Quote:
`கண்ணதாச' ஓவியம்
கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் காலை 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி `ரசிகன்'.
வெள்ளித்திரையின் கலைஞர்களையும், அவர்களது படைப்புகளையும் ரசிக்கும் ரசிகர்களின் திறமைகளை சின்னத்திரையில் வெளிச்சம் காட்டும் `ரசிகன்' நிகழ்ச்சி, 80 வாரங்களைக் கடந்திருக்கிறது.
நடிகர்கள், இசையமைப்பாளர்கள், பின்னணிப் பாடகர்கள், கவிஞர்களின் ரசிகர்கள் இதுவரை பங்குபெற்றுள்ளனர். இதன் தொடர்ச்சியாக கவியரசு கண்ணதாசன் ரசிகர்கள் பங்குபெறும் நிகழ்ச்சியில் கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் நந்தலாலா, முனைவர் கிருதயா மற்றும் கவிஞர் குகை மா.புகழேந்தி ஆகியோர் சிறப்பு பங்கேற்பாளர்களாக கலந்து கொள்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சித் தொடரில் நாளை சிறப்பு நிகழ்ச்சியாக கவியரசு கண்ணதாசனின் பாடல் வரிகளை பிரபல ஓவியர் மணியம் செல்வன் ஓவியமாக வரைகிறார். `கவிஞர் கண்ணதாசன் திரைப்படப் பாடல் வரிகளை எழுதும்போது அவர் மனத்திரையில் ஓடிய காட்சிகள் தனக்கு மிகவும் சவாலாகவும், வித்தியாசமான ஒரு சுகானுபவமாகவும் இருந்தது. மேலும் கவிஞரின் பாடல் வரிகளுக்கு ஓவியம் வரைவது மிகவும் பெருமைக்குரிய ஒரு விஷயம்'' என்கிறார் ஓவியர் மணியம் செல்வன்.
நிகழ்ச்சியில் ஓவியர் மணியம் செல்வன் வரையும் ஓவியங்களைப் பார்த்து, எந்தப் பாடலின் வரிகள் ஓவியமாக்கப்பட்டுள்ளது என்று ரசிகர்கள் கண்டுபிடித்து பாடுகிறார்கள்.
இயக்கம்: மணிவண்ணன். நிகழ்ச்சித் தொகுப்பு: பி.எச்.அப்துல்ஹமீத். தயாரிப்பு: கிராவிட்டி எண்டர்டெயின்மென்ட் சார்பில் பி.விஜயகுமார், சுவிசந்தர் சாவ்லா.