http://i67.tinypic.com/208e54y.jpg
Printable View
எம்ஜிஆர் 100 | 29 - மக்களின் மனங்களில் இன்றும் வாழ்பவர்!
http://i68.tinypic.com/2uzc5et.jpg
M.G.R. பிறர் அடைய முடியாத எட்டாத உயரத்துக்குச் சென்றபோதும் அவரது எண்ணம் எப்போதும் சமூகத்தின் கடைநிலையில் வாழும் சாதாரண மக்களைப் பற்றியே இருந்தது. அதனால்தான் சாதாரண மக்களின் மனங்களில் இன்றும் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
http://i67.tinypic.com/2elshmv.jpg
‘மும்பையில் மாதுங்கா, டெல்லி யில் கரோல்பாக் போல கொல் கத்தா நகரில் லேக் ஏரியா என்ற இடம் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி. 1982-ம் ஆண்டில் அங்கு கட்டப்பட்ட தமிழ்ச்சங்கக் கட்டிடத்தை நிர்வாகிகள் அழைப்பின்பேரில் அங்கு சென்று முதல்வர் எம்.ஜி.ஆர். திறந்து வைத்தார். அந்தக் கட்டிடம் எழும்ப மூல காரணமாக இருந்தவரே எம்.ஜி.ஆர்.தான். கட்டிடம் கட்டுவதற்காக ரூ.5 லட்சம் நன்கொடையாக அளித்தார்.
விமானம் மூலம் கொல்கத்தா சென்ற எம்.ஜி.ஆரை திரளான தமிழர்கள் வரவேற்றனர். மாலையில் தமிழ்ச்சங்க கட்டிடத் திறப்பு விழா நடந்தது. இரண்டு நாட்கள் அங்கு தங்கினார். அப்போது, மேற்குவங்க முதல்வராக இருந்த ஜோதிபாசுவை சந்தித்து பேசினார்.
http://i68.tinypic.com/vspd6r.jpg
எம்.ஜி.ஆர். அப்போது தமிழகத்தின் முதல்வர் என்ற முறையில் மேற்கு வங்க அரசின் விருந்தாளியாக வரவேற்கப்பட் டார். விமான நிலையத்தில் இருந்து அதி காரிகள் அவரை ஆளுநர் மாளிகைக்கு அழைத்துச் சென்றனர். அங்குதான் இரண்டு நாட்களும் எம்.ஜி.ஆர். தங்குவ தாக ஏற்பாடு. பிரம்மாண்டமும் ஆடம் பரமுமான ஆளுநர் மாளிகைக்கு அழைத் துச் செல்லப்பட்ட எம்.ஜி.ஆர், தான் தங்க வேண்டிய இடத்தை சுற்றிப் பார்த்தார். 10 நிமிடங்களில் ‘‘இந்த இடம் நமக்கு சரிப்பட்டு வராது. ஓட்டலுக்குச் சென்று தங்கிவிடலாம்’’ என்று கூறி புறப்பட்டு விட்டார்.
மேற்குவங்க அதிகாரிகளுக்கு அதிர்ச்சி ஒருபுறம்; வியப்பு மறுபுறம். ‘‘ராஜ் பவனில் எல்லா வசதிகளும் இருக்கின்றன. இங்கேயே தங்கலாமே’’ என்று கேட்டுக் கொண்டனர்.
எம்.ஜி.ஆர். புன்னகைத்தபடியே, ‘‘தங் களின் அன்புக்கு நன்றி. இங்கே எனக்கு வேண்டிய எல்லா சவுகரியங்களும் உள்ளன. ஆனால், நிறைய தமிழர்கள் என்னைப் பார்க்க வருவார்கள். கட்டுப்பாடுகள் நிறைந்த ஆளுநர் மாளிகைக்குள் அவர்களால் நுழைய முடியாது. அவர்களுக்கு சவுகரியமான இடத்தில் நான் இருக்கணும்’’ என்று சொல்லிவிட்டு ஆளுநர் மாளிகையில் இருந்து கிளம்பிவிட்டார்.
ஆளுநர் மாளிகை அமைந்திருக்கும் ‘டல்ஹவுசி சதுக்கம்’ என்ற பகுதியிலேயே இருந்த ஒரு ஓட்டலில் தங்கினார். தன் னுடன் வந்த உதவியாளர்கள், தமிழக அரசு அதிகாரிகளையும் அதே ஓட்டலில் தங்க வைத்தார். அரசு சார்பில் ராஜ போகங்களுடன் இலவசமாக தங்கு வதற்கு வாய்ப்பு இருந்தும் தன்னைப் பார்க்க வரும் தமிழர்களின் வசதிக்காக சொந்த செலவில் ஓட்டலில் தங்கினார் எம்.ஜி.ஆர்.
அவர் வரும் தகவல் பற்றி பெரிய அளவில் கொல்கத்தாவில் விளம்பரம் செய்யப்படவில்லை. இருந்தாலும் தன் னைப் பார்க்க தமிழர்கள் வருவார்கள் என்ற எம்.ஜி.ஆரின் கணிப்பு தவற வில்லை. கொல்கத்தாவில் வாழும் தமிழர்களுக்கு விஷயம் தெரிந்து சில மணி நேரங்களில் எம்.ஜி.ஆரைப் பார்க்க ஓட்டலுக்கு கூட்டமாக வர ஆரம்பித்துவிட்டனர்.
அப்படி வந்தவர்களில் பெரும் பாலோர் சாதாரண மக்கள். எம்.ஜி.ஆரை விழிகளால் விழுங்கியபடியே அவரது கையை குலுக்கியும் காலில் விழுந்து வணங்கியும் மகிழ்ச்சியையும் அன்பை யும் வெளிப்படுத்தினர்
அவரைப் பார்த்துவிட்டு வெளியே வந்த சாதாரண மக்களின் கைகளில் எம்.ஜி.ஆர். ஏற்பாட்டின்படி அவரது உதவியாளர் மாணிக்கம் பணத்தை திணித்து அனுப்பினார். மக்கள் எம்.ஜி.ஆரை வாழ்த்திச் சென்றனர்.
தமிழ்ச்சங்கக் கட்டிடத் திறப்பு விழா வுக்கு மறுநாள் காலை, திடீரென தான் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து புறப்பட்டு சாலையில் இறங்கி எம்.ஜி.ஆர். நடக்க ஆரம்பித்து விட்டார். அங்கு வந்திருந்த தமிழ்ச் சங்க நிர்வாகிகளும் எம்.ஜி.ஆரோடு நடந்தனர். சாலையில் கொய்யாப் பழம் விற்றுக் கொண்டிருந்த வயதான தமிழ்ப் பெண்ணிடம் ‘‘பழம் என்ன விலை?’’ என்று ஜாலியாக கேட்டார். அந்த மூதாட்டியும் சளைக்கவில்லை. எம்.ஜி.ஆரை பார்த்த மகிழ்ச்சியில் அந்த மூதாட்டி, ‘‘உனக்குப் போய் விலை சொல்ல முடியுமாய்யா? எல்லாமே உனக் குத்தான் எடுத்துக்கோ’’ என்று கூறினார்.
அந்த மூதாட்டி நினைத்துப் பார்க்காத தொகையை அவர் கையில் திணித்த எம்.ஜி.ஆர்., கூடையில் இருந்த பழங் களை எடுத்து அருகே இருந்தவர்களுக்கு கொடுத்துவிட்டு அந்த மூதாட்டியிடமும் பழத்தைக் கொடுத்து ‘‘நீயும் சாப்பிடு’’ என்றார். அந்த மூதாட்டிக்கு அழுகையே வந்துவிட்டது. ‘‘நீ நல்லா இருக்கணும் ராசா’’ என்று கூறிக் கொண்டே காலில் விழ முயன்றவரை தடுத்து அணைத்து ஆறுதல் கூறினார் எம்.ஜி.ஆர்.!
‘நாடோடி மன்னன்' படத்தில் நாடோடி யாக இருந்த எம்.ஜி.ஆர், சூழ்நிலை காரணமாக மன்னனாக நடிப்பார். ஒரு காட்சியில் எம்.ஜி.ஆர். பேசும் புகழ் பெற்ற வசனம் இது: ‘‘நீங்கள் மாளிகை யில் இருந்து கொண்டு மக்களை பார்க் கிறீர்கள். நான் மக்களோடு இருந்து மாளிகையை கவனிக்கிறவன்.’’
http://i65.tinypic.com/25piaf4.jpg
எம்.ஜி.ஆரின் 100-வது படம் ‘ஒளிவிளக்கு’. 1968-ம் ஆண்டில் வெளியாகி அமோக வெற்றி பெற்றது. மதுரையில் 21 வாரங்கள் ஓடியது. மறு வெளியீடுகளிலும் சக்கைபோடு போட்டது. 1979-ம் ஆண்டு இலங்கையில் மறு வெளியீட்டிலும் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது ‘ஒளிவிளக்கு’.
உலகத் தமிழ் மாநாட்டை முன்னிட்டு பிரபலமான நாடகக் குழுக்களின் நாடகங்கள் டிக்கெட் எதுவுமின்றி மதுரையில் நடத்த ஏற்பாடு செய்திருந்தார் வாத்யார். ஆர்.எஸ்.மனோகரின் ‘ஒட்டக் கூத்தன்' நாடகத்தைப் பார்த்து அவரின் அரங்க அமைப்புகளில் அதிசயித்துப் போனான் இவன். (நாடகம் என்ற வடிவத்தை இவன் கண்டதும் வாழ்வில் அதுவே முதல் முறை). அதற்கடுத்த தினம் மதுரைக் கல்லூரியில் மேடை அமைத்து மேஜர் சுந்தரராஜனின் ‘கல்தூண்' நாடகம் நடந்தது. இவனும் இவன் சித்தப்பாவும் (சித்தி அங்கே வேலை பார்த்ததால்) வி.ஐ.பி. அந்தஸ்து பெற்று மேடையிலிருந்து இரண்டாவது வரிசையில் மணல் தரையில் உட்கார்ந்திருக்கின்றனர். ஆமாம்... சேர் எல்லாம் போட்டுப் படுத்தாமல் மணலும் புல்லும் கலந்த தரையில் அமர்ந்துதான் அனைவரும் இலவச நாடகங்கள் பார்த்தது. நாடகம் துவங்கி அரைமணி நேரம் இருக்கும். திடீரென்று அரங்கில் சளசளவென்று பேச்சொலிகள். நடித்துக் கொண்டிருந்த மேஜர், நடிப்பதை நிறுத்தி கை உயர்த்திக் கும்பிடுகிறார். யாரையென்று தலையைத் திருப்பிப் பார்த்தால்... வாத்யார் பரிவாரங்கள் சூழ வந்து கொண்டிருக்கிறார். திடீரென்று அன்று அவர் நிகழ்ச்சி ஏதோ ஒன்று ரத்தாக, சர்ப்ரைஸ் விஸிட்டாக நாடகம் பார்க்க வந்திருக்கிறார் என்பது பின்னர் தெரிந்தது.
அவர் முதல் வரிசையில் இவனுக்கு அடுத்திருந்த நபருக்கு அருகே, தனக்காக போடப்பட்ட சேர்களை மறுத்துவிட்டு, புல் தரையிலேயே வாத்யார் அமர... அத்தனை நெருக்கத்தில் அவரைக் கவனித்த சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனான் அவன். மின்னல் போலக் கடந்து மேடைக்கு சென்றபோது பார்த்ததை விட இப்போது அருகில் பார்த்ததில் முதலில் இவனைக் கவர்ந்தது அவரின் நிறம். ‘‘என்னா செவப்புய்யா! இந்த ஆளு என்ன எளவுக்கு மேக்கப்லாம் போட்டு நடிச்சாரு? அப்படியே வந்து நின்னிருந்தாலே போதுமே" என்கிற எண்ணத்தை இவனில் தோன்றச் செய்தது அவரின் செக்கச் சிவந்த தங்க நிறம். அதன்பிறகு நாடகத்தை எங்கே பார்த்தான்...? வாத்யாரின் முகத்தையல்லவா பார்த்துக் கொண்டிருந்தான். நகைச்சுவைக் காட்சிகளில் அவர் வாய்விட்டுச் சிரிப்பதையும், உணர்ச்சிகரமான காட்சிகளில் கூர்ந்து கவனிப்பதையும், பிடிக்காத வசனங்கள் வருகையில் லேசாய் முகம் சுளிப்பதும் ஆக இவன் பார்த்த நாடகம் வாத்யாரின் முகத்தில்தான் ஓடிக் கொண்டிருந்தது.
நாடகம் முடிந்ததும் மேஜர் வந்து வாத்யாரின் காலில் விழுந்து ஆசி பெற்று, மரியாதையுடன் அழைத்துச் சென்று மேடையேற்ற, நாடகத்தில் நடித்த எவரையும் விட்டுவிடாமல் வசனங்கள் உட்பட வாத்யார் குறிப்பிட்டுப் பாராட்டியதைக் கண்டு அசந்துதான் போனான் இவன். குட்ட வேண்டியதை மிக நாசூக்காகக் குட்டியதும, பெரும்பாலும் நல்ல அம்சங்களை மட்டுமே எடுத்துச் சொல்லிப் பாராட்டிய பாங்கும் இவனுக்கு ரொம்பவே பிடித்திருந்தது. மேடையில் தான் பார்த்து ரசித்த கதாநாயகனை நிஜத்திலும் ரசிக்க முடிந்ததில் கொள்ளை கொள்ளையாய் சந்தோஷம் இவனுக்கு. நல்ல சுவையான சாக்லெட்டை மென்று முடித்த பின்னும் நாவில் அதன் இனிப்பு நிறைய நேரம் தங்கியிருப்பது போல வாத்யாரைப் பார்த்த மகிழ்வு இவனிடம் தங்கியிருந்தது. சக மாணவர்களிடம் (இதை நிறுத்தறியா, இல்ல... உதை வேணுமான்னு பசங்க சீர்ற அளவுக்கு) பல மாதங்கள் அதைச் சொல்லியே பெருமையடித்துக் கொண்டான் இவன்.
இத்தனைக்கும் பிறகு இன்று மீண்டும் இதை நினைத்துப் பார்க்கையில் இவன் மனதில் தோன்றுகிற எண்ணம் இதுதான். ‘‘அடடா! அவ்வளவு கிட்டத்துல வாத்யாரைப் பாத்தியே... ஒரு ஆட்டோகிராப் வாங்கியிருக்கலாம். அட்லீஸட் அவரை கை குலுக்கியாவது பார்த்திருந்திருக்கலாம். சான்ஸைக் கோட்டை விட்டுட்டியேடா!" ஹும்...! என்ன இருந்தாலும் மனித மனம் பாருங்கள்...!
courtesy - BALAGANESH - NET
வாத்தியாரே ...
இந்த வார்த்தையை நடிகர் தங்கவேலு எம்ஜிஆரின் விக்கிரமாதித்தன் படத்தில் உச்சரிக்கும் விதமே தனி பாணி .
அதே போல் நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசன் பல படங்களில் எம்ஜிஆரை வாத்தியார் என்று குறிப்பிடும் காட்சிகள் சூப்பர் .
நடிகர் சோவும் சில படங்களில் எம்ஜிஆரை வாத்தியார் என்று சொல்லும் காட்சிகள் சிறப்பாக அமைந்திருந்தது .
குமரிக் கோட்டம் படத்தில் ஜெயலலிதா சில இடங்களில் வாத்தியாரே என்று அழைப்பார் .
நம்நாடு படத்தில் வாங்கய்யா வாத்தியார் அய்யா என்ற பாடலை பாடினார் ..
https://youtu.be/87MLIhDd2q4
கம்பெடுத்து சண்டை போடும் வாத்தியாரு என்று லதா உரிமைக்குரலிலும் , சொல்லிதர ஒரு வாத்தியார் என்று மீனவநண்பன் படத்திலும் பாடினார் .
http://i67.tinypic.com/14lj8lf.jpg
நமது எம். ஜி. ஆர். பத்திரிகை செய்தி. அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கத்தின் சார்பில் காப்பாளர் ஏ. ஹயாத் மற்றும் பொருளாளர் திரு. கே. பாபு அவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர். (வலமிருந்து இடம் : கே . பாபு, ஏ. ஹயாத்)
watch from 7.30 mins onwards..
CHO ABOUR OUR MAKKAL THILAGAM MGR.
https://youtu.be/NiPr8QOHLkQ
பணம் படைத்தவன் . 27.3.2016
52 வது ஆண்டு துவக்கம்
27.3.1965 ''பணம் படைத்தவன் ''
விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை அமைத்த கடைசி படங்களில் ஒன்று. டி.ஆர். ராமண்ணா இயக்கம். வாலியின் பாடல்கள். எம்ஜிஆரைத் தவிர ஸௌகார் ஜானகி, கே.ஆர். விஜயா, நாகேஷ், டி.எஸ். பாலையா, அசோகன், மனோகர் நடித்திருக்கிறார்கள். நன்றாக ஓடியிருக்கும் என்று நினைக்கிறேன்.
நான் ஆச்சரியப்பட்ட விஷயம் இது ஒரு செண்டிமெண்டல் படமாக இருந்ததுதான். வில்லன்களின் சதி, அவற்றை முறியடிக்கும் திட்டங்கள் எதுவுமே இல்லை. எம்ஜிஆருக்கு சண்டை போடக்கூட பெரிய ஸ்கோப் இல்லை. மனோகருடன் க்ளப்பில் ஒரு சண்டை, அசோகனுடன் கல்யாண மண்டபத்தில் பேருக்கு ஒரு சண்டை, அசோகனுடன் ஒரு க்ளைமாக்ஸ் சண்டை, அவ்வளவுதான். மனோதருக்கும் அசோகனுக்கும் பேருக்கு கூட ஒரு அடியாள் இல்லை. எப்போதும் தென்படும் ஜஸ்டின், குண்டுமணி போன்ற யாருமே இல்லை.
எம்ஜிஆர் பணக்கார ஸௌகார் வீட்டு வேலைக்காரி கே.ஆர். விஜயாவை காதலிக்கிறார், தம்பி நாகேஷுக்காக ஸௌகாரையெ கல்யாணம் செய்து கொள்கிறார், நாகரீகத்தின் அபாயங்களை ஸௌகாருக்கும் படம் பார்க்கும் பெண்களுக்கும் எடுத்து சொல்கிறார், தன் தவறுகளை உணரும்போது சரியாக ஸௌகார் இறந்ததும் முகத்தை கையில் புதைத்துக்கொண்டு அழுகிறார், பிறகு கே.ஆர். விஜயாவை அப்பா பாலையாவை எதிர்த்து கல்யாணம் செய்து கொள்கிறார், “எனக்கொரு மகன் பிறப்பான்” என்று பாடுகிறார், பிறந்த மகனை கொடுத்துவிடும் மனைவியை பார்த்து “மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க” என்று இன்னொரு பாட்டு பாடுகிறார், கடைசியில் ரசிகர்கள் பிழைத்துப் போகட்டும் என்று அசோகனுடன் ஒரு சண்டை போட்டுவிட்டு குடும்பத்தை இணைக்கிறார். பெற்றால்தான் பிள்ளையா ஒன்றுதான் அவரது செண்டிமெண்டல் படம் என்று நினைத்தேன், இதுவும் அந்த ரகம்தான்.
படத்தில் ஸௌகார் கொஞ்சம் ஈகோ உள்ள பணக்காரக் குடும்பத்து பெண்ணை அவர் கொண்டு வந்தது சிறப்பாக இருந்தது. முதல் இரவில் ஹாஸ்பிடலில் இருக்கும் காதலி கே.ஆர். விஜயாவை பார்க்க எம்ஜிஆர் போய்விடுவார். தான் போவது சரி என்பதற்காக நிறைய வசனமும் பேசுவார். இப்போது பார்த்தால் எம்ஜிஆரை மேல் ஷாவினிஸ்ட் என்று சொல்லிவிடுவார்கள். அடுத்த இரவு ஸௌகார் அந்த வசனங்களை திருப்பி எம்ஜிஆரிடம் சொல்லிவிட்டு க்ளப்புக்கு போவார். அந்த காட்சியில் நன்றாக நடித்திருந்தார். இன்றைய பெண்கள் விசில் அடிக்கலாம்.
சிறு பிள்ளைத்தனம் என்றாலும் எம்ஜிஆரும் நாகேஷும் இரவில் அறையை விட்டு வெளியேற முயற்சி செய்யும் காட்சி எனக்கு பிடித்திருந்தது. அதுவும் இருவரும் தரையில் ஊர்ந்து வந்து ஒருவரை ஒருவர் பார்க்கும்போது நாகேஷ் தந்தால் எடுக்கிறேன் என்று சமாளிக்கும்போது நான் சிரித்தேன்.
7 பாட்டுகள். எல்லாமே நல்ல பாட்டுகள். “பவளக் கொடியிலே முத்துக்கள் பூத்தால்” பாட்டில் எம்ஜிஆரும் கே.ஆர். விஜயாவும் முகலாய உடையில் வந்து ஆடிப் பாடுவது எம்ஜிஆர் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று. எல்.ஆர். ஈஸ்வரியின் ஹம்மிங் சூப்பர்! டி எம் எஸ்ஸும் கலக்குவார்.
“கண் போன போக்கிலே” எம்ஜிஆரின் தத்துவ பாட்டு லிஸ்டுகளில் தவறாமல் இடம் பெறுவது. டிஎம்எஸ், வாலியின் நல்ல பாட்டு.
“அந்த மாப்பிள்ளே காதலிச்சான் கையப் புடிச்சான்” எனக்கு மிகவும் பிடிக்கும். சுசீலாவின் குரலில் இருக்கும் ஒரு கொஞ்சல் அபாரம்! டி எம் எஸ் அதற்கு பதில் பாட்டு பாட “ஒஹொஹொ ஒஹொஹொ” என்று ஆரம்பிக்கும் இடம் அருமை. எம்ஜிஆர் சூப்பர் ஸ்டெப் போடுகிறார். Really fancy footwork. கே.ஆர். விஜயா நல்ல அழகாக இருக்கிறார், டான்ஸ் ஆடுகிறார்.
“தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவர் இல்லை” ஒன்றுதான் இன்னும் யூட்யூபில் இருக்கிறது.
“எனக்கொரு மகன் பிறப்பான்”, “மாணிக்கத் தொட்டில் அங்கிருக்க”, “பருவத்தில் கொஞ்சம்” பாட்டுக்களும் பிரபலமானவையே.
COURTESY - RV
ALL ROUNDER IN SPORTS - MAKKAL THILAGAM M.G.R
https://youtu.be/4pMA4NC5Tns
http://s23.postimg.org/kzt89iy57/IMG...325_WA0023.jpg
Makkal Thilagam Devotee at Royal Theatre - Coimbatore
Courtesy - Mr.Samuvel - Sathy.
http://s30.postimg.org/59uj0wzap/IMG...326_WA0001.jpg
Makkal Thilagam Devotee at Royal Theatre - Coimbatore
Courtesy - Mr.Samuvel - Sathy.
என்னிடம் ஒரு நண்பர்
நீ என்ன ஜாதி என்று கேட்டார்
நான் கம்பீரமாக உரத்தக்குரலில்
சொன்னேன் எம்.ஜி.ஆர்
அவர் எப்படி என்று கேட்டார்
எங்கள் ஜாதி எம்.ஜி.ஆர்
எங்கள் மதம் எம்.ஜி.ஆர்
எங்கள் இனம் எம்.ஜி.ஆர்
எங்கள் குலம் எம்.ஜி.ஆர்
ஜாதி மதம் இனம் வெறிகளுக்கு அப்பாட் பட்ட தலைவர் எம்.ஜி.ஆர்
நாம் வணங்கும் தெய்வம் எம்.ஜி.ஆர்
courtesy net
சன் லைப் தொலைக்காட்சியில் காலை 11 மணி முதல் மக்கள் திலகம் எம்.ஜி. ஆர்.
நடித்த "ரிக்ஷாக்காரன் " ஒளிபரப்பாகி வருகிறது .
http://i65.tinypic.com/96j1jk.jpg
கடந்த வியாழன் அன்று (24/03/2016) சன் லைப் தொலைக்காட்சியில் திரை எழில்
வேந்தன் எம்.ஜி.ஆர். நடித்த "ராமன் தேடிய சீதை " இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகியது
http://i68.tinypic.com/29q1lc7.jpg
http://i64.tinypic.com/29cxi1j.jpg
நாளை (27/03/2016) காலை 11 மணிக்கு , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். வழங்கும்
"நம் "நாடு " சன் லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.
திரையுலகை இன்றும் ஆளும் தீர்க்கதரிசி
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் திரைப்படங்கள் இன்றைக்கும் பொருந்தும் படியான காட்சி அமைப்புகள், பாடல்கள், இசை என அனைத்தும் ஒரு சேர அமைந்திருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும். இன்றைய தலைமுறை நடிகர்களும் அவருடைய பாணியையே பின்பற்றி நடிப்பதை பல படங்களில் காண முடிகிறது. அவரைப்பற்றிய வசனங்கள் காட்சிகள் தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிறைய படங்களில் காணலாம். உதாரணமாக, ரஜினிமுருகன் படத்தில் ஹீரோயின் சிவகார்த்திகேயனைப் பார்த்து இவர் எம்ஜிஆர்... வாரி வழங்கறார் என்பார். அதே போல், ராஜ்கிரண் இறப்பு போன்ற காட்சியில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் ஓடி கொண்டிருக்கும்...நடிகர் சூரி அங்கிருந்தவர்களிடம் ..அங்கே எம்ஜிஆர் படம் போட்டிருக்கு எல்லாம் போங்க என்பார். பஞ்சாயத்து காட்சியில் வில்லன் சமுத்திரகனி எங்க தாத்தாவும் நீங்களும் ஓடி ஓடி எம்ஜிஆர் படம் பார்த்ததை மறந்துட்டிங்களா. என்பார். அதற்கு ராஜ்கிரண் நான் ஓடி ஓடி எம்ஜிஆர் பார்த்தது உண்மைதான் என்பார்.
அதே போன்று 'புகழ்' திரைப்படத்திலும் நடிகர் ஜெய் 'கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் என்று பாடுவார். மேலும் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் ஏன் என்ற கேள்வி பாடலை விரும்பி பார்ப்பார். அநீதியைக் கண்டால் கொதித்தெழும் பாத்திரமாக ஜெய் தோன்றுவதால், எம்ஜிஆர் ரசிகராகவும், கொள்கைப்பாடல்களை விரும்பி பார்ப்பது போன்றும் காட்சி அமைத்திருக்கிறார்கள். இதைப் போன்று இன்றைய திரையுலகில் வெளியாகும் பெரும்பாலான திரைப்படங்களில் இத்தகைய காட்சிகள் இடம்பெறுகின்றன..காரணம் என்னவென்றால்....
அன்றும் இன்றும் என்றும் விரும்பும் காட்சிகளை தலைவர் தனது தீர்க்க தரிசனத்தால் அமைத்ததாலும், என்றும் அவர் மக்களால் விரும்பப்படுவதாலும்தான் இன்றளவிற்கும் அவரது படங்கள் விரும்பப்படுகின்றன; அவரது பாடல்கள் மற்றும் காட்சிகள் திரைப்படங்களில் இடம்பெறுகின்றன..
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
வெள்ளி (25/03/2016) முதல் , சென்னை சரவணாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் பாக்யராஜ் நடித்த "அவசர போலீஸ் 100 " தினசரி 3 காட்சிகள்
நடைபெறுகிறது
2016 ம் ஆண்டில் 5 வது இணைந்த எம்.ஜி.ஆர். வாரம்.
http://i63.tinypic.com/2e1hs37.jpg