http://i65.tinypic.com/i4o0t1.jpg
Printable View
http://i67.tinypic.com/fcs8ep.jpg
ஆசை டிவி அலுவலகத்தின் தோற்றம்
http://i66.tinypic.com/1htnko.jpg
நடிகை லதா ஆசை டிவி அலுவலகத்திற்கு வருகை .
நடிகை லதாவிற்கு பூச்செண்]டு அளித்து வரவேற்கிறார் திரு.சிரஞ்சீவி அனீஸ்.
http://i64.tinypic.com/faveyq.jpg
நடிகை லதா. ஆசை டிவி அலுவலகத்தை திறந்து வைக்கிறார் .
http://i64.tinypic.com/30b31q0.jpg
நடிகை லதா.விற்கு வரவேற்பு .
http://i63.tinypic.com/24cfp78.jpg
புரட்சித் தலைவரின்
பக்தர்களே
ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்பே
தங்கத்தில் நிறமெடுத்து
சந்தனத்தில் உடலெடுத்து
மங்கையென்று
வந்திருக்கும் மலரோ
மீனவ நண்பன் பட பாடல்
உருவான விதம்
உங்கள் பார்வைக்கு
சில பாடல்கள் உருவான விதம் பாடல்களைக் காட்டிலும் சுவாரஸ்யமாக இருக்கும்.அது மீனவ நண்பன் படப்பிடிப்புத் தளம்.ஷாட்டின் இடைவேளையில் ஓய்வில் இருக்கிறார் மக்கள் திலகம்.பாடலாசிரியர் முத்துலிங்கம் அவரைக் காண வருகிறார்.
வணக்கம் தலைவரே.அவர் அப்படித் தான் அழைப்பார்.வாப்பா பேமெண்ட் எல்லாம் வந்துச்சா?.என்ன பேமெண்ட் தலைவரே.?.இந்தப் படத்திற்கு பாட்டெல்லாம் நான் எழுதலையே.?.
பாட்டில்லையா?. உனக்கு ஒரு பாட்டு குடுக்கச் சொன்னேனே? .யாரு தயாரிப்பு நிர்வாகி? .கூப்பிடு அவரை.நிர்வாகி வருகிறார்.ஐயா நான் சொல்லீட்டேங்க.படம் ஆல்மோஸ்ட் முடிஞ்சிடுச்சிங்க.பாட்டுக்கு சிச்சுவேஷன் இல்லைன்னுட்டாங்கையா.
யார் சொன்னது?. ஸ்ரீதரைக் கூப்பிடுங்க. சானா இருக்காரா பாருங்க.ரெண்டு பேருமே இருக்காங்க.கூப்பிட்டேண்ணு சொல்லுங்க.
இருவரும் வருகிறார்கள்.ஏங்க முத்துலிங்கத்துக்கு ஒரு பாட்டு குடுக்கச் சொன்னேனே ஏன் குடுக்கல.?.
அது வந்துங்க படம் ஏறக்குறைய முடிஞ்சு போங்சுங்க.ரெக்கார்டிங் மட்டும் பாக்கி.ஏம்பா ஸ்ரீதர் பாட்டுக்கு ஏதாவது சிச்சுவேஷன் இருக்கா என்ன?.ஸ்ரீதர் இல்லை என்கிறார்.
ஏன் இருக்காது?.முத்துலிங்கத்துக்கு ஒரு ட்ரீம் சாங் கொடுங்க? .அதுக்கும் இடமில்லைங்களே.சிச்சுவேஷன் எங்கேயும் இல்லைங்களே.
ஏங்க எனக்கே சொல்லித் தர்ரீங்களா?.அதுவே ட்ரீம் சாங்.அதுக்கு எதுக்கு சிங்சுவேஷன்.அன்பே வாவில ராஜாவின் பார்வை பாட்டுக்கு எங்கே சிச்சுவேஷன் இருந்தது.ரெண்டு பேரும் பார்த்தாலே ட்ரீம் சாங் தானே.
சானா என்ற சடையப்ப செட்டியார் நெளிந்தார்.இவர் நம்மை சடையப்ப வள்ளலாக்க முடிவு செய்துவிட்டார்.இன்னொரு செலவு வைக்கப்போறார் என்ற முடிவோடு ஸ்ரீதரைப் பார்க்க ஸ்ரீதரோ போட்டுறலாங்க என்கிறார்.சரிங்க முத்துலிங்கத்துக்கு ஒரு பாட்டு கொடுத்துரலாங்க என இருவரும் அங்கிருந்து நகர போப்பா போய் பாட்டெழுதி பேமெண்ட் வாங்கிக்க என முத்துலிங்கத்தை அனுப்பி வைக்கிறார்.
மக்கள் திலகத்தின் தனிப் பண்பே அது தான்.தம்மை நம்பியிருக்கும் கலைஞர்களை அவர் கைவிட்டதே இல்லை.சிறு பங்காவது அவர்களுக்குக் கொடுத்து அவர்கள் வீட்டில் அடுப்பெரிக்க வைப்பார்.முத்துலிங்கத்திற்கு இனிமேல் தான் தலைவலியே.
இயக்குநர் சொல்லி எம்.எஸ்.வி. பாட்டுக்கு அழைக்கிறார்.வாத்தியாரைய்யா பல்லவி குடுங்க என்கிறார்.முத்துலிங்கத்தை அப்படித் தான் அழைப்பார்.முத்துலிங்கம் பல்லவி போடுகிறார்.
அழகுகளே உன்னிடத்தில் அடைக்கலம்
அங்கங்களோ மண்மதனின் படைக்கலம்.
ஸ்ரீதருக்கு இந்தப் பல்லவி பிடிக்கவில்லை.அடைக்கலம் நல்லாயிருக்கு இந்த படைக்கலத்தை கொஞ்சம் மாத்திக்குடுங்களே என்கிறார்.படைக்கலம்ணா போர்க்கலம் தானே.இதெப்படி இங்கு வரும்.
சார் படைக்களம் அப்படீண்ணா தான் போர்க்கலம்.இது படைக்கலம்.பண்டங்கள் அப்படீண்ணு அர்த்தம்.அங்கங்களை மண்மதனின் பண்டங்களாக....
என்ன சார்.ஈசியா போட்டுக்குடுங்க சார் என்கிறார் ஸ்ரீதர்.மெல்லிசை மன்னரோ படைக்கலம் கூட பரவாயில்லைங்க.இந்த அடைக்கலத்தை மாத்தியே ஆகணும்.முத்துலிங்கத்திற்கு தலையே சுற்றியது.இவர் படைக்கலத்தை தூக்கச் சொல்கிறார்.அவர் அடைக்கலத்தை தூக்கச் சொல்கிறார்.மன்னர் அதற்கு சொன்ன காரணம் தான் முத்துலிங்கத்திற்கு சிரிப்பை வரவழைத்தது.
வாத்தியாரைய்யா நீங்க பாட்டுக்கு அடைக்கலத்தை போடுவீங்க.உண்மையிலேயே ஒரு அடைக்கலம் வந்து நிற்பார்.இப்படித்தான் ஒரு பாட்டுக்கு தஞ்சை ராமையதாஸ் மாட்டினார்.எதுக்குங்க என்றார் அப்பாவியாக முத்துலிங்கம்.ஒரு பழைய பாட்டுங்க.அவர் ஆனந்தக் கோனாரே அறிவு கெட்டுத்தான் போனாரே அப்படீண்ணு எழுதி படமும் ரிலீஸாச்சு.உண்மையிலேயே ஆனந்தக் கோனார் என்பவர் வந்து நின்று கத்தினார்.அவரு சாணாரண ஆளில்லை.தஞ்சாவூர் கோனார்கள் சங்கத் தலைவரு. ராமையதாஸூக்கும் அவருக்கும் ஆகாதுபோல.கேஸூப்போட்டு உள்ள துள்ளுவேண்ணு கத்துறாரு.அப்புறம் ஒரு வழியா சமாதானம் பண்ணி அனுப்பிவெச்சோம்.அந்த மாதிரி யாராவது அடைக்கலம் வந்து நிக்கக் கூடாது பாருங்க.
முத்துலிங்கம் நொந்தேபோனார்.இப்படியெல்லாமா சிந்திப்பார்கள்.ரெண்டு கலமும் வேண்டாம் புதுசாவே போட்டுத் தாரேன் என்று எழுதிய பாடல் தான்
தங்கத்தில் முகமெடுத்து
சந்தனத்தில் உடலெடுத்து
மங்கையென்று வந்திருக்கும் மலரோ
நீ மாலை நேரப் பொன் மஞ்சள் நிலவோ
மக்கள் திலகம் பரபரப்பான அரசியல் களத்தில் ஈடுபட்டு மாநில முதல்வராகப் போகும் 77ல் வெளியான மீனவ நண்பன் ஒரு வெற்றிப்படம்.மீனவர்களின் துயர் துடைக்கும் குமரனாக பணக்கார லதாவின் காதலனாக நாயகி காணும் கனவில் வந்து போகும் பாடலிது.கடைசி நேரத்தில் இணைத்த பாடலில் ஜேஸூதாஸ் வாணி ஜெயராம் குரலில் மெல்லிசை மன்னர் போட்ட அருமையான பாடலிது.இலக்கியத்தரமான வரிகளைப் போட்டு பாடலை அழகாக்கியிருப்பார் முத்துலிங்கம்.
காமன் போல வந்திருக்கும் வடிவோ
அந்த தேவலோக மன்னவனும் நீயோ?.
முழுக்க முழுக்க மக்கள் திலகத்தின் புகழ் பாடும் பாடல்.நாயகியின் கனவு நாயகனை மயக்கும் வரிகள்.
வண்ண ரதம் போலவே தென்றல் நடை காட்டவா
புள்ளி மான் போலவே துள்ளி நான் ஓடவா
வண்ண ரதமாகினால் அதில் சிலை நானன்றோ
புள்ளி மான் தேடும் களைமானும் நானல்லவோ
அசைந்து தவழ்ந்து அருகில் நெருங்கி அமிழ்தாகவோ
அட்டகாசமான மெட்டில் அசத்தும் இரு குரல்கள்.சரண முடிவில் அருமையான வாணியம்மாவின் ஆலாபனை.
முல்லை மலர்ச் செண்டுகள் கொண்டு கொடியாடுது
செண்டு சதிராடினால் அந்த இடை தாங்குமா? .
இந்த இடை தாங்கவே அந்தக் கைகள் இருக்கின்றது
கொஞ்சி உறவாட மலர் மஞ்சம் அழைக்கின்றது.
எளிமையான அதே நேரம் இலக்கியத்தரமான பாடலைத் தருகிறார் முத்துலிங்கம்.
மலர்ந்து கனிந்து சிரித்துக் குலுங்கி கனியாகவோ.?.
அடுத்த சரணமும் இதே இலக்கியமாக ஜொலித்த பாடல்.சடையப்ப செட்டியார் தான் பாவம்.டீரீம் சாங் ஏகப்பட்ட பேர்களின் வீட்டிற்கு அடுப்பெரிய உதவியது அவருக்கு எங்கே தெரியப்போகிறது.இந்த மகத்தான சேவைக்குப் பின்னால் மக்கள் திலகமென்னும் மனிதாபிமானி இருப்பது நமக்கல்லவா தெரியும்.
நன்றி ... மக்கள் திலகம் அவர்களின் பன் முக திறமைகளில் (Multi Faced Personalities... Skills) ஒரு மனிதாபிமான உதாரண நிகழ்வுகளில் ஒரு sample...
திருவாளர்கள் : குபேந்திரன், லோகநாதன், சரவணன், ஓமப்பொடி பிரசாத், ஹுசேன், ராஜேந்திரன்
http://i67.tinypic.com/2aoroz.jpg
மக்கள் திலகம் பக்தர் திரு லோகநாதன் அவர்கள் 22001 மகத்தான சூப்பர் பதிவுகளை கடந்தமைக்கு நம் அனைவரின் பாராட்டுகள் உரித்தாகுக... மேலும் பல்லாயிரம் பதிவுகள் காண அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...
நண்பர் லோகநாதன் அவர்கள்
22000 பதிவு ராத்திரி பகல் பார்க்காமல் எந்த லாப நோக்கம் இல்லாமல் பதிவி போட்டு புரட்சித் தலைவர் புகழுக்கு சேவை படைத்து வரும் நண்பருக்கு வாழ்த்துக்கள். நீண்ட வருசம் ஆரோக்கியமாக வாழ அல்லா உனக்கு அருள் புரியட்டும் நண்பா.
http://i67.tinypic.com/10geil4.jpg
சிவாஜி கணேசனை வைத்து நெஞ்சங்கள் என்ற படம் எடுத்த விஜயகுமார் வீட்டை அடமானம் வைத்து படம் எடுத்தார். ஒரே வாரத்தில் கை காசு காலி. படம் பாதியில் நின்றது. படம் தொடர்ந்து எடுக்க புரட்சித் தலைவர்தான் ஏற்பாடு செஞ்சு பணம் கிடைக்க விஜய குமாருக்கு உதவினார். அவர் வீடடையும் அடமானத்தில் இருந்து மீட்டார்.
ஒரு காலத்தில் தனக்கு போட்டி என்று சொல்லப்பட்ட சிவாஜி கணேசன் படத்துக்கு அந்த படம் வளர எதற்கு உதவி செய்ய வேண்டும் என்று புரட்சித் தலைவர் நினைக்கவில்லை. அதனால்தான் அவர் பொன்மனச் செம்மல் என்று கொண்டாடப்படுகிறார்.
http://i67.tinypic.com/id6elw.jpg
நடிகர் விஜயகுமார் படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோதே, தயாரிப்பாளராகவும் ஆனார். அவர் தயாரித்த "நெஞ்சங்கள்'' படத்தில் சிவாஜிகணேசன் கதாநாயகனாக நடித்தார்.நடிகர் விஜயகுமார் படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோதே, தயாரிப்பாளராகவும் ஆனார். அவர் தயாரித்த "நெஞ்சங்கள்'' படத்தில் சிவாஜிகணேசன் கதாநாயகனாக நடித்தார்.
படத்தயாரிப்பாளராக மாறிய பின்னணி குறித்து, விஜயகுமார் கூறியதாவது:-
1980-ம் வருடம் எனக்கு படங்கள் கொஞ்சம் குறைவாக இருந்த நேரம். ஒருநாள் சிவாஜி சாருடன் பேசிக்கொண்டிருந்தபோது, "விஜயா! நீ எப்போது படம் தயாரிக்கப்போறே?'' என்று கேட்டார்.
நான் திடுக்கிட்டேன். "என்னண்ணே! தயாரிப்பாளர் ஆவது சாதாரண விஷயமா? தவிரவும் எனக்கு அதில் அனுபவம் எதுவும் இல்லையே''
என்றேன்.அண்ணன் சிவாஜியோ என் உணர்வுகள் எதையும் கண்டு கொள்ளாமல்,
"நீ நாளைக்கு சிவாஜி பிலிம்சுக்கு போய், தம்பி சண்முகத்தை பாரு'' என்றார்.
அண்ணன் இப்படிச் சொல்லி விட்டாரே தவிர, எனக்குள் உள்ளுக்குள் உதறல்தான். என்றாலும், அவர் சொல்லி விட்டாரே என்பதற்காக சண்முகம் சாரை பார்க்கப் போனேன். அவர் சிவாஜி பிலிம்சில் இல்லை. சிவாஜி தோட்டத்துக்கு போயிருப்பதாகச் சொன்னார்கள்.
அங்கே போய் பார்த்தேன். என்னைப் பார்த்தவர், "அண்ணன் (சிவாஜி) சொன்னாரு! கையில் எவ்வளவு பணம் வெச்சிருக்கீங்க?'' என்று கேட்டார்.
பதிலுக்கு நான், "பணம் எல்லாம் கிடையாது. அண்ணன் உங்களை பார்க்கச் சொன்னாரு! அதன்படி வந்திருக்கிறேன்'' என்றேன்.
"சரி! என்ன கதை?'' என்று அடுத்த கேள்வியை கேட்டார்.
"அதுவும் அண்ணன்தான் சொல்லணும். படம் எடுக்கச் சொல்லி என்னிடம் அண்ணன் (சிவாஜி) தானே சொன்னார்'' என்றேன்.
உடனே அவர், "அண்ணனும் மேஜர் சுந்தர்ராஜனும் சமீபத்தில் பார்த்த ஒரு இந்திப்படம் பற்றி பெரிசா பேசிக்கிட்டிருந்தாங்க! அண்ணன்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு அந்தக் கதையோட தமிழ் உரிமை வாங்கிடுங்க'' என்றார்.
மேஜர் சுந்தர்ராஜன், சிவாஜி சாரின் நெருங்கிய நண்பர். அப்போது அவர் டைரக்டராகவும் மாறி, சிவாஜி சாரை "கல்தூண்'', "லாரி டிரைவர் ராஜாக்கண்ணு'' என்று 2 படங்கள் இயக்கினார். இந்திப்படத்தின் தமிழ் உரிமை வாங்கியதும், அதை மேஜரே இயக்குவதாக
இருந்தது.
நான் இந்தித் தயாரிப்பாளரை சந்தித்து, தமிழுக்கு உரிமை வாங்கினேன். ஒப்பந்தம் கையெழுத்தானதும் படத்தின் ஒரிஜினல் பிரிண்ட்டை ஒரு வாரத்தில் அனுப்பி வைப்பதாக சொன்னார்கள்.
சொன்னபடி ஒரு வாரத்தில் பிரிண்ட் வந்தது. இராம.அரங்கண்ணலின் ஆண்டாள் தியேட்டரில் படத்தை திரையிட்டுப் பார்த்தோம். இந்தி நடிகர் அமல் பலேகர் நடித்திருந்த படம் அது. அவர் `காமெடி டைப்'பில் நடிக்கக்கூடிய நடிகர். படம் முழுக்க அவர் பாணியிலேயே நடித்திருந்தார். முழுப்படமும் பார்த்து முடித்ததும் `இந்த கேரக்டர் சிவாஜி சாருக்கு எப்படி செட்டாகும்?' என்று யோசனை வந்துவிட்டது.
மறுநாள் காலையில் சிவாஜி சார் வீட்டுக்குப் போனேன். அவரை பார்த்ததும், "அண்ணே! நேற்று இந்திப்படம் பார்த்தேன். அது நீங்க பண்ணவேண்டிய படம் இல்லையே'' என்றேன்.
அப்போது அங்கிருந்த மேஜர் சுந்தரராஜன், "இந்த இந்திப்படத்தின் மூலக்கருவை மட்டும் எடுத்துக்கொண்டு சிவாஜி சாருக்கு பொருத்தமான விதத்தில் படத்தை நான் முற்றிலுமாக மாற்றி விடுவேன்'' என்றார்.
அவர் இப்படிச் சொன்னபோது சிவாஜி சார் என்னைப் பார்த்தார். "அப்புறம் என்னடா?'' என்பது போலிருந்தது அந்தப் பார்வை. நான் அமைதியானேன். பட வேலைகள் தொடங்கின.
சிவாஜி சார் ஹீரோ. லட்சுமி ஹீரோயின் என்பது முடிவாயிற்று.
சண்முகம் சார் பைனான்சுக்கு ஏற்பாடு செய்தார். ஒரு பைனான்சியர் என்னிடம் வீட்டு டாக்குமெண்டை வாங்கிக்கொண்டு 2ஷி லட்சம் ரூபாய் கொடுத்தார்.
பட வேலைகள் தொடர்ந்தன. சத்யா ஸ்டூடியோவில் பெரிய அளவில் செட் போட்டு படத்தை தொடங்கினோம். 10 நாள் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்தது. அதற்குள் கையிருப்பு முழுவதும் காலி.
மறுபடி பைனான்ஸ் பெற வேண்டிய கட்டாயம். சண்முகம் சாரும், "பொறு! ஏற்பாடு பண்றேன்'' என்றார். ஆனால் அவர் ஏற்பாடு செய்த பைனான்சியர், "மேற்கொண்டு பணம் தர முடியாது'' என்று கைவிரித்து விட்டார்.
படம் 10 நாள் படப்பிடிப்போடு நின்று, மேற்கொண்டு பணமும் இல்லாத நிலையில் தான் ஒரு விழாவில் அண்ணன் எம்.ஜி.ஆரை சந்தித்தேன்.
அது 1980-ம் வருஷம். அண்ணன் அப்போது தேர்தலில் ஜெயித்து மீண்டும் முதல்-அமைச்சர் ஆகியிருந்தார். அவரது மேக்கப் மேனாக இருந்த ராமதாசின் மகன் திருமணம் சென்னை அசோக் நகரில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. இந்தத் திருமணத்துக்கு அண்ணன் சிவாஜி உள்ளிட்ட கலையுலகமே திரண்டு வந்திருந்தது.
என் படம் முதல் ஷெட்ïலோடு நின்று 15 நாள் ஆகியிருந்த நிலையில் இந்த விழாவுக்கு போயிருந்தேன். முதல்-அமைச்சர் கலந்து கொண்ட விழா என்பதால் எல்லா அமைச்சர்களும் தவறாமல் வந்திருந்தார்கள். எம்.ஜி.ஆர். முதல் வரிசையில் அமர்ந்திருக்க, திருமண ஏற்பாடுகள் மேடையில் நடந்து கொண்டிருந்தன. நான் 10-வது வரிசையில் உட்கார்ந்திருந்தேன். திடீரென அண்ணன் எம்.ஜி.ஆர். எதற்கோ திரும்ப, அவர் பார்வை என் மீது பட்டது. உடனே விரலை சொடுக்கி, என்னை அழைத்தார். நான், எனக்கு பக்கத்தில் உள்ள யாரையோ அவர் அழைக்கிறார் என்று நினைத்து, அமைதியாக இருந்தேன். அண்ணன் விடவில்லை. இருக்கையில் இருந்து எழுந்து என்னைப் பார்த்து விரல் நீட்டி அழைத்தார்.
அழைத்தது என்னைத்தான் என்று தெரிந்ததும் எழுந்து, அவரை நோக்கிச் சென்றேன். நான் அவர் அருகில் போனதும், பக்கத்தில் இருந்த ஒரு அமைச்சர் எழுந்து, தனது இருக்கையை எனக்கு கொடுக்க முன்வந்தார். ஆனால், அந்த அமைச்சரை அமரச்சொன்ன அண்ணன், என்னைத் தன் மடியில் உட்கார வைத்துக் கொண்டார்.
எனக்கு தர்ம சங்கடமான நிலை. எப்பேர்ப்பட்ட அன்பு இருந்தால் இப்படிச் செய்வார்? திருமணம் நடந்த அந்த அரை மணி நேர வைபவத்திலும் அவரது மடியிலேயே உட்கார வைத்துக் கொண்டார்.
திருமணம் முடிந்ததும், அவரது காரில் என்னை தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார். "என்ன நீ! ரொம்ப நாளா என்னை ஏன் பார்க்கவில்லை?'' என்று கேட்டார்.
நான் படத்தயாரிப்பு விஷயத்தை விவரித்தேன். `சிவாஜி சார் நடிக்கிறார். மேஜர் டைரக்ட் செய்கிறார்' என்பதில் தொடங்கி 2ஷி லட்சம் பைனான்சில் படம் ஒரு ஷெட்ïலுடன் நிற்பது வரை கூறிவிட்டேன்.
நான் சொல்லி முடித்ததும், "வீட்டு டாக்குமெண்டை வைத்தா பணம் வாங்கினாய்?'' என்று கேட்டார்.
"ஆமாண்ணே! படம் எடுத்து முடித்ததும் திருப்பிடலாம்'' என்றேன்.
அப்புறமாய் என்னை சாப்பிட வைத்து அனுப்பினார். இடையில் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
வீட்டுக்கு நான் திரும்பியபோது, என்னை பார்க்க ஒருவர் வந்து காத்திருந்தார். "சின்னவர் (எம்.ஜி.ஆர்) அனுப்பினாருங்க. உங்க படத்துக்கு 10 லட்சம் பைனான்ஸ் கொடுக்கச்சொன்னார். அதுல 2ஷி லட்சம் எடுத்துட்டுப்போய், உடனடியாக உங்கள் வீட்டு டாக்குமெண்டை மீட்கச் சொன்னாருங்க'' என்று மூச்சு விடாமல் சொல்லி முடித்தார், அவர்.
எனக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி. அதாவது - ஆனந்த அதிர்ச்சி! இப்படி ஒரு அன்பா என் மீது!
இப்போது அடுத்த "ஷெட்ïல்'' படப்பிடிப்பை ஆரம்பிக்க வேண்டும். பணம் வந்துவிட்டதே, கதாநாயகி லட்சுமியிடம் தேதி கேட்டபோது, அவரோ "நான் அமெரிக்கா போக வேண்டியிருக்கிறதே'' என்றார்.
சொன்னபடி லட்சுமி அமெரிக்கா போய்விட்டதால் மறுபடியும் படப்பிடிப்பு தொடங்க முடியாத நிலை. இப்படி 20 நாள் போயிருந்த நிலையில் அண்ணன் எம்.ஜி.ஆரிடம் இருந்து எனக்கு போன். "என்ன தம்பி! படம் வளர்ந்து வருகிறதா?'' என்று கேட்டார்.
நான் உண்மையைச் சொன்னேன். "லட்சுமி அமெரிக்காவில். அண்ணன் சிவாஜியோ இன்னொரு படத்தில். மறுபடி கால்ஷீட் கிடைத்தால்தான் படப்பிடிப்பு'' என்றேன்.
"சரி'' என்று கேட்டுக்கொண்டவர், தனது படங்களில் தயாரிப்பு நிர்வாகியாக இருந்த குஞ்சப்பனை அண்ணன் சிவாஜி வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார். அவர் சண்முகத்தை சந்தித்து, "விஜயகுமார் எடுக்கும் படத்தை சின்னவர் சீக்கிரம் முடித்து கொடுக்கச் சொன்னார்'' என்று
சொன்னார்.வந்ததே கோபம் சண்முகத்துக்கு. உடனே அவர் தனது அண்ணனிடம், "இவர் (விஜயகுமார்) எதற்காகப்போய் சின்னவரிடம் சொல்ல வேண்டும்?'' என்று கோபித்துக்கொண்டு விட்டார்.
நான் சிவாஜி சாரிடம், "அண்ணே! நானாகப்போய் அண்ணனிடம் (எம்.ஜி.ஆர்) சொல்லவில்லை. நீங்களும் தான் மேக்கப் மேன் பையன் திருமணத்துக்கு வந்திருந்தீர்கள். அல்லவா. அப்போது என்னை அழைத்து பேசி, மடிமீதே உட்கார வைத்துக்கொண்டது வரை பார்த்தீர்கள். பிறகு வீட்டுக்கு அழைத்துச்சென்றபோது என் விஷயத்தைக் கேட்டார். அப்போது தயாரிப்பு பற்றி சொல்ல வேண்டியதாகி விட்டது. இரண்டாவது பைனான்சுக்கு ஏற்பாடு செய்தார். அதன் பிறகு 20 நாள் ஆகியும் படப்பிடிப்பு வேலைகள் நடக்காததால், அதுபற்றி என்னிடம் போனில் கேட்டார். நானும் சொல்ல வேண்டியதாகி விட்டது.இதில் என் தவறு எதுவும் இல்லை'' என்றேன்.
சிவாஜி சார் என்னைப் பார்த்தார். `இவ்வளவு நடந்து இருக்கிறதா?' என்ற கேள்வி அந்தப் பார்வையில் இருந்தது. "சரிடா! தம்பி சண்முகம் கிட்ட போய் தேதி வாங்கிக்கோ'' என்றார்.
பிறகு, "நெஞ்சங்கள்'' மளமளவென தடங்கலின்றி வளர்ந்து ரிலீசானது.
எதிர்பார்த்தபடி போகாததால், ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில் நஷ்டத்தை சந்தித்தேன்.
எதிர்பார்த்தபடி போகாததால், ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில் நஷ்டத்தை சந்தித்தேன்.
எதிர்பார்த்தபடி போகாததால், ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில் நஷ்டத்தை சந்தித்தேன்.
எதிர்பார்த்தபடி போகாததால், ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில் நஷ்டத்தை சந்தித்தேன்.
எதிர்பார்த்தபடி போகாததால், ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில் நஷ்டத்தை சந்தித்தேன்.
எதிர்பார்த்தபடி போகாததால், ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில் நஷ்டத்தை சந்தித்தேன்.
எதிர்பார்த்தபடி போகாததால், ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில் நஷ்டத்தை சந்தித்தேன்.
இவ்வாறு விஜயகுமார் கூறினார் .
https://www.maalaimalar.com/Cinema/C...ijayakumar.vpf
புரட்சித் தலைவரின்
புகழ் பாடும் பக்தர்களே
மீண்டும் ஒரு அரிய பதிவு
நிச்சயம் கண்கள் கசியும்
காவல்காரன் படத்தில் வரும்
நினைத்தேன் வந்தாய்
நூறு வயது
பாடல் படமான
அரிய பதிவின் தொகுப்பு
சென்னை மெரீனா.ஊரடங்கிய பிறகு மெல்ல ஒரு உருவம் கடலில் இறங்குகிறது.சுற்றிலும் அவரது உதவியாளர்கள்.கழுத்தளவு நீரில் நின்று அவர் கத்துவது அவருக்கே கேட்கவில்லை.இருந்தாலும் விடாமுயற்சியாக கத்திக்கொண்டே இருக்கிறார்.சுற்றி நிற்பவர்கள் அவருக்காக உயிரையே விடக்கூடியவர்.இந்தக் காட்சி அவர்களின் நெஞ்சில் முள்ளாகக் குத்துகிறது. கத்தியது போதும் கரையேறுங்கள் என்றாலும் அவர் விடுவதாக இல்லை.இப்படி உயிரைக்கொடுத்து கத்துவது வேறுயாருமல்ல மக்கள் திலகம் தான்.
1967 ஜனவரி 12 காலை எட்டு மணி சுமாருக்கு பரங்கி மலைத் தொகுதியில் உள்ள வேளச்சேரி நாராயண புரம் பகுதிகளில் ஓட்டுச் சேகரித்துவிட்டு தோட்டத்திற்குத் திரும்பினார் மக்கள் திலகம்.வாக்காளர்களை அதிக நேரம் சந்தித்ததால் வீடு திரும்ப மாலை நான்காகிவிட்டது.வீட்டிற்கு வந்ததும் மாடிக்குச் சென்ற மக்கள் திலகம் அங்கு தனது மனைவி கே.ஆர்.ராமசாமி மனைவி கல்யாணி அம்மாளுடன் பேசிக்கொண்டிருப்பதை காண்கிறார்.சாப்பிட அமர்கிறார்.பட அதிபர் வாசுவின் ஃபோன்.கோவை பார்ட்டி வந்திருக்கிறது.படம் பற்றிப் பேச வேண்டும்.இப்போது வரலாமா?.
வாசு வந்தார்.கூடவே வம்பும் வந்தது.அதற்குப் பிறகு நடந்தது ஊருக்கே தெரியும்.விடா முயற்சியில் வெற்றி கிடைக்க குரல் மட்டும் கிடைக்கவில்லை.கிடைக்க வைக்க படும்பாட்டைத் தான் மேலே கண்டோம்.காரணம் ஓரிரு காட்சிகளோடு நின்றுபோயிருக்கிறது ஒரு படம்.தனது நிர்வாகியும் நம்பிக்கைக்கு உரியவருமான ஆர்.எம்.வி.படம்.முதலில் மனைவி என பெயரிடப்பட்டு பிறகு காவல்காரனாக மாறிய அந்தப் படத்தை முடித்துக்கொடுக்க வேண்டிய அவசரத்தில் எம்.ஜி.ஆர்.நீண்ட நாள் ஓய்விற்குப் பிறகு அன்று தான் படப்பிடிப்புத் தளத்திற்கு வருகிறார்.மாலை மரியாதையுடன் ஏக தடபுடலான வரவேற்பு.மொத்த யூனிட்டும் கைதட்டி வரவேற்க பொன்மனச் செம்மலின் புன்னகையைக் கண்ட நண்பர்களுக்கோ உற்சாகம்.
அது ஒரு பாடல் காட்சி.அட்டகாசமான எகிப்து ஸ்டைலில் பிரமிடுகள் ஸ்பீங்ஸ் சிலைகள் என அசத்த அவரது காஸ்டியூம் கூட எகிப்து மன்னரின் அலங்காரத்தோடு.அருகிலுள்ள கலைச்செல்வியைப் பார்க்கிறார்.அவரும் எகிப்து ராணியாக பளபளப்பாக நிற்கிறார்.பாடலின் பல்லவியைக் கேட்கிறார்.முதல் வரியைக் கேட்டுவிட்டு மேலே பார்க்கிறார் கண்ணீரோடு வாலி.அது ஆனந்தக் கண்ணீர்.
நினைத்தேன் வந்தாய் நூறு வயது.
ஒரு புன் சிரிப்போடு வாலியை அருகில் அழைத்து தட்டிக்கொடுக்கிறார்.அவரது கண்களும் கலங்குகிறது. காலனின் கைகளில் அகப்படாமல் அந்த கவர்ச்சி நாயகன் கலந்துகொண்ட முதல் காட்சியை கேமிரா விழுங்கக் காத்துக்கொண்டிருக்கிறது.
மெல்லிசை மன்னர் இந்த டீரீம் சாங்கை அசத்தலாகப்போட்டிருப்பார்.இது ஒரு வித்தியாசமான கலிங்கடா ராகம்.ஏற்கனவே சிவந்த மண் பாடலான பட்டத்து ராணி பார்க்கும் பார்வை பாடலை இதே ராகத்தில் போட்டிருப்பார்.அதையே கொஞ்சம் மாற்றி வித்தியாசமான ஒரு கலவையாகத் தந்திருப்பார்.வாலியின் அருமையான வரிகளுக்கு டி.எம்.எஸ் சுசீலா அம்மாவின் இனிய குரல்களில் மக்கள் திலகம் கலைச்செல்வி அசத்திய இந்தப் படத்தில் மணி என்ற பாத்திரம் மக்கள் திலகத்திற்கு.துப்பறிய வந்த இடத்தில் நாயகியான சுசீலாவைச் சந்திக்க இருவருக்கும் பற்றிக்கொண்ட காதலின் வெளிப்பாடாக நாயகி காணும் கனவுப் பாடலிது.
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
மெல்லிசை மன்னர் அந்த நூறு வயதை நீட்டி முழக்கியிருப்பார்.அருமையான அம்மாவின் ஆலாபணையோடு தொடங்கும் பாடலில் புகை மூட்டத்திற்கு ஒரு வாத்தியம் கொடுத்து அசத்தியிருப்பார் மன்னர்.பிரமாண்ட செட்டைப்போலவே இசையும் எகிப்திய பாணியில் இருக்கும்.கேட்டேன் தந்தாய் ஆசை மனது ஐயாவின் கொஞ்சலான குரலில் கேட்பதே இனிமை.
நூறு நிலாவை ஒரு நிலவாக்கி பாவை என்றேன்
பாவையை பக்குவமாக மாற்ற நாயகியோ
ஆயிரம் மலரை ஒரு மலராக்கி பார்வை என்றேன்
கண் மீனாக நின்றாடவோ?.
சொல் தேனாக தானாக பண்பாடவோ
மாலை நேரம் வந்துறவாடவோ
ஓ ஓ ஓ ஓ ஓய்யா...
வாலியின் அசத்தல் வரிகள்.மீனாக மானாக தேனாக தானாக ஆங்காங்கே தூவிய அழகு தமிழை மெல்லிசை மன்னர் இன்னும் அழகாக்கியிருப்பார்.சரண முடிவில் அது இன்னும் அழகாகிறது.அடுத்தடுத்த சரணங்கள் அவர் கரம் பட்டு அற்புத அனுபவமாகிறது.
நிலைக் கண்ணாடி கன்னம் கண்டு ஆஹா
மலர் கள்ளூறும் கிண்ணம் என்று ஓஹோ
அது சிந்தாமல் கொள்ளாமல் பக்கம் வா
அன்பு தேனோடை பாய்கின்ற சொர்க்கம் வா
மன்னன் தோளோடு அள்ளிக் கொஞ்சும் கிள்ளை
அவன் தேரோடு பிண்ணிச் செல்லும் முல்லை
உன்னை நெஞ்சென்ற மஞ்சத்தில் சந்தித்தேன்
உந்தன் கைகொண்டு முன்னாக கன்னித்தேன்
மறு பிறவி கண்ட மக்கள் திலகத்தை கண்ட ரசிகன் புளகாங்கிதம் அடைந்தான்.அந்தப் புன்னகையும் தேனீயின் சுறுசுறுப்பும் எங்கே காணாமல் போய்விடுமோ என்ற கவலையை நீக்கிய பாடலிது.அதற்காகவே சுறுசுறுப்பான ஒரு இசைக் கோர்வையைத் தந்து அவரை இன்பமாக ஆடவிட்டிருப்பார் மெல்லிசை மன்னர். கலைச்செல்வி ஏற்கனவே நடனம் கற்றவர்.ஆனால் மக்கள் திலகம் அவருக்கு இணையான ஃபாஸ்ட் பீட்டிற்கு அவரது அசத்தலான ஸ்டெப்ஸ்களை அமைத்து பாடலை அழகாக்கியிருப்பார்.வாலியின் வளமான வரிகள்.இன்பமாக பாடிக்கொடுத்த இசை ஜோடி.
விழி நூலாகச் செல்லச் செல்ல ஆஹா
அதை மேலாடை மூடிக்கொள்ள ஓஹோ
சின்னப் பூமேனி காணாத கண்ணென்ன
சொல்லித் தீராத இன்பங்கள் என்னென்ன
ஓஓஓஓ ஓய்யா....
சில பாடல்களைக் கேட்டாலே உற்சாகம்.விஷூவலாகக் காணும்போது அந்த உற்சாகத்தை இரு மடங்காக மாற்ற ஒரு திறமையாளர் வேண்டும்.மக்கள் திலகம் அதில் கரை கண்டவர்.அவரது உற்சாகம் கூட ஆடுவோருககு இன்னும் ஊக்கம் தரும்.மருத்துவமனைமிலிருந்து நேராக வந்து இப்படி ஆடிக் கொடுக்க ஒரு மனோ தைரியம் வேண்டும்.பாட்டு முடிந்தாலும் இன்னும் இருக்கா என்று அதையும் ஆடிக் களிக்கும் அந்த அற்புத மனிதரை இன்னும் தெய்வமாகக் கொண்டாடக் காரணம் அது ஒரு சகாப்தம் என்பதால் தான்.
புரட்சித் தலைவர் பக்தர்கள்... Thanks...
தினத்தந்தி -18/9/18
http://i63.tinypic.com/2z4ijgn.jpg
மாலைமலர் -18/9/18
http://i67.tinypic.com/2vbpm2p.jpg
என்னுடைய 22000 பதிவுகள் குறித்து பாராட்டுதல்களும், வாழ்த்துக்களும் கைபேசி /அலைபேசி,வாட்ஸ் அப் மூலமும் மற்றும் நேரிலும்
தெரிவித்த கீழ்கண்ட நண்பர்கள் /பக்தர்கள் அனைவருக்கும் எனது கனிவான,
இதயங்கனிந்த நன்றி.
http://i63.tinypic.com/23utzbm.jpg
திருவாளர்கள் :
வினோத் ,பெங்களூரு,
சி.எஸ். குமார், பெங்களூரு,
சுஹாராம், மன்னார்குடி,
மஸ்தான் சாஹிப்
ராமு, தங்கசாலை,
இளங்கோவன், அரும்பாக்கம்,
ரவிசங்கர், முகப்பேர்,
சுப்பு,
கலீல் பாட்சா, திருவண்ணாமலை,
கா. நா. பழனி, பெங்களூரு
ஈ.பாண்டியராஜ் ,இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு
சம்பங்கி , பெங்களூரு ,
ராமமூர்த்தி, வேலூர்,
இளவேனில் , ஜெயா டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் ,
கலியபெருமாள் , புதுவை,
கஜ்சிங்
ஜெகன், ஆரணி,
ரவி, ஆரணி,
ராஜேந்திரன், சங்கீதா ஓட்டல் ,எழும்பூர்,
மாரிமுத்து ,
பாஸ்கரன், கலைவேந்தன் எம்.ஜி.ஆர். அறக்கட்டளை ,
ஜி . வெங்கடேசப்பெருமாள் ,
வெங்கடேசன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மாத இதழ்
ஏ.பி.பாபு, பெங்களூரு,
விஜய் முரளி, பம்மல் ,
தாமோதரன், போரூர் ,
எஸ். குமார், மதுரை ,
தீனதயாளன், ஏழு கிணறு, சென்னை
வி.சுந்தர், மடிப்பாக்கம்,
குமரவேல், திண்டுக்கல்,
மலரவன், திண்டுக்கல் ,
ஜேம்ஸ், கனடா ,
எம்.ஜி.ஆர். மணி, சாம்ராஜ்பேட்டை, பெங்களூரு,
சாமுவேல், சத்தியமங்கலம் ,
சேர்மக்கனி, எ . வீ. பிள்ளை விநியோகஸ்தர்
சிரஞ்சீவி அனீஸ், ஆசை டிவி,
செந்தில் ராஜ்குமார், ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவைகுண்டம் ,
சேகர், கோவை,
கமலக்கண்ணன், கோவை,
எம்.கே.ராஜா, ஈரோடு ,
பூக்கடை சக்தி ,
சிட்கோ சீனு, வில்லிவாக்கம் ,(தலைமை கழக பேச்சாளர் ).
லோகேஷ், நெல்லை,
மணி, நெல்லை,
பொன்னையா . நெல்லை,
சதக், நெல்லை,
சுகுமார், சென்னை,
சத்யா, ஓட்டேரி,
சதானந்தன், கனடா,
மோகன்குமார், வழக்கறிஞர் ,
ஓமப்பொடி பிரசாத்,
தாமஸ், மாநகர போக்குவரத்து கழகம் )
மொஹமட் இர்பான் , அடையாறு,
பி.டி. தனசேகரன், ஸ்ரீவில்லிபுத்தூர்,
சொக்கலிங்கம், திவ்யா பிலிம்ஸ்,
மோகன்குமார், பெங்களூரு,
எம்.ரவி, பெங்களூரு,
பி.ஜி.சேகர், சென்னை,
பி.எஸ். ராஜு, உரிமைக்குரல் ஆசிரியர்,
மயிலை லோகநாதன்,
ராஜா, ராமாவரம் தோட்டம்,
நீலமேகம், சேலம்,
ஜெய்கிரண் , ஸ்ரீவில்லிபுத்தூர்,
மின்னல் பிரியன்,
எஸ். செல்வம், வங்கி ஊழியர்,
ஆர். முருகேசன், வங்கி ஊழியர் ,
சி.ரவீந்திரன், வங்கி ஊழியர்,
வி.என். சுந்தர், வங்கி ஊழியர் ,
சி.வி. ராமலிங்கம் , வங்கி ஊழியர்,
எச். நாகேஷ் பந்தார்கர் , வங்கி ஊழியர்,
திருமதி, சுதா விஜயன், ராமாவரம்,
திருமதி, மேரி செல்வமணி, கோடம்பாக்கம்,
திருமதி, பானு, வேதா , செங்கல்பட்டு
டாக்டர் சி. ராஜேஸ்வரி, மதுரை,
மற்றும் பலர்
எனது 22000 பதிவுகளுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுதல்களும் தெரிவித்த இனிய நண்பர் திரு.மஸ்தான் சாஹிப் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி .
மாற்று முகாமில் பதிவிடும் பொய் செய்திகளுக்கு, தக்க பதிலடி அளித்தும் ,
அட்டகாசமாக , ஆர்ப்பரித்து செய்திகளை சமீப காலத்தில் ,சமயோஜிதமாக
பதிவிட்டு வரும் தாங்கள் 24 வது பாகத்தை துவக்கி வைக்க இப்பொழுதே
தயாராகி வரும்படி அன்பு வேண்டுகோள்
ஆர், லோகநாதன் .
1970 களில் மட்டும் இல்லை. 1950 களில் கூட சிவாஜி கணேசனை விட புரட்சித்தலைவர் அதிகமாய் சம்பளம் வாங்கினார். கூண்டுக்கிளி படத்தில் நடிக்கிறபோதும் சிவாஜி கணேசனை விட புரட்சி தலைவர் அதிகம்சம்பளம் வாங்கி கொண்டு இருந்தார். இருந்தாலும் படத்தை தயாரித்து டைரக்ஸன் செஞ்ச ராமண்ணாவின் சகோதரி டி.ஆர். ராஜகுமாரி மேல புரட்சித் தலைவர் அதிக மரியாதையை வெச்சிருந்தார். அவர் கையால் ஒத்த ரூபாய் அட்வான்சு வாங்கிக்கொண்டார். சிவாஜிக்கு கொடுக்கப்படட அதே 25 ௦௦௦ ரூபாய் சம்பளத்தை தானும் வறட்டு கவுரவம் பார்க்காமல் புரட்சி தலைவர் பெற்று கொண்டார். இதை டி.ஆர்.ராமண்ணாவும் சொல்லி உள்ளார்.
அந்த ஒரு படத்துக்குத்தான் சிவாஜி கணேசனுக்கு சமமான சம்பளம் புரட்சித் தலைவர் பெற்றுக் கொண்டார். அதுவும் டி.ஆர்.ராஜகுமாரிக்காக. மற்றபடி அவர் சம்பளம் அளவுக்கு சிவாஜி கணேசன் சம்பளம் வாங்கியது இல்லை.
http://i65.tinypic.com/2ldimom.jpg
இன்னொரு உத்தாரணம்.சினிமாவில் புரட்சித் தலைவர் நடிச்ச வரை அவர்தான் அதிகம் சம்பளம் பெற்ற நடிகர். 1973 ம் வருசம் பொம்மை கேள்வி பதில்.
கேள்வி; சினிமாவில் நடிக்க எம்ஜிஆர் அதிகப் பணம் வாங்கறாரா/ அல்லது சிவாஜி கணேசன் அதிகப் பணம் வாங்கறாரா?
பதில்: இதுவரை எம்ஜிஆர்தான் அதிகப் பணம் வாங்கி இருக்கிறார்.
(இந்த பதிலை நன்றாய் கவனிக்கவும். இதுவரை..... அதாவது இந்த கேள்வி பதில் வந்த பொம்மை பத்திரிகை 1973 ம் ஆண்டு . அதுவரை. அதுக்கப்புறம் புரட்சித்தலைவர் இன்னும் உயரே யாராலும் எட்ட முடியாத உயரம் புகழுக்கு போய்விட்டார். கடைசிவரை புரட்சித் தலைவர் வாங்கின சம்பளம் சிவாஜி கணேசனுக்கு இல்லை.)
1973 ல் பொம்மையில் வந்த கேள்வி பதில். இது ரசிகர் மன்ற நோட்டீஸ் இல்லை. பொம்மை பத்திரிகையில் வந்தது. இதோ பாருங்கள். முதல் கேள்வி பதில் படிச்ச்சு தெரியவும்.
http://i67.tinypic.com/2zsnvgk.jpg
1954 ல் மலைக்கள்ளன் வந்ததில் இருந்தே புரட்சித் தலைவர்தான் வசூல் சக்கரவர்த்தி. அதற்கு முன் பல படங்கள் வந்தாலும் மலைக்கள்ளன் தான் தமிழில் முதல் பாக்ஸ் ஆப்பிஸ் ஹிட்.
http://i68.tinypic.com/2sagh8l.jpg
1971 பேசும் படம் பத்திரிகையில் வந்த கேள்வி பதில்.
கேள்வி; இன்று தென்னகத்தில் வசூல் சக்கரவர்த்தி யார்/
பதில் : எம்ஜிஆர்.
http://i63.tinypic.com/wiv5zq.jpg
இதெல்லாம் 1970 ம் வருசம் நிலைமை மட்டும் இல்லை. 1950 காளில் இருந்தே இதான் நிலைமை.
1950 களிலேயே புரட்சித்தலைவர் அதிகம் சம்பளம் வாங்கிய நடிகர்.
1950 களில் இருந்தே புரட்சித்தலைவர்தான் வசூல் சக்கரவர்த்தி.
சினிமாவில் அவர் இருக்கும் வரை அவர்தான் சூப்பர் ஸ்டார்.
இவ்வளவு ஆதாரம் குடுத்த பிறகும் இப்பவாச்சும் புரியவேண்டியவங்களுக்கு புரியலைன்னால் ஒன்னும் செய்ய முடியாது. தூங்கறவனை எழுப்பலாம். தூங்கறா மாதிரி நடிக்கறவனை எழுப்பவே முடியாது.
பொது மக்கள் அஞ்சலி செலுத்தி முடித்த பின் கண்ணதாசனின் உடல் இறுதி ஊர்வலத்திற்காக வண்டியில் ஏற்றப்பட்டது..
அப்போது கூட்டத்தில் சின்ன சலசலப்பு.
கண்ணதாசன் உடல் கிடைமட்டமாக அந்த வண்டியில் கிடத்தப்பட்டிருந்ததால் ,
கீழே நின்ற மக்களுக்கு அவரின் முகம் சரியாக தெரியவில்லை..!
கடைசியாக கவிஞர் முகத்தைப் பார்க்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் , கண் கலங்கி கதற ஆரம்பித்தனர் சிலர்..
அப்போது அங்கே நின்ற ஒரு மனிதர், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், மின்னல் வேகத்தில் வண்டி மேல் தாவி ஏறினார்.
கவிஞரின் உடலை சற்றே உயர்த்தி, ஒரு சின்ன ஸ்டூல் மீது அவரது தலையை வைத்து கட்டி விட்டு அந்த மனிதர், சுற்றி நின்ற மக்கள் முகத்தைப் பார்த்தாராம்...!
திரண்டிருந்த மக்கள் முகத்தில் இப்போது திருப்தி தெரிந்தது...!
ஆம்.. இப்போது கண்ணதாசன் முகம் , கீழே நின்ற அத்தனை பேர்களுக்கும் தெளிவாகத் தெரிந்தது..!
திருப்தியோடு அந்த வண்டியை விட்டு கீழே இறங்கிய அந்த மனிதர்தான்..
அன்றைய தமிழக முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தான்..
அவர் கண் அசைத்தால் அடுத்த நொடியே ஆயிரம்பேர் தயாராக இருப்பர்..
ஆனால் அந்த ஒரு நொடி தாமதத்தைக் கூட எம்.ஜி.ஆர். விரும்பவில்லை..!
காரணம் கவிஞர் கண்ணதாசன் மீது எம்.ஜி.ஆர். வைத்திருந்த உயர்ந்த மரியாதை... மக்கள் உணர்வுகளுக்கு கொடுத்த உன்னத மதிப்பு...!
கண்ணதாசன் மீது எம்.ஜி.ஆர்.அவர்கள் வைத்திருந்த கண்ணியமான மரியாதையினால்தான்,
1978-ல் ‘அரசவைக் கவிஞர் ’ பட்டத்தை கண்ணதாசனுக்கு வழங்கினார் எம்.ஜி.ஆர். !
அந்த விழாவில் பேசிய கண்ணதாசன் உணர்ச்சிவசப்பட்டவராக,
‘‘நான் இறந்துவிட்டால் எனக்கு அரசு மரியாதை கிடைக்கும்... இந்த சிறப்பை எனக்கு வழங்கிய எம்.ஜி.ஆருக்கு முன்கூட்டியே நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ’’ என்று சொன்னாராம்...!
எப்படி தெரிந்ததோ கண்ணதாசனுக்கு..?
1981-இல் உயிரோடு அமெரிக்கா சென்ற கண்ணதாசன் , வெறும் உடலாகத்தான் தமிழகம் திரும்பினார்..!
ஆம்.... கவிஞன் வாக்கு பலித்தது..!
எம்.ஜி.ஆருக்காக கண்ணதாசன் எழுதிய
'சங்கே முழங்கு' பாடல் வரிகள்..
'வாழும் போது வருவோர்க்கெல்லாம்
வார்த்தையாலே நன்றி சொல்வோம்..
வார்த்தை இன்றி போகும் போது
மௌனத்தாலே நன்றி சொல்வோம்...
அந்த நாலு பேருக்கு நன்றி'... Thanks Friends...
தினத்தந்தி -19/9/18
http://i63.tinypic.com/10yje69.jpg
மாலைமுரசு -19/9/18
http://i66.tinypic.com/xpoabo.jpg
http://i66.tinypic.com/29y5c41.jpg
மனிதநேயத்தின் மகான் . எளியவர்களை ஏழ்மையாக கூட கருதாத ஏழைப்பங்காளன். உயர் பதவியில் இருந்தாலும் பிறரை தொடுவதற்கு கூட கூச்சப்படும் நாம் இங்கே மனிதநேயத்தின் வடிவமாக ,.முதல்வராக அவர்களின் குறையை நிதானத்தோடு அறிந்து உதவி புரியும் நம் வள்ளலை போல் எவருமுண்டோ. இந்த அழகு உலகில் எந்த தலைவரிடமும் நாம் பார்த்ததுண்டா. மனிதநேய வள்ளலே. தங்கள் புகழ் பாடவே இந்த ஜென்மம் எனக்கு படைக்கப்பட்டுள்ளது. என்றும் உரிமைக்குரல் ராஜு.... Thanks Friends...
இந்த ஒப்பற்ற ஸ்டைல் உலகதிரையில் தோன்றி நடித்த எந்த நடிகராலும் இயற்கையாக வெள்ளித்திரையில் காணமுடியாது. தலைவரின் 100.வது காவியம் ஒளி விளக்கு ( டைட்டிலில்) பல வித உடையில் பல ஸ்டைலை அற்புதமாக படம் பார்க்கும் மக்களுக்கு ரசிகர்களுக்கு கண் இமை மூடாது வெள்ளித்திரையில் வழங்கியிருப்பார் நம் மக்கள் திலகம் அவர்கள். தலைவரின் ஒளி விளக்கு திரைப்படத்தின் டைட்டில் காட்சி போல் எந்த நடிகருக்கும் அமைந்தது கிடையாது. திரையில் ( டைட்டிலில்).நம் தலைவர் நமக்கு அளித்த ஸ்டைல் போல் எந்த நடிகரும் அவரின் ரசிகர்களுக்கு அளித்தது கிடையாது. காலத்தை மிஞ்சி நிற்கும் காவியம் நம் இயற்கைதிலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் ஒளி விளக்கு ஆகும். அக்காவியத்திற்கு பொன்விழா எடுத்து புகழ் சேர்ப்பது தான் நமது கடமையாகும். விழாவிற்கு உதவிய, ஓத்துழைப்பு தரும் தலைவரின் பக்தர்களுக்கு என்றும் உரிமைக்குரல் மாதஇதழ் கடமை பட்டுள்ளது. தலைவரின் 100 வது காவியத்தின் பொன்விழாவில் பங்கெடுத்து மகிழ்ச்சி கொள்ளுங்கள். என்றும் கருணைவள்ளலின் வழியில் உரிமைக்குரல் பி.எஸ்.ராஜு....Thanks Friends...
"ஓளி விளக்கு" என்றும், இன்றும், நாளையும் மங்கா வசூல் பிரளயம் உண்டு பண்ணும் திகட்டாத மக்கள் திலகம் காவியம் இன்று 20-09-2018 ஐம்பது ஆண்டுகள் நிறைவு பெற்று 51 ம் வருடம் தொடக்கம் காண்பதற்கு நல்வாழ்த்துக்கள்...👌 👍
தலைவரின் 100.வது திரைப்படமான ஒளிவிளக்கு காவியத்திற்கு பொன்விழா எடுப்பது நமக்கு ( தலைவர் பக்தர்களுக்கு) பெருமையாகும். ஏன் என்றால் 1968.ல் தலைவர் நடித்த 7 வது காவியம் ஒளி விளக்கு. சென்னையில் (.குறிப்பாக. வடசென்னை பகுதியில்).பிராட்வே 1100 இருக்கைகள்,( 92 நாட்கள்) .அகஸ்தியா 1200 இருக்கைகள் (.31நாட்கள் )என இரண்டு மிகப்பெரிய அரங்கில் கிட்டத்தட்ட 31நாள் தினசரி 6 காட்சி
ஸ்பெஷல் காட்சிகள் என சாதனைகள்( 92 +31)மொத்தம் 123 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது. 5 மிகப்பெரிய திரையரங்கில் வெளிவந்து (பிராட்வே அகஸ்தியா மிட்லண்ட் நுர்ஜகான் மகாலட்சுமி) சாதனை படைத்த திரைப்படமாகும். மதுரை நகரில் முதன் முறையாக 125 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்து மினாட்ஷியில் அரங்கில் 147 நாட்கள் ஓடி அவ்வாண்டில் அதிக நாள் ஓடிய படமாக திகழ்ந்தது. திருச்சி 116 நாள். கும்பகோணம் 100.நாள். கடல் கடந்த நாடான இலங்கையில் இரு பகுதியில் கொழும்பு கிராண்ட்பாஸ் அரங்கில் 169 நாட்களும்,யாழ்பாணம் ராஜா அரங்கில் 161 நாட்களும் மற்றும் பல பகுதியில் ஓடி 8 மாதத்தில் அன்றைய கட்டணத்தில் 15 லட்சத்தை வசூலாக கொடுத்தது. இலங்கை வரலாற்றில் தலைவரின் ஒளி விளக்கு திரைப்படம் மட்டும் தான் தொடர்ந்து 5 முறை வெளியாகி 5 முறையும் 100 நாளை கடந்துள்ளது. 1969,.1974,1979,1984, 1993 இப்படி இலங்கை நாட்டில் மிகப்பெரிய வெற்றியை படைத்த ஓரே காவியம் மக்கள்திலகத்தின் ஒளி விளக்கு ஒன்றே!. அதே போல் தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளில் ஒளி விளக்கு திரையிடப்பட்டு சாதனை புரிந்தது போல் எந்த நடிகர் மொத்தப்படங்களை கூட்டினாலும் இச் சாதனையை நெருக்க முடியாது. 1984,85,86,87,88,89,90 91,92,93, இந்த 10 ஆண்டுகளில் சென்னையில் மட்டும் 60 திரையரங்கில் பலமுறை திரையிட்டு சுமார் 500 வாரங்கள் ஓடி கோடிகளை தந்த திரைக்காவியமாக திகழ்ந்து 1994 முதல் 2018 வரை (.24 ஆண்டுகளில்) திரையிட்ட அரங்குகள் 40.அதில் கிட்டத்தட்ட. 1000 ம் வாரங்கள் மீண்டும் மீண்டும் திரையிட்ட வாரங்களாகும். மகாலட்சுமி அரங்கில் மட்டும் கடந்த 12.ஆண்டுகளில் 15 முறை திரையிட்டு 22 வாரங்கள் ஓடி சாதனை. இப்படி யாராலும் ஒளி விளக்கு திரைப்பட.ம் ஓடியதை கணிக்கமுடியாது. கேரளா,கர்நாடகா, ஆந்திரா புதுச்சேரி மற்றும் பிற வெளிநாடுகள். இப்படி பற்பல சாதனையில் இன்றும் என்றும் வெள்ளித்திரையில் வெற்றி மேல் வெற்றியை பெற்று வரும் உலகத்திரையின் உண்மை நாயகனாம் நம் கலைவானிள் நல்முத்து பொன் முத்துக்கு பொன்விழா எடுத்து இன்னும் பல சாதனையை பொன்விழா மலரில் பதிய வைத்து எட்டாத வானில் ஒளி வீசும் நம் (.ஸ்ரீ ராமசந்திரனுக்கு) எட்டும் அளவில் விழா எடுத்து புகழாரம் சூட்டிமகிழ்வோம். வாருங்கள் நம் தலைவரின் ரத்தத்தின் ரத்தமான உண்மை உள்ளங்களே.... என்றும் 81 ஆண்டுகள் திரையில் மின்னும் ஓரே ஒப்பற்ற கலைபிரம்மாவின் வழியில் உரிமைக்குரல் ஏடு... Thanks Friends...
இன்று முதல் (21/9/18) காவேரிப்பட்டினம் (கிருஷ்ணகிரி மாவட்டம் ) சரோஜா அரங்கில் மக்கள் தலைவர் /புரட்சி தலைவர் இரு வேடங்களில் அசத்தலாக நடித்த
"நாடோடி மன்னன் " தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது .
http://i66.tinypic.com/dnm6jb.jpg
தகவல் உதவி : நெல்லை நண்பர் திரு.வி.ராஜா .