Originally Posted by
mr_karthik
அன்புள்ள பம்மலார் சார், வாசுதேவன் சார் மற்றும் ராகவேந்தர் சார்....
எனது பதிவுகளைப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி.
பம்மலார் அவர்களே, தாங்கள் தவணைமுறையில் தந்துகொண்டிருக்கும் 'சந்திப்பு' வெற்றிக்காவியத்தின் விளம்பரப்பதிவுகள் அனைத்தும் சூப்பர். ஒன்றையொன்று மிஞ்சுகின்றன. ராகவேந்தர் அவர்கள் சொன்னதுபோல, 80க்கு முன்பே தலைவரின் சாதனைகள் முடிந்துவிட்டதுபோல பரப்பப்பட்டு வரும் மாயையை இவை தகர்த்து வருகின்றன. 'சந்திப்பு' வெள்ளிவிழாப்படம் என்பது நம்மில் பலருக்கே தெரியவில்லை என்பதுதான் சோகம். அந்த குறையை தங்கள் ஆவணங்கள் போக்கி வருகின்றன.
எங்க மாமா பற்றி பதிவுகள் இடப்படும் இவ்வேளையில் 'எங்க மாமா'வின் ஆவணப்பதிவுகளையும் தரலாமே. நம்முடைய வனவாச காலத்தில் இடம்பெற்ற படங்களில் அதுவும் ஒன்றல்லவா?. தங்களின் 'பராசக்தி' மறுவெளியீட்டு விளம்பரம் அட்டகாசம். மறுவெளியீடுகளின் விளம்பரங்களையும் தாங்கள் பத்திரப்படுத்தி வைத்திருப்பது வியக்க வைக்கிறது.
கலக்குங்கள்.....