ரவிச்சந்திரன்,
உங்க பதிலுக்கு நன்றி. நேத்து நான் போட்ட பதிவை நீக்கிவிட்டு அமைதியான வழியில் செல்வோம் என்று சொல்கிரீர்கள். சரி நீங்க சொல்றது மாதிரியே , சிவாஜி கணேசன் திரியில் புரட்சித் தலைவர் பற்றி வந்திருக்கும் மோசமான விமர்சனத்துக்கு அமைதியான வழியிலே பதில் சொல்லுகின்றேன்.
பாயிண்ட்டாகத்தான் சொல்லப்போகிறேன். யாரயும் தப்பாக விமர்சிக்கவில்லை.
புரட்சித் தலைவர் நடித்த நவரத்தினம் மாபெரும் தோல்விப் படம் என்று சிவாஜி கணேசன் திரி பாகம் 19 ,பக்கம் 223, பதிவு நம்பர் 2230-ல் வெளியாகி உள்ள பதிவுக்கும்
புரட்சித் தலைவர் பற்றியும் அவரது ஆட்சி பற்றியும் மோசமாக விமர்சித்து சிவாஜி கணேசன் திரி பாகம் 19, பக்கம் 224, பதிவு நம்பர் 2237-ல் வெளியாகி உள்ள பதிவுக்கும்
என்னோட அடுத்த அடுத்த பதிவுங்களில் பதில் சொல்லப் போகிறேன். புரட்சித் தலைவர் பற்றி முகநூலில் தப்பான தகவல் பரப்பி வரும் போறாமைக்காரங்களுக்குத்தான் இந்த பதில்.
ஞாயமாகத்தான் எழுதி பதில் சொல்கிறேன். படிச்சு பாருங்கள். இதில் தப்பு எதுவும் இல்லை. அதனால், இதையும் நீக்காதீர்கள்.
புரட்சித் தலைவர் பற்றி மோசமாக வந்திருக்கும் பதிவுகளை சிவாஜி கணேசன் திரியில் அவர்கள் நீக்கினால், நீங்களும் அந்த விமர்சனத்துக்கான என் பதில் பதிவை நீக்குங்கள்.
அவர்கள் பதிவை நீக்காவிட்டால் நீங்களும் என் பதிவை நீக்காதீர்கள்.
இது எதிர்கால தலைமுறைக்கு புரட்சித் தலைவரின் பக்தராக நீங்கள் செய்கின்ற கடமை. நீங்களும் புரட்சித் தலைவரின் பக்தர் என்பதையும் அந்த மனிதப் புனிதரின் புகழுக்கு கலங்கம் ஏற்படுத்த அனுமதிக்கலாமா என்பதை தயவு செஞ்சு நினைச்சுப் பாருங்கள். நீங்களும் நானும் புரட்சித் தலைவரின் ஒரே ரத்தத்தின் ரத்தம்.
நீங்கள் சொன்னபடி அமைதியான வழியில் ஞாயமாக தவறான வார்த்தை இல்லாமல் என் பதிவு தொடரும். மறுபடியும் சொல்கிறேன். அவர்கள் பதிவை அந்த திரியில் நீக்கினால் தவிர என் பதிவை நீக்காதீர்கள்.