-
டியர் பார்த்த சாரதி,
தங்களுடைய பாராட்டுக்களுக்கு மிகுந்த நன்றி. சொல்லப் போனால் இது நம்மை நாமே பாராட்டிக் கொள்வது போலாகும். அனைத்தும் நடிகர் திலகத்திற்கே சமர்ப்பணம்.
தங்களுக்கு மிகுந்த மன உறுதி அதிகம் என எண்ணுகிறேன். அதனால் தான் மற்றவர்களுக்கு அந்த வேடத்தைப் போட்டு, அதைப் பார்க்கும் துணிவும் உள்ளது. பாராட்டுக்கள்.
அன்புடன்
-
http://i872.photobucket.com/albums/a...suda/KKKNT.jpg
29.07.1960 - பந்துலு-நடிகர் திலகம் என்ற கூட்டணியின் துவக்க காலத்தை நினவில் நிறுத்தும் நாள். எத்தனை அவதாரம் யார் போட்டாலும், எத்தனை ஒப்பனைகள் செய்தாலும் அனைத்திற்கும் முன்னோடியான விஞ்ஞானியின் பாத்திரத்தில் நடிகர் திலகம் மிக அழுத்தமாக முத்திரை பதித்த திரைப்படம் வெளியான நாள். இந்த படத்தைப் பார்த்த ரசிகர்கள் புண்ணியம் செய்தவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். இது வரை பார்க்காதவர்கள், முதல் முன்னுரிமை தந்து எப்பாடு பட்டாவது பார்த்தே தீர வேண்டும். பிற்காலத்தில் உலகத்தில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்து பிரம்மாண்டமான விஸ்வரூபத்தினை நடிகர் திலகம் எடுப்பதற்கு முன்னோடி இப்படம். கிட்டத் தட்ட 10 நிமிடக் காட்சி. குழந்தைகளோடு அவர் பங்கெடுத்து நடித்த காட்சி.... நெஞ்சை விட்டு அகலாது... அதுவும் இறக்கும் தருவாயில் அவர் காட்டும் யதார்த்தமான நடிப்பு ... இப்போது கூறப்படும் அத்தனை விதமான இயல் நடிப்புகளுக்கும் முன்னுதாரணம்...
அத்திரைப்படம் ... குழந்தைகள் கண்ட குடியரசு
தயாரிப்பு - பத்மினி பிக்சர்ஸ்
இயக்கம் - பி.ஆர்.பந்துலு
கல்கி 17.04.1960 இதழில் வெளிவந்த விளம்பரம்
http://i872.photobucket.com/albums/a...ereleasefw.jpg
ஆனந்த விகடன் 31.07.1960 தேதியிட்ட இதழில் வெளிவந்த விளம்பரம்.
http://i872.photobucket.com/albums/a...dreleasefw.jpg
இப்படத்தின் பாட்டுப் புத்தகத்தின் முகப்பு
http://www.nadigarthilagam.com/songb...ers/kkksbc.jpg
அன்புடன்
பி.கு. முதலில் இப்பதிவினை இடும் போது ஆண்டு 1959 என்று தவறுதலாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. சுட்டிக் காட்டிய பம்மலாருக்கு நன்றிகள். பாகப் பிரிவினை படம் எண்ணத்தில் நிழலாடிக் கொண்டிருந்த காரணத்தால் 1959 என்ற ஆண்டு தானாகவே வந்து அமர்ந்து விட்டது. தவறுக்கு மன்னிக்கவும். சரி செய்யப் பட்டு விட்டது.
-
டியர் ராகவேந்திரன் சார்,
தங்களின் அபரிமிதமான சேவைக்குமுன் அடியேனுடையது எம்மாத்திரம் !
தாங்கள் தொடர்ந்து அளித்து வரும் உயர்ந்த பாராட்டுக்களுக்கு எனது உளங்கனிந்த நன்றிகள் !
தாங்கள் பதிவிட்டுள்ள "திருவருட்செல்வர்" விஷுவல்கள் அருமையிலும் அருமை என்றால் "குழந்தைகள் கண்ட குடியரசு" நிழற்படங்கள் அற்புதத்திலும் அற்புதம் !
பெங்களூரூவில் நடைபெற்ற நமது இதயதெய்வத்தின் பத்தாம் ஆண்டு நினைவாஞ்சலி நிகழ்ச்சியின் நிழற்படங்களை நேர்த்தியோடு வழங்கிய திரு.குமரேசன் பிரபு அவர்களுக்கும், அதனை இங்கே அழகுற பதிவிட்ட தங்களுக்கும் கனிவான நன்றிகள் !
டியர் கோல்ட்ஸ்டார் சதீஷ்,
பாராட்டுக்கு நன்றி !
நமது நடிகர் திலகம் என்றென்றும் அள்ள அள்ளக் குறையாத அக்ஷயபாத்திரம் [அமுதசுரபி].
அனைத்துப் போற்றுதலும் நமது அய்யனுக்கே !
டியர் ஜோ சார்,
தாங்கள் அளித்த புகழுரைக்கு சிரம் தாழ்த்திய நன்றி !
ஒரு துக்ளக் 'சோ' மட்டுமா நடிகர் திலகத்தின் விசிறி, பற்பல 'ஜோ'க்களும் தானே !
தங்களின் சொந்த ஊரான நாஞ்சில் நகரமே என்றென்றும் அசைக்க முடியாத நடிகர் திலகத்தின் கோட்டையாயிற்றே !
தங்களது கூற்றுப்படியே "ஜோ" என்ற திருப்பெயர் கொண்டவர்களெல்லாம், 'ஜோஜோஜோஜோஜோலிஜோ' என 'மோகனப்புன்னகை' புரிந்து கோமகன் சிவாஜிக்குத் தான் தங்களது அன்பு உள்ளங்களை அளிப்பார்கள் என்பது புலனாகிறது.
டியர் ஜேயார் சார், பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நெஞ்சார்ந்த நன்றி !
டியர் பார்த்தசாரதி சார், பாராட்டுக்கு நன்றி !
டியர் கிருஷ்ணாஜி,
தங்களது பாராட்டுக்கு பசுமையான நன்றி !
உதயம் மட்டுமே கொண்ட கலைச்சூரியனாயிற்றே, நமது நடிகர் திலகம் !
அன்புடன்,
பம்மலார்.
-
"குழந்தைகள் கண்ட குடியரசு" விஞ்ஞானிக்கு 52வது ஜெயந்தி
(நடிகர் திலகம் கௌரவத் தோற்றத்தில் கலக்கிய திரைக்காவியம்)
[29.7.1960 - 29.7.2011]
பொக்கிஷப் புதையல்
விஞ்ஞானியாக...
http://i1094.photobucket.com/albums/...malar/KKK1.jpg
http://i1094.photobucket.com/albums/...malar/KKK2.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம்
[உதவி : நல்லிதயம் திரு.கே.நவீன்]
http://i1094.photobucket.com/albums/.../GEDC4195a.jpg
அன்புடன்,
பம்மலார்.
-
சென்னை மகாலட்சுமி திரையரங்கில் இன்று 29.07.2011 முதல் தினசரி 3 காட்சிகளாகத் தொடர்கிறது, நடிகர் திலகத்தின் உன்னதத் திரைக்காவியம்,
http://moviegalleri.net/wp-content/g..._movie_001.jpg
-
குழந்தைகள் கண்ட குடியரசு திரைக்காவியத்தின் தெலுங்கு பதிப்பில் நடிகர் திலகத்தின் பகுதி
அன்புடன்
-
1 Attachment(s)
Thank u raghavendran Sir for that beautiful song
-
1 Attachment(s)
-
டியர் பம்மலார் &
டியர் ராகவேந்தர்,
காணக்கிடைக்காத 'குழந்தைகள் கண்ட குடியரசு' திரைப்பட ஸ்டில்கள், மற்றும் விளம்பரங்கள் மிக அருமை.
அந்த ஸ்டில்களூக்குக் கீழே மறக்காமல் குறிப்பிட வேண்டிய ஒரு விஷயம்....
"கிட்டத்தட்ட 100 வய்துக்காரராகத் தோற்றம் தரும் அந்த வேடத்தில் நடித்தபோது நடிகர்திலகத்தின் வயது 31 மட்டுமே"
அந்தப்படம் நான் பார்த்திருக்கிறேன் (தூரதர்ஷனில் ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலைப்படமாக காண்பிக்கப்பட்டது). வெறும் வயதான மேக்கப் மட்டுமல்ல. அந்த வயதுக்குரிய பெர்பாமென்ஸும் அட்டகாசமாக இருக்கும்.
நடிகர்திலகம் ஒரு யுகக்கலைஞர் என்பதை நிரூபிக்கும் இன்னொரு படம்.
-
பம்மலார் சார்,
தில்லானா மோகனாம்பாளைத் தொடர்ந்து திருவருட்செல்வர் விளம்பர வரிசையும், அப்பர் வேடத்துக்கான மேக்கப் போடும் அபூர்வக் காட்சித்தொகுப்புகளும் சூப்பர். திருவருட்செல்வர் மற்றும் அதில் வரும் அப்பர் காட்சிகள் என்றால், சிறுவயதில் பள்ளி வகுப்பில் எங்கள் தமிழாசிரியராக இருந்த திரு. கா.சுப்பிரமணியன்தான் நினைவுக்கு வருவார்.
வகுப்பில் அவர் பெரியபுராணத்தில் வரும் அப்பூதியடிகள் படலத்தைநடத்திக்கொண்டிருந்தபோது. அடிகளின் மகனை பாம்பு தீண்டி அவர் உயிர் துறக்கும் இடத்தையும் அப்பர் (திருநாவுக்கரசர்) பதிகம் பாடி அச்சிறுவனை எழுப்பும் காட்சியையும் மிக உருக்கமாக விளக்கியவர், இறுதியில் சொன்னார்... "நான் இவ்வளவு தூரம் விளக்கமாக நடத்தியதை விட, இந்தக்காட்சியை திருவருட்செல்வர் படத்தில் சிவாஜி நடித்திருப்பார். போய்ப்பாருங்க. நான் நடத்தியது கூட உங்களுக்கு மறந்துவிடும். ஆனால் அவர் நடிக்கும் அந்தக்காட்சி உங்களுக்கு எப்போதும் மனதில் நிற்கும். என்னடா ஒரு ஆசிரியரே சினிமா பார்க்கச்சொல்றாரேன்னு நினைக்காதீங்க. இந்த மாதிரிப்படங்களைப் பார்க்கும்படி சொல்வதில் தவறில்லை. நான் பார்க்கச்சொன்னேன்னு உங்க அப்பா அம்மாகிட்டே சொல்லிட்டே போய்ப்பாருங்க" என்றார். ஆனால் அவர் சொன்னபோது அந்தப்படம் ஏற்கெனவே ஓடிமுடிந்து தியேட்டர்களைவிட்டுச் சென்று விட்டது. நான் உட்பட ஒருசில மாணவ்ர்கள் மட்டு ஏற்கெனவே பார்த்திருந்தோம். பெரும்பாலான மாணவர்கள் பார்த்திருக்கவில்லை.
அப்போதெல்லாம் வீடியோ, சிடி எல்லாம் ஏது?. அதனால் சில மாதங்கள் கழித்து திருவருட்செல்வர் மீண்டும் ஒருவாரம் மட்டும் திரையிடப்பட்டபோது எல்லா மாணவர்களும் கூட்டமாகப் போய் திருவருட்செல்வரைப் பார்த்து மகிழ்ந்தோம்.
தமிழாசிரியர் திரு சுப்பிரமணியன் அவர்கள் தற்போது உயிருடன் இல்லை. இப்போதும் இப்படம் பார்க்கும்போதெல்லாம் அவருடைய நினைவு வரும். குறிப்பாக திருநாவுக்கரசர் படலம் வரும்போது.