I am a great fan of NT....and I joined this forum to discuss about him and legends. Unfortunately I cannot read most of the posts as they are in Tamil. I am a foreigner of Tamil descent and I am really disappointed. :((
Printable View
I am a great fan of NT....and I joined this forum to discuss about him and legends. Unfortunately I cannot read most of the posts as they are in Tamil. I am a foreigner of Tamil descent and I am really disappointed. :((
Dear Karthikka,
From your user name I guess 2 things primarily:
1. You are very young around 30.
2. You must be a male
(though male or female does not matter, it is useful to address you with respect).
Many of the hubbers do write in English and they are well versed, you can refer the postings of seniors like Murali Sir, Pammalar Sir, Saradha Madam (she is very well versed in English but prefers Tamil, I presume). It all depends on the context which demands the usage of vocabulary. Any way we shall try to present in both English and Tamiz.
Welcome to the hub and we are extremely delighted to see more and more youngsters becoming fan of Nadigar Thilagam, which clearly indicates his prowess and capacity to attract all the future generations.
Pls express what you want to in your own style and language.
Welcome once again
Regards,
Raghavendran
Welcome Karthikka. Have a great stay here. We understand that there are people like you who have problems to read if we write it in Tamil. But as Raghavender Sir pointed out, there are certain things like reviwing a movie or explaining an event that happened, Tamil language adds liveliness to the write up. Whenever it is required we use English. In fact if you check the first 4 parts of NT thread, most of it was in English.
Shiv,
Great post about Ratha Pasam. This was one film that was widely expected by the fans. As Saradha pointed out, the first 20-30 mins before the titles would be so racy and it increased our expectations. In fact we people watching the opening show on 14th June of 1980 at Madurai Sivam felt that it is going to turn out into another Thirisoolam as for as the BO is concerned. But from there on the script began to wander and after some time it lost direction.
This was precisely the reason for the fall out that happened between Vijayan and NT or let's say Vijayan and VC Shanmugam. The differences started when the film was being shot abroad and the rift became wider when shooting resumed in India. Vijayan landed himself in more trouble when news came to Annai Illam that Vijayan was boasting that he was the architect of Thirisoolam's success and that sealed the matter. It was NT who launched Vijayan as a director in Kaaval Deivam and again it was NT who gave him a prominent role as an actor in Sivandha Man. Years later, when Vijayan was still languishing in the field, it was NT who asked Balajee to fix him up for Deepam as well as asking him to wield the megaphone for Annan Oru Kovil. Vijayan after Ratha Paasam tried many tricks but could not succeed. He realised his mistake and repented for the same. NT the ever magnanimous soul he is, accepted and made Vijayan the director of Ananda Kanneer, a Sivaji Productions venture.
Krishna,
Expecting more of your posts in the lines of what you have posted when you came into the thread, recollecting the glorious yesteryears of NT saadhanaigal in Tirunelveli.
Thanks Chandrasekar.
சாரதா,
ரத்த பாசம் படத்தைப் பற்றிய மினி விமர்சனம் அருமை. மெல்லிசை மன்னர் அருமையான பாடல்களை கொடுத்த படம் இது. 80-களில் டி.எம்.எஸ். சுசீலா படிய மிக சிறந்த பாடலே என் உள்ளம் என்கின்ற வானத்திலே பாடல்தான்.
Regards
வெகு பல நாட்களுக்கு பின் இருவர் உள்ளம் படத்திலிருந்து இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா பாடல் காட்சி இன்று ஜெயா தொலைக்காட்சியில் காண வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் மட்டும் இப்போது அரங்குகளில் திரையிடப்பட்டால்? ஆஹா!
YGM wears a chain that has Sivaji dollar in it. This was presented to him by Prabhu in a Sivaji function after NT's demise. Actually NT's wife Late Kamala Ammal played a big part in this presentation. On the day of the function, she gave Prabhu a chain with NT dollar and asked him to present it to her son YGM. Prabhu fulfilled his mother's desire. Even recently in a TV chat (Jaya TV 'Thirumbippaarkiraen'), YGM emotionally recalled this happening.Quote:
Originally Posted by jaiganes
Warm Wishes,
Pammalar.
Dear Karthikka,
A warm & rousing red carpet welcome to you to our NT thread. Eagerly looking forward to your prestigious posts.
Warm Wishes,
Pammalar.
டியர் ராகவேந்திரன் சார்,
பாராட்டுக்கு நன்றி!
டியர் செந்தில் சார்,
மிக்க நன்றி! "புதிய பறவை" பதிவுகள் தொடர்ந்து வரும். கப்பலோட்டிய தமிழனின் அவதாரத் திருநாளைக் கொண்டாடிய கப்பலோட்டிய தமிழனின் தேசபக்தர்களுக்கு வீர வணக்கங்கள்! இத்தகவலைப் பதிவிட்ட தங்களுக்கு பற்பல நன்றிகள்!
டியர் ஷிவ்ராம், சகோதரி சாரதா, முரளி சார்,
"ரத்தபாசம்" பதிவுகள் அருமை, அற்புதம், அபாரம்!
அன்புடன்,
பம்மலார்.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 118
கே: கவர்ச்சிக் கண்ணன் கணேசன் இதுவரை ஏற்று நடிக்காத வேடமென்ன? (ப.இராசேந்திரன், திண்டுக்கல்)
ப: எல்லா வேடங்களிலும் நடித்து விட்டார் என்கிறீர்கள். அப்படித் தானே!
(ஆதாரம் : பேசும் படம், செப்டம்பர் 1971)
அன்புடன்,
பம்மலார்.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 119
கே: சிவாஜியின் நடிப்பை அவருக்குப் பிறகு வந்த எந்தத் தலைமுறையாலும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாமல் இருக்கே... என்ன காரணம்? (பி.சிவக்குமார் பிரபு, திருப்பூர் - 6)
ப: எந்தப் பாத்திரத்தை ஏற்றாலும் பொருந்தக் கூடிய உடல்வாகு, கம்பீரம்...சட்டென்று நவரசத்தின் எந்தப் பிரிவுக்கும் ஊஞ்சல் ஆடக்கூடிய கண்கள், குரல்... இந்த இறை 'கொடை'களுடன் நாடக மேடை அனுபவம், தொழில் பக்தி, பங்க்சுவாலிட்டி ஆகியவை!
(ஆதாரம் : பொம்மை, மே 1993)
அன்புடன்,
பம்மலார்.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 120
கே: பராசக்தியின் அருளால் நமக்குக் கிடைத்திருக்கும் உயர்ந்த மனிதரை வாழ்விலே ஒரு நாள் பார்த்தால் (என்) பசி தீரும். ஏழைபால் அன்புக்கரங்களை நீட்டும் நான் வணங்கும் தெய்வத்தை காணும் அந்த நாள் விரைவில் வருமா? (எஸ்.சந்தானம், டேராடூன்)
ப: ஆண்டவன் கட்டளை அதுவானால் நீர் நினைப்பது நடக்குமே. அப்போது பாலும் பழமும் உண்ட மகிழ்ச்சி உமக்கு ஏற்படும் இல்லையோ?!
(ஆதாரம் : பேசும் படம், செப்டம்பர் 1969)
அன்புடன்,
பம்மலார்.
Dear Karthikka...
Hearty welcome to our beloved 'annan NT' thread. Happy to know you are a serious fan of NT.
Sorry to know that you are not able to read many of our posts, which are posted in Tamil. As Murali pointed out, if we write in Tamil, we can able to show our full enthu and feelings, and can correctly point out what we want to mention. Thatswhy we prefer Tamil posts.
But for the desire of many fans like you, we will try to present more posts in English in future.
We all will be more happy for your continous participation in our thread. Thanks again.
முக்கனி போல்
முப்பால் போல்
முத்தமிழ் போல்
மூவேந்தர் போல்
தமிழ் திரையுலக வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத, என்றுமே மறைக்க முடியாத, காலத்தால் அழியாத காவியங்களாக 1961-ம் ஆண்டு திரையில் பூத்த மூன்று முத்துக்களில் மூன்றாம் முத்து இன்று [செப்டம்பர் 9] தன் பொன் விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
ஆம், பாலும் பழமும் கைகளில் ஏந்தி வந்த Dr. ரவி அகவை ஐம்பதை தொடுகிறார். ரஹீம், ராஜசேகர், ரவி மூவருமே பொன் விழா மட்டுமல்ல நூற்றாண்டு விழாவும் காணுவார்கள் என்பது நிச்சயம்.
பாவ மன்னிப்பு - 16.03.1961
பாச மலர் - 27.05.1961
பாலும் பழமும் - 09.௦9.1961
இந்த இனிய நினைவை கொண்டாடுவதோடு மிக விரைவில் செக்கிழுத்த செம்மல் அவர்களின் திரையுலக பொன் விழா தொடங்குகிறது என்பதையும் நினைவில் கொள்வோம்.
அன்புடன்
Dear Mr.Murali/Ms.Sharadha/Mr.Pammalar
Thank you very much for appreciating my post on "Rathapasam".
Also delighted to note that our NT's three great movies in "P" series is celebrating its Golden jubilee this year.
Regards
Shivram
Dear Friends
In the name of Rahim, I wish all our Islamc friends a very Happy Ramzan.
In the name of our very own, beloved, Uyir V.C. Ganesar, I wish all our Hindu friends a
VERY HAPPY GANESH CHATURTHI".
May both Ganesars shower thier blessings on us for a healthy, wealthy and prosperous life and work with more vigour to spread the glory of NT.
Thanks
Shivram
[html:68fe234208]Quote:
Originally Posted by RAGHAVENDRA
http://farm5.static.flickr.com/4129/...87fd60a3_z.jpg
[/html:68fe234208]
I suppose on behalf of NT fans in the HUB, we would like to convery our condolences to late actor Murali's family.
Any idea on the films Murali has done with NT? Nothing comes to my mind right now.
thEdi vandha rAsA, grouch
(not surprising you dont remember it - it is not worth remembering)
Okay, thanks Plum. But Joe alerted me that it's En Aasai Rasave - the Karakattam film by Danush's dad. Was there one in the 80s?
oh yeah it is en aasa raasavE. thEdi vandha raasa is a ramarajan flick. :ashamed:
80's-la, I dont remember any. indha thread periyavanga dhAn badhil solla mudiyum!
:lol: Understood Plum. Too many rasas out there.
Anyway, the 80s film is Mannukkul Vairam,
Thanks to Joe, and Raghavendra-sar's www.nadigarthilagam.com, what a great resource that site is.
More info from Joe that knocked my socks off
the songs from that movie:
Ponggiyathee Kathal Vellam
Ithazhodu Ithazh seerum neeram
Jaathi Malligaiyee
Some of SPB's gems. And composed by Devendran. :shock: Total ignorance on my side.
Oh that movie was produced by Bharathiraja I think and marked the directorial debut of his brother-in-law Manojkumar, who I suspect lent his name to Manoj Creations(or was it his son that BR named the movie company after?).
It was supposed to be a promising debut but Manojkumar went on to make several anonymous, ordinary movies. Latest I remember from him is Puratchikalaignar's Raajjiyam.
one humble request.. this thread shifted it's focus on the statistics rather than discussing about NT's films..
why not continue the film discussion and where's saradha and others..
Rakesh, Plum,
One more film is there. Balajee's Kudumbam Oru Kovil that came after Mannukkul Vairam.
EID Wishes to all Islamic Brethern.
Regards
அனைவருக்கும் ஈத் பெருநாள் மற்றும் விநாயகர் சதுர்த்தி திருநாள் வாழ்த்துக்கள்.
வசந்த மாளிகை தயாரிப்பாளர் ராமா நாயுடு அவர்களுக்கு தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப் பட உள்ளது. அவருக்கு நம் அனைவரின் சார்பில் வாழ்த்துக்கள்
அன்புடன்
ராகவேந்திரன்
நடிகர் முரளியின் மறைவுக்கு நமது ஆத்மார்த்தமான அஞ்சலி.
அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும், ரசிகப்பெருமக்களுக்கும் நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
நடிகர் திலகத்துடன் நடிகர் முரளி இணைந்த திரைப்படங்கள்:
1. மண்ணுக்குள் வைரம்(1986)
2. குடும்பம் ஒரு கோவில்(1987)
3. என் ஆச ராசாவே(1998)
அன்புடன்,
பம்மலார்.
அனைவருக்கும் ரம்ஜான் மற்றும் விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 121
கே: நீங்கள் சிவாஜி ரசிகர் தானே? (ஞ.அ.ராஜ், சென்னை - 28)
ப: சிவாஜியின் நடிப்பு ரசிகன்.
(ஆதாரம் : பேசும் படம், நவம்பர் 1970)
அன்புடன்,
பம்மலார்.
சாதனை, சரித்திரம், சகாப்தம் படைத்த/படைக்கின்ற முப்பெரும் காவியங்களான பாவமன்னிப்பு, பாசமலர், பாலும் பழமும் ஆகிய மூன்று காவியங்களை அதன் பொன்விழா ஆண்டில் நினைவு கூர்ந்ததோடு மட்டுமல்லாமல், வேதங்கள் நான்கு என்பது போல் நான்காவது காவியமாக கப்பலோட்டிய தமிழனும் விரைவில் (7.11.2010) பொன்விழா தொடக்கத்தை காண இருப்பதையும் சுட்டிக்காட்டிய இத்திரியின் முதல்வர் முரளி சாருக்கு முத்தாய்ப்பான நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.
பாக்ஸ் ஆபீஸில் 'பாலும் பழமும்'
இன்று 9.9.2010, நடிப்பிலும், சாதனையிலும் தன்னிகரில்லா சிகரங்களைத் தொட்ட நடிப்புலக மகான், சாதனைகளின் சக்கரவர்த்தி நமது நடிகர் திலகத்தின் "பாலும் பழமும்" திரைக்காவியத்திற்கு பொன்விழா ஆண்டின் தொடக்கம்.
பதிபக்தி(1958)[100 நாள்], பாகப்பிரிவினை(1959)[31 வாரம்], படிக்காத மேதை(1960)[22 வாரம்], பாவமன்னிப்பு(1961)[25 வாரம்], பாசமலர்(1961)[25 வாரம்] ஆகிய ஐந்து மெகாஹிட் காவியங்களுக்குப் பிறகு, அதே "ப" வரிசையில், வெள்ளிவிழா டைரக்டர் பீம்சிங், சிவாஜி கூட்டணியுடன் வழங்கிய ஆறாவது மெகாஹிட் காவியம் "பாலும் பழமும்". [ராஜா ராணி(1956) மற்றும் பெற்ற மனம்(1960) ஆகிய காவியங்களை சேர்த்துக் கணக்கிட்டால் பாலும் பழமும்(1961) வரை பீம்சிங் இயக்கிய சிவாஜி படங்கள் 'எட்டு' எனப் புள்ளி விவரம் கூறும்.]
தையல் மற்றும் உடையலங்கார நிபுணராக விளங்கிய ஜி.என்.வேலுமணி அவர்களை 'சரவணா பிலிம்ஸ்' என்கின்ற படக் கம்பெனியின் முதலாளியாக, திரைப்படத் தயாரிப்பாளராக உயர்த்திய பெருமை சிவாஜி பெருமானையே சாரும். இவர் மட்டுமல்ல. இவரைப் போல பல சாமானியர்களை சீமான்களாக உருவாக்கிய, உயர்த்திய பெருமை, பெருந்தன்மை என்றென்றும் சிங்கத்தமிழனுக்கே!
'சரவணா பிலிம்ஸ்' நிறுவனத்தின் முதல் தயாரிப்பு பாகப்பிரிவினை(1959). இரண்டாவது தயாரிப்பு பாலும் பழமும்(1961). இரண்டுமே மகத்தான இமாலய வெற்றிக்காவியங்கள். வேலுமணி "மணி(Money)" உள்ளவர் ஆனார். கணேச கடாட்சத்தால் அவருக்கு லட்சுமி கடாட்சம் கிட்டியது. சாதாரண நிலையில் இருந்தவர், இந்த இரு காவியங்களின் மகத்தான வெற்றியினால் லட்சாதிபதியாக, மிகப் பெரிய செல்வந்தராக உயர்ந்தார்.
இனி "பாலும் பழமும்" முதல் வெளியீட்டில் ஏற்படுத்திய பாக்ஸ் ஆபீஸ் சாதனைப் பிரளையத்தை சற்று விரிவாகக் காண்போம்.
"பாலும் பழமும்" - கலைக்குரிசிலின் 73வது திரைக்காவியம், 71வது கருப்பு-வெள்ளைக் காவியம், இருபது வாரங்கள் ஓடிய இமாலய வெற்றிக் காவியம்.
வெளியான தேதி : 9.9.1961 (சனிக்கிழமை)
வெளியான ஊர்கள் / திரையரங்குகள் : 39 / 42
100 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய ஊர்கள் / அரங்குகள் : 8 / 10
[ஊர் - அரங்கம் (இருக்கைகள்) - ஓடிய நாட்கள் என்கின்ற ஃபார்மெட்டில்]
1. சென்னை - சாந்தி (1214 இருக்கைகள்) - 127 நாட்கள்
2. சென்னை - ஸ்ரீகிருஷ்ணா (1198 இருக்கைகள்) - 127 நாட்கள்
3. சென்னை - உமா (762 இருக்கைகள்) - 111 நாட்கள்
4. மதுரை - சென்ட்ரல் (1662 இருக்கைகள்) - 127 நாட்கள்
5. திருச்சி - பிரபாத் (1289 இருக்கைகள்) - 127 நாட்கள்
6. சேலம் - பேலஸ் (1222 இருக்கைகள்) - 127 நாட்கள்
7. கோவை - கர்னாடிக் - 139 நாட்கள்
8. திண்டுக்கல் - சோலைஹால் (1117 இருக்கைகள்) - 105 நாட்கள்
9. பெங்களூர் - ஸ்டேட்ஸ் - 112 நாட்கள்
10. கொழும்பு - கிங்ஸ்லி - 103 நாட்கள்
50 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய ஊர்கள் / அரங்குகள் : 25 / 25
[ஊர் - அரங்கம் (இருக்கைகள்) - ஓடிய நாட்கள் என்கின்ற ஃபார்மெட்டில்]
1. நெல்லை - ரத்னா (1064 இருக்கைகள்) - 75 நாட்கள்
2. நாகர்கோவில் - பயோனீர்பிக்சர்பேலஸ் (1088 இருக்கைகள்) - 75 நாட்கள்
3. குடந்தை - ராஜா (1100 இருக்கைகள்) - 75 நாட்கள்
4. தஞ்சாவூர் - நியூடவர் (1101 இருக்கைகள்) - 75 நாட்கள்
5. வேலூர் - நேஷனல் (1330 இருக்கைகள்) - 75 நாட்கள்
6. பெங்களூர் - ஆபெரா - 75 நாட்கள்
7. பழனி - ஜெயராம் (975 இருக்கைகள்) - 59 நாட்கள்
8. விருதுநகர் - நியூமுத்து (939 இருக்கைகள்) - 59 நாட்கள்
9. மாயவரம் - சுந்தரம் (1135 இருக்கைகள்) - 59 நாட்கள்
10. திருவாரூர் - அம்மையப்பா (1045 இருக்கைகள்) - 59 நாட்கள்
11. புதுக்கோட்டை - பழனியப்பன் (882 இருக்கைகள்) - 59 நாட்கள்
12. கரூர் - லைட் ஹவுஸ் (1375 இருக்கைகள்) - 59 நாட்கள்
13. தூத்துக்குடி - சார்லஸ் (1383 இருக்கைகள்) - 59 நாட்கள்
14. தென்காசி - பாக்யலக்ஷ்மி (1608 இருக்கைகள்) - 59 நாட்கள்
15. ஈரோடு - ராஜாராம் (1104 இருக்கைகள்) - 59 நாட்கள்
16. ஊட்டி - ஏடிசி (706 இருக்கைகள்) - 59 நாட்கள்
17. திருப்பூர் - கஜலக்ஷ்மி (1055 இருக்கைகள்) - 59 நாட்கள்
18. நாமக்கல் - ஜோதி (1077 இருக்கைகள்) - 59 நாட்கள்
19. தர்மபுரி - கணேஷ் (960 இருக்கைகள்) - 59 நாட்கள்
20. பாண்டி - ராஜா (2000 இருக்கைகள்) - 59 நாட்கள்
21. சிதம்பரம் - வடுகநாதன் (1240 இருக்கைகள்) - 59 நாட்கள்
22. கடலூர் - பாடலி (874 இருக்கைகள்) - 59 நாட்கள்
23. விழுப்புரம் - சீதாராம் (1141 இருக்கைகள்) - 59 நாட்கள்
24. காஞ்சி - கிருஷ்ணா - 59 நாட்கள்
25. பல்லாவரம் - ஜனதா (1034 இருக்கைகள்) - 59 நாட்கள்
6 வாரங்கள் ஓடிய ஊர்கள் / அரங்குகள் : 7 / 7
[ஊர் - அரங்கம் (இருக்கைகள்) - ஓடிய நாட்கள் என்கின்ற ஃபார்மெட்டில்]
1. பரமக்குடி - தங்கம் - 41 நாட்கள்
2. காரைக்குடி - ராமவிலாசம் (1106 இருக்கைகள்) - 41 நாட்கள்
3. பட்டுக்கோட்டை - முருகையா - 41 நாட்கள்
4. பொள்ளாச்சி - கலைமகள் (912 இருக்கைகள்) - 41 நாட்கள்
5. உடுமலைப்பேட்டை - கல்பனா - 41 நாட்கள்
6. ஆத்தூர் - ஸ்ரீதரன் (1112 இருக்கைகள்) - 41 நாட்கள்
7. ஆற்காடு - ஜோதி (1344 இருக்கைகள்) - 41 நாட்கள்
பாவமன்னிப்பு, பாசமலர் திரைக்காவியங்களுக்குப் பின் அதே 1961-ம் ஆண்டில் மூன்றாவது பெரிய இமாலய வெற்றிக்காவியமாக திகழ்ந்தது "பாலும் பழமும்". தமிழ் சினிமா சரித்திரத்திலேயே, இன்னும் சொல்லப் போனால் உலக சினிமா சரித்திரத்திலேயே, ஒரே ஆண்டில் (1961), மூன்று Blockbusterகளை (மெகாஹிட் இமாலய வெற்றிக் காவியங்களை), கொடுத்த முதல் நடிகர் என்ற பெருமைக்குரியவரானார் நமது கலையுலக முதல்வர்.
சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர சக்கரவர்த்தி சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே!
அன்புடன்,
பம்மலார்.
டியர் பம்மலார்.....Quote:
Originally Posted by pammalar
சாதனைச்சித்திரம் 'பாலும் பழமும்' திரைக்காவியத்தின் சாதனைச்சரித்திர தொகுப்பு அருமை. கடந்த காலங்களில் இவ்வாறு சரியான நேரத்தில் இதுபோன்ற விவரங்கள் சொல்லப்படாததால்தான், சில வலைப்பூ பிரகஸ்பதிகளும், செய்தித்தாள்களில் கட்டுரை வரைபவர்களும், நடிகர்திலகத்தின் திரைப்படங்களைப்பற்றி எடுத்தேன், கவிழ்த்தேன் என்று எழுதத்துணிந்தனர். சகோதரர் ராகவேந்தர் அவர்கள் எப்போதும் ஆதங்கப்படுவதுபோல, யாரோ 'ஒருசிலரின்' படங்கள் மட்டும் வசூலை கோணிப்பைகளில் கட்டியது போலப் பேசத்துணிந்தனர். நடிகர்திலகத்தின் பக்தர்கள் கூட்டம் உங்களுக்கு ரொம்பவே கடமைப்பட்டுள்ளது.
நடிகர்திலகத்தை வைத்து 'பாகப்பிரிவினை', 'பாலும் பழமும்' என இரு பெரும் வெற்றிக் காவியங்களைத்தந்த ஜி.என்.வேலுமணி, பின்னர் ஏன் நடிகர்திலகத்தை விட்டுப்பிரிந்தார்?. அதற்கும் கூட, நடிகர்திலகத்தின் படங்களே அவரது படங்களுக்குப் போட்டியாக வந்ததே காரணம். பாலும் பழமும் வெற்றிகரமாக 125 நாட்களை நெருங்கிக்கொண்டிருந்த நேரத்தில், அதே திரையரங்குகளில் ஏ.வி.எம். நிறுவனத்தாரின் 'பார்த்தால் பசிதீரும்' படம் வெளியிட முயற்சிகள் நடந்தன. ஆனால் வேலுமணி தனது படத்துக்கு இன்னும் கூட்டம் குறையாததால் அதை வெள்ளிவிழா வரை ஓட்ட வேண்டுமென்று ஆசைப்பட்டார். அவரது ஆசை நிறைவேறியிருந்தால், அவரது அடுத்தடுத்த இரண்டு படங்கள் வெள்ளி விழா என்பதோடு, அதைவிட முக்கியமாக, நடிகர்திலகத்துக்கு ஒரே ஆண்டில் மூன்று வெள்ளிவிழாப்படங்கள் என்ற பொன்னேட்டில் பொறிக்க வேண்டிய சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கும்.
ஆனால் ஏ.வி.எம். நிறுவனத்தாரின் நச்சரிப்பு காரணமாக, பாலும் பழமும் 127 நாட்களில் (குறிப்பாக சென்னை சாந்தியில்) திரையரங்குகளில் இருந்து எடுக்கப்பட்டு, பார்த்தால் பசிதீரும் படம் திரையிடப்பட்டது. அதனால் மனம் வெதும்பிய வேலுமணி, 'இனி இந்த ஆளை வச்சு படம் எடுக்க மாட்டேன்' என்று விலகிப்போனார். (பந்துலுவுக்கு முன்ன்ர் இவரது விலகல்). அதோடு பீம்சிங்கை விட்டு கே சங்கரிடம் தாவினார். அதே கையோடு ஜெமினியை வைத்து 'பாத காணிக்கை', மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை வைத்து 'பணத்தோட்டம்', அசோகனை கதாநாயனாக வைத்து 'இது சத்தியம்', மீண்டும் எம்.ஜி.ஆரை வைத்து 'படகோட்டி', 'கலங்கரை விளக்கம்', 'சந்திரோதயம்', 'குடியிருந்த கோயில்'... இவற்றுக்கிடையே ஜெய்சங்கரை வைத்து பஞ்சவர்ணக்கிளி, செல்வமகள் படங்களை தயாரித்தவர், பிற்காலத்தில் கே.ஆர்.விஜயாவை முக்கிய பாத்திரமாக வைத்து 'நம்ம வீட்டு தெய்வம்', 'அன்னை அபிராமி' ஆகிய பக்திப்படங்களை தயாரித்ததோடு அவற்றை அவரே இயக்கினார். கடைசிக்காலத்தில் ரொம்பவே நொடித்துப்போய், பஸ்ஸில் பிரயாணம் செய்தார் என்று செய்திகள் வந்தன.
'பேசும்படம்' மாத இதழில் வந்த செய்தி:
பாலும் பழமும் திரையிடப்பட்ட அன்று மாலைக்காட்சிக்கு இயக்குனர் பீம்சிங், சென்னை சாந்தி தியேட்டருக்கு வந்திருந்தார். ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு படம் அருமையாக அமைந்துள்ளது என பாராட்டுத் தெரிவித்தனர். அதோடு, வெளிநாட்டிலிருந்து தனது நண்பன் தன் மனைவியை குணப்படுத்த பார்சலில் மருந்துகள் அனுப்பியிருப்பதாக நடிகர்திலகம் சொல்வார். ஆனால் அவர் பார்சலைப்பிரிப்பதை குளோசப்பில் காண்பிக்கும்போது, அதில் இந்திய ஸ்டாம்புகள் ஒட்டப்பட்டிருக்கும். இந்தக்குறையை இயக்குனரிடம் ரசிகர்கள் சுட்டிக்காட்டியதும், சாந்தியில் ஓடிய பிரிண்டில் அந்த குளோசப் காட்சியை பீம்சிங் தன் கைப்படவே வெட்டிவிட்டார். (ஆதாரம் பேசும் படம் 1961 செப்டம்பர் இதழ்)
பட்டுக்கோட்டை முருகையாவில் வேறு படம் புக் ஆகிவிட்ட காரணத்தால், பாலும் பழமும் தவிர்க்க முடியாமல் 41 நாட்களில், பக்கத்திலுள்ள அதிராம்பட்டினம் ராஜராஜேஸ்வரி என்ற டூரிங் டாக்கீஸுக்கு மாற்றப்பட்டு அங்கு 25 நாட்கள் ஓடியதாக, நமது பட்டுக்கோட்டை ரசிகர் சிவசங்கர் தெரிவிக்கிறார். (அவர் நமது திரியில் நேரடியாக பதிவுகளைத்தர ஆசைப்பட்டு ரெஜிஸ்ட்டர் செய்து மூன்று மாதங்களாகியும், ரெஜிஸ்ட்ரேஷன் கிடைக்கவில்லையாம். அதனால் Hotmail-லில் விவரங்களைத் தருகிறார்).Quote:
Originally Posted by pammalar
பாலும் பழமும் படத்தின் பிரமிப்பான பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை பட்டியலிட்ட சுவாமிக்கு நன்றி. சுவாமி சொல்லாமல் விட்ட சில விஷயங்கள்.
பாவ மன்னிப்பை தொடர்ந்து நடிகர் திலகம் - பீம்சிங் கூட்டணியில் ஏ.வி.எம் தயாரித்த படம் பார்த்தால் பசி தீரும். அந்த படம் 1962-ம் ஆண்டு ஜனவரி 14 பொங்கலன்று வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பாலும் பழமும் மிகப் பிரமாதமாக ஓடிக் கொண்டிருக்கும் நேரம்.இந்த நேரத்தில் ஏ.வி.எம். நிறுவனம் சென்டிமெண்டாக பாவ மன்னிப்பு வெளியான அதே திரையரங்குகளில் பா.பசி தீரும் படமும் வெளியாக வேண்டும் என்று நிர்பந்திக்க ஆரம்பித்தார்கள். நன்றாக போய்க் கொண்டிருக்கும் படத்தை மாற்ற வேண்டாம் என்று பலரும் எடுத்துச் சொல்லியும் ஏ.வி.எம். கேட்கவில்லை. சென்னை மட்டுமல்ல மதுரை, திருச்சி, சேலம் போன்ற நகரங்களிலும் இதே நிலையை ஏ.வி.எம் எடுத்தது. பெரிய படத்தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம் முன்னால் வேலுமணியால் தாக்கு பிடிக்க முடியவில்லை. அதன் காரணமாகவே சென்னை, மதுரை, திருச்சி மற்றும் சேலம் நகரங்களில் 127 நாட்கள் என்ற நிலையில் பாலும் பழமும் மாற்றப்பட்டது. இன்னும் சொல்லப் போனால் பாவ மன்னிப்பு சென்னை சாந்தியில் 100 நாட்களில் பெற்ற வசூலை விட பாலும் பழமும் அதே சாந்தியில் 100 நாட்களில் பெற்ற வசூல் அதிகம். சிவாஜி படமே சிவாஜி படத்திற்கு வில்லன் என்பதற்கு பாலும் பழமும் ஒரு மிகச் சிறந்த உதாரணம். பார்த்தால் பசி தீரும் வேறு அரங்குகளில் திரையிடப்பட்டிருந்தால் பாலும் பழமும் சாந்தியில் வெள்ளி விழா கண்டிருக்கும். ஒரே காலண்டர் வருடத்தில் [1961] மூன்று வெள்ளி விழா படங்கள் என்ற சாதனையும் நிகழ்ந்திருக்கும்.
இது போலவே சுவாமி கொடுத்த 50 நாள் லிஸ்டில் பார்த்தோம் என்றால் முக்கால்வாசி இடங்களில் 59 நாட்கள் என்ற கணக்கை பார்க்கலாம். அதற்கு காரணம் நவம்பர் 7-ல் வந்த தீபாவளி. தீபாவளி திரைப்படங்களுக்காக அரங்குகள் முன் கூட்டியே புக் செய்யப்படுவது வழக்கம். எனவேதான் சிறப்பாக ஓடிக் கொண்டிருந்த பாலும் பழமும் பல ஊர்களிலும் தீபாவளியன்று மாற்றப்பட்டது.
இத்தனை சோதனைகளுக்கு நடுவிலும் எதிர்மறையான சூழலிலும் நடிகர் திலகத்தின் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகள் மலைக்க வைப்பதாகவே இருக்கிறது.
அன்புடன்
நான் என்னுடைய பதிவை தயார் செய்துக் கொண்டிருக்கும் போது சாரதாவின் பதிவு வந்திருக்கிறது. நான் என்னுடைய பதிவை போஸ்ட் செய்த பிறகுதான் அதைப் பார்த்தேன். ஆகவே ஒரு சில விஷயங்கள் இரண்டு பேர் பதிவிலும் பொதுவாக அமைந்திருக்கின்றன.
வெள்ளி விழா ஓடியிருக்க வேண்டிய பாலும் பழமும் படத்தை தங்களின் படத்திற்காக மாற்றிய ஏ.வி.எம் நிறுவனத்தார், அவர்களின் பார்த்தால் பசிதீரும் படத்திற்கு வேலுமணி அனுபவித்த அதே வேதனையை அதே சாந்தியில் அனுபவித்தார்கள். ஆம், பா.பசி தீரும் படம் படித்தால் மட்டும் போதுமா படத்திற்காக சென்னையில் 75 நாட்களில் மாற்றப்பட்டது. மதுரை வழக்கம் போல் நடிகர் திலகத்தின் படங்களுக்கு கொடுக்கும் ஆதரவை இப்போதும் கொடுக்க மதுரை சென்ட்ரலில் பா.பசி தீரும் 110 நாட்கள் ஓடியது.
அன்புடன்
சகோதரி சாரதா, முரளி சார்,
தங்களின் பாராட்டுக்களுக்கும், கூடுதல் தகவல்களுக்கும் கனிவான நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.
Pava Mannippu in Raj T.V now.
டியர் முரளி....Quote:
Originally Posted by Murali Srinivas
நடிகர்திலகத்தின் ரசிகர்களின் மனத்துடிப்பு ஒரே மாதிரி இருக்கும் என்பதற்கு நம் இருவரின் அடுத்தடுத்த பதிவுகளே சான்று. ஒரே நேரத்தில் இருவரும் வெவ்வேறு இடங்களில் இருந்து ஒரே கருத்தை சிந்தித்துக்கொண்டு இருந்திருக்கிறோம்.
சென்னையில் 'பார்த்தால் பசிதீரும்' 'படம், படித்தால் மட்டும் போதுமா'வுக்காக மாற்றப்படவில்லை. பா.ப.தீரும் 75 நாட்களில் எடுக்கப்பட்டு, 'வளர்பிறை' படம் திரையிடப்பட்டது.Quote:
Originally Posted by Murali Srinivas
'படித்தால் மட்டும் போதுமா' சென்னை 'மிட்லண்ட்' அரங்கில் வெளியாகி 100 நாட்களைக்கடந்தது.
டியர் முரளி சார்,Quote:
Originally Posted by Murali Srinivas
சென்னை சாந்தியில் 14.1.1962 பொங்கலன்று வெளியான "பார்த்தால் பசி தீரும்", 29.3.1962 வரை 75 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. 30.3.1962 அன்று சாந்தியில் "வளர்பிறை" வெளியானது. "படித்தால் மட்டும் போதுமா" 14.4.1962 தமிழ்ப் புத்தாண்டு அன்று மிட்லண்டில் வெளியானது.
"பார்த்தால் பசி தீரும்" திரைக்காவியத்தைப் பொறுத்தவரை, சாந்தி மட்டுமல்லாது, ஸ்ரீகிருஷ்ணா, உமா ஆகிய அரங்குகளிலும் 75 நாட்கள் தான். இந்த இரு அரங்குகளிலும் "வளர்பிறை" வெளியானது. சென்னை மட்டுமல்லாது பல ஊர்களிலும், "பார்த்தால் பசி தீரும்" திரைக்காவியத்திற்கு வில்லன்களாக வந்தவை "வளர்பிறை"யும், "படித்தால் மட்டும் போதுமா"வும். கிட்டத்தட்ட 10 சென்டர்களில் 75 நாள், 90 நாள் என்கின்ற ரீதியில் "பார்த்தால் பசி தீரும்" எடுக்கப்பட்டது. இதில் மதுரை மட்டும் தப்பிப் பிழைத்தது. இவ்விதம் இல்லாமலிருந்தால், குறைந்தபட்சம் "பார்த்தால் பசி தீரும்" காவியத்தினுடைய 10 பிரிண்டுகள் 100 நாள் விழா கொண்டாடியிருக்கும்!
நடிகர் திலகத்தின் படங்களே நடிகர் திலகத்தின் படங்களுக்குப் போட்டி, என்ன செய்வது!
அன்புடன்,
பம்மலார்.
Dear Ms.Shardha/Mr.Murali Srinivas
Many thanks for your details on "Palum Pazhamum" and its related developments .It only shows how our NT was always a vasool Charkravarthy.
We are very fortunate to have people like you, Mr.Pammalar and Mr. Ragavendar who pour in such great infos happened 4 or 5 decades back.
Incidentally, is music director Ganesh (sankar-ganesh) the son-in-law of G.N. Velumani?
Regards
Shivram
தவறை திருத்தியதற்கு நன்றி சாரதா & சுவாமி.
கூடுதல் தகவல்களுக்கும் நன்றி சுவாமி.
Shiv,
Yes, you are right. (Shankar) Ganesh is married to Velumani's daughter.
Regards
Dear Messrs.Murali /Ragavendar/Ms.Shardha
I had heard in my student days that when "Ulagam Suttrum Valiban" was ready for release, due to political situation prevalent at that time, MGR found it very difficult to get theaters in chennai for release and NT offered to release the same in Shanti. Was it true??
Actually it is very difficult to believe as Cinema rivalry between NT & MGR was at its peak at that time.
Please throw more light on this.
Regards
Shivram