http://i501.photobucket.com/albums/e...ps6cbeeef7.jpg
Printable View
ஜோ,
உங்களிடம் பழகியவன் என்ற முறையில் நீங்கள் என்ன காரணத்திற்காக ஒரு சிலவற்றை சொல்கிறீர்கள் என்று எனக்கு புரியும். அதனால்தான் rks அவர்களிடம் கூட சில விஷயங்களை தவிர்க்குமாறு சொன்னேன். அவர் பதில் சொன்ன விதம் உங்களை வேதனைப்படுத்தியிருக்கிறது என்பது இப்போதுதான் புரிந்தது. மன்னிக்கவும்.
நாம் எப்படி 2006 முதல் நண்பர்களோ அதே போன்று அரசியல் கருத்துகளில் நாம் இருவரும் நேர் எதிர் முனைகளில்தான் நிற்கிறோம் என்பதும் உண்மைதான். அது இங்கே பலருக்கும் தெரியும். ஆனால் அந்த கருத்து வேறுபாடு நமது பொதுவான அடிப்படை இழையான சிவாஜி ரசிகன் என்ற நிலைக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படுத்த நாம் அனுமதித்ததில்லை. நீங்கள் குறிப்பிட்டது போல் உங்கள தரப்பு வாதத்தை அது ஆதரவாக இருந்தாலும் சரி கண்டனமாக இருந்தாலும் சரி இங்கே பதிவு செய்ய நாங்கள் ஒரு நாளும் தடையாக இருக்க மாட்டோம். எப்போதும் போல் தொடருங்கள்!
அன்புடன்
அன்பு நண்பர் வினோத் சார்,
உங்கள் பதிலுக்கும் புரிதலுக்கும் நன்றி.
கோபால்,
பதிலுக்கு நன்றி. இதைதான் நானும் குறிப்பிட்டேன். உலகம் தெரியாத ஒன்னாம் கிளாஸ் பையனாக நேருவிற்கு முத்தம், விவரம் தெரியாத இரண்டாம் கிளாஸ் பையனாக போராட்டத்தில் பங்கேற்பு. என்ன செய்கிறோம் ஏது செய்கிறோம் என்று தெரியாமலே செய்ததை எல்லாம் அடிப்படையாக வைத்து வாதம் புரியக் கூடாது எனபதுதான் நான் சொன்னது. மற்றபடி நீங்கள் முன் வைத்த அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாத செயல்களுகெல்லாம் பதில் சொல்லி வாதத்தை வளர்க்க விரும்பவில்லை.
அன்புடன்
RKS, உங்கள் உழைப்பு நடிகர் திலகத்தைப் பற்றிய பல புதிய செய்திகளை கொண்டு வருவதில் பயன்படுத்தபட வேண்டும் என்று விரும்புகிறேன். உங்களிடம் அலைபேசியில் சொன்னது போல பதிலுக்கு பதில் என்று அனைத்து பதிவுகளுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவை இந்த திரியில் வந்திருந்தாலும் சரி வேறு திரிகளில் வந்திருந்தாலும் சரி. நான் இப்படி சொல்வதற்கு பல காரணங்கள் இருக்கிறது.
மேலும் இருபதுகளின் வயதில் இருக்கும் ஏதோ ஒரு பெண் எழுத்தாளர் ஏதோ எழுதினர் என்பதற்காக நாம் பதில் சொல்ல வேண்டிய தேவையில்லை. பலருக்கும் பல கருத்துக்கள் இருக்கும். அது அவரவர் மனோநிலை வாழ்க்கை முறையை பொருத்தது. அது சரியா தவறா என்பதெல்லாம் நாம் யோசிக்க வேண்டிய தேவையில்லை. இணையதளத்தில் பலரும் பல விஷயங்களை அவரவர் வசதிக்கேற்ப பதிவு செய்வார்கள். அவற்றுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருந்தால் நமக்கு அதற்குதான் நேரம் சரியாக இருக்கும். அது போன்றே சில sensitive மொழி அரசியல் சம்மந்தப்பட்ட விஷயங்களை இங்கே தவிர்த்து விடலாம்.
சரியான முறையில் புரிந்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.
அன்புடன்
ராகவேந்தர் சார் ஒரு விஷயத்தை பதிவு செய்திருக்கிறார். அதே புள்ளி விவரங்களை நானும் தொகுத்திருந்தேன். ஆனால் அவை வேறு காரணத்திற்க்காக. அது என்னவென்றால் சில நாட்களுக்கு முன்பு ஏன் ஒரு சில மாதங்களாகவே ஒரு சிலர் இந்த திரி மோசமாகி விட்டது, தரமில்லை, பார்வையாளர் இல்லை, படிப்பவர்கள் இல்லை யாரும் சீண்டுவது இல்லை என்று தர சான்றிதழ் அதிகாரிகள் போல் இங்கே பேசினார்கள். குழப்பங்களை விளைவிப்பதற்காகவும் அதன் மூலம் திரியை தடம் புரள செய்ய வேண்டும் என்ற எண்ணத்தினாலும் செய்யப்பட செயல். ஆனால் 2006 முதலே இதை நான் சந்தித்து வருவதால் அது என்னை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. ஆனால் நம்முடைய திரி நண்பர்கள் சிலருக்கேனும் ஏதாவது சந்தேகம் தோன்றியிருந்தால் அதை தீர்ப்பதற்கு இது உதவியாக இருக்கும் என்பதனால் இதை குறித்து வைத்தேன்.
உண்மை நிலவரம் என்னவென்றால் இன்றைக்கும் கூட இந்த ஹப்பில் இயங்கும் எந்த திரியையும் விட அதிக வாசகர்கள் இருப்பது, அதிக ஹிட்ஸ் கிடைப்பது நமது நடிகர் திலகம் திரிக்குதான். இன்றைய நாளில் தமிழ் திரையுலகில் limelight -ல் இருப்பவர்கள் என்று சொல்லப்படும் பல நடிகர்களுக்கும் இங்கே திரி இருக்கிறது. அவற்றையெல்லாம் கூட பின் தள்ளி அதிக வாசகர்களை கொண்டுள்ள ஒரே திரி நமது நடிகர் திலகம் திரிதான். காரணம் இங்கே வாசிக்க வருபவர்கள் அதிகம். நமது திரி தொய்வு கண்டிருக்கிறது என்று வேறு இடங்களில் பேசிய ஒரு சிலருக்கும் இந்த விவரங்களை முன் வைக்கிறேன். வெளியே இருக்கும் நம்முடைய ஒரு சில நண்பர்களும் நமது திரிக்கு மீண்டும் பங்களிப்பு செய்யும்போது இது மேலும் அதிகரிக்கும்.
திரையுலகில் மட்டுமல்ல திரியுலகிலும் முதல்வர் என்றும் நமது நடிகர் திலகம்தான். எனவே இதை மனதில் கொண்டு தேவையற்ற விவாதங்களை புறந்தள்ளி திரிக்கு மேலும் சுவையூட்டும் வண்ணம் பங்களிக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
கோவை ராயலில் அழகாபுரி சின்ன துரை ஆனந்த் அவர்களின் வெற்றி உலா தொடர்கிறது. இன்று வரை மொத்த வசூல் ரூபாய் 53 ஆயிரத்தை தாண்டியிருக்கிறது.
நடிகர் திலகத்தின் பல்வேறு படங்களின் வெற்றி அணிவகுப்பு தொடர்கிறது.
வரும் ஆகஸ்ட் 15 வெள்ளி முதல் மதுரை சென்ட்ரலில் சிபிஐ ஆபிசர் ராஜன் வெற்றி பவனியை துவக்குகிறார். தங்க சுரங்கம் சென்ட்ரலில் ஆகஸ்ட் 15 முதல் வெளியாகிறது.
அதே ஆகஸ்ட் 15 சென்னை மகாலட்சுமியில் Dr ரமேஷ் வெற்றி விஜயம். ஆம், அண்ணன் ஒரு கோவில் வெளியாகிறது.
அதே ஆகஸ்ட் 15 அன்று கோவை டிலைடில் நடிகர் திலகம் இரட்டை வேடங்களில் நடிக்கும் சந்திப்பு ரிலீஸ்.
அதே ஆகஸ்ட் 15 அன்று நெல்லை சென்ட்ரலில் நடிகர் திலகம் வேடங்களில் ஜொலித்த வெள்ளை ரோஜா வெளியாகும் என தெரிகிறது.
சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.
அன்புடன்
சரிதான்.காலம் காலமாக யார் படிக்க வேண்டும் ,யார் படிக்க கூடாது என்ற கூட்டம்.சமஸ்க்ரிதம் சில உதுடுகள் உச்சரித்தால் அசுத்தமாகி விடும் (தேவ பாஷை) என்று தடை செய்து அந்த நல்ல மொழியை சாகடித்த கூட்டம்,கடல் தாண்டினால் தோஷம் என்று மனிதர்களை ஊருக்குள்ளேயே அடக்கி வைத்த கூட்டம்.தாய் மொழி காத்தவர்களை இகழ்வது.....
இந்த புரிதல் இருந்திருக்காது என்று வேண்டுமானால் சொல்லுங்கள்.இப்போதைய கோபாலை ஒப்பிட்டால் ,அப்போதைய கோபாலுக்கு விவரம் பத்தாமல் இருந்திருக்கலாம்.ஆனால் இப்போதும் ,இங்கு பதிவிடும் பல வளர்ந்த குழந்தைகளை விட ,9 வயதில் ஜெயகாந்தன் ,12 வயதில் அசோக மித்திரன்,ஜானகிராமன்,கணையாழி ,18 வயதில் பரீக்ஷா என்ற அறிவு தேடல் எனக்கு உண்டு. என் அன்னை அந்த கால பெண் பட்டதாரிகளுள் ஒருவர்.என் கூட இருந்த என் அம்மாவின் கசின் எங்களுக்கு நிறைய சொல்லி கொடுத்த ,படிக்கும் பழக்கம் உள்ளவர்.என் தங்கை சிங்கப்பூர் எழுத்தாளர். எனக்கு ,முழு விவரம் தெரியாவிட்டாலும் ,2 வது படிக்கும் போது , என்னை அந்த போராட்டத்தில் கலக்க அனுமதி கொடுத்தவர் என் தாய்.
அதே தாய் என்னை பிற மொழி அறிவு அவசியம் என்றும் தூண்டினார். எனக்கு பலதர பட்ட படிப்புகள் கை வந்த அளவு மொழிகள் கை வரவில்லை.ஆனால் அவை என் முன்னேற்றத்தை எந்த விதத்திலும் தடுக்கவில்லை.ஊர் விட்டு மும்பை,டெல்லி போனவர்கள் ,மூன்றே மாதத்தில் புரிந்து பேசும் மொழியை ஒவ்வொரு தமிழனும் படித்து அவதி படுவதை விட,ஆங்கிலம் படித்து,டாலர் உடன் உலகை வெல்லலாம்.
சரி சரி ,மன்னவன் வந்தானடி ,எங்கள் தங்க ராஜா ,கூடிய விரைவில்.(தமிழில்தான். ஹிந்தியில் அல்ல.)