http://i44.tinypic.com/20r2yqq.jpg
Printable View
[/QUOTE]
LOVELY !!!!!!!!
What an excellent Stunt !
This stunt is the best one when it comes to the sword fight ! Other films of Makkal Thilagam, will show the villain more or less a Dummy ...The sword fight in this is at its best...!
Watch the place especially 1:41 onwards...You can see how ferociously both of them fight...The biggest surprise is Makkal Thilagam will not smile at all in this sword fight...whereas in other films, he will smile while he fights which will bring down the seriousness of involvement of generic viewers.
There is one long shot of this sword fight where Makkal Thilagam moves in sitting position and fights with MN Nambiyar in the sword where both of them will from the top move towards the bottom of the sand hill....I think this is by far the best sword fight of Nambiyar Swamy with Makkal Thilagam.
I will rate this as No.1 and No.2 I will rate the fight between Makkal Thilagam and P.S.Veerappa inside the Rajasabai ....Both of them would use slightly heavy equipment ..! No.3 is Neerum Neruppum..Climax Fight between Asokan and Makkal Thilagam where he will switch the sword between hands ....! Asokan's 2nd Fight where he will look as if he is dominating and powerful...!
Sir...am awaiting Periya Idathu Penn..Silambu fight between MT and Asokan
Regards
SRS
மக்கள் திலக திரி நண்பர்களுக்கு ஒரு இனிய செய்தி - NDTV நிறுவனம் நூறு வருட இந்திய சினிமாவில் 20 நடிகர்களை தேர்ந்தெடுத்து உள்ளது Indian cinema@100: 20 actors who made a difference என்ற தலைப்பில். இதில் யார் முதலாமவர் யார் இரண்டாமவர் என்றில்லாமல் 20 நடிகர்களை தேர்வு செய்துள்ளது. அதில் மக்கள் திலகம் அவர்களை பற்றி இடம்பெற்றுள்ள செய்தி உங்கள் பார்வைக்கு.
http://www.ndtv.com/photos/entertain...-15052/slide/8
SRS SIR
UNGALUKKAGA
http://youtu.be/XKMivdgYnV8
பொன் விழா நிறைவு நாள் .
10.05.1963- 09.05.2013.
http://i44.tinypic.com/e9u13d.jpg
மக்கள் திலகம் அவர்களின் ''பெரிய இடத்து பெண் ''
மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பில் வெளி வந்து சாதனை புரிந்த படம் .
எல்லா பாடல்களும் இனிமை .
1963 -வெளியான படங்களில் மிக சிறந்த படங்களில் இந்த படமும் ஒன்று .
https://www.youtube.com/watch?v=yAvvt46rIy0
ULAGAM SUTRUM VALIBAN - FULL FILM
1, இன்றோடு எங்க வீட்டு பிள்ளை கோவை டிலைட்டில் ஓடிய நாட்கள் - 12 நாட்கள்.
2, நாளை முதல் டிலைட் திரை அரங்கில் மக்கள் திலகத்தின் தயாரிப்பில், இயக்கத்தில், நடிப்பில் உருவான
ஒப்பற்ற காலத்தால் அளிக்க முடியாத காவியம் குறுகிய கால இடைவெளியில் - நாடோடி மன்னன்.
(இரண்டு வாரங்கள் கோவை fun cinemas மற்றும் சாரதா திரை அரங்குகளில் சமீபத்தில் ஓடியது)
3. இன்றோடு ஒன்பது நாட்கள் மதுரை வீரன் கோவை ராயல் திரை அரங்கில் - வசூல் ரூபாய் 1,20,000/-.
கொங்கு மண்டலத்தில் என்றும் எங்கள் இதய தெய்வமே வசூல் சக்கரவர்த்தி.
எஸ். ரவிச்சந்திரன்
--------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
--------------------------------------------------------
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=p6ifVsKk4iU#!
KUMARI KOTTAM SONG - MAY BE FOR THE FIRST TIME IN THE NET.
Dinamalar - news -10.5.2013.
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., தமிழ் மீது கொண்ட பற்றால், தமிழ் மொழிக்காக, ஒரு பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டும் என, 1981ம் ஆண்டு, மதுரையில் நடந்த, உலகத்தமிழ் மாநாட்டில் அறிவித்தார். உடனடியாக அதற்கானக் குழு ஒன்றை, ம.பொ.சிவஞானம் வ.சு.ப.மாணிக்கனார், சாலை இளந்திரையன், கி.ஆ.பெ.விஸ்வநாதன் ஆகிய அறிஞர்கள் தலைமையில் நியமிக்கப்பட்டது.
தமிழ் மொழிக்கான தனித்தகுதி பெற்ற பல்கலைக்கழகத்தை, உயர் கல்வித்துறையின் கீழ், 1000 ஏக்கர் பரப்பளவில் ஏற்படுத்துவது என, முடிவு செய்து துவக்கப்பட்டதே தமிழ்ப் பல்கலைக்கழகம். தமிழ் மொழி, தமிழர் பண்பாட்டினை உலக அளவில் பரப்புவதற்கான ஓர் உயர்ப் பல்கலைக்கழகமாக உயர்த்த, உயர் கல்வித்துறையின் சிறப்பு அந்தஸ்தைப் பெற்ற பல்கலைக்கழகமாக விளங்கியது. சிலரது சுய நலத்திற்காக, எம்.ஜி.ஆர்., ஆட்சி மறைந்து, மாற்றுக் கட்சி ஆட்சிக்கு வந்தபோது, தமிழ் அறிஞர்களின் ஆலோசனைகளைக் கேட்காமல், தமிழ் பல்கலைகழகத்தை, தமிழ் வளர்ச்சிதுறைக்கு மாற்றிய காரணத்தால், தமிழ் பல்கலைக்கழகம் தன் தனித்தன்மையை இழக்கத்தொடங்கியது. அது இன்று வரை நீடித்து வருகிறது.
மத்திய பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் போல் தமிழ்ப் பல்கலைக்கழகம் செயலாற்ற வேண்டுமெனில், இப்பல்கலைக்கழகத்தை, உயர்கல்வித்துறையின் கீழ் கொண்டு வந்து, சிறப்புப் பல்கலைக்கழகமாக மாற்றவேண்டும் என்பதே, தமிழ் அறிஞர்களின் விருப்பம். தமிழ் வளர்ச்சி இயக்கத்தின் கீழ் ஒரு நிறுவனம் போல், தமிழ்ப் பல்கலைக்கழகம் செயல்பட்டால், பல்கலைக்கழகத்தின் தனித்தன்மை இழந்து, தமிழகத்தின் பிற பல்கலைக்கழகங்கள் பெறுகின்ற தமிழக அரசின் நல்கைகள், மற்றும் பல்கலைக்கழக நல்கைக் குழு( யு.ஜி.சி.,) நல்கைகளை இழக்கும் நிலை ஏற்படும்.
தமிழ் பல்கலைக்கழகத்திற்கான நிலம் ஒதுக்கப்பட வேண்டிய நிலையில், குழுவில் இருந்த அமைப்பாளர்கள், அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரை சந்தித்த போது, பல்கலைக்கழகம் அமைக்க, நிலம் எவ்வளவு வேண்டும் என, எம்.ஜி.ஆர்., குழுவிடம் கேட்டார்.
குழுவினர், 50 முதல் 100 ஏக்கர் வரை இருந்தால் போதும் என்றனர். உடனே எம்.ஜி.ஆர்., என்ன தமிழை அவ்வளவு குறைத்து மதிப்பிட்டு விட்டீர்களே; பிற பல்கலைக்கழகங்களை விட தமிழ் மொழிக்கு அமைக்கப்படுகின்ற பல்கலைக்கழகம் குறைந்தது, 1000 ஏக்கர் பரப்பளவில் அமைய வேண்டாமா? 1000 ஏக்கரில், தமிழக நில அமைப்பைப்போல் தமிழ்ப் பல்கலைக்கழகம் அமையட்டும் எனச் சொல்லி, 1000 ஏக்கருக்கு மேல் நிலம் ஒதுக்கி, தமிழ் பல்கலைக்கழகத்தைச் சீரும் சிறப்புமாக, அண்ணாதுரை பிறந்த நாளில் அமைத்தார்.
முதல் துணைவேந்தராக விளங்கிய அறிஞர் வ.அய்.சுப்பிரமணியம் பெருமுயற்சியால், தமிழகத்தின் தனிச்சிறப்புப் பெற்ற பல்கலைக்கழகமாக புகழ்பெற்ற பேராசிரியர்களைக் கொண்டு பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. தமிழுக்கே உரித்தான ஐந்திணைகள் அமைப்பில், ஐந்து புலங்கள் இப்பல்கலைக் கழகத்தில் உருவாக்கப்பட்டு தமிழின் உயராய்வு மையமாக இது செயல்பட்டது. பேராசிரியர் வ.அய்.சுப்பிரமணியம் பெருமுயற்சியால் பல மையங்கள் இப்பல்கலைக்கழகத்துடன் செயல்பட்டன. தத்துவத்திற்கு புகழ் பெற்ற காஞ்சிபுரத்தில் தத்துவ மையமும், வாழ்வியல், அறிவியல் தமிழ்க் களஞ்சியங்களுக்காக சென்னையில் மையங்களும், கடலாய்விற்கு என, மண்டபத்தில் ஒரு மையமும் பழங்குடி மக்கள் குறித்து ஆய்வு செய்ய உதகையில் ஒரு மையமும், தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் மையங்களாக செயல்பட்டு வந்தன. இதுவரை பல அரிய நூல்களையும், அகராதிகளையும் வாழ்வியல் அறிவியல் களஞ்சியங்களையும் இப்பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
எம்.ஜி.ஆர்., ஆட்சிக்குப்பின், இன்றைய முதல்வர் ஜெயலலிதா தமிழ்ப்பல்கழைக்கழகம் ஓர் உயர் ஆய்வு மையம் என்பதைக் கருத்தில் கொண்டு, எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டை, ஜப்பானிய பேராசிரியர் நபொரோ கரஷிமா தலைமையில், மிக நேர்த்தியாகத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் துவங்கி வைத்தார். எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டில், மிகக் குறுகிய காலத்தில், இப்பல்கலைக் கழகத்தில் சில கட்டடங்கள் உருவாக்கப்பட்டன. உலகத்தமிழ் மாநாடு நடந்த பெரிய அரங்கம் மிகக் குறுகிய காலத்தில் கட்டப்பட்டதை அனைவரும் வியந்து போற்றினர்.
ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான தமிழக அரசின் நல்கை, பல்கலைக்கழக ஊதியக்குழுவின் பரிந்துரைக்கு ஏற்ப வழங்குவதற்கு ஏதுவாக மாற்றப்படாமல், இன்றளவும் துவக்க காலத்தில் கொடுக்கப்பட்ட அரசு நல்கையைக் கொண்டே வழங்கப்படுகிறது. பல்கலைக்கழகத்தின் நிதியைப் பெருக்க, மாணவர்களைச் சேர்த்து பாடம் நடத்துகின்ற பல்கலைக்கழகமாக இப்பல்கலைக் கழகம் மாறியது.
மேலும், இப்பல்கலைக் கழகம் தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குனர் வழியாகவே, அரசுக்கு, அனைத்துப் பரிந்துரைகளும் சமர்ப்பிக்கப்பட்டன. நிதி நல்கைகளும் தமிழ் வளர்ச்சித்துறையின் மூலமே பெறப்பட்டன. பல்கலைக் கழகத்தின் முக்கியத்துவம், சிறப்பு ஆகியவற்றை உணராத தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர், பல்கலைக்கழகத்தின் வேந்தராக விளங்குகின்ற ஆளுனரால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற துணைவேந்தர், பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களையும் தங்களுக்குக் கீழ் உள்ள துறை உறுப்பினர்களாகவே கருதுகின்ற நிலை இன்று உருவாகி உள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பல புகழ்பெற்ற பேராசிரியர்களுக்கு ஓய்வு ஊதியம் கூட கொடுக்க முடியாத நிலை உள்ளது.
கடந்த ஆட்சியின் போது, உலக தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் முக்கிய அங்கமான ஆய்வரங்கம், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சார்பில் நடத்தப்பட்டது. எனினும், தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு ஒதுக்க வேண்டிய, 100 கோடி ரூபாயை இனி வரும் காலங்களில் உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாடுகள் நடத்துவதற்கு, தமிழ் வளர்ச்சிக் கழகத்திற்கு வழங்கப்பட்டது.
எம்.ஜி.ஆர்., முயற்சியில் உருவானது தமிழ்ப் பல்கலைக்கழகம் என்ற ஒரே காரணத்திற்காக, கடந்த ஆட்சியில், எவ்வித வளர்ச்சிக்கும் இப்பல்கலைக் கழகத்தில் வித்திடப்படவில்லை.
இதுவரை நடந்த உலகத்தமிழ் மாநாடுகள், ஒரு பல்கலைக்கழகத்தின் தலைமையில் தான் நடத்தப்பட்டுள்ளன. உலக அறிஞர்களும் அதைத்தான் விரும்புவர். இதுவே இயல்பு. உலகப் புகழ் பெற்ற பேராசிரியர்களைக் கொண்டே இவை நடத்தப்படும்.
தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகின்ற பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஊதியம் அளிப்பதற்குக் கூட திண்டாட வேண்டிய நிலையில் பல்கலைக்கழகம் உள்ளது. ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பு ஏற்று தன் முதல் சட்டசபை உரையில், "தனித்தன்மை இழந்துவிட்ட தமிழ் பல்கலைக்கழகத்தை தரணிபோற்றும் நிலைக்கு உயர்த்துவோம்' என்று, அறிவித்தார்.தமிழ்ப் பல்கலைக்கழகம், தன்னிச்சையான தனித்தியங்கக்கூடிய ஓர் உயராய்வு மையமாக மாற்ற, இப்பல்கலைக்கழகத்தை, உயர் கல்வித்துறையின் கீழ் கொண்டு வந்து, ஆண்டுதோறும் இப்பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கும், ஊதியத்திற்கும் வழங்க வேண்டிய உரிய மானியத்தொகையை வழங்கி, உயர்வு பெறச் செய்தால் மட்டுமே, எம்.ஜி.ஆர்., கண்ட கனவை நிறைவேற்ற முடியும்.
மேலும், தமிழ்ப் பல்கலைக்கழகம், உயர் கல்வித்துறையில் இருந்தால் மட்டுமே நடுவணரசின் பல்கலைக்கழக மானியக்குழுவின் உரிய நல்கைகள் கிடைக்கும். பிற பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயலாற்ற முடியும். உயராய்வு மையமாக உருவாகவும் முடியும்.முதல்வர் நேரிடைப் பார்வைப் பட்டால் அன்றி எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட, தன்னிகரற்ற உயராய்வுப் பல்கலைக்கழகமான, தமிழ் பல்கலைக்கழகத்தின் நிலை தாழ்ந்து செல்ல வேண்டிய நிலைக்கு வந்துவிடும். சட்டசபையில், 110 விதியின் கீழ், தமிழ்ப் பல்கலைக் கழகத்தை, உயர் கல்வித்துறையின் கீழ் மாற்றி, தமிழுக்கும், தமிழ் பல்கலைக்கழக வளர்ச்சிக்கும் ஜெயலலிதா வித்திடுவார் என, தமிழறிஞர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.