-
VOICE MODULATION - அப்படி என்றால் என்ன என்று இன்றைய நடிக நடிகையருக்குத் தெரியுமோ என்னவோ எனக்குத் தெரியாது. ஆனால் அதற்கான விளக்கத்தை இப்படத்திலும் நடிகர் திலகம் அளித்திருப்பது மட்டும் தெரியும். சரோஜா தேவியின் வரத்தால் முதியவராக மாறிய பிறகு, ஜமுனா சிலையாகி விடும் காட்சியில் அவருடைய நடிப்பு .... பின்னி எடுத்திருப்பார் ... வயதானவர்களின் குரலில் ஏற்படும் நடுக்கம் மிக தத்ரூபமாக பிரதிபலிப்பார். கண்ணை மூடிக் கொண்டு அந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் குரலைக் கேட்க வேண்டும். அதற்குப் பிறகு அந்தக் காட்சியில் அவருடைய நடிப்பைப் பார்க்க வேண்டும். He will introduce a new dimension in acting... நடிக்க வந்து ஐந்து வருடங்களில் இப்படத்தில் அவர் காட்டியிருக்கும் excellence ...
இந்தக் காலத்து இளைஞர்களின் பாஷையில் சொல்வதானால் .... சான்ஸே இல்லே ...
-
TODAY IN SUNLIFE NADIGAR THILAGAM's ANBUKARANGAL.......
CAST SUPPORTED BY Ms.DEVIKA, Mr.Balaji etc.,
ENJOY !!!
-
-
-
Ratnagiri Rahasyam 1957 రత్నగిరి రహస్యం
'தங்கமலை ரகசியம்' தெலுங்கில் 'ரத்னகிரி ரகசியம்' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடியது. அந்த படத்திற்கான அபூர்வ நிழற்படம் இதோ.
http://i1087.photobucket.com/albums/...rt%20-2/rr.jpg
-
டியர் ராகவேந்திரன் சார்
தங்கமலை ரகசியம் பதிவுகளில் தங்கமாய் மின்னுவது தாங்கள் பதிந்துள்ள பேசும் படம் ஏப்ரல் 1957 இதழ் பதிவுகள்தாம் ஆஹா! எத்துணை அரிய, கிடைத்தற்கரிய பொக்கிஷம். எங்கு தேடினாலும் தற்சமயம் கிடைக்காதே! இணையத்தில் முதல் முதலாக தங்களால் தரவேற்றப்பட்ட இந்தப் பதிவை அமுதைப் பொழியும் நிலவைப் பார்த்துக் கொண்டிருப்பது போலவே பார்த்துக் கொண்டே இருக்கலாம். இந்த அற்புதப் பதிவிற்காக தங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்.
-
"ராஜா காது கழுதை காது" famous comedy ஐ மறக்க முடியுமா!
-
வாசு சார் ...
King midas and rabbit ears - அந்தக் காலத்தில் இது ஒரு பேச்சு வழக்கு - மைதாஸ் மன்னனின் காதுகளைப் பற்றி ஒரு திரைப்படம் வந்தது. அதனுடைய கான்செப்டை இப்படத்தில் புகுத்தி நகைச்சுவையாக சொல்லி யிருந்தார்கள். தங்கமலை ரகசியம் மிகவும் பரபரப்பாக பேசப் பட்டதற்கு டி.ஆர். ராமச்சந்திரனுக்கு திடீரென்று முயல்களைப் போல் காது முளைக்கும் காட்சியும் ஒரு காரணம். இந்தக் காட்சியும் யானைகளின் சாகசங்களும் அந்தக் காலத்தில் குழந்தைகளுக்கு வேடிக்கையாக இருந்ததும் குறிப்பிடத் தக்கது. இவையும் கலரில் எடுக்கப் பட்டன.
இது போல் பந்துலு அவர்களின் படங்களில் ஓரிரு காட்சிகள் அல்லது சில காட்சிகள் கலரில் எடுக்கப் படுவது ஒரு குறிப்பிடத் தக்க அம்சமாக விளங்கியது. இதே போல் நம்முடைய அம்பிகாபதி படத்திலும் மாசிலா நிலவே பாடலும், ஆராவமுதே பாடலும் கலரில் தான் திரையிடப் பட்டன.
ரத்னகிரி ரகசியம் தெலுங்கு நிழற்படம் சூப்பர்... அதே போல் தங்கமலை ரகசியம் நிழற்படங்களும் ... மிக்க நன்றி
-
தங்கமலை ரகசியம் திரைப்படத்தில் சரோஜாதேவி தோன்றும் காட்சி
http://i1146.photobucket.com/albums/...ps03b0c974.jpg
-