http://i63.tinypic.com/2j2evxu.jpg
http://i67.tinypic.com/zt9gyu.jpg
Printable View
கோவையில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். 102வது பிறந்த நாள் விழா பற்றிய புகைப்படங்கள் தொடர்ச்சி ....
மேடையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திருஉருவப்படத்தை சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமி திறந்து வைத்தார் .
http://i64.tinypic.com/20l11sk.jpg
மேடையில் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் திரு.சைதை துரைசாமி
உரை நிகழ்த்தும் போது
http://i66.tinypic.com/r8s5zr.jpg
மேடையில் திரு.சைதை துரைசாமியுடன் திரு..ஆர். லோகநாதன்
http://i65.tinypic.com/qno6u1.jpg
http://i67.tinypic.com/rwtk01.jpg
மேடையில் திரு.சைதை துரைசாமி அவர்களுக்கு ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பில் பொன்னாடை அணிவித்தல்
திரைப்படங்களில் எம்.ஜி.ஆரின் போர்க்கலைகள் என்கிற புத்தகத்தை எழுதிய திரு.சந்திரகுமார் என்பவரின் நூலை திரு.சைதை துரைசாமி வெளியிட திரு.சாகுல் ஹமீது (ஸ்டண்ட் நடிகர் ) பெற்றுக் கொள்கிறார் .அருகில் திரு.சந்திரகுமார் (பன்முக வித்தகர் ), திரு.காளியப்பன் மற்றும் சிலர்
http://i68.tinypic.com/2ro5gg2.jpg
இதயதெய்வம் புரட்சித்தலைவர் 20 நூற்றாண்டின் ஈடுஇணையில்லாத மனிதநேயத்தின் சக்தி! உலக தமிழ் மக்களின் உள்ளங்களில் நிரந்தரமாக வாழும் புகழின் தீர்க்கதரிசி! எம்.ஜி.ஆர் என்னும் மூன்றெழுத்து மந்திரமே நம்மை உறவுகளாக இணைத்து வருகிறது!உலகில் புரட்சித் தலைவருக்கு கிடைத்தது போல் மக்கள் செல்வாக்கு தலைவர் இருந்த போதும், மறைந்த போதும் எந்த உலக தலைவருக்கும் கிடைத்தது கிடையாது... தலைவரின் அன்பு நெஞ்சங்களை விட பெரிய சக்தி வேறு இல்லை!.எப்படி தலைவர் அடிமைப்பெண் காவியத்தில் கடைசி பாடலான "உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது" பாடலில் .... இனத்தை இனமே அழிப்பதெல்லாம் மனிதன் வகுத்த வாழ்கையிலே.... என்ற தத்துவ வரிகள் தான் இன்று நம்மிடைய ( தலைவரின் பக்தர்கள் உள்ளத்தில்) வேரூன்றி கிடைக்கிறது. நாம் யாவரும் பல்லாண்டு பூமியில் நிலைத்து வாழமுடியாது.மக்களுக்காக எந்நேரமும் நம்முடன், நாம் நித்தம் நினைத்து மகிழ்கின்ற, நம் உறவுகளை ஐக்கியமாக்கிய நம் தர்மதேவன் எம்.ஜி.ஆர் அவர்களே 71வயதில் நாம் நித்தம் வணக்கும் தெய்வமாக நம்முடன் இணைந்து விட்டார்கள். நாம் மட்டும் என்ன வாழ போகின்றோம் உலகில் ஒன்றும் கிடையாது. நம்மவர்கள் பல பிரிவுகளாக தலைவர் பெயரில் புகழ் பாடினாலும் , நட்பாக பழகினாலும் நம்மிடையே ஏற்படும் கருத்து தான் நான் பெரியவன், நீ பெரியவன் என்றெல்லாம் வேறுபடுகிறது. நாம் தலைவர் புகழ்பாட நாம் உழைத்த பணத்திலிருந்து செலவு செய்தும் நம்மிடம் ஒன்றுபட்ட ஒற்றுமையில்லை என்பதை நினைத்து வருத்தம் தான் நம்மிடையே அதிகம் உள்ளது. நாம் யாவரும் ஒன்றுபட முதலில் நமக்கு நாமே பொன்னாடை,.விருது சிறப்புகளை ஒதுக்கி வைத்தால் இதுவே நல்ல உறவுக்கு முதல் வழியாகும். அடுத்து தன் புகைப்படம் போடவேண்டும் என்.பெயர் முதலில் போடவேண்டும் என்பதை தவிர்தால் நல்ல நட்பு கிடைத்துவிடும். ஒருவரை மட்டம்தட்டி பேசுவதும் ஒருவரை தலையில் தூக்கி கொண்டு பாராட்டுவதும் நல்ல நட்புக்கு அழகில்லை. தலைவரின் புகழ் பாடும் எல்லோரையும் யாராக இருந்தாலும் சமமாக பார்க்கவேண்டும். மனநிறைவுடன் வரவேற்பதும், அன்புடன் பழகுவதும், நல்ல ஆரோக்கியமாக பேசுவதும் தான் நல்ல தலைவர் பக்தனுக்கு அழகாகும். ஒரு சிலர் ஒரு சிலரை சீண்டிமுடிப்பதும் ஏசுவதும் அவனை பழிவாங்கவேண்டும் என நினைப்பது தான் மிகப்பெரிய கொடுமையான செயலாகும்.தலைவர் நமக்கு திரையில் போதித்த கருத்துக்கள் படி நடக்க தவறிளால் தான் இப்படிப்பட்ட தவறான எண்ணங்கள் தோன்றும்.. நம் கையை எடுத்து நம்மையே குத்த நினைப்பவர்கள் சத்தியமாக தலைவரின் பக்தராக இருக்க எந்நாளும் தகுதி யில்லாதவர்களாகி விடுகிறார்கள். அப்படி நம்மிடையே பிரிவினையை விதைக்கின்றனர். கற்பிக்கின்றனர். நாம் ஒன்றை மட்டும் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். நாம் பல அமைப்புகளாக இருந்தாலும் நாம் யாவரும் தலைவர் எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்தை யார் உண்மையாக நேசிக்கின்றார்களோ அவர்களே நம் உறவினர்கள். நல்ல நட்புக்கு உறைவிடமான வர்கள் ஆவார்கள். ஒற்றுமையை வளர்ப்போம்! தலைவரின் சக்திகளை ஒன்றிணைப்போம். தலைவரின் புகழை தரணி முழுவதும் பாடுவோம். தலைவரின் பக்தர்களை விட வேறு சக்தி தமிழ் பூமியில் இல்லை என்போம். விட்டு கொடுங்கள்... நாளைய சமுதாயம் MGR என்ற மூன்றெழுத்து மந்திரம் என்போம்! நாம் போகும் பொழுது நம் உறவுகளை விட்டு போகின்றோம்!.நாம் இருக்கும் போது தலைவரின் நட்பாக திகழ்வோம்! தயவு செய்து தலைவர் எம்.ஜி.ஆர் புகழ்பாட உறவுகளாக உண்மை உள்ளத்துடன் இணைவோம்! எல்லோருக்கும் பதிவிடுங்கள்.... நாளைய வரலாறு நமக்காக உருவாகலாம்.
அனைவரின் நட்புடன் நன்றியுடன்..... உரிமைக்குரல் ராஜு............ Thanks wa.,
...
அன்பான காலை வணக்கத்தை மதிப்பிற்குரிய அண்ணன் சைதையார் அவர்களுக்கு தெரிவித்துக்கொண்டு... கடந்த ஆண்டு தலைநகர் சென்னையில் தங்கள் தலைமையில் பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் ஜுலை 15 ம் நாள் நடைபெற்ற உலக எம்.ஜி.ஆர். பிரதிநிதிகள் பேரவை மாநாட்டு மூலம் உலகத்தில் வாழும் புரட்சித்தலைவரின் அபிமானிகளை ஒன்றிணைத்த பெருமை தங்களையே சாரும். இந்த மாபெரும் தொடக்கம் மூலம் பரவிகிடந்த நம்மவர்கள் ஒரே இட.தில் உறவுகளாக உறவாடிய பெருமையை கண்டு மனமகிழ்ச்சி அடைந்தோம். அந்த தொடர்பு மீண்டும் நிலைக்க, தலைவரின் மனிதநேயம் காக்க நம்மவர்கள் ஒன்றுகூட 2019 ஆம் ஆண்டில் நம் தமிழ்நாட்டின் மையப் பகுதியான திருச்சி மாநகரில் தலைவரின் 102 வது மனிதநேய திருவிழாவை உலக எம்.ஜி.ஆர் பேரவை மூலம் ஜுலை அல்லது ஆகஸ்டு மாதங்களில் நடத்தி தலைவரின் அன்பு உள்ளங்களை சரியான பாதைக்கு கொண்டு செல்ல இன்றைய தினம் தங்களால் மட்டுமே இந்த சீரிய பணியை செம்மையாக செயல்படுத்த முடியும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் தலைவரின் சரித்திரப்புகழும், தலைவரின் மேல் மாறாத பக்தியும் கொண்ட அபிமானிகளின் ஒற்றுமையும் தங்கள் நினைத்தது போல் ஒன்றுபடும்.
இன்று தங்கள் ஒருவரால் மட்டுமே தான் தலைவரின் புகழுக்கு புகழ் சேர்க்க முடிகிறது. பிரிந்து கிடந்த தலைவரின் இனத்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒன்றுப்படுத்தி தலைவரின் நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் கலந்து அவர்களின் நாடி துடிப்பை சரிவரப் பார்த்து எங்களுடன் உறவாடி தொடர்ந்து நல்ல கருத்துகளை விதைத்து எல்லோரும் ஒன்றுபட வேண்டும் என்ற ஆழ்ந்த எண்ணத்தை அன்றாடம் பேசி இதயதெய்வம் எம்.ஜி.ஆர் அவர்களின் வழியில் தூயகல்வி பணியாற்றி வரும் மனிதநேயத்தின் நல்மனிதாராக திகழும் அண்ணன் சைதையார் அவர்கள் நினைத்தால் உலகில் கடைசி மனிதன் வாழும் வரை வரலாற்று தலைவரின் சரித்திரப்புகழ் நிலைக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை. அன்புடன் வள்ளல் புகழ்பாடும் உரிமைக்குரல் ராஜு....... Thanks wa.,
.உடைஅலங்கார நிபுணர் திரு.எம்.ஏ.முத்து , திரு.சைதை துரைசாமி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தல்
http://i66.tinypic.com/f013yh.jpg
உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது என்று 60 ஆண்டுகளுக்கு முன்பே தலைவர் சக்கரவர்த்தி திருமகள் திரைப்படத்தில் தன் கருத்து பாடல் மூலம் சொன்னது தான்..
நிலைக்கெட்டு போன நயவஞ்சகரின் நாக்கு தான்..... என்பதை சுட்டி காண்பித்தார். ஆனால் அந்த நயவஞ்சக நாக்கு யார் என்பதை 1972 ம் ஆண்டு அக்டோபர் மாதம் உலகத்திற்கே கருணாநிதி தான் என்று எடுத்துரைத்தார்.அந்த நாக்கு எப்படிப்பட்டது என்பதை நாம் 1972 அக்டோபர் முதல் 2018 வரை (கடந்த 46 ஆண்டுகளாக ) நாம் அறிவோம். அந்த நாக்கின் வாரிசு இன்று உலா வந்து தமிழ்நாட்டை ஆளதிட்டமிட்டு வருகிறது.. தலைவரின் அன்பு உள்ளங்கள் அதை தடுத்து அவர்களின் பொய்யுரைக்கு தீர்வு காணவேண்டும். நல்லதே தமிழகத்தில் நடக்கவேண்டும். தலைவரின் புகழைப்பாட முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையில் தலைவர் உருவாக்கிய அண்ணா கொடி, இரட்டை இலை, அண்ணா தி.மு.கழக நிறுவனம் மூன்றும் வருங்காலம் நீடித்து நிலைக்க ஆதரிப்போம்.. நம் ஒற்றுமையை நிலைநாட்டுவோம். நன்றி! உரிமைக்குரல் ராஜு............ Thanks wa.,
தலைவர் பவனி வந்த கலையுலகில் 1952 முதல் 1977 வரை கணேசனின் படங்கள் பல பாதாளத்திற்கு சென்றுள்ளது. தலைவரே தன் படங்களை முடித்து வெளியீடுக்கு பின் வசூல் நிலவரம் தவிர ஒடிய நாள் பற்றி சிறு துளி கூட அவர் நினைத்ததில்லை. தலைவர் நினைத்திருந்தால் படங்களின் சாதனைகள் இன்னும் இரட்டிப்பாக மாறியிருக்கும். அப்படி தலைவர் செய்யவில்லை. அதனால் தான் தலைவரின் படங்கள் காலம் கடந்தும் வாழ்ந்து கொண்டு வருகிறது... சினிமாவிலும் வாழ்கையிலும் அரசியலிலும் ஒரே நிலை பாட்டுடன் இருந்ததால் தான் பல வெற்றிகளையும் சாதனைகளையும் வரலாற்றில் பதியும் அளவுக்கு மக்கள் செல்வாக்குடன் இன்றும் தீர்க்க தரிசியாக திகழ்கின்றார் மனிதநேயத்தின் முதல்வராக தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள். நன்றி உரிமைக்குரல் ராஜு.....
.... Thanks wa.,
#Kumar_Kandasamy_என்பவரின்_பதிவு
திமுகவில் இருந்தாலும் இவரை அப்போதே பிடிக்கும்
கால ஓட்டத்தில் அதிமுகவை ஆரம்பித்தார்
இறக்கும் வரை மன்னாதி மன்னனே
பழி வாங்கும் எண்ணம் இருந்தது இல்லை
ஒரு முறை நேரில் மிக அருகாமையில் ஜீப்பில் வந்து கொண்டு இருந்தார்
திமுகவில் இருந்துஂவெளியேறிய பின்னர் சென்னை திநகரில் முதல் கூட்டம்
அவருடைய வாகனத்தின் பின் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும்
எல்லாம் அடித்தட்டு மக்கள்
இவர் நமக்கு நிச்சயமாக ஏதோ செய்வார் என்ற நம்பிக்கை
வழக்கம்போல திமுகவினர் கூட்டத்தில் பாம்புகளை விட்டும் காளைகளின் கொம்பில் தீப்பந்தங்களை கொளுத்தி கூட்டத்தினரை கலைக்க ஏதேதோ செய்தனர்
அவர் பதட்டமடைய வில்லை கைகளை கட்டி கொண்டு தைரியமாக நின்று அமைதி காத்தார்
விஷமிகள் அடித்து விரட்டப்பட்ட னர் அவருடைய கருத்துக்களின் நியாயத்தை மக்கள் உணர்ந்து இருந்தனர்
அன்றைக்கு அவர் தனியார் பொறியியல் கல்லூரிகள் கொண்டு வரவில்லை என்றால் இன்று பலர் கோவில் மணி அடித்துஂகொண்டு இருப்பார்கள்
உண்மையான சமூக நீதி காவலர்
இன்று இவரை ஸ்டாம்ப் சைசுக்கு சுருக்கி விட்டனர்
அவர் யாரையும் வாரிசாக நியமிக்கவில்லை
திறமை இருந்தால் வரட்டும் என விட்டு விட்டார்
கடைசி ஒன்று
முதலமைச்சராக இருந்த காலங்களில் உலகின் எந்த மூலையிலும் ஒரு அங்குலம் நிலம் கூட வாங்கவில்லை
அப்போதெல்லாம் அரசுத்துறை நியூஸ் டிவிஷன் செய்தி படம் திரைப்படங்களுக்கு முன் வரும்
எம்ஜிஆர் மேடையில் ஏறி நின்றவுடன் அவரை காண பெரும் கூட்டம் அலைமோதும்
வயதான பெண்களை மேடைக்கு அழைப்பார்
அவர்கள் எம்ஜிஆர் கையை பிடித்தவுடன் அவர்களுக்கு உதவி தொகையை கொடுக்கும் போது
அந்த மூதாட்டி தன் மேல் புடவையை எடுத்து உதவியை மடியில் வாங்கி கொள்ள முயல்வார்
உடனே எம்ஜிஆர் அதை மறுத்து இரண்டு கைகளிலும் கொடுப்பார்
அடேயப்பா என்ன ஒரு ஆரவாரம்
திரைப்படம் பார்ப்பதை விட இந்த செய்தி சுருளை பார்ப்பதற்கே பெரும் கூட்டம்
அவர்களில் நானும் ஒருவன்
இன்று கட்சிக்கார்களே அவரை மறந்து விட்டனர்
தீய சக்தி என்று அவர் அடையாளம் காட்டியவரின் வாரிசுகள் இன்று மீண்டும் தலை தூக்குகின்றன
தமிழகத்தின் நிரந்தர முதல்வர் எம்ஜியார் மட்டுமே............. Thanks wa.,
http://i68.tinypic.com/jphe7c.jpg
கோவை மாவட்ட எம்.ஜி.ஆர். பக்தர் திரு.சேகருக்கு திரு.சைதை துரைசாமி
பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல்
கோவை மாவட்ட எம்.ஜி.ஆர். பக்தர் திரு.கணபதி தாஸுக்கு திரு.சைதை துரைசாமி பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல்
http://i65.tinypic.com/2luvywo.jpg
கோவை மாவட்ட எம்.ஜி.ஆர். பக்தர் திரு.கமலக்கண்ணனுக்கு திரு.சைதை துரைசாமி பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல்
http://i68.tinypic.com/2qlfuba.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திருஉருவ படத்தை ஓவியமாக எம்.ஜி. ஆர். பக்தர் கோவையில் உருவாக்கியதை மேடையில் அறிமுகப்படுத்தும் காட்சி .
http://i66.tinypic.com/2v1mctu.jpg
திரு.சைதை துரைசாமி அவர்களுக்கு திரு.காளியப்பன் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல் .
http://i65.tinypic.com/if8xlu.jpg
விழாவில் திரண்ட பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி .
http://i68.tinypic.com/mudbwy.jpg
மேடையில் திருவாளர்கள் :துரை கருணா,(பத்திரிகை ஆசிரியர் ), முருகு பத்மநாபன் (பிரான்ஸ் எம்.ஜி.ஆர். பேரவை ), சைதை துரைசாமி (முன்னாள் சென்னை மேயர் ), எம்.ஏ.முத்து ( உடைஅலங்கார நிபுணர் ),தசரதன் (நவரத்தினம் துணை இயக்குனர் ) மற்றும் சிலர் .
http://i68.tinypic.com/2yx5ev5.jpg
http://i63.tinypic.com/e636vl.jpg
பல்லடம் திரு.ரங்கசாமி அவர்கள் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.தோற்றத்தில்.
உடன் திரு.பாண்டியராஜ்,திரு.லோகநாதன்
http://i65.tinypic.com/2yvkzet.jpg
மேடையில் தாரை தப்பட்டையுடன் சிறப்பு விருந்தினர்களை வரவேற்கும் காட்சி .
http://i68.tinypic.com/5l6nu0.jpg
இந்தியாவில் அத்தனை பெருமைகளை ஒருங்கே பெற்றவர் எம் ஜி ஆர் ஒருவரே
முதல் தேசியவிருது
பிரதமர் நேரடி பாராட்டு கடிதம்
பத்மஸ்ரீ
பாரத்
சாரணர் வெள்ளி யானை
பிரதமர் திறந்த எம்ஜிஆர் மன்றம்
இந்தியாவின் உச்சகட்ட மரியாதை
ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர். ஒருங்கே மரியாதை
எம் ஜி ஆர் ஸ்டாம்பு பலமுறை
எம் ஜி ஆர் நாணயம்
எம் ஜி ஆர் சிலை பாராளுமன்றத்தில்
எம் ஜி ஆர் ரயில் நிலையம்
இந்தியாவின் உச்ச மிக உயர்ந்த விருது பாரத் ரத்னா விருது
இவை இந்தியா அரசு மட்டும் எம் ஜி ஆருக்கு அளித்த பெருமை இதுபோன்ற பெருமை இந்தியாவில் எவரும் பெற்றதில்லை
இந்தியாவை சீனா தாக்கிய போது நேருஜீயின் நிதி அளிக்க மக்களிடம் வேண்டிய போது முதல் நிதி அளித்த இந்தியன் எம் ஜி ஆர் அதுவும் எழுத்து ஐந்தாயிரம் இன்றைய மதிப்பு பலகோடி ரூபாய் ஆகும்
வாழ்க எம் ஜி ஆர் புகழ்............ Thanks wa.,
புரட்சித்தலைவரின் இரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புகளுக்கு அன்புடன் தெரிவிப்பது... வருகின்ற ஏப்ரல் 21ம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று சென்னை தி.நகர் ( கவிஞர் கண்ணதாசன் சிலை அருகில் உள்ள) சர்.பிட்டி. தியாகராயர் அரங்கில் நடை பெறவுள்ள பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் புகழ்பாடும் முப்பெரும் விழா! தலைவரின் 102 வது மனிதநேயவிழா. தலைவரின் தயாரிப்பில் - நடிப்பில் 2 வது முத்து எம்.ஜி.யார் பிக்சர்ஸின் அடிமைப்பெண் திரைப்பட பொன்விழா (1969/2019) மற்றும் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் நற்பணி சங்கத்தின் 5 ம் ஆண்டு விழா. அன்று நடைபெறும் நிகழ்வுகள் அடிமைப்பெண் பொன்விழா மலர் வெளியீடு!.தலைவரின் பாடல்கள் பற்றிய கருத்தரங்கம். மாபெரும் இன்னிசை நிகழ்ச்சியில் ....... மக்கள் திலகத்தின் பாடல்களை இடைவிடாது இசைப்பவர்கள் ஸ்ரீ தேவி பைன் ஆர்ட்ஸ் வழங்கும் ..... ஸ்ரீதர் நவராக்ஸ் இசை குழுவினர்கள். நிகழ்ச்சி காலை 10.00.மணி முதல் இரவு 9.00 மணி வரை. நடைபெறும். தலைவரின் அடிமைப்பெண் பொன்விழா மலருக்கு வாழ்த்து செய்தி தரவேண்டிய கடைசி தேதி ஏப்ரல் 15 ஆகும். கலர் முழுபக்கம் 3000/ ரூபாய். அரைப்பக்கம் 1500/ மற்றும் கருப்பு வெள்ளை ஒரு பக்கம் 1000/ அரைப்பக்கம் 500/ ரூபாய். தாங்கள் விருப்பம். விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்கள். தலைவரின் பக்தர்கள் வெளியூரில் இருந்து வருகை தந்து சிறப்பிக்கின்றார்கள். அன்புடன் வரவேற்கும். தலைவரின் புகழ் பாடும் ஒலிக்கிறது உரிமைக்குரல் மாதஇதழ் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.நற்பணி சங்கம். விழா நுழைவு டிக்கட் 19.4.19.முதல் இலவசமாக பெற தொடர்புக்கு : 9789011847,9445209180 8939085383,8637651765
நன்றி! நன்றி !! நன்றி! !!!......... Thanks wa.,
உலக புகழ் பெற்ற சென்னை, மெட்ராஸ் சென்ட்ரல் ரயில் நிலையம்......... எம்.ஜி.ஆர்., ரயில் நிலையம் என திருப்பெயர் சூட்டிய மத்திய அரசாங்கத்திற்கும், அந்த திருப்பெயர் உடன் அமலுக்கு வர அரசு ஆணை பிறப்பிதற்கு தமிழக அரசுக்கும் நம் சார்பாக கோடானு கோடி நன்றிகள் உரித்தாகுக.. ...........👌 👍💐
மாலை மலர் -06/04/19
http://i65.tinypic.com/2f090r8.jpg
மாலை முரசு -06/04/19
http://i66.tinypic.com/mskj1i.jpg
தமிழ் இந்து -07/04/19
http://i65.tinypic.com/2i8au5s.jpg
தின செய்தி -07/04/19
http://i66.tinypic.com/qswnc7.jpg
தினமணி -07/04/19
http://i66.tinypic.com/mmwi8h.jpg
தினமலர் -07/04/19
http://i68.tinypic.com/a1iefb.jpg
தினகரன் -07/04/19
http://i67.tinypic.com/33lf0gj.jpg