-
சிவாஜியின் காதல்கள்-4
புதையல்-1957
சின்ன சின்ன இழை பின்னி விண்ணோடும் முகிலோடும் விளையாடிய தங்க மோகன தாமரை பரிமளா ----உனக்காக எல்லாம் உனக்காக.
முதல் காட்சி -தபால் கொண்டு வருபவர், தபால் படிக்காமலே கிழிக்க படுவதை கண்டு ஆச்சர்யமுற்று கேட்க,நீங்களே படித்து பாருங்கள் என்று தபால் காரரை அந்த பருவ மங்கை வேண்ட,தபால் காரர் ,இப்படி கசமுசான்னு கிழிச்சிட்டியே ,ஒட்டுமா என்று ஓட்ட வைத்து(சத்தமாவா,மனசுக்குள்ளா,உங்க இஷ்டம்) ,அவர் படிக்கும் அழகிலே ,மயங்கி மனதை பறி கொடுத்து கிழிக்க பட்ட கடிதத்தையும் போற்றி வைக்கும் பரிமளா-துரை காதல் முதல் காட்சியிலேயே களை கட்டி விடும்.(படிக்கும் நடிகர் யாரென்று சொல்லவும் வேண்டுமோ)
குதிரை வண்டியில் வரும் துரையை தோழிகள் கேலி செய்ய ,நிபந்தனையற்ற ஆதரவை துரைக்கு நல்கி,கடையாணி கழற்றிய வண்டியை துரத்தி சென்று ,அம்மா அப்பாவை பற்றி பரிமளா விசாரிக்க,(இருக்காங்களா,அவங்க இதுக்கு சம்மதிப்பாங்களா ,துரையின் கிண்டல்),தன் கதையை சொல்ல இரவு தனியாக கடற்கரை பக்க மண்டபத்துக்கு வர சொல்ல, அட...பரிமளாவும் சரிதான் சொல்லி விடுகிறாள்.என்ன கதை...
ஒரு காதல் காட்சி படு சுவாரஸ்யமாகவும் ,கதைக்கே திருப்பு முனையாகவும் அமையும் அதிசயம் இந்த மண்டப சந்திப்பு காட்சி....
இரவிலே தாமரையாய்,பகலில் நிலவாய் ,குறுந்தொகை படிக்கும் காதலர்கள்...முகத்தையும்,இதழையும் வருடும் துரையின் கரங்கள்,நாணத்தோடு ரசிக்கும் பரிமளா,கோடி கதைகள் பேசி ,பார்ப்போர் காதல் உணர்வையும் தூண்டி துடித்தெழ செய்யும்.தன்னுடைய கதையை சொல்லி இதுதான் தங்கம் புதைத்த இடம் (தங்கை தங்கம்)என்று காட்ட,தங்க புதையலை தேடி அலையும் வெள்ளியம்பலம் கோஷ்டி காதில் பட,துரத்த பட்டு மதகடியில் காதலர்கள் ஒளியும் காட்சி...அந்த கால சொல்லி அடித்த கில்லி.....
விண்ணோடும் முகிலோடும் காட்சி-சுருங்க சொன்னால் தமிழில் வந்த முதல் முதல் அசல் காதல் காட்சி. இன்ப லாகிரியில் உன்மத்தம் கொண்ட காதல் பித்தோடு காதலர்கள் களி நடம் ஆடும் ,நடிப்பின் சாதனை.Silhoutte என்று சொல்ல படும் நிழல் படத்தில் தொடங்கி,துரத்தி விளையாடி,கை கோர்த்து கடலில் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து களித்து, ஜடையை இழுத்து,விளையாடி,குட்டி கரணம் அடித்து இன்ப பித்து உணர்த்தி,விளையாட்டாய் மடியில் கை போட செல்லமாய் தட்டி விடும் அழகி. காதலி கையை பிடித்து முட்டி போட்டே நடை பழகும் கடற்கரையோர காதல்....பார்த்து களியுங்கள் அய்யாமார்களே....
இந்த காதல் இப்படியென்றால், துர்பார்க்கிய ,வயதானவனுக்கு சூழ்ச்சியினால் வாழ்க்கை பட்டு ,பாதாள அறையில் அடை படும் துரையின் மேல் ஒருதலை காதல் கொள்ளும் மேனகா...சகதியில் விழுந்து விட்ட சந்தனத்தை உதாசீனம் செய்வதா,என்னும் மேனகாவிடம்,பின்னே அதை மேலே எடுத்து பூசி கொள்வதா என்னும் துரையிடம்,இல்லையில்லை குப்பையில் கோமேதகம் இருந்தால் என்னும் உதாரணத்திற்கு,நமக்கு சொந்தமில்லாதது என்று பதிலுக்கு, தனியுடமை என்கிறீர்களா என்னும் மேனகாவிடம்,இந்த மாதிரி விஷயங்களில் பொதுவுடைமை கூடாதம்மா என்னும் குறும்பு...
வந்திருப்பது மாறுவேட பரிமளா என்று அறியாமல் ,குடு குடுப்பை காரனிடமே துரையை வசிய படுத்த வேண்ட ...(குடுகுடுப்பை காரர் பாவம் துரையின் பிடியில்,தட்டலில் திணறினாலும்,இரவு உருண்டு புரண்டு அருகில் படுப்பார்.அது என்னாடா படியில் மேல் நோக்கி உருண்டு என்ற துரை கிண்டல்),தப்பி போக மேனகாவை ஏமாற்ற ,சத்தியமா உன்னை பிரிய மாட்டேன் என்று மாறுவேட பரிமளா கையால் அடித்த சத்தியம் செய்து,ஓடும் போது என் கதி என்று கேட்கும் மேனகாவிடம் நீ வேறா என்று அடிதடி சண்டை வேறு...(துரை ரசிக்க வேறு செய்வார்)புதையல் சுவடியை காதலர்களை பலி கொடுக்க மாற்றியெழுதும் மேனகாவே இறுதியில் பலியாகும் சோகம்....
பரிமளாவை ஒரு தலையாய் காதலிக்கும் துக்கா ராம் (சந்திர பாபுவின் மிக சிறந்த பாத்திரம்)...நூற்று கணக்காய் தினம் கடிதம் எழுதி குவிப்பதும்,(முதல் காட்சி கடித உபயம் இவரே),பரிமளா சீயக்காய் தூள் ஆர்டர் வரும் போது அதகளம் செய்வதும்,பரிமளா இவரை வெள்ளியம்பலத்திடம் மாட்டி வைக்க,புதையலை தேடி அலைய கட்டாய படுத்த படுவதும் (தின அட்டவணை வேறு குளித்தல்,சாப்பிடுதல்,தூங்குதல்,உலா போதல் என்று!!!),கடைசியில் பரிமளா தன்னை காதலிக்கவில்லையென்றாலும் தான் மாட்டுவதை விரும்பவில்லை என்று அவள் நல்லுள்ளத்தை புரிந்து தானே போலீசிடம் செய்யாத குற்றத்திற்கு சரணடையும் தியாகி காதலர்...
புதையல்...விறுவிறுப்பான தங்க காதல் புதையல்.
-
To All,
It is very strongly reiterated that the discussions here should focus on NT and his movies and any deviation in any form should strictly be avoided. Any comparative write up is not encouraged and any personal exchanges between hubbers are strictly No No. Everybody needs to adhere to these rules without exception.
More importantly any comments or discussion on this message from the Moderator is prohibited.
Thanks in Advance for everybody's co-operation
Regards
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
Muthaiyan Ammu,
Thanks for your Great contributions.I need your contributions in Sivantha Man,Enga Mama,Raja,Vasanthamaligai,Sivakamiyin Selvan.
-
-
http://i1028.photobucket.com/albums/...ps3ncsatl3.jpg
அமரர் எஸ்.வி.சுப்பையா
அவர்களைப் பற்றி
திரு.சிவகுமார்.
-----------------------------
நானும், லட்சுமியும்
இணைந்து நடித்த 2-வது
படத்தில், சிவாஜி அவர்கள்
'சாமுண்டி கிராமணி' என்கிற
கள் இறக்கும் தொழிலாளியாக
3 நாட்கள் கௌரவ வேடத்தில்
நடித்துக் கொடுத்தார்.
அந்த வேடம் படத்தின்
முதுகெலும்பாக அமைந்து
விட்டது.
வெள்ளிப் பெட்டியில் ஒரு
தொகை வைத்து சிவாஜியிடம்
நீட்டினார், எஸ்.வி.எஸ். காசு
வேண்டாம் என்று சிவாஜி
மறுத்து விட்டார்.
உணர்ச்சிவசப்பட்டவர்,
அடுத்த பிறவியில் நாயாகப்
பிறந்து சிவாஜிக்கு
நன்றிக்கடன் கழிப்பேன் என்று
பேட்டியளித்தார்.
-நன்றி: கலையுலக
மார்க்கண்டேயன். திரு.
சிவகுமார்.
-
எல்லோரும் கொண்டாடுவோம் என்று பாடுவதற்கு முன்பாக தப்படிக்கும் அந்த லாகவமே என்ன ஒரு எழிலான விரலசைவு.காமிரா முகத்தை காட்டும் முன்பாகவே தன் பால்ஒட்டு மொத்த ஆடியன்ஸையும் ஈர்த்துத்துக்கொள்ளும் வல்லமை படைத்த அருட் பிரகாச ஜோதியைமுகத்தில் கொண்ட நடிகர்திலகமே.
எத்தனை முறை பார்த்தாலும் புதிதாகவே இருக்கிறதே உன் நடிப்பு.
ஒவ்வொருமுறை பார்க்கும்போதும் உணர்வுகள் அதிகமாகிக்கொண்டுதானே இருக்கிறது.
சிவாஜி ரசிகன் பொற்காலம் என்ற வார்த்தையை உன் படங்கள் பார்க்கும்போதும் மட்டுமே உணருவான்.
இது போன்ற பல உணர்வுகள் இன்று
கோவை ராயலில்
பாவமன்னிப்பு பார்த்தபோது ஏற்பட்டது.
திரைப்படத்தையே பார்க்காதவர்களைப்பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை.ஆனால் திரைப்படம் பார்க்கும் பழக்கம் உடையவர்கள் பாவமன்னிப்பை பார்த்திராவிட்டால் அவர்களின் பாவங்களுக்குத்தான் மன்னிப்பு கிடைக்காது.
கோவை ராயலில் இன்றைய காட்சிகள்
http://i1039.photobucket.com/albums/...psi3epomy5.jpg
சிவாஜி ரசிகர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி
http://i1039.photobucket.com/albums/...pspzcrtfak.jpg
http://i1039.photobucket.com/albums/...psg13gxei3.jpg
http://i1039.photobucket.com/albums/...psqnxruzpx.jpg
http://i1039.photobucket.com/albums/...psekl9vaiy.jpg
http://i1039.photobucket.com/albums/...ps8jst0iq0.jpg
பாலாபிசேகம்
http://i1039.photobucket.com/albums/...ps5pf869uo.jpg
தெய்வமாய் வணங்கும் ரசிகர்கூட்டத்தின் ஒரு பகுதி
http://i1039.photobucket.com/albums/...psobxaqyqd.jpg
-