Quote:
சுட்டித் தமிழ்
தமிழ் மொழிக்கு கவுரவம் சேர்க்கும் விதத்தில் விஜய் டிவி நடத்தி வரும் ``தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு சுட்டிகள்'' நிகழ்ச்சி தமிழகத்தின் சிறந்த இளம் பேச்சாளரை தேர்வு செய்து வருகிறது.
தமிழ்நாட்டில் சேலம், கோவை, திருச்சி, மதுரை, நெல்லை மற்றும் சென்னை ஆகிய இடங்களில் இதற்கான நேர்முகத் தேர்வு நடத்தி அதில் சுமார் 160 குழந்தைகள் தேர்வானார்கள். இறுதியாக 50 சிறுவர்களுடன் போட்டி துவங்கியது.
இறுதிப்போட்டி சென்னை அண்ணா கலையரங்கத்தில் மூத்த தமிழ் அறிஞர்கள், தமிழ் சான்றோர்கள், ஆன்றோர்கள், தமிழ் பேராசிரியர்கள் முன்னணியில் நடைபெற்றது.
கணேஷ்வர், கார்த்திகேயன், பாலகுமரன், ஆகாஷ், நரேன், கவுதம், குறிஞ்சிக் கொற்றவன் ஆகியோரே இறுதிச்சுற்றின் 6 போட்டியாளர்கள். இவர்களில் ஒருவருக்குத்தான் வெற்றி மகுடம். சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சிவகுமார், கவிஞர் பா.விஜய், நக்கீரன் கோபால், கவிஞர் ஞானி மற்றும் சுப.வீரபாண்டியன், பர்வீன் சுல்தானா ஆகியோர் பங்குபெற்றனர்.
இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் நெல்சன்.
`தமிழர் வாழ்வியல்', `தமிழர் கலை', `தமிழர் கொடை', `தமிழர் வீரம்', `தமிழர் பண்பாடு, `தமிழர் இலக்கியம்' ஆகிய தலைப்புகளின் கீழ் இந்த சிறுவர்கள் பேச இருக்கின்றனர். இந்த சிறுவர்கள் மேடை ஆளுமை தலைப்பை எங்ஙனம் புரிந்து கொண்டுள்ளனர் என்ற அடிப்படையில் வெற்றியாளர் தேர்வாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒளிபரப்பு நேரம் நாளை காலை 9 மணி.