http://i62.tinypic.com/e04zep.jpg
Printable View
http://i57.tinypic.com/212e6th.jpg
ஆல்பட் திரைஅரங்கு வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பேனர்.
ஆயிரத்தில் ஒருவன் - என்றென்றும் எம்.ஜி.ஆர்.!
எம்.ஜி.ஆர். ஜெயலலிதா நடித்த ஆயிரத்தில் ஒருவன் படம் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் இன்று வெளியீடு
எம்.ஜி.ஆர்.- ஜெயலலிதா இணைந்து நடித்த முதல் படம் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம். 1965 இல் வெளியாகி ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றது.
இத்திரைப்படம் ஒரு சர்வாதிகாரியை எதிர்த்து போராடும் இளைஞனின் கதையை கொண்டு 1965 இல் வெளியாகி அப்போதே மிக பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட திரைப்படம். கலரில் உருவாகிய இந்த படத்திற்கு கண்ணதாசனும், வாலியும் பாடல்களை எழுதினார்கள், விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை அமை த்த இந்த படத்தை பந்துலு டைரக்ட் செய்தார்.
ஆழமான கருத்துக்களை கொண்ட பாடல்கள், படத்தின் வெற்றிக்குத் மற்றொரு சிறப்பம்சமாக கருதப்படுகிறது. திரைப்படத்துக்காக அந்தக் காலக்கட்டத்தில் கப்பலில் அமைக்கப்பட்ட காட்சிகள் ரசிகர் களை வெகுவாக கவர்ந்ததாக அப்போது விமர்சனங்கள் வெளியாயின.
அரை நூற்றாண்டு காலத்துக்கு முன்னர் 1965 இல் வெளியாகிய 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம், தற்போது டிஜிட்டல் தொழில்நுட்ப உதவியுடன் புதுப்பிக்கப்பட்டு இன்று (மார்ச் 14-தேதி) மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக தமிழகமெங்கிலும் இப்படம் நகரின் முக்கிய தியேட்டர்களில் ரிலீசாகியிருக்கிறது. ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. - Nakeeran
ஆல்பட் திரை அரங்கு வளாகத்தில் பல்வேறு எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகள் வைத்துள்ள பேனர்கள்.
http://i57.tinypic.com/oivn0g.jpg
இன்றைய "மாலை சுடர் " தினசரியில் வந்த செய்தியினை பதிவு
செய்த வினோத் சார் அவர்களுக்கு நன்றி.
மாலை சுடர் தினசரியில் வெளியான மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் "ஆயிரத்தில் ஒருவன் " படத்திற்கு, சத்யம் திரை அரங்கம் அருகில் பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம். ஜி. ஆர் நற்பணி சங்கம், உரிமைக்குரல் மாத இதழ் மற்றும் தோழமை சங்கங்கள் வரவேற்பு அளித்து பூஜைகள் செய்து, பட்டாசு வெடித்து , இனிப்புகள்[லட்டு]வழங்கி, மகிழ்ச்சி ஆரவாரம், மற்றும் மக்கள் திலகத்திற்கு வாழ்த்தொலி எழுப்பியபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.
சிறப்பு பூஜைகள், பால் அபிஷேகம் மற்றும் விழா நிகழ்ச்சிகளை , ஜெயா தொலைகாட்சி பிரத்யேகமாக படம் பிடித்தது. உரிமைக்குரல் ஆசிரியர் , திரு பீ.எஸ்.ராஜு அவர்கள் பேட்டி அளித்து ஒளிபரப்பும் செய்துவிட்டது!
http://i59.tinypic.com/9zn3hf.jpg
http://i60.tinypic.com/2znu7iv.jpg
http://www.youtube.com/watch?v=ZN2gR2BO8DM#t=229
Thanks to Mr. Boominathan Andavar, Mumbai for the Image files and Yukesh Babu Sir for the video.