முரளி சார்,
நடிகர் திலகம் ரசிகர்கள் பங்கேற்ற நீயா நானா எப்போது ஒளிபரப்பாகிறது என தகவல் உண்டா ?
Printable View
முரளி சார்,
நடிகர் திலகம் ரசிகர்கள் பங்கேற்ற நீயா நானா எப்போது ஒளிபரப்பாகிறது என தகவல் உண்டா ?
தாய் மொழியை காத்தார்களா ! ஹ !
முதலில் தமிழனை காத்தார்களா ?
எந்த தமிழனை வளர விட்டார்கள்...அவன் புகழை வளர்த்தார்கள் ? அந்த தமிழ் மொழி காத்த கூட்டம் ?
விரல் விட்டு ஒருவரை கூற முடியுமா ?
தமிழ்நாட்டை ஆண்ட காலம் தொட்டு நாசமாகி குளம் தோண்டி குட்டயாக்கிய கயவர்கள் என்று முதல் தமிழ் காப்பாளிகள் ஆனார்கள் ?
ஒருவன் திருப்தி போனது பெரிய தேச விரோத செயல் அல்ல...! அந்த செய்தியை அதற்குள் தமிழ் காதவர்களுக்கு கூறி...போனவர் இறங்கி அடிவாரம் வருவதற்குள்...திருப்தி கணேசா இன்றோடு நீ கோவிந்தா என்று கூவிய பெருமை மிகு தமிழ் மொழி காத்த கூடம் அல்லவா !
நல்லெண்ணம் கொண்ட நடிகர் திலகம், மக்கள் திலகம் திரி நண்பர்களுக்கு மற்றும் திரியை திரிக்கும் திரியாளர்களுக்கு
என்னை பரிந்துரை செய்து இந்த திரி பாகம் 14 தொடங்க ஊக்குவித்த கோபால் சார், வாசுதேவன் சார், சிவாஜி செந்தில் சார் மற்றும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
அதை வழி மொழிந்து திரி எழுத அனுமதித்த முரளி சார் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இந்த திரி நிச்சயம் குறுகிய காலத்தில் என்னால் முடிந்த அளவு சொந்தமான சரக்கோ மற்றவர்கள் பதிவிட்ட சரக்கோ..எந்த தலைமுறையினரும் கண்டு களிக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் பதிவு செய்ய தொடங்கினேன்.
தவறான தகவல் நடிகர் திலகம் சம்பந்தமாக எங்கு வந்தாலும் அதை தவறு என்று சுட்டிக்காட்டி முடிந்தவரையில் பொய் தகவல்களை ஆதார ஆவணம் கொண்டு பதிவும் செய்துள்ளேன்.
தவறான தகவல், பொய்யான செய்தி, அரசியல் காழ்புணர்ச்சி என்னால் பார்த்து கொண்டு அவர்கள் அப்படிதான்...இவர்கள் இப்படிதான் என்று பார்த்தும், படித்தும் வாய்மூடி கைகட்டி என்னால் இருக்க முடியவில்லை. இது என்னுடைய தனிப்பட்ட பலஹீனமாக கூட இருக்கலாம் ..மறுப்பதற்கில்லை.
ஒன்று ஊழலோடு ஊழலாக நானும் ஊழல் செய்யவேண்டும்..அல்லது நம் வழியை பார்த்துபோகவேண்டும். என்னால் ஊழல் செய்ய முடியாத பட்சத்தில் ....நான் என் வழியை பார்த்து போக முடிவு செய்துள்ளேன்.
இது ஒன்றும் இந்த திரிக்கும் நமது நடிகர் திலகத்திற்கும் புதிதல்ல.
ஊழல் பெருச்சாளிகள், ஊழல் பேர்வழிகள் நிறைந்த நன்றிகெட்ட நடிகர் சங்கத்தில் தனது உழைப்பு இனி பயன் படகூடாது என்று முடிவெடுத்து அந்த கட்டிடத்தில் இனி நுழைவதில்லை என்று முடிவெடுத்து அதை இறக்கும் வரையில் காப்பாற்றிய நடிகர் திலகம் அவர்களை மனதில் வைத்திருப்பவன் நான் ! அதே முடிவை இப்போது இங்கு எடுத்துள்ளேன். !
உங்களுடைய எண்ணங்களுக்கு ஒத்துபோகும் ஒருவர் இனி இந்த திரியை மேற்கொண்டு எடுத்து செல்லட்டும்...நடத்தட்டும் !
தந்த வாய்ப்புக்கு மிக்க நன்றி...!
Regards
rks
moderator அவர்களுக்கு :
Request you to delete my id !
Thanks & regards
rks
ஒட்டடைக் குச்சி ஓய்வு எடுத்துக்கொண்டால் சிலந்திப் பூச்சி சிம்மாசனம் ஏறும் -
அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது - கன்பூசியஸ்
அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக்கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும் - எமர்சன்
பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது. கடல் பழையது; மழை புதியது -
கடிகாரத்தில் நேரத்தைப் பார்க்காமல் கடினமாக உழைத்ததால்தான் என்னால் புதிய பொருட்களைக் கண்டுபிடிக்க முடிந்தது - தாமஸ் ஆல்வா எடிசன்
சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும் -
உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது - ஜார்ஜ்
தமிழனக்கு தமிழனே எதிரி. அதே போல், நடிகர் திலகம் ரசிகர்கள் , அவருடைய ரசிகர்களே எதிரிகள். எப்படி இருத்த திரி இப்படி ஆகிவிட்டதே .
இது அபத்தம். அணியிலிருந்து விலகிய பின் அவர்களின் அணுகு முறையை குறிப்பிட்டேன். கூட இருந்த போது அண்ணாவும்,கலைஞரும் போற்றாததா?சிவாஜி பட்டம் கிடைத்ததே அண்ணாவின் நாடகத்தால் பெரியார் வாயால்.
பராசக்தி படத்தில் தூக்கி விடலாம் என்ற எண்ணம் வந்த போது ,அதை தடுத்தவர் அண்ணா.
நம் நாட்டு மார்லன் பிராண்டோ என்றவர் அண்ணா.
எந்த விதத்திலும் தி.மு.க அவரை விட்டு கொடுக்கவில்லை. காங்கிரஸ்,காமராஜ்,இந்திரா,ராஜீவ் அவருக்காக என்ன செய்தனர்?விளக்க முடியுமா?
அடுத்தவர்களுடைய புகழை தனதாக்கும் பாரம்பர்யம் திராவிட கட்சிகளுக்கு அதை போற்றுகிரவர்களுக்கு உண்டு என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபணம் செய்ததற்கு நன்றி...
நடிகர் திலகம் அவர்களே பல பேட்டிகளில் கூறியிருக்கிறார், திரு pa பெருமாள் அவர்கள் தான் விடாபிடியாக தான் தான் நடிக்க வேண்டும் என்று கூறி செயல் படுத்தியதை. அதன் நன்றிகடனாக இன்றளவும் பொங்கலுக்கு அவர் குடும்பத்தில் இருந்து மரியாதை செய்வது வழக்கம்..இது உண்மை...இதையே மறைக்கும் அளவிற்கு திராவிட எண்ணங்கள் வேரூன்றியுள்ளது அதன் ஆதரவாளருக்கு ! மற்றபடி நீங்கள் கூறியபடி அண்ணாவும் சொல்லவும் தம்பியும் சொல்லவில்லை !
அணியில் இருக்கும்போது என்ன செய்தார்கள் ?
கட்சிக்கு தெரு தெருவாக தமிழகம், இலங்கை சென்று கட்டபொம்மன், மனோஹர, பராசக்தி வசனம் பேசி அதுவரை திராவிட கட்சி கண்ணால் கூட பார்த்திராத அளவுக்கு பணமும் பொன்னும் வசூல் செய்து கொடுத்தவர் நடிகர் திலகம் ....அவருடைய சம்பளம் கூட திருமணம் ஆகும் வரை இந்த திராவிட கனவான்கள் ஒரு பகுதி கட்சிக்காக என்று கேட்டு வாங்கியுள்ள சரித்திரம் தமிழகம் கண்டதுண்டு...! இந்த திராவிட கனவான்கள் முதலில் என்ன செய்து கிழித்தார்கள் ?
அணியில் இருந்து விலகி...உலக புகழ் வந்ததும்....உலகமே போற்றுகிறது.. ! நாம் இரெண்டொரு வார்த்தை கூறாமல் இருந்தால் தவறாகிவிடபோகிறது என்று ஊர் வாய்க்கு பயந்து இதை செய்துள்ளதை புரிந்து கொள்ள முடியாமல் இல்லை. இதில் ஒன்றும் பெருந்தன்மை எள்ளளவும் இல்லை என்பது தான் உண்மை. !
காலம் கடந்த கூற்று...அண்ணா கூறியது ...! உலகபுகழ் அவர் கூறுவதற்கு முன்பே நடிகர் திலகம் பெற்றாகிவிட்டது ...!
சும்மா அண்ணா கொடுத்துவிடவில்லை சிவாஜி வேடத்தை...அதன் பின்னணியை நான் விளக்க வேண்டுமோ ? கொடுத்த பாடத்தை தலைகீழாக வெளியில் சென்று அண்ணா திரும்பி வருவதற்குள் கரைத்து குடித்து வந்தவுடன் அதை திறம்பட நடித்தும் காட்டியவர் எங்கள் கலை கடவுள். இவரை விட்டால் சிறந்த ஆள்...வேறு ஆள் இப்போதைக்கு இல்லை என்ற காரணத்தால், தனது நிலையை காப்பாற்றிக்கொள்ள கொடுத்தார்...! அதுவும் புதிய உடை கூட கொடுக்காமல்...mgr அவர்களுக்கு அளவெடுத்து வைத்த உடையை alter செய்து தான் அந்த வேடத்திற்கு கொடுத்தார் .! இந்தளவிற்கு ஒரு partiality ...!
பெரியார் சிவாஜி பட்டம் கொடுத்தது ! - அந்தளவிற்கு நடிப்பின் தரம் இருந்தது...நடிகர் திலகம் நடிப்பில் அவ்வளவு ஒன்றிபோனதால்தான் சிவாஜி பட்டம் கொடுத்தார் ! இது நடிகர் திலகத்தின் திறமைக்கு, தகுதிக்கு கிடைத்த கெளரவம். அதற்க்கு முன் திரை நடிகர்களையும் நாடக நடிகர்களும் எப்படி அழைக்கபட்டார்கள்..அவமான படுத்தபட்டார்கள், கேலிபேச பட்டார்கள் திராவிட கனவான்களால் என்பதை நான் கூறி தான் திராவிட செல்வங்களுக்கு தெரியவும் வேண்டுமோ ?
இப்போது சிலை விவகாரம் கூட...சிலை வைத்து அதை அரசாங்க documentation formalities முழுதும் செய்தார்களா என்றால் அது கூட இல்லை ! நடிகர் திலகத்தை நேசிப்பவர்களுக்கு அந்த MENTAL TENSION வேறு புதிதாக சேர்ந்துள்ளது ! ஒரு வக்கீல் வைத்து ஒரு சாமானிய மனிதன் வாதாடுகிறான் - இவளவு பெரிய நிலையில்...உயிர் நண்பன் ..டிவி பார்க்கும்போது முத்தமிடுவேன் என்றெல்லாம் கூறுபவர்கள் ஒரு வக்கீல் வைத்து வாதிட்டார்களா ? இல்லையே ? அப்புறம் என்ன திராவிடம்...ஆரியம் என்று ...!
நடிகர் திலகத்திடம் இவர்கள் பாட்சா பலித்தது....மற்றொரு நடிகரிடம் இவர்கள் செய்த இதே வேலைக்கு, இவர்கள் பாடச்ச பலிக்கவில்லை, வனவாசம் தான் கிடைத்தது ! காரணம் அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொல்லும் என்பதுதான் !
காங்கிரஸ் ஆரம்பம் முதலே சிவாஜி அவர்களை பிரசாரத்திற்கு மட்டும் பயன்படுத்தினார்களே தவிர...தெரு தெருவாக வசனம் பேச சொல்லி, பணம் வசூல் செய்ய சொல்லி அதை பிடுங்கிக்கொண்டு நடிகர் திலகத்தை முடிந்தவரை ஓட்டாண்டியாக்கி அவமானபடுத்தவில்லை...!
மொத்தத்தில் இருவரும் ஊழல்தான் ...அதில் இமாலய ஊழல் பரங்கிமலை ஊழல் என்ற அளவுகோல் நிச்சயம் உண்டு !
RKS
படித்த பண்பாளர்கள் நடிகர்திலகத்தின் புகழ் ஆர்வலர்களாக நிறைந்த மேன்மைமிகு திரியில் மொழி அடிப்படை அரசியல் அலசல்கள் தேவைதானா? மொழி, மதம், இனம், தேசம் ஞானம், கல்வி....இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்ட உலகின் ஒப்பாரும் மிக்காருமில்லாத ஒரே மாபெரும் கலைஞனுக்கு நடிப்பின் அகராதிக்கு இந்தவகை சாயங்கள் எதற்காகப் பூசப்பட வேண்டும்? அறிவியல் அரசியல் மாற்றங்கள் நிறைந்த இப்புவியில் என்றும் மாறாத நடிப்பிலக்கணத்திற்கு, மறைந்தும் மறையாத புகழுடம்புடன் நம் மனதில் நிறைந்திருக்கும் நடிப்புக்கடவுளுக்கு நாம் செய்யும் உண்மையான நினைவஞ்சலி சேவை எந்தவித அரசியல் கலப்புமின்றி வருங்கால சமுதாயத்திற்கு நடிப்புலகில் அவர் உருவாக்கிய வழிகாட்டும்விதமான சாதனைகளை எடுத்துரைப்பதே.
With a unity in diversity, let us sing the name and fame of NT in unison without giving room for such controversies and debates that will only detract us from our principal objective. It is my humble request to all our friends to concentrate on accelerating the growth of this thread without any stagnation.
Dear RKS. Kindly don't give up your dash and verve that is taking this thread towards the service to NT, but of course, not becoming the 'eye of the cyclone' at times!