-
hi good morning all
ஹையாங்க் எஸ்வி சார்.. கோடிக்கனவுகள் ஆடி வருகுது கோவில் சிலை ஒன்று ஓடி வருகுது.. வாவ் என்னா பாட்டுங்க அது..எனக்கு ரொம்பப் பிடிச்சதாக்கும்..தாங்க்ஸ்ங்கோவ்..
எண்ணி எண்ணிப் பார்க்க மனம் இன்பம் கொண்டாடுதே ஹிந்திவெர்ஷனும் கேட்டதாய் நினைவு..கேட்டுப் பார்க்கிறேன்..தாங்க்ஸ் ராஜ்ராஜ் சார்..
-
வாசு சார்
இளையராஜாவின் அந்நாளைய பாடல்களில் எனக்கு மிக மிக பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று.
காலத்தைக் கடந்து நிற்கும் பாடல்.
நிஜ வாழ்க்கையில் இது போன்ற சூழ்நிலையில் சிக்கித் தவிக்கும் மனிதர்களுக்கு இப்பாடல் பெரிய ஆறுதல்.
எஸ்.பி.முத்துராமனின் மிகச் சிறந்த படங்களில் ஒன்று. ரஜினிகாந்த் அவர்களுக்குள் இருக்கும் நடிப்புத் திறமையை வெளிக்காட்டிய படம்.
புவனா ஒரு கேள்விக்குறி
https://www.youtube.com/watch?v=LGQLzNR7yoo
-
கொஞ்சம் வித்தியாசமான எழுத்து மகரிஷியுடையது.. மென்மையாக ஆனால் கொஞ்சம் பொட்டில் அடித்தாற்போன்ற வசனஙகள்..சீரியஸ் தன்மையுடைக கதை, களங்கள் என.. மாலை மதியில் வெளியான இரண்டாவதோ மூன்றாவதோ நாவல் இது..படிக்கும் போதே படமாக எடுத்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் தோன்றவைத்தது..அதே போல வில்லத் தனமான ஹீரோ காரெக்டர் சிவகுமார் சம்பத் குமாருக்கு ரஜினி எனப் படித்த போது ஆஹா பொருத்தம் தான் எனப் பட்டது..
படமும் ஏமாற்றவில்லை (சிவகுமார் கொஞ்சம் முயற்சி எடுத்திருப்பார் வித்தியாசமாக நடிப்பதற்கு..சம்பத்திற்கு அப்படியே ரஜினி பொருந்தியிருப்பார்..) கடைசியில் பொசுக்கென்று கேள்விக்குறி மட்டும் போட்டு படத்தை முடித்திருப்பார்கள்..கொஞ்சம்வித்தியாசமான நல்ல படம்..
-
அவர் ஒரு பெரியவர்..கிருஷ்ண பக்தர்.. கிருஷ்ணரைப் பற்றியே அழகாகப் பாடி – கிருஷ்ணா முகுந்தா முராரே – எனச் சொல்லியவண்ணம் மரத்தினாலான கிருஷ்ண பொம்மைகள் செய்பவர்..அவர் வேலைபார்க்கும் இட்த்தின் முதலாளியோ நல்லவர்.. அந்த பொம்மைகளும் விற்கும்..எப்போதும் அதற்கான டிமாண்ட் இருந்தவண்ணம் இருக்கும்..
காலப் போக்கில் முதலாளி மரணமடைய அவர் மகன் பொறுப்பேற்கிறான்..
“ஐயா”
“சொல்லுங்க சின்ன முதலாளி”
‘ உங்க பொம்மை எல்லாம் தரமாத்தான் இருக்கு அது மட்டும் பத்தாது.. விலைவாசி ஏறிக்கிட்டே இருக்கு.. ஐ நீட் மோர் ஸேல்ஸ் அண்ட் மோர் ப்ராஃபிட்.. அதனால”
“அதனால”
“ஒரு மெஷின் இம்போர்ட் பண்ணலாம்னு இருக்கேன்.. ஆமா நீங்க எவ்வளவு பொம்மை பண்ணுவீங்க ஒரு மாத்த்திற்கு”
“சின்ன முதலாளி.. நான் பக்தியில தோஞ்சவன்.. அந்தக் க்ருஷ்ணனை நினைச்சு பக்தியோட பண்றது தான்.அதனாலேயே அந்தக் க்ருஷ்ணன் அழகாய் என் கைவிரல்ல பிறக்கறான்னு நினைக்கறேன்..பொம்மைன்னு கூட சொல்ல என் நா ஒப்பலை..எனில் வேகப் படுத்தினா பத்து செய்யற இட்த்துல பதின்ஞ்சு செய்வேன்..:
” நான் இம்போர்ட் பண்ற மெஷின் குறைந்த பட்சம் 150 செய்யுமேய்யா..”
“எனக்கு மெஷின் ஆப்பரேட் பண்ணத்தெரியாதுங்களே”
“இந்த பாருங்க நீங்க எங்க அப்பாக்கிட்ட ரொம்ப காலம் வேலை பார்த்தவங்க..ஸோ உங்களை வேலையை விட்டு தூக்க மாட்டேன்.. மிஷின் வரவழைக்கிறேன்..கையால செய்யறத மெஷினால் செய்யுங்கோ.. “
“ஓ.. நோ அதுல பக்தி பாசம்லாம் இருக்காதேங்க.. நான் பண்ணமாட்டேன்”
“பெரியவரே..பக்திபாசம்லாம் எனக்கும் இருக்கு.. ஆனா நான் இங்க அதைப் பார்க்க முடியாது..இது நான் பிஸினஸ் செய்ற இடம்..எனக்கு நெறய கனவுகள் இருக்கு.. நான் அடுத்த லெவலுக்குப் போக ஆசைப்படறேன்..உங்களோட ஸேம் ஸாலரி அண்ட் ஹாஃப் ஒர்க் – மெஷின் ஆப்பரேட் பண்றது இது என்னோட ஆஃபர் வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள்”
முடியாது சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தால் கல்லூரி செல்ல ஆசைப்படும் மகன்,கல்யாண வயதில் மகள் இன்ன பிறபிரச்னைகள்.. மறுபடியும் வேலைக்கு வருகிறார் பெரியவர்..
“சின்ன முதலாளி.. நான் யோசிச்சேன் மறுபடி..வேலைக்கு வர்றேன்”
“ஓ.கே குட்”
நிதானமாக க்ருஷ்ண பொம்மை – கி..ரு..ஷ்..ணா.. மு..கு..ந்தா...மு...ரா...ரே எனப் பாடியபடி செய்வதை..கிருஷ்ணா முகுந்த முராரே ரே ரே ரே என வேகமாகப் பாடி செய்ய ஆரம்பிக்கிறார் பெரியவர்..!
இது சுஜாதாவின் மாறுதல் வரும் என்ற நாடகத்தின் சுருக்கம்..பார்த்திருக்கிறேன்..
சொல்ல வந்த்தென்ன..மாற்றம்..உலகத்தில் மாறாத்து ஒன்றே ஒன்று தான்..அது தான் மாற்றம்..
அந்தக் கால்த்தில்..
சிலோன் ரேடியோ..
டிவியே இல்லாமல் ஓரிரு டிவிக்கள் அங்கொன்றும் இங்கொன்றும்..வந்த்து ரூபவாஹினி மட்டுமே
பின் ப்ளாக் அண்ட் ஒய்ட் ஸாலிடேர்; கலரில் பிபிஎல் கெல்ட்ரான் – ஒரே ஒரு சானல் தூர்தர்ஷன்..
படம்பார்க்க தியேட்டர் என்பது மாறி வீடியோ.. விசிஆர் காஸ்ட்லி என்பதால் விசிஆர் டிவி வாடகைக்கு விட்டு சம்பாதித்தவர்களும் உண்டு மதுரையில்..
வீடியோவின் ஆக்கிரமிப்பு பலவருடங்கள்..வாடகைக்கு – பத்து ரூபாய் கொடுத்து ஒரு நாளில் பார்த்துத் தரவேண்டும் என்பதுகண்டிஷன்.. பார்த்திருக்கிறேன்.
துபாயில் ஐந்து திர்ஹாம்..
.பின் ஸாட்டிலைட் சானல்கள் வந்தும் புதுப்பட வீடியோவிற்குமவுசு குறையவில்லை சிலகாலம்..
பின் சிடி ப்ளேயர்.. வீடியோவை விட செளகர்யம் மூணு சிடிக்களில் படம் வாடகை மஸ்கட் 500 பைஸா (baize) பின் அதுவே சொந்தமாக அதே விலை..
பின் இப்போது ஒரே டிவிடி மூன்று படம் என..
டெக்னாலஜியின் மாற்றம் அனுபவித்துக் கொண்டுதானிருக்கிறோம்.. நாமும் மாறிக் கொண்டுதான் இருக்கிறோம்..
ஆனாலும் பழைய நினைவுகள்.. தளபதி வந்துடுச்சா தாங்களேன்.. இருபது காப்பி போட்டேன் தம்பி எல்லாரும் வாங்கிட்டுப் போய்ட்டாங்க..அப்புறம் நாப்பது பேர் புக் பண்ணியிருக்காங்க.. நீங்க நாளைக் கழிச்சு வாங்க பார்க்கலாம்
வெய்ட் பண்ணி ஆஃபீஸ் முடித்து இரவு எட்டுமணிக்குக் கடைக்குப் போய்வாங்கி அக்கா வீட்டிற்கு வந்து பத்துமணிக்குமேல் பார்த்து ஒருமணி தூங்கி பின் காலை எட்டுமணி ஆஃபீஸ்.. நினைத்தால்..சிரிப்பு..வரும்..
ம்ம்
இங்கே வாசு சார் இ.ரா விற்குப் போக நான் கொஞ்சம் பழைய படங்களுக்கும் போவேனாக்கும்..அப்ப்ப்ப..
//அடப்பாவி ஒரு எம்.கே.டி பாட்டுப் போட இந்த பில்டப்பா //
**
கிருஷ்ணா முகுந்தா முராரே - ஜெய
கிருஷ்ணா முகுந்தா முராரே
கருணா சாகர கமலா நாயக
கனகாம்பர தாரீ கோபாலா
கிருஷ்ணா முகுந்தா முராரே
காளிய மர்த்தன கம்சனி தூஷன
கமலாயத நயனா கோபாலா
கிருஷ்ணா முகுந்தா முராரே
குடில குண்டலம் குவலய தளநீலம்
மதுரமுரளீ ரவலோலம்
கோடி மதன லாவண்யம்
கோபி புண்யம் பஜா கோபாலம்
கோபி ஜன மன மோகன வியாபக
குவலய தள நீலா கோபாலா
**
ஹரிதாஸ்..அகெய்ன் மதுரை ஸ்ரீதேவி ச்சின்ன வயதில் ஃபுல் படம்பார்த்த்து 22 ரீல்கள் அதுவே சிலவருடங்கள் கழித்து நான் கல்லூரியில் படிக்கும் போது ஜெகதாவில் ரீலீஸ் ஆக- இந்தமுறை எடிட்ட்ட் வெர்ஷன் – 13 ரீல்கள்.. என் நண்பன் பார்த்து வந்து நன்றாக இருக்கிறது எனச் சொன்னான்! ஒரு வாரம் ஹவுஸ்ஃபுல் என நினைவு..
*
http://www.youtube.com/watch?v=1LZGwwdGvAA
-
கிருஷ்ணா....முகுந்தா...சின்னக்கண்ணா!
சூப்பரப்பு. அந்த முதலாளி, தொழிலாளி கான்வர்சேஷன் அமர்க்களம் கண்ணா.
கொஞ்சம் பழைய படமா? ஒ...ரிலீஸ் ஆகி ஒரு 5 வருஷம்தான் ஆகுதா?
ஆனா அந்தப் பாட்டுல என்னவோ ஈர்க்குது சாமி. எத்தனை தபா கேட்டாலும் அலுக்காது.
-
தாங்க்ஸ் வாசு சார்.. ஒரிஜினல் சுஜாதா ட்ராமா ரொம்ப நல்லா இருக்கும்..பார்த்துமிருக்கிறேன் (பூர்ணம் விஸ்வ நாதன்) அதுவும் அந்த க்ருஷ்ணா முகுந்தா முராரேயே கொஞ்சம் வெஸ்டர்ன்ல வேகமாப் பாடியிருப்பாங்க / /கொஞ்சம் பழைய படமா? ஒ...ரிலீஸ் ஆகி ஒரு 5 வருஷம்தான் ஆகுதா?// இ. ரா பாட்டை விடப் பழைய படம் நு அர்த்தம்.. :)
-
'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 2)
இளையராஜா என்ற அதிசயம் 'கிளி'யாக கொஞ்ச ஆரம்பித்து நம் நெஞ்சில் நுழையத் தொடங்கி பின் 'காளி' யாகி விஸ்வரூபம் எடுத்தது. ஆம் இளையராஜாவின் வாழ்க்கையில் ஏன் நம் வாழ்க்கையிலும் மறக்க முடியாத 'பத்ரகாளி' படப் பாடல்கள். தூளியைக் கண்டாலே 'கண்ணன் ஒரு கைக்குழந்தை' என்ற மயக்கும் மந்திர சக்தியைத் தன்னகத்தே கொண்ட கணவனைத் தாலாட்டும் கந்தர்வ கானம்தானே இப்போது கூட நமக்கு ஞாபகம் வரும்? பூ ஒன்று புயலானது போல அமைதியான அந்த அக்ரஹாரத்துப் பைங்கிளி கணவன் விரும்புகிறானே என்று 'கேட்டேளே அங்கே... அதப் பார்த்தேளா இங்கே' என்று திரையரங்குகள் அதிர ரெகார்ட் டான்ஸ் ரேஞ்சுக்கு ஆட்டம் போட்டாளே அமைதியான இசையரசியின் ஆர்ப்பாட்டக் குரலில். எவரால் மறந்துவிட முடியும் அதை?
ஒன்றிரண்டு படங்களிலே மட்டும் தலை காட்டி இருந்தாலும் ராணி சந்திரா என்ற அந்த கேரளத்துக் கிளி நம் மனக்கூண்டுக்குள் இன்னும் சிறகடிக்கின்றதே.... ஆகாய விபத்து அல்ப ஆயுசில் அள்ளிக் கொண்டு போனாலும் ஆலமரம் போல் நம் நெஞ்சில் நிறைந்துவிட்ட ப(வி)த்திரமான 'காளி' அல்லவா?
ஒரு கருப்பு வெள்ளைப் படம் பட்டி தொட்டியெல்லாம் பணத்தைக் கூடை கூடையாய் அள்ளியதே இந்த ராஜாவின் ராஜ உழைப்பினால். கல்யாண வீடுகளின் இசைத்தட்டுக்களில் கண்ணன் 'ஒரு கைக்குழந்தை'யாய்
சுனாமியாய் சுழன்றானே....'வாங்கோண்ணா... அட வாங்கோண்ணா' என்று இந்த பத்ரகாளி அனைத்துத் தரப்பினரையும் வரவேற்று வாரி அணைத்துக் கொண்டாளே. பாடல்களுக்காகவே படம் பட்டை கிளைப்பிக் கொண்டு ஓடியதே.
அந்த 'பத்ரகாளி'யிலிருந்து ஒரு குத்துப்பாடல். ஹிட்டடித்த பாடல்தான். இப்போது கொஞ்சம் நாம் மறந்திருக்க வாய்ப்புண்டு. அதனால் என்ன? தொடர் நினைவு படுத்திவிடப் போகிறது.
ஒத்த ரூபா ஒனக்குத் தாரேன்
பத்தாட்டியும் எடுத்துத் தாரேன்
முத்தாரம் நீ ஒன்னு தந்தாக்கா
என் முன்னாடி நீ கொஞ்சம் வந்தாக்கா
ஒத்த ரூபா எனக்கு வேணாம்
உன் உறவும் எனக்கு வேணாம்
அம்மாடி எனக்கது கட்டாது
அட என் மேனி மணக்குற சவ்வாது
மலேஷியா வாசுதேவன், ஜானகி குரலில் ஒலிக்கும் வெகு ஜனரஞ்சக குதூகலப் பாடல். நெடுந்தூரப் பயணத்தில் தொண்டை வறண்டு போகும் போது கிராமத்துப் பெட்டிக்கடையில் சிகப்புக் கலர் கிரஷ் குடிக்கும் போது கிடைக்கும் சொல்லொணா சுகம் இப்பாடலில் கிடைப்பது நிஜம்.
திரையுலக மார்கண்டேயனும், ஒல்லி அழகுக் கொடி தளிர் இடை பவானியும் (சி.க மன்னிக்க:)) ராஜசேகரின் அரிவாள் நடைக்கு மத்தியில் வாழைத் தோப்பிலும், கம்மாக்கரையிலும் போடும் குத்துப் பாடல். பாடலின் இடையே புல்லாங்குழல் அழகாகக் கையாளப்பட்டிருக்கும். பின்னால் வந்த ஒத்த ரூபா பாடல்களுக்கு முன்னோடி.
https://www.youtube.com/watch?v=AdUL...yer_detailpage
-
//திரையுலக மார்கண்டேயனும், ஒல்லி அழகுக் கொடி தளிர் இடை பவானியும்// அப்ஜெக்ஷன் யுவர் ஆனர் போடலாம் எனச் சொல்லும் எண்ணத்தில் பாடல் முழுக்கப் பார்த்தேன்..பரவாயில்லை..கரெக்ட் தான் வாசு சார்..கீப் இட் அப்..! இந்தப் பாடல் சுத்தமாய் மறந்து போன ஒன்று தான்.. பவானி யார்.. ஒருவேளை ராணிசந்திராவைத் தான் பவானி என்கிறீர்களா..
**
இந்த ராணி சந்திரா தொடர்பான ஒரு சோக நினைவலை..
அவர் பெயர் சுந்தரம்..அரசு அதிகாரி தான்..திடுமெனப் பதவி உயர்வு – மதுரையில் பாண்டியன் கோஆப்பரேட்டிவ் ஸ்டோர்ஸ் செய்ன்ஸ் எல்லாவற்றிற்குமான மேலாளர் டைப் – என்ன விதமான போஸ்ட் என்பது நினைவிலில்லை..
பம்பாய்க்கு ஏதோ அலுவல் விஷயமாக ரயிலில் போய்விட்டு திரும்பும் போது மெட் ராஸ் ஃப்ளைட்டில் ஏறினார்..முதல் ஃப்ளைட் பயணம்..( விமானம் கிளம்பி இயந்திரக் கோளாறால் பம்பாய் ஏர்போர்ட்டிலேயே இறங்க முயற்சிக்க க்ராஷ் ஆகி விட..அதில் மரணம் அவரைத் தழுவி விட்டது.. இதே அக்டோபர் மாதம் தான்..வருடம் 1976.. ராணி சந்திரா வந்த அதே ஃப்ளைட்..இந்தியன் ஏர்லைன்ஸ்..
அவர் எனது தந்தையின் சகோதரர்.. என் சித்தப்பா.. உன்னை விட வயசானவங்க நானெல்லாம் இருக்கேன்..ஒன்னைக் கொண்டு போய்ட்டானே என என் அப்பா விம்மி அழுதது,(அப்பா 83ல் மறைந்தார்) டிவிஎஸ் நகருக்கு ஆறு நாட்களுக்கு அப்புறம் வந்த உயரம் குறைந்த பெட்டி… அதன் அருகில் போய்பார்ப்பதற்கு விடாத அண்ணன் (வேண்டாம்டா..ஸ்மெல் நல்லதில்லை).. என்னைச் சிறுவன் என்பதால் இறுதிக்காரியத்திற்குக் கூட்டிச் செல்லவில்லை..- ம்ம் மறக்காது..இல்லை..கொஞ்சம் மறந்து தான் இருந்தது..உங்கள் இந்த்ப்போஸ்ட் கிளறிவிட்டது..
பத்ர காளி- மதுரை கல்பனாவில் பார்த்த நினைவு.. ஐ திங்க் செத்துப் போனதினாலேயே அவர் நன்றாக நடித்தார் எனச் சொல்கிறார்கள் என அந்தக் காலத்திலேயே நினைத்தேன் நான்.. (அவரது வேறு படங்கள் பார்க்கவில்லை) அப்புறம் விவரமறிந்த பருவத்திலும் அந்தப்படம் பார்த்ததில்லை..
..
**
-
வாசு ஜி,
இளையராஜா தொடர் அருமை
ஒத்த ரூபா பாடல் ஆம் பிற்கால ஒத்த ரூபா பாடலுக்கு முன்னோடி.. இருந்தாலும் கண்ணன் ஒரு கை குழந்தை, கேட்டேளே அங்கே பாடல்களுக்கு முன்னால் இது கொஞ்சம் அமுங்கி போனது.
இருந்தாலும் ரசிக்கும்படியான பாடல்.
தொடருங்கள் வாழ்த்துக்கள்
-
நன்றி ராஜேஷ்ஜி! நீங்கள் சொல்வது உண்மைதான். இரு சூப்பர் ஹிட் பாடல்களால் ஒத்த ரூபா கொஞ்சம் அமுங்கியது உண்மை. ஆமாம் பி.எம்.பார்த்தீங்களோ? நாகக் கன்னி பி.எம் :)