Originally Posted by
vasudevan31355
தம்பி திருடனாகி விட்டான் என்று தெரிந்து மனம் புழுங்கி ஜெமினி தன்னுடைய சைக்கிள் ரிக்ஷாவில் அவன் 'எதிர்கால' நிலை குறித்து புலம்பி பாடும் பாடல். காதல் மன்னர் ரிக்ஷா ஓட்டுவதிலும் மன்னர்தான். வேஷப் பொருத்தமும் களை கட்டுகிறது. (குறிப்பாக மடித்து விடப்பட்ட ரிக்ஷாவலாக்கள் பேன்ட்)
ஓடத்தைப் பார்த்த பின்பும்
வெள்ளத்தில் நீந்திச் சென்றால்
சொந்தத்தில் அறிவேது
என்ற தத்துவ விளக்கம்.
தம்பி மீதான பாசத்தையும், அவன் கெட்டு குட்டிச் சுவராகி விட்டானே என்ற வருத்தத்தையும், அவரவர்கள் பலனை அவரவர்கள் அனுபவித்தே தீர வேண்டும் என்ற விரக்தி வேதனையையும் நன்றாக காட்டி இப்பாடலில் வாழ்ந்திருப்பார் ரிக்ஷாக்கார ஜெமினி.