http://i57.tinypic.com/28bfck2.jpg
ABOUT MAKKAL THILAGAM
http://i61.tinypic.com/2pshnrk.jpg
DIRECTOR P. NEELAKANTAN
Printable View
http://i57.tinypic.com/28bfck2.jpg
ABOUT MAKKAL THILAGAM
http://i61.tinypic.com/2pshnrk.jpg
DIRECTOR P. NEELAKANTAN
http://i57.tinypic.com/14bmg5v.jpg
NINAITHTHATHAI MUDIPPAVAN - STILL
SATHYAM CINEMAS - AAYIRATHL ORUVAN - TODAY[22/6/2014] HOUSEFULL
http://i59.tinypic.com/21n0fad.jpg
ALBERT CINEMAS - AAYIRATHIL ORUVAN - PLEASE RUSH TO BUY TICKET TO AVOID DISAPPOINTMENT
http://i57.tinypic.com/2mqnwpt.jpg
எம்.ஜி.ஆரின் ஏழு மணி நேர உண்ணாவிரதம்
(ஜூனியர் விகடன்: 16.2.1983)
பிப்ரவரி 9-ம் தேதி. காலை மணி 9-50. அண்ணா சமாதியில் மலர் வளையம் வைத்து வணங்கி, இரண்டு நிமிடம் மௌனமாக இருந்து, பிறகு சமாதியை வலம் வந்து நேராகக் கம்பன் சிலை அருகே போடப்பட்டிருந்த பந்தலுக்கு வந்தார் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். ஐந்து அடி உயர மேடையில் ஏறி அமர்ந்து ஏழு மணி நேர அடையாள உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார் அவர்.
''கொடுத்துச் சிவந்த கரம் 'தா’ என்று கேட்பது தனக்காக அல்ல; மக்கள் நலனுக்காக! மத்திய அரசே, மத்திய அமைச்சரே, அரிசி கொடு!'' என்று முழக்கங்கள் கேட்கின்றன.
அடையாள உண்ணாவிரதம் இருக்கப் போவதாக முதல் நாள் பிற்பகல் ஒரு மணி சுமாருக்குத் திடீரென்றுதான் முதலமைச்சர் அறிவித்தார். மின்னல் வேகத்தில் இரண்டு 'பக்கா’ பந்தலும், கம்பீர மேடையும் ரெடியாகி விட்டது! ஒரு பந்தலில் எம்.ஜி.ஆர். அமர்ந்த மேடையும், அதைச் சுற்றிக் கட்சிப் பிரமுகர்களும் இருந்தார்கள். வலது பக்கப் பந்தலில் பார்வையாளர்களாகத் திரண்ட பொதுமக்கள்.
பந்தல் ரெடியான வேகத்தைப் பற்றி நிருபர்களில் சிலர் அதிசயமாகப் பேசிக் கொண்டிருந்தபோது...
''நேற்று மேல்சபையில் முதலமைச்சர் உண்ணாவிரதத்தை அறிவித்த மறு கணமே மத்திய அரசு தரப்பில் இருந்து பதில் வந்ததே, அந்த வேகம் எப்படி?'' என்றார் ஒருவர். ''பதிலை ரெடியாக வைத்திருந்தார்கள் போலிருக்கிறது'' என்று சொன்னார் முன்னாள் சட்ட அமைச்சர் மாதவன். (பி.டி.ஐ. அதைவிட வேகமாகச் செயல்பட்டு மத்திய அரசு அறிக்கைக்கு நள்ளிரவில் எம்.ஜி.ஆரிடமிருந்து பதில் வாங்கி வெளியிட்டு விட்டது!)
அரிசி தராத மத்திய அரசுச் செயல் எப்படித் தவறானது என்பதை மாதவன் நிருபர்களிடம் எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார்...
உண்ணாவிரதத்தைத் தொடங்கிய எம்.ஜி.ஆர். தன்னுடன் கட்சியின் பொதுச் செயலாளர் மட்டும் கூடவே அமர்ந்திருக்க அனுமதித்தார். ''எம்.எல்.ஏ-க்கள், எம்.எல்.சி.-க்கள் யாரும் இங்கே இருக்கக் கூடாது... சட்டமன்றத்திற்குப் போங்கள்'' என்று அனுப்பி விட்டார்.
சங்கரய்யா என்ற முதிய தொண்டர் மேடைக்குக் கீழே முக்கிய கட்சிக்காரர்களுடன் உண்ணாவிரதம் இருக்க உட்கார்ந்திருப்பதை எம்.ஜி.ஆர். பார்த்தார். அவரை மேடைக்கு அழைத்தார். ''நீங்கள் வயிற்றுவலிக்காரர். நான் உண்ணாவிரதம் இருக்கிறேன் என்பதற்காக நீங்கள் உண்ணாவிரதம் இருந்தால் உடம்புக்கு நல்லதல்ல... வீட்டுக்குப் போங்கள்...'' என்றார். சங்கரய்யா எவ்வளவோ மறுத்தும் முதல்வர் கேட்கவில்லை. அதேபோல, அலமேலு அப்பா துரையை மேலே அழைத்து அவரையும் வீட்டுக்குப் போகும்படி சொன்னார். அவரும் கேட்க மறுத்தார். ஜேப்பியாரை அழைத்து அவரை காரில் ஏற்றி வீட்டிற்கு அனுப்புங்கள் என்று சொல்லி விட்டார்.
ஜேப்பியார் இங்கும் அங்கும் ஓடி பந்தோபஸ்துக்களையும் கவனித்தார். முக்கிய புள்ளியாக ஜொலித்தார்.
''என்ன, ஜேப்பியார் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாகிவிட்டார் போலிருக்கிறதே!''
''அதெல்லாம் சொல்ல முடியாது... சென்னையில் உண்ணாவிரதம் இருக்கிறார். மாவட்ட செயலாளர் என்பதால் ஜேப்பியார் பொறுப்பு இது... மற்றபடி யாரை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதெல்லாம் தலைவருக்குக் கைவந்த கலை.''
-சிலர் பேசியது இது. அங்கே காதில் விழுந்த இம்மாதிரி பேச்சுக்கள் சுவையானவை.
''மாநில உணவு அமைச்சராக இருந்தாரே ஆர்.வி.சாமிநாதன், அவருக்கு 'கல்தா’ ஏன் கொடுத்தார்கள் தெரியுமா? எம்.ஜி.ஆருக்கு வேண்டியவர் என்பதால்தான்!''
''தமிழ்நாட்டைப் பட்டினி போட விடமாட்டேன் என்று ஆர்.வி. சாமிநாதன் அறிக்கை விட்டு டெல்லி போயிருக்கிறார். மத்திய அமைச்சர் ராவ் பிரேந்திரசிங் அவரை அழைத்துக் கன்னாபின்னாவென்று திட்டியிருக்கிறார். 'இப்படியெல்லாம் யாரைக் கேட்டு அறிக்கை விட்டீர்கள்? அரிசி உங்கள் பாக்கெட்டிலா இருக்கிறது?’ என்று ராவ் பிரேந்திரசிங் இகழ்ச்சியாகக் கேட்டாராம்''. (சரி. தமிழ்நாட்டைப் பட்டினி போடுவேன் என்று சொல்லியிருந்தால் மன்னித்திருப்பார்களோ!)
அதற்குள் சில மூதாட்டிகள் கியூ வரிசையில் வந்து, மேடையில் ஏறி தேங்காயில் கற்பூரம் ஏற்றி எம்.ஜி.ஆருக்குத் திருஷ்டி சுற்றினார்கள். எம்.ஜி.ஆர். படங்களில் நடித்திருக்கும் துணை நடிகை மீனாட்சி அம்மாள், எலுமிச்சம்பழத்தைச் சுற்றி, பிழிந்து வீசி திருஷ்டி சுற்றினார். ''அவருக்கு திருஷ்டி கழிக்கணும்னு ரொம்ப நாளா வெறி'' என்றார்.
ஒரு பையன் எம்.ஜி.ஆருக்கு மாலை போட வர, அந்த மாலையை அவனுக்கே திருப்பிப் போட்டார்
எம்.ஜி.ஆர். ''நீங்கதான் போட்டுக்கணும்'' என்று அந்தப் பையன் வற்புறுத்தி, மீண்டும் மாலையை அவருக்கு அணிவித்தான். இம்மாதிரி காட்சிகளின்போது பொதுமக்களிடமிருந்து கரவொலியும் 'விசில்’ ஒலிகளும் எழுந்தன!
மேடையில் எம்.ஜி.ஆர். பக்கத்தில் அமர்ந்திருந்த ப.உ.சண்முகம் சற்றுத் தெம்புடனும் 'களை’யுடனும் காணப்பட்டார். பழைய தி.மு.க. நாளேடான நம்நாடு இதழ்கள் அடங்கிய பைண்ட் வால்யூமைப் புரட்டியவாறு இருந்தார் அவர். சில இதழ்களில் வந்த செய்தியை முதலமைச்சருக்கு அடிக்கடி சுட்டிக் காட்ட, இருவரும் அந்தச் செய்தியை ரசித்தனர்.
முதல்வர் கவனம், நிருபர்களுடன் பேசிக் கொண்டிருந்த மாதவன் மீது விழுந்தது. அவரை அழைத்துத் தன் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டார்! ஏனோ நிருபர்கள் உடனே ப.உ.சண்முகம் முகத்தைப் பார்த்தனர்.
கொஞ்ச நேரத்தில் அது உண்ணாவிரத மேடை என்பது மறந்து போகும் நிலை ஏற்பட்டு விட்டது!
முதலமைச்சர் அருகில் பார்த்துக் குறைகளைச் சொல்லி மனுக்கள் தர இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்று நினைத்தவர்கள் கெட்டிக்காரர்கள்தான்! ''என் மகளுக்கு வேலை வேண்டும்'', ''ப்யூன் சம்பளம் அதிகப்படுத்த வேண்டும்'',''குடிசை கட்ட இடம் தர மறுக்கிறார்கள்'' என்பது போல, மனுக்களை எடுத்து வந்து கொடுக்க ஆரம்பித்தார்கள். சில பெரிய மனிதர்களும் மாலை போட்டுவிட்டு 'மனு’ கொடுத்தார்கள்! ஒரு பெண் ''வீட்டில் சமைக்க மணி அரிசி இல்லை'' என்று, விக்கி விக்கி ஆனால் கண்ணில் கண்ணீர் வராமல் அழுதாள்! அவளை மேடையில் இருந்து இறக்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது!
மதுரை மேயர் பட்டுராஜன் மேடையில் ஏறி மாலை போடுகிறார். எம்.ஜி.ஆருக்கு அணிவித்த மாலைகளும், பொன்னாடைகளும் மேடைக்குப் பின்புறத்தில் மலை போலக் குவிக்கப்பட்டிருந்தது.
''திருச்செந்தூர் தேர்தல் பிரசார துவக்க விழாவிற்கு முதலமைச்சர் இன்று வருவதாக இருந்தது. வரவேற்க ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தபோது, திடீரென்று நேற்று மாலை இந்த நியூஸ் கேள்விப்பட்டவுடன் மெட்ராஸ் புறப்பட்டு விட்டேன்'' என்று நிருபர்களிடம் சொன்னார் மதுரை மேயர்.
''அதோ பார்! ஆப்பிளை எடுத்துண்டு மேடைக்குப் போறார். சி.எம்.கிட்ட கொடுத்துடப் போறார்... நிறுத்து அவரை...''
-யாரோ உரக்கச் சொல்கிறார்கள்.
''இது ஆப்பிள், மனுவெல்லாம் கொடுக்கற இடமா, போங்கள்’: என்று யாரையோ விரட்டுகிறார் ஜேப்பியார்.
பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவு ஒலிபெருக்கியில் வந்து கொண்டிருந்தது. திடீரென்று குரல் மாறுகிறது. ஜேப்பியார் லவுட் ஸ்பீக்கர்காரர்களிடம் ஓடுகிறார்... ''நிறுத்துப்பா... யார் பேச்சு இது? அண்ணா பேச்சு மட்டும் போடு'' என்கிறார். பழைய 'டேப்’ போலும்! நடுவில் 'தலை காட்டியது’ அன்பழகன் குரல்!
'எதிரே சாலையில் ''இந்திரா ஒழிக! எம்.ஜி.ஆர். வாழ்க!'' என்று குரல் கொடுத்தவாறு ஒருவர் தீக்குளிக்க முயன்றிருக்கிறார். கூட்டம் அந்தக் குரல் கேட்டு எழுந்திருக்க, எம்.ஜி.ஆர். கையமர்த்தி உட்கார வைத்தார். போலீஸார் அந்த ஆசாமியைக் கட்டிப்பிடித்து லாரியில் ஏற்றினார்கள். கெரோஸினால் உடம்பு நனைந்திருந்தது. உதட்டில் ரத்தம் வழிந்திருந்தது. நெருப்பு வைத்துக் கொண்டாரா என்று தெரியவில்லை.
உள்ளே மேடையைச் சுற்றியிருந்த கட்சிப் பிரமுகர்களுக்கு அந்த ஆசாமியை ஏற்கெனவே தெரியும் போலிருக்கிறது. ''நேத்து பந்தல் போடறச்சே இங்கிட்டுச் சுத்திக்கிட்டிருந்தான்... தலைவர் கவனத்தைக் கவர வழி பண்ணிட்டான்'' என்று அதிருப்தியுடன் பேசினார்கள்.
பிற்பகல் ஒன்றரை மணிக்கு அமைச்சர் குழந்தைவேலுவும் ஹண்டேயும் வந்தார்கள். குழந்தைவேலு எம்.ஜி.ஆர். அருகில் அமர்ந்து சட்டசபை ரகளையைப் பற்றிய தகவலை முதல் முதலாகக் கொடுத்தார். சற்றைக்கெல்லாம் இன்னும் சில அமைச்சர்கள் வந்தார்கள். ஏதோ அமைச்சரவைக் கூட்டமே அங்கே நடப்பது போல இருந்தது. கடைசியில் சபாநாயகர் ராஜாராம், ஆர்.எம்.வீ., எஸ்.டி.எஸ். ஆகியோர்தான் பாக்கி! சிறிது நேரத்தில அவர்களும் வந்தார்கள்.
ஆர்.எம்.வீ. முதலமைச்சரின் முதுகுப் பக்கத்தில் அமர்ந்துவிட்டு, சபாநாயகரும் மற்றவர்களும் கிளம்பியபோது தானும் கிளம்பிச் சென்றார்.
உண்ணாவிரத மேடையைச் சுற்றிக் கும்பல் மிக அதிகமாகவே, மப்டி போலீஸார் எல்லோரையும் விரட்டினார்கள்.
''அஞ்சு மணிக்கு ஜெயலலிதா ஜூஸ் கொடுக்க உண்ணாவிரதம் முடியுமாம்.''
-என்று ஒரு பொதுஜனம் சொல்ல, கட்சித் தொண்டர் வெறுப்படைகிறார்.
''ஏதாவது இஷ்டப்படி பேசாதீங்க. அவங்க ஊரிலேயே இல்லை'' என்று பதில் கொடுத்தார் முறைப்பாக!
உண்ணாவிரதம் முடியும் நேரம் நெருங்கியது. ''5மணி ஆகிறது'' என்றார். ப.உ.சண்முகம் எம்.ஜி.ஆர். கறுப்புக் கண்ணாடியைத் தூக்கிவிட்டுக் கொண்டு தன் எலெக்ட்ரானிக் கடிகாரத்தைப் பார்த்து, ''இன்னும் எட்டு நிமிஷம் இருக்கிறது'' என்றார்! உடனே ப.உ.ச. எதிரே தெரியும் பல்கலைக்கழக கடிகாரத்தைக் காட்டினார். அதில் நேரம் ஐந்து. ''அது ஃபாஸ்ட்'' என்றார் எம்.ஜி.ஆர்.
சற்றைக்கெல்லாம் ஜேப்பியார் லைம் ஜூஸ் கொடுக்க, ஏழு மணி நேர உண்ணாவிரதம் முடிந்தது
courtesy vikatan e-magazine
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்க நிர்வாகி திரு.கே.பாபு அவர்களின்
அன்புத் தாயார் நேற்று காலை இயற்கை எய்தினார் .
அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்பு தோழர்கள் நேற்று முதல் இறுதி
அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
திரு.கே. பாபு அவர்களின் தாயாரின் பூத உடல் சென்னை மடிப்பாக்கத்தை
அடுத்த கோவிலம்பாக்கத்தில் உள்ள மயானத்தில் இன்று மாலை 4 மணியளவில் இறுதி மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது.
தாயை இழந்து வாடும் திரு.கே.பாபு அவர்களுக்கும் , அவரின் குடும்பத்தினருக்கும் என் சார்பாகவும் ,அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்
ஆர். லோகநாதன்.
சென்னை ஆல்பர்ட் அரங்கில் மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் 100வது நாள் சிறப்பு காட்சி திரு விழா ரசிகர்கள் வெள்ளத்தில் தமிழகம் - புதுவை - கர்நாடக எம்ஜிஆர் மன்றங்கள் சார்பாக பல ரசிகர்கள் ஒன்று கூடியுள்ளனர் .
பெங்களுர் எம்ஜிஆர் மன்றம் சார்பாக பிரமாண்ட வண்ண மாலைகள் பதாகைகளுக்கு அணிவித்தார்கள் . பட்டாசுகள் வெடித்து ரசிகர்களும் பொது மக்களும் கலந்து கொண்டு விழாவை .சிறப்பித்து வருகிறார்கள்
இன்று மாலை காட்சி 1070 இருக்கைகள் கொண்ட ஆல்பர்ட் அரங்கில் முன் பதிவு மூலம் ஹவுஸ் புல் ஆகியுள்ளது .சத்யம் அரங்கிலும் இன்று மாலை காட்சி அரங்கு நிறைந்துள்ளது .
மறு வெளியீட்டில் ஆயிரத்தில் ஒருவன் 100வது நாளில் அரங்கு நிறைந்த காட்சிகளுடன் சிறப்பு விழாவுடன் ரசிகர்கள் வெள்ளத்தில் விழா நடை பெறுவது இந்திய திரை உலகில் ஒரு மாபெரும் சாதனை .
ஆல்பர்ட் அரங்கில் தற்போது 4.30 மணி நிலவரத்தை அங்கிருந்து அலைபேசி மூலம் தகவல் தந்த இனிய நபர் திரு பாலா , பெங்களுர் அவர்களுக்கு நன்றி .
மீண்டும் சரித்திரம் படைத்த ஆயிரத்தில் ஒருவன்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், தமிழக முதல்வர் ஜெயலலிதா இணைந்து நடிதத காவியம் ஆயிரத்தில் ஒருவன். பி.ஆர்,பந்துலு இயக்கினார். விசுநாதன் ராமமூர்த்தி இசையில் கண்ணதானின் காலத்தால அழியாத பாடல்களை கொண்ட படம்.
40 ஆண்டுகளுககு முன்பு வெளிவந்த இந்தப் படத்தை திவ்யா பிலிமஸ் சொக்கலிங்கம் டிஜிடடல் மயமாக்கி, நவீன ஆடியோ வசதிகள் செய்து சினிமாஸ்கோப் வடிவில் மறு வெளியீடு செய்தார். சத்யம் மற்றும் ஆல்பர்ட் தியேட்டரில் 100 வது நாளை இன்று (ஜூன் 22) எட்டியுள்ளார் ஆயிரத்தில் ஒருவன்.
படத்தின் 50வது நாள் விழாவையே ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடினார்கள். இன்று 100வது நாள் விழாவையும அதே உற்சாகத்துடன் மாலை 6 மணிக்கு ஆல்பர்ட் தியேட்டரில் கொண்டாடுகிறார்கள். இந்த விழாவில் எம்.எஸ்.விசுவநாதன் உள்ளிட்ட ஆயிரத்தில் ஒருவன் படம் சம்பந்தப்பட்ட கலைஞர்களை அழைத்து கவுரவிக்கிறார்கள். இதனால் ஆல்பர்ட் தியேட்டர் வளாகமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
வெற்றி-திருப்புகழ், பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=flDi...t=HL1403359088
மக்கள் திலகம் எம்.ஜி .ஆர். "ஆயிரத்தில் ஒருவன் " 101 வது நாள் விழா
பிரம்மாண்ட வெற்றி! வெற்றி ! வெற்றி!.
---------------------------------------------------------------------------------------------------------------------------
சென்னை ஆல்பட் காம்ப்ளக்ஸ், சத்யம் சினிமாஸ் -ல் ஆயிரத்தில் ஒருவன் 101 வது நாளை வெற்றிகரமாக கடந்தது.
நேற்று மாலை 6.30 காட்சிகள் இரு அரங்குகளிலும் அட்வான்ஸ் புக்கிங்கில்
அரங்குகள் நிறைந்தன. 1070 பேர் அடங்கிய ஆல்பட் அரங்கில் நேற்றைய மாலை காட்சியினை சுமார் 1400 பேர் கண்டுகளித்தனர். அரங்கின் உள்ளே இருமருங்கிலும் தரையில் உட்கார்ந்தும் , நின்றபடியும் 300பேர்கள் மேல்
காட்சிகளை ரசித்தவாறு இருந்தனர்.
தமிழ் திரையுலகில் டிஜிடல் வடிவில் உருவான படங்களில், 100 வது நாளில் பெரிய அரங்கில் (ஆல்பட் ) திரையிடப்பட்டு , அட்வான்ஸ் புக்கிங்கில் அரங்கு நிறைந்து வழிந்த காட்சி நடைபெற்ற ஒரே படம்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் "ஆயிரத்தில் ஒருவன் " தான்.
பேபி ஆல்பட்டில் திரையிட்டிருந்தாலும் அரங்கு நிறைந்திருக்கும் .
ஏனெனில் ஏராளமானோர் டிக்கட் கிடைக்காமல் அரங்கிற்கு வெளியே
ஏமாற்றத்துடன் காத்திருந்தனர்.
ரூ.85/- டிக்கட் ரூ.200/- க்கு பிளாக்கில் விற்பனை ஆனது.
முன்னதாக காலை 11 மணியளவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சதுக்கத்தில் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் மூலம்
சுமார் 1000 பேருக்கு அன்னதானம் செய்யப்பட்டது.
பிற்பகல் 3 மணியளவில் சிந்தாதிரிபேட்டை மார்கெட் அருகிலுள்ள
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சிலையில் இருந்து, அனைத்து எம்.ஜி.ஆர்.
மன்ற அமைப்புகளை சேர்ந்த பக்தர்கள் சுமார். 200 பேர் ஊர்வலமாக
ஆயிரத்தில் ஒருவன் 101 வது நாளை கொண்டாடும் வகையில் பேனர்களை கைகளில் ஏந்தியபடி ஆல்பட் அரங்கிற்கு அணிவகுத்து
வந்தனர்.
பெங்களூரில் இருந்து சுமார் 50 பெரும், மதுரை, திருச்சி, கோவை, சேலம், தூத்துக்குடி,வேலூர் ஆகிய நகரங்களில் இருந்தும் எண்ணற்ற
பக்தர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
ஆல்பட் அரங்கு வளாகம் முழுவதும் அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற
அமைப்புகள் சார்பாக வைக்கபட்டிருந்த பேனர்கள், பதாகைகளால்
விழா கோலம் பூண்டன.
ஆல்பட் அரங்கின் சாலைகள் இருமருங்கிலும் மக்கள் வெள்ளம் கரைபுரண்டது. இதனால் போக்குவரத்து வேறு பாதையில் திருப்பிவிடப்பட்டது . போலீசார் மிகுந்த சிரமத்திற்கிடையே கூட்டத்தை
கட்டுபடுத்தினர் . சாலைகள் அ.தி.மு.க. கட்சி கொடிகள், மற்றும் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பாக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய சிறிய பேனர்கள் அமைக்கப்பட்டன.
சாலையின் ஒருபுறத்தில் இருந்து சிறிது தூரத்திற்கு , ஆயிரத்தில் ஒருவன் படப்பெட்டி ஊர்வலமாக பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து
வந்தது. அப்போது காரில் வந்திறங்கிய இயக்குனர் திரு.பி.வாசு பக்தர்கள்
வெள்ளத்தில் திக்கு முக்காடி போனார்.அவருக்கு உற்சாக வரவேற்பு
அளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து வசனகர்த்தா திரு. ஆர். கே. சண்முகம் தனது
குடும்பத்துடன் காரில் வந்திறந்கினார் . அவருக்கும் சிறப்பான வரவேற்பு
தரப்பட்டது. வயது மூப்பின் காரணமாக சிலர் அவரை தூக்கி கொண்டு
அரங்கிற்கு வந்தனர்.
நடிகர் ஹாஜாஷெரிப் , மற்றும் பத்திரிகை தொடர்பாளர் திரு. நிகில்
ஆகியோரும் வந்திருந்தனர். அவர்களுக்கும் நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும் சில கட்சி பிரமுகர்கள் , முக்கிய பிரமுகர்கள் ஆகியோரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
ஆல்பட் சாலையில் பட்டாசுகள் மாலை 4 மணி முதல் 6 மணி வரை
இடைவிடாது வெடித்த வண்ணம் இருந்தன . அவ்வப்போது வான
வேடிக்கைகள் நடத்தப்பட்டன.
ஆயிரத்தில் ஒருவன் 101 வது நாள் வெற்றிவிழாவில் அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகளின் பக்தர்கள் மிக்க ஆர்வத்துடனும்
பலத்த உற்சாகத்துடனும் கலந்து கொண்டது விழாவின் சிறப்பம்சம் .
திவ்யா பிலிம்ஸ் திரு. சொக்கலிங்கம் , அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற
அமைப்பு பக்தர்களுடன் அரவணைத்து , அனைத்து பிரமுகர்களையும்
வரவேற்ற வண்ணம் இருந்தார்.
நிகழ்ச்சியில் திவ்யா பிலிம்ஸ் திரு. சொக்கலிங்கம், இயக்குனர் திரு.பி.வாசு , வசனகர்த்தா திரு. ஆர். கே. சண்முகம் , நடிகர் ஹாஜாஷெரிப் , பத்திரிகை தொடர்பாளர் திரு. நிகில், ஆல்பட் அரங்கின்
மேலாளர் ஆகியோருக்கு பல்வேறு எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகள்
மூலம் பொன்னாடைகள் போர்த்தப்பட்டு, நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
காட்சி தொடங்குவதற்கு முன்பாக, அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல
சங்கமும் , இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழுவும் இணைந்து அரங்கிற்கு வந்திருந்த அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர்.
மாலை 5 மணியளவில் அணைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகள் சார்பாக வைக்கபட்டிருந்த பேனர்களுக்கு அவரவர் சார்பில் பாலபிஷேகம் , மலர்பூஜைகள், ஆரத்திகள், ஆராதனைகள் போன்ற
சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் சார்பாக இலவச சேலைகள் வழங்கப்பட்டது.
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு மற்றும் அனைத்துலக எம்.ஜி.ஆர்.
பொது நல சங்கமும் இணைந்து அரங்கு ஊழியர்களுக்கு இலவச
துணிமணிகள் வழங்கப்பட்டன.
அனைத்து முக்கிய பேனர்கள் மலர்மாலைகளால் அலங்கரிக்கபட்டிருந்தன. அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம்,
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு இணைந்து அமைத்த பேனர்,
கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் வைத்த பேனர், பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் வைத்த பேனர் ஆகியன ரசிகர்ளை கவர்ந்தன.
இருப்பினும் பெங்களூர் நகர புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்கள் அமைத்த பேனரின் மலர்மாலைகள், ஜோடிப்புகள் , அனைவரின் கண்களை கவர்ந்தது என்பது விழாவின் சிறப்பம்சம். பெங்களூர் நகர
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்கள் , மிகுந்த சிரமத்துக்கு இடையே
இந்த மலர்மாலைகளை வேனில் கொண்டு வந்தது மிகவும் பாராட்டுக்கு
உரியது.
வெளியூர் பக்தர்கள் பலர் குறிப்பாக திரு. வினோத் , திரு. சி. எஸ்.குமார்
(பெங்களூர்),திரு. கலியபெருமாள் (புதுவை ), திரு. ரவிச்சந்திரன் (திருப்பூர் ), திரு.துரைசாமி (கோவை), திரு. மலரவன் (திண்டுக்கல் ),
திரு. தமிழ்நேசன், போஸ், மணி, குமார், சரவணன் (மதுரை ), திரு.ஜெய்சங்கர் , திரு.குப்புசாமி, திரு. ஜெயப்ரகாஷ், (சேலம்), திரு.கலீல்
பாட்சா (திருவண்ணாமலை ), ஆகியோர், தொலைபேசி /அலைபேசி மூலம் , ஆயிரத்தில் ஒருவன் 101 வது நாள் வெற்றிவிழா பிரம்மாண்ட
வெற்றி காண தங்கள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டனர்.
அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகள் சார்பாக அவர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும்.
50 ஆண்டுகளுக்கு வெளியான ஒரு பழைய படம் டிஜிடல் வடிவில் உருவாகி 100நாள் கடந்து விழா எடுப்பது குறித்து , இந்த பேராதரவினை கண்டு வியப்படைந்து ,பொதுமக்கள் பலரும், பேருந்துகள், வாகனங்களில் சென்றோரும் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்
மறைந்தும் மறையாமல் மக்கள் நெஞ்சங்களில் இன்னும் வாழ்ந்து
கொண்டு இருப்பதாக புகழாரம் சூட்டினர்.
இந்த நிகழ்சிகளை படம் பிடிக்கவும்,பேட்டி எடுக்கவும், ஜெயா டிவி.,
தந்தி டிவி , வசந்த் டிவி , தினமலர் டிவி, சாக்ஷி டிவி மற்றும் சில தொலைக்காட்சி நிறுவனங்கள் வந்திருந்து பதிவு செய்தனர்.
ஆயிரத்தில் ஒருவன் டிஜிடல் திரைபடத்தை பல இன்னல்களுக்கு இடையே உருவாக்கி 130 அரங்குகளுக்கு மேலாக முதன்முறையாக
வெளியிட்டு சாதனை படைத்தது இரு அரங்குகளில் 100 நாள் காண
காரணமான திவ்யா பிலிம்ஸ் திரு. சொக்கலிங்கம் அவர்கள் மிகவும்
பாராட்டுக்குரியவர் .
சத்யம் சினிமாஸ், ஆல்பட் அரங்கு உரிமையாளர்கள் இருவருக்கும்
ஆயிரத்தில் ஒருவன் 101 வது நாள் -ஒத்துழைப்பிற்கு நன்றி.
1965-ல் ஆயிரத்தில் ஒருவன் சென்னையில் 3 அரங்குகளில் 100 நாள் கடந்த போது அப்போதைய சூழ்நிலையில் விழா எடுக்க முடியாமல்
போனதற்கு , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்கள்/ரசிகர்கள் இப்போது
பிராயச்சித்தம் தேடி கொண்டனர். இந்த வெற்றி 125 நாள்/150 நாள்
என தொடரட்டும்.
ஆயிரத்தில் ஒருவன் பிரமாண்ட வெற்றியானது ,இன்றைய தொழில்நுட்ப படங்களுக்கு சவால் விடும் வகையில் சுமார் 75 படங்களுக்கு நடுவே (ஆயிரத்தில் ஒருவன் டிஜிடல் படம் வெளியான பின்பு வந்த ) அரிய சாதனை புரிந்துள்ளது . இதற்கு காரணமாக விளங்கிய அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகள்/பக்தர்கள்/ரசிகர்கள் பேராதரவு
அளித்த பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி! நன்றி! நன்றி!
ஆர். லோகநாதன்.
இனிய நண்பர் திரு லோகநாதன் சார்
ஆயிரத்தில் ஒருவன் 100 வது நாள் வெறி விழா - பற்றிய தொகுப்பு மிகவும் அருமை . நேரில் பார்த்த உணர்வை உண்டாக்கியதற்கு
நன்றி . சென்னை - தேவி பாரடைஸ் அரங்கில் முதல் வாரத்தில் நடந்த பிரமாண்ட விழாவும் ஆல்பர்ட் அரங்கில் 100 வது நாள் விழாவும் மிக சிறப்பாக நடந்தது மறக்க முடியாத நிகழ்சிகளாகும் .ஆயிரத்தில் ஒருவன் - விழாக்களை சிறப்பாக முன் நின்று நடத்திய எல்லா எம்ஜிஆர் மன்ற செயல் வீரர்களுக்கும் , ஆதரவு தந்த அனைத்து எம்ஜிஆர் நண்பர்களுக்கும் பாராட்டுக்கள் ..
THANTHI TV
http://youtu.be/w5Q1gnzzEs0
ஆயிரத்தில் ஒருவன் திரைக்காவியத்தின் 100வது நாள் வெற்றிவிழா நிகழ்சிகளைப் பதிவிடும் திரு. லோகநாதன் அவர்களுக்கு நன்றி. நான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லையே என்ற ஆதங்கம் அதிகமிருந்தாலும், தங்களின் பதிவுகள் ஏக்கத்தை குறைக்கிறது. மீண்டும் ஒரு முறை தங்களுக்கு நன்றி. மறுவெளியீட்டில் இது போன்ற ஒரு வெற்றிவிழாவை திரையுலகம் கண்டிருக்குமோ?
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Thanks Mr .Ganesh Sir
http://i57.tinypic.com/2hf1hn9.jpg