-
நடிகர்திலகத்திற்கு அரசியலில் நடிக்கத் தெரியாது-ன்னு சிலர் சொன்னதால், நொந்து போய் அவர்களிடம் ஒரு கேள்வி என்று ஆரம்பித்து ஒன்பதிற்கும் மேல் கேள்வி கேட்டவருக்கு 'ஒரு' என்றால் என்னவென்று சொல்லிக்கொடுக்காமல், அவர் கேட்ட கேள்விகளையெல்லாம் பிரசுரித்து, 'ஒரு' கேள்வி கேட்டவரை கிண்டல் செய்ததை என்னவென்று சொல்வது!!! இதை ரவிகிரண் கேட்பதுபோல் அவர்கள் நீக்கினால் 'ஒரு' கேள்வி கேட்டவரை நமக்கெப்படித் தெரியும். அதனால் பிரசுரித்தவருக்கு நன்றி சொல்வோம்!!!
-
-
Kasturi Nivasa 1971: Full Kannada Movie: http://youtu.be/fx1ccAFf7jE
கஸ்தூரி நிவாஸா கன்னட படத்தின் ரீமேக் அவன் தான் மனிதன்
ராஜ்குமார் நடித்த இந்த கறுப்பு வெள்ளை படம் தற்போது இரண்டு கோடி செலவில் வண்ணத்தில உருவாகி கர்நாடகாவில் ரிலீஸ் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
அதனால் தெய்வமகனையும் வண்ணத்தில் வெளியிட்டால் மகிழ்ச்சி
Sent from my GT-S7562
-
நெல்லை சென்ட்ரலில் மக்கள் தலைவர் சிவாஜி நடித்த வெள்ளைரோஜா 14.11.2014 வெள்ளி முதல் தினசரி 4 காட்சிகள்
http://i59.tinypic.com/2lvhamq_th.jpg
தீபாவளிக்கு வெளியான நீதியின் வெற்றியை தொடர்ந்து குறுகிய கால இடைவெளியில் மீண்டும் நடிகர்திலகத்தின் வெற்றி பவனி.
இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.
-
நெல்லை சென்ட்ரலில் மக்கள் தலைவர் சிவாஜி நடித்த வெள்ளைரோஜா 14.11.2014 வெள்ளி முதல் தினசரி 4 காட்சிகள்
http://oi59.tinypic.com/zkq3ia.jpg
இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.
-
http://oi57.tinypic.com/2ah9qfr.jpg
இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.
-
சென்னை, திருச்சி, கோவை வெற்றியை தொடர்ந்து டிசம்பரில் மதுரையை கலக்க வருகிறார் டாக்டர் ரமேஷ்.
http://oi62.tinypic.com/33kepl3.jpg
இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.
-
https://fbcdn-sphotos-f-a.akamaihd.n...77f4448430ea61
‘பராசக்தி’ படத்தில் கதாநாயகனாகப் போட கே.ஆர்.ராமசாமி உள்பட பல பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. குழம்பிய இரட்டை இயக்குநர்களான கிருஷ்ணன் - பஞ்சு இருவரும் அறிஞர் அண்ணாவிடம் சென்று ஆலோசனை கேட்டனர். அண்ணாவின் பலமான சிபாரிசு சிவாஜிக்குதான் இருந்தது. எனவே, ‘பராசக்தி’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார் சிவாஜி.
பின்னாளில் சிவாஜி பெரிய நடிகராகிப் புகழ்பெற்ற பின்பு, பலமுறை விழுப்புரம் வந்திருக்கிறார். நான் அங்கே பள்ளியிலும், கல்லூரியிலும் படித்துக்கொண்டு இருந்த காலங்களில் கூட வந்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் அங்கே அவர் பேசும்போது, “நான் பிறந்த பொன்னாடான விழுப்புரம் நகரத்துப் பெருமக்களே!” என்றுதான் நெகிழ்ச்சியாகத் தன் பேச்சைத் தொடங்குவார்.
ஒருமுறை, விழுப்புரம் நகரசபையில் சிவாஜிக்குப் பெரிய வரவேற்பு கொடுத்தார்கள். அப்போது அங்கே சிவாஜிக்கு ஒரு பரிசு கொடுத்தார்கள். அது ஒன்றும் விலை உயர்ந்த பரிசு அல்ல. ஆனாலும், அதை வாங்கிக் கொண்டபோது சிலிர்த்துப் போய்விட்டார் சிவாஜி. அதைப் பரிசாகக் கொடுத்த நகர சபையினருக்கு எப்படி நன்றி சொல்வதென்றே அவருக்குத் தெரியவில்லை. அந்த அளவுக்கு வார்த்தை வராமல் நெகிழ்ந்துவிட்டார்.
அப்படி என்ன பரிசு அது? வேறொன்றுமில்லை. சிவாஜி விழுப்புரத்தில் பிறந்த சமயத்தில், அது சம்பந்தமாக நகரசபை அலுவலகத்தில் எழுதப்பட்ட ஜனனக் குறிப்புதான் அது. அந்த விவரங்கள் அடங்கிய ஜனனக் குறிப்பை அப்படியே எடுத்து ஃபிரேம் செய்து கொடுத்திருந்தார்கள்
-
Quote:
Quote:
Originally Posted by
SUNDARAJAN
நெல்லை சென்ட்ரலில் மக்கள் தலைவர் சிவாஜி நடித்த வெள்ளைரோஜா 14.11.2014 வெள்ளி முதல் தினசரி 4 காட்சிகள்
http://oi59.tinypic.com/zkq3ia.jpg
இருக்கும் வரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்.
MEGA REAL WINNER OF 1983 DEEWALI - ONE AND ONLY VELLAI ROJA
1983ம் ஆண்டு தீபாவளி திருநாளில் கடும் போட்டியில் வெளியாகிஎந்த வித பேனர் வெயிட் இல்லாமல் தன்னுடைய அசத்தலான நடிப்புத்திறமையால் சாதாரண தயாரிப்பு நிறுவனமான பிலிம்கோ பேனரில் தயாரிக்கப்பட்ட வெள்ளை ரோஜா தீபாவளிப்போட்டியில் முதலிடம் பெற்று அதிக 50 நாள் கண்ட ஒரே படமாகவும் 12 திரைகளில் 100 நாள் கண்ட படமாகவும் விளங்கி1983ம் ஆண்டு வசூல் சக்ரவர்த்தியாக வலம் வந்தவர் நடிகர் திலகம்.
மேலும் திருவொற்றியூர் வெங்கடேஸ்வரா திரையரங்கில் 100 நாட்கள் ஒடிய ஒரே படம் நடிப்புச்சுரங்கத்தின் வெள்ளைரோஜா
திருச்சி ரம்பா A/C யில் 100 நாட்கள் ஓடிய முதல் படம். சென்னையில் முதன் முதலாக 6 தியேட்டர்களில் 100 நாள் கண்ட முதல் படம் வெள்ளைரோஜா
https://fbcdn-sphotos-h-a.akamaihd.n...a9f5a02b0c232b
-
இன்று நவம்பர் 14 - சிறிது கால தாமதமானாலும் மறக்க முடியாத நாள் அல்லவா..!
குழந்தைகள் தினவிழா ...பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களுடைய பிறந்த நாள் விழா குழந்தைகள் தினவிழாவாக கொண்டாடபடுகிறது.
பாரத பிரதமர் திரு ஜவஹர்லால் நேஹ்ருவும் சரி, கர்ம வீரர் காமராஜரும் சரி, வருங்கால சமுதாயத்தின் பிரதிநிதிகளாக உருவாகும் குழந்தைகள் நலனில் மிகுந்த அக்கறை செலுத்தியவர்கள்.
ஏழை குழந்தைகள் பசியறியாமல் நல்ல சுகாதார உணவு உண்டு, படிப்பில் கவவனம் செலுத்தி நல்ல நிலையில் வரவேண்டும் என்று விரும்பியவர்கள்.
அதனால் கல்வி பயிலும் ஏழை குழந்தைகளுக்காக தான் மதிய உணவு திட்டம் என்ற ஒரு திட்டத்தை முதல் முதலில் தமிழகம் முழுதும் செயல்படுத்தினர் .
1959இல் முதன் முதலில் குழந்தைகளுக்காக கர்ம வீரர் காமராஜர் கொண்டுவந்த திட்டம் மதிய உணவு திட்டம். பிற்காலத்தில் அது சத்துணவு திட்டமாக தொடரப்பட்டு இன்றுவரை தொடர்கிறது.
தமிழகத்தை பொருத்தவரை கர்ம வீரர் காமராஜர் அவர்களுடைய தொலைநோக்கு பார்வை என்பது இன்றளவும் உலகையே வியக்க செய்யும் பார்வையாகும்.
மேலும், தமிழகத்தில் என்னவெல்லாம் பயனுள்ள திட்டங்களாக தொடங்க பட்டு இன்றுவரை உள்ளதோ அவைகளில் முக்கால் வாசிக்கும் மேல் கர்ம வீரர் காமராஜரால் கொண்டுவரப்பட்ட திட்டங்களாகும் !
பண்டித நேரு அவர்களுடைய குடும்பத்துடன் மிக நெருங்கி பழகிய வெகு சிலரில் ஒருவர் தென்னகத்தில் நம்முடைய நடிகர் திலகம் மட்டும் தான் !
தனது நடிப்பு என்ற ஒரு திறமையை வைத்து உலகளவில் பல ஜாம்பவான்களை ஆட்கொண்டிருந்தாலும், இந்தியாவில் நேஹ்ருவையும் அவர் குடும்பத்தையும் ஆட்கொண்டவர் நமது நடிகர் திலகம்.
http://i501.photobucket.com/albums/e...ps7aeb0e2f.jpg
1959இல் குழந்தைகளுக்கான மதிய உணவு திட்டம் கொண்டுவந்தபோது, இந்திய அளவில் முதல் முதலில் ரூபாய் ஒரு லட்சம் தனது நிதியாக கொடுத்தவர், நம்முடைய, எண்ணிக்கையில் அடங்கா, அடக்க முடியாத வள்ளல் நடிகர் திலகம் அவர்கள்.
http://i501.photobucket.com/albums/e...ps3da27c70.jpg
பண்டித நேஹ்ருவிர்க்கு பிறகு திருமதி இந்திரா காந்தி அம்மையார், பிறகு ராஜீவ் காந்தி என்று நேஹ்ருவின் பரம்பரையில் உள்ள அனைவரும் நமது நடிகர் திலகம் மீது மற்ற எவரை காட்டிலும் மிகுந்த அன்பும், பாசமும் வைத்திருந்ததை இந்த நாடே அறியும்.
http://i501.photobucket.com/albums/e...ps77661bad.jpg
பிரதமரிடம், அமைச்சரோ, மந்திரியோ, முதல்வரோ மற்றும் எவராயினும், அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் வெளியில் ஆயிரம் பந்தா காட்டினாலும், நேரு பரம்பரை முன் கை கட்டிதான் சேவனம் செய்துள்ளனர், என்பதை அனைவரும் அறிவர்.
http://i501.photobucket.com/albums/e...ps29c67b1b.jpg
ஆனால் நம் நடிகர் திலகம் அவர்கள் எந்த அளவிற்கு திரு நேரு அவர்கள் குடும்பத்திற்கு நெருக்கமானவர், நேரு பரம்பரையும் நடிகர் திலகத்திடம் எந்தளவிற்கு அன்பும், மரியாதையும் வைத்துள்ளனர் என்பதற்கு மேற்கோள்காட்டிய புகைப்படங்களே சாட்சி !
-
நவம்பர் 14 - குழந்தைகள் தினம் ! - நடிகர் திலகத்தின் பாடல்கள் இல்லாமலா ?
பருப்பில்லாத கல்யாணமா என்பது போல மனித வாழ்வில் ஒவ்வொரு நிகழ்விற்கும் நடிகர் திலகம் அவர்கள் பாடல்களே மிக பொருத்தமானவை என்பதை நாம் கூறதான் வேண்டுமோ ?
தங்கங்களே நாளை தலைவர்களே நம் தாயும் மொழியும் கண்கள் ......
https://www.youtube.com/watch?v=Xr4gvXXgCnU
நான் தன்னந்தநிகாட்டு ராஜா ...
https://www.youtube.com/watch?v=2BqghZZSNnQ
இது புரியாத வெள்ளாடு தெரியாமே ஓடுது......
https://www.youtube.com/watch?v=9TCbJhMx7ak
செல்லக்கிளிகளாம் பள்ளியிலே .....
https://www.youtube.com/watch?v=6-ZUJLjz0Z8
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே ...நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே ....
https://www.youtube.com/watch?v=k3YN6RCZHs0
கிண்கிணி கிண்கிணி என ......
https://www.youtube.com/watch?v=tIu-muoZNls
-
யாருக்கு இந்த சமூகத்தின் மீது அக்கறை ?
யாரோ யாரைபற்றியோ ஒரு சில மாதத்திற்கு முன் யார் வீட்டு விழாவிலோ கூறியதை கூட பொறுத்துக்கொள்ளமுடியாமல், "இந்த சமூகத்தின் மீது அக்கறை கொண்ட எழுத்தாளன் என்ற முறையில்" என்று கூறிக்கொண்டு புலம்பி தீர்த்துள்ளார் ஒரு எழுத்தாளர் ????
இதை படித்த பிறகு நமது தரப்பில் இருந்து ஒரு விண்ணப்பம் வைத்தோம். அதாவது இரு திரிகளுக்கும் உள்ள நல்லுறவின் பொருட்டு அந்த 3 பக்கங்களை நீக்க. ஆனால் வந்த பதிலோ வேறு. இது போதாதென்று சுவற்றில் எறிந்த பந்து உதாரணம் வேறு கடல் கடந்து...
நாம் நிறுத்தினாலும், நம்மை நிருத்தவிடமாடோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வம்பிழுத்தால் என்ன செய்வது ?
அந்த சமூகத்தின் மீது அக்கறை கொண்ட எழுத்தாளர் பதிவு செய்யும்போது, நமக்கு மட்டும் சமூகத்தின் மீது அக்கறை இருக்காத என்ன?
இருப்பினும் கற்பனை வளம் அதிகம் கொண்டு எழுதியுள்ள எழுத்தாளர் அளவிற்கு வர இயலாவிட்டாலும் உண்மையை நமக்கு தெரிந்தவரை எழுதலாமே என்று முடிவெடுத்ததால் வந்த பதில் பதிவு இது....!
இந்த பதிவு திரு. Mgr அவர்களை தாக்கி எழுதும் பதிவல்ல. அந்த எழுத்தாளர் கூறிய விஷயங்களுக்கு திரியில் பதிவிடும் பதில் பதிவு மட்டுமே...!
-
நடிகர் திலகத்தை பற்றிய தவறான செய்திகளை, பொய்யான பித்தலாட்டமான தகவல்களை மட்டுமே தொடங்கிய காலத்தில் இருந்து சமீபத்திய edition வரை பதிவு செய்துவரும் சமீபத்திய மஞ்சள் நிற அட்டைகொண்ட பத்திரிகைதான் அது.
பத்திரிகை 20 முதல் 25 பக்கம் என்றால் ..அதில் ஒரு 20 முதல் 25 சதவிகிதம் நடிகர் திலகத்தை திட்டியோ, அவரை, அவர் படங்களை பற்றி குறை கூறியோ, இப்படி ஒட்டிகொண்டிருக்கும் ஒரு பத்திரிகைதான் அது.
சமூகத்தின் மீது அக்கறைகொண்ட எழுத்தாளன் என்ற போர்வை எதற்கு என்பது தான் புரியவில்லை. ஒரு வேளை கோர்வையாக இருக்கிறதென்று இந்த எழுத்தாளர் நினைத்துவிட்டாரோ என்னவோ.
-
நடிகர் திலகம் உலகில் சிறந்த நடிகர் என்று 1959இல் உலக அரங்கிலேயே பிரகடனபடுத்தி விருதும் கௌரவமும் கொடுத்தாகிவிட்டது. அதற்க்கு அடுத்தபடியாக உலக வல்லரசாக விளங்கிய, விளங்குகின்ற அமெரிக்காவும், அதற்க்கு அச்சாரமாக எங்கள் மாநிலத்தின் ஒரு நாள் மேயரும் நீங்கள் என்று சாவியும் கொடுத்தாகிவிட்டது. இன்று வரை எவருக்கும் கிட்டாத பாகியம் !
அமெரிக்க அதிபர் கென்னெடி அவர்கள் ஒரு படி மேலே சென்று நடிகர் திலகத்தை கலாசாரா தூதுவராக அறிவித்தேவிட்டார் ! அமெரிக்க hollywood நடிகர் திலகத்தை அழைத்து golden carpet welcome & dinner கொடுத்தது. இவை எல்லாம் கனவில் கூட ஏழு ஜென்மம் அல்ல எத்துனை ஜென்மை எடுத்தாலும் மற்றவர்களால் நினைத்து பார்க்க முடியாத விஷயம்...
உலக விற்பன்னர்களும், மா மேதைகளும் என்றோ ஒத்துகொண்ட விஷயத்தை பல வருடங்கள் கழித்து இன்னொருவர் வழிமொழிந்தது ஒரு பெருந்தன்மையான விஷயம் ஒன்றும் இல்லை. இந்தியாவின் உண்மையான உலக நடிகராக ஒத்துக்கொள்ளப்பட்டு அங்கீகாரமும் கொடுத்தாயிற்று. அதற்க்கு பிறகு தான் வேண்டா வெறுப்பாக நாங்களும் ஒத்துகொள்கிறோம் என்று அன்று கட்சி நடத்தியவர்கள் ஒரு சில காரியங்களை இவரை முன் நிறுத்தி செய்தார்கள்.
சமூகத்தின் மீது அக்கறை என்றால் இந்த மக்கள் விரோத அரசு பதவி ஏற்றவுடன் கொண்டுவந்த மக்கள் விரோத பால் விலை ஏற்றம், மின்சார விலை ஏற்றம், bus charge ஏற்றம்...இப்படி தொடர்ந்து சமூகத்தை நேரடியாக கடுமையாக பாதித்த விஷயத்தை எழுதியிருக்கலாம் அந்த அந்த சமூகத்தின் மேல் அக்கறை கொண்ட எழுத்தாளர்.
அல்லது சமீபத்தில் மீண்டும் இந்த மக்கள் விரோத அரசு, பால் விலையை ஏற்றியதே..அப்போது சமூகஅக்கறை கொண்ட எழுத்தாளராக போர்வையால் போர்த்தி எழுதியிருக்கும் எழுத்தாளர் அதை சாடியிருக்கலாம்.
அல்லது தொடர்கொலைகள், கொள்ளைகள், வழிப்பறி தமிழகம் முழுதும் தலைவிரித்து ஆடுகிறது சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து...சமூகத்தின் மீது அக்கறை என்றால் அதை பற்றி எழுதி இருக்கலாம்...அந்த சமூகத்தின் மீது அக்கறை கொண்ட எழுத்தாளர்..
அல்லது சென்னையில் conjunctivitis பரவுகிறது வேகமாக. அதற்க்கு இன்னது செய்யுங்கள் precaution ஆக என்று அறிவுரைத்திருக்கலாம் இந்த சமூகத்திற்கு அந்த சமூகத்தின் மேல் அக்கறை கொண்ட எழுத்தாளர்.
இப்படி சமூகத்திற்கு அக்கறையோடு ஒரு விஷயமும் செய்யாமல், எழுதாமல், தனக்கு துளி கூட சம்பந்தம் இல்லாமல் இருக்கும் ஒரு விஷயம் அதுவும் வேறு யார் வீட்டிலோ எல்லா வருடமும் கொண்டாடப்படும் ஒரு விழாவில் அந்த வீடுசொந்தக்காறரை பற்றி இந்த உலகில் உள்ள உண்மை தமிழர்கள் மட்டுமல்ல...அவரை நன்கு அறிந்தவர்கள் கூட காலம் காலமாக உணர்ந்து, அனுபவித்து கூறிய ஒரு விஷயத்தை ஒருவர் மீண்டும் நினைவு கூர்ந்து உரைத்தார்...
அது கூட பொறுக்க முடியாமல் வெறும் வயிதெரிச்சலில், காழ்புணர்ச்சியில்..."அய்யயோ அவரை இவர்களும் மட்டும்தான் இப்படி கூறவில்லை ..இப்போது கூறிவிட்டார்களே...என்று வேதும்பலில் தங்களுடைய சொந்த பத்திரிகை மூலம் புலம்ப முடிவெடுத்து அதற்க்கு சமூகத்தின் மேல் உள்ள அக்கறையுள்ள எழுத்தாளன் என்ற ஒரு ஓட்டை போர்வையை போர்த்திக்கொண்டு ஒரு calligraphic diarrhea வை பூசி மொழுகி வைத்துள்ளார் அந்த கற்பனை எழுத்தாளர்.
இவருக்கு எந்த காலத்தில் சமூகத்தின் மீது அக்கறை இருந்தது...?
-
சமூகத்திற்காக உருப்படியாக எதுவும் செய்யாத ஆனால் சமூகத்தின் மீது அக்கறை என்று கூறிக்கொண்டு சமூகத்திற்கு துளி கூட சம்பந்தம் இலாத விஷயத்தை உன்னுடைய சொந்த விருப்பு வெறுப்பு காரணத்தால் பத்திரிகையில் புலம்புகின்றீரே...எதற்கு உமக்கு இந்த பொய் பித்தலாட்டம் ?
இனியாவது உன்னுடைய சொந்த புகழ் மட்டும் பாட பழகிகொள்ளுங்கள் எழுத்தாளரே !
ஒன்று மட்டும் உறுதி...அது யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும் ......எவருமே ஒரு முழுமையான யோகியன் அல்ல இந்த உலகத்தில் !
சுவற்றில் பந்து எரியும்போது அது கடல் கடந்து கூட திரும்ப செல்லும் என்றும் ஒரு சிலர் அறிந்துகொள்ளட்டும் !
கிரீடம் பற்றி சிந்திப்பவர்கள் என்றும் செருப்பை பற்றி சிந்திக்க மாட்டார்கள். ஆனால் செருப்பை பற்றி சிந்திப்பவர்கள் என்றுமே கால்களை மட்டுமே தேடிகொண்டிருப்பார்கள்.
அப்படியாவது ஆதாயம் கிடைக்குமா என்று 180 டிகிரி வளைந்து கூன் விழுந்து, தினமும் எங்கோ வருபவர்களுக்கு... இங்கிருந்தே மண்டியிட்டு வணக்கம் போட்டு ...வணக்கம் போட்டு.... ஆதாயத்திற்காக அடிமை வாழ்க்கை பழகுபவர்களுக்கு பாவம், கிரீடம் எங்கே கண்களில் தெரிய போகிறது...
செருப்பு போடும் கால்கள் மட்டுமே இவர்கள் கண்களுக்கு தெரியும் ! புரியும் !
மாணிகியத்தின் மதிப்பு மண் பானை விற்பவனுக்கா புரியும் ?
-
-
-
Quote:
Originally Posted by
Yukesh Babu
just relax rks
Yeah...I will Yukesh !
Thanks for the concern !
RKS
-
"மேலும், தமிழகத்தில் என்னவெல்லாம் பயனுள்ள திட்டங்களாக தொடங்க பட்டு இன்றுவரை உள்ளதோ அவைகளில் முக்கால் வாசிக்கும் மேல் கர்ம வீரர் காமராஜரால் கொண்டுவரப்பட்ட திட்டங்களாகும் ! "
Great RKS. This is the Truth!!!!.
கர்மவீரரால் தொடங்கப்பட்டு எந்தவிதப் பெயரும் இல்லாமல் "மதிய உணவுத்ததிட்டம்" என்றே அறியபட்டதை தங்களுடைய பெயரை சேர்பதற்காக அதன் பெயரை மாற்றி விட்டார்கள்!!!!
இப்பொழுது அவருடைய ரசிகர்கள் அவர்தான் அதைக் கொண்டு வந்ததைப் போல் பேசுகிறார்கள்!!!!
ANM
-
-
சுப்பையா ராஜசேகர் (இம்மன்றத்தில் இருக்கிறாரா தெரியவில்லை) என்னும் மதுரை நடிகர் திலகம் ரசிகர் 'நியூ சினிமா' தியேட்டர் அனுபவங்களை சுவாரஸ்யமாக எழுதியுள்ளார்.
https://www.facebook.com/photo.php?f...2203790&type=1
-
பொள்ளாச்சி கலைமகள் தியேட்டரின் அனுபவங்களும் சுப்பையா ராஜசேகரின் நினைவுகளையே ஏற்படுத்துகின்றது.
தியாகம் ரிலீஸ் ஆனபோது கூடிய மக்கள் கூட்டம் இப்போதும் பெரும் பிரம்மாண்டத்தையே நினைவு படுத்துகின்றது.
-
Gauravam song different style of video: http://youtu.be/-TGNctnJb-w
-
நடிகர் திலகம் - ஏ.பி.நாகராஜன் - ஜெமினி வாசன் கூட்டணியில் உருவான விளையாட்டுப் பிள்ளை வெள்ளிக்கிழமை நவம்பர் 14 முதல் சென்னை மகாலட்சுமியில் திரையிடப்பட்டு மிகப் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. இரண்டே தினத்தில் 4 காட்சிகளில் பெற்ற வசூல் ஒரு புதிய சாதனை. வினியோகஸ்த நண்பர் மேலதிக தகவல்களை தருவார் என எதிர்பார்ப்போம். நல்ல பிரிண்ட் என்பது ஒரு தனி சிறப்பு.
கூடுதல் சுவையாக நடிகர் திலகத்தின் கருப்பு வெள்ளை காவியம் நீலவானம் படத்திலிருந்து ஓஹோஹோ ஓடும் மேகங்களே பாடல் இடைவேளையின்போது நல்ல பிரிண்டில் காண்பிக்கப்படுவது அரங்கத்தையே அலற வைக்கிறது என்று பார்த்தவர்கள் சொல்கிறார்கள். அதிலும் round hat with coolers போட்டு நடிகர் திலகம் காலை வளைத்து நிற்கும் காட்சியில் உச்சகட்ட அலப்பரை என்று சொன்னார்கள்.
தியேட்டருக்கு வந்திருந்த விநியோகஸ்தரை சுற்றிக் கொண்டு எப்போது இந்த படம் போடப் போகிறீர்கள் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார்களாம் ரசிகர்கள்.
சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.
அன்புடன்
-
வெள்ளிகிழமை நவம்பர் 14 முதல் நெல்லை மாநகர் சென்ட்ரல் திரையரங்கில் நடிக மன்னனின் வெள்ளை ரோஜா வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நெல்லையில் கடுமையான மழை. அந்த மழையிலும் ஒரோரு காட்சிக்கும் கணிசமான மக்கள் வந்திருந்து படத்தை கண்டு களித்திருக்கிறார்கள். வரும் நாட்களில் மேலும் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கிறார்கள்.
கோவை மாநகரில் டிலைட் திரையரங்கில் வெள்ளிக்கிழமை நவம்பர் 14 முதல் வெளியாவதாக இருந்த நடிகர் திலகத்தின் அண்ணன் ஒரு கோவில் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் அடுத்த வெள்ளிகிழமைக்கு மாற்றப்பட்டிருக்கிறது.
சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.
அன்புடன்
-
[QUOTE=Murali Srinivas;1182933]நடிகர் திலகம் - ஏ.பி.நாகராஜன் - ஜெமினி வாசன் கூட்டணியில் உருவான விளையாட்டுப் பிள்ளை வெள்ளிக்கிழமை நவம்பர் 14 முதல் சென்னை மகாலட்சுமியில் திரையிடப்பட்டு மிகப் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. இரண்டே தினத்தில் 4 காட்சிகளில் பெற்ற வசூல் ஒரு புதிய சாதனை. வினியோகஸ்த நண்பர் மேலதிக தகவல்களை தருவார் என எதிர்பார்ப்போம். நல்ல பிரிண்ட் என்பது ஒரு தனி சிறப்பு.
http://i501.photobucket.com/albums/e...pscb4184c0.jpg
கூடுதல் சுவையாக நடிகர் திலகத்தின் கருப்பு வெள்ளை காவியம் நீலவானம் படத்திலிருந்து ஓஹோஹோ ஓடும் மேகங்களே பாடல் இடைவேளையின்போது நல்ல பிரிண்டில் காண்பிக்கப்படுவது அரங்கத்தையே அலற வைக்கிறது என்று பார்த்தவர்கள் சொல்கிறார்கள். அதிலும் round hat with coolers போட்டு நடிகர் திலகம் காலை வளைத்து நிற்கும் காட்சியில் உச்சகட்ட அலப்பரை என்று சொன்னார்கள்.
தியேட்டருக்கு வந்திருந்த விநியோகஸ்தரை சுற்றிக் கொண்டு எப்போது இந்த படம் போடப் போகிறீர்கள் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார்களாம் ரசிகர்கள்.
சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.
-
சுப்பையா ராஜசேகர் - மதுரை நடிகர் திலகம் ரசிகர் - 'நியூ சினிமா' தியேட்டர் அனுபவங்களை சுவாரஸ்யமாக எழுதியுள்ளார் - re-positing
சமீபத்தில் நான் மதுரைக்குச் சென்றிருந்தேன்.
ஒரு கட்டிடத்தைப் பார்த்ததும் நான் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகி விட்டேன்.அந்த கட்டிடம்-'ந்யூ சினிமா' என்ற திரையரங்கம்.
1960களில் நான் மதுரை நாகமலை புதுக்கோட்டை ஜெயராஜ் நாடார் உயர்நிலைப் பள்ளியில் படித்தபோதும்.அதே இடத்திலிருந்த எஸ்.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் 70 களில் படித்தபோதும்,அதற்குப் பிறகு அஞ்சல் வழி கல்வி மூலம் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ.படித்தபோதும் இந்த திரை அரங்கத்தில் எவ்வளவு திரைப்படங்களைப் பார்த்திருக்கிறேன்!காலத்தின் ஓட்டத்தில் இந்த திரையரங்கத்திற்கு இப்படியொரு நிலையா உண்டாக வேண்டும்?
ஒரு காலத்தில் எத்தனையோ வெள்ளி விழா படங்களும்,வெற்றி விழா கொண்டாடிய படங்களும் ஓடி திரைப்பட ரசிகர்களுக்கு சொர்க்கத்தின் நுழை வாயிலாக விளங்கிய 'ந்யூ சினிமா'திரையரங்கம் தன்னுடைய வர்ணத்தையெல்லாம் இழந்து,பகட்டெல்லாம் இல்லாமற் போய்,சிதிலமடைந்து,செடிகள் முளைத்து,அலங்கோலமாக நின்றிருந்த காட்சியைப் பார்த்தபோது என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது.
காலம் கட்டிடங்களை மட்டுமல்ல,மனிதர்களையும் இப்படிப்பட்ட நிலைக்கு பந்தாடி தூக்கி விட்டெறியும் என்ற உண்மை தெரிந்தவனாக இருந்தால் கூட, திரையரங்கத்தின் இப்போதைய தோற்றத்தைப் பார்த்தபோது,மனதில் உண்டான பாரத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
ஒருகாலத்தில் பரபரப்பான திரையரங்காகவும்,இப்போது மூடப்பட்டுக் கிடக்கும் பாழடைந்த பழைய கட்டிடமாகவும் இருக்கும் 'ந்யூ சினிமா' பூட்டப்பட்டு 20 வருடங்கள் ஆகிவிட்டனவாம்.திரையரங்கின் பங்குதாரர்களுக்கிடையே பிரச்சினைகள் இருப்பதால்,அப்படியே அது கவனிப்பாரற்ற நிலைக்கு ஆளாகி விட்டது என்று எதிரில் கடைகள் வைத்திருப்பவர்கள் கூறினார்கள்.
இன்றும் மறக்க முடியாத எத்தனையோ படங்களை நான் இந்தத் திரையரங்கில் பார்த்திருக்கிறேன்.இன்னும் சொல்லப் போனால்,நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த பல மிகச் சிறந்த திரைப்படங்கள் இந்தத் திரையரங்கில்தான் அந்தக் காலத்தில் திரையிடப்பட்டிருக்கின்றன.
எம்.ஜி.ஆர்.நடித்த படங்கள் மீனாட்சி,சிந்தாமணி ஆகிய திரையரங்குகளில் திரையிடப்படுகின்றன என்றால்,சிவாஜி நடித்த படங்கள் ந்யூ சினிமா,தேவி,சென்ட்ரல் ஆகிய திரையரங்குகளில் திரையிடப்படும்.நான் நடிகர் திலகத்தின் ரசிகன்.
அவர் நடித்த திரைப்படம் வருகிறது என்றால்,படம் திரைக்கு வந்த முதல் நாள் அல்லது இரண்டாவது நாளிலேயே நான் அந்தப் படத்தைப் பார்த்து விடுவேன்.இந்த 'ந்யூ சினிமா'வில்தான் நான் சிவாஜி நடித்த 'ராமன் எத்தனை ராமனடி'படத்தைப் பார்த்தேன்.ஆரம்ப காட்சிகளில் வெகுளித்தனமான சாப்பாட்டு ராமனாகவும்,பின்னர் வரும் காட்சிகளில் திறமையால் முன்னுக்கு வந்த விஜயகுமார் என்ற திரைப்பட நடிகராகவும் சிவாஜி கணேசன் நடித்திருப்பார்.படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது திரையரங்கிற்குள் ஒலிக்கும் கைத்தட்டல்களையும்,நடிகர் திலகம் வரும் காட்சிகளில் திரையின் மீது வீசி எறியப்படும் பூக்களையும் இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.'அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு' என்ற பாடல் சந்தோஷ சூழலில் பாடப்படும்போது,நடிகர் திலகத்துடன் சேர்ந்து திரையரங்கிற்குள் நாங்களும் மகிழ்ச்சிக் கடலில் மிதந்து,கும்மாளமிட்டோம்.அதே பாடலை தான் மனதில் உயிருக்குயிராக நேசித்த கே.ஆர்.விஜயா தன்னை மறந்து விட்டு,முத்துராமனைத் திருமணம் செய்து கொண்ட தகவல் தெரிந்ததும்,சிவாஜி கணேசன் கதாபாத்திர மாகவே மாறி,முகம் முழுவதும் ோகத்தையும்,ஏமாற்றத்தையும்,கவலையையும்,இழப்பின் வேதனையையும் கொண்டு வரும்போது,அவருடன் சேர்ந்து நாங்களும் அழுதோம்...நாங்களும் காதல் தோல்வியில் துடித்தோம்..,நாங்களும் கண்ணீர் விட்டு கதறினோம்.இதுதான் உண்மை.'ந்யூ சினிமா'வின் இருக்கைகள் எங்களின் கண்ணீரால் நனைந்தன.
நடிகர் திலகத்தின் மிகப் பெரிய வெற்றிப் படமான 'வசந்த மாளிகை'இந்த 'ந்யூ சினிமா'வில்தான் திரையிடப்பட்டது.இப்போது நான் அந்த நாளை நினைத்துப் பார்க்கிறேன்.அப்போது நான் உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருக்கிறேன்.பெருந்தலைவர் காமராஜர் அப்போது உயிருடன் இருக்கிறார்.பழைய காங்கிரஸ் கட்சியின் மாநாடு மதுரையில் நடக்கிறது.மதுரை மாநகரமே திருவிழாக் கோலம் பூண்டு காட்சியளிக்கிறது. காமராஜர் மாநாட்டிற்கு வந்திருக்கிறார்.நடிகர் திலகமும் அப்போது அந்தக் கட்சியில் இருக்கிறார்.அந்தச் சமயத்தில் 'வசந்த மாளிகை' திரைக்கு வந்தது.திரையரங்கிற்கு முன்னால் எப்படிப்பட்ட கூட்டம் திரண்டு நின்றிருக்கும் என்பதை கூறவும் வேண்டுமோ?
நான் முதல் நாள் பிற்பகல் காட்சிக்கே போய் வரிசையில் நின்று விட்டேன்.அதுதான் முதல் காட்சி.தாங்க முடியாத வெயிலில் சாலையில் வரிசையில் நிற்க வேண்டும்.ஆனால்,அதெல்லாம் ஒரு பிரச்சினையாகவே தெரியாது.எப்படியாவது படத்தைப் பார்த்தால் போதும் என்ற எண்ணம் மட்டுமே மனதில் இருக்கும்.அந்த காட்சியில் எனக்கு டிக்கெட் கிடைக்கவில்லை.எனக்கு முன்பு சிலர் நின்றிருக்க,கவுண்டரை மூடி விட்டார்கள்.எனக்கு தாங்கிக் கொள்ள முடியாத ஏமாற்றம்.எனினும்,தாங்கிக் கொண்டேன்.அந்த இடத்தை விட்டு நான் நகரவேயில்லை.நான் மட்டுமல்ல...எனக்கு முன்னால் நின்றிருந்தவர்கள்,பின்னால் நின்றிருந்தவர்கள் யாருமே வரிசையை விட்டு விலகிச் செல்லவில்லை.அனைவரும் சாயங்கால காட்சிக்காக மறுபடியும் அதே இடத்தில் நின்றிருந்தோம்.
இன்றைய ரஜினி,கமல்,விஜய்,அஜீத்,சூர்யா,விக்ரம்,தனுஷ்,விஷால் ,ஆர்யா,கார்த்தி,ஜெயம் ரவி ரசிகர்கள் இதையெல்லாம் நம்புவார்களா தெரியாது.நம்பினாலும்,நம்பாவிட்டாலும் இதுதான் உண்மை.
இவ்வளவு நேரம் வரிசையில் நின்றும்,சாயங்கால காட்சிக்கும் டிக்கெட் கிடைக்கவில்லை.எனக்கு அழுகையே வந்து விட்டது.எனக்கு முன்னால் ஐந்து பேர் நின்றிருக்க,கவுண்டரை மூடி விட்டார்கள்.எனக்குப் பின்னால் ஒரு நீண்ட வரிசை நின்று கொண்டிருந்தது.இறுதியில் சிவாஜி ரசிகர் மன்ற டிக்கெட் ஒன்று எனக்கு எப்படியோ கிடைத்து விட்டது.அவ்வளவுதான்...என் மனதில் உண்டான மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறி அமர்ந்து விட்ட சந்தோஷம் எனக்கு உண்டானது.துள்ளிக் குதித்துக் கொண்டு திரையரங்கிற்குள் ஓடினேன்.
நான் போய் அமர்ந்ததும்,படம் ஆரம்பித்தது.'ஓ மானிட ஜாதியே'என்று சிவாஜி பாடியபோது,ரசிகர்களும் அவருடன் சேர்ந்து பாடினார்கள்.
அந்தக் காலகட்டத்தில் கல்லூரி மாணவர்களில் 90%பேர் சிவாஜியின் ரசிகர்களாகத்தான் இருப்பார்கள்.சிவாஜி தன்னுடைய ஸ்டைலிஷான நடிப்பால்,இளைஞர்களை தன் பக்கம் காந்தமென இழுத்து வைத்திருந்தார்.அதை கண்கூடாக 'ந்யூ சினிமா'வில் 'வசந்த மாளிகை' படம் பார்த்தபோது என்னால் உணர முடிந்தது.
'ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்' என்று திரையில் சிவாஜி பாடியபோது,இதுவரை பார்த்திராத சிவாஜியை ரசிகர்கள் பார்த்தார்கள்.
'மயக்கமென்ன இந்த மவுனமென்ன' என்று ஸ்லோ மோஷனில் சிவாஜி காதல் கீதம் இசைத்தபோது.தாங்களே காதலிப்பதைப்போல படம் பார்த்த ரசிகர்கள் உணர்ந்தார்கள்.'லதா.அதோ பார்...உனக்காக நான் கட்டியிருக்கும் வசந்த மாளிகை' என்று அழகு தமிழில் சிவாஜி வசனம் பேசியபோது,மொத்த திரையரங்கும் அதில் சொக்கிப் போய் உட்கார்ந்திருந்தது.
'இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்' என்று சிவாஜி இருமிக் கொண்டே பாடியபோது,அவருடன் சேர்ந்து ரசிகர்களும் அழுதார்கள்.இறுதியில் 'யாருக்காக?யாருக்காக?இந்த மாளிகை வசந்த மாளிகை...'என்று சிவாஜி காதலியின் இழப்பில் கண்ணீரில் கரைந்து நின்றபோது,திரை அரங்கமே கண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது.'ந்யூ சினிமா'வில் அந்தப் படம் 175 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது.
-
இதே திரையரங்கில் நான் பார்த்த இன்னொரு படம் 'எங்கள் தங்கராஜா'.பட்டாக்கத்தி பைரவன் என்ற கதாபாத்திரத்தின் அறிமுகக் காட்சிக்காகவே அந்தப் படத்தை தொடர்ந்து மூன்று நாட்கள் இந்தத் திரையரங்கில் நான் பார்த்ததை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.
மோட்டார் பைக்கில்,பெல் பாட்டம் பேண்ட் அணிந்து,அசால்ட்டாக சூயிங்கத்தை மென்று கொண்டே வரும் ஸ்டைலிஷான சிவாஜி....'ந்யூ சினிமா'வே கைத்தட்டல்களால் அதிர்ந்தது.
'கற்பாம்.,மானமாம்.,கண்ணகியாம்..சீதையாம்...' என்று சிவாஜி பாடியபோது,அவருடன் இரண்டறக் கலந்து போய் அமர்ந்திருந்தனர் ரசிகர்கள்.
மஞ்சுளாவுடன் இணைந்து இளமை தவழ 'இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை?'என்று பாடி ஆடியபோதும்,'கல்யாண ஆசை வந்த காரணத்தைச் சொல்லவா? என்ற பாடலின் இறுதியில் மஞ்சுளாவை 'பொத்'தென்று புல் தரையில் சிவாஜி போட்டபோதும் ரசிகர்கள் மத்தியில் உண்டான ஆரவாரம் இருக்கிறதே!
அது இப்போது கூட என் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.
காலம் மாறலாம்...கோலங்கள் மாறலாம்...மாற்றங்கள் ஆயிரம் நிகழலாம்.காலச் சக்கரத்தின் சுழற்சியில் இவையெல்லாம் நடக்கத்தான் செய்யும்...நேற்று இருந்தோர் இன்று இல்லை...இன்று இருப்போர் நாளை...?
'ந்யூ சினிமா'விஷயத்திலும் அதுதான் நடந்திருக்கிறது.அதற்காக....கடந்த காலத்தில், படவுலக வரலாற்றில் அது செய்த சாதனையையும்,பதித்த முத்திரையையும் மறந்து விட முடியுமா?
-
[QUOTE=RavikiranSurya;1182957][QUOTE=Murali Srinivas;1182933]நடிகர் திலகம் - ஏ.பி.நாகராஜன் - ஜெமினி வாசன் கூட்டணியில் உருவான விளையாட்டுப் பிள்ளை வெள்ளிக்கிழமை நவம்பர் 14 முதல் சென்னை மகாலட்சுமியில் திரையிடப்பட்டு மிகப் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. இரண்டே தினத்தில் 4 காட்சிகளில் பெற்ற வசூல் ஒரு புதிய சாதனை. வினியோகஸ்த நண்பர் மேலதிக தகவல்களை தருவார் என எதிர்பார்ப்போம். நல்ல பிரிண்ட் என்பது ஒரு தனி சிறப்பு.
http://i501.photobucket.com/albums/e...pscb4184c0.jpg
கூடுதல் சுவையாக நடிகர் திலகத்தின் கருப்பு வெள்ளை காவியம் நீலவானம் படத்திலிருந்து ஓஹோஹோ ஓடும் மேகங்களே பாடல் இடைவேளையின்போது நல்ல பிரிண்டில் காண்பிக்கப்படுவது அரங்கத்தையே அலற வைக்கிறது என்று பார்த்தவர்கள் சொல்கிறார்கள். அதிலும் round hat with coolers போட்டு நடிகர் திலகம் காலை வளைத்து நிற்கும் காட்சியில் உச்சகட்ட அலப்பரை என்று சொன்னார்கள்.
தியேட்டருக்கு வந்திருந்த விநியோகஸ்தரை சுற்றிக் கொண்டு எப்போது இந்த படம் போடப் போகிறீர்கள் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார்களாம் ரசிகர்கள்.
சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.
Thanks for posting vilayattupillai still and other details. Also one important message as follows:
Dear all Sivaji Fans-Be Alert to create new history in COLLECTION
Why I am telling this because you can see Sivaji films free of cost at any place any time in your house also. But you should try to create box office collections by seeing a Film in Theatrical Release to show your interest towards our only Nadippin Imayam. So for those who want to see a sivaji film on Sunday evening free of cost, you should make sure that at least two of your representatives attend theatrical show at Mahalakshmi Theater, Otteri without fail-This is my conscious effort to create history in collections when compared to others films. This is my sincere suggestion-YOU MAY TAKE IT OR LEAVE IT-JRL COMBINES, CHENNAI.
-
-
Matter Posted by hubber pattaakkathi deleted
----------------------------------------------------------------------------------------------------------------------------
நடிகர் திலகத்தின் திரியின் மூலமாக நடிகர் திலகத்தின் கீர்த்தியை அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்துவது பற்றி ஒருவர் கருத்து தெரிவித்தால் ஒன்று அதனோடு உடன்படலாம் அல்லது மாறுபடலாம். எதனால் மாறுபடுகிறோம் என்பதையும் தகுந்த காரணங்களோடு விளக்கலாம். ஆனால் அதே நேரத்தில் அந்த ஒருவரின் கருத்தை அடிப்படையாக வைத்து வேறொரு நடிகரின் பெயரையும் அவரின் ரசிகர்களையும் பற்றி [கருத்து சொன்ன நபர் அந்த நடிகரை குறிப்பிட்டிருந்தார் என்ற ஒரே காரணத்திற்காக] கிண்டல் பதிவு போடுவது என்பது நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. மேலும் சிவாஜி ரசிகர்கள் சிவாஜியை திட்டினால் பாராட்டுவார்கள் என்ற வார்த்தைகள் பலரையும் காயப்படுத்தும் உள்நோக்கம் கொண்டவை. அதே பதிவில் சக உறுப்பினரின் பெயரையும் தேவையில்லாமல் இழுத்திருப்பது நிச்சயம் ஏற்புடையதுதல்ல. இனி இப்படி நிகழாது என நம்புகிறேன்.
அன்புடன்
முரளி
-
I do not know who you are !!!
But, I can realize how much you have felt about the happenings if you were a long reader in the thread genuinely.
Good One !!! :shoot:
REGARDS
RKS
-
-
-
-
-
-
-
-