-
From Mr. Sudhangan Face book
செலுலாய்ட் சோழன் 109
இப்போது தருமி அந்த இடத்தை விட்டு நகரப் போவான்!
பின்னாலிருந்து சிவனான சிவாஜியின் குரல்!
`பாண்டியனின் சந்தேகத்தைத் தீர்க்கும் பாட்டுனக்கு கிடைத்துவிட்டால் பரிசத்தனையும் உனக்கு கிடைக்குமல்லவா ?’
`அந்தப் பாட்டு மட்டும் என் கையில் கிடைச்சது அடுத்த் நிமிடம் என் கையில ஆயிரம் பொண்ணு பரிசு!’ என்பான் தருமி!
`கவலைப்படாதே ! அந்தப்பாட்டை நான் உனக்குத் தருகிறேன்’
`பாட்டை! நீங்க எனக்கு தரீங்களா ? வேண்டியதுதான்! உங்க பாட்டை கொண்டு போய் என் பாட்டுன்னு சொல்லிக்கவ ?’ இத பாருங்க சொந்தமா எழுதற பாட்டையே கன்னாபின்னான்னு பேசறாங்க! என்ன கொஞ்சம் வசன நடையா எழுதறேன்! அதையும் பொறுத்துக்கிட்டு புலவன்னு ஒத்துக்கிட்டிருக்காங்க! அதையும் கெடுக்கலாம்னு பாக்கறீங்களா ?’
`பரவாயில்லை’
`திருடலாங்கிறியா ?’
உனக்கு பரிசு வேணுமா இல்லையா ?’
`வேணுமே!’ சரி உங்களுக்கு வேண்டாமா ?’
`வேண்டாம்’
`சத்தியமா ?’
`நிச்சயமா ‘
இப்போது சிவன் தன் கையிலிருந்து ஒலைச்சுவடிகளால் தருமியின் தலையில் அடிப்பார்!
`உண்மையாவா ! அடபோய்யா ! பணம் வேணான்னு சொன்ன ரொம்ப பேரை நான் பாத்திருக்கேனில்ல ‘
`எனக்கு பொருளின் மீது பற்றில்லயப்பா !’
`பற்றில்லாமத்தானா உடம்பில இத்தனை கெடக்குது’ என்று சிவன் உடலில் இருக்கும் ஆபரணங்களைக் காட்டுவான் தருமி! `நல்லா நடிக்கீறிங்க’
`நாடகத்தையே நடத்துபவன் நடிக்க முடியுமா அப்பா !’
`முடியுமா ?’ என்றபடி சிவன் பக்கம் திரும்பி ` என்னது! என்னது!’ என்று அலறுவான்!
`அந்தப் பரிசின் மீது எனக்கு பற்றில்லை நீ வாங்கிக் கொள் ‘ என்றேன்.
இப்போது தருமி நக்கலாக சிரித்தபடி சிவனின் கையை தட்டி, ` இப்ப புரிதுய்யா! புதுசா பாட்டெழுதி பழகறே! அதை நேர எடுத்துக்கிட்டு போனா எப்படி உதைப்பாங்களோன்னு பயந்து எங்கிட்ட தள்ளிவுடறே இல்ல ?’
`என் புலமை மீது உனக்கு நம்பிக்கையில்லாவிட்டால் என்ன பரீட்சீத்து பாரேன். உனக்கு திறமையிருந்தால்?’
`என்னது என்னது எங்கிட்டயே மோதப் பாக்கறீயா ?’ இத பாரு நான் பார்வைக்கு சுமாராத்தான் இருப்பேன்! என் புலமையை பத்தி உனக்குத் தெரியாது ! தயாரா இரு!’
`கேள்விகளை நீ கேட்கிறாயா ? அல்லது நான் கேட்கட்டுமா ?’
அடுத்து தருமி கேள்வி கேட்க சிவன் பதில் சொல்லுவார்1
இதைத்தான் நாங்கள் சினிமாவில் பல ஆயிரம் தடவைகள் பார்த்திருக்கிறோமே , அதை அப்படியே இங்கே பதிவு செய்ய வேண்டுமா ? என்று படிப்பவர்கள் நினைக்கலாம்!
பார்ப்பது என்பது வேறு! எழத்தில் பதிய வைப்பது என்பது வேறு!
எதிர்காலத்தில் இந்தத் தொடர் புத்தகமாக வரும் போது அடுத்த தலைமுறைக்கும் இந்த தமிழ், அது உச்சரிக்கப்பட்ட விதம், அதை எழுதியவரின் தமிழ் ஆற்றல், அன்றைய சினிமா கலைஞர்களுக்கு இருந்த ஈடுபாடு என்பது வரப்போகும் தலைமுறைக்கும் போய்ச் சேரும்!
அதனால் அந்தப் பதிவு இங்கே அவசியமாகிறது!
இந்த காட்சியின் திரையில் காட்டப்பட்டபோது சிவாஜியை விட நாகேஷுக்குத்தான் அதிக கைதட்டல் கிடைத்தது!
அந்த பெருமையும் சிவாஜிக்கே சேரும்!
இந்த காட்சி எடுத்ததும், படப்பிடிப்பில் இருந்தவர்கள் தங்களை மறந்து சிரித்தார்கள்.
அவர்கள் சிரித்ததன் காரணம் சிவாஜிக்குப் புரியவில்லை
காரணம் தருமி நாகேஷ் சிவாஜிக்கு பின்னால் சென்றபடியே சகல சேஷ்டைகளையும் செய்திருப்பார்.
அதனால் அந்தக் காட்சியை பார்க்கும் ஆசை சிவாஜிக்கு வந்தது!
பார்த்த சிவாஜி, இயக்குனர் ஏ.பி. நாகராஜனிடம், ` இதில் ஒரு எடத்தை கூட வெட்டாதே! அவன் ( நாகேஷ்) நடிப்புத்தான் இந்தக் காட்சிக்கே சிறப்பு’ என்றார்.
இதை சிவாஜியே என்னிடம் சொல்லியிருக்கிறார்.
அதே போல் திருவிளையாடல் படத்தின் இன்னொரு சிறப்பு பாலையாவின் நடிப்பு!
அவர் ஏற்று நடித்த ஹேமநாத பாகவதர் பாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருந்தார்.
படத்தில் வரும் ` ஒரு நாள் போதுமா’ பாடலின் படப்பிடிப்பின்போது, சிவாஜி அந்தப் படப்பிடிப்பை பார்க்க வந்திருந்தார்.
காரணம் பாலையாவின் நடிப்பை பார்க்க!
`அவர் எப்படி நடிச்சிருக்கார்ன்னு பாத்தாதானே நான் அவரை தோற்கடிக்கிற பாத்திரத்தை சிறப்பாக செய்ய முடியும் . நாகேஷும், பாலையா அண்ணனும் இல்லேன்னா திருவிளையாடல் படமே இல்லை’ என்று என்னிடம் சொன்னார் சிவாஜி!
இப்போது தருமியின் காட்சிக்கு வருவோம்!
`கேள்வியை நீ கேக்காதே! நான் கேக்கறேன்! எனக்கு கேக்க மட்டும் தான் தெரியும் ‘ என்பான் தருமி!
பிரிக்க முடியாதது எது?
தமிழும் சுவையும்
பிரியக் கூடாதது/
எதுகையும் மோனையும்
சேர்ந்தே இருப்பது?
வறுமையும் புலமையும்1
சேராதிருப்பது?
அறிவும் பணமும்
சொல்லக் கூடாதது ?
பெண்ணிடம் ரகசியம்
சொல்லக் கூடியது ?
உண்மையின் தத்துவம்
பார்க்கக் கூடாதது?
பசியும் பஞ்சமும்
பார்த்து ரசிப்பது /
கலையும் அழகும்
கலையிற் சிறந்தது /
இயல் இசை நாடகம்
நாடகம் என்பது ?’
நடிப்பும் பாட்டும்
பாட்டுக்கு/
நாரதன்
வீணைக்கு?
வாணி!
அழகுக்கு?
முருகன்
சொல்லுக்கு?
அகத்தியன்
வில்லுக்கு?
விஜயன்
ஆசைக்கு ?
நீ
அறிவுக்கு?
நான்
ஐயா, ஆளை வுடு எனக்கு தெரிஞ்சது அவ்வளவுதான்!
இந்தப் படத்தை அது வெளியான நாளிலிருந்து இதுவரையில் நூற்றுக்கு மேலான முறை பார்த்திருக்கிறேன்.
-
From Mr. Sudhangan face book
செலுலாய்ட் சோழன் – 110
சிவாஜியின் படங்கள் பின்னால் வந்த நடிகர்களுக்கு தமிழ் உச்சரிப்புக்கான ஒரு பாட நூலாகவே இருந்தது என்பது உண்மை!
நடிக்கத் துடிக்க எல்லோருமே அந்த நாட்களில் சிவாஜி படத்தின் வசனங்களை மனப்பாடமே செய்து வைத்திருந்தார்கள்!
60களுக்கு முன்னால் வந்த நடிகர்கள் `பராசக்தி’ `மனோகரா’ படங்களின் வசனங்களை மனப்பாடம் செய்தால் 60 களுக்குப் பின்னால் ஏ.பி.நாகராஜன் படங்களை உதாரணமாகச் சொல்லலாம்!
அதில் முக்கியமான படம்தான் ` திருவிளையாடல்’!
அதிலும் முக்கியமானது தருமி – நக்கீரன் பகுதிதான்1
இப்போது தருமி சிவனின் கேள்விகளை கேட்டு முடித்துவிட்டு சிவனாகிய சிவாஜியின் காலில் விழுந்து, `அய்யா! ஆளை விடுங்க’ இதுக்குமேலே எனக்குத் தெரியாது’ என்று சொல்லிவிட்டு பாட்டை வாங்கிக் கொண்டு செண்பக பாண்டியனின் சபைக்கு போவான்!
இந்தக் காட்சிதான் எத்தனை முறை பார்த்தாலும் அலுப்பதில்லை!
அதிலும் நக்கீரனாக நடித்த ஏ.பி.நாகராஜனின் குரல் தான் எத்தனை கம்பீரம்!
அவர் ஏன் அதிகமாக நடிப்பதில்லை என்று ஏங்க வைத்த பாத்திரம் அவருடையது1
அடுத்து பாண்டியன் தன் சபைக்குள் நுழைவான்!
அப்போதே தமிழ் விளையாட ஆரம்பிக்கும்!
`தென்னவன்’ எங்களின் மன்னவன்!
திறமையுடன் முத்தமிழ்ச் சங்கத்தை காத்திடும் கோமகன்’
நீதிக்கு முதல்வன்!
மக்களின் காவலன்!
வேந்தர்க்கு வேந்தன்!
பண்பின் தலைமகன்!
செண்பகப்பாண்டியன்’ என்று அறிவிப்பார்கள்!
எல்லோரும் `வாழ்க’ வாழ்கவென்று கோஷம் போடுவார்கள்!
`அமைச்சரே! என் மனதில் ஏற்பட்டுள்ள சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் பாடலை எவரேனும் இயற்றி தந்திருக்கிறார்களா ?
` இல்லை பிரபு! ஆயிரம் பொன் பரிசு என்று அறிவித்த பிறகும் கூட பரிசைப் பெற எந்த புலவரும் வந்தாகவில்லை’
`ம் ! வருந்துகிறேன்! புலமைக்கு தலைவனாக விளங்கும் நக்கீரர்! துணைக்கு கபிலர்! இன்னும் பரணர், மற்றும் சான்றோர் பலர் சபையின் கண் வீற்றிருந்தும் கூட எனது சந்தேகம் தீர்க்கப்படும் பாட்டு ஒன்றை இயற்றாதது ஏன் ? எழத மனமில்லையா ? அல்லது பரிசுத் தொகை போதவில்லையா ?
நக்கீரர் எழுந்திருப்பார்!
மறைமுகப் பேச்சு மன்னருக்கு தேவையில்லை! என்னிடம் நேரடியாகவே கேட்டிருக்கலாம்! புலமைக்கும் திறமைக்கும் போட்டி என்று விட்டிருந்தால் பாட்டுக்கள் குவிந்திருக்கும் இந்நேரம்! ஆனால் அறிவிப்பு அப்படியில்லையே! பரிசுக்கு பாட்டெழுத வேண்டுமென்பதுதானே கட்டளை! அதை அடைய விருப்பமில்லாதவர்கள் அதில் ஈடுபடாமலும் இருக்கலாமல்லவா ?’
வேந்தே! பொன்னுக்கு பொருளுக்கும் புலமையை விற்குமளவிற்கு என் எண்ணும் எழுத்தும் இன்னும் இளைக்கவில்லை!
`வெகுமதிக்கு முதலிடம் இல்லையென்றால் விட்டுவிடுங்கள்! வேந்தனின் சந்தேகம் தீர விளக்கம் சொல்லுங்கள்’
`சடலத்தோடு பிறந்தது சந்தேகம் அது என்று தீரப்போகிறது’
`சர்ச்சைக்குரியது என்று வந்துவிட்டால் சந்தேகத்தை தீர்க்க வேண்டியது?’
`முத்தமிழ்ச் சங்கத்தின் கடமை!’
அத்தனை பொறுப்புள்ளவர் அருகில் இருக்கும்போது அரசனின் சந்தேகத்தை தீர்த்திருக்கலாமல்லவா ?’
இத்தனை தெரிந்திருந்த மன்னவரும், பரிசை அறிவிக்கும் முன்பே முத்தமிழ்ச் சங்கத்திடம் அற்வித்திருக்கலாமல்லவா
செண்பகப் பாண்டியன் சிரித்தபடியே , ` வென்றுவிட்டீர்! நக்கீரரே எம்மை வென்றுவிட்டீர்’
`வேந்தே உம்மை வெல்ல எவரால் முடியும்! வெற்றித் திருமகள் என்றும் உம்மையே பற்றிக்கொண்டிருக்கிறாள்’
அப்போது காவலன் ஒருவன் வந்து மன்னர் முன் மண்டியிடுவான்!
`மன்னர் மன்னவா ! தங்களின் மனச் சந்தேகத்தைப் போக்க பாட்டுடன் தருமி என்ற புலவர் வந்திருக்கார்’
`மிக்க மகிழ்ச்சி! நக்கீரர் பாட விரும்பவில்லையென்றாலும், நாட்டில் வேறு ஒரு புலவர் அரசரின் தீர்த்தார் என்று வருங்காலம் சொல்லட்டும்! அவரை வரச்சொல்’
`மன்னா! பரிசை நாடி வரும் ஏழைப் புலவர் பொன்னைக் கண்டறியாதவர் என்று எண்ணுகிறேன்! அதனால் புலமையை இங்கு அடகு வைக்கிறார்!’
`எப்படியோ என்னுள் இருக்கும் ஐயப்பாடு நீங்குகிறதா இல்லையா ‘
` நீங்க வேண்டும்! அதை நீக்கவாவது இங்கு ஒரு புலவர் வரவேண்டும்’
ஊக்கத்திற்காவது உங்கள் பரிசை அவன் பெறவேண்டும்.
தருமி அங்கிருந்த ஒவ்வொரு அமைச்சர்களையும் பார்த்து அரசே! மன்னா! வேந்தே என்றபடி இறுதியில் நக்கீரர் காலில் விழுந்து மன்னர் மன்னா என்பார்!
`புலவரே! மன்னர் பிரான் அங்கேயிருக்கிறார்
தருமி மன்னர் காலில் விழ்ந்து
`பார் வேந்தே! என்னைப் பார் வேந்தே!
`வருக புலவரே!
மன்னர் அருகில் போவான் தருமி, ` பரிசை இன்னும் யாருக்கு கொடுத்திடலையே! உமது புலமை வாழ்வாங்கு வாழ்ந்து வையத்துள் நிலைக்கட்டும்!’ எமது சந்தேகத்தை தீர்க்கும் பாட்டை இயற்றி வந்திருக்கிறீரா?
`ஆம்! ஆம்! நானே தான் எழுதி வந்திருக்கிறேன்!’
எங்கே பாட்டை கொடும்’
`இல்லை மன்னா! நானே படித்துவிடுகிறேன்1
``கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிரைத் தும்பி
காமஞ் செப்பாது கணடது மொழிமோ!
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியிற்
செற்யெயிற் றரிவை கூந்தலி
னயறிவு முளவோ நீயறியும் பூவே’’
`ஆஹா! அருமையான பாட்டு! என் ஐயப்பாட்டை நீங்கள் கருத்துக்கள்! ஆழ்ந்த சொற்கள்! தீர்ந்தது சந்தேகம்! அமைச்சரே! பொற்கிழியை எடுத்து வாரும்’
தருமி சந்தோஷத்தில் துடிப்பான்!
மேலே நான் விவரித்த காட்சி படம் பார்த்தவர்கள் அனைவருக்குமே நினைவிருக்கும்!
ஆனால் ஏன் இந்தப் பதிவு!
படத்தை பொழுது போக்கிற்காக பார்ப்பது என்பது வேறு! அந்த காட்சியிலிருகும், அரங்கச்சுவை ! கதாபாத்திரங்கள்! பேசப்படும் விஷயங்கள் அனைத்தையும் கவனிக்க வேண்டும்!
சோமசுந்தேரஸ்வரர் ஆலயத்திலிருந்து அடுத்த காட்சியை நேராக தருமியை சபையில் கொண்டு வந்து விட்டு காட்சியை துவக்கியிருக்கலாம்!
ஆனால் அப்படி செய்யவில்லை இயக்குனர் ஏ.பி.என்.!
மேலே உள்ள விவரங்களைப் படித்தால் எத்தனை தகவல்கள்! என்னே அழகுகொஞ்சு தமிழ்!
இந்த விவரங்களெல்லாம் பரஞ்சோதி முனிவர் அல்ல எந்த திருவிளையாடல் புராணத்திலும் இல்லை!
பின் ஏன் இந்த இடைச் செருகல்!
அது அப்படியல்ல !
ஒரு இதிகாசத்தையோ, புராணத்தையோ படிக்கிற வாசகர்கள் என்பது வேறு! படம் பார்க்கிற ரசிகர்கள் என்பது வேறு!
அவர்களை அந்த செண்பக பாண்டியன் காலத்திற்கு அழைத்துச் சென்று, அவனை அங்கிருப்பவன் எப்படி மதிக்கிறாரள் என்பதைக் காட்டி, பிறகு அவன் நடத்தி நக்கீரர் தலைமையேற்கு முத்தமிழ்ச்சங்கத்தை ரசிகர்களுக்கு சொல்ல வேண்டும்.
பிறகு அந்த முத்தமிழ்ச் சங்கத்தில் எப்படிப்பட்ட புலவர்களெல்லாம் செண்பக பாண்டியன் காலத்தில் இருந்தான் என்பதை வெளிப்படுத்த வேண்டும்!
அதற்குப்பிறகு கற்றரிந்த புலவர்கள் பலர் அந்த நாட்களில் வெறும் மன்னனுக்கு துதி பாடுபவர்களாக இருந்ததில்லை என்பதை மன்னனுக்கும், நக்கீரனுக்கு நடந்த விவாதத்தினால் உருவாக்கி காட்டியிருக்கிறார் இயக்குனர் ஏ.பி. நாகராஜன்!
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-