http://i66.tinypic.com/2w69u6t.jpg
Printable View
http://i67.tinypic.com/1jw7e1.jpg
தீபாவளி திருநாள் முதல் கோவை ராயல் திரையரங்கத்தில், மக்களின் மனங்களைக் கொள்ளையடித்து நிரந்த ஆட்சி செய்யும் மக்கள் தலைவர் மருத்துவர் மணிமாறன் வரப் போவதாக தகவல் கிடைத்துள்ளது. கோவையில் இப்போதே போஸ்டர்கள் ஒட்டப்பட்டு நகரெங்கும் புரட்சித் தலைவர் ஜொலிக்கிறாராம்.
என்றென்றும் புரட்சித் தலைவரின் புகழ்க்கொடி பறக்கும் கோட்டையாம் மண் மணக்கும் எங்கள் மதுரையில் சென்ட்ரல் திரையரங்கத்தில் கோடீஸ்வர ஜே.பி. கோலாகலமாக வருவதற்கு இன்னும் 5 நாட்கள்தான் உள்ளன.
இன்று இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். (புகழ்) "பல்லாண்டு வாழ்க " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i65.tinypic.com/28vu251.jpg
http://i63.tinypic.com/2dac32p.jpg
'அரச கட்டளை'பிறந்த கதை
1962ல் தேர்தல் பிரச்சாரத்துக்காக எம்.ஜி.ஆர். செல்லும்போது கும்மிடிப்பூண்டி இரயில் நிலையம் பிரதான சாலையில் ஒரு இரயில்வே கேட் அப்போது பிரசித்தம்.மூடினால் சீக்கிரம் திறக்கமாட்டார்கள்.அங்கு எம்.ஜி.ஆரின் வண்டி நின்றது.எம்.ஜி.ஆரின் காருக்கு முன்னே ஒரு கருப்புநிற அம்பாசிடர் கார் நின்றிருந்தது."அது யார் கார்--?காமராசர் ஐயா கார் மாதிரி தெரியுதே.சபாபதி,போய் பார்த்து விட்டு வா"என்றார் எம்.ஜி.ஆர்.
உதவியாளர் சபாபதியும் போய் பார்த்து விட்டு"ஆமாங்க அவங்கதான்"என்றார்.உடனே எம்.ஜி.ஆர் காரை விட்டு இறங்கி போய் காமராசருக்கு வணக்கம் சொன்னார்.காமராசரும் கீழே இறங்கப் போனதைப் தடுத்து,"இதென்ன தனியே பாதுகாப்பு இல்லாமல்?"என்று கேட்டார்.அப்போது காமராசர் முதல்வர்.
"என்னை யார் என்ன செஞ்சுடப்போறாங்க எனக்கு செக்யூரிடி வச்சுக்க? என்றார்.இருவரும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு எம்.ஜி.ஆர் தனது காரில் வந்தமர்ந்தார்.
அப்பொழுது தன்னுடன் பயணம் செய்த எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் வசனகர்த்தா ரவீந்திரனிடம் "என் அடுத்த கதைக்கு ஒரு ஐடியா கிடைத்து விட்டது.நம் காமராஜ் ஐயாவை மனதில் வைத்து ஒரு கதை செய்யவேண்டும்.ஒரு நாட்டு்க்கு உண்மையான அரசன் யாருன்னா,கத்தியில்லாமல் தனக்கு சவால் இல்லாமல் யார் மக்கள் மத்தியில் வலம் வரானோ அவன்தான்.இதை வச்சு கதை எழுதனும்.நான் அல்ல டைரக்டர்.என் அண்ணனைச் செய்ய சொல்லப் போகிறேன்."என்றார்.
இதுதான் 'அரசக்கட்டளை'படம் பிறக்க காரணமான சம்பவம்.
பி.கு:இந்த படம் என்ன காரணத்தாலோ நீண்ட நாள் தயாரிப்பில் இருந்தது.முதலில் இப்படம் 'பவானி'என்ற பெயரில் தயாரானது.பின்னர் பல மாற்றங்களுடன் 'அரசக்கட்டளை'என்ற பெயரில் வெளி வந்தது.
http://i67.tinypic.com/2ch5cm9.jpg
நன்றி . வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி முகநூல் பக்கத்தி்ல் இருந்து.
“எனக்கு ஒரு பிரச்சினை..”என்று ஒருபோதும் சொல்லாதீர்கள்...
பிரச்சினை என்று சொன்னாலே கவலையும் , பயமும் கட்டாயம் வரும்....
"எனக்கு ஒரு சவால் “என்று சொல்லிப் பாருங்கள் ...தைரியமும் ,தன்னம்பிக்கையும் தானாகவே வரும்..”
ஆம்..நிஜம்தானே..!
“காவல்காரன்” என்று ஒரு படம்.. எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்ட பின் எம்.ஜி.ஆர்.நடித்த படம்.... ஷூட்டிங் ஆரம்பமானது..
வசனம் பேசி நடித்தபோது , எம்.ஜி.ஆரின் குரலில் குறை தெரிந்தது..முன்னர் பேசியது போல் தெளிவாகப் பேச முடியவில்லை..
“பொருத்தமான குரல் உடையவர்களைக் கொண்டு டப்பிங் கொடுத்து இந்தப் பிரச்சினையை சரி செய்து விடலாம் ” என்று சிலர் யோசனை சொல்லியிருக்கிறார்கள்...
ஆனால், எம்.ஜி.ஆர். இதை ஏற்க மறுத்து விட்டாராம்...
“இது பிரச்சினை இல்லை..எனக்கு ஏற்பட்டிருக்கும் சவால்...
நானே என் சொந்தக் குரலில் பேசுகிறேன். மக்கள் ஏற்றுக் கொண்டால் தொடர்ந்து நடிக்கிறேன். ஒருவேளை என் குரலை ஏற்றுக் கொள்ளாவிட்டால் , சினிமாவில் நடிப்பதையே விட்டு விடுகிறேன்” என்று சவால் விட்டுக் கூறி , அதன்படியே, எம்.ஜி.ஆர். சொந்தக் குரலில் பேசினார்...
பலத்த எதிர்பார்ப்போடு வந்தான் காவல்காரன்...
படத்தின் சில இடங்களில் எம்.ஜி.ஆரின் குரல் தெளிவாக இல்லாவிட்டாலும், ரசிகர்கள் அதைப் பெரிய பிரச்சினை ஆக்காமல் ஏற்றுக் கொண்டார்கள்..!
.
“காவல்காரன்” ...சூப்பர்ஹிட்..!!.
"வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்"
ஆம்...பிரச்சினைகள் என்று நினைப்பவர்கள் ,பின்தங்கி விடுகிறார்கள்...!!!
சவால்களை சந்திப்பவர்களே சரித்திரம் தன்னிலே நிற்கின்றார்கள் ...!!!
சந்திக்கத் தயாராவோம்..சவால்களை...!!!
http://i67.tinypic.com/33pa2yx.jpg
நன்றி - ஜான்துரை ஆசீர் செல்லையா முகநூல் பக்கத்தில் இருந்து.
மதுரை மாநகர் அரவிந்தில் கடந்த வெள்ளி (21/10/2016) முதல் தென்னக ஜேம்ஸ் பாண்டாக , மக்கள் திலகம் .எம்.ஜி.ஆர் .நடித்த "ரகசிய போலீஸ் 115" வெற்றி நடை
போடுகிறது. அதன் சுவரொட்டிகளின் புகைப்படங்கள் அனுப்பி உதவிய மதுரை
நண்பர் திரு. எஸ். குமார் அவர்களுக்கு நன்றி.
http://i67.tinypic.com/10e1pvr.jpg