http://i68.tinypic.com/339oi1i.jpg
Printable View
என்னுலகம் பொன்னுலகம்
மண்ணுலகம் விண்ணுலகம்.. நல்லா இருக்கே..முத தபா கேட்கிறேன்..போட்டாச் இல்லை தானே
https://youtu.be/zP8JcbJNb4c
நடுப்பகலினிலே நிலவு வரும்
காலையிலே நதி துள்ளிவரும் ம்ம்ம்ம்
பார்க்கற பார்வையும் விளங்கலையா நான் பயப்படுறேனே புரியலையா
கேட்கிற கேள்வியும் விளங்கலையே அந்தக் கேள்விக்கு பதிலும் தெரியலையே
என வந்துவிட்டு..
பின் கடைசியில் ரிப்பீட்டும் ஆகின்ற வரிகளில்..
பார்க்கற பார்வையும் விளங்கலையா நான் பயப்படுறேனே புரியலையா
ஷாக்கடிச்சாப் போல் நடுங்கலையா நான் பேக்கடிச்சேனே புரியலையா
என்றும் வருகிறது..
அதுக்கு என்னாங்கறீங்களா..
கொஞ்சம் சிந்திக்கணும்
அங்கே நின்னுக்கணும்
சொல்லாமே தெரிஞ்சுக்கணும்
தொடாமே பேசிக்கணும்
சந்திரபாபு யங் சுகுமாரி.. என்னா ஸ்டெப்ஸ்..
https://youtu.be/jYZAjLppCJY
எல் ஆர் ஈ யின் குரலில் உள்ள குழைவு.ம்ம்..
ஆஹா முன்னால் எப்போதோ கேட்ட பாடல்.. இப்போது கேட்க எவ்ளோ நன்றாக இருக்கிறது
தட்டாமல் தந்தவளின் தாழம்பூக் கன்னத்தில்
வெட்கமது தொட்டது விண்..
வாய்யா வா எப்படி இருக்கே..என்னது..ஓ..ம்ம் மாட்டேன் போய்யா சரி வந்து தொலை..லிஸ்ட்ரின்போட்டு வாய்கொப்பளிச்சயா இரு யாரும் பாக்கறாங்களான்னு பார்க்கறேன்..என்னதான் ஜீன்ஸ் ஸ்பாகட்டி டாப்ஸ்னு இருந்தாலும் பேஸிக்கலி ஐயாம் எ ஃபீமேல் யூ நோ “ அப்படின்னு இந்தக் காலப் பெண்கள் ஃபஸ் அடிச்சுக்கினு
கிஸ் கொடுக்க அனுமதிப்பார்கள் என ஆன்றோர்கள் சொல்வார்கள்..
அந்தக்காலத்துல..என்னவாக்கும் சொல்லுதா இந்தப் பொண்..(ஆஃப்டர் த கிஸ்)
கனி முத்தம் பதிந்தது கொடி மேலே
பனி முத்தம் பதிந்தது மலர் மேலே
வாங்கிண்டவ அவ..கொடுத்த ஃபாக்ஸ் தேன் குடித்த ஃபாக்ஸ் ஆ மாறி என்ன சொல்லுது..
முகில் முத்தம் பதிந்தது மலை மேலே
உன் முதல் முத்தம்பதிந்ததென் இதழ் மேலே
வா வா என்னை ஆதரிக்க நீ வா (மறக்காம புதுப்படத்துக்கு நெட்ல புக் பண்ணிடு என்ன)
வா வா என்னை காதலிக்க நீவா ( எனக்குத் தெரியும்டியர் ..ஏற்கெனவே பண்ணிட்டேன்)
பூவிழியால் ஒரு ஓவியம் வரைந்தேன் காதலன் உள்ளத்திலே ( தாங்க்ஸ் பா..உனக்கு இந்த ஷார்ட் ப்ளூசெக்ட் ஷர்ட் நன்னாவே இருக்கு)
புன்னகையால் ஒரு காவியம் வரைந்தேன் காதலி நெஞ்சத்திலே ( தாங்க்யூ டியர்..எல்லாம் நீ செலக்ட் பண்ணினது தான்..ஆலன் ஸாலி.. நினைவிருக்கா)
எழுதிய கவிதைக்கு பரிசென்னவோ
கொடுப்பதைக் கொடுத்தால் சுவையல்லவோ
தேன் குடம் தாங்கிய மாந்தளிர் மேனியை
நான் தொடும் நேரத்திலே (குட்டி டச் தானே..ஏன் முறைக்கிறே)
நூலிடை மேலொரு நாடகம் நடந்ததை
கண் சொல்லும் நாணத்திலே ( நீகெட்ட படவாடா.. கொஞ்சம் அலோ பண்ணா லிமிட் மீறிடுவ அதனாலதான்)
இரவினில் ரகசியம் வெளிப்படுமோ ( மகாபலிபுரம்போய் பெளர்ணமி அலைகள்பார்த்துட்டு வருவோமா..என்னோட பைக்லதான்)
இளமையின் அதிசயம் புலப்படுமோ ( ஓ. நோ.. எனக்கு ஆன்லைன் ட்யூட்டி இருக்கு வீட்ல இருந்துபாக்கணும் (அப்பாடா தப்பிச்சேன்.. நம்பிடுச்சு இடியட்))
வா வா என்னை ஆதரிக்க நீ வா (ஓகே டா டுமாரோ வி வில் மீட்.. என் தம்பி உன்னைப் பார்க்கணுமாம் இட்டாரேன்..)
வா வா என்னை காதலிக்க நீவா ( ஓ.. அதுக்கென்ன.. பார்க்கலாமே..பைடா செல்லம் (போச்சுடா..அவனுக்கு வேற அழணுமா))
பாட் ஆடியோ தான் கெடச்சுது..
https://youtu.be/uzvdXUTvZN0
//நன்னாயிட்டு எழதரீங்கோ..// கோ :) :) :) இந்த வரி மட்டும் மிஷ்டேக்.. நன்னாயிட்டு எழுதறீங்கோ என வரவேண்டும்..எழுத்துப் பிழை கூடியவரையில் இல்லாமல் எழுத முயற்சிப்பவன் நான்..:)
ஹப்புறம் முயற்சித்து ஒரு வெண்பாவாவது எழுதியிருக்கலாம் .. நீங்கள் நான் எழுதுவதாக எழுதிய பாட்டில் ஏ தென்படுகிறது..:)
9 ராகவேந்தர்
10 வாஸ்ஸீ
11 சிக்கா
ரவா உப்மா என் டயட்டில் இல்லை
உங்கள் பதிவு 4 அப்புறம் முர்ளி பாணி பதிவு கண்ட் பிடித்..விட்டேன் :)
ஆனாலும் ரொம்பக் குறும்பு + கொழுப்பு தான்.. :)
பெரிய காதன் பதிவுக்கு போபாலின் மறுமொழி
**
பெரிய காதர்..
நான் ஒருமுறை உ.வே சாமி நாதய்யரைச் சந்தித்த போது ஒருகுவளை மோர் கொடுத்து என்னை உபசரித்து விட்டு பிற்காலத்தில் தமிழ் கொஞ்சம் கொஞ்சமாக பாதியாகப் போனாலும் ஆச்சர்யமில்லை என்று சொன்னார்.. நான் மோர் குடிக்காமல் அவர் பேசுவதையே கேட்டுக் கொண்டிருந்துவிட்டு கடைசியாய்க் கொடுத்த புளிப்பு மிட்டாயை வாயில் போட்டுக் கொண்டு விட்டேன்
அதேபோலத் தான் எழுதுவதை நீங்கள் ஒட்டி வெட்டி பாதியாக எழுதுகிறீர்கள்..அதுமட்டுமல்ல உங்கள் எழுத்தை மிகவும் மதிக்கிறேன் அது என் எழுத்தைப் போல உயரத்தில் இல்லாவிட்டாலும் கூட.. அதே சமயத்தில் நீங்கள் சொல்வதையும் செய்கிறீர்கள் சொல்லாததையும் செய்கிறீர்கள்..அது தான் தூஸ்ஸூ லாலலாலாவிற்கு அர்த்தமே சொல்லவில்லையே..
பதிவைப் படித்து எழுதினால் பரவாயில்லை வீடியோ மட்டும் பார்த்து கற்பனையாய் எழுதுவது என்பது என்னால் மட்டுமல்ல, மற்ற நண்பர்களான தூஸ்ஸு,கேது, இன்ன பிறர்கள் ஏற்றுக் கொள்ள இயலாது.. நாங்கள் முழுக்கப் படித்துவிட்டு பின் அதில் நான் மட்டும் கோபித்து ஒருசிலரைக் கண்ட படி திட்டி விட்டு ஒருமாதம் கழித்து வந்து சில நீள் பதிவுகள் இடுவேன்..முன்பெல்லாம் எழுதியது யார் என்று இடுவேன்..இப்போது அது கூட செய்வதில்லை.. ஏனெனில் அது என் உரிமை என் கடமையும் கூட..எனில் இனிமேலாவது சொல்லாததை எழுதாதீர்கள்..//
From Kalai Nilavu Ravichandran's Kaadhalikka Neramillai tent!
The Space Odyssey !
Quote:
சிந்துபாத்தின் லைலாவை மந்திரவாதி மூஸா அவ்வப்போது ஒரு பொம்மை போல சிறுமியாக்கி சிறு பெட்டியில் அடைத்து முடிவில்லாத் தொடருக்கு சுவாரஸ்யம் ஏற்படுத்துவது போல இயக்குனர் ராமண்ணாவும் கலை நிலவையும் கலை செல்வியையும் சிறு பெட்டியிலோ காருக்குல்லோ அடைத்துப் பாடி ஆடி தண்டால் பஸ்கி எடுக்க வைப்பார்!!
From the Ravichandran entertainer Naan!!
https://www.youtube.com/watch?v=1cEod9d9yCk
From the Ravichandran entertainer Moodrezhuththu!
https://www.youtube.com/watch?v=Yh2_2g_-1wg
போன வருடம் ஹேண்ட்புக்கில் ஸாரி :) முக நூலில் இட்டவை..இங்கும் இட்டேன் என நினைக்கிறேன்
அதனாலென்ன மறுபடி ஒருதடவை பாடலும் பாடலும் கேட்கலாம்.. :)
**
என்னவள் இங்கே வந்துவிட்டாள்
…ஏக்கம் தீர்க்க வந்துவிட்டாள்
மின்னலைப் போலே வசந்தம்நீ
…மழையாய்ப் பூக்கள் பொழிந்திடுவாய்
விண்ணதில் இருந்தே வருகின்ற
..வேகக் காற்றே நீயுந்தான்
சின்னதாய் நடனம் ஆடிடுவாய்
…சீராய் என்னவள் வந்துவிட்டாள்
சிவந்த பூவே உன்நிறந்தான்
..சின்னவள் அவள்கர மருதாணி
மென்மை கொண்டே கீழிறங்கி
..மேகமே மையினைப் பூசிடுவாய்
விண்ணில் சிமிட்டும் விண்மீனே
…வேகமாய் வாஅவள் வகிடாக
எண்ணிப் பார்க்கா அழகுடனே
…என்னவள் சின்னவள் வந்துவிட்டாள்!
அவ்ளோ தாங்க ட்ரான்ஸ்லேட் பண்ண முடிஞ்சது..ம்ம் பாட் என்னான்னா..
https://youtu.be/dGuRNfJ1ys0
போன வருடம் இதே நாள் இட்டது..இன்றும் வெயிலா ஹி ஹி.. :)
*
பாயுங் கதிர்களினால் பக்குவத்தைக் கொள்ளாமல்
காயுமொளி கொண்ட கதிரவனே - மேவிநீ
சுட்டெரிக்க மேனியும் சூடேறச் சந்தனத்தைப்
பட்டாய்த் தடவுவேன் பார்..
என்னங்க பண்ண்றது ஒரே வெய்யில்.. வீட்டிலயும் நெட்டில்ல
வெளியிலையும் வெய்யில் உள்ளேயும் தான் ..ஆமா என்ன செய்யலாம்
மனசு குளிரணுமே.. சந்தனம் பத்தி எழுதிப் பார்த்தா..
தளதள்க்கும் கன்னி தனியாய் இருந்தால்
களவைக் கிணற்றிலே காண்..
அவன்; அவள்; இளமை; தனிமை என்றால் இல்லை..அம்மா வீட்டில்..
நைஸாகக் கடத்தி வீட்டின் பின்புறம் கிணறு.. பின்னென்ன பாடலாம் தானே..
சந்தனக் குடத்துக்குள்ளே பந்துகள் உருண்டு வந்து விளையாடுது
சுகம் விலையாகுது
சம்மதம் நடப்பதற்குத் தந்திரம் புரிந்ததென்ன மனமோ இது
மனமோ இது என்ன குணமோ இது
ந.தி பாரதி.. + இளமை
https://youtu.be/lnObODMJnHY
மீள் பதிவு
சந்தனம் தெய்வத்திற்கு பூஜை செய்யப் பயன் படும் பொருள்.. மணமிகு ச்ந்தனம் அழகிய குங்குமம் என்கிறார் மருதமலை
மாமணியே முருகையா பாடலில் மதுரை சோமு.
சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் பாடலில் நினைவில் சந்தனம் மணக்கக் கேட்டேன் என்கிறார் வைர முத்து..
அப்பொழுது தான் மலர்ந்த பெண்ணைப் பற்றி - அரச்சசந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெற்றியிலே என்கிறார் கங்கை அமரன்..
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து என்னைத் தடவிக்கொண்டோடுது தென்னங்காத்து ...ந.தி. சாவித்திரி + கண்ணதாசன்..
தந்தச் சிலையழகாய் தங்கக் கரமழகாய்
..சந்தக் கவியழகாய் சிந்தும் நகைகொண்டே
வந்தாள் வனத்தினிலே வாகாய் வஞ்சியவள்
..சொந்த மென்வெனக்கு சொர்க்கம் தனைக்காட்ட
செந்தேன் குரலினிலே சேலாம் விழியகல
..சொக்கத் தான்வைத்தாள் சுந்தர பாவையெனை
மின்னல் சுடுமென்பார் மங்கை யிவளழகோ
..மேனி குளிர்விக்கும் சந்தனம் ஆச்சுதையா..
என்கிறார் அந்தக்கால சின்னக் கண்ணனார்..!
இங்க பாருங்கள்..கவிஞர் வாலி என்ன கேக்கறார்.. சந்தனமேடையுமிங்கே சாகச நாடகமெங்கே..
இன்பமே உந்தன் பேர் பெண்மையோ... ம.தி.. ராதாசலூஜா + இளமை ..படம்.இதயக்கனி..
https://youtu.be/_DHxEHm1blM
ஹை..இன்னொரு பாட் நினைவுக்குவந்துச்சே.
.
நல்ல வரிகள்..
நிலாவே அழகு..அதுவும் கொஞ்சம் வெளிர் மஞ்சள்ள இருக்கறா மாதிரி இருக்கும் தூரத்தே இருந்துபாக்கறச்சே..
ஆமா நிலா எப்பவரும்..இது என்ன அபத்தக் கேள்வியா..இந்த இரவு நேரத்தை என்ன சொல்றார் கவிஞர்
சந்தனம் பூச மஞ்சள் நிலாவும்
வந்தனம் என்று நெஞ்சில் உலாவும் நேரம்
ஓகே அது குட் ஈவ்னிங்க் சொல்லிச்சு சரி..அப்புறம் என்ன
விண்ணிலவு பாலூட்ட பெண்ணிலவு தாலாட்ட
நீலாம்பரி கேட்கலாம்…நீலாம்பரி கேட்கலாம்
தூக்கம் வராதோ
நீ பார்க்கும் நேரங்கள் நிலம் பார்க்கும் நாணங்கள்
நெஞ்சுக்குள் ஏதோ செய்தன
இதமாக மைபோட்டு இமையென்னும் கைபோட்டு
உன் கைகள் என்னை கொய்தன… (ஹை.. நல்லா இருக்கே லைன்ஸ்..)
*
கொஞ்சுதற்குத் தோதாய் குளிர்நிலவாய் வஞ்சியவள்
மிஞ்சுகின்ற வெட்கத்தில் மேனியிலே அச்சமுடன்
கெஞ்சுகின்றாள் கண்களினால் கேட்கின்றாள் ஓசையின்றி
விஞ்சுவதும் ஆசையது ஆம்..
(சரியா வந்திருக்கா..)
ரஜினி ராதா..+ இளமை..
https://youtu.be/bUYMBZIFDcM
மீள் பதிவு..
சாலையைக் கடக்க நின்றாள்
அவளைக் கடந்தன
பல கண்கள்
*
கண்களும் கீழே விழுந்தன
அவள் தவற விட்ட
புத்தகத்துடன்
*
புத்தகத்துள்
உயிரிழந்த இரு பூச்சிகள்
நிறையப் படித்திருக்குமோ
*
படித்தது எல்லாம் மறக்க
நீல மசியில்
தெரிகிறது வெறுமை
*
வெறுமையாகிவிட்டது
அவள் சென்ற
வீதியும் மனசும்..
*
மனசில் மயிலிறகு
பல நாளின் பின் கேட்ட
அவள் குரல்
*
குரல் கேட்கக்கேட்க
உருவம் வளர்ந்தது
நெஞ்சில்
*
நெஞ்சில் வலி வந்தாலும்
முகத்தில் கட்டாயச் சிரிப்பு
இருக்குமிடம் அ;லுவலகம்
*
அலுவலக நேரம் முடிந்தும்
படபடப்பு
அவளிடம் பேசவேண்டும்..
*
வேண்டும் எனச் சொல்லிவிட்டாள்
தொலைபேசியில்
பூத்தூவித் தெரிகிறது சாலை..
*
ஒரு ஹைக்கூ (?!) விற்கும் அடுத்ததற்கும் எந்த சம்பந்தமும் இல்லை..ச்சும்மா அந்தாதி ட்ரை பண்ணினேன்..
பொருத்தமாய் பாட்டா.. பொருத்தமில்லை ஆனா பாட் நன்னா இருக்கே
ஓர் பூமாலை அதில் தேன் இவ்வேளை.. (இனிய உறவு பூத்தது படமாம் சுரேஷ் நதியா (படம் எப்படி இருக்கும்) பாட் இப்பத் தான் கேக்கிறேன் பார்க்கிறேன்..எனக்குப் பிடிச்சிருக்கே…(கொஞ்சம் ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை மெட்டின் சாயல் என நினைக்கிறேன்)
https://youtu.be/u3Fy0DRKWR8
சந்தனம் நறுமணப் பொருட்களில் ஒன்றாக விளங்குகிறது. இது மிக அரியதும், விலைமதிப்புள்ளதுமான ஒரு வாசனைப்பொருளாகும்.
(ஹை என்ன கண்டு பிடிப்பு)
தோல் சுருக்கங்கள், கறுப்பு தோல்கள் போன்றவற்றை மாற்றுகிறது.
உலர்ந்த சருமத்திற்கு லேசான ஈர உணர்ச்சியைக் கொடுத்து அதை மிருதுவாகவும்,
பளபளப்பாகவும் செய்கிறது. சிறுநீர்க்குழாய்களில் உண்டாகும் சில வியாதிகள் இந்த வாசனை எண்ணெயினால் குணமாக்கப்படுகின்றன.
//ஹை நிறைய உபயோகம் இருக்கே//
எனக்குத்தெரிந்த சந்தனம் ..ஒரு குட்டி வட்டமாய் ஒரு பலகை வீட்டில் மதுரையில் இருந்தது.. ஏதாவது ஆத்திர அவசரத்திற்கு
ஃபார் எக்ஸாம்பிள் ட்யூரிங் டிவாலி டைம் ஏதாச்சும் பட்டாசு சுட்டா அம்மா டபக்கென சிலசமயம்
தண்ணீர் கொஞ்சம் அந்த வட்டக் கட்டையில் விட்டு அதை த் தேய்க்கும் சின்னக் கட்டையில் தேய்த்துத்
தடவியிருக்கிறார்..மதுரை அக்னி நட்சத்திர நாட்களில் சில சமயம் கரெண்ட் வராத காலத்தில்
கொஞ்சம் உடலில் பூசிக் கொண்டு தூங்கியதாக நினைவு (வெகு சின்ன வயதில்)
வந்தனம் சொல்லியே வாகாக வெக்கையை
சந்தனம் போக்குமே தான்
..
இங்க என்ன சந்தனக்காற்றே செந்தமிழூற்றே சந்தோஷப் பாட்டே வா..வா.. ரஜினி ஸ்ரீதேவி..+ இளமை..
தனிக்காட்டு ராஜா..
இன்னிக்கு 42 என்று நெட்டில் (107) போட்டிருந்தாலும் 45 க்கும் மேலாகத் தான் இருக்கும் வெயில்..வெளியில் ஷாப்பிங்க் போய்விட்டு வந்தால் தோலெல்லாம் எரிகிறது..ம்ம் 45 என்றால் 113 பார்த்துக்கொள்ளுங்களேன்.. அனல் தகிக்கிறது.. மனமே ஒரு மந்திரச்சாவி என வேண்டி நின்று ஒரு பாட் கொடு ம்ஹூம் இனி இப்படி எழுத மாட்டேன்.. ஒரு பாட்டுக்கொடு எனக் கேட்டதில் கிடைத்தது மழைப் பாட்டு..சூர்யாவின் தந்தை அண்ட் ராதாவின் அக்கா..
https://youtu.be/3bN5Qsqm4kw
ராகம் தாளம் பல்லவி
அது நம் காதல் பூபாளமே..
Dear Gopal
Enjoyed your spoof and parody in a healthy way! You could have added a relevant video too!!
senthil
கட்டம் கட்டப்பட்ட இத்தனை முக பாவ வர்ண ஜாலங்களையும் கட்டுக்கடங்காமல் வெளிப்படுத்தி பின்னிப் பெடலெடுத்து வட்டமடித்திட நடிகர்திலகத்தினால் மட்டுமே முடியும்!Quote:
வ(ச)ம்பு சோ(ப்)பாலின் தழும்பு தரும் அ(ழு)ம்பு தாங்காமல் வெதும்பி கலங்கி குழம்பி தயங்கி மயங்கி பயந்து நயந்து ஏறி இறங்கி மிரண்டு வெருண்டு மருண்டு உருண்டு புரண்டு வெறித்து தெறித்து ஓடி ஒளிந்து வளைந்து நெளிந்து ஒதுங்கி பதுங்கி சுருங்கி விரிந்து குனிந்து நிமிர்ந்து குதித்து மிதித்து வேர்த்து விறுவிறுத்து பதறி உதறி கத்திக் கதறி துடித்து துவண்டு வெந்து புழுங்கி நொந்து நூலாகி நடுங்கி ஒடுங்கும் புதியபறவை கோ(ப்)பால் !!
https://www.youtube.com/watch?v=___CnUWEADk
’பொன்னே,புதுமலரே,பொங்கிவரும் காவிரியே
மின்னும் தாரகையே வெள்ளி நிலவே………
அம்புலி வேண்டுமென்றே அடம்பிடித்தே அழுவாய்
பிம்பம் காட்டி உந்தன் பிடிவாதம் போக்கிடுவேன்
அந்த நாள் மறைந்ததம்மா ஆனந்தம் போனதம்மா
நல்ல தங்காளில் ஏபி. நாகராஜன்.. திருவிளையாடலில் தாடி மீசையுடன் நக்கீரனாகப் பலமுறை பார்த்த உருவம்.... ம்ம்
https://youtu.be/c073XNqZUkw
இந்தப் பாட்டு சிறுவயதில் பலமுறை ரேடியோவில் கேட்டிருக்கிறேன்..சமீபத்தில் எப்போது கேட்டேன் என யோசித்தால்..ம்ஹூஹூம் கேட்டதில்லை..கொஞ்சம் 30 வருடங்களுக்கு மேலேயே இருக்கும்..
திடுதிப்புனு தேடறச்சே கிடைத்ததுஇந்தப் பாட்டு ஜெய்சங்கர், எல்.விஜயலஷ்மி (?) சோ வாணிஸ்ரீ பாடும் பாட்டு..
இதில் ஜெய்சங்கருக்கும் சோவுக்கும் டி.எம்.எஸ் அண்ட் எல்.விக்கும் வாணிக்கும் சுசீலா..
நான் யார் தெரியுமா.. முன்னால் வாசு எழுதியிருக்கிறார் அல்லது யாரோ எழுதியிருப்பதைபடித்தது போல் புகையாய் நினைவு..
பட் பாட் நன்னா இருக்கே..கருப்புக் கண்ணாடி போட்டுக்கிட்டதாலேயே வாணியை அடையாளம் தெரியலையாம்..ம்ம்
*
ஆங்கில லிரிக்ஸ் பார்த்து தமிழில் டைப்படித்தேனாக்கும்..
*
ஒரு துள்ளல் பாட்டு தான்..
*
நினைத்தால் மணக்கும் கிடைத்தால் இனிக்கும்
தங்க நிறம் வண்டாடும் பூ முகம்
மஞ்சள் நிறம் தள்ளாடும் மெல்லிடை
முல்லை நிறம் என்னென்ன வண்ணங்களோ
\முத்தங்கள் சிந்தாதது முந்தானை பின்னாதது
கன்னங்கள் பொன்னானது கையோடுதான் சேர்ந்தாடுது
மானோ மீனோ மாங்கனி தானோ
வாழைப் பூவில் ஊறிய தேனோ
அம்மம்மா பெண்ணா இது
அப்பப்பா என்னாவது
தித்திக்கும் செம்மாதுளை சிங்காரச் செண்டானது
அல்லிப்பூ பந்தாடுது அச்சாரம் கொள்ளாதது
வேலோ வில்லோ விழியொருபாவம்
மேலும் மேலும் விளையுது ராகம்
ஈரேழு பருவத்திலே என்னென்ன வைத்தானம்மா
பாலூறும் பெண்மையிலே பல்லாக்கு செய்தானம்மா
நானோ நீயோ மாப்பிள்ளையாரோ
யாரோ யாரோ யாரறிவாரோ
அம்மம்மா பெண்ணா இது
அப்பப்பா என்னாவது
https://youtu.be/3wgvy2HIcCQ
சி.க,
நான் யார் தெரியுமாவில் வாணியும் இல்லை,எல்.வீயும் இல்லை.
இவ்வளவு எழுதி குவிக்கிறீர்கள். நாங்கள் அவதரித்த அதே பூமியில் எங்களுடன் அவதரித்து எங்களுடன் வளர்ந்தீர்கள். (இன்னும் கொஞ்சம் பட்டிகாட்டு சினிமா மோக மதுரையில்) சராசரி நடிக நடிகையர் பற்றி கூட தெரியாமலா இவ்வளவு அலட்டல்?
'கீதா... ஒரு நாள் பழகும் உறவல்ல' பதிவுகளை மனமுவந்து பாராட்டிய சின்னா, மதுண்ணா, ஆதிராம் சார், வினோத் சார், கோபால் சார், ராகவேந்திரன் சார் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
ஆதிராம் சார்
'என்னென்னவோ நான் நினைத்தேன்' பாடலைப் பற்றிய தங்களது நினைவூட்டல் வியக்க வைக்கிறது. நல்ல ஞாபகசக்தி.
இது போன்ற அபூர்வ அட்டகாச பாடல்களுக்கு சிலர் மனதில் தனி இடம் உண்டு. அந்த வரிசையில் ராகவேந்திரன் சார், கோபால் சார், மதுண்ணா, ஜி, கார்த்திக் சார், முரளி சார் ஆகியோரும் கண்டிப்பாக இடம் பெறுவார்கள்.
'தெய்வத்தின் கோவில்' பாடலும் அப்படியே. தாங்கள் எந்த அளவிற்கு அந்தப் பாடலை மனதில் வைத்துள்ளீர்கள் என்பது தங்களது உற்சாகப் பதிவிலேயே தெரிகிறது. தங்கள் உயரிய ரசனைக்கு எனது நன்றிகள். அப்படியே அப்பாடலைப் பற்றிய பாராட்டிற்கும் சேர்த்து.
ராகவேந்திரன் சார்,
சசிகுமார் பற்றி தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. நடிகரே திலகத்திற்காகவே வாழ்ந்தவர் அவர். அவரை நினைக்கும் போதெல்லாம் நிச்சயம் நம் மனம் மகிழ்ச்சியடையும்.
கோ.. நான் எங்கே ஓய் அலட்டினேன்.. பிடிச்ச பாட்டு போட்டேன்.. இனிமேல் நடிக நடிகை என்று எழுதிவிடுகிறேன் சரியா..
ஹப்புறம் சாமி சத்தியமா எனக்குத் தெரியலை..இந்த விடியுமட்டும் பேசலாம்ல கூட ராஜஸ்ரீ மாதிரி இருக்கேன்னு நினச்சேன்.. கூகுள் தேடல்லையும் டீடெய்ல் கிடைக்கலை..இருந்தா கொஞ்சம் சரியா எடிட்டாவது செஞ்சுருப்பேன்..
அப்புறம் நேற்று ஈவினிங் ஆஃபீஸிலிருந்து வந்த பின்னர் வேறு வேலைகள்..கொஞ்சம் திருவாய்மொழி, அச்சுதம் கேசவம் ஒரு அத்தியாயம், புயலில் ஒரு தோணியில் ஒரு அத்தியாயம், ஒரு ஆங்கில புத்தகம் ஆல் யுவர்ஸ் ஸ்ட்ரேஞ்சர்னு அதில் ஒரு அத்தியாயம் ப்ளஸ் கொஞ்சம் கலிவிருத்ததிற்கான பாடங்கள் - எழுதிப் பார்க்க வேண்டும் என்று திடீர் ஆசை எனப் படித்துக் கொண்டிருந்தேனா டைம் சரியா இருந்தது..( நேற்று தான் இப்படி.. மற்ற நாட்களில் இரண்டு புத்தகங்கள் படித்தல் இரு பக்கங்கள் எழுதிப்பார்த்தல் குறைந்தபட்சம் ஒரு நாலு விருத்தம் வெண்பாவது எழுதிப்பார்ப்பேன்..உங்களிடமிருந்து ஏதாவது திட்டல் வந்தால் ஸ்பீட் ப்ரேக் போட்டது போல மனது அல்லாடும்..பின் நிமிர்ந்து நம்ம கோபால் என தேற்றிக்கொண்டு என் ரொட்டீன் தொடர்வேனாக்கும்..இன்ஃபேக்ட் உங்கள் ராகங்களுக்கு விழுந்து விழுந்து வேறுபாடல்கள் தேடிக் கேட்டு ப் போட்டதில் அன்று எதுவும் படிக்க இயலாமல் போனது..அதற்கேற்ப நீங்கள் மறு நாள் ஜஸ்ட் லைக் தட்கொஞ்சம் மென்மையான வன்மையுடன் திட்டி விட்டீர்கள்.. பரவாயில்லை.. ந.கோ. தா. ) அப்புறம் பதினொன்றரைக்கு மறுபடியும் செக்பண்ணலாம் என நினைக்கையில் உறக்கம் என்னைத் தழுவிக் கொண்டு விட்டது..பாடல் வரிகள் இரண்டு முறை பாட்டைக் கேட்டு டைப் செய்து இரண்டு விருத்தம் எழுதிப் பார்த்து பின் அதை இடாமல் விட்டு விட்டேன்..:) எனக்கு நடிக நடிகையரை விட( ந.தியை த் தவிர) மற்ற பாடல் வரும் இடங்களில் தமிழ் பிடிக்கும்..அதனால் தான்..
ஆன்லைன்ல அந்தப் படம் கிடைக்கவில்லை..கிடைத்தால் தாருங்களேன்..அப்படியே அந்தப் படத்தைப் பற்றி முன்பு நீங்களோ மற்றவரோ எழுதியிருந்தால், திட்டுவதைத் தவிர தேடுவதற்கும் நேரம் கிடைத்தால், கொஞ்சம் இடுங்களேன் குரு. நானும் அறிந்து கொள்கிறேன்..
பட்டுவுடை பாவையவள் பட்டுடலை தொட்டணைக்க
கொத்துமலர் கூந்தலிலே கொற்றமிட்டுத் தானிருக்க
கட்டவிழ்த்த கோபத்தில் கன்னியவள் பார்வையதோ
வட்டநிலாச் சுட்ட வடு
ஈற்றடி- கடைசி அடி மட்டும் தென்றல் பத்திரிகையில்கண்ணதாசன் கொடுத்த வரி.. அதற்கு மற்றவெண்பாக்களைப் படிக்காமல் முன்பு எழுதிப் பார்த்திருந்தேன்..
பொருத்தமாய்ப் போடுவதென்றால் சில நினைவுக்கு வருகின்றன
ராதே உனக்குக் கோபம் ஆகாதடி
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது
பொன் மானே கோபம் ஏனோ
இப்போது உமா ரமணன் குரல்கேட்க ஆவலாய் இருப்பதால்..
பொ மா கோ ஏ
https://youtu.be/2B-X-ChAT7w
பக்திப் பாடல் மெட்டுப் பாடல்கள் - 1
ரொம்ப காலத்துக்கு முன்னால சிக்கா இஸ்கோல்ல படிச்சுக்கிட்டிருந்தாப்லயாம்.. அதாவது இந்த ப்ளஸ் ஒன் நு சொல்வாங்கள்ள அந்தப் படிப்பாம்..ஆளப் பார்த்தா எப்படி இருப்பாங்கறீங்க.. ஒல்லிப்பிச்சு முருங்கைக்காய்க்கு பேண்ட் சொக்கா மாட்டினா மாதிரி, கொஞ்சம் முகத்தில அங்கங்க கரப்பு கடிச்சா மாரி தாடி.. கொஞ்சம் கரு கரு மீசை..அதுவும் இந்த பார்பர் பஞ்சமலை இருக்காரே அவர் போன தபா ஹேர்கட் பண்ணப்ப கிருதாவ வேற நீட்டமா வெச்சுட்டாரா சொம்மா துருதுருன்னு இருந்தானாம்..
அப்போ அந்த சான்ஸ்க்ரிட் வாத்யார் கூப்பிட்டாராம்.. இந்தாபா இந்த மாரி ஆண்டுவிழா இர்க்கு அதுக்கு நீ என்ன பண்றே
சிக்காக்கு உதறலாம் நான் என்ன செய்யணும் சார்..
கவலைப் படாதே நீயும் இன்னொரு பையனும் சேர்ந்து இந்த ஸ்லோகத்தை ஆரம்பத்துல பாடுங்கோ..அப்புறம்..
அப்புறம்
உங்க க்ளாஸ்லயே சாந்தகுமாரோ சத்யகுமாரோ கொஞ்சம் பொம்மனாட்டி போல இருப்பானேடா..
ஆமா
அவனோட டான்ஸ் வச்சுடலாம்னு டிராயிங் மாஸ்டர் சொல்லியிருக்கார்..
அவ்வளவு தான் சிக்கா ஒடனே தன்னோட பாடப்போற மோகன் புள்ளையாண்டானைத் தேடிப் போனானாம்.. மோகனா
என்னடா கண்ணா
இப்படி வாத்யார் பண்ணிப்புட்டாரேப்பா
அதெல்லாம்கவலிய விடு கொஞ்சம் ப்ராக்டீஸ் பண்ணிக்கலாம்..
அப்படியே கொஞ்ச நாள் ப்ராக்டீஸ் பண்ணி பாடின பாட்டு தான் கீழே வரும் பாட்டில ஆரம்பத்துல வர்ற ஸ்லோகம்
ஸ்டேஜ்க்கு போனவுடனே - முத ஸ்டேஜ் .. சிக்காகு மொத மாலை நேரம் . ஸோ கொஞ்சம் உதறல்தான்..ஆனா மோகனோட சேர்ந்து கோரஸா பாடினதுல வேகமா முடிஞ்சது..(கீழ வர்ற பாட்டுல அந்த ஸ்லோகம் ரெண்டு ஸ்டான்ஸா தான் வருதா..ஆனா நிஜத்துல நிறையவாக்கும்)
கொஞ்சம் சொதப்பினாலும் யாரும் அதை நினைவுல வெச்சுக்கலை..எதனாலங்கறீஞ்களா
பின்னாடி வந்த சாந்தகுமார்ப் பையன் ஜம்னு சூப்பர் ஆட்டம் போட்டான் பாருங்க பெண்வேஷத்துல..கலக்கலா இருந்துச்சு..அவன் ஆடின பாட்டு எதுக்குத் தெரியுமா.. மன்னவன் வந்தானடி தோழி.. அதனால எங்களை எல்லாரும் மறந்துட்டாங்க..
மறு நாள் டிராயிங் மாஸ்டர் சிக்காவைக் கூப்பிட்டாரா.. என்னா சார்..
பரவால்லைடா தைரியமா சொல்லிட்ட ஸ்லோகம்..
தாங்க்ஸ் சார்..
இந்தா என எடுத்துக் கொடுத்தது ஒரு பேனா - கருப்பு நிறத்தில் கொழுக் மொழுக்கென கொஞ்சம் தங்க நிறக் கொண்டை தரித்து - அந்தக் கால கிரீடம் வைத்த ப்ளாக் அண்ட் ஒய்ட் படஅரசகுமாரி போலவே இருந்ததாக்கும்.. ( கொஞ்சம் காஸ்ட்லி தான் பேர் தான் மறந்துவிட்டது)
வீட்டிற்குப் போனால் ஒரே குஷி எனச் சொல்லவும் வேண்டுமா..
இந்தப் பாடல் இடம்பெற்ற படம் பார்ததில்லை ஆனால் கேட்டிருக்கிறேன் பலதடவை..இப்போது தான் பார்க்கவும் செய்கிறேன்..லிரிக்ஸ் வாலியாம்..
*
பார்த்திபன் குஷ்பு தாலாட்டுப் பாடவா படம்.. அருண்மொழி ஜானகி..ஆனாக்க
பார்த்திபனுக்கு லாங்க் ஷாட் வெச்சதுனால அவ்வளவா பயமுறுத்தலை..ஒல்லி குஷ்புவும் பரவாயில்லை..
முதாக ராத்த மோதகம் சதா விமுக்தி சாதகம்
கலா தறாவ தம் சகம் விலாசி லோக ரக்ஷகம்
அனாயகைக நாயகம் வினாசி தேப்ர தைத்யகம்
நதாசு பாசு நாஷ்யகம் நமாமி தம் விநாயகம்
முதாக ராத்த மோதகம் சதா விமுக்தி சாதகம்
வராது வந்த நாயகன்.. ஒரே சிறந்த ஓர் வரன்
வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்
வரம் தரும் உயர்ந்தவன் கரம் கரம் இணைந்தவன் இவன் தலைவி நாயகன்
தொடாமலும் படாமலும் உலாவும் காதல் வாகனம்
வராமலும் தராமலும் விடாது இந்த வாலிபம்
உன்னோடுதான் பின்னோடுதான் வந்தாடும் இந்த மோகனம்
கையோடுதான் மெய்யோடுதான் கொஞ்சாமல் என்ன தாமதம்
உன் பார்வை யாவும் நூதனம்
பெண்பாவை நீயும் சீதனம்
உன் வார்த்தை அன்பின் சாசனம் பெண் உள்ளம் உந்தன் ஆசனம்
அள்ளாமலும் கிள்ளாமலும் தள்ளாடும் இந்த பூவனம்
கல்யாணமும் வைபோகமும் கொண்டாடும் நல்ல நாள் வரும்
அந்நாளிலே பொன்னாளிலே என் மாலை உந்தன் தோள் வரும்
சல்லாபமும் உல்லாசமும் கண் காணும் நேரம் சொபனம்
சொல்லமாலும் கொள்ளமாலும் திண்டாடும் பாவம் பெண்மனம்
இந்நேரம் அந்த ஞாபகம் உண்டாக நீயும் காரணம்
கண்ணார நாமும் காணலாம் செவ்வாழை பந்தல் தோரணம்
என் ஆசையும் உன் ஆசையும் அந்நாளில் தானே பூரணம்
*
இப்படிக் காதல் மயமாய் ஆன பக்திப் பாடல் இதோ கீழே.. :)
*
https://youtu.be/j3HnGr2UFIg
பக்திப்பாடல் மெட்டுப்பாடல்கள் - 2
என் வீட்டிற்கு அடுத்த வீடு ஒரு செட்டியார் வீடு..வட்டிக்கடை வைத்து அந்தக்காலத்திலேயே மூன்று மாடி கட்டியிருந்தார்..அவர் வீட்டுக்கு அடுத்த வீடு..அதுவும் செட்டியார் வீடுதான்..ஆனால் அந்தச் செட்டியார் ஒரு நகைக்கடையில் வேலை செய்துகொண்டோ பார்ட்னராகவோ இருந்தார்..அவருக்கு இரண்டு பெண்கள் மூன்று பிள்ளைகள்..அதில் மூத்தவன் சோமுதான் என் வயதொத்தவன்..ரெண்டு பேரும் நாலாப்போ அஞ்சாப்போ படிச்சுக்கிட்டு இருந்தோம்..
சோமுவின் அம்மாவிற்கு கள்ளந்திரியில் கொஞ்சம் நிலங்கள் இருந்தன எனில் அறுவடை முடிந்து நெல் மூட்டைகள் வீட்டில் உள்ளே இரண்டு அறைகளில் அடுக்கப் பட்டு இருக்கும்..அந்தப்பக்கம் இந்தப்பக்கமென தாவி ஓடி விளையாடிக்கொண்டிருப்போம்..
இப்படி இருக்கையில் ஒரு நாள்..
நாளைக்கு சோமவாரம்ப்பா நீயும் வந்துடு
என்னடா
சோமு சொன்னான்..சோமாவாரம் அன்று திருப்பரங்குன்றத்தில் அன்னதானம் செய்வதாக அவன் அம்மா வேண்டிக்கொண்டிருக்கிறார்கள் என..
அதுக்கு
நீ சும்மா வாவே.. பஸ்ஸுல போய்ட்டு வந்துடலாம்..வீட்ல தான் புளியோதரை செய்வாங்க..வேன்ல எடுத்துக்கிட்டு போய் அங்க கோவில்ல வச்சு டிஸ்ரிபூட் பண்ணிடலாம்
என்ன பூட்டு
டிஸ்ரிபூட் - போடா.. எனக்குதான் இங்க்லீஷ் வராதுல்ல..
மறு நாள் காலை பத்து பதினோரு மணீக்கு அவன்வீட்டுக்குப் போனால்..
கொல்லைப்புறத்தில் பெரிய அண்டாவில் சாதம் கொதித்துக் கொண்டிருக்க, செட்டியாரம்மா..வாடா கண்ணா.. சோமூ எலே சோமு..பாரு அய்யரூட்டுப் புள்ளைய சுறுசுறுப்பா இருக்கு..எழுந்திருடா..
கொல்லைப்புறத்திலிருந்து இருவர் வந்தனர் (சமையல்காரர்கள்) கொஞ்சம் அகலமாக இருந்த சோமு வீட்டு ஹாலில் பெட்ஷீட்டாட்டம் இரண்டு ஓலைப்பாய்களை விரித்து பின் கொ;புறத்திலிருந்து இன்னொரு பாத்திரத்தில் சாதம், பின் இன்னொரு பாத்திரத்தில் புளிக்காய்ச்சல் என எடுத்து வந்து சாதத்தை ப் பரத்தி அதில்புளிக்காய்ச்சலை மரக்கரண்டியால் கலக்க..பார்த்துக்கொண்டிருந்த எனக்கு எச்சிலூறியது
கண்ணைக்கசக்கி வந்தான் சோமு.. அம்மா கண்ணாக்குகொடு..
இப்ப கிடையாதுடா சாயந்திரம் கோவில்ல..சரியா..
சரி என்றுவிட..
கிட்டத்தட்ட பல நாலோ ஐந்தோ பெரிய பெரிய பாத்திரங்களில் புளியோதரை ஏற்றப்பட்டு திருப்பரங்குன்றம் பயணித்தது..
சொல்லமறந்துவிட்டேனே.. செட்டியாரம்மா ஆட்களை வேலை வாங்கி இன்ன பிற வேலைகள் செய்து கொண்டிருந்தாலும் அந்தத் தமிழ் பக்திப்பாட்டை மனப்பாடமாகச் சொல்லிக்கொண்டிருந்தார்..
திருப்பரங்குன்றம் போய் முருகன் வள்ளி தெய்வானை வணங்கி கோவிலில் இருந்து எல்லாருக்கும் ஒரு தொன்னை அல்லது இலை (சரியாக நினைவிலில்லை) கொடுத்து பின் சாப்பிட்ட புளியோதரையின் சுவை இன்னும் நெஞ்சகத்து நினைவில்..
(அப்போதெல்லாம் காஸெட் வந்திருக்கவில்லை என நினைக்கிறேன்)
பிற்காலத்தில் அந்தப் பாட்டையே மெட்டை மட்டும் எடுத்துக்கொண்டு திரைப்பாடலாக்கினார்கள்.. பக்திப்பாடலாய் சூலமங்கலம் சகோதரிகள் எல்பியில் பாடுவார்கள்..
பதினெட்டு வயது இளமொட்டு மனது என்று ஜானகி அண்ட் கோ பாடுவது..இசை தேவா. நிறையப் பேர் கோபப்பட்டார்கள் இந்தப் பாட்டுக்கு..முதாகராத மோதகம் அவ்வளவு யாரும் கோபப்பட்டதாகத் தெரியவில்லை..
பட் காரணம் புரிகிறது..வரிகள்..
https://youtu.be/_U5brJtM6TU
சரத்குமார் ரோஜா. சூரியன்..
பக்திப் பாடல் மெட்டுப் பாடல்கள் - 3
*
மதுரையில் ஸ்ரீதேவி தியேட்டரின் வலதுபுற்முள்ள மெய்ன் ரோட்டில் கொஞ்சம் நடந்தால்சரேலென கனகவேல்காலனிக்குள் போகும் பாதை வரும்..மெய்ன்ரோட்டிலேயே இன்னும் நடந்தால் இடப்புறம் மங்கையர்க்கரசி ஸ்கூல் வலப்புறமும் அதன் ப்ராஞ்ச்..
பட் அந்த க.வே.கா போவதற்கு முன்னாலேயே ஒரு குட்ட்டிக்கோவில் உண்டு ..வீரகாளியம்மன் என நினைக்கிறேன் ( நான் சொல்வது நாற்பது வருடங்களுக்கு முன்னால்)
அங்கு ஆண்டுவிழாவிற்கும் சரி, மார்கழி மாதமானாலும்சரி வாடகைக்கு ரெகார்ட்ப்ளேயர் அப்புறம் பச்சைப்பெயிண்ட் அடித்த கொண்டை கொண்ட ஒலிபெருக்கி வைத்துபக்திப்பாடல்கள், சரஸ்வதி சபதம் திருவிளையாடல் தில்லானா மோகனாம்பாள் வசனம் எனப் போடுவார்கள்
பக்திப்பாடல்கள் என்று பார்த்தால் மார்கழி காலையில் எழுப்புவது எல்.ஆர். ஈஸ்வரிதான்..
மாரியம்மா எங்கள் மாரியம்மா உன்னை வணங்குகிறோம் கருமாரியம்மா என ராகத்தில் குரல் மனதை உள்ளிழுக்கும்
பின் வரும் இந்தப்பாட்டு
நெற்றியிலே குங்குமமும் நிலவ வேண்டும் அம்மா
நெஞ்சில் உன் திரு நாமம் மலர வேண்டும்
பக்திவளம் மென்மேலும் பெருக வேண்டும்... எனச்செல்லும் அந்தப்பாடல்..
அம்மா.. எனச்சொல்லும் அழகு..பின்
கற்பூர நாயகியே கனகவல்லி காளி மகமாயி கருமாரியம்மா என அழைக்கும் உருக்கம்..
அதிகாலை (அதாவது அஞ்சு அல்லதுஆறுமணி) அரைத்துக்கத்தில்பலமுறை சின்னக்கண்ணா கேட்டு விழித்திருக்கிறான்..
பட் பிற்காலத்தில் அந்த மெட்டே திரைப்பாடலில் வந்து கொலைபடப்போவது அவனுக்குத் தெரியாது..
ம் பிற்காலம் என்றால் கொஞ்ச காலம் முன் வந்த பாடல்..
கருப்பான கையாலே என்னைப் பிடிச்சான்..எனப் போகும் அப்பாடல்..
விஷால்..அப்புறம் அரை ஆழாக்கு உழக்குக்கு பாவாடை சட்டை தாவணி போட்ட மாதிரி துறுதுறுவென உயரம் கம்மியான பானு..
கேக்கலாமா இப்போ.. வேறு வழியில்லை..:)
https://youtu.be/RWuYQD1Bt-g
பக்திப் பாடல்கள் மெட்டுப் பாடல்கள்- 4
அள்ளும் இளமையுடன் ஆழமாய் நெஞ்சிருக்கும்
கல்லூரிக் காலமது காண்
சரிதானே..
சொல்ல வந்தது என்னன்னாக்க
ஸ்வீட் யூத் சின்னக்கண்ணா.. காலேஜ் மூன்றாம் வருடம் முடிக்கற சமயம்..
திடீர்னு எங்க கேங்க்ல சிலருக்கு டூர் போகணும்னு ஆசை காலேஜ் லெக்சரரை க் கூட்டிக்கிட்டு பெங்களூர் மைசூர்லாம் போய்ட்டு வந்தோம்..இல்லை வரும்வழியில் உடன் இருந்த சினேகிதன் ராஜாராமன் (பெயர் மாற்றியிருக்கிறேன்) அவனுக்கு அவனது காதலியைப் பார்க்க ஆசை..அவள் இருந்தது திருச்சியில் பொன்மலை என்னும் இடத்தில் இருந்தாள் அவனதுகாதலி.. செவந்த் டே ஸ்கூல் மதுரை ரயில்வே காலனிக்குள்ளாற இருக்கும்.. அந்த வகுப்பில் தான் ரா.ரா வும் அவன் காதலியும் ப்ளஸ் டூ படித்து பின் காதலானதென பலகதை சொல்வான்..
அவனைப் போகவிடவில்லை என்ன காரணத்தாலோ நாங்கள்..
பட் சில மாதங்கள் கழித்து அவனுடனேயே போய் அவனது காதலியை சந்திக்க நேர்ந்தது..இந்த முறை அவன் காதலியின் தகப்பனார் கோயம்புத்தூருக்க்கு மாற்றலாகி இருந்தார்..
போத்தனூர்..
ஒரு இளங்காலையில் மதுரை டு கோயம்புத்தூர் அடைந்து பஸ்ஸில் போய் போத்தனூர் செல்கையில் குளிர்காற்று.. ஸ்டாப்பில் இறங்கி க்ராஸிங்க் கடந்து ரா.ரா வின் காதலி வீட்டுக்குப் போகையில் மெல்லிய தூறல் சாரல்..அவளைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் ரா.ராவின் மனதில் ஆரலாய்ப் பற்றிக்கொள்ள புஸு புஸு என மூச்சு விட்டான்
சாரல் நனைத்தாலும் சத்தியமாய் என் நெஞ்சம்
ஆரலாய்க் காய்கிறது ஆம்
(ஆரல் நெருப்பு) எனச் சொல்லாமல் வேகமாய் நடந்து செல்ல நானும் உடன் நடக்க வீடு சேர்வதற்குள் நல்லமழையில் நன்றாகவே நனைந்து விட்டோம்..
வாசலில் “ஹாய் “ யுடன் அவன் காதலி.இஞ்சினியரிங்க் மாணவி.. பின் பின் என்ன..
வெளியில் மழை பெய்து கொண்டிருக்க அவர்கள் வீட்டு வாசலில் இளமை மழை.. ஓ. நோ என் நண்பனின் காதலி அல்ல..அவளது தங்கை..
ப்ளஸ் ஒன் படிக்கிறாளாம்..பெயர் கல்பனாவோ காயத்ரியோ இப்போது நினைவிலில்லை (அதானே..சொல்லமாட்டேனே).. செவேலென்று -நன்றாககாரம் போட்ட கடலைமாவில் தோய்த்தெடுத்த வாழைக்காய்ப் பஜ்ஜி போல- கொஞ்சம் என்னுயரம் ப்ளஸ் செந்நிறம் கொண்டு சிரித்து ஹாய் சொன்னது தேவதை..(பின்ன நாங்கள் அங்கு சென்ற போது எங்களுக்கு நல்லபசி..பசியில் உவமைஇப்படித்தான் வரும்..
ஹாய்..
அந்த ஹாய் சொல்லித்தெரிந்த மூரலில் என் கவியுள்ளம் பொங்கி (பலவருடங்களுக்கு அப்புறம் இப்போது) எழுந்தது!
தூறல் வருடதற்போல் தூய உதட்டினிலே
மூரலால் தீண்டினாள் மெய்
(மூரல் – முறுவல்)
மெய்யாலுமே சிலிர்த்துட்டேங்க.. சொன்னா நம்பணும்..
உள்ளிருந்து இருவரின் அம்மா வந்து வாடா ராஜா, கண்ணா என அழைத்து டிஃபன் உப்புமாவோ என்னவோ கொடுக்க உண்டால்.. கொஞ்சம் ஒரு மணி நேரத்தில் கிளம்பணும் இன்னொரு இடத்தில் ஒருவரைப் பார்க்கவேண்டும் என கல்பனாவின் அம்மாவிடம் நான் சொல்லிக்கொண்டிருக்க, ரா ராவும் க.அக்காவும் கண்ணால் பேசிக்கொண்டிருந்தார்கள்.
சரி சரி என்றான் ராஜா ராமன்..இடைமறித்து.. நாங்க கிளம்பறதுக்கு முன்னாடி நீங்க ரெண்டுபேரும் பாட்டுப் பாடணும் என்றான் கல்பனாவையும், காதலியையும் பார்த்து..
கொஞ்சம் கூட ஃபஸ் அடித்துக்கொள்ளவில்லை அவர்கள்.. சுடிதார் போட்ட அக்காவும் பாவாடைசட்டை தாவணி தங்கையும் சப்பணம் கூட்டி தரையில் அமர்ந்து பாடிய பாட்டு என்றைக்கும் மறக்கமுடியாதாக்கும்..
காற்று சிலிர்த்திடக் காரிகையர் கானமது
ஊற்றாகப் பொங்கிவந்த தே
அதன்பிறகு அந்தப் பெண் கல்பனாவை மதுரை வரும்போது ரா.ராவின் காதலியுடன் சில முறை பார்த்திருக்கிறேன்.. .. அப்போதெல்லாம் அந்த மென்சிலிர்ப்பு போய்விட்டிருந்தது.. ( நான் வளர்ந்தேனே மம்மி) ஏனெனில் ரா.ராவின் காதல் முறியும் நிலைமையில் இருந்து பின் முறிந்தே விட்டது..(அதெல்லாம் சாவகாசமா நாவல் எழுதினா சொல்றேன்..ஓ.கேயா )
ம்ம் அப்படி என்ன பாட்டு பாடினாங்க
என்ன தவம் செய்தனை யசோதா..
எங்கும் நிறைபரப்பிரம்மம் அம்மா என்றழைக்க..
*
பிற்காலத்தில் இந்தப்பாட்டு இறுதியில் அதே ஒருசில வரிகளுடன் வந்து கொஞ்சம் அழகாகவும் மிளிர்ந்தது ஹரிணியின் குரலாலும் சினேகாவாலும்
பார்த்திபன் கனவு ஸ்ரீகாந்த் சினேகா..
ஆலங்குயில் கூவும் ரயில் ஆரீரரோ ஏலேலேலோ..
யாவும் இசை ஆகுமடா கண்ணா..
https://youtu.be/SbzKJ0g4BlI
Last week I watched the Tamil movie '24' in a theatre here. From what I understand the movie was released in India and other countries on the same day. For a change the plot was different from typical Tamil movies ! :)
http://america.pink/images/2/1/7/8/0...amuna-rani.jpg
இன்று பிறந்த நாள் கொண்டாடும் கே.ஜமுனா ராணி அவர்களுக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள். இறையருளால் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்டு ஆயுள் பெற்று நீடூழி வாழ இறைவனிடம் வேண்டுவோம்.
அவரை வாழ்த்த விரும்புவோருக்காக அவருடைய கைப்பேசி எண் - 9886242556 - நன்றி சுக்ரவதனி வாட்ஸ்அப் குழு
ஜமுனா ராணி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..
ஆஹா நிறைய பாடல்கள் நினைவுக்கு வருகின்றன.. அதில் ஒன்று (கடவுளே ஜமுனா ராணி பாட்டா இது இருக்கணுமே :) )
படிக்கவேண்டும் புதிய பாடம் வாத்தியாஆரய்ய்யாஆ என இழுக்கும் குரல்..
https://youtu.be/3IDTDy7pYE0
எப்போதுமே ஜமுனாராணி குரல் சில சமயங்களில் ஈஸ்வரியை மனசுக்குள் கொண்டு வரும்... ( எனக்கு பல சமயங்களில் )
அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து பாடிய இந்தப் பாட்டைக் கேளுங்கோ...
https://www.youtube.com/watch?v=ARZmINYpGLo
1958 / 1959 - RARE TAMIL FILM ADVT AND FILM NEWS
http://i66.tinypic.com/10mr4a8.jpg