http://i45.tinypic.com/21c6js.jpg
Printable View
இனிய நண்பர் *திரு ராகவேந்திரன் சார்*
மக்கள் திலகத்தின் படங்களின் வீடியோ *- பட பட்டியல் தொகுப்பு அருமை . உங்களின் தகவலுக்கு *நன்றி .
இனிய நண்பர் திரு ஜெய் சார்
மக்கள் திலகத்தின் கட்டுரைகள் மிகவும் அருமை .
நிழற் படங்களின் தொகுப்புகள் அருமை .
450 பதிவுகள் .. அசராத உங்களின் உழைப்பு பாராட்டுக்குரியது .
தொடர்ந்து அசத்துங்கள் ஜெய்
காலத்தை வென்ற எம்ஜிஆர் . . .
மக்கள் திலகம் எம்ஜிஆர் உயிரோடிருந்தவரை அவரின் கருத்துக்கும் கொள்கைக்கும் வேண்டாதவர்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு வெளியேதான் இருந்திருக்கின்றனர், ஆட்சியிலும் சரி மற்ற விசயங்களிலும் சரி. இது மறுக்கப்பட முடியாத உண்மை.
அவரின் அழகான தோற்றத்தினால் மக்கள் அவர்பால் கவரப்படுகின்றனர் என சிலர் எண்ணியிருக்கக்கூடும். அதனால், இப்படி நினைப்போர் எதிர் தரப்பில் இருந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆயினும், அழகுக்கும் அப்பாற்பட்ட பல அரிய, உன்னதமான கொள்கைகளைக் கொண்டவர் எம்ஜிஆர் எனத் தெரிந்ததனால்தான் பெரும்பாலோர் அவரைத் தங்களின் இதயதில் வைத்துப் பூஜிக்கிறார்கள்.
http://i48.tinypic.com/x4gaqt.jpg
அவர் காலமான பின், அவரின் உயிலைப் படித்து உள்ளம் உருகி அதனால் ஈர்க்கப்பட்டோரும் உண்டு. ஊடல் நலக் குறை உள்ளோருக்கு அவர் விட்டுச்சென்றது போல் வேறு யாரேனும் செய்யக்காணோம். வாய் நிறைய பலர் பேசலாம். செயலில் காட்டி சிகரத்தைத் தொட்டவர் பொன் மனச் செம்மல் எம்ஜியார் அவர்கள் மட்டுமே.
தனி நாடு கோரி பல இடர்பாடுகளில் சிக்கித் தவித்த இலட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்களுக்கு நல்லதொரு தீர்வு ஏற்படும் என பெரிதும் நம்பினார். ( பின்னாளில், அவர் ஆட்சியில் இல்லாதபோது ஏற்பட்ட போரைத் தடுக்க முடியாது அந்த இலட்சத்துக்கும் அதிகமானோர் உயிர் பலியை பார்க்க நேர்ந்தது தமிழகம்).
காலத்துக்கேற்ப தன்னை புதுமையாக காட்டியவர் எம்ஜிஆர். ராஜா ராணி பாணியிலான காலங்களில் இருந்து சமூக படங்களில் 'பேண்ட் சூட்' என கண்களைக் கவரும் வண்ணம் திரையில் தோன்றி பார்ப்போரைக் கவர்ந்தவர் அவர்.
“ நான் உங்கள் வீட்டுப் பிள்ளை….” ஏன அவர் பாடியபோது, அவரை தங்கள் வீட்டுப்பிள்ளையாக எண்ணி உள்ளம் குளிர்ந்த பெரியோர் பலர்.
60ம் ஆண்டுகளில், எனக்கு விவரம் தெரிந்து கண்கூடாக நான் கண்ட உண்மை இது. அவர் அங்கே செய்யும் ஒவ்வொரு நல்ல விசயமும் இங்கே நமது நாட்டிலும், வேறு பல அயல் நாடுகளிலும் எதிரொலித்தது. அதுவே அவரின் புகழை உச்சிக்கு கொண்டு சென்று சேர்த்தது. இது ஒரு நடிகராக இருப்பதனால் மட்டுமே சாதிக்க முடியாத ஒன்று. அதையும் தாண்டி உயர்தர எண்ணம் கொண்டோர் மட்டுமே இதுபோன்ற இமாலய சாதனைகளைச் செய்ய இயலும்.
இப்போது நம் நாட்டில் உள்ள மற்ற இனத்தவரிடம் தங்களுக்கு பிடித்த ஒரு நடிகரை சொல்லச் சொன்னால், அவர்கள் சொல்வதில் தமிழ் நடிகர்கள் பெயர் இடம் பெறுவது அபூர்வமானாதாக இருக்கும். சிலருக்கு ரஜினியைத் தெரிந்திருக்கலாம். ஆனல், அன்று கிட்டத்தட்ட அனைவருக்கும், அதாவது மலாய், சீன இனத்தவருக்கும் எம்ஜிஆரைத் தெரிந்திருந்தது. தோட்டப் புறங்களில் திரையிடப்பட்ட அவர் படங்களை சீனர்களும் மலாய்க்காரர்களும் ஆர்வத்தோடு அமர்ந்து கண்டு களித்தனர். இது மக்கள் திலகத்துக்கே உரிய தனிச் சிறப்பு.
அவரின் பெரிய இடத்துப் பெண் திரைப்படத்தைப் போல் இன்றும் வெளிவந்து கொண்டிருக்கும் படங்கள் பல. அதே கதை, அதே பாணியிலான நடிப்பு. திரைக்கதைகளில் மட்டுமல்ல, சினிமாவில் அவர் கையாண்ட பல விசயங்களையும் பின்பற்றுவோர் இன்று நிறைய உண்டு. அப்படி பின்பற்றி வெற்றிபெற்றோரும் அதிகம்.
அன்றைய நடிகர்களில் சுறுசுறுப்பாக திரையுலகில் ஆட்சி புரிந்தவர் பொன்மனச் செம்மல் அவர்கள். ஸ்டன்ட் நடிகர்களின் வயிற்றுப் பிழைப்புக்காகவே தனது எல்லாப் படங்களிலும் சண்டைக் காட்சிகளை வைத்த ஒரே நடிகர் இவர்தான் எனலாம். மனிதாபிமானத்தின் காவலராக இறுதி வரை இருந்தார்.
எம்ஜிஆர் பாடல்களில் புத்துணர்வு பெருகும். ஆது காதல் பாடல்களாக இருந்தாலும் சரி, நல் அறிவுரை கூறும் பாடல்களாக இருந்தாலும் சரி. எதிர் மறை எண்ணங்கள் எங்கேயும் இல்லாது பார்த்துக் கொண்டார். மற்ற நடிகர்களைப் போல ஒரு சில பக்கங்களில் இவரின் இசையார்வத்தை வெளிப்படுத்திவிட முடியாது. பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, காதுக்கினிய இசையுடன் திரையில் ஒலிக்கச்செய்த மாபெரும் கலைஞர் இவர்.
'டி.எம்.எஸ்ஸின்' குரல் வலிமையை வெளிக்கொணர்ந்தது எம்ஜிஆருக்காக அவர் பாடிய பாடல்களே. அதன் பின்னர் மற்ற நடிகர்களுக்கு குரல் கொடுத்து பேரும் புகழும் பெற்றார். அதே நேரத்தில் எம்ஜிஆர் யாரையும் சார்ந்து அவர்களது கட்டுப்பாட்டில் இருந்ததில்லை. இதற்கு உதாரணமாக இன்றும் நம்மிடையே கம்பீரமாக உலாவருபவர்தான் எஸ் பி பாலா.
‘கண் கவரும் சிலையே, காட்சி தரும் கலையே
கவி பிறவா முன் பிறந்த தமிழகத்தின் நிதியே…” எனும் மென்மையான குரலும் ஒத்துப்போகும்.
‘பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங்கீற்று….’ ஏனும் வித்தியாசமான குரலும் ஒத்துப்போகும்.
இதற்குக் காரணம், எம்ஜியாரின் பாடல்களை யார் பாடினாலும், படத்தைப் பார்த்த அடுத்த சில தினங்களில் அந்தப் பாடலை எம்ஜிஆர் அவர்களே பாடுவது போல தோன்றியதால் தான். அப்படி ஒரு மகிமையை எம்ஜிஆர் கொண்டிருந்தார்.
பூவோடு சேர்ந்து தங்களை மணக்கச்செய்தவர் பலர். அவர்கள் அனைவரும் நன்றியோடு பார்ப்பது பொன் மனச் செம்மலை. இப்போதும் ‘திரும்பிப் பார்க்கிறேன்’ என தங்களது மலரும் நினைவுகளில் அவரை குறிப்பிடத் தவறுவதில்லை.
“காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ…….”
courtesy- thiru rajpow - net
வெள்ளித்திரையில் மக்கள் திலகத்தின் மகத்தான சென்னை நகர சாதனைகள் : Part - 1
ஆதாரத்துடன் உள்ள உண்மை தகவல்கள்
1.. ஸ்டார் திரை அரங்கில் முதன் முதலில் 100 நாட்கள் ஓடிய படம் : ராஜகுமாரி (1947)
2. காமதேனு திரை அரங்கில் முதன் முதலில் 100 நாட்கள் ஓடிய படம் : மதுரை வீ ரன் - 1956
3. கேசினோ திரை அரங்கில் முதன் முதலில் 100 நாட்கள் ஓடிய படம் : மலைக்கள்ளன் - (1954)
4. மிட்லண்ட் திரை அரங்கில் முதன் முதலில் 100 நாட்கள் ஓடிய படம் : புதுமைப்பித்தன் (1957)
5. பாரத் திரை அரங்கில் முதன் முதலில் 100 நாட்கள் ஓடிய படம் : திருடாதே (1961)
6. மகாலட்சுமி திரை அரங்கில் முதன் முதலில் 100 நாட்கள் ஓடிய படம் : திருடாதே (1961)
7. மேகலா திரை அரங்கில் முதன் முதலில் 100 நாட்கள் ஓடிய படம் : வேட்டைக்காரன் (1964)
8. சரவணா திரை அரங்கில் முதன் முதலில் 100 நாட்கள் ஓடிய படம் : நம் நாடு (1969)
9. புவனேஸ்வரி திரை அரங்கில் முதன் முதலில் 100 நாட்கள் ஓடிய படம் : தெய்வத்தாய் (1964)
10. சத்யம் திரை அரங்கில் முதன் முதலில் 100 நாட்கள் ஓடிய படம் : இதயக்கனி (1975)
11. தேவிகலா திரை அரங்கில் முதன் முதலில் 100 நாட்கள் ஓடிய படம் : நீதிக்கு தலை வணங்கு (1976)
12. குளோப் (அலங்கார்) திரை அரங்கில் முதன் முதலில் 100 நாட்கள் ஓடிய படம் : காவல்காரன் (1967)
13 ஓடியன் (மெலொடி) திரை அரங்கில் முதன் முதலில் 100 நாட்கள் ஓடிய படம் : உரிமைக்குரல்
14. அகஸ்தியா திரை அரங்கில் முதன் முதலில் 100 நாட்கள் ஓடிய படம் : காவல்காரன் (1967)
சென்னை மாநகரின் இதர திரை அரங்குகளில் ஓடிய மக்கள் திலகத்தின் பட சாதனைகள் மற்றும் பிற மாவட்ட தலைநகர் சாதனைகளின் பட்டியல் தொடரும்.
சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி ஆர்.
எங்கள் இறைவன்
.
வெள்ளித்திரையில் மக்கள் திலகத்தின் மகத்தான சென்னை நகர சாதனைகள் : Part - 2 (Contd.)
தினசரி 4 காட்சிகளுடன் திரையிடப்பட்ட படங்கள் :
1. சபையர் திரை அரங்கு : கருப்பு வெள்ளை படமாகிய "கன்னித்தாய்" - 42 நாட்களில் 168 காட்சிகள் ஓடிய ஒரே படம்.
2. தேவிகலா திரை அரங்கு : வண்ணப்படமகிய நீதிக்கு தலை வணங்கு - 106 நாட்களில் 424 காட்சிகள் ஓடிய முதல் படம்.
3, சாந்தம் திரை அரங்கு : வண்ணப்படமாகிய 'உழைக்கும் கரங்கள்' - 75 நாட்களில் 300 காட்சிகள் ஓடிய முதல் படம்
சென்னை மாநகரின் இதர திரை அரங்குகளில் ஓடிய மக்கள் திலகத்தின் பட சாதனைகள் மற்றும் பிற மாவட்ட தலைநகர் சாதனைகளின் பட்டியல் தொடரும்.
சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி ஆர்.
எங்கள் இறைவன்
மக்கள் திலகத்தின் சென்னை நகர அரங்குகளில் முதன் முறையாக நூறு நாட்கள் ஓடிய படங்களின் பட்டியல் அருமை .
ராஜகுமாரி - மீனவ நண்பன் [1947-1977]
30 ஆண்டுகளில் சென்னை நகரில் மக்கள் திலகத்தின் கலை உலக சாதனைகளை பதிவு செய்யுங்கள் செல்வகுமார் சார்
வெள்ளித்திரையில் மக்கள் திலகத்தின் மகத்தான சென்னை நகர சாதனைகள் : Part - 3
சென்னை நகரின் ஒரே பகுதியில் - இரு திரை அரங்குகளில் வெளியிடப்பட்ட படங்கள் :
1. ரகசிய போலீஸ் 115 - தென் சென்னை - பிளாசா (78 நாட்கள்) மற்றும் குளோப் (15 நாட்கள்)
முதல் 15 நாட்களில் இரு அரங்குகளிலும் சேர்த்து 90 காட்சிகள் (தினசரி 6 காட்சிகள் வீதம்) அரங்கு நிறைந்து ஓடியது.
2. ஒளி விளக்கு - வட சென்னை - பிராட்வே (92 நாட்கள்), அகஸ்தியா (31 நாட்கள்)
முதல் 31 நாட்களில் இரு அரங்குகளிலும் சேர்த்து 186 காட்சிகள் (தினசரி 6 காட்சிகள் வீதம்) ஓடியது.
3. நீதிக்கு தலை வணங்கு - தென் சென்னை தேவிகலா திரை அரங்கு (106 நாட்கள்) மற்றும் ஒடியன் (மெலோடி) (36 நாட்கள்)
முதல் 36 நாட்களில் இரு அரங்குகளிலும் சேர்த்து 252 காட்சிகள் {தினசரி 7 காட்சிகள் - தேவிகலாவில் 4 காட்சிகள் - ஒடியன் 3 காட்சிகள்)
வீதம்} ஓடியது.
சென்னை மாநகரின் இதர திரை அரங்குகளில் ஓடிய மக்கள் திலகத்தின் பட சாதனைகள் மற்றும் பிற மாவட்ட தலைநகர் சாதனைகளின் பட்டியல் தொடரும்.
சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி ஆர்.
எங்கள் இறைவன்
வெள்ளித்திரையில் மக்கள் திலகத்தின் மகத்தான சென்னை நகர சாதனைகள் : Part - 4 (Contd.)
1. திரையிடப்பட்ட 4 அரங்குகளிலும் (சித்ரா, பிரபாத், சரஸ்வதி,காமதேனு ) 100 நாட்கள் ஓடிய முதல் கருப்பு வெள்ளை படம் "மதுரை வீரன்".
2. திரையிடப்பட்ட 4 அரங்குகளிலும் (மிட்லண்ட், ஸ்ரீ கிருஷ்ணா, மேகலா, நூர்ஜஹான்) 100 நாட்கள் ஓடிய முதல் வண்ணப்படம் "அடிமைப்பெண்"
3. திரையிடப்பட்ட 4 அரங்குகளிலும் (பிளாசா, பிராட்வே, சயானி, கிருஷ்ணவேணி) 100 நாட்கள் ஓடி, ஒரு அரங்கில் வெள்ளி விழா கண்ட முதல் வண்ணப்படம்
"மாட்டுக்கார வேலன்"
4. திரையிடப்பட்ட 4 அரங்குகளிலும் (சித்ரா, மகாராணி, மேகலா, ராம்) 100 நாட்கள் ஓடி, 1972 -ன் ஒரே வெற்றிப்படம்
வண்ணப்படமாகிய "நல்ல நேரம்"
சென்னை மாநகரின் இதர திரை அரங்குகளில் ஓடிய மக்கள் திலகத்தின் பட சாதனைகள் மற்றும் பிற மாவட்ட தலைநகர் சாதனைகளின் பட்டியல் தொடரும்.
சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி ஆர்.
எங்கள் இறைவன்
ஜெய் சார் வி .பி .ராமன் அவர்கள் பொன்மனச்செம்மல் பற்றி
எழுதிய தொகுப்பு மிகவும் அருமை
அன்றே தலைவன்
இடத்தை யாரும் எட்டமுடியாது என்பதனை மிகவும் திடமாக
கூறியுள்ளார் வாழ்த்துக்கள்
மிக விரைவாக 450 பதிவுகள் வெற்றிகரமாக முடித்ததற்கு
எனது வாழ்த்துக்கள்
Ravichandran Sir thank you for uploading MGR comics. I have seen this already, but again you have given an opportunity to remember the story.
Congrats Jai Sankar Sir for completing 450 posts in a short time. Our latest update in MGR blog is about P.Neelakantan here is the link.
http://www.mgrroop.blogspot.in/2013/...rs-part-i.html
Regarding the comics I am going to publish MGR comics, the story is in infancy stage. And as some might know that MGR animation serial is half finished and will be published in our blog very soon.
காலத்தை வென்ற எம்ஜியார் . . .
மிகவும் அருமை வினோத் சார்
நன்றி
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்
சென்னையில் தலைவனின் சாதனை பட்டியல் தொடர்ச்சியாக
வெளியிட்டு அசத்திவிடீர்கள் அருமை
நன்றி
செல்வகுமார் சார்
தொடருங்கள் . . . . .
தலைவன் கார்டுன் சூப்பர் ரவி சார்
பதிவிட்டதற்கு நன்றி
அன்பு ராகவேந்திரா சார், இவற்றுள் ரூப் அவர்கள் குறிப்பிட்ட சபாஷ் மாப்பிள்ளை, ரத்தினகுமார் படங்களை தவிரவும் விடுபட்ட நீண்ட பட்டியல் இதோ
அரிச்சந்திரா,
மீரா,
ராஜகுமாரி,
அபிமன்யு,
மோகினி
ராஜராஜன்
ராஜாதேசிங்கு
திருடாதே
தாய் மகளுக்கு கட்டிய தாலி
மாடப்புறா
கலையரசி
பணம் படைத்தவன்
காதல் வாகனம்
தாழம்பூ
நான் ஆணையிட்டால்
ஒரு தாய் மக்கள்
தேர்த்திருவிழா
மேலும் இருசகோதரர்கள் படம் மாடர்ன் சினிமா வெளியிட்டுள்ள டிவிடி பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடைகளில் கிடைக்கவில்லை. மதுரையில் முயற்சிக்க வேண்டும்.
Makkal thilagam mgr in mahadevi movie at ktv to day 1.oo pm.
மக்கள் திலகம் பிறந்த நாள் -17-1-2013
உலகில் எந்த ஒரு தனி மனிதனுக்கும் கிடைக்காத புகழ் மக்கள் திலகம் m.g.r என்ற மாமனிதருக்கு கிடைத்திருப்பது ஒரு வரலாற்று சாதனை .
பசி என்ற கொடுமை யான ஏழ்மையின் தாக்கம் அவரது இளம் வயதில் பாதிக்க பட்டதின் விளைவுதான் 1982 ஆண்டில் சத்துணவு திட்டமாக தமிழ் நாட்டில் அறிமுகபடுத்தபட்டது .
இந்த திட்டத்தின் மூலம் பலன் அடைந்த பல லட்சகணக்கான மாணவர்கள் இன்று சமுதயாத்தில் நல்ல நிலைமையில் வாழ்ந்து வருகின்றனர் .
ஒரு தனி மனிதன் தனது வாழ் நாளில் தினமும் சந்திக்கும்
ஏமாற்றம் - கவலை - வறுமை - துரோகம் - நம்பிக்கை -ஆனந்தம் - என்று பல கோணங்களில் வெளிப்படும் செய்லகளுக்கு மருந்தாய் இருப்பது மக்கள் திலகத்தின் பட பாடல்கள் .
அந்த பாடல்களை கேட்பதின் மூலம் நமது மனதுக்கு புத்துணர்வும் ,நேர்மறை எண்ணங்களும் அலை மோதும் .
மக்கள் திலகம் மறைந்து 25 ஆண்டுகள் ஆன பின்னரும்
உலகமெங்கிலும் உள்ள அவரது ரசிகர்கள் வீட்டிலும் , தெருவிலும் அவரது படத்தை வைத்து மாலை இட்டு பூஜை செய்வது நமது இதய தெய்வம் எங்க வீட்டு பிள்ளை
ஒருவருக்குதான் என்பது உலக சாதனை .
மக்கள் திலகம் [1947-1977.] முப்பது வருடங்களில் நமக்கு தந்த காவியங்கள் 115.
சரித்திர படங்கள் - சமுதாய படங்கள் என்று பலவேறு பாத்திர படைப்புக்கள் . இனிமையான பாடல்கள் இயல்பான நடிப்பு .சமுதாய சீர் திருத்த கொள்கை பாடல்கள் -வீரமான சண்டை காட்சிகள் . இதுதான் நம்முடைய மக்கள் திலகத்தின் ரசிகர்கள் அனைவருக்கும் அழியா சொத்து .
நமக்கு மட்டுமல்ல . இந்த சொத்து அவர் பெயர் மட்டும் கூறி அனுபவிக்கும் கட்சிக்காரர்கள் - திரை அரங்கு உரிமையாளர்கள் - விநியோகஸ்தர்கள் - ஊடகங்கள் உரிமையாளர்கள் -குறுந்தகடு விற்பனையாளர்கள் - தயாரிப்பாளர்கள் - என்று இன்றும் அவர்கள் வாழ்க்கையில் வருமானத்தை அள்ளி தரும் அமுத சுரபியாக நமது மக்கள் திலகம் வாழ்ந்து கொண்டு வருகிறார் .
இந்த சாதனை படைக்கும் உலகில் ஒரே தனி மனிதர்
எங்கள் அமுத சுரபி மக்கள் திலகம் .
அவர் புகழ் வாழ்க
செல்வி பிரபா
பெங்களூர்
Dear Jai Shankar Sir,
CONGRATULATIONS on your postings crossed 450, in this Thread, within short span of time.
We expect more postings with rare pictures of our beloved God M.G.R.
S. Selvakumar
Endrum M.G.R. Engal Iraivan
வெள்ளித்திரையில் மக்கள் திலகத்தின் மகத்தான சென்னை நகர சாதனைகள் :
ஆதாரத்துடன் உள்ள உண்மை தகவல்கள் - தொடர்ச்சி பகுதி - 5
1. முதன் முறையாக திரையிடப்பட்ட 3 அரங்குகளிலும் (பாரகன், ஸ்ரீ கிருஷ்ணா, உமா) தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கு நிறைந்து புதிய
சாதனை படைத்தது பொன்மனச் செம்மலின் பொற்கவீயமாம் "நாடோடி மன்னன்'.
2. முதன் முறையாக திரையிடப்பட்ட 4 அரங்குகளிலும்(மிட்லண்ட், ஸ்ரீ கிருஷ்ணா, மேகலா, நூர்ஜஹான்) தொடர்ந்து 100 காட்சிகள்
அரங்கு நிறைந்து மற்றுமோர் புதிய சாதனை படைத்தது கலைவேந்தனின் "அடிமைப்பெண்".
3. அதே போல், திரையிடப்பட்ட 4 அரங்குகளிலும் (பிளாசா, பிராட்வே, சயானி, கிருஷ்ணவேணி) தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கு நிறைந்து
மீண்டும் சாதனை படைத்தது கலியுக கர்ணனின் "மாட்டுக்கார வேலன்" .
4. விளம்பரம் ஏதுமின்றி திரையிடப்பட்ட, உற்சாக ஊற்றாம் - நமது கொள்கைத் தங்கத்தின் "உலகம் சுற்றும் வாலிபன்' 81 ஆண்டு கால தமிழ்
சினிமா உலகில் புதிய சரித்திரம் படைத்திட்டது. வெளியிடப்பட்ட 3 அரங்குகளிலும் அரங்கு நிறைந்த காட்சிகள்
விவரம் வருமாறு :
( தேவி பாரடைஸ் - தொடர்ந்து 227 காட்சிகள், அகஸ்தியா - தொடர்ந்து 156 காட்சிகள், உமா - தொடர்ந்து 127 காட்சிகள் )
5. தமிழ் திரை உலகில் முதன் முதலாக 100 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்து வெற்றிக்கொடி நாட்டிய படம் நமது மக்கள் திலகத்தின்
மலைக்கள்ளன் திரைப்படமே. (அரங்கு : காசினோ )
6. முதன் முதலாக 150 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்து கலையுலகில் புரட்சி செய்திட்ட படம் குணக்குன்றின் "ரிக்ஷாக்காரன்"
( அரங்கு : அதிக இருக்கைகள் கொண்ட தேவி பாரடைஸ் )
7. முதன் முதலாக 200 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்து வசூல் சாதனை புரிந்த படமும் நமது இதய தெய்வத்தின்
"உலகம் சுற்றும் வாலிபன்' ( அரங்கு : அதிக இருக்கைகள் கொண்ட தேவி பாரடைஸ் )
8. 266 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்து மீண்டும் புரட்சியை ஏற்படுத்திய படம் "நீதிக்கு தலை வணங்கு"
( அரங்கு : தேவி கலா )
இப்படி சாதனை மேல் சாதனை படைத்து தமிழ் திரையுலகின் முடி சூடா மன்னனாக மட்டுமல்லாமல் நிரந்தர வசூல் சக்ரவர்த்தியாக
திகழ்ந்து கொக்ன்டிருப்பவர் நமது மக்கள் தங்கம் எம்.ஜி ஆர். அவர்கள் மட்டுமே.
சௌ செல்வகுமார்
என்றும் எம்.ஜி. ஆர். எங்கள் இறைவன்
மக்கள் திலகம் நடித்த சத்யா மூவிஸ் காவல்காரன்
இன்று முதல் 4-1-12013
சென்னை மகாலட்சுமி திரையரங்கில் -தினசரி 3 காட்சிகள் .
சென்னை மாநகரில் நமது எழில் வேந்தன் எம்.ஜி. ஆர். அவர்களின் "உழைக்கும் கரங்கள்" திரைப்படம் 1976-ம் வருடம் ஜூலை மாத கடைசி வாரத்தில் 11வது வாரமாக சாந்தம், ஸ்ரீகிருஷ்ணா, உமா ஆகிய அரங்குகளில் வெற்றி உலா வந்து கொண்டிருந்த காலத்தில் சென்னை நகரின் பெரும்பாலான திரை அரங்குகளில் ஆக்கிரமிப்பு செய்த இருபதாம் நூற்றாண்டின் இனையற்ற வள்ளலாம் நமது நாயகனின் திரைப்படங்கள் :
1. கிரவுன் : அன்னமிட்ட கை
2. பிரபாத் : நீதிக்கு தலை வணங்கு
3. பாரத் : விக்கிரமாதித்தன்
4. பாண்டியன் (மகாராஜா) : அன்பே வா
5. மகாராணி : தாய்க்கு தலை மகன்
6. பிரைட்டன் : நாளை நமதே
7. தங்கம் : பெரிய இடத்துப் பெண்
8. ஈராஸ் : அலிபாபாவும் 40 திருடர்களும்
9. நேஷனல் : ஒரு தாய் மக்கள்
10. பாலாஜி : சக்கரவர்த்தி திருமகள்
11. சன் : படகோட்டி
12. பிளாசா : நான் ஆணையிட்டால்
13. மகாலட்சுமி : மாட்டுக்கார வேலன்
14. கமலா : மதுரை வீரன்
15. லிபர்ட்டி : மர்ம யோகி
இது ஒரு சிறு உதாரணம் தான். இது போல் சம்பவங்கள் தமிழகம் எங்கும் இன்றளவும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது
மக்கள் திலகத்தின் படங்களின் வசூலை முறியடிக்கவோ அல்லது வசூலை பாதிப்பதோ அவரது இன்னொரு படத்தால் ம ட்டுமே முடியும் என்பது இதன் மூலம் தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.
பல திரை அரங்குகள் மூடப்பட்டு வணிக வளாகங்களாக மாறி வரும் தற்போதைய நவீன சூழ் நிலையில், பொன்மனச் செம்மலின் பழைய படங்கள் பல மீண்டும் மீண்டும் மறு வெளியீடு செய்யப்பட்டு தமிழ் திரை உலகத்தை காப்பாற்றி வருவதும், திரை அரங்க உரிமையாளர்களையும், வினியோகஸ்தர்களையும் வாழ வைத்துக் கொண்டிருப்பதும் நிதர்சனமான உண்மை.
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
மக்கள் திலகம் என்ற பட்டம் நமது தெய்வத்திற்கு சாதரணமாக வரவில்லை..அவர் மக்களுக்கு பிடித்தவர் மட்டுமல்ல..மக்கள் மனங்களை அறிந்து அவர்களின் தேவையை உணர்ந்தவர்..அதனால்தான் அவர் இருக்கும் வரை மட்டுமல்ல அவர் இல்லாதபோதும் கூட அவரை மக்கள் மனதில் இருந்து அகற்ற முடியவில்லை..அதற்கு நிறைய உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம்..படபிடிப்பு நடைபெறும்போது படபிடிப்பு குழுவினர்களுக்கு அவர் படைக்கும் விருந்தும் பரிசளிப்பும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும்..அதற்கும் பல உதாரணங்கள் உண்டு..அவற்றில் சில..ராஜஸ்தான் பாலைவனத்தில் அனைவருக்கும் குளிர்பானம் வரவழைத்தது..காஷ்மீர் படபிடிப்பில் அனைவருக்கும் ஸ்வட்டர் அளித்தது..சிம்லா படபிடிப்பில், வெளிநாட்டு பிடிப்பில் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்..அதே போல சூட்டிங் பார்க்கும் மக்களையும் அவர் கவனிக்க தவறியதே இல்லை..அவர்களுடைய பாதுகாப்பு அவர்களுடைய தேவைகள் இவற்றை எல்லாம் எண்ணிக்கொண்டே தான் அவர் படபிடிப்பில் நடிப்பார்..அதற்கு ஒரு உதாரணம்..மாட்டுக்கார வேலன் எனும் வெள்ளிவிழா பட சூட்டிங்கின் போது நடந்தவற்றை இயக்குனர் ப. நீலகண்டன் கூறியதை காணுங்கள்
http://i47.tinypic.com/1zyhj41.jpg