்கிழார் பெருமான் சிவபெருமானை என்றும் காதலித்து பூஜை செய்யும் அவரது அடியார்களை வாழ்த்துவர் அது போல் இன்றைய இந்த நன்னாளில் நம் சிவா(ஜி) பெருமானை என்றும் காதலித்து ஆராதனை செய்யும் நம் தலைவரின் கண்மணிகள் எல்லா நலமும்
பெற்று வாழ நம் பெருமான் நம்மை விண்ணில் இருந்து ஆசிர்வதிப்பாராக
நடிகர் திலகத்தின் பிறந்த நாள் மட்டும் அல்ல அவருடைய ரசிகர்களின் பிறந்த நாள் . அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
டியர் பம்மலார் மற்றும் வாசுதேவன்,
'வசந்த மாளிகை' கொண்டாட்டங்கள் முழுவதுமாக முடியட்டும் என்று காத்திருந்தேன். நீங்கள் இருவரும் அள்ளித்தந்த பொக்கிஷப்புதையல்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. வாசுதேவன், வசந்த மாளிகை காட்சிகளனைத்தையும் கண்முன்னே கொண்டுவந்தார் என்றால்....
பம்மலார் அவர்கள் ஆவணக்காப்பகத்தை திறந்து வைத்து அள்ளி அள்ளி வழங்கிவிட்டார். அன்றைக்கு தமிழகத்தின் தலைசிறந்த சினிமா பத்திரிகைகளாக விளங்கிய பேசும் படம், பொம்மை, பிலிமாலயா ஆகிய மூன்றும் வசந்தமாளிகை வெளியீட்டை சிறப்பாகக் கொண்டாடியிருக்கின்றன என்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விஷயம். அவற்றை அட்சரம் பிசகாமல் இங்கே பதிப்பித்து, மீண்டும் அவ்விதழ்களை ரசிகர்களின் கைகளில் தவழவிட்ட உங்கள் சேவையை எப்படிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை.
அனைத்துக்கும் சிகரம் வைத்தாற்போன்று, இத்திரியின் 4162-வது பதிவு, நடிகர்திலகத்தின் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த ஆவணப்பதிவு. தமிழகத்தில் மட்டும் 12 அரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் (அதில் எங்கள் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 3 நகரங்களில்), தமிழகத்தில் இரண்டு நகரங்களில் வெள்ளி விழா, கடல் கடந்து இலங்கை மண்ணில் 250 நாட்களுக்கு மேல் என வெற்றிக்கொடி நாட்டிய திரைக்காவியத்தின் மிக முக்கிய ஆவணச்செப்பேடுகள்.
சமீபகாலமாக நமது திரியைக்கண்ணுறும் பல அன்பர்கள் உண்மையறிந்து, முன்னர் திட்டமிட்டு செய்யப்பட்டு வந்த பொய்ப்பிரச்சார மாயைகள் விலகி, மறுக்க முடியாத ஆதாரங்களை நேருக்கு நேர் கண்டு, தெளிந்து வருகிறார்கள் என்பது உண்மை.
பம்மலார் அவர்களே, இந்த சீரிய சேவைக்கு உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. இருந்தாலும் சொல்ல வேண்டியது எங்கள் கடமை.
அக்டோபர் களேபரங்கள்
ஆண்டுதோறும் அக்டோபர் இறுதி பத்திலிருந்து நவம்பர் துவக்க பத்துக்குள் தீபாவளிப்பண்டிகை வருவதால், இவ்விரு மாதங்கள் திரைப்பட படையெடுப்புகள் அதிகமாகவே இருக்கும். இதுபோல ஜனவரியிலும் (பொங்கல் மற்றும் ஜனவரி 26 பாலாஜி படங்கள்). அந்த வகையில் அக்டோபரில் வெளியான படங்களின் பட்டியல்.....
01 துணை (1982)
03 சபாஷ் மீனா (1958)
07 நாம் பிறந்த மண் (1977)
10 திருடன் (1969)
17 பராசக்தி (1952)
18 பாபு (1971)
18 கீழ்வானம் சிவக்கும் (1981)
19 பாவை விளக்கு (1960)
19 பெற்றமனம் (1960)
19 பட்டாக்கத்தி பைரவன் (1979)
21 எங்க ஊர் ராஜா (1968)
22 அம்பிகாபதி (1957)
22 சித்ரா பௌர்ணமி (1976)
23 வம்ச விளக்கு (1984)
25 கௌரவம் (1973)
25 தேவர் மகன் (1992)
27 பந்தபாசம் (1962)
27 தச்சோளிஅம்பு (1978)
28 பைலட் பிரேம்நாத் (1978)
29 சொர்க்கம் (1970)
29 எங்கிருந்தோ வந்தாள் (1970)
30 அவள் யார் (1959)
31 பாகப்பிரிவினை (1959)
உலகத் தமிழர்களின் உள்ளத்தில் நிரந்தர இடம் பிடித்த யுகக் கலைஞனுக்கு இன்று 84-வது பிறந்த நாளாம்.
உன்னை நினைக்கும் போதெல்லாம் உருகுதய்யா உள்ளம்.
உன்னை ஈந்த நாட்டில் நானும் இருக்கிறேன் என்பதனை நினைக்கும் போதெல்லாம் பெருகுதய்யா மகிழ்ச்சி வெள்ளம்.
உனக்கு மட்டும் எப்படி இப்படி ஒரு கூட்டம்?
உன்னுடைய அந்த அற்புதத் திறனுக்கு மட்டும் ஏன் இன்றளவும் ஒவ்வொருவருக்கும் இவ்வளவு நாட்டம்?
உலகம் உள்ளளவும், அதில் கலை உள்ளளவும், உன் புகழ் நீடு வாழும்.
உலகத் தமிழர்களின் ஊனோடும் உயிரோடும் கலந்து விட்ட உன்னை நினைக்கும் ஒவ்வொரு நாளும் திருநாளே!
நெகிழ்ச்சியுடன்,
இரா. பார்த்தசாரதி
எங்கள் இதயத்திற்கு இன்று பிறந்தநாள்.
இந் நானிலம் உள்ளவரை நின் புகழ் தழைத்தோங்கும்.
உங்கள் பிறந்தநாளே கலையின் பிறந்தநாளாக, எங்கள் வாழ்வின் சிறந்த நாளாக என்றென்றும் அனுசரிக்கும்
திரு பம்மலர் அவர்கள் கூறிய ஒரு வாசகம் திருவாசகமாக எனக்கு தோன்றியது
அக்டோபர் 1 அன்று தலைவர் அவர்களின் திரைப்படம் ஒன்றே ஒன்று தான் வெளியானது அது தான் துணை நம் ரசிகர்களுக்கு என்றும் துணை என்றேன். அப்போது திரு பம்மலார் அவர்கள் கூறினார்கள் மே 1 அன்று (அண்ணனின் திருமண நாள் ) வெளியான படங்கள் "கல்தூண் மற்றும் காவல் தெய்வம்" என்ன பொருத்தம் அன்னை இல்லத்திற்கு மட்டுமல்ல நமக்கும் அவர்தான் துணை, கல்தூண் மற்றும் காவல் தெய்வம்
திரு ஸ்ரீனிவாசன் அவர்கள் தலைவர் அவர்களை பற்றி இரண்டு கவிதை கூறினார்கள் . திரு பம்மலார் அவர்கள் நம் திரியில் அதை வெளியிடுவார்கள் என நினைகிறேன்
தென்னாடுடைய சிவனே போற்றி என்நாட்டவர்க்கும் இறைவ போற்றி
அன்னை இல்லதானே போற்றி ராஜாமணி மைந்த போற்றி
கமலா மணாளனே போற்றி சூரகோட்டை சிங்கமே போற்றி
என்றும் அன்புடன்
கிருஷ்ணா
நமது திரியின் அறிவிப்பால் மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் திரு ஸ்ரீனிவாசன் sir,திரு kc சார் அவர்களின் தலைமையில் திரு y g மகேந்திர அவர்கள் சிறப்பு விருந்தினர் ஆக கலந்து கொண்ட அன்னதான நிகழ்ச்சிக்கு அடியேனும் கலந்து கொண்டேன் மட்டற்ற மகிழ்ச்சி . திரு pammalar அவர்களும் வந்து இருந்தார்கள் இன்று குறைந்தது 400 பேருக்காவது அன்னதானம் நடந்து இருக்கும் என்று நினைக்கிறன்.
எப்பிடிப்பட்ட அடியார்கள் ரசிகர்களாக நம்மவருக்கு கிடைத்து இருக்கிறார்கள் . உண்டி கொடுத்தல் உயிர் கொடுத்தல் என்பார்கள். உண்மையிலே மிகவும் ஒரு நல்ல, மனதிற்கு இனிமையான நிகழ்ச்சி
விண்ணுலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் எங்கள் நடிகர்திலகத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
நடிகர்த்திலகமே,
உன்னை மறந்தால்தானே நினைப்பதற்கு ?
என்றென்றும் உன்னை நினைத்திருப்பேன்
என்றாவது ஒரு நாள் மறந்திருப்பேன்
அன்று நான் இறந்திருப்பேன்
நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, 01-10-2011 அன்று
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், நடிகர்திலகம் சிவாஜி
சமூகநலப்பேரவை சார்பில் நடைபெற்ற சிறப்பு அன்னதான விழா புகைப்படங்கள்.
http://i1234.photobucket.com/albums/...ShawltoYGM.jpg
http://i1234.photobucket.com/albums/...laSelvaraj.jpg
http://i1234.photobucket.com/albums/...nnadhanam3.jpg
http://i1234.photobucket.com/albums/...nnadhanam1.jpg
http://i1234.photobucket.com/albums/...hanamView2.jpg
http://i1234.photobucket.com/albums/...laSelvaraj.jpg
டியர் சந்திரசேகர்,
நடிகர்திலகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு 'நடிகர்திலகம் சிவாஜி சமூநலப்பேரவை' சார்பில் நீங்கள் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு அன்னதானம் நிகழ்ச்சியின் நிழற்படங்களை சூட்டோடு சூடாக இங்கு பதித்து அனைவரையும் பரவசமடையச்செய்து விட்டீர்கள்.
நிச்சயம் உங்கள தன்னலமற்ற சேவைகளை நினைத்து உள்ளம் பூரிப்படைகிறது. அந்த விருந்தில் கலந்து கொண்டவர்களெல்லாம் நம் நடிகர்திலகத்தை எப்படியெல்லாம் மனதுக்குள் வாழ்த்தியிருப்பார்கள் என்று எண்ணும்போது கண்களில் நீர் கசிகின்றது. அனைத்துப்பெருமைகளும் உங்களுக்கே.
இரண்டு நாட்களுக்கு முன் வந்திருந்த ஜூனியர் விகடன் செய்திப்பதிவைப் பார்த்தபோதே எழுத வேண்டும் என்று நினைத்தேன். இப்போது இந்த அன்னதானம் நிகழ்ச்சியையும் பார்த்தபோது உங்கள் சேவைகளை நினைத்து என் கண்கள் குளமாகிவிட்டன.
நடிகர்திலகத்தின் மூலமாக பெரிய பெரிய பெருமைகளையும், பதவிகளையும் அடைந்தவர்களெல்லாம் அவரை மறந்து எங்கோ சென்று விட்ட வேளையில், தூய தொண்டனான தங்களின் சேவைகள் பாராட்டுக்குரியவை, போற்றுதலுக்குரியவை.
தங்களின் எண்ணம், சொல், செயல் என அனைத்திலும் நிறைந்திருப்பவர் நடிகர்திலகம், நடிகர்திலகம் மட்டுமே. தொடரட்டும் தங்களின் சீரிய பணி.
சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு சிறப்பித்த திரு ஒய்.ஜி.மகேந்திரா அவர்களுக்கும், டாக்டர் கமலா செல்வராஜ் அவர்களுக்கும் நடிகர்திலகத்தின் அனைத்து ரசிகர்கள் சார்பிலும் நன்றிகள்.
Dear Our Living Legend!!
On your birthday, We celebrate you!
On your special day,
I’m thinking of all the wonderful things you are
that bring so much joy to others, including me!
We celebrate your unconquerable spirit,
that lets you meet every challenge
with confidence, enthusiasm and persistence.
We admire your sensitivity.
You see needs that cry out to be met
that no one else sees,
and you meet them,
out of your deep and caring heart,
out of your wisdom,
out of your strength.
We treasure your uniqueness;
There is no one else like you,
and we feel blessed to know
such an extraordinary person.
We respect you,
cherish you, look up to you.
God gave a gift to the world when you were born—
a person who loves, who cares,
who sees a person’s need and fills it,
who encourages and lifts people up,
who spends energy on others
rather than herself,
someone who touches each life, enters,
and makes a difference in the world,
because ripples of kindness flow outward
as each person you have touched, touches others.
because you are a special treasure
for all that you’ve done.
May the love you have shown to others
return to you, multiplied.
We wish you the happiest of birthdays,
and many, many more.
Hope that this day & days ahead
be filled with our Legend N.T. Blessings
No one's is more deserving
than this Special Actor!!
With wishes showering from our true N.T. fans, shows and proves that our Legend is still living in each one of us souls. N.T. fans i salute you all on this great occasion, really our fans are great.
JAIHIND
M. Gnanaguruswamy
சாரதா,
உங்களின் அஞ்சலி மிக அழகாய் அமைந்திருக்கிறது. குறிப்பாக பொழுதுபோக்கு அல்ல முதல் நோக்கு என்ற முத்தாய்ப்பான வரி.
கிருஷ்ணாஜி, சேக்கிழார் பெருமானை துணைக்கு அழைத்து திருவருட்செல்வரை புகழ்ந்தது சாலப் பொருத்தம்.
Dear Guruswamy,
Nicely worded Anjali and apt to the occasion.
அன்புடன்
முரளி சார் சொன்னதை அப்படியே நான் வழிமொழிகிறேன்
அன்புடன்
மிகச் சிறந்த நெடுந்தகடு
நீண்ட நாள் ஆவலைப் பூர்த்தி செய்யும் சுவடு
நம் நெஞ்செல்லாம் நீங்கா நினைவோடு
ஆட்சி செய்யும் மன்னரின்
அட்டகாசமான பேட்டியினைத்
தாங்கி வரும் செப்பேடு
http://i872.photobucket.com/albums/a...vers/snnfw.jpg
நடிகர் திலகத்தின் 83-வது பிறந்த நாள் விழா மிக சிறப்பாக இன்று நடந்தேறியது. சென்னை ஹபிபுல்லா சாலையில் உள்ள கர்நாடக சங்கதினாரல் நடத்தப்படும் பள்ளியில் அமைந்துள்ள ராமராவ் கலா மண்டபத்தில் இன்று மாலை நடைபெற்ற விழாவில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் வேந்தரும் இந்திய ஜனநாயக கட்சி தலைவரும் புதிய தலைமுறை வார இதழ் மற்றும் தொலைகாட்சியை நடத்திவரும் பச்சமுத்து சிறப்பு விருந்தினராக பங்கேற்க நடிகர் திலகத்துடன் இணைந்து பணியாற்றிய ஒளிப்பதிவாளர் வின்சென்ட், இயக்குனர் ஏ.சி.திருலோகச்சந்தர், நடிகை சுகுமாரி, கதை வசனகர்த்தா சித்ராலயா கோபு மற்றும் பாலமுருகன் ஆகிய ஐந்து பேருக்கு சிவாஜி விருதும் ஐம்பதினாயிரம் ரூபாய் சன்மானமும் வழங்கப்பட்டன.
ஏ.வி.எம். சரவணன் அவர்களின் மேற்பார்வையில் நடந்து வரும் செவாலியர் சிவாஜி கல்வி அறக்கட்டளை வருடத்தில் 150 பேருக்கு இலவச கல்வி வழங்குகிறது. அந்த அறக்கட்டளைக்கு ஐம்பதினாயிரம் ரூபாய் நன்கொடை தரப்பட்டது.
பச்சமுத்து, ஏ.வி.எம்.சரவணன் மற்றும் சிறப்பு பேச்சாளார் ஞானசம்பந்தம் அவர்கள் உரையாற்ற ஹப்பர் நண்பர் மோகன்ராம் விழாவினை தொகுத்து வழங்கினார். ராம்குமார் வரவேற்புரையும் பிரபு நன்றியுரையும் முறையே செய்ய விழா இனிதே நடந்து முடிந்து.
விழாவைப் பற்றிய விளக்கமான தகவல்களுடன் விரைவில்
அன்புடன்
சாரதா,
உங்களின் அக்டோபர் பட்டியல் கண்டேன். உங்களுக்கும் சுவாமி, ராகவேந்தர் சார் மற்றும் வாசு சாருக்கு ஒரு அன்பு வேண்டுகோள். இந்த வேண்டுகோளின் பின்னணியில் இருப்பது நமது நண்பர்களின் உடல்நலம் பற்றிய ஒரு அக்கறையும் கவலையுமே ஆகும்.
நமது நடிகர் திலகம் 300 படங்களில் நடித்துள்ளார். 12 மாதங்களுக்கு சராசரியாக பார்த்தோம் என்றால் மாதம் 25 படங்கள் வருகிறது. அக்டோபர் நவம்பர் மாதங்களில் இது மேலும் அதிகரிக்கும்.
இவை அனைத்தையும் ஒன்று விடாமல் இங்கே விளம்பரங்களின் வழியாகவும் இதழ்கள் வழி வந்த செய்திகளின் பதிவுகள் மூலமாகவும் திரியில் பதிவுகளாக இடுவது என்பது எளிதான வேலை இல்லை. கடந்த 2 மாதங்களாக சுவாமி அவர்களும் வாசுதேவன் அவர்களும் இந்த dead line என்று சொல்வார்களே அதை meet செய்வதற்கு தங்களை வருத்திக் கொண்டு செயல்படுவதை நேரில் அறிந்தவன் என்ற முறையில் மிகவும் வருந்துகிறேன்.
ஆக என் வேண்டுகோள் என்னவென்றால் ஒரு முக்கியமான மைல்கல் நிகழ்வுகள் என்று சொல்லக்கூடிய படங்களின் தேதிகளில் மட்டும் இந்த கொண்டாட்டத்தை வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே ஆகும். உதாரணமாக இந்த அக்டோபர் 17 அன்று பராசக்தி தன் மணிவிழா ஆண்டான 60-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அது போன்ற மணி விழா மற்றும் பொன் விழா ஆண்டு துவக்கம் நிறைவு என்ற நாட்களின் போது மட்டும் அதை சிறப்புற கொண்டாடினோம் என்றால் அது இவர்களையும் அதிகம் வருத்தாது, நமது திரிக்கும் அதே வேகத்தையும் அளிக்கும் என்பது திண்ணம். அப்படி செயல்படும்போது நமக்கும் ஒரே வருடத்தில் அனைத்து படங்களையும் முடித்து விடாமல் தொடர்ந்து பல வருடங்களுக்கு அதை சீராக கொண்டு செல்லவும் உதவும்.
முக்கியமான நிகழ்வுகளின் போது மட்டும் அதை சிறப்புற கொண்டாடிக் கொண்டிருந்த சுவாமி மற்றும் நண்பர்களை ஆர்வக் கோளாறு காரணமாக தர்மம் எங்கே படத்தின் விளம்பரங்களை வெளியிடுங்கள் என்று கேட்டு இந்த போக்கை ஆரம்பித்து வைத்தவன் நான் என்பதால் அந்த தவறை ஒப்புக் கொண்டு நண்பர்களுக்கு இதை வேண்டுகோளாக வைக்கிறேன்.
சாரதா, சுவாமி மற்றும் வாசு சார், என் வேண்டுகோள் உங்களில் யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.
அன்புடன்
Chanadrasekar Sir,
The photos have come out very well. Glad that the function went off so well.
Sarathy, Bala, Kumar and Senthil,
Good that everybody particiapted today in our thread.
Regards
மலரும் நினைவுகள்
கோலாகலமான முறையில் மிகமிக பிரம்மாண்டமாக நடைபெற்ற
நடிகர் திலகத்தின் 43வது பிறந்ததின விழா [ரிப்போர்ட்]
[1.10.1970 & 2.10.1970 : எஸ்.ஐ.ஏ.ஏ. திடல் : சென்னை]
வரலாற்று ஆவணம் : பொம்மை : நவம்பர் 1970
[மூன்று பக்க விழாத் தொகுப்பு]
முதல் இரண்டு பக்கங்கள்
http://i1094.photobucket.com/albums/...EDC4722a-1.jpg
முதல் இரண்டு பக்கங்கள் (தனித்தனியாக)
http://i1094.photobucket.com/albums/...EDC4723a-1.jpg
http://i1094.photobucket.com/albums/...EDC4724a-1.jpg
மூன்றாவது பக்கம்
http://i1094.photobucket.com/albums/...EDC4725a-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
1.10.1970 வியாழன் அன்று சென்னை எஸ்.ஐ.ஏ.ஏ. திடலில் மிக பிரம்மாண்டமான முறையில் கொண்டாடப்பட்ட நடிகர் திலகத்தின் 43வது பிறந்தநாள் விழாவில் வெளியிடப்பட்டது முதன்முதல் 'சிவாஜி ரசிகன்' சிறப்பு மலர். இம்மலரின் தனிச்சிறப்பு என்னவென்றால், அதுவரை வெளிவந்திருந்த ஒவ்வொரு நடிகர் திலகத்தின் திரைப்படத்தினுடைய புகைப்படத்தையும் ஒரு பக்கம் அளித்து, அதன் கீழே அப்படம் குறித்த நடிகர் திலகத்தின் கருத்தையும் சேர்த்து ஒரு ஆல்பம் போல் கொடுத்திருந்தார்கள் மலர்க்குழுவினர். இந்த மலரின் ஒவ்வொரு பக்கமும் இன்றிலிருந்து இங்கே தொடராகத் தொடர்கிறது...
அன்புடன்,
பம்மலார்.
சிவாஜி பொக்கிஷம்
"சிவாஜி ரசிகன்" சிறப்பு மலர் : 1.10.1970
http://i1094.photobucket.com/albums/...EDC4726a-1.jpg
http://i1094.photobucket.com/albums/...EDC4727a-1.jpg
http://i1094.photobucket.com/albums/...EDC4728a-1.jpg
http://i1094.photobucket.com/albums/...EDC4729a-1.jpg
தொடரும்...
அன்புடன்,
பம்மலார்.
சிவாஜி பொக்கிஷம்
"சிவாஜி ரசிகன்" சிறப்பு மலர் : 1.10.1970
http://i1094.photobucket.com/albums/...EDC4730a-1.jpg
http://i1094.photobucket.com/albums/...EDC4731a-1.jpg
http://i1094.photobucket.com/albums/...EDC4732a-1.jpg
http://i1094.photobucket.com/albums/...EDC4733a-1.jpg
தொடரும்...
அன்புடன்,
பம்மலார்.
1.10.2011 : 84வது சிவாஜி ஜெயந்தி
சுவரொட்டிகள்-பதாகைகள் ஆல்பம்
http://i1094.photobucket.com/albums/...r/GEDC4710.jpg
http://i1094.photobucket.com/albums/...GEDC4718-1.jpg
http://i1094.photobucket.com/albums/...r/GEDC4705.jpg
http://i1094.photobucket.com/albums/...r/GEDC4704.jpg
தொடரும்...
அன்புடன்,
பம்மலார்.
பம்மலாரின் அட்டகாசமான பதிவுகளுக்கு நடுவே குறுக்கிடுவதற்கு மன்னிக்கக வேண்டும்.
அனைத்து அன்புள்ளங்களுக்கும் இனிப்பான செய்தி.
நமது நெடுநாள் கனவு, முரளி சாரின் சீரிய முயற்சியால் நனவாகிறது.
நடிகர் திலகத்தின் திரைப்படங்களை பாட புத்தகமாக வைக்கவேண்டும் என்று மேடைக்கு மேடை முழங்கிவிட்டு மறந்து போகும் வெற்று வாய் வீரர்களை ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு, அதற்கான முதல் படியில் நாம் அடியெடுத்து வைக்கிறோம்.
06.10.2011 விஜயதசமி அன்று பூஜையுடன் நமது
NTFANS - Nadigar Thilagam Film Analysis and Nostalgic Society - நடிகர் திலகத்தின் திரைப்படங்களின் கருத்தாய்வு மற்றும் நினைவூட்டல் அமைப்பு - தொடங்கப் படுகிறது
விரைவில் இதற்கான உறுப்பினர் விண்ணப்ப படிவங்கள் மற்றும் சட்ட திட்டங்கள் நம்முடைய நடிகர் திலகம் இணைய தளத்தில் வெளியிடப் படும். ஏற்கெனவே நம் மய்ய நண்பர்கள் சிலர் உறுப்பினர் ஆக பெயர் தந்து விட்டனர். ஆர்வம் உள்ளோர் இந்த வாய்ப்பினைப் பயன் படுத்திக் கொள்ளலாம்.
இந்த அமைப்பின் தலைவராக திரு ஒய்.ஜி.மகேந்திரா அவர்களும், துணைத் தலைவராக நமது ஹப்பர் திரு மோகன் ராம் அவர்களும், ஆடிட்டர் ஸ்ரீதர் அவர்களும், பொருளாளராக நமது ஒப்பில்லா ரசிக திலகம் முரளி ஸ்ரீநிவாஸ் அவர்களும் மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக திரு கவிதாலயா கிருஷ்ணன், அகில இந்திய சிவாஜி ரசிகர் மன்றத் தலைவர், ருஷ்ய கலாச்சார மற்றும் நட்பு அமைப்பு சார்பில் அதன் செயலாளர், உள்பட பலர் அழைக்கப் பட்டுள்ளனர். இந்தக் குழு தற்காலிகமாக உருவாக்கப் பட்டுள்ளது. நாளடைவில் இது உறுப்பினர்களின் முடிவுகளுக்கேற்ப மாற்றியமைக்கப் படலாம்.
இந்த அமைப்பு முழுக்க முழுக்க அவரது படங்களைப் பாடமாக்கும் முயற்சி.. எனவே இந்த அமைப்பின் தமிழ் TAG LINE இப்படி இருக்கலாம் -
படங்களைப் பாடமாக்குவோம்
தங்கள் ஆதரவினை எதிர் நோக்குகிறோம்.
அன்புடன்
1.10.2011 : 84வது சிவாஜி ஜெயந்தி
சுவரொட்டிகள்-பதாகைகள் ஆல்பம்
http://i1094.photobucket.com/albums/...r/GEDC4703.jpg
http://i1094.photobucket.com/albums/...r/GEDC4706.jpg
http://i1094.photobucket.com/albums/...r/GEDC4715.jpg
http://i1094.photobucket.com/albums/...r/GEDC4711.jpg
தொடரும்...
அன்புடன்,
பம்மலார்.
டியர் சந்திரசேகரன் சார்,
தங்களின் தொடர் பாராட்டுதல்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் !
அடுத்த ஐந்து ஆண்டு திட்டத்தைப் போல், அடுத்த ஐந்து ஆண்டு போராட்டத்தை துவக்கியுள்ளீர்கள் ! தங்களது பெருமுயற்சிகள் பெரும் வெற்றியடைய இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் !! சிங்கத்தமிழனுக்கு சிறப்பானதொரு நினைவாலயம் சீரிய முறையில் சீக்கிரமே அமைய வேண்டும் என்பதே அனைவரின் அவா !!!
சிறப்பு அன்னதான விழா புகைப்படங்கள் Superb !
அன்புடன்,
பம்மலார்.
டியர் வாசுதேவன் சார்,
தாங்கள் அளித்து வரும் கலக்கல் பாராட்டுக்களுக்கு எனது கனிவான நன்றிகள் !
கடலூரில் கலைக்குரிசிலுக்கு விரைவில் திருவுருவச்சிலை என்கின்ற செய்தி காதுகளில் தேன் பாய்ச்சுகிறது ! கூடிய விரைவில் அமைய பிரார்த்திப்போமாக!
"வசந்த மாளிகை" ஷூட்டிங் வீடியோ தேடினாலும் கிடைக்காத ஒன்று !
"அன்பே ஆருயிரே" பதிவு அருமை !
பிறந்தநாள் புகைப்படங்கள் அருமை என்றால் நடிகர் திலகத்தின் மணிவிழா மலரிலிருந்து அளிக்கப்பட்ட பிறந்தநாள் சிறப்பு நிழற்படங்கள் அசத்தல் !
அன்புடன்,
பம்மலார்.
டியர் ராகவேந்திரன் சார்,
பாராட்டுக்கு நன்றி !
"கர்ணன்" விளம்பரத்தை 'hot'ஆக அளித்தமைக்கு 'sweet' நன்றிகள் ! 'திவ்யா' உலகளாவிய வெற்றியைப் பெறப் போவது உறுதி !
" வசந்த மாளிகை" ஷூட்டிங் ஸ்பாட் நிழற்படம் அரிய பொக்கிஷம் !
"துணை" ஆவணங்கள் dhool !
அன்புடன்,
பம்மலார்.
சகோதரி சாரதா,
பெரிய பாராட்டுக்களுக்கு அரிய நன்றிகள் !
அக்டோபர் காவியப் பட்டியல் அருமை !
("கீழ்வானம் சிவக்கும்" வெளியான தேதி : 26.10.1981, "பைலட் பிரேம்நாத்" வெளியான தேதி : 30.10.1978).
அன்புடன்,
பம்மலார்.
டியர் முரளி சார்,
பாராட்டுக்களுக்கு நன்றிகள் !
தயவு செய்து பெரியபெரிய வார்த்தைகளையெல்லாம் சொல்லாதீர்கள் !
அன்புடன்,
பம்மலார்.
டியர் செந்தில் சார், பாராட்டுக்கு நன்றி !
டியர் ராமஜெயம் சார்,
தாங்கள் வழங்கிய பாராட்டுக்கு நன்றி !
தங்களின் அமெரிக்க பயணம் அருமையாக அமைய உளப்பூர்வமான நல்வாழ்த்துக்கள் !
Dear Mr. kumareshan prabhu, Thank you very much !
Dear sankara1970,Thanks a lot !
டியர் ஜேயார் சார், பாராட்டுக்கு நன்றி !
டியர் கிருஷ்ணாஜி, பாராட்டுக்களுக்கும், பதிவுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
அன்பு முரளி சார் ,
நடிகர் திலகத்தின் பிறந்த நாள் பற்றி தாங்கள் அளித்துள்ள பதிவு அற்புதத்திலும் அற்புதம். நம் வாழ்வில் எல்லா சந்தோஷங்களும் நிலைத்து நிற்பதில்லை நம் மகான் நமக்கு ஒவ்வொரு வினாடியும் அளித்துக் கொண்டிருக்கும் ஆயுள் சந்தோஷம் ஒன்றைத் தவிர. தங்கள் ஆத்மார்த்தமான தலைவர் பக்திக்கு தலை வணங்குகிறேன். நன்றி!
டியர் ராகவேந்திரன் சார்,
நடிகர் திலகத்தைப் பற்றியும்,அவர்தம் ரசிக இரத்தினங்களின் உண்மையான குணநலன்கள் பற்றியும் அருமையான பதிவை அளித்துள்ளீர்கள். லட்சம் நரம்புகளிலும் நர்த்தன நடனம் புரியும் சிவா(ஜி) அல்லவா நம் இதய தெய்வம்!
NTFANS சரித்திரம் படைக்கப் போவது உறுதி. இதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து அயராது பாடுபடும் அருமை நண்பர் திரு முரளி ஸ்ரீநிவாஸ் அவர்களுக்கும், தன்னடக்கம் ஒன்றையே தாரக மந்திரமாய்க் கொண்ட தங்களுக்கும்,சொசைட்டி உருவாக ஆதரவளித்து தலைமைப் பொறுப்பை ஏற்கவிருக்கும் திரு. Y.G.M. சாருக்கும், திரு மோகன்ராம் சாருக்கும் என் இதயபூர்வமான மகிழ்ச்சி நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி!
மதிப்பிற்குரிய சாரதா மேடம்,
தங்கள் அன்பிற்கு நன்றி!. நம்மவரின் பிறந்தநாள் பற்றிய தங்களின் பதிவுகள் பரவசமடையச் செய்தததோடு இதயத்தை கனக்கவும் வைத்தன. அந்த யுக புருஷன் மட்டும் நேற்று இருந்திருந்தால்...அன்னை இல்லத்தின் பசும்புல் திறந்தவெளிப் பந்தலில் அமர்ந்து நேரிடையாக அனைவருக்கும் ஆசி வழங்கி அருள் பாலித்த அந்த காவியக் கடவுள் புகைப்பட உருவில் இன்று காட்சி தருவதைக் காணும் போது கண்களில் கண்ணீர் ஜீவநதியாய் வாழ்நாள் முழுதுக்கும் பெருக்கெடுத்துக் கொண்டே இருக்கும். நானும், பம்மலாரும் நேற்று அன்னை இல்லத்தில் அந்த அன்புத் தெய்வத்தின் திருவுருவப் படத்தைப் பார்த்து நெகிழ்ந்தபடியே நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். மகானின் ஆசிகளையும் வேண்டிக்கொண்டோம். இதோ அந்த அன்பு தெய்வத்தை தரிசியுங்கள்.
நம்மவரின் பிறந்த நாளான 1-10-2011 அன்று அன்னை இல்லத்தித்தின் வாசலில் ரசிகர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த சிவாஜி மகானின் திரு உருவப் படம்.
http://i1087.photobucket.com/albums/...Photo-0018.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
டியர் சந்திரசேகரன் சார்,
நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, 01-10-2011 அன்றுசென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், நடிகர்திலகம் சிவாஜி
சமூகநலப்பேரவை சார்பில் நடைபெற்ற சிறப்பு அன்னதான விழா ஒரு புண்ணிய விழா. ஏழைகளின் வயிறு நிரம்ப வைத்து அவர்களின் அன்பு வாழ்த்துக்களையே நம் மகானுக்கு பிறந்தநாள் காணிக்கையாக வழங்கி விட்டீர்கள். மகானின் உள்ளம் உங்களை பல்லாண்டு காலம் இதே தொண்டுகள் செய்து இனிது வாழ என்றும் வாழ்த்திக் கொண்டிருக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ! தங்கள் கொடையுள்ளம் சிறக்க வாழ்த்தும்
அன்பு வாசுதேவன்.
[QUOTE=pammalar;746331]30.9.2011 வெள்ளி முதல் மதுரை 'ஸ்ரீமீனாட்சி' திரையரங்கில் தினசரி 4 காட்சிகளாக "பார்த்தால் பசி தீரும்".
Enna kudumai Pammalar, I have seen PPT ad on Thursday evening in Madurai, but I have to leave Madurai on Friday afternoon and missed the Sunday gala "Allapparai" and also could able to watch single NT movie on my Madurai trip on theatre.
But I have watched "Thanga Surangam" on our NT birthday... simply enjoyed each and every scene.
Pammalar, Vasu sir, Saradha madam, I also wish like Murali sir to have only important and special occasion details of our NT, because you guys are spending soooo much of time...
Murali sir, I had very nice trip and lucky to meet you in Madurai but unlucky for not able to meet Ragavendran, Pammalar sir. I hope will make it next trip.
Cheers,
Sathish
நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, 01-10-2011 அன்று ரசிகமன்றத்துப் பிள்ளைகள் ஒட்டியிருந்த கலக்கல் சுவரொட்டிகள்.
http://i1087.photobucket.com/albums/...11-1215001.jpg
http://i1087.photobucket.com/albums/...11-1426002.jpg
http://i1087.photobucket.com/albums/...11011-1425.jpg
http://i1087.photobucket.com/albums/...11-1714001.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
http://i1087.photobucket.com/albums/...Photo-0035.jpg
http://i1087.photobucket.com/albums/...Photo-0039.jpg
http://i1087.photobucket.com/albums/...Photo-0040.jpg
'நடிப்புப் புலி' வேட்டையாடி அன்னை இல்லத்தில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் புகழ் பெற்ற நிஜப்புலி.
http://i1087.photobucket.com/albums/...5/SNAP0129.jpg
அன்புடன்,
வாசுதேவன்.