< Dig>
எப்படி ஒருவர் தன்னுடைய உரிமை என்று கூறுகிறாரோ, அதே உரிமை மற்றவர்களுக்கும் உண்டு என்பதை மட்டும் ஒத்துகொள்ளாமல் மற்றவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை...தனக்கு மட்டுமே உரிமை உள்ளது என்பதை கூறுவது ஏற்புடையது அல்ல !
தமிழுக்கு நான் விரோதி அல்ல ! தமிழிசம் என்பதற்கு தான் நான் எதிர் கருத்து உடையவன். அதாவது தமிழ் திணிப்பிற்கு எனக்கு உடன்பாடில்லை.
தமிழ் இருக்ககூடாது என்று எந்த காலத்திலும் எந்த கட்சியும் சொன்னதாக தெரியவில்லை. ஹிந்தி கட்டாயம் கற்கவேண்டும் என்று சொன்னதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.
கட்டாயபடுத்தினாலும் கற்க மனம் இல்லையென்றால் ஒருவரும் கற்க்கபோவதில்லை !
ஹிந்தி அந்தகாலத்தில் கட்டாயபடுத்தி கல்வி முறையில் கொண்டு வந்திருந்தால் தமிழன் அனைத்து மாநிலங்களிலும் கோடி கட்டி வாழ்ந்திருப்பான் ! அந்த ஒரு சந்தர்பம் மறுக்கப்பட்டுள்ளது என்று தான் கூறவேண்டும் !
ஒரு மொழி மக்கள் கற்க இவ்வளவு தடை ஏன் ? இதை ஏன் அரசியலாக்கவேண்டும் ஆட்சியில் இருந்தவர்களாக இருந்தாலும் இல்லாதவர்களாக இருந்தாலும். ? ஏன்...அப்படி கட்டாயபடுத்தி ஒருவர் ஒரு மொழி கற்று தமிழ் ஆங்கிலம் ஹிந்தி என்று மூன்று மொழி கற்று சிறிது உருபடட்டுமேன் ...என்ன தவறு அதில் இருந்துவிடபோகிறது ?
அதெப்படி விட்டு விட முடியும் ? இன்னொரு மொழி கற்றால் வேறு ஏதாவது மாநிலம் சென்று பிழைத்துவிடுவார்கள் ! உண்மைகள் பல தெரியவரும் வேறு ஊர்களுக்கு போனால்...பிறகு இந்த அரசியல்வாதிகள் எப்படி இவர்களை ஏய்த்து பிழைப்பு நடத்த முடியும்...ஆகையால் அந்த சூழ்நிலையே வராமல் செய்துவிட்டால்..! இது தான் அரசியல் !
தமிழக எல்லையை தாண்டினால் ஹிந்தி அவசியம் ! இதை முதலில் அனைவரும் உணர்ந்துகொள்ளவேண்டும் ! ஆந்திரா, கேரளம், கர்நாடகம், முதல் காஷ்மீர் வரை ஆங்கிலம் தெரியாமல் இருந்தால் கூட பரவா இல்லை. ஹிந்தி தெரியாமல் இருந்தால் என்ன செய்யமுடியும் ?
ஒரு மனிதன் 3 ஸ்டேட்ஸ் செல்கிறான் என்றால் உதாரணமாக...ஆந்திர, கர்நாடக, பீகார் செல்வதானால் அவனுக்கு ஆங்கிலம் தெரிந்தால் கூட..அந்த ஊர் மக்கள் ஆங்கிலம் தெரியாதவர்களாக இருப்பின் தமிழ் பேசி ஒரு விஷயத்தை புரிய வைத்து விட முடியுமா அல்லது சான்கய்த மொழியில் கேட்கதான் முடியுமா ? சிறிது யோசியுங்கள் !
அந்த காலத்தில் ஹிந்தி படிக்காததால் அடைந்த நஷ்டம் என்ன என்று அவர் அவர் மனசாட்சிக்கு தெரியும் !
திணிப்பை எதிர்த்தவர்கள் அவர்கள் குடும்ப அங்கங்கள் ஹிந்தியே படிக்கவில்லையா ? அல்லது ஹிந்தியில் அவர்கள் உரையாடல் நடதியதில்லையா ? சட்டமன்ற வளாகத்தில் உரையாடியது இல்லையா ?அப்படி எதுவும் நடந்ததாக தெரியவில்லை. அப்பரம் ஏன் மக்களை இப்படி ஏமாற்றவேண்டும்..?
இதே அரசியல் தலைவர்கள் ...கொலை, கொள்ளை, அடிதடி, கட்டபஞ்சாயத்து, வழிப்பறி, சாராய வியாபாரம் யாரும் கட்டாயம் செய்யகூடாது என்று ஒரு தீர்மானமோ அதற்காக ஒரு போராட்டமோ எந்த காலத்திலாவது செய்ய முனைந்ததுண்டா ?
1) கொள்ளை, கொலை, வழிப்பறி ஒழிப்பு தினம் ,
2) கள்ளச்சாராய ஒழிப்பு தினம்...
3) சாராய ஒழிப்பு மாநாடு ...இப்படி ஏதாவது செய்தார்களா ? இது போல போராட்டங்கள் தான் நாட்டிற்க்கும் நாட்டுமக்களுக்கும் முக்கியம்.!
அதை விடுத்து மக்கள் உருப்படும் வழியில் மண்ணை தூவுவது ஒரு நல்ல காரியம் அல்ல !
உண்மையிலேயே மக்கள் மீது இவர்களுக்கு அக்கறை இருந்தால் இது போல ஒரு விஷயத்தை செய்வார்கள்...! மக்கள் மீது இவர்களுக்கு என்ன அக்கறை..எந்த காலத்தில் இவர்களுக்கு இருந்தது ? <dig>
இதை நான் இங்கு உரைப்பதனால் உடனே "தயவு செய்து அரசியல் பேசவேண்டாம் இந்த திரியில் என்று வரும் அல்லது..உங்கள் புரிதலை பற்றி தவறாக எடை போட்டேன்...ஹி..ஹி....என்று ஒரு பதில் வரும்..!
அந்த இரண்டு வரிகளை போல பல வரிகள்..பதில் சொல்ல தெரியாமல் சமாளிப்பவர்களுக்கு நிறைய தெரியும்..
எனக்கு அப்படி சொல்ல தெரியாது என்ன செய்ய ?
" உள்ளதை சொல்வேன்..சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது..உள்ளத்தில் இருப்பதை வார்த்தையில் மறைக்கும் கபடம் கிடையாது ! என்று என் இறைவன் பாடி நடித்த காட்சியை போன்றவன் நான் !