நீங்கள் சொல்வது உண்மை. நானும் பலசமயம் குழம்பிப்போனதுண்டு. இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், அபி வெளிநாட்டிலிருந்து திரும்பியதும் முதல்முறையாக அவளைசந்திக்க தொல்காப்பியன் அலுவககம் வரும்போது, உள்ளே அபி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கம்பெனி ‘போர்டு மீட்டிங்’ நடந்துகொண்டிருக்கிறது. அந்த மீட்டிங்கில் இருப்பவர்கள் அபி, விஸ்வநாதன், ராஜாமணி (?), ஆர்த்தி(?), கிருஷ்ணன்(?). அபோது உள்ளே செல்ல முற்படும் ‘கம்பெனியின் டைரக்டர்களில் ஒருவரான’ தொல்காப்பியனிடம், உள்ளே மீட்டிங் நடப்பதாகவும், அதனால் யாரையும் உள்ளே விடக்கூடாதென்று அபிமேடம் சொன்னதாகவும் (தொல்காப்பியனிடம் அதுவரை சம்பளம் வாங்கிக்கொண்டிருக்கும்) ஒரு பெண் குமாஸ்தா தடுப்பது.Quote:
Originally Posted by ksen